Srilanka war: K Veeramani warns congress

Posted on Tuesday 6 January 2009

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்னையில் அலட்சியம் வேண்டாம்:
காங்கிரசுக்கு எதிராக ‌கி.‌வீரம‌ணி காட்டம்

செ‌ன்னை‌: இலங்கை‌யில் போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழக‌த்‌தி‌ல் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எ‌ச்ச‌ரி‌‌த்து‌ள்ளா‌ர்.

இது குறித்து அவ‌ர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘ஏற்கனவே சேது கால்வாய் திட்டத்தில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருவது தமிழக மக்களிடம் மிகுந்த கசப்புணர்வை உருவாக்கி உள்ளது.

தற்போது இலங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌‌ச்னை‌யி‌லு‌ம் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசு உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழக சட்ட‌ப்பேரவை‌யி‌ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் அலட்சியப்படுத்துவது தேர்தலில் மிகப்பெரிய விலையை தரவேண்டிய கட்டாயத்தை காங்கிரஸ் கட்சிக்கு உருவாக்கும்.

எனவே இனியாவது இலங்கை‌த் தமிழர் பிரச்னையை காங்கிரஸ் தலைவர் சோனியா கா‌ந்‌தி தெளிவுடன் புரிந்து செயல்பட வேண்டும்’ என்று ‌‌‌கி.வீரம‌ணி கூறியுள்ளார்.

admin @ 7:42 pm
Filed under: srilanka news
DMK condemns Suba. Veerapandian

Posted on Sunday 28 December 2008

சத்தியமூர்த்தி பவன் குறித்த பேச்சு: சுப.வீக்கு தி.மு.க. கண்டனம்
அப்படி பேசவில்லை: சுப. வீரபாண்டியன் மறுப்பு

subaveerapandian.jpg

சென்னை: கடந்த 26ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் பேசிய சுப. வீரபாண்டியனின் காங்கிரஸ்  கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் குறித்த பேச்சுக்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தி.மு.க. தலைமைக் கழக முதன்மைச் செயலாளரும், மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்,

‘கடந்த 26ம் தேதி சென்னையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசுகையில், ”சத்தியமூர்த்தி பவனை விடுதலைச் சிறுத்தைகள் அடித்து நொறுக்கியதாக காங்கிரசார் கூறுகின்றனர். உண்மையிலேயே திருமாவளவன் உத்தரவிட்டிருந்தால், சத்தியமூர்த்தி பவன் இருந்த இடமே தெரியாமல் போயிருக்கும்” என்று பேசியதாக செய்திகள் வந்துள்ளன.

எந்தவொரு பேச்சாளரும் தேர்தல் கமிஷனரால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான அலுவலகக் கட்டடங்களைக் கைப்பற்றுவோம் என்று சொல்வதோ, தகர்ப்போம் என்று பேசுவதோ, ஒரு ஜனநாயக நாட்டில் யாராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

சுப.வீரபாண்டியனின் பேச்சு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. சுப.வீரபாண்டியனின் இந்த பேச்சை தி.மு.க. சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று கூறியுள்ளார் ஆற்காடு வீராசாமி.

அப்படி பேசவே இல்லை-சுப.வீரபாண்டியன்:

இதுகுறித்து சுப.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் நான் ஆற்றிய உரையை ஒரு நாளேடு உள்நோக்கத்துடன் திரித்து வெளியிட்டுள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வி.தங்கபாலு, சத்தியமூர்த்தி பவனை நான் இடிக்கச் சொன்னதாகவும், தைரியம் இருந்தால் நாள், நேரம் குறித்து அதனை இடிக்க வரும்படியும் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் ஒருநாளும் சத்தியமூர்த்தி பவனை இடிக்கச் சொல்லியிருக்க மாட்டார், அவர் வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர். அக்கட்டடத்திற்கு ஒரு ஊறும் இதுவரை ஏற்படவில்லை என்பதே அதற்கு சாட்சி என்றுதான் நான் பேசினேன். அடுத்த கட்சியின் அலுவலகத்தில் அனுமதி இல்லாமல் உள்நுழைவதே அநாகரிகம் என்று கருதுபவன் நான்.

என்றைக்கும் மதவாத சக்திகளிடம் நாடு சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற திராவிட இயக்க சிந்தனை உடையவன் நான். ஈழத் தமிழர்களுக்கு ஏற்ற ஆதரவு குரலை காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை என்பதே என் ஆதங்கம்.

எனவே தங்கபாலுவும், காங்கிரஸ் கட்சியினரும் என் மீது வருத்தம் கொள்ள தேவையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார் வீரபாண்டியன்.

admin @ 11:57 pm
Filed under: news
Thiruma., compares himself as Jesus?

Posted on Thursday 25 December 2008

thol_thirumavalavan.jpgஇயேசு ஒரு முறை தான் உயிர்த்தெழுந்தார்:
நான் தினமும் உயிர்த்தெழுகிறேன் - திருமா.,
 
சென்னை: ‘காங்கிரஸ் நண்பர்கள் எனது உருவபொம்மையை தினமும் எரிக்கிறார்கள். இயேசுநாதர் ஒரு முறை தான் உயிர்த்தெழுந்தார், ஆனால் நான் தினமும் உயிர்த்தெழுகிறேன்’ எ‌ன்று‌ விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொ‌ல். திருமாவளவன் பேசினார்.

பெரியாரின் 35-வது நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் நினைவு நாள் நடைபெற்றது.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் கலந்துகொண்டு திருமாவளவன் பேசுகை‌யி‌ல்,

”தமி‌ழ் ஈழம் பற்றி பேசுவதற்கு தடை விதித்து விட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், தமி‌ழ் ஈழம் பற்றி பேச எ‌ந்த‌வித தடையு‌ம் கிடையாது.

ராஜீவ்காந்தி கூட விடுதலைப் புலிகளை பார்த்து வெறும் 2 ஆயிரம் பொடியன்கள் என்று ஒரு கால‌த்‌தி‌ல் கூறினார். ஆனால் அவ‌ர்களை இந்திய ராணுவத்தால் வெற்றிகொள்ள முடியவில்லை. ‌விடுதலை‌ப் ‌பு‌லிகளை‌ப் பற்றி பேசினால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து ஒரு ஆ‌ண்டு சிறையில் அடைப்பார்கள்.

இந்தியாவில் உள்ள எந்த சட்டத்தாலும் ஒரு ஆ‌ண்டி‌ற்கு மேல் சிறையில் அடைக்க முடியாது. ‌பிணை இருக்கிறது, ‘பரோல்’ இருக்கிறது. இதை எல்லாம் நினைத்தாலே துணிச்சல் வந்துவிடும்.

காங்கிரஸ் நண்பர்கள் எனது உருவபொம்மையை தினமும் எரிக்கிறார்கள். இயேசுநாதர் ஒரு முறை தான் உயிர்த்தெழுந்தார், ஆனால் நான் தினமும் உயிர்த்தெழுகிறேன்.

காங்கிரசில் ‘தி.மு.க காங்கிரஸ்’, ‘அ.தி.மு.க காங்கிரஸ்’ என இரண்டு வகை உண்டு. அதில் ‘அ.தி.மு.க காங்கிரஸ்’ என்னை கைது செய்ய சொல்லி தூண்டி வருகிறது” எ‌ன்று திருமாவளவன் பேசினார்.

admin @ 3:03 am
Filed under: news
Competition between BJP and Congress only: Ila Ganesan

Posted on Wednesday 10 December 2008

l-ganesan.jpgநாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் இடையேதான் போட்டி: இல. கணேசன்

செ‌ன்னை‌: வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., கூட்டணிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி என்பது  உறுதியாகிவிட்டதாக பா.ஜ.க., மாநில தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
”பெருகிவரும் தீவிரவாதம் குறித்து, குறிப்பாக மும்பை சம்பவங்கள் குறித்து மக்களிடம் விளக்கவும், தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான

சட்டம் இயற்ற அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் புதன்கிழமை (இன்று) முதல் இருவார காலம் பிரசார இயக்கம் நடைபெறும்.
 
எந்தெந்த அரசுகள் மக்கள் நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தினார்களோ அவர்களை மக்கள் மீண்டும் தேர்வு செய்துள்ளார்கள்.

திருப்தி இல்லாத மாநிலங்களில் மக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

டிசம்பர் 25ஆம் தேதி வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, அவரது அரசின் சாதனைகளையும், தற்போதைய மன்மோகன் சிங் அரசின் வேதனைகளையும் ஒப்பிட்ட துண்டு பிரசுரங்களை பா.ஜ.க., தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று வழங்குவார்கள்’ என்று கூறியுள்ளார்.
 

admin @ 1:38 am
Filed under: news
Left learns lesson by Congress victory, says Karunanidhi

Posted on Tuesday 9 December 2008

karunanidhi21.jpgகாங்கிரஸ் பெற்ற வெற்றியால் கம்யூனிஸ்ட்டுக்கு பாடம்!: கருணாநிதி

சென்னை: அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அது எப்படியெல்லாம் ஆட்டம் போட்டது என்பதை உணர்ந்திருந்தும் கூட, அ.தி.மு.க. வுடன் கூட்டணி சேர கட்சிகள் முனைகின்றன. இந்தக் கட்சிகளுக்கெல்லாம் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து முரசொலியில் தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில்,

‘சட்டசபை தேர்தலில் கணிப்புகளைத் தாண்டி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது காங்கிரஸ். சமீபத்திய மும்பை தாக்குதல் சம்பவத்தாலும், விலைவாசி உயர்வாலும் மக்கள் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் மக்கள் அதை நிராகரித்து விட்டனர்.

லோக்சபா தேர்தலுக்கு முன்னோடியாக இந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவு இருக்கும் என்று கூறப்பட்டது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வும் என்றனர். ஆனால் ஐந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரஸ் வென்றுள்ளது.

இதன் மூலம் மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளில் மக்கள் இன்னும் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளது வெளிப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தல் முடிவு மதவாத சக்திகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

டெல்லியில் பெரும்பான்மை பலத்துடனும், ராஜஸ்தானில் பா.ஜ.க.விடமிருந்து ஆட்சியைப் பறித்தும், மிஸோரமில் சாதனை வெற்றியையும் பதிவு செய்துள்ளது காங்கிரஸ்.

இது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வழிகாட்டுதலில், திறமையான பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளுக்கு மக்கள் கொடுத்துள்ள பரிசாகும்.

ஆட்சிக்கு எதிராக நிலவும் அதிருப்தி அலையை வைத்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அந்த அலையை டெல்லியில் வாக்காளர்கள் தோற்கடித்துள்ளனர். 3ஆவது முறையாக அங்கு காங்கிரஸுக்கு வாக்களித்துள்ளனர்.

மக்களின் நலன்களை பார்த்துக் கொள்ளும் அரசை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதே இந்தத் தேர்தலின் முடிவுகள் விளக்குகின்றன.

மும்பைத் தீவிரவாத தாக்குதல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டார்கள் மக்கள் என்று பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் அதை மக்கள் பொய் என்று நிரூபித்து விட்டனர். இதுபோன்ற நிலைக்கு ஆளுங்கட்சி மட்டுமே காரணம் இல்லை என்பதை மக்கள் தெளிவாக்கியுள்ளனர்.

தமிழகத்தில் தி.மு.க. நல்லாட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தி.மு.க. அரசுக்கு எதிராக அதிருப்தி அலை வீசும் என்ற குருட்டு நம்பிக்கையில், அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர போட்டி போட்டு போய்க் கொண்டுள்ளன.

கடந்த முறை அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது அது எப்படியெல்லாம் ஆட்டம் போட்டது என்பதை இந்த கட்சிகள் அனைத்தும் உணர்ந்திருந்தும் கூட, அ.தி.மு.க. வுடன் கூட்டணி சேர முனைகின்றன. இந்தக் கட்சிகளுக்கெல்லாம் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு நல்ல பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

admin @ 8:33 pm
Filed under: news
Congress wins!

Posted on Monday 8 December 2008

inc.bmp3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி!: நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயார்

தில்லி: நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டாகக் கருதப்பட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ., 2 மாநிலங்களில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. ஆனால் ராஜஸ்தானில் ஆட்சியை இழந்தது.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தில்லி, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இழந்த ஆட்சியை காங்கிரஸ் மீண்டும் பெற்றது. தில்லியில் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

பா.ஜ., சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆனால் ராஜஸ்தானில் காங்கிரசிடம் ஆட்சியைத் தாரை வார்த்தது.

தேர்தல் முடிவு விவரம்:

தில்லி
மொத்த இடங்கள்          70
தேர்தல் நடந்தவை         69
முடிவு அறிவிக்கப்பட்டவை 69
காங்கிரஸ்                42
பா.ஜ.,                    23
பகுஜன் சமாஜ்              2
இந்திய தேசிய லோகதளம்  1
சுயேச்சை                1

மத்தியப்பிரதேசம்
மொத்த இடங்கள்         230
தேர்தல் நடந்தவை        230
முடிவு அறிவிக்கப்பட்டவை 229
பா.ஜ.,                    142
காங்கிரஸ்                 71
பகுஜன் சமாஜ்              7
பாரதிய ஜனசக்தி            5
சமாஜவாதி                 1
சுயேச்சை                  3

ராஜஸ்தான்
மொத்த இடங்கள்          200
தேர்தல் நடந்தவை        200
முடிவு அறிவிக்கப்பட்டவை 200
காங்கிரஸ்                 96
பா.ஜ.,                     78
சுயேச்சை                 14
பகுஜன் சமாஜ்              6
மார்க்சிஸ்ட்                3
இதர கட்சிகள்              3

சத்தீஸ்கர்
மொத்த இடங்கள்          90
தேர்தல் நடந்தவை        90
முடிவு அறிவிக்கப்பட்டவை 90
பா.ஜ.,                    50
காங்கிரஸ்                38
பகுஜன்சமாஜ்              2

மிசோரம்
மொத்த இடங்கள்          40
தேர்தல் நடந்தவை         40
முடிவு அறிவிக்கப்பட்டவை 40
காங்கிரஸ்                32
மிசோ தேசிய முன்னணி    3
மிசோரம் மக்கள் மாநாடு    2
ஜோரம் தேசிய கட்சி       2
மாராலாண்ட் ஜனநாயக முன்னணி 1

நடைபெற்ற 5 மாநில தேர்ததில் 3இல் கிடைத்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு புதுத் தெம்பைக் கொடுத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை நம்பிக்கையுடன் அணுகவும் அது தயாராகி வருகிறது.

admin @ 8:29 pm
Filed under: news
Srilankan Tamils: Karunanidhi plays a drama-Pazha Nedumaran

Posted on Monday 10 November 2008

pazha-nedumaran.jpgஇலங்கைப் பிரச்னை: நாடகம் நடத்தும் கருணாநிதி - பழ. நெடுமாறன்

விழுப்புரம்: ”இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், முதல்வர் கருணாநிதி நடத்தும் நாடகத்திற்கு மற்ற கட்சிகள் உதவி செய்யவில்லை என்பதால் அவர் எது வேண்டுமென்றாலும் பேசக்கூடாது” என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசினார்.

விழுப்புரத்தில் ‘ஈழத்தமிழர் சிக்கலும், இந்தியாவும்’ என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில்,

”காங்கிரஸில் இருந்ததற்காக வெட்கப்படுகிறேன். காங்கிரஸ் வரலாறு தெரியாத தங்கபாலு, பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் இலங்கை உள்நாட்டுப் போரில் இந்தியா தலையிட முடியாது என்று கூறுகிறார்கள். ஒரு காலத்தில் அந்த கட்சியில் நானும் இருந்துள்ளேன் என்பதை தற்போது நினைக்கும் போது வெட்கமாக உள்ளது.

மனிதநேயம், உறுதியான செயல்பாடு, தெளிவான சிந்தனை இல்லாதவர்கள் இந்திய ஆட்சி பீடத்தில் உள்ளனர். இனப் படுகொலையை உலக நாடுகளே கண்டிக்கிறது. ஆனால் இந்தியா வேடிக்கை பார்க்கின்றது.

முதல்வர் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பினர். அதற்கு இதுவரை கருணாநிதி உரிய பதில் அளிக்கவில்லை.

தி.மு.க. எம்.எல்.ஏ., எம்.பி., க்கள் ராஜினாமா கடிதத்தை டெல்லிக்கு அனுப்பி இருந்தால் அதை பின்பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் செய்திருப்பார்கள்.

முதல்வர் கருணாநிதி நடத்தும் நாடகத்திற்கு மற்ற கட்சிகள் உதவி செய்யவில்லை என்பதால் அவர் எது வேண்டுமென்றாலும் பேசக்கூடாது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கருணாநிதியின் தவறுகளை வரலாறு மன்னிக்காது” என்றார்.

admin @ 8:32 pm
Filed under: srilanka news
Is there Vote of Trust, we will be neutral: PMK chief

Posted on Sunday 9 November 2008

ramadoss.jpgதி.மு.க. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம்:
நடுநிலை வகிப்போம்: ராமதாஸ்

திருச்சி: ”தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை பா.ம.க. ஆதரிக்காது. பா.ம.க. நடுநிலை வகிக்கும்” என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திருச்சி வந்த ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

”சட்டசபையில் அ.தி.மு.க.வினர், தி.மு.க. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால் அதை பா.ம.க. ஆதரிக்காது. ஆதரிப்பதற்குத் தேவையான எந்தக் காரணமும் இருப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. ஒருவேளை அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், பா.ம.க. நடுநிலை வகிக்கும்.

காங்கிரஸ் ஆதரவுடனேயே தி.மு.க. தனது ஆட்சியைத் தொடர முடியும், முழுப் பதவிக்காலத்தையும் முடிக்க முடியும். எனவே நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மூலம் தி.மு.க. அரசை கவிழ்க்க வேண்டிய கேள்வியே எழவில்லை.

அதேசமயம், காங்கிரஸ் கட்சி நினைத்தால் தி.மு.க. ஆட்சியைக் கவிழ்க்க முடியும், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர முடியும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், காங்கிரஸுக்குப் பாமக ஆதரவு தெரிவிக்கும்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே நேரத்திலும் தேர்தல் வருமா என்பது காங்கிரஸ் கையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி இதுதொடர்பாக எடுக்கும் முடிவே இறுதியானது. காங்கிரஸ் கட்சி இல்லாமல் தமிழகத்தில் 3ஆவது அணியை அமைக்க முடியாது” என்றார்.

admin @ 11:07 pm
Filed under: news
LTTE walks over TN: KV Thangabalu

Posted on Friday 24 October 2008

kvthangabalu2.jpgராஜீவ் சிலை உடைப்பு: தமிழகத்தில் விடுதலைப்புலிகள்!: தங்கபாலு புகார்

சென்னை: சென்னை கொடுங்கையூரில் சின்னாண்டிமடம்-சிட்கோ சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலையின் தலை உடைக்கப்பட்டு கீழ் பகுதியும் சேதப்படுத்தப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்னர்.

ராஜீவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்டுள்ளதன் மூலம் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் துணிச்சலாக நடமாடிக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு குற்றம் சாட்டியுள்ளார்.

தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘எந்தத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக தனது அரசியல் வாழ்நாள் முழுவதும் கடுமையாக, உள்ளார்ந்த உணர்வோடு உழைத்தாரோ அம்மாபெரும் தலைவர் ராஜீவ்காந்தியை அதே தமிழின துரோகிகள் படுகொலை செய்தனர்.

உலக வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத அச்சோக அத்தியாயத்தை உருவாக்கிய அந்த தமிழின துரோகிகளின் அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் அந்த தடைச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழின துரோகிகள் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் தமிழ் மக்களும், நாட்டு நலனில் மிகுந்த அக்கறை கொண்ட அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து குரல் கொடுத்தே வருகின்றனர்.

இந்நிலையில் கொடுங்கையூரில் தியாகத் தலைவர் ராஜீவ் காந்தியின் உருவச் சிலையை இன்று (நேற்று) காலையில் தமிழினத் துரோகிகள் உடைத்து சேதப்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளது.

இக்கொடிய சம்பவம் அன்றைக்கு தலைவர் ராஜீவ்காந்தியின் உயிரைப் போக்கிய கொலைகாரக் கூட்டம் இன்னும் தமிழகத்தில் துணிச்சலாக நடமாடிக் கொண்டிருக்கிறது என்பதையே உறுதிப்படுத்துகிறது.

ஏற்கனவே அன்னை இந்திரா காந்தி, தலைவர் ராஜீவ்காந்தி ஆகிய தலைவர்களையும், தியாகத்தையும் கொச்சைப்படுத்தி பேசிய தமிழின துரோகிகளின் செயல்பாட்டுக்கு தமிழக மற்றும் காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

இந்நிலையில் தலைவர் ராஜீவ்காந்தி உருவச் சிலையை உடைத்த குற்றவாளிகளை உடனடியாக தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென்றும், மேலும் உரிய தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முதல்வர் கருணாநிதியைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

admin @ 11:10 pm
Filed under: news
We will speak with ADMK, says T Pandian

Posted on Monday 22 September 2008

பா.ஜ., காங்கிரஸ், தி.மு.க. தவிர யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி: தா. பாண்டியன்

தேனி: தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. எஞ்சிய அனைத்து கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசப்படும். இதில் அ.தி.மு.க. வும் அடங்கும் என்று இ. கம்யூனிஸ்ட் தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் கூறினார்.

தேனியில் தா. பாண்டியன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

”பா.ஜ. மற்றும் காங்கிரசோடு உறவு வைத்துள்ள கட்சிகளுடன் இடதுசாரி கட்சிகள் ஒருபோதும் உறவு வைத்துக் கொள்ளாது. தமிழகத்தில் தி.மு.க. காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. எஞ்சிய அனைத்து கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசப்படும். இதில் அ.தி.மு.க. வும் அடங்கும்.
 
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நீடிக்கிறது. மக்களின் பிரச்னையை தீர்ப்பதற்கோ, மாற்று நடவடிக்கை எடுப்பதற்கோ அரசு உருப்படியாக எதுவும் செய்யவில்லை.

அமெரிக்க நிறுவனங்களின் நிதி பிரச்னையால் இந்திய வங்கிகள், இந்திய காப்பீட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பில்லை என நிதியமைச்சர் சிதம்பரம் கூறுகிறார்.

அவர் கூறிய கொள்கைகளை கடந்த 4 வருடங்களாகக் கம்யூனிஸ்ட் கட்சிகள் மறுத்ததால் தான் இந்திய வங்ககிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தப்பித்துளள்ன.

மத்திய அரசு தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்து அக்டோபர் 2 ஆம் தேதி சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்றார்.

admin @ 11:51 pm
Filed under: news