» Punch Balu .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Punch Balu

Posted on Saturday 20 June 2009

‘பஞ்ச்’ பாலு

த்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது; இதை மன்னிக்க முடியாது. இதை நான் பாராளுமன்றத்தில் பேசினேன். நான் தொடர்ந்து பேசுவேன். விருப்பமிருந்தால் கூட்டணியில் வைத்துக்கொள்ளுங்கள்.
-தொல்.திருமாவளவன்.

இதையே நீங்க தேர்தலுக்கு முன்பாகச் சொல்லியிருந்தால் பாராட்டியிருக்கலாம். இப்போ சாதா அரசியல்வாதியின் பேச்சாக இருப்பதால் பாராட்ட முடியவில்லை.

சட்டசபைக் கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படவேமண்டும். அடிக்கடி வீண் வேலையாகவும், வெற்று விளம்பரத்திற்காகவும் வெளிநடப்பு, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பக்கூடாது.
-அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா

அப்போ இதுவரைக்கும் நடந்துகொண்ட முறையெல்லாம் தப்புதான்னு ஒப்புக்கறீங்களா மேடம். ஆனாலும் உங்கள் கட்சி உறுபபினர்கள் பழக்கதோஷத்தை  கைவிட முடியாம தவிக்கறாங்கப் போலிருக்கே!

புலம் பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்பட்ட பொருட்களை திருப்பி அனுப்பிய இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும், முதல்வர் கருணாநிதி யின் அலட்சியப் போக்கிற்கும் அதிக வேறுபாடில்லை.
-பழ நெடுமாறன

கண்ணை மூடிக்கொண்டு கண்டதையும் ஆதரிக்கும் உங்களுக்கும், தமிழனைக் கண்டாலே வெறுக்கும் ராஜபக்சேவின் நடவடிக்கைக்கும் அதிக வேறுபாடு தெரியவில்லையே. ஐரோப்பிய தமிழர்களால் லண்டனில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண கப்பலின் பெயர் வணங்காமண். வணங்காமண் என்ற வார்த்தையைக் கேட்டதும், இலங்கை அதிபருக்கு வெறுப்பேறாதா? அதுமட்டுமல்ல அந்த கப்பலின் முதுகுகளில் தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் வார்த்தைகளும், ஈழக்கொடியும் இருந்ததாகக் கேள்வி. இதையெல்லாம் எதிரிகள் சும்மா வேடிக்கையா பார்ப்பார்கள்?தவி செய்பவர்கள் முதலில் அந்த அரசிடம் அனுமதி பெற்றார்களா என்பது கூட தெரியவில்லை.

ஒவ்வொரு வீட்டிலும் என்னை மகனாகவும், அண்ணன் தம்பியாகவும் நினைக்கும் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய ஆசைப்பட்டேன் அதனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளில் எனக்கு உடன்பாடு ஏற்பட்டது.
-நடிகர் விஜய்

அதையெல்லாம் நம்பி கைக்காசை விட்டுறப் போறீங்கண்ணா!

’s Old punches

2009/06/20 Punch Balu

2009/06/12 Punch Balu

2009/05/29 Punch Balu

2009/05/22 Punch Balu

2009/05/15 Punch Balu

2009/05/08 Punch Balu

2009/05/01 Punch Balu

2009/04/20 Punch Balu

2009/04/10 Punch Balu

2009/04/03 Punch Balu

 2009/03/27 Punch Balu

2009/03/20 Punch Balu

2009/03/13 Punch Balu

2009/03/06 Punch Balu

2009/02/27 Punch Balu

2009/02/20 Punch Balu

2009/02/13 Punch Balu

2009/02/06 Punch Balu

2009/01/30 Punch Balu

2009/01/23 Punch Balu

2009/01/16 Punch Balu

2009/01/09 Punch Balu

2009/01/02 Punch Balu

2008/12/26 Punch Balu

2008/12/19 Punch Balu

2008/12/12 Punch Balu

2008/12/05 Punch Balu

2008/11/28 Punch Balu

2008/11/21 Punch Balu

2008/11/14 Punch Balu

2008/11/07 Punch Balu

2008/10/31 Punch Balu

2008/10/24 Punch Balu

2008/10/17 Punch Balu

2008/10/10 Punch Balu

2008/10/03 Punch Balu

2008/09/26 Punch Balu

2008/09/19 Punch Balu

admin @ 1:42 am
Filed under: Uncategorized
Punch Balu

Posted on Friday 6 March 2009

punch-balu‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.

பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் கம்யூனிஸ்டுகள் இதுவரை இல்லாத அளவு அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுவர். இடதுசாரிகள் ஆதரவுடனேயே மத்திய அரசு அமையும்.
- தா.பாண்டியன்

பாஜக வந்தா நீங்க ஆதரவு தரமாட்டீங்க. மூன்றாவது அணிக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை. அப்போ, ஜெயிச்சு வந்தா காங்கிரசுக்குத் தான் எங்கள் ஆதரவுன்னு சுத்தி வளைச்சு சொல்றீங்களா? என்ன சார் அநியாயம் இது!

காங்கிரசை திருப்திப்படுத்தவே தன்னை கைது செய்திருப்பதாக வைகோ யாரையோ திருப்திப்படுத்துவதற்காகக் கூறுகிறார்.
-ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

நீங்கள் கலைஞரை, சோனியாவை திருப்திப்படுத்தத்தான் இப்படி கூறுவதாக வைகோ கூறுகிறாராம் தெரியுமா?

வரும் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனித்து போட்டியிடும்.
- இல.கணேசன்

வேற வழி! இதை வேற அறிவிக்கனமாக்கும்!

அம்மாவை ஐந்து நிமிடம் இந்திய பிரதமராக்கிப் பாருங்கள். அவர் பிரதமரானால் காஷ்மீர், பாகிஸ்தானில் சண்டையே இருக்காது
-சிரிப்பு நடிகர் எஸ்.எஸ்.சந்திரன்

ஏன், அங்கே எல்லாம் ஷூட்டிங் ஆடர் போட்டுடுவாரோ அம்மா. அட, என்னதான் கற்பனைன்னாலும் அதில்கூட இலங்கையில் போர்நிறுத்தம் வரும்னு சொல்றாங்களா பார்த்தீங்களா!

பப்கள் இந்தியாவில் அறிமுகமாகி ஏறக்குறைய 15 வருஷம் இருக்கலாம். அதற்கு முன்னால் இங்கே போதை மருந்துகளே கிடையாதா? பப்களை எதிர்க்குறவங்க இவ்வளவு நாள் தூங்கிட்டிருந்தாங்களா?
- நடிகை குஷ்பு

தூங்கறவங்க எழுந்துக்க கூடாதா என்ன? போதையை உள்ளே தள்ளிட்டு தானும் தூங்கி, நாட்டையும் தூங்க வைப்பவர்களை கொஞ்சமாக ‘தட்டி’ எழுப்புவது குற்றமா? நிதானமாகச் சொன்னால், நிதானத்தில் இல்லாதவர்கள் கேட்பதில்லையே என்ன செய்வது?
’s Old punches

2009/02/27 Punch Balu

2009/02/20 Punch Balu

2009/02/13 Punch Balu

2009/02/06 Punch Balu

2009/01/30 Punch Balu

2009/01/23 Punch Balu

2009/01/16 Punch Balu

2009/01/09 Punch Balu

2009/01/02 Punch Balu

2008/12/26 Punch Balu

2008/12/19 Punch Balu

2008/12/12 Punch Balu

2008/12/05 Punch Balu

2008/11/28 Punch Balu

2008/11/21 Punch Balu

2008/11/14 Punch Balu

2008/11/07 Punch Balu

2008/10/31 Punch Balu

2008/10/24 Punch Balu

2008/10/17 Punch Balu

2008/10/10 Punch Balu

2008/10/03 Punch Balu

2008/09/26 Punch Balu

2008/09/19 Punch Balu

admin @ 4:07 am
Filed under: Uncategorized
Punch Balu

Posted on Friday 5 December 2008

punch-balu‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

நிதித்துறையில் தோல்வி அடைந்த சிதம்பரம் உள்துறை அமைச்சரா? முக்கியமான உள்துறை மீது காங்கிரஸ் அரசுக்கு அக்கறை இல்லை, என்பதையே இது காட்டுகிறது.
- இல. கணேசன்
அந்த அக்கறை முதலிலேயே இருந்திருந்தா சிவராஜ் பாட்டீலையும், ப. சிதம்பரத்தையும் முக்கிய பதவிகளில் அமர வைத்திருப்பார்களா? ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரைப் போலதான் இவர்களின் பதவியேற்புகளும்.

பிச்சை எடுக்கிறவளுக்குப் பெயர் லட்சுமி என்பதைப் போல இருக்கிறது, சீரழிந்து வரும் சென்னையை சிங்காரச் சென்னை என பட்டம் கொடுத்து அழைப்பது.
- விஜயகாந்த்
விருத்தாசலத்தில் எந்த விருத்தியும் இல்லன்னு தகவல் வருதே! அதை கவனிங்க கேப்டன் முதல்ல. அப்புறம் விருத்தகிரி படப்பிடிப்பை வச்சுக்கலாம்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எதிர்காலத்தில் இலங்கை உதவியுடன் கன்னியாகுமரியையும் தாக்கும் அபாயம் உள்ளது.
- வைகோ
அப்ப இந்தியாவின் தென் பிராந்தியத்தில் நமக்கு விடுதலைப் புலிகள்தான் பாதுகாப்பாக இருப்பார்கள்னு நீங்கள் சொன்னது தண்ணியில எழுத்தா? அப்ப இந்த எதிர்கால கணிப்பை மட்டும் எப்படி நம்பறதாம். அப்பாவி பொதுஜனம் காதுல பூ வச்சுருந்தா எல்லாரும் வந்து சொருகிட்டு போயிடுவீங்களே.

வரும் தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றிபெறும் என்பது குழந்தைக்குக்கூட தெரியும்.
- ஜெயலலிதா
ஏங்க, கோடிக்கணக்கான தொண்டர்களுக்கு ஒரு ‘அம்மா’வா இருந்துக்கிட்டு குழந்தைகள் நெஞ்சில் விஷத்தை விதைக்கிறீங்க?

பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும் பொடா போன்ற கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்
- இல. கணேசன்
நீங்கள் பொடாவை வச்சுக்கிட்டு என்ன பண்ணீங்க? அரசியல்ரீதியாகத்தான் அதை உங்க பீரியட்ல நிறையப்பேர் பயன்படுத்தினாங்க. இன்னொன்னு கேட்கணுங்க. உயிருக்கே பயப்படாத தீவிரவாதிகள் பொடா க்கெல்லாம் பயப்படுவாங்கன்னு நீங்க எப்படி நம்பறீங்க. உயிரை விட அவங்க தயங்காதப்போ, நாமும் அவர்கள் உயிரை எடுக்க தயங்கக்கூடாது. சந்தேகம் இருந்தா நம்ம ராணுவத்தைச் சேர்ந்த வீரர் யாரையாவது கேட்டுப்பாருங்கள். இதைத்தான் சொல்வார்.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு அரசியல்வாதிகளை மட்டும் தனிமைப் படுத்தி, குற்றவாளியாக்கி, குறை கூறக் கூடாது.
- சத்ருகன் சின்கா பா.ஜ.க.
சரி! வேற என்ன காரணம்னு சரியாகச் சொலலுங்க. அரசியல்வாதிகளைக் குறை சொல்லாமல் இருக்கிறோம். தீவிரவாதம் பல்வேறு ரூபங்களை எடுத்து ஆட முதல் காரணம் அரசியல்ரீதியானது என்பது யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுகிட்டு பேசறீங்களா?

‘மும்பைக்கு மற்ற மாநிலத்தவர்கள் வரக்கூடாது’ என சண்டை போட்ட ராஜ் தாக்கரே, இப்போது எங்கே போனார்? வட, தென் மாநில கமாண்டோக்கள்தான் தற்போது மும்பையைக் காப்பாற்றினர்.
- த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா
அப்படி போடுங்க! பேசாம மும்பையை தீவிரவாதிகள் தாக்கினபோது ராஜ்தாக்கரேவையும், அவருடைய தொண்டர்களையும் அனுப்பியிருந்தால் கதை தெரிஞ்சிருக்கும். 

’s Old punches

2008/11/28 Punch Balu

2008/11/21 Punch Balu

2008/11/14 Punch Balu

2008/11/07 Punch Balu

2008/10/31 Punch Balu

2008/10/24 Punch Balu

2008/10/17 Punch Balu

2008/10/10 Punch Balu

2008/10/03 Punch Balu

2008/09/26 Punch Balu

2008/09/19 Punch Balu

admin @ 6:56 am
Filed under: Uncategorized
2008/11/07 Punch Balu

Posted on Friday 7 November 2008

‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

ஈழத் தமிழர் பிரச்னையில் ரஜினி காட்டிய துணிச்சல் கலைஞரிடம் இல்லை.
- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
உங்களிடம் கூடத்தான் இல்லை என்று மக்கள் சொல்கிறார்கள். பின்னே எல்லாம் தமிழக முதல்வர் கருணாநிதிதான் பார்த்துக்கணும்னு சொன்னா எப்படி?

எம்மதமும் சம்மதமே என வாழ்ந்த திருநாட்டில் எதற்காக நெற்றிக்குறி?
எதற்காக நெடிய பூணூல்? இடக்காக இப்படி கேட்கலாமா என்று;
மிடுக்காக கோபித்துக்கொள்ளும் மேலோர் என்போர் -
வள்ளுவரின் வழியில் சொன்னால்; வைதீகக் குரங்கினத்தின் வாலோரேயாவர்
-கருணாநிதி கவிதை
சமத்துவம், மூடநம்பிக்கை என்று நீங்கள் சாடுவதெல்லாம் சரிதான். ஆனால் அதற்கு உதாரணமாக இந்து மதத்தை மட்டுமே எடுத்துக்கொள்வதில் அப்படி என்ன உங்களுக்கு சந்தோஷம் அல்லது மற்ற மதங்களில் உள்ள நம்பிக்கைகளை அறியாதவரா நீங்கள்? அவர்களுக்கும் கொஞ்சம் எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்குமே. ஏனேன்றால் குரங்குகள் எந்த மதத்தைச் சேர்ந்தவை என்றாலும் தாவத்தானே செய்யும்!

ஆண்டவன் சொன்னால் அடுத்த நாளே அரசியலுக்கும் வருவேன்! ஆனாலும் எந்திரனில் பிசியாக இருப்பதால் அது வெளிவந்த உடனே  நல்ல பதிலாகச் சொல்கிறேன்?
-ரசிகர்களிடம் ரஜினி
ஒண்ணு வருவேன்னு சொல்லுங்க, இல்ல வரமாட்டேன்னு சொல்லுங்க. ஏன் நீங்களும் சராசரி நடிகனாக, தன்னுடைய திரைப்பட வெற்றிக்கு ரசிகர்களைப் பயன்படுத்தப் பார்க்கிறீங்க? உங்களைப் போய் துணிச்சல் மிக்கவர்னு ராமதாஸ் சொல்றாரு. சிரிக்கிறதா அழுவதான்னே மக்களுக்குப் புரியலை. உங்களுக்கும் ஒண்ணும் புரியாதே!

இலங்கையிடம் நிவாரண நிதியைக் கொடுத்தால், ஒரு கையில் பாலையும், இன்னொரு கையில் விஷத்தையும் கொடுப்பது போலாகி விடும். அதனால் நிவாரண நிதி கொடுக்காதீர்கள். நான் ஒரு பைசா கூட கொடுக்கமாட்டேன்.
-பாடலாசிரியை தாமரை
ஒரு பைசாலாம் வாங்கறது இல்லீங்க! இலங்கை அரசிடம் நிதியை தரமாட்டோம் செஞ்சிலுவை சங்கம் அல்லது சர்வதேச தொண்டு நிறுவனங்களிடம் அல்லது இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் நிதி வழங்கப்படும் என்று நம்ம அரசாங்கம் சொன்னால் நம்பாம, இப்படி பேசறது எந்த விதத்தில் நியாயம்? உங்களுக்குக் கொடுக்க மனசில்லைன்னா விட்டுடுங்க. மத்தவங்க கொடுக்கறத தடுக்கறதுக்கு நீங்க யாருங்க?

அரசு வழங்கி வரும் கலர் டிவியால் 250 மெகாவாட் கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது, மேலும் 40 லட்சம் கலர் டிவி வழங்குவதற்கான டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த கலர் டிவிக்களை பயன்படுத்த மின்சாரம் எங்கிருந்து கிடைக்கப் போகிறது?
- ச.ம.க. தலைவர் சரத்குமார்
நீங்க என்ன சொல்ல வர்றீங்க? ஏழைகளுக்கு கலர் டிவி தரக்கூடாது என்று சொல்றீங்களா அல்லது அதற்கேற்றவாறு மின்சார உற்பத்தி செய்யனும்னு சொல்றீங்களா? உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இந்தியா முழுக்க ஆண்டுக்கு 65 லட்சம் புதிய கலர் டிவிக்கள் விற்பனையாவதாகவும், கலர் டிவி விற்பனையின் அளவு ஆண்டுதோறும் 9 சதவிகிதம் உயர்ந்து வருவதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. அப்படி இருக்கறச்ச ஏழைங்க விஷயத்தில் கேள்வி கேட்டு, அவங்க சந்தோஷத்தை கெடுக்கப் பார்க்கலாமா சார்?

’s Old punches

2008/10/31 Punch Balu

2008/10/24 Punch Balu

2008/10/17 Punch Balu

2008/10/10 Punch Balu

2008/10/03 Punch Balu

2008/09/26 Punch Balu

2008/09/19 Punch Balu

admin @ 3:10 am
Filed under: Uncategorized
2008/10/24 Punch Balu

Posted on Friday 24 October 2008

punch-balu‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

விஜயகாந்திற்கு இல்லாத இன உணர்வு, கலை உலகில் வேறு யாருக்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
-தே.மு.தி.க. மாநில துணைச் செயலர் கு.ப. கிருஷ்ணன்.
அப்போ ராமேஸ்வரம் போய் தன்னுடைய இன உணர்வை நிரூபித்திருக்கலாமே உங்கள் தலைவர்? பாரதிராஜா சொல்றாப்ல, உங்கள் தலைவர் பிறவித் தமிழன் இல்லையே. வளர்ப்புத் தமிழன்தானே! இன உணர்வு வராதது அவரது தப்பு இல்லை!

இந்தியாவில் தமிழகத்தில் தான் மின்கட்டணம் குறைவு.
-மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர் பஞ்சரத்னம்
மின்சாரமும் குறைவுன்னு சொல்லுங்க! இப்ப யாரு மின்சாரக் கட்டணத்தைப் பற்றி கவலைப்படறாங்க. மின்சாரம் ஒழுங்கா தொடர்ந்து கிடைச்சா போதும்னு இல்ல ஆசைப்படறாங்க.

தமிழர் நலன் காக்க, தமிழக கட்சிகள் தீவிரமாகச் செயல்படுகின்றன. ஆனால், நாங்கள் மராத்தியர்களின் நலன் காக்க தீவிரம் காட்டும்போது மட்டும் எங்களை குறிவைத்து, குற்றம் சாட்டி விமர்சிக்கின்றனர்.
-சிவசேனா தலைவர் பால் தாக்கரே கட்டுரை
ஆனால் ஒண்ணு கவனிச்சீங்களா… நாங்கள் யாரையும் விரட்டி அடிக்கறது இல்லை. எங்களை யாரும் விரட்டாமல் இருக்கத்தான் போராடுகிறோம். இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடும் கொடுமையை அனுபவித்தால் தான் புரியும். உங்களுக்கு அது புரியாது. பெயரிலியே  ‘தாக்க’ வைத்திருக்கும் நீங்கள் எங்களுடன் தேவையில்லாம ஒப்புமை பாராட்டாதீர்கள்.

செக்ஸ் கவிதைகள் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையேயான ஒரு நல்ல புரிதலுக்கு வழிவகுக்கும். இருபாலருக்கும் இடையே பரஸ்பரம் மதிப்பும் கூடும்.
-சமூக நல வாரியத் தலைவர் கவிஞர் சல்மா பேட்டி
அப்ப, செக்ஸ் கதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அதற்கான கதவுகளையும் வெளிப்படையாக திறந்துவிட்டு விடலாமா? அப்ப, இன்னும் அதிகமாக பரஸ்பரம் புரிந்துகொள்வார்கள் இல்லையா?

சோனியாவின் மகன் ராகுல், தனது தந்தையின் சாவுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஏன், தன் கட்சி ஆட்சி தான் நடக்கிறது எனத் தெரியாத அளவுக்கு அவர் வடிகட்டிய முட்டாளா?
-ஜனதா கட்சி தலைவர் தமிழக தலைவர் சந்திரலேகா
ஆக, தன்னுடைய ஆட்சி இருந்தால் நீதியை, நீதிமன்றத்தை வளைத்து காரியம் சாதித்துக் கொள்ளலாமே என்று சொல்லவரும் நீங்கள் வடிகட்ட முடியாத அளவுக்கு ரொம்ப புத்திசாலியா? என்று காங்கிரசார் கேட்கிறார்களாமே!

’s Old punches

 2008/10/17 Punch Balu

2008/10/10 Punch Balu

2008/10/03 Punch Balu

2008/09/26 Punch Balu

2008/09/19 Punch Balu

admin @ 3:33 am
Filed under: Uncategorized
2008/10/17 Punch Balu

Posted on Friday 17 October 2008

punch-balu‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

மத்திய அரசை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே  மேலோங்கியுள்ளது
-ஜெயலலிதா
மக்களுக்கு எண்ணம் வந்ததோ இல்லையோ, உங்களுக்கு வந்துருச்சுன்னு சொல்லுங்க. மத்திய அரசை ஆட்டிவைக்க வாய்ப்பு கிடைக்காமல் நீங்கள் ஏங்குவதும் மக்களுக்குப் புரிகிறது. அதுக்காகவெல்லாம் மாத்திடுவாங்கன்னு கனவு காணாதீங்க!

தே.மு.தி.க. இளைஞரணி மாநாட்டிற்கு ஆளும் கட்சியினரால் தொடர்ந்து தொல்லை ஏற்பட்டாலும், மழை இடையூறு ஏற்படுத்தும் என நல்ல உள்ளம் படைத்த மக்கள் அஞ்சுகின்றனர். ஆனால் எந்தத் தடையையும் சந்தித்து வெற்றிகொள்ளும் ஆற்றல் தே.மு.தி.க. தொண்டர்களுக்கு உண்டு. மழையால் மட்டுமல்ல எக்காரணத்தைக் கொண்டும் மாநாடு  தள்ளி வைக்கப்படாது.
-விஜயகாந்த்
ஏதாவது காரணம் முன்னிட்டு, இந்த மாநாட்டுக்கு தடை ஏற்படாதா, அதை மக்களிடம் சொல்லி அனுதாபம் தேட முடியாதா, அரசியல் செய்ய முடியாதா, ஆளும் கட்சியின் பெயரை கெடுக்க முடியாதா என்ற உங்கள் ஆசைகள் வெளிப்படையாகத் தெரிகிறது. கவலைப்படாதீங்க… அப்படியெல்லாம் தடை விதிச்சு, உங்களை இன்னும் பெரிய ஆளாக்க கலைஞர் ஒண்ணும் அரசியல் கத்துக்குட்டி அல்ல. நீங்களா புலம்ப வேண்டியதுதான்.

இலங்கை இனி, சிங்கள நாடு. சிங்களர்களுக்கு அடிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், தமிழர்களுக்கு இங்கு இடமில்லை.
-இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா கொக்கரிப்பு
ஆதிக்கச் சக்திகளுக்கு தமிழன் அடிபணிந்ததாக வரலாறு இல்லை. கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழர்கள் மீதான போரை  உங்களால் தொடரத்தான் முடிகிறதே ஒழிய, முடிக்க முடிந்ததா? ஒருவேளை அது முடிந்தால் அது, தமிழர்களின் வெற்றிக்குப் பிறகு கிடைக்கும் முடிவாகத்தான் இருக்கும் என்பதை ஈழத்தமிழர்கள் நிரூபிப்பார்கள்.

சில ஆண்டுகளாக அரசியல்வாதிகளை கவனித்து வந்தேன். அவர்களின் எந்தச் செயலும் எனக்குப் பிடிக்கவில்லை. அவர்களால் தான் சமுதாயம் சீரழிகிறது. மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகிறார்கள். யாரும் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளுக்கும் அரசியல்வாதிகள்தான் காரணம். அதனால் தான் குடியரசுத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தேன்.
-குடியரசுத் தலைவருக்கு இ மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்ட பொறியாளர் ஸ்ரீராம் வாக்குமூலம்
நீங்க சொல்றது எல்லாம் சரிதான்! அதுக்காக நாமும் அவர்களைப் போலவே தரம் தாழ்ந்து நடந்துகொள்ள வேண்டுமா என்ன? அல்லது நாம் எல்லோரும் ரமணா ஆகிவிட முடியுமா? என்னதான் குடியரசுத் தலைவர் அரசியல்வாதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர் ஒரு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரிதான் என்பது உங்களுக்குத் தெரியாமல போனது துரதிருஷ்டம். நம்மகிட்டதான் ஓட்டு என்னும் சக்திமிக்க ஆயுதம் இருக்கே… அதைச் சரியாகப் பயன்படுத்தினால் நல்லவர்கள் மட்டுமே நம்மை ஆளும் சூழ்நிலையைக் கொண்டு வரமுடியாதா என்ன? பேட் லக் ஸ்ரீராம்!

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கு கொண்டுவர முதல் கையெழுத்து போடுவோம்.
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ்
அப்ப இப்ப போலவே எப்பவும் தமிழன் தண்ணியடிச்சுட்டு, டான்ஸ் ஆடிட்டே இருக்கலாம்னு சொல்லாமல் சொல்றீங்களா?

புலிகள் மீதான தடையை நீக்கிவிட்டு, பிரபாகரனை ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்திற்கு உதவி செய்யச் சொன்னால், பாகிஸ்தானியர்களின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஒழியும்.
-சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே
தமிழனைத் துரத்தின இவருக்கு, தமிழனின் வீரம் பற்றி இப்பதான் புரிஞ்சது போலிருக்கு. அதுக்காக இப்படியெல்லாம் உளறக்கூடாது.

 ’s Old punches

2008/10/10 Punch Balu

2008/10/03 Punch Balu

2008/09/26 Punch Balu

2008/09/19 Punch Balu

admin @ 12:08 am
Filed under: Uncategorized
2008/10/10 Punch Balu

Posted on Friday 10 October 2008

punch-balu.jpg‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

ஓருவேளை எதி்ர்காலத்தில் தி.மு.க. வுக்குத் தோல்வி ஏற்பட்டால் அதற்கு மின்வெட்டு காரணமாக இருந்துவிடுமோ என்ற அச்சத்தில் இரவில் எனக்குத் தூக்கமே வர மறுக்கிறது.
- மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி
அதான் தூக்கம் வரலைன்னு ஒத்துக்கிறீங்க இல்ல, பேசாம பதவியை ராஜினாமா செஞ்சுப் பாருங்களேன். நீங்களும் நிம்மதியா தூங்கலாம், தமிழக மக்களும் நிம்மதியாக தூங்க வழி பிறக்கும். ஓருவேளை எதிர்காலத்தில் தி.மு.க. வெற்றி பெற்றால் அதற்கு உங்கள் ராஜினாமாவும் ஒரு காரணமாக மாறலாம் அல்லவா?

‘த்ரிஷாவைப் பார்க்கும்போதே ஐயையோ ஐயையோ பிடிச்சிருக்கு’ என்று பாடத் தோன்றுகிறது.
- இயக்குநர் கே.பாலசந்தர்
என்ன சார், குசேலன் சூடு ஆறிப்போயிடுச்சு போலிருக்கு. மன்மத லீலை கால மலரும் நினைவுகள் வந்துவிட்டதா? த்ரிஷாவைப் பார்த்து பேசினால் இப்படித்தான் வரும். உலகத்தைப் பார்த்து பேசுங்க சார்…வேறு ஏதோ ஒன்று உங்களை பிடிச்சிருச்சுன்னு நினைச்சுடப் போறாங்க மக்கள்.

மத்திய அரசை யார் நடத்துகிறார்கள்? யார் முடிவு எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இப்படி இருந்தால் நாடு எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்.
- பா.ஜ.க. வின் பிரதமர் வேட்பாளர் எல்.கே. அத்வானி
நீங்க ஆண்டால் மட்டும் நாடு ரொம்ப பாதுகாப்பாக இருக்குமா என்ன? உங்க கட்சி ஆளுகிற மாநிலங்களில் மக்கள் அலறுவது உங்கள் காதை இன்னும் எட்டவில்லையா அல்லது அதான் எங்கள் கொள்கையே என்று சும்மா இருக்கிறீர்களா?

முறையாகச் செயல்படாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தைத் தேர்தல் கமிஷனுக்கு வழங்கக்கேட்டு மத்திய அரசை 8 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இதுவரை அதிகாரம் கிடைக்கவில்லை.
- தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி
சட்டம் போடறவங்க எங்காவது அந்தச் சட்டத்தில் அடங்குவாங்களா? தங்கள் மீதே தார் பூசிக்கொள்ள யாராவது முன்வருவார்களா? வேறு ஏதாவது நடக்கிறமாதிரி கனவு காணுங்க சார்!

admin @ 5:46 am
Filed under: Uncategorized
2008/10/03 Punch Balu

Posted on Friday 3 October 2008

durai-murugan.jpg‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

வீரத்தின் விளைநிலமான கம்யூனிஸ்ட்டுகளின் கால்கள் நான்கைந்து ஸீட்டுகளுக்காக விஜயகாந்தின் வீட்டு வாசலை மிதிக்கலாமா? -அமைச்சர் துரைமுருகன்.
சுயநலமாக செயல்படுவதும், சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதும் உங்களுக்கு மட்டுமேயான சொத்தா என்ன? அவர்களும் தான் கொஞ்சம் அனுபவிக்கட்டுமே! 

தமிழகத்தில் மந்தரி ஆகும் கனவு தகர்ந்துவிட்டதே என்ற கேள்விக்கு….

”கனவு தகர்ந்துவிட்டது என்று கூற முடியாது. விருப்பம் நிறைவேறவில்லை என்று வேண்டுமானால் கூறலாம். காங்கிரஸ் கனவு என்பது எங்கள் தலைமையில் அரசு அமைவதுதான். அதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்.”
- பீட்டர் அல்போன்ஸ் பதில்
தூங்குவதிலா தீவிரம்? அரசு அமைப்பது கனவுதான் என்றால், 40 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தூங்கிக்கொண்டு தான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? எப்போது விழிப்பீர்கள்?

தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க காங்கிரஸ் கட்சிக்கு முழு அதிகாரம் இருக்கிறது. தி.மு.க. ஆட்சியைத் தாங்கிப் பிடித்திருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ். தனிமரமாக நின்று காங்கிரஸ் மட்டும் தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட காங்கிரஸை கலைஞர் மதிக்கவில்லை.
- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேட்டி
இதைத் தட்டிகேட்க காங்கிரஸ்காரர்களுக்கே தில்லு இல்னேன்னும்போது நீங்களாச்சும் கேட்டீங்களே… சந்தோஷம். ஆமாம் நீங்கள் எப்போது காங்கிரசின் கொ.ப.செ. ஆனீர்கள்? மது ஒழிப்பு, தமிழ் வளர்ச்சி எல்லாம் போரடித்துவிட்டதா? தி.மு.க., காங்கிரஸ் இடையே  பற்றிக்கொண்டால், அதில் குளிர் காயலாம் என்பதுதானே தங்கள் எண்ணம்?

மனம், கடவுள் இரண்டும் மிகவும் ஒத்திருக்கும் இரண்டு விஷயங்கள். மனம் எங்கு இருக்கிறது என்பதும் தெரியாது. கடவுள் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியாது. விலாசம் இல்லாதவர்களெல்லாம் நெருக்கமாகத் தான் இருப்பர் போல. உயர்ந்த எண்ணம் எது என்ற வரையறுப்பதில் சிக்கல் உள்ளது. நான் முதல்வர் ஆக வேண்டும் என நினைத்தால் அது உயர்ந்த எண்ணம் இல்லை. அது சந்தர்ப்பம் பார்ப்பதுதான்.
-விழா ஒன்றில் நிதி அமைச்சர் அன்பழகன்
உங்கள் பேச்சு தத்துவம் போலிருந்தாலும் அது தத்துவம் அல்ல. இரண்டாம் இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் மட்டுமே அக்கறைக் காட்டும், மனதை செலுத்தும் அல்லது அதற்கு மட்டுமே தன்னை தயார்படுத்தி வைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் புலம்பல் போலதான் உள்ளது. முதல் இடம் எப்போதுமே இரண்டாவது இடத்திற்கு ஆசைப்படுபவர்களுக்கு கிடைக்கவே கிடைக்காது.

admin @ 4:03 am
Filed under: Uncategorized
2008/09/26 Punch Balu

Posted on Friday 26 September 2008

balu.jpg‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில் கருணாநிதி தொடங்கிய டிவிக்கு கலைஞர் டிவி என்று பெயர் வைத்துக் கொண்டார். ஏன் அண்ணாவின் பெயரை வைக்கவில்லை? குறைந்தபட்சம் இசையருவி டிவிக்காவது அண்ணாவின் பெயரை வைத்திருக்கலாமே.
-ராமராஜன்
இதே கேள்வியை எம்.ஜி.ஆர். என்று மாற்றி அம்மாகிட்ட கேட்க தில்லு இருக்கா உங்களுக்கு?

இந்தியாவில் உள்ள மாநகரங்களுக்குத் தீவிரவாதிகளின் மிரட்டல் உள்ளது. அந்த வகையில் சென்னை நகரமும் தீவிரவாதிகளின் பட்டியலில் உள்ளது.
- தமிழக டி.ஜி.பி., கே.பி. ஜெயின்
அதுதான் மக்களுக்கே தெரியுமே. தீவிரவாதிகளை எப்படி ஒடுக்கப்போறீங்க, மக்களை எப்படி காப்பாற்ற போகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்.

கருணாநிதியின் தூண்டுதலின் பேரிலேயே வடிவேலு என்மீது  குற்றம் சாட்டுகிறார். வடிவேலு என்னை எதிர்த்து தேர்தலில் நிற்பேன் என்கிறார். கருணாநிதியே என்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் நான் பயப்பட மாட்டேன். கலைஞர் மீதியிருந்த மரியாதையே போய்விட்டது. இனி அவரை கருணாநிதி என்றுதான் அழைக்கப் போகிறேன்.
நீங்க எப்படி அழைத்தாலும் அவர் உங்களைக் கண்டுகொள்ளப் போவதில்லை. அப்படியிருக்க, எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டி, கண்டுக்கவே கண்டுக்காதவர்களைப் பார்த்து கர்ஜிப்பது பலவீனமாகத் தெரிகிறதே. அப்புறம்… எது கேட்டாலும் பயப்படமாட்டேன் என்று பதில் சொல்வது, உங்களைப் பார்த்து எல்லோரும் பயப்படுகிறார்கள் என்கிற நினைப்பில்தானே? இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னம்பிக்கை கூடாதுங்க. இப்பவே முதல்வர் மாதிரி பேசற உங்களை விட பழையவர்களே மேல் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டது உங்க காதுல விழுந்ததா?

தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நீடிக்கிறது. மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கோ, மாற்று நடவடிக்கை எடுப்பதற்கோ தமிழக அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை.
- இந்திய. கம்யூ., மாநிலச் செயலர் தா. பாண்டியன்
கூட இருந்தாலும் திட்டுறீங்க. இல்லாவிட்டாலும் திட்டுறீங்க. மக்கள் நண்பனாக நடிக்கத்தான் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது? பேசாம இ. கம்யூனிஸ்ட் என்பதை தி.(திட்டற) கம்யூனிஸ்ட்ன்னு மாத்திடுங்கன்னு தி.மு.க. உறுப்பினர்கள் புலம்புவது கேட்கிறதா?

காமெடியனை ஹீரோவாக்கிட்டாரு விஜயகாந்த். நானா அவரா பார்த்துருவோம். கட்சி ஆரம்பிக்கிறேனோ இல்லையோ… அவர் தேர்தலில் எங்கே போட்டியிட்டாலும் அவருக்கு நான்தான் சரியான போட்டி. பார்த்துப்புடுவோம். மக்கள் செல்வாக்கு யாருக்கு இருக்குன்னு பார்த்துப்புடுவோம்.
-வடிவேலு
நல்லா ஜோக் அடிச்சீங்க போங்க! சின்னக்கவுண்டரில் குடை பிடித்ததை மறந்துவிட்டு பேசக் கூடாது. கைப்புள்ளக் கணக்கா கவிழ்ந்திடாம பார்த்துக்கணும். நாய் சேகர் வழியில் நாக்கு  மட்டும் பேசாம பார்த்துக்கணும். அப்பதான் அரசியல் களம் சூடா இருக்கும். என்னாங்கிறீங்க?

admin @ 12:08 am
Filed under: Uncategorized