» Vijay .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Vijay in Seeman direction movie named ‘Kobam’

Posted on Friday 25 December 2009

சீமான் இயக்கத்தில் விஜய்யின் ‘கோபம்’!

vijay.jpg

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்திற்கு ‘கோபம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘கந்தசாமி’ படத்தின் நூறாவது நாள் விழாவை கொண்டாடி களித்த சந்தோஷத்தோடு இப்படத்தை தயாரிக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு. நடிகர் விஜய்யும் இயக்குநர் சீமானும், பொருத்தமான கதாநாயகியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சீமான் இயக்கத்தில் விஜய் படம் என்றால் வித்தியாசமாகத்தான் இருக்கும்.

admin @ 9:53 pm
Filed under: kollywood
Vijay thanks to Kalanithimaran for ‘Vettaikkaran’ victory

Posted on Monday 21 December 2009

வேட்டைக்காரன் வெற்றி : கலாநிதி மாறனுக்கு விஜய் நன்றி

vettaikkaran.jpg

‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தை வெற்றிப்படமாக்கியதற்காக, சன் குழுமத் தலைவர் கலாநிதிமாறனை சந்தித்த விஜய், தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

விஜய் நடித்துள்ள ‘வேட்டைக்காரன்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து படத்தின் நாயகன் விஜய், தன்னுடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் சன் டிவி அலுவலத்துக்கு நேற்று சென்றார். பின்னர் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனை அவர் சந்தித்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். பதில் மரியாதையாக விஜய்க்கு கலாநிதி மாறன் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

இந்தச் சந்திப்பு குறித்து விஜய் கூறுகையில், “என்னுடைய படங்களிலேயே மிகப் பெரிய ஓபனிங்கை வேட்டைக்காரன் தந்திருக்கிறது. அதற்காக கலாநிதி மாறனுக்கு நன்றி தெரிவித்தேன்” என்று கூறினார்.

வேட்டைக்காரன் வெற்றியைத் தொடர்ந்து விஜய் ‘சுறா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் சன்குழுமம் வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.

admin @ 9:30 pm
Filed under: kollywood
Asin pair with Vijay in next movie

Posted on Monday 14 December 2009

மீண்டும் விஜய் உடன் ஜோடி போடுகிறார் அசின் : சம்பளம் ரூ.80 லட்சம்

vijayasin.jpg

ந்திக்குப் போன அசின் மீண்டும் தமிழுக்கு வருகிறார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ரவி இயக்கத்தில் தயாராகும் பெயர் சூட்டப்படாத புதிய படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். அசினை தனக்கு ஜோடியாக ப்போடச் சொல்லி விஜய் கேட்டுக்கொண்டதாகத் தகவல்.

கஜினி இந்திப் பட வெற்றிக்குப் பிறகு, இந்தியில் ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்துவிடவேண்டும் என்று எண்ணிய அசினின் எண்ணத்தில், அவர் நடித்து காணாமல் ‘லண்டன் ட்ரீம்ஸ்’ படம் மண்ணைப் போட்டுவிட்டது. அதனால் தமிழ்ப்படம் பக்கம் திரும்ப நினைத்தவர், விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக அசின் முதலில் ரூ.1 கோடி சம்பளம் கேட்டாராம். கடைசியாக ரூ.80 லட்சத்திற்கு நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

admin @ 9:43 pm
Filed under: kollywood
Vijay’s 51th movie named ‘Thalapathi’

Posted on Monday 7 December 2009

விஜய்யின் 51 ஆவது படம் ‘தளபதி’

vijay-and-anushka-in-vettaikaran.jpg

ளைய தளபதி என விஜய் ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்யின் 51வது படத்துக்கு ‘தளபதி’ என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது சுறா படத்தில் நடித்து வரும் விஜய் அப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். தளபதி படம் 1991ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. அப்படத்தின் தலைப்பே விஜய் படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. விஜய்யின் தளபதி, முந்தைய தளபதி படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாம். இப்படம் குடும்ப பாங்கான கதை. விஜய்க்கு ஜோடியாக நடிக்க அசினிடம் பேசி உள்ளனர். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார்.

admin @ 8:28 pm
Filed under: kollywood
Vettaikaran Trailer

Posted on Friday 4 December 2009

vettaikaran-photo

Actor: ,
Director: Babu Sivan
Music director: Antony
Producer: AVM Balasubramanian
Cinematography: Gopinath

admin @ 3:19 am
Filed under: trailer
Politics…not now, says actor Vijay

Posted on Monday 22 June 2009

இப்போதைக்கு அரசியல் இல்லை: விஜய் பிறந்தநாள் பேட்டி
vijay-birthday.jpg
பிறந்தநாளையொட்டி நடிகர் விஜய் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் பேட்டி வருமாறு:
கேள்வி: உங்கள் பிறந்த நாள் விருப்பம் என்ன?

பதில்: ஒவ்வொரு பிறந்தநாளிலும் ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருகிறேன். ஏழை மாணவ - மாணவிகளுக்காக இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் துவக்க விரும்பினேன்.

அதை இந்த பிறந்தநாளில் நிறைவேற்றி இருக்கிறேன். இரண்டு பயிற்சி மையம் திறந்துள்ளேன். இந்த எண்ணிக்கை மேலும் உயரும். இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாமும் நடத்தப்பட்டது. உணவும் வழங்கப்பட்டது.

கே: ரசிகர்களை அழைத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தி உள்ளீர்களே? அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமா?

பதில்: ரசிகர்களிடம் கருத்து கேட்டது உண்மைதான். பொது மக்கள், பெண்கள் என எல்லோரிடமும் அபிப்பிராயம் கேட்டோம். அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணிகளில் ஈடுபடலாம் என்று எல்லோரும் தெரிவித்தனர். அவர்கள் கருத்தை நான் ஒதுக்கவில்லை. ஆனாலும் அரசியலில் இப்போதைக்கு ஈடுபடும் யோசனை எதுவும் இல்லை.

கே: ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி உள்ளீர்களே? மிரட்டல் வந்ததா?

ப: மிரட்டல் ஏதும் வரவில்லை. மிரட்டல் வரும் அளவுக்கு நான் பெரிய ஆள்இல்லை. அப்படி வந்தாலும் பயப்படமாட்டேன்.

கே: மக்கள் இயக்கமாக மாற்றுவதால் ரசிகர்கள் தொண்டர்களாக மாற வேண்டி வருமே?

ப: என் ரசிகர்கள் எப்போதோ தொண்டர்களாகிவிட்டார்கள்.

கே: வேட்டைக்காரன் படம் எப்போது ரிலீசாகும்?

ப: 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்து விட்டது. தீபாவளிக்கு ரிலீசாகும்.

கே: 50-வது படம் முடிவாகிவிட்டதா?.

ப: எனது 50-வது படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார். டைரக்டர் முடிவாகவில்லை.

இவ்வாறு விஜய் கூறினார்.

admin @ 2:47 am
Filed under: kollywood
Vettaikaran Movie Gallery

Posted on Wednesday 17 June 2009

Actor: ,
Director: Babu Sivan
Music director: Antony
Producer: AVM Balasubramanian

vettaikaran-photo
vettaikaran-still
vettaikaran-gallery
vettaikaran-stills
vettaikaran-photos
vettaikaran-movie
vettaikaran-images
vettaikaran-image
vettaikaran-film.jpg

admin @ 10:33 pm
Filed under: gallery
Vettaikaaran Movie Gallery

Posted on Tuesday 5 May 2009

Artist: ,

Director: Babu Sivan

’s 49th film

vettaikaaran.jpg

vettaikaaran2.jpg

vettaikaaran3.jpg

vettaikaaran4.jpg

vettaikaaran1.jpg

admin @ 9:03 am
Filed under: movie
Vijay introduces his son to Kollywood

Posted on Monday 30 March 2009

விஜய் வாரிசு வர்றார் பராக் பராக்

vijay-and-son.jpg

ங்கள் வாரிசுகளை அவ்வளவு சீக்கிரம் வெளியுலகுக்குக் காட்டாத நட்சத்திரங்களுக்கு மத்தியில் விஜய் வித்தியாசமானவர். மகன் விஜய் ஜேசன் சஞ்சய்யை வெளியே அழைத்து வந்துவிட்டார்.

ஐபிஎல் தொடரின்போது தனது மகனை முதுகில் சுமந்தபடி, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஆட்டம்போட்டார் விஜய்.

இப்போது வாரிசை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்யும் வேலையில் இறங்கிவிட்டார்(விஜய்யும் சின்ன வயதிலேயே நடித்தவர்தானே).

இப்போது நடித்து வரும் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு தன் மகனை ஆடவிட்டிருக்கிறார் விஜய். நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் விஜய் ஜேசன் சஞ்சய் ஆடிய இப்பாடலுக்கு ஷோபி நடனம் அமைத்துள்ளார்.

admin @ 9:53 pm
Filed under: kollywood
Vijay website closed

Posted on Thursday 12 February 2009

விஜய்நெட்.காம் - க்கு மூடுவிழா: விஜய் ரசிகர்கள் முடிவு

vijay.jpg

டிகர் விஜய் ரசிகர்கள் தங்கள் தலைவருக்காக நடத்தி வந்த விஜய்நெட். காம் www.vijaynet.com இணைய  தளத்திற்கு மூடுவிழா நடத்துவதாக அறிவித்துள்ளனர். விஜய்.டாம் இணைய தளத்திற்குப் போனால் இந்த மூடுவிழா அறிவிப்புதான் வருகிறது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அன்பு ரசிகர்களே,

விஜய் பேன்ஸ் நெட்வொர்க் எனும் இந்த தளத்தை மிகுந்த வருத்தத்துடன் இன்றோடு மூடுகிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை. தளத்துக்குத் தேவையான சிறப்புச் செய்திகள் மற்றும் படங்கள் தருவதில் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காததாலும், இனியும் நஷ்டத்தைத் தாங்க முடியாது என்பதாலுமே இதை மூடுகிறோம்.

ஆரம்பத்தில் இந்தத் தளத்தைத் துவங்க விஜய் மற்றும் அவரது தந்தை உள்ளிட்டோர் பெரும் ஆதரவு அளித்து வந்தனர். ஆனால் திடீரென்று இப்போது முற்றிலுமாக நிறுத்திக் கொண்டனர். அதுமட்டுமல்ல, இந்த தளத்துக்காக நாங்கள் செய்யும் கடின உழைப்புக்கான பலனை வேறு யாரோ தட்டிச் செல்கிறார்கள்.

எந்தவித நிதி வசதியுமின்றி சக மாணவர்களை ஒன்றிணைத்து மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் சொந்த முயற்சியில் நடத்திய இணையதளம் இது. இப்போதும் கூட பணத்தை எதிர்பார்க்காமல் நடத்தத் தயாராகவே உள்ளோம். ஆனால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் வேறு யாருக்கோ போய்ச் சேர விடமாட்டோம். விஜய்யை வளரவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு ஒரு கூட்டம் அவரைச் சுற்றிலும் உள்ளது. அவர்களோடு மோதிக் கொண்டிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இவற்றையெல்லாம் முடிந்தவரை சமாளிக்கவே நாங்கள் முயன்றோம். ஆனால் நிலைமை இப்போது கைமீறிப் போய்விட்டது.

எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை, வீடு மற்றும் கடமைகள் உள்ளன. இனி அவற்றுக்குத்தான் முதலிடம். விஜய் படங்களை ரசிக்கும் சாதாரண ரசிகர்களாகத் தொடர்வோம். ஆனால் அதற்காக அவர் படங்களைக் கொண்டாட மாட்டோம். உலக அளவில் அவரது படங்களைத் தூக்கிவிடும் ப்ரமோஷனல் வேலைகளில் இனி ஈடுபட மாட்டோம். இதுவரை எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.

இப்படிக்கு

விஜய்பேன்ஸ் நெட்வொர்க் நி்ர்வாகம்.
-என்று கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கவனமாகக் கையாள  வேண்டிய விஷயம் இது.

admin @ 3:03 am
Filed under: kollywood