Junior Kelvi Pathil

Posted on Friday 5 December 2008

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்
court

ஆர்.ஜெயசீலன், சென்னை-70.

ஒரு வீட்டின் நீதிபரிபாலனம் எப்படி இருக்க வேண்டும்?

பிள்ளைகள் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றங்களாகவும், மனைவி உயர்நீதி மன்றமாகவும், குடும்பத் தலைவர் அபெக்ஸ் நீதிமன்றமாகவும் இருக்க வேண்டும். (அதாங்க, உச்ச நீதிமன்றம்!)

Karunandhi

எம்.பிரசாத், கூடுவாஞ்சேரி.

சட்டக் கல்லூரி மாணவர்களை ஜெயலலிதாவும், வைகோவும் தூண்டிவிட்டார்கள் என்று ஒரு கிண்டலுக்காகச் சொன்னேன் என்கிறாரே கலைஞர்?

ஒரு முதலமைச்சர் சுண்டல் பலகாரம் மாதிரி இப்படி கிண்டல் பண்ணலாமா? அவதூறு வழக்கு என்றதால் அடி பணிந்துவிட்டாரா? அப்படியானால் அண்மையில் கழக அரசின் சாதனைகளாக 63 சாதனைகளை அறிவித்தாரே, அவை இந்த இரகம் அல்ல என நம்புவோம்!

jayalalitha

சி.சரவணன், கரூர்.

ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம்?

பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவியாக நடந்து கொள்வதில் பல அம்சங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று சட்டமன்றத்திற்குத் தவறாமல் செல்வது. இவரோ சட்டமன்றத்திற்குச் செல்லாமலே அறிக்கைத் தலைவியாக இருக்கிறார். ஓகோகோ! சட்டமன்றத்திற்குச் செல்லாமலே எதிர்க்கட்சித் தலைவியாக இருப்பதும் ஒரு வகையில் புரட்சிதானோ?

Vijaykanth

மு.கண்ணபிரான், திருநெல்வேலி.

அரசியலைவிடத் திரையுலகம் முக்கியம் என்று கருதும் விஜயகாந்த் பற்றி?

விருத்தகிரி படப்பிடிப்பு நடந்தால் வருமானம். அரசியல் நடத்தினால் செலவு. சேமித்து வைத்துக் கொண்டல்லவா செலவழிக்க வேண்டும்! விருத்தகிரியில் வருமானம் வந்தால்தானே விருத்தாசலத்திற்குச் செலவிடலாம்! என்ன சொல்கிறீர்கள்!

Vuthapuram

பி.ராமன், சென்னை-17.

உத்தப்புரம்?

உதிரப்புரமாக ஆக்கிவிடாதீர்கள் என்பது நம் வேண்டுகோள். சம்பந்தப்பட்டவர்களுக்கு.

sivagami i a s

பா.திருமுருகன், மேட்டுப்பாளையம்.

பகுஜன் சமாஜ் கட்சியில் சிவகாமி ஐ.ஏ.எஸ். இணைந்தது பற்றி…?

துணிச்சலான முடிவு. சிவகாமி ஒரு திறமை வாய்ந்த நிர்வாகி (என் அத்தை மகளுடன் கல்லூரியில் பயின்ற தோழியாக்கும்) ஒரு நல்ல நிர்வாகியைத் தமிழக அரசு இழக்க, பகுஜன் சமாஜத்திற்கு இது இலாபம். ஆனால் வட இந்தியக் கட்சிகள் தமிழகத்தில் பெரிய அளவில் காலூன்றவோ சாதிக்கவோ முடியாது. சிவகாமி ஏதும் சபதமெடுத்து இதை மாற்ற முயற்சி செய்யட்டும்.

barathiraja

சி.டி.நாராயணன், மதுரை.

பாரதிராஜா ஆக்ரோஷமாகப் பேசுகிறாரே?

பாரதிராஜா ஓர் உணர்ச்சிமிகு தமிழர். எழுச்சிமிகு சமுதாயப் போர்வீரர். நான் மேடையில் பேசும்போது மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன். ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசிவிடுகிறேன் என்று, அவரே ஒரு மேடையில் குறிப்பிட்டிருக்கிறார். பாரதிராஜா மேடைகளைத் தவிர்ப்பது நல்லது.

vijay

எம்.சம்சுதீன், காஞ்சிபுரம்.

நடிகர் விஜய்யும் அரசியலில் நுழையக் கூடும் என்கிறார்களே?

அவ்வளவு பெரிய கோட்டையில் இவர் ஒருத்தருக்கா இடமில்லாமல் போகப் போகிறது? வரவர கோட்டைக்கு வருகிற பார்வையாளர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டுமென்கிறார்கள்?

t.pandiyan

ஆ.ராஜேந்திரன், தஞ்சாவூர்.

இலங்கைக்காகக் கடையடைப்பு நடத்தவிருந்த தா.பாண்டியன் கடைசியில் தனது போராட்டத்தை விலக்கிக் கொண்டுவிட்டாரே?

இதற்குத்தான் டி.வி.யில் ஃபிளாஷ் நியூஸ் பார்க்கணுங்கிறது. இப்போதெல்லாம் பிளாஷ் நியூஸ் பார்த்துவிட்டுதான் எதையுமே முடிவு பண்ணணும்! தா.பாண்டியன் சொன்னதிலிருந்தே எனது வீட்டு டி.வி.யில் நியூஸ் சேனல்தான் போய்க் கொண்டிருக்கிறது.

saibaba

எம்.சாகுல்ஹமீது, திண்டுக்கல்.

இந்தியா வல்லரசாகும் என்பது எதிர்பார்ப்பு மட்டுமா? ரியலிசமா?

நல்ல அரசியல் தலைவர்கள் நமக்கு வாய்த்தால் இது சாத்தியமே. அண்மையில் சத்ய சாய்பாபா இதைப் பற்றித் தம் பிறந்த நாள் உரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா ஒரு வலிமையான வல்லரசாக மாறும் என்கிறார். சத்ய சாய் பாபாவின் வாக்கு என்பதால் பலிக்கும் என நிச்சயம் நம்பலாம்!

lal baguthar sasthri

கா.வெற்றிகொண்டான், திருச்சி.

லால்பகதூர் சாஸ்திரி வாழ்ந்த வீடு பராமரிப்பு இன்றிப் பாழடைந்து கிடந்ததைப் பத்திரிகைகளில் பார்த்தபோது மனம் பதறியது. உங்களுக்கு?

இந்திய அரசியலில் இப்படிப்பட்ட நேர்மையாளர்களும் இருந்திருக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்ளவே தோன்றியது. இந்த வீட்டை ராஜகோட்டையாக மாற்றும் சக்தி லால்பகதூரின் வாரிசுகளுக்கு இல்லை என்பதே நல்ல செய்திதான். வீட்டைப் பராமரிப்புக்கு எடுத்துக் கொள்ளாதது மத்திய அரசின் அலட்சியமே!

annadurai

டி.நடராஜன், சத்தியவேடு.

கி.பி.2020 இல் நிலவில் கால் பதிப்போம் என்கிறாரே, சந்திராயன் -1 திட்ட இயக்குனர் அண்ணாதுரை?

கலாமின் கனவைக் கையகப்படுத்தி விடுவார்கள் போலிருக்கிறதே! அவரது கனவும் 2020 வரைதான்! அண்ணாதுரை இன்னொற்றையும் சொன்னார் பார்த்தீர்களா? அது வருங்காலங்களில் நிலவுக்கும் தேனிலவு போகலாமாம்!

lottery ticket

எஸ்.இம்ரான், இராயபுரம்.

தமிழ்நாட்டில் மீண்டும் லாட்டரி வருமா?

வராது. சுரண்டல் லாட்டரிக்கு ஏற்கெனவே சுரங்கப்பாதை இருக்கு. வயிற்றுப்பாட்டு லாட்டரிக்குதான் இப்போது மேம்பாலம் கட்ட வேண்டும்.

ramadoss

கே.பிரதீப், சென்னை-20.

கலைஞர் - ராமதாஸ் உறவு எப்படியிருக்கிறது?

காதலர்கள் இன்டர்நெட் சாட்டிங் செய்வது போல, இவர்கள் பத்திரிகைகளில் சாட்டிங் செய்கிறார்கள். இந்த சாட்டிங்கால், இவர்களிடம் காதல் வளரவில்லையாம். கசப்புதான் வளர்கிறதாம்.

petrol bunk

எஸ்.எட்வின் தம்புராஜ், புதுக்கோட்டை.

பெட்ரோல், டீசல் விலை குறைய வாயப்பு தெரிகிறதே!

147 டாலர் விற்ற பீப்பாய் 50 டாலர்களாகிவிட்டது. வடமாநிலத் தேர்தல்கள், பொதுத் தேர்தல்கள் எல்லாம் நெருங்கி வந்துவிட்ட நேரம். காங்கிரஸ் இப்போது நாட்டின் பொருளாதாரத்தைவிட ஓட்டு வங்கியைப் பற்றி அதிக அக்கறை கொள்வதால் விரைவில் விலை இறக்க அறிவிப்பு வந்துவிடும்!

minister Raja

வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

மத்திய அமைச்சர் ராசா தம் துறை நன்கு வளர்ந்துவிட்டது என்று மார்தட்டுகிறாரே?

ஸ்பெக்ட்ரமுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிராவிட்டால் இன்னும்கூட உங்கள் துறை அபாரமாய் வளர்ந்திருக்குமே ராசா!


ஜே.காண்டீபன், திருவள்ளூர்.

அ.தி.மு.க. பேச்சாளர்களுக்கும், ம.தி.மு.க. பேச்சாளர்களுக்கும் என்ன வித்தியாசம்?

அ.தி.மு.க. பேச்சாளர்கள் அதிகமாய்ப் பேசுகிறார்கள். நேரத்தை இழக்கிறார்கள். ம.தி.மு.க. பேச்சாளர்கள் காட்டமாய் பேசுகிறார்கள், அர்த்தத்தை இழக்கிறார்கள்.

sleeping

டி.மோகன், செங்குன்றம்.

பகலில் தூக்கம் வராதிருக்க என்ன செய்ய வேண்டும்?

இந்த வாழ்க்கை போதுமென்று வாழ்ந்தால் பகலில் தூக்கம் வரும். இருப்பது போதாது என்கிற நினைப்பில் ஆழ்ந்தால் இரவில்கூட ஏக்கம்தான் வரும்.

obama hilary

ஆர்.சதிஷ்குமார், மும்பை.

அமெரிக்க அதிபர் தேர்தலில் உங்களுக்குப் பிடித்தது?

இரண்டு விஷயங்கள். களத்தில் இரண்டே இரண்டு கட்சிகள். அது முதலாவது விஷயம். தேர்தல் தினத்தில் அங்கு வேலை நாள்! இது இரண்டாவது விஷயம். மூன்றாவது உச்சம். ஒரே நாளில் தேர்தல் உடனே முடிவு. போட்டியில் சாவகாசம். வேலையில் சுறுசுறுப்பு. அடடா, என்ன அதிசயமான தேர்தல்!

PMK-flag

டி.கே.மணியன், கோவை-1.

பா.ம.க.வுடன் உறவு கொண்டாட ஆரம்பித்திருக்கும் கலைஞரைப் பற்றி?

பா.ம.க.வைக் கூட்டணியிலிருந்து விலக்கி வைத்தவர் கலைஞர். இன்று அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன பகை என்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறது. பா.ம.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கவே வெளியேறத் துடிக்கிறது என்று கணித்தவர்கள் பலர். ஆனால் அ.தி.மு.க. இவர்களோடு கைகுலுக்கத் தயாரில்லை. பா.ம.க. எந்த அரசியல் கட்சியிலும் நேசிக்கப்படாத கட்சியாக ஆகிவிடவே, இவர்களுக்கும் வேறு வழியில்லை. மஞ்சள் சிக்னல் அனுப்பிப் பார்த்தார்கள். தி.மு.க.வோ பதிலுக்குப் பச்சை சிக்னல் அனுப்பியிருக்கிறது! அரசியலில் கொள்கைப் பிடிப்பாவது வெங்காயமாவது!

28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 3:32 am
Filed under: Uncategorized
Srilanka Tamils Issue: War will stop soon, actor Vijay beleives

Posted on Sunday 16 November 2008

இலங்கையில் போர்நிறுத்தம் நிச்சயம்!:
உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு

vijay-in-fasting.jpg

சென்னை: தமிழர்களின் தொடர்போராட்டங்களின் விளைவாக இலங்கையில் நிச்சயம் போர்நிறுத்தம் வரும் என்று நடிகர் விஜய் பேசினார்.

இலங்கைத் தமிழர்களுக்காக தனது தாய் ஷோபனா, தந்தை சந்திரசேகரன், மனைவி சங்கீதா, இயக்குநர் பேரரசு மற்றும் தனது ரசிகர்களுடன் சென்னை அரசினர் விருந்தினர் இல்லம் எதிரில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார் நடிகர் விஜய்.

அப்போது அவர் பேசுகையில்,

”இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே புரியவில்லை. சென்னை மட்டுமில்லாமல் தமிழகம் எங்கும் 37 நகரங்களில் இந்த உண்ணாவிரதம் நடந்துவருகிறது. அதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

இலங்கையில் நடக்கும் பிரச்னைகளை சிறிய வயதில் இருந்தே கேள்விப்பட்டு வருகிறோம்.

பள்ளி,கல்லூரிகளில் படிக்கையில் பத்திரிகைகளில் படித்திருக்கிறோம். தொலைக்காட்சியில் செய்தி பார்க்கும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

பிரச்னை இல்லாத நாடே இல்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பிரச்னை, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் பிரச்னை, அமெரிக்காவுக்கும் வியத்நாமுக்கும் பிரச்னை. அந்தப் பிரச்னைகள் எல்லாம் யுத்தம் நடந்து முடிவுக்கு வந்தது.

ஆனால் 25 ஆண்டுகளாக நம் தமிழ் மக்கள் அகதிகளாக ஓடிவரும் பிரச்னை இலங்கையில் மட்டும் தான் உள்ளது. மேலே விமானம் பறந்தால் நாம் டாட்டா காட்டுகிறோம். இலங்கையிலோ மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுகிறார்கள். நமது வீடுகளில் கல் விழுந்தால் யார் எறிந்தார்கள் என்று விசாரிக்கிறோம். இலங்கையில் குண்டு  விழுந்தமாதிரி அலறுகிறார்கள். நாம் இலங்கைக்குச் சென்று சண்டை போடமுடியாது . இப்படித்தான் நமது உணர்வுகளைக் காட்டமுடியும்.

இலங்கையில் உள்ளவர்கள் மூன்று வேளை சாப்பிட்டுவிட்டு தூங்கவேண்டும் என்பதற்காகவே நாம் சாப்பிடாமல் இருக்கிறோம். திரைப்பட நடிகர்கள் போராட்டம், உண்ணாவிரதம், பெப்சி தொழிலாளர்கள் உண்ணாவிரதம், டி.வி. நடிகர்கள் உண்ணாவிரதம், அரசியல் கட்சிகள் போராட்டம் என எல்லா தமிழர்களும் போராடி வருகிறோம். நிச்சயம் அங்கே போர்நிறுத்தம் வரும். தமிழர்களைக் கொல்வது நிறுத்தப்படும்” என்றார்.

நடிகர் விஜயின் தாய் ஷோபா பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். அதனை அங்கிருந்த சிறுவனுக்குக் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் விஜய்.

admin @ 9:23 pm
Filed under: srilanka news
Aegan overtakes Villu

Posted on Tuesday 21 October 2008

aegan.jpg

விஜய் நடிக்கும் வில்லு, அஜீத் நடிக்கும் ஏகன் இவ்விரண்டு படங்களுமே முழுக்க முழுக்க ரிலீசுக்கு தயார்தான். ஆனால் ஏகன் தீபாவளி அன்று ரிலீசாகிறது. வில்லு பொங்கலுக்குத்தானாம். ஏனாம்? இந்த இரண்டு திரைப்படங்களையுமே தயாரித்திருப்பது ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம். அதனால் சொந்த பேனரிலேயே போட்டி வேண்டாமே எனக் கருதி வில்லு ரிலீசை தள்ளிப் போட்டுவிட்டார்களாம்.

Link for Aegan Gallery

admin @ 3:24 am
Filed under: kollywood
Asin gets high salary in Tamil film

Posted on Monday 20 October 2008

வேட்டைக்காரன்: அசின் சம்பளம் ரூ.2 கோடி?

asin.jpg

விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடிக்க அசினுக்கு ரூ.2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏவி.எம். பேனரில் விஜய் நடிக்கும் திரைப்படம் வேட்டைக்காரன். விஜய்யுடன் அசின் ஜோடி போட்ட சிவகாசி, போக்கிரி திரைப்படங்கள் பெரிய வெற்றி பெற்றன. இதனால் அசினுடன் மீண்டும் நடிக்க விஜய் விரும்பியுள்ளார். இதையடுத்து, வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடிக்க அசினிடம் பேசப்பட்டது. தற்போது அசின் இந்தியில் பிசியாக உள்ளதால், அவருக்கு சம்பளமாக ரூ.2 கோடி பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்குமுன் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி திரைப்படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டதுதான் தமிழ் நடிகைகளுக்கு தரப்பட்ட அதிக சம்பளமாகும். இப்போது அதை அசின் விஞ்சிவிட்டார்.

இதுகுறித்து அசின் கருத்து கூறுகையில், ”விஜய்யுடன் நடிக்க ஆர்வமாக உள்ளேன். லண்டன் ட்ரீம்ஸ் திரைப்படத்திற்காக லண்டனில் இருந்த என்னிடம், தயாரிப்பாளர் தரப்பில் பேசினார்கள். மும்பை வந்ததும் வேட்டைக்காரன் கதையைக் கேட்பேன். பிப்ரவரியில் இன்னொரு இந்திப் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துள்ளேன். இடையில நேரமிருந்தால் விஜய்யுடன் வேட்டைக்காரனில் நடிப்பேன்” என்றவர், சம்பளம் குறித்து எதுவும் கூறவில்லை.

admin @ 11:25 pm
Filed under: news
Actor Manobala arrest in Thailand!

Posted on Friday 10 October 2008

தீவிரவாதி என்று சந்தேகப்பட்டு நடிகர் மனோபாலா கைது!

விஜய் நடிக்கும் வில்லு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் மனோபாலா, தீவிரவாதி எனக் கருதபட்டு கைது செய்யப்பட்டார் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

விஜய் நடிக்கும் வில்லு திரைப்படத்தில் வடிவேலு இடம்பெறும் நகைச்சுவை காட்சிகளில் அவருடன் நடிகர் மனோபாலாவும் நடிக்கிறார்.

வில்லு கதைப்படி வடிவேலு தனது தம்பியைத் தேடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு வருகிறார். அஙகே அவரை தீவிரவாதியான மனோபாலா கடத்தி விடுகிறார். காவல்துறையினரிடம் இருந்து தப்புவதற்காக மனோபாலா, அப்பாவியான வடிவேலுவை மோட்டார் சைக்கிளில் வைத்து கடத்தி செல்வது போலவும், அவர்கள் இருவரையும் காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களில், கார்களில் துரத்துவது போலவும் நகைச்சுவையாகக் காட்சியை ஒரு அமைத்திருந்தார்கள்.

இந்தக் காட்சியை பாங்காக்கில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள பட்டயா என்ற தீவில் படமாக்கினார்கள். மனோபாலாவுடன் டூப் நடிகர் ஒருவரும் அமர்ந்திருந்தார்.

மனோபாலா சென்ற மோட்டார் சைக்கிளை சினிமா காவல்துறை துப்பாக்கியால் சுட்டபடி, மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் துரத்தி செல்வதுபோல் காட்சி படமாக்கப்பட்டபோது, இதைக் கவனித்த  பாங்காக் காவல்துறை உண்மை என்று நம்பிவிட்டது. உடனே நிஜ காவல்துறை மனோபாலாவை துரத்த ஆரம்பித்தது. அங்கிருந்து 8ஆவது கி.மீட்டரில் மனோபாலாவவை மடக்கிய பாங்காக் காவல்துறையினர் கேள்வி மேல் கேள்வி கேட்க விழித்திருக்கிறார் மனோபாலா.

தான் ஒரு நடிகர் என்றும், இது படப்பிடிப்பு என்றும அவர் ஆங்கிலத்தில் விளக்கினாலும் ஆங்கிலம் புரியாத பாங்காக் காவல்துறையினர், ‘உன் விளக்கத்தைப் பிறகு சொல்லலாம். இப்போது கைது பண்றோம்’ என்று சொல்லிவிட்டு, மனோபாலாவை கைதும் செய்துவிட்டனர்.

மனோபாலா தனது விக்கை கழற்றிபோட்டு, தான் ஒரு நடிகன் என்பதை சைகையால் விளக்கப் பார்த்தார். அதையும் சந்தேகக் கண்ணுடன் பார்த்த காவல்துறையினர் தங்கள் விசாரணைத் துருவலை அதிகரித்துள்ளனர்.

மனோபாலா கைது செய்யப்பட்ட விவரம் அறிந்ததும் இயக்குநர் பிரபுதேவா, சயாமி மொழி தெரிந்தவரை அழைத்து வந்தார். சயாமி மொழியில் விளக்கம் கொடுக்கப்பட்டதும் மனோபாலாவை விடுவித்தனர் பாங்காக் காவல் துறையினர்.

என்றாலும் அவரை மேக்கப்புடனும், மேக்கப் இல்லாமலும் நிறைய புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுதான் விட்டார்கள். கூடவே ஒரு விளக்கக் கடிதமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.

இதனால் வில்லு படப்பிடிப்பு 3 மணிநேரம் நிறுத்தப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது.

மனோபாலா கைது செய்யப்பட்ட விவகாரம் அந்நாட்டு தொலைக்காட்சிகள் சிலவற்றில் தீவிரவாதி கைது என்று ஒளிபரப்பப்பட்டது. இதனால் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு  சென்னை புறப்பட்ட மனோபாலாவுக்கு பாங்காங் காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர். விமான நிலையம் வரை வந்து வழியனுப்பினர்.
 

admin @ 11:29 pm
Filed under: news
Vijay refusing publicity

Posted on Friday 3 October 2008

vijay.jpg

அப்பாவுக்காக பந்தயம் திரைப்படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்துக் கொடுத்த விஜய், தனக்காக எந்த விளம்பரமும் செய்யக்கூடாது என்று கட்டளை இட்டிருந்தாராம். ஆனால் அவர் உருவத்தை அச்சிட்டு 10 ஆயிரம் போஸ்டர்கள் தயாராகிவிட்டதாம். என்ன, குசேலன் கதி ஏற்படனுமா? என்று கேட்டு, அந்தப் போஸ்டர்களை கிழித்துப்போடச் சொல்லிவிட்டாராம் விஜய். நல்ல பாலிசிதான்.

admin @ 5:12 am
Filed under: kollywood
Prakash Raj produce Vijai’s movie

Posted on Thursday 11 September 2008

பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் விஜய்

Prakash Raj produce Vijai's movie

பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் விஜய் நடிக்கிறார்.

இதுகுறித்து பிரகாஷ் ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,

”தமிழில் வில்லு, இயக்குநர் ஜான் இயக்கும் திரைப்படம், அபியும் நானும், ராடன் நிறுவனம் தயாரிக்கும் படம், இந்தியில் சல்மான்கானுடன் ஒரு படம் என நடித்துக் கொண்டிருக்கிறேன்.

அபியும் நானும் பாடல் வெளியிட்டு விழா வரும் 27ஆம் தேதி நடக்கிறது. முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார். கனிமொழி பெற்றுக்கொள்கிறார்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்துள்ள காஞ்சீவரம் படம் டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. அதில் பங்கேற்க நான் செல்கிறேன். நியூஜெர்சியில் நடக்கும் போட்டியிலும் கலந்துகொள்கிறது. கொரியா படவிழாவிலும் திரையிடப்படுகிறது.

நடிப்புக்கு தீனி போட்டால் நன்றாக நடிக்க முடியும். நான் ஒரு கல்தான். இயக்குநர்கள்தான் சிற்பிகள். அவர்கள் எப்படி செதுக்குகிறார்களோ அப்படி ஆகிறேன்.

தோஸ்த் திரைப்படத்திற்குப் பிறகு எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் பந்தயம் திரைப்படத்தில் நடித்துள்ளேன். அபியும் நானும் வெளியிட்டப்பின் மயிலு வரும். இனிது இனிது படப்பிடிப்பு நடந்து வருகிறது.

டூயட் மூவிஸுக்காக விஜய் நடிக்கும் திரைப்படத்தை தயாரிக்கிறேன். அதுபற்றி விரைவில் அறிவிப்பேன்” என்றார்.

admin @ 3:03 am
Filed under: news
Vijay’s Pandhayam film scene kept secret

Posted on Monday 8 September 2008

pandhayam.jpg

பந்தயம் திரைப்படத்தில் தான் நடித்துள்ள காட்சிகள் வெளியே வராமல் இருக்க படாத பாடு படுகிறார் விஜய். அவை வெளிவந்து எங்கே குசேலன் கதை அதற்கும் நேர்ந்துவிடுமோ என்ற பயம்தான் காரணமாம்.

admin @ 4:37 am
Filed under: kollywood
Villu ends in December

Posted on Monday 8 September 2008

vijay.jpg

விஜய் நடிக்கும் வில்லு திரைப் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் முடிகிறது. உடனே ஏவி.எம். பேனருக்காக வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த திரைப்படத்தை இயக்குநர் தரணியின் உதவியாளர் இயக்குகிறார்.

admin @ 4:25 am
Filed under: kollywood
Vijay’s Villu based village character

Posted on Sunday 24 August 2008

vijay

விஜய்யின் வில்லு திரைப்படம் கிராமப்புற இளைஞர்களை கவரும் திரைப்படம் என்கிறது கோலிவுட். அதற்காக கரகாட்டம், ஒயிலாட்டம் என கிராமியக் லைஞர்களை வைத்து பழனி அருகே பாட்டொன்றை  காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் பிரபுதேவா. அது முடிந்ததுதான் தாமதம். விஜய்யையும் நயன்தாராவையும் விமானத்தில் அள்ளிப் போட்டுக்கொண்டு வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டார் பிரபுதேவா. அங்கே போனால்தான் டூயட்டுகளுக்கு அர்த்தமே கிடைக்கும்.

admin @ 12:06 am
Filed under: kollywood