Tamilvanan » Style Mannan Rajinikanth

Style Mannan Rajinikanth

rajini.jpgஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த்

பிடித்தவை

ரஜினிக்குப் பிடித்தவை வருமாறு :

தம்மைத்தாமே மதிப்பது, விரும்புவது, பெருமைப்படுவது.
டைரக்டர் பாலச்சந்தரின் கோபம்
பிடித்த சிகரெட் - டன்ஹில்
பிடித்த மதுவகை - ஷிவாஸ் ரீகல், வாட்69, ஷாம்பெய்ன்
(இப்போது எதுவும் இல்லை)
பிடித்த நிறம் - சிவப்பு
பிடித்த மொழி - ஆங்கிலம்
பிடித்த படங்கள் - ஆங்கிலப் படங்கள்
பிடித்த தமிழ் நாவல் - தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள், மரப்பசு.
பிடித்த சினிமாக் காட்சி - ஹீரோயின்களோடு டூயட் பாடுவது.
பிடித்த ஆங்கில நடிகர் - மார்லன் பிராண்டோ.
பிடித்த நடிகை - தமிழில் லட்சுமி, இந்தியில் ஷார்மிளா தாகூர்.
பிடித்த பாட்டு - சந்திரபாபுவின் பாடல்கள்.
(அவரது பாடல்கள் அடங்கிய கேஸட்டுகள் எல்லாவற்றையும் வாங்கி வைத்திருக்கிறார். அவற்றை அடிக்கடி போட்டு நடனம் ஆடுவது இவர் பொழுது போக்கு)
பிடித்த இயல்பு - நடப்பது, நடிப்பது, கார் ஓட்டுவது. எதிலும் வேகம்…. வேகம்…

பிடிக்காதவை…

வியாபார நோக்கத்தோடு பழகுகிறவர்களைப் பிடிக்காது.
ஒரு தடவை உதவி பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் வந்தால் பிடிக்காது!
அதிகமாகப் பேசும் பெண்களைப் பிடிக்காது!
பெரியவர்கள் முன்னால் சிறியவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது!
வாட்ச் கட்டிக் கொள்வது (இப்போது கடிகாரம் அணிகிறார்)
சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது, சுற்றி வளைத்துப் பேசுவது!
தாமதமாகப் படப்பிடிப்புக்குச் செல்வது!
போலி அரசியல்வாதிகளை! (கண்டால் உடலெல்லாம் எரியுமாம்!)
அழுகை - அதிலும் ஆண்களின் அழுகை அடியோடு பிடிக்காது!
கோயில் பெயரால் கண்டவர்களும் பணம் வசூலிப்பது! (இருக்கிற கோயில் போதும் என்கிறார்)
ஜோசியர்களைப் பிடிக்காது!
அர்த்தமற்ற சலிப்பூட்டக்கூடிய கேள்விகளையே திரும்பத் திரும்பக் கேட்கும் நிருபர்களையும் பிடிக்காது! சொந்த வாழ்க்கையில் அளவுக்கு மீறித் தலையிடும் பத்திரிகையாளர்களையும் பேட்டியில் சொன்னவற்றை மாற்றி எழுதும் நிருபர்களையும் பிடிக்காது.
பொது மேடையில் போலித்தனமாகப் புகழந்து பேசப் பிடிக்காது!
பந்தா பண்ணவும் பிடிக்காது - பண்ணுகிறவர்களையும் பிடிக்காது!

ரஜினிகாந்த் பேசுகிறார்

விரும்பும் வேடம்

“குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குப் பிரபல நடிகர்களுக்கு அமைந்த வேடம் மாதிரி உங்களுக்கு ஏதேனும் அமைந்தது உண்டா?”

“நான் நினைக்கிற அளவு அப்படிப்பட்ட வேடம் எதுவும் அமையறது இல்லை. எதிர் பார்க்கவும் முடியாது. கண்டிப்போடு கூடிய பாசமுள்ள அப்பா ரோல் செய்ய எனக்கு விருப்பம். உதாரணமா சிவாஜி சார் நடித்து பாராட்டுப் பெற்ற ‘பார் மகளே பார்’, ‘தெய்வ மகன்’, ‘வியட்நாம் வீடு’, ‘தங்கப் பதக்கம்’ போன்ற படங்களில் வந்த மாதிரி வேடங்கள்!”

ஏன் கூடாது?
“குஷ்டரோகி போன்ற அருவருக்கத்தக்க கேரக்டரில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?” - கேள்வி
“ஏன் நடிக்கக் கூடாது? நடிப்புன்னா எல்லாமேதான்!”

லைலா-மஜ்னு!
“நீங்க எந்த மாதிரிப் படத்திலே நடிக்க விரும்புகிறீங்க?” - நடிகை ஸ்ரீதேவியின் கேள்வி
“லைலா-மஜ்னு மாதிரி, அம்பிகாபதி - அமராவதி மாதிரி, தேவதாஸ் - பார்வதி மாதிரி நடிக்க ரொம்ப இஷ்டங்க. கொடுக்க மாட்டேங்கிறாங்களே!”

“சென்ஸிட்டிவ்னஸ் அவசியமா?”

“ஒரு கலைஞன் ரொம்ப சென்ஸிட்டிவா இருந்தால்தான் கலைஞனாக வரமுடியும். இல்லேன்னா எங்காவது லைட் தூக்கப்போக வேண்டியதுதான்!”

சககலைஞர்களைப் பற்றி

எம்.ஜி.ஆர். - ஹ வில் பி கார்டியன்டு ஆல்
சிவாஜி - பாதர்லி அஃபெக்ஷன்
ஜெய்சங்கர் - ஸ்போர்ட்டிவ்னஸ்
சிவகுமார் - பங்க்சுவாலிட்டி
கமல் - சின்சியாரிட்டி
ஜெய்கணேஷ் - லவ்லினஸ்
விஜயகுமார் - பிரெண்ட்லினஸ்
தேங்காய் சீனிவாசன் - சென்ஸ் ஆஃப் ஹியூமர்
சுருளிராஜன் - கிரியேட்டிவ்னஸ்
கே.ஆர்.விஜயா - தெய்விகத்தன்மை
ஸ்ரீபிரியா - இண்டலிஜென்ஸ்
ஸ்ரீதேவி - கொயட்னஸ்

ஓர் ஆசை
“என்னுடைய இலட்சியம் ஒரு சரித்திரப் படத்தில் சொந்தக் குரலில் செந்தமிழில் பேசி நடிக்க வேண்டுமென்பதுதான்!”

இன்னோர் ஆசை!
“எழுத்தாளர் ஜெயகாந்தன் ஓர் ஆக்ஷன் பிக்சர் எடுக்க வேண்டும். அதில் நான் நடிக்க வேண்டும் என்று ஆசை!”

பிடித்த பேச்சாளர்
“வாட்டாள் நாகராஜ் பேச்சைக் கேட்டு இரசிப்பேன். அதுக்கு மேல யோசிக்க மாட்டேன்!”

விரும்பிப் பார்த்த படம்
“வீரகேசரி” (கன்னடம்)

ஸ்டைல் மன்னன் ரஜினிகாந்த் ரஜினிகாந்த்தை மாற்றிய இஸ்கான்