42000 to become Villu Vijay

Posted on Thursday 5 February 2009

42 ஆயிரம் இருந்தால் நீங்களும் விஜய் ஆகலாம்!

vijay-villu-dress.jpg

வில்லு விஜய் வரார்…  தில் இருந்தா நில்லு நில்லு, இல்ல தள்ளு தள்ளு…. ரஜினியின் இடத்தை, அவருடைய எல்லா பாணியிலும் பிடிக்க நினைக்கும் தமிழ் நடிகர்களில் விஜய்க்குத்தான் முதலிடம். ஓரளவுக்கு அந்த இடத்தை எட்டி பிடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும.

விஜய் நடிக்கும் திரைப்படங்களில் அவர் அணிந்து வரும் ஆடைகள் பலவும் B, C கிளாஸ் ரசிகர்களை கவரும் வகையில்தான் இருக்கும். அவருடையப் படம் வெளியான அடுத்த நாளே அவருடைய ஆடைகளும் ரசிகர்களிடையே பரவலாகப் போய் சேர்ந்திருக்கும்.

இந்த மாதிரி உடைகளைப் போட்டுக்கொண்டு ஒரு சல்யூட் வைத்து விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குக்கு திரையரங்கில் விசில் பறக்கும்.

இப்போ வில்லு விஜய் ஆடையின் பட்ஜெட்டை பார்ப்போமா…

விஜய்யின் கண்களை அலங்கரிக்கும் சன் கிளாஸ்: ரூ.3800

glass.jpg

http://www.bananarepublic.com/browse/product.do?cid=38690&pid=554347&scid=554347002

ஜிகு ஜிகு நீலச்சட்டை(இதுக்கு அவர் போடாமலே இருந்திருக்கலாம்): ரூ.1750

shirt.jpg

http://www.woodsofshropshire.co.uk/shop/mens-shirts/plain-coloured-shirts/classic-light-blue-poplin-shirt-(double-cuff)

டக்கர் உள் பனியன்: ரூ.1200

t-shirt.jpg

http://us.levi.com/product/index.jsp?productId=3442710&cp=3146842.3146843.2765287

இடுப்பில் வழுக்கும் பெல்ட்: ரூ.900

belt.jpg

http://www.bewild.com/thhovilebe.html

அம்சமான வாட்ச் (டைம் என்னங்க, ஓடுதுங்களா?): ரூ.26,000

watch.jpg

http://www.watchshopuk.com/gents-tissot-t-touch-matt-titanium-watch-t33759859-p99928196.html

பூட்கட் பேண்ட் (இப்போ இதுதாங்க பேஷன்): ரூ.3400
(அதிலுள்ள எக்ஸட்ரா ஜோபிகள் எல்லாம் நம்ம காஸ்டியூமர் வேலையாக இருக்கும்)

pant.jpg

http://us.levi.com/product/index.jsp?productId=2996364&cp=3146842.3146844.3146855.3146923

ஷூ: ரூ.4850

shoe.jpg

http://www.shopping.com/xPO-Lacoste-LACOSTE-Men-s-Estaban-JT-Shoe-White-Grey-Light-Blue

கழுத்தில் அலையும் ஷால்: ரூ.100

ஆக மொத்தம்: ரூ. 42,000 (அம்மாடி!)

ஆனாலும் பரவாயில்லீங்க. பாமரர்களின் நாயகன் தான்தான்னு விஜய் நிரூபிச்சிட்டார்.

இடதுகையில் இருக்கும் மான்கொம்பு, வலதுகையில் கட்டப்பட்டிருக்கும் ருத்திராட்ச கொட்டை ரேட்டெல்லாம் கணிக்க முடியலை, சாரி!

admin @ 5:28 am
Filed under: Fashion and Style
Villu - Movie review

Posted on Monday 19 January 2009

வில்லு - திரை விமர்சனம்

villu1.jpg

நடிப்பு: விஜய், நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ்ராஜ், தேவராஜ்
இயக்கம்: பிரபுதேவா
ஒளிப்பதிவு: ரவிவர்மன்
இசை: தேவிஸ்ரீபிரசாத்

விஜய் என்றாலே பழிவாங்கும் கதை என்றாகிவிட்டது. வில்லு திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் வில்லை (கதையை) கொஞ்சம் அதிகமாகவே வளைத்து விடுகிறார்கள்.

ராணுவ மேஜரான அப்பா விஜய்யை, ஆயுதங்கள் கடத்தும் கும்பல் கொன்றுவிடுகிறது. சுமார் 20 வருடங்கள் கழித்து, அப்பாவைக் கொன்றவர்களை, அம்மாவை களங்கப்படுத்தியவர்களை பழிவாங்குகிறார் மகன் விஜய்.

அப்பாவும் விஜய், மகனும் விஜய் என்பதால் வில்லன்களும் பிரமாண்டமாக வருகிறார்கள். பழிவாங்கலும் ரொம்பவே ஹைடெக் சமாசாரம்.

வில்லு பார்க்கப் போனால், கில்லி விஜய்யை நிச்சயம் பார்க்கலாம். அத்தனை அட்டகாசம் பண்ணுகிறார் விஜய். பாட்டு பீட்டுக்கு ஏற்றவாறு, விஜய்யோடு கவர்ச்சி ஆட்டம் போட்டுவிட்டுச் செல்ல, வந்து போகிறார் நயன்தாரா. வில்லன் பிரகாஷ்ராஜ் வழக்கம் போலவே சிரித்து சிரித்து வில்லன் வேலையைச் செய்கிறார். வடிவேலு சும்மா சும்மா கிச்சுகிச்சு மூட்டினாலும், பகீர் சிரிப்பை திரையரங்கில் காணமுடியவில்லை. போக்கிரியில் கலக்கிய வடிவேலு வில்லுவில் வெறும் பொரி.

அப்பா விஜய்யைக் கொன்றவர்கள், (அழகான) அம்மா ரஞ்சிதாவின் நெற்றியில் ‘தேசத் துரோகியின் மனைவி’ என்று பச்சைக் குத்துவதெல்லாம் த்ரீ மச்சுங்க.

வெளிநாட்டிற்கு வரும் விஜய்யின் அம்மாவவைக் கொல்ல வில்லன் தேவராஜ் காத்திருக்க, வந்திருறங்குவது அவருடைய மனைவி என்பதில் திடுக் என்று பாதை மாறுகிறது கதை. ரகசிய அறை, ரகசிய டிஸ்க், ஒரே சமயத்தில் பல கார்களை வெடிக்கவைப்பது,   ஹெலிகாப்டரில் சாகசம் என ஹைடெக் இயக்குநராக மாறியிருக்கிறார் பிரபுதேவா.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசையமைப்பில் பாடல்கள் குத்தும் சத்துமாக இருந்தும், பாடல் காட்சிகள் எதுவும் திரைக்கதையோடு ஒட்டாதது பெரிய ஓட்டை. ரவிவர்மனின் ஒளிப்பதிவு வில்லு ஜொலிக்க உதவியிருக்கிறது.

admin @ 10:12 pm
Filed under: Review
Villu Trailer

Posted on Friday 2 January 2009

villu.jpg

Artist: , ,
Direction:
Music:
Banner: International Films

admin @ 7:04 am
Filed under: trailer
Villu Movie Gallery

Posted on Wednesday 22 October 2008

 villu.jpg

Artist: , ,
Direction:
Music:
Banner: International Films

admin @ 3:09 am
Filed under: movie
Aegan overtakes Villu

Posted on Tuesday 21 October 2008

aegan.jpg

விஜய் நடிக்கும் வில்லு, அஜீத் நடிக்கும் ஏகன் இவ்விரண்டு படங்களுமே முழுக்க முழுக்க ரிலீசுக்கு தயார்தான். ஆனால் ஏகன் தீபாவளி அன்று ரிலீசாகிறது. வில்லு பொங்கலுக்குத்தானாம். ஏனாம்? இந்த இரண்டு திரைப்படங்களையுமே தயாரித்திருப்பது ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம். அதனால் சொந்த பேனரிலேயே போட்டி வேண்டாமே எனக் கருதி வில்லு ரிலீசை தள்ளிப் போட்டுவிட்டார்களாம்.

Link for Aegan Gallery

admin @ 3:24 am
Filed under: kollywood
Villu ends in December

Posted on Monday 8 September 2008

vijay.jpg

விஜய் நடிக்கும் வில்லு திரைப் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் முடிகிறது. உடனே ஏவி.எம். பேனருக்காக வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த திரைப்படத்தை இயக்குநர் தரணியின் உதவியாளர் இயக்குகிறார்.

admin @ 4:25 am
Filed under: kollywood
Nayantara not ready to leave Vijay for Villu

Posted on Sunday 22 June 2008

nayantara.jpg

குருவி திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடிபோட கிடைத்த வாய்ப்பை த்ரிஷாவிடம் இழந்த நயன்தாரா, இப்பொழுது பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிக்கும் வில்லு திரைப்படத்தில் அவர் ஜோடியாக நடிக்க கிடைத்துள்ள வாய்ப்பை விடாபிடியாக பிடித்துக் கொண்டுவிட்டாராம். இதில் எக்காரணத்தைக் கொண்டும் தான் கழற்றி விடமாட்டேன் எனும் உறுதி மொழிக்கு பின்பே இந்த வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருகிறார் நயன் என்பது கூடுதல் செய்தி!

admin @ 9:51 pm
Filed under: kollywood
Vijay’s film name changed to Villu

Posted on Friday 13 June 2008

vijay.jpg

தனது இயக்கத்தில் நடிக்க விஜய் இதுவரை கால்ஷீட் கொடுக்காத வருத்தத்தில் இருக்கும் ஹரி, தான் சூர்யாவை வைத்து இயக்க திட்டமிட்டிருக்கும் படத்திற்காக பதிவு செய்து வைத்துள்ள ‘சிங்கம்’ திரைப்படத் தலைப்பை தர மறுத்ததால் விஜய்-பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணையும் புதிய படத்திற்கு ‘ஆம்பள’ எனும் தலைப்பு பரிசீலனையில் இருந்தது. இப்போது ‘வில்லு’ எனும் தலைப்பு இறுதியாக, உறுதியாக முடிவாகி படப்பிடிப்பு நடக்க ஆரம்பித்துவிட்டது. ‘வில்லு’ படத்தை லண்டன் கே. கருணாமூர்த்தியின் ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது.

admin @ 1:14 am
Filed under: kollywood