Husband kidnapped, Kanaka complaints

Posted on Saturday 6 February 2010

கணவரைக் காணவில்லை : கனகா புகார்

kanaka.jpg

டிகை கனகா, தன்னுடைய கணவரைக் காணவில்லை என பிரபல நாளிதழுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையில் நுழைந்தவர் கனகா. இவருடைய தாயாரான தேவிகா புகழ்பெற்ற நடிகை. கனகா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் என்பவரை ரகசியத் திருமணம் செய்தார். இந்நிலையில் கணவரைக் காணவில்லை என்று கூறியுள்ளார் கனகா. மேலும் அவர் கூறியதாக வெளிவந்துள்ள செய்தியில்,

“என்னுடைய தாயார் தேவிகா இறந்ததும், எனக்கு ஆதரவு தர யாருமில்லை. அம்மாவின் ஆவியுடன் பேச ஆசைப்பட்டு, ஆவி அமுதாவைச் சந்தித்தேன். அவருக்குத் தெரிந்தவர்கள் மூலம் கலிபோர்னியாவில் பணிபுரியும் முத்துக்குமார் என்ற மெக்கானிக்கல் இன்ஜினீயர் அறிமுகமானார்.

அவரை நான் என் வீட்டில் வைத்து, கடந்த 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டேன். திருமணம் ஆகி 15 நாட்கள் தான் அவர் என்னுடன் இருந்தார். அதன்பிறகு அவர் திடீரென காணாமல் போனார். அவரை யாரோ கடத்திவிட்டார்கள். ஒரு சினிமா பைனான்சியர் மீதுதான் எனக்கு சந்தேகம்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக எனக்கு கொலை மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கிறது. காவல் துறையிடம் புகார் அளித்தால் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது. எனவே முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து இது குறித்து பேசலாம் என்று முடிவு செய்துள்ளேன்” என்று கனகா கூறியுள்ளார்.

admin @ 1:32 am
Filed under: kollywood