» paiya .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Tamanna willbe next Simran, says Shankar

Posted on Tuesday 24 November 2009

அடுத்த சிம்ரன் தமன்னா! : இயக்குநர் ஷங்கர்

paiya.jpg

லி
ங்குசாமியின் இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்துள்ள பையா படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஷங்கர் பேசுகையில், ‘தமிழ் ப் படஉலகில் சிம்ரன் இடத்தை தமன்னா பிடிப்பார்’ எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது:

“ஒரு படத்தின் பாடல்கள், படம் வெளி வந்து சில காலம் வரைதான் கேட்க இனிமையாக இருக்கும். ஆனால், யுவன்சங்கர் ராஜாவின் பாடல்கள் எப்போது கேட்டாலும் இனிமையாக இருக்கும். நிறையப் படங்களில் பாடல்கள் எழுதிவரும் நா.முத்துக்குமார், எந்திரன் படத்திற்காக நிறைய கவிதைகள் எழுதித் தந்திருக்கிறார். அவற்றை படத்தில் அங்கங்கே பயன்படுத்தியிருக்கிறேன். கார்த்தி, பருத்தி வீரன் படத்திலேயே தன்னுடைய நடிப்புத் திறமையை நிரூபித்தவர். தமன்னா ஒவ்வொரு படத்திலும் மெருகேற்றி வருகிறார். சிம்ரன் இடத்தை அவர் பிடிப்பார் என்பது என்னுடைய நம்பிக்கை”  என்றார் ஷங்கர்

admin @ 2:02 am
Filed under: kollywood
Paiya Movie Gallery

Posted on Monday 29 December 2008

Paiya Movie

Artist: ,
Direction:
Production:
Banner:
Music: Yuvan Raja

admin @ 4:48 am
Filed under: movie
Tamanna in Paiya movie

Posted on Wednesday 10 December 2008

அண்ணன், தம்பி இருவருக்கும் நானே ஜோடி: கலக்கும் தமன்னா

tamana.jpg

பையா திரைப்படத்தில் இருந்து நயன்தாரா விலகியதைத் தொடர்ந்து த்ரிஷா நடிப்பார் எனக் கருதப்பட்டது. இப்போது தமன்னா நடிப்பதாகத் தகவல் வந்துள்ளது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில், லிங்குசாமி இயக்கும் திரைப்படம் பையா.

பையா கதாநாயகன் கார்த்தி ஜோடியாக முதலில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சம்பளப் பிரச்னைக் காரணமாக அவர் விலகினார். அவருக்குப் பதில் த்ரிஷா நடிப்பார் எனத் தகவல் வெளியானது. இப்போது அவரும் இல்லை என்றாகிவிட்டது.

தற்போது பையாவில், கார்த்தி ஜோடியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

சூர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கும் அயன் திரைப்படப் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. இப்போது அவரே சூர்யாவின் தம்பி கார்த்திக்கும் ஜோடியாகிவிட்டார்.

லிங்குசாமி தற்போது இயக்கிவரும் பட்டாளம் திரைப்படமும் முடிவடையும் நிலையில் உள்ளது. அதனால் பையா சீக்கிரம் வளரத் தொடங்கிவிடுவான் எனத் தெரிகிறது.

admin @ 10:33 pm
Filed under: kollywood
Nayan not in paiya movie

Posted on Friday 5 December 2008

nayanthara.jpg

லிங்குசாமியின் பையா திரைப்படத்தில் இருந்து நயன்தாரா விலகிவிட்டார். இந்தத் திரைப்படத்திற்காக அவருக்க ரூ.1 கோடி சம்பளம்கூட பேசப்பட்டிருந்தது. கோடம்பாக்கத்தில் ஒரு நடிகைக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச சம்பளம் இது என்ற ஆச்சரியமாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் பையா வில் இருந்து தன்னை கத்தரித்துக் கொண்டிருக்கிறார் நயன். இதுகுறித்து நயன் தரப்பில் கூறுவதாவது: ”இந்தப் படத்திற்காக செப்டம்பர் மாதத்தில இருந்தே கால்ஷீட் தந்திருந்தேன். அனைத்தையும் வீணாக்கி விட்டார்கள். இப்போது உடைகள் தைக்க சென்னைக்கு வரச் சொன்னார்கள். வேறு வேலை காரணமாக முன்கூட்டியே வந்தேன். திடீரென, ‘இப்போது வேண்டாம் 10ஆம் தேதி வந்தால் போதும்’ என்றார்கள். சரி என்று பொறுத்துக்கொண்டேன். ஆனால், எனது மேலாளரிடம் சம்பளத்தைக் குறைக்கச் சொல்லுங்கள் என்றார்கள். இவ்வளவு சம்பளம் என்று ஒப்பந்தம் போட்டது அவர்கள்தான். குறைக்காவிட்டால் வேறு நடிகை போட்டுக்கொள்கிறோம் என்றார்கள். அவர்களே கூறிய பிறகு இந்தத் திரைப்படத்தில் நான் ஏன் நடிக்கவேண்டும்” என்று கேட்கிறார் நயன். தயாரிப்பு தரப்பும் வேறு நடிகைக்கு வலை வீசத்தொடங்கிவிட்டதாகத் தகவல். நயனுக்கு அட்வான்ஸ் லாபம்?

admin @ 7:16 am
Filed under: kollywood
Karthi acts in Linguswamy Direction

Posted on Friday 18 April 2008

karthi.jpg

இயக்குநர் லிங்குசாமி திரைப்படத் தயாரிப்பில் முழுவேகம் காட்டிக் கொண்டிருக்கிறார். அவருடைய தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் மூன்று திரைப்படங்களைத் தயாரிக்கிறது. அதில் கார்த்தி நடிக்க ஒரு படத்தை லிங்குசாமியே இயக்குகிறார். அடுத்த இரு படங்களை முறையே பிரபுவும் பாலாஜி சக்திவேலும் இயக்குகிறார்கள்.

admin @ 7:06 am
Filed under: kollywood