» Choke .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Don’t give stress to heart

Posted on Saturday 4 July 2009

heart.jpgவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்

இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்! – கே.எஸ்.சுப்ரமணி

ஒருவருக்கு எந்த வியாதி இருந்தாலும் சரி மூச்சுவிட முடியாத நிலை மட்டும் இருக்கக் கூடாது. மூச்சுத் திணறலால்தான் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய பலரும் சீக்கிரம் பலி ஆகின்றனர்.

இதைத் தவிர்க்க ஒரே வழி இதயத்தின் மீது அதிகப் பளுவை ஏற்றாதிருப்பது தான். மாட்டு வண்டிக்காரர்களில் சிலர் கிடைக்கின்ற மூட்டைகளை எல்லாம் வண்டியில் ஏற்றி மாடுகளை இழுக்க வைப்பார்கள். மாடுகள் அதிகச் சுமையை இழுக்க முடியாமல் சாலையிலேயே விழுந்து இறந்துவிடும்.

இதுபோலதான் மனிதர்களும், இதயத்தின் மீது கோபுரம் போல் சுமையை உயர்த்திக் கொண்டே இருக்கின்றனர். இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காமல் பார்த்துக் கொள்வதில்தான் ஒருவரின் நீடித்த வாழ்நாள் இரகசியமே மறைந்துள்ளது.

நம்முடைய உடல் ஓர் இயந்திரம். அந்த இயந்திரத்தில் உள்ள இன்ஜின், நமது இதயம் தான். நுரையீரல்கள் சோக் () போல் இருந்து காற்றை எல்லா உறுப்புகளுக்கும் அனுப்புகிறது. இந்த மனித உடலுக்கு எரிபொருள், இரத்தம்தான்.

உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க மனித உடல் என்ற இயந்திரம் செயல்படத் தயங்குகிறது. ஏகப்பட்ட தடைகள்! மலைபோல உயரும் எடையை, ஒரு சுமையைப்போல வேறு எவருக்கும் நாம் மாற்றிவிட முடியாது. நாம்தான் சுமந்து தீர வேண்டும்.

இதைத் தவிர்க்க (மூச்சுத் திணறல் இதயத்திற்கு அதிகச் சுமை) உணவுக் கட்டுப்பாடு ஒன்றே வழி!

கொழுத்த சரீரத்தில் உடல் என்னும் இயந்திரத்தில் அங்கங்கே இணைப்புகள் குறிப்பாக முட்டிக்கால், குதிகால் மற்றும் இடுப்பு எலும்புகள் சரியாக செயல்பட முடியாமல் போய் மூட்டு வீக்க நோயை ஏற்படுத்திவிடுகிறது. உடல் இணைப்பு எலும்புகளிலும் அங்கங்கே வலி இருந்தாலும் உடலில் அதிக எடையை உணவின் மூலம் ஏற்றிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

குதிரைப் பந்தயத்தில் ஓடும் குதிரையின் மீது கூடுதலாக 3-1/2 கிலோ எடையை ஏற்றியதுமே அது மெதுவாக ஊனமுற்ற குதிரை போல ஓடி, பிறகு நடந்தே சென்றது! முப்பது வயதிற்கு மேற்பட்ட சிலர் எப்போதும் சோம்பலாகவும், நடக்க முடியாமலும் இருப்பதற்கு 3-1/2 முதல் 14 கிலோ வரை தங்கள் உடலில் எடையை அதிகரித்திருப்பதுதான் காரணம்.

இவ்வளவு எடை சேரும்போது இதயம் செயல்பட முடியாமல் தவிக்கிறது. இதனால் மூச்சு வாங்குகிறது. இருந்தாலும் இன்ஜின் சமாளித்துச் செயல்படுகிறது. இப்படித் தொடர்ந்து செயல் பட்டால் நெஞ்சுப் பை, ஆறு சிலிண்டர்கள் உள்ள கார் போல வேலை செய்கிறது.

இதனால் நெஞ்சுப்பை அதிகம் பாழாகிவிடுகிறது! நெஞ்சுப்பைச் சுவரின் தசைக்கு இரத்தம் வழங்கும் நாடிகளும் பலமிழந்து போகின்றன. இதனால் இதயம் சரியாக இயங்க முடியாமல் தவிக்கிறது. அதன் காரணமாக மூச்சுவிடச் சிரமம்! இதனால் இரத்த ஒட்டத்தில் அழுத்தம் ஏற்பட்டு இரத்தக் கொதிப்பும் வந்துவிடுகிறது.

உடல் இயந்திரத்தின் தரமான ஒரே எரிபொருள், இரத்தம்தான்.இது தண்ணீர் ஓடைபோல் ஓடிக் கொண்டே இருக்கவேண்டும். இன்ஜின் சரியாக வேலை செய்யாத போது இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இரத்தம் தான் ஆக்சிஜனைச் சுமந்து சென்று மூளைக்கு விநியோகிக்கிறது.

நுரையீரல்கள் காற்றிலிருந்து ஆக்ஸிஜனைப் பெற்று இரத்தத்தில் சேர்த்து விடுகின்றன. இன்ஜின் அதிகச் சுமையால் இயங்க முடியாதபோது மூச்சுவிட முடிவதில்லை. உடலில் இரத்த ஓட்டமும் ஆக்ஸிஜனும் இருக்க வேண்டும் எனில் உடனடியாக உடல் எடையைக் குறையுங்கள்.

இரத்த சோகை, ஆஸ்துமா முதலியனவும் மூச்சுவிட முடியாமையினால்தான் தோன்றுகின்றன.

மிக எளிய வழியான உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றினால் மூச்சு சம்பந்தமான, இரத்தம் சம்பந்தமான நோய்களும் உடனே குணமாக ஆரம்பிக்கும். இவையனைத்தும் பிரிட்டன் டாக்டர் ராபர்ட் கேட் டிரிஜ் என்பவர் பரிசோதித்துப் பார்த்த வெற்றிகரமான வழிமுறையாகும்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 4:00 am
Filed under: Uncategorized