» Chandramukhi .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Rajini & Vadivelu Chandramukhi Comedy

Posted on Monday 25 May 2009


மாப்பு வச்ச ஆப்பு!

சந்திரமுகி… ஜோதிகாவின் அபாரமான நடிப்பையும் தாண்டி ரஜினி - வடிவேலு ஜோடி காமெடி தர்பார் நடத்திய திரைப்படம்.
வேட்டையாபுரம் அரண்மனைக்கு வரமாட்டேன் என்று பயந்தலறும் வடிவேலுவை அடமாக உள்ளே இழுத்துச் செல்வார் ரஜினி. வடிவேலுவை ரஜினி ‘நீ’ யில் தொடங்கி ‘யா’ வில்’ நிறுத்தி ‘டா’வில் முடிப்பார்.

ரஜினிக்கு அரண்மனையின் ஹிஸ்டடியை (ஹிஸ்ட்ரி) மாப்பு மாப்பு என்று விளித்தபடியே சொல்லிக்கொண்டு தனியே செல்லும் வடிவேலு, கடைசியில் தான் தனியாக இருப்பதை உணர்ந்து மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு எனும்போது நம் வயிறு குலுங்கும்.

ஓர் அறைக்குள் மாட்டிக்கொள்வார் வடிவேலு. பயத்தில் மானுக்குக் கூட வணக்கம் வைப்பார். பயத்தில் உறைந்துபோய் சிலையாக நிற்கும் அவருக்கு அதிரடி (அடிதாங்க) வைத்தியம் கொடுத்து பழைய நிலைக்குக் கொண்டு வருவார் ரஜினி.

ரஜினி- வடிவேலு ஜோடியின் காமெடி சூப்பர் ஹிட்டான படம் சந்திரமுகி.
அந்தக் காட்சியை நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.

admin @ 8:01 am
Filed under: Siri Siri