Archive for the 'speech' Category


Friday, 22 Jan 2010

Lena Tamilvanan’s Interview on Kalaingar TV

லேனாவின் பார்வையில் லேனா :
கலைஞர் டிவியின் ‘சந்தித்த வேளையில்’ பேட்டி

lena-tamilvanan.jpg

வாயில் இருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையும் உன்னதமாக இருக்க வேண்டும் என்பதிலும், அது மற்றவருக்கு உதவும் வகையில் இருக்கவேண்டும் என்பதிலும் கவனத்துடன் இருப்பவர் லேனா தமிழ்வாணன்.

கலைஞர் டிவியில் ‘சந்தித்த வேளை’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவர்,

தமிழ்வாணன்?

லேனா தமிழ்வாணன்?
பிரபல்யங்களின் வாரிசாக இருப்பது?
பயணக் கட்டுரைகள்?
வாழ்வு முன்னேற்ற கட்டுரைகள்?
பேச்சாளர்?
நேரத்தின் அருமை?

என அவரும் அவர் சார்ந்தவற்றின் கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கிறார்.

‘சந்தித்த வேளை’ லேனா தமிழ்வாணன் பேட்டி

’s Interview on - Part 1

’s Interview on - Part 2

’s Interview on - Part 3

’s Interview on - Part 4

’s Interview on - Part 5

Tags: , , , , ,


Thursday, 21 Jan 2010

Ravi Tamilvanan’s Interview on Kalaingar TV

ravi-tamilvanan.jpg
‘சந்தித்த வேளை’யில் சிந்திக்க வைத்த ரவி தமிழ்வாணன்!

கலைஞர் தொலைக்காட்சியில் காலையில் மலரும் ‘சந்தித்த வேளை’ நிகழ்ச்சியில் கடந்த வாரம், மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாகி ரவி தமிழ்வாணனின் பேட்டி இடம் பெற்றது. சந்தித்த வேளை நிகழ்ச்சியை அவர் சிந்தித்த வேளையாக மாற்றினார். தமிழகத் தமிழர்களை விட இலங்கைத் தமிழர்கள் தமிழை அதிகம் நேசிக்கிறார்கள்; வாசிக்கிறார்கள்; சுவாசிக்கிறார்கள் என்ற அவர், தமிழில் அதிகம் புத்தகம் வெளியிட்டாலும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்காக தமிழ் கற்கலாம் என்கிற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். கிட்டதட்ட 70 நாடுகளுக்கு தான் பயணித்திருப்பதாகவும், அங்கு  நடைபெறும் கண்காட்சியில் தங்கள் நிறுவன புத்தகங்கள்  இடம் பெறுவதாகவும் தகவலைப் பரிமாறிக்கொண்டார்.

இசைக்கருவிகளை வாசிப்பது குறித்த புத்தகங்கள் பற்றி பேசிய பேட்டியாளர் ரமேஷ்பிரபா, ‘இது ஏதோ கரஸ்பாண்டன்ஸில் கார் ஓட்ட கற்பது போலத் தெரிகிறதே’ என்றார். இதற்கு பதிலளித்த ரவி தமிழ்வாணன், நீச்சல் பழகுவது எப்படி என்ற புத்தகத்தை வைத்துத்தான் தானே நீச்சல் கற்றுக்  கொண்டதாக முத்தாய்ப்பாகக் கூறினார். இது போன்ற புத்தகங்கள் ஒரு விஷயம் குறித்த ஆரம்ப அறிவைத் தரும் என்றவர், குரு சிஷ்யன் இடையே ஒரு புரிதலையும் இவை ஏற்படுத்தும் என்றார். மேலும் அவர் படிப்பதும் பயிற்சிப்பதும் தான் தன்னுடைய வேலை என்று குறிப்பிட்டார்.

‘சந்தித்த வேளை’யில் நம்மை சிந்திக்க வைத்த ரவி தமிழ்வாணனின் பேட்டியைக் காணுங்கள்..

சந்தித்த வேளை விடியோ:
’s Interview on part 1

’s Interview on part 2

’s Interview on part 3

’s Interview on part 4


’s Interview on part 5

Tags: , , , ,


Tuesday, 27 Oct 2009

Carnatic vocalist Sudha Ragunathan speech

சுதா ரகுநாதன் நன்றாகப் பாடுவார்…பேசுவாரா? : விடியோ

launch-of-the-album-7th-sense-in-chennai.jpg

சு
தா ரகுநாதன் நன்றாகப் பாடுவார்… தெரியும்! நன்றாகப் பேசுவார் என்பது ‘செவன்த் சென்ஸ்’ இசை ஆல்பம்  வெளியீட்டில் தெரிய வந்தது.

பிரபல வீணை வித்வானும் இசையமைப்பாளருமான ராஜேஷ் வைத்யா ‘செவன்த் சென்ஸ்’ என்ற பெயரில் புதிய இசை ஆல்பத்தை வெளியிட்டிருக்கிறார். இதில்சுதா ரகுநாதனும் தன்னுடைய குரலால் ஏழு ஸ்வரங்களை தட்டிச் சென்றிருக்கிறார்.

கடந்த வியாழக்கிழமை அன்று நடந்த இந்த வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாலசந்தர், இசையமைப்பாளர் வித்யாசாகர், நடிகரும் எம்,.எல். ஏ.வுமான எஸ்வி சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசியவர்கள் மத்தியில் சுதா ரகுநாதனின் பேச்சு, அவருடைய பாடல்களைப் போல அனைவர் நெஞ்சிலும் பச்சக்கென ஒட்டிக்கொண்டது.

‘பாடகியான என்னைப் பேச சொல்வது நியாயமா?’ என்று  அப்பாவியாக ஆரம்பிப்பவர், ‘பல ஹீரோக்களை உருவாக்கிய கே.பி. சார்தான் என்னுடைய ஹீரோ’ என்றும், ‘வித்யாசாகர் என்றால் அனைத்துக் கலைகளின் கடல். இவரோ இசைக்கடல்’ என்றும் மேடையில் அமர்ந்திருந்த அனைவர் குறித்தும் அழகாகப் பேசி  அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மற்றவர்களை வஞ்சனையில்லாமல் பாராட்ட, நீங்களும் நிச்சயம் கேட்கவேண்டிய பேச்சு இது.

Tags:


Tuesday, 20 Oct 2009

Ammavukku… Vairamuthu’s poem on his mother

vairamuthu.jpgவைரமுத்தான ஒரு கருப்புப் பிண்டம்!:
தாய் பற்றி கவிப்பேரரசின் கவிமுரசு

கவிப்பேரரசு வைரமுத்து சொல்வதுப் போல், அவர் ஆயிரமாயிரம் கவிதை எழுதி இருக்கலாம். அழகழகாய் பொய் சொல்லி இருக்கலாம். ஆனால், தன்னுடையத் தாயைப் பற்றி அவர் பாடிய இந்த முதல் கவிதையில் பொய் இல்லை. அதிலிருக்கும் மெய் நம்மை மெய் மறக்கச் செய்கிறது.

அவருடைய எழுத்தாளுமையும், உச்சரிக்கும் தொனியும் அவரைப் போலவே நம்மையும் கடைசியில் நாதழுக்கச் செய்கிறது.

கேட்டுப் பாருங்கள் தெரியும்.
Click + symbol to hear Vairamuthu poem
Vairamuthu poem on his mother

Tags:


Thursday, 3 Sep 2009

Valampuri John concerning mother & mother tongue – Audio

valampuri-john.jpgவரம் வாங்கிவந்த தமிழ்மகன் வலம்புரி ஜான்! -ஆடியோ

வலம்புரி ஜான் தமிழுக்கு வலம்புரி சங்காகத் திகழந்தவர். கலைஞர் கருணாநிதிக்கு அடுத்த, அவருக்கே பிடித்த கம்மக்குரலோன். இவர் மூச்சில் கூட தமிழ் கலந்திருக்கும். எழுத்திலும் பேச்சிலும் தமிழர் உள்ளங்களில் தன்னை நிரந்தரமாக ஒட்டிக்கொண்டவர்.

இவர் நாவில் மட்டும் தமிழன்னை ஆடிய ஆட்டங்கள் மறக்க முடியாதவை. வரம் வாங்கிவந்த தமிழ்மகனான இவர் சிங்கப்பூரில் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற ‘சிகரங்கள் 2001′ விழாவில் பேசிய பேச்சு இது.

‘தொண்டை ஒத்துழைக்காவிட்டாலும் தமிழுக்கு என் தொண்டை செய்யாமல் இருக்க முடியாது’ என்ற இவருடைய பேச்சு பேச்சல்ல, அது அனைவர் உள்ளத்திலும் ஆழமாகப் பதிந்துள்ள வீச்சு!

கேட்டுப் பாருங்கள் தெரியும்.
Click + symbol to hear Valampuri John speech

Valampuri John Speech

Tags:


Thursday, 2 Jul 2009

Sivakumar Speech about Tamil in Tamil Cinema

சினிமாவில் தமிழ்: சிவக்குமார் பேச்சு

siva-kumar-speech.jpg

நடிகர் சிவக்குமாரின் பேச்சை கேட்டால் காது குளிர்கிறது. மனம் மலர்கிறது. மூளை புத்துணர்ச்சி பெறுகிறது. தமிழ் மணக்கிறது.

2007இல், ஈரோட்டில் நடந்த புத்தகக்காட்சியில் சிவக்குமாரை பேசச் சொன்னார்கள். தலைப்பு ‘சினிமாவில் தமிழ்’.  ‘அப்பல்லாம் தமிழ் பேசினார்கள். இப்போ ஓசை மட்டும்தான் வருகிறது’ என்று தொடங்குகிறார் சிவக்குமார். அதன்பின்னர் சுமார் 1 மணி 20 நிமிடங்களுக்கு தமிழைப் பற்றி அவருடையத் தமிழ் பேசுகிறது.

சிவாஜி, கலைஞர் கருணாநிதி, அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியார், வசனகர்த்தா ஏகே வேலு, இயக்குநர் ஸ்ரீதர் என்று பிளந்து கட்டுகிறார் சிவக்குமார். குறிப்பாக அவருடையக் குரலில் பராசக்தி, மனோகரா, கந்தன் கருணை திரைப்பட வசனங்களை கேட்கையில் சிவக்குமார் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம் என்பது தெரிகிறது.

கடைசியாக அவர் 70ஆம் வருடத்திற்கு முன்பாவே தமிழ், தமிழ் சினிமாவில் இருந்து வெளியேறிவிட்டது என்று வருத்தம் அடைகிறார்.  கேட்டுப் பாருங்கள் உங்களுக்கும் அவருடைய ஆதங்கம் புரியும்.

Click + symbol to hear speech

Sivakumar Speech

Tags: , , , , , ,


Wednesday, 24 Jun 2009

Full Sivakumar Speech

சிந்தனையாளர் சிவக்குமார்

sivakumar-family.jpg

நடிகர் சிவக்குமார் அளவுக்கு சிந்தனையாளர் சிவக்குமாரை நிறையப் பேருக்குத் தெரியாது.

அவருடைய நடிப்பைப் போல அவருடையச் சிந்தனையும் மிதமானது, மென்மையானது. காற்றுதான் என்றாலும் தென்றலும் புயலும் எப்படி வேவ்வேறானவையோ அதுபோல் சிவக்குமாரின் மென்மையான கருத்துக்களில் ஆக்ரோஷமும் ஒளிந்திருக்கும்.

தாய் - மனைவி - மகள் என்ற தலைப்பில் அவர் பேசியதைக் கேட்டால் நம்மை சாட்டையால் அடிப்பதுபோல வலிக்கிறது. ஒரு பெண்ணை எப்படியெல்லாம் நாம் கொடூரமாக படுத்தி எடுக்கிறோம் என்பதை, தன்னுடைய வாழ்வில் நடந்தவற்றையே ஒளிவு மறைவில்லாமல் எடுத்துச் சொல்லி (மனைவி அமர்ந்திருக்க அவர் பேசிய பேச்சு இது) ஆண்களின் வன்மையான மனங்களை சுளுக்கெடுக்கிறார் சிவக்குமார்.

திரையுலகின் மார்க்கண்டேயன், இதர பெண் வாசனை பக்கத்தில் வரமுடியாத உத்தமசீலன், பிறருக்குத் தெரியாமல் பிறருக்கு பல்வேறு உதவிகளை செய்துகொண்டிருக்கும் தாராளன் சிவக்குமார் தன்னிடமும் இருந்த சில குறைகளைச் சுட்டிகாட்டும்போது, இவர்போல் வருமோ எனத் தோன்றுகிறது. உங்களுக்கும் தோன்றும்!

Click + symbol to hear speech1
Download

Click + symbol to hear speech2
Download

Click + symbol to hear speech3
Download

Click + symbol to hear speech4
Download

Tags: , , , ,


Thursday, 5 Feb 2009

MG Ramachandran speech

mgrரத்தங்களின் ரத்தங்களே!: எம்.ஜி.ஆர். பேச்சு

ரத்தத்தின் ரத்தங்களான என் உடன்பிறப்புகளே… இந்த வார்த்தை பிரயோகத்தை  மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால்கூட போதும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்போட்டுக்கொண்டு எம்.ஜி.ஆரின் பேச்சை கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
அவர் அதை உச்சரித்த விதத்தில் உள்ளார்ந்த அன்பு வெளிப்படும்.

1977இல் அ.தி.மு.க., முதல் முதலாக தமிழக ஆட்சிக்கட்டிலில் ஏறியது. அதற்கடுத்த இரண்டு மாதங்களில் மக்களுக்கு நன்றி சொல்ல புறப்பட்டார் எம்.ஜி.ஆர். பவானி பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆரின் பேச்சு உங்களையும் கட்டிப்போடும்.

Click + symbol to hear Ramachandran speech
Download

Tags: , , , , , ,


Tuesday, 28 Oct 2008

karunanadhi speech in support of Islam

karunanadhi

இஸ்லாம் கருணாநிதி கனிவான பேச்சு

இஸ்லாம் மதம் பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி மேடையொன்றில் பேசிய கருத்துகள் இங்கே.

Click + symbol to hear Speech

Tags: , , ,


Saturday, 25 Oct 2008

Anna speech in support of Islam

arignar-anna

இஸ்லாம் பற்றி பேரறிஞர் அண்ணா

இஸ்லாம் மதம் பற்றி அண்ணா, தனது கருத்துகளை எடுத்து வைத்த பேச்சு இது. மதங்களைப் பற்றி அலசுவதிலும் அண்ணா எல்லாருக்கும் அண்ணா என்பதை நிரூபிக்கும் உரை இது.

Click + symbol to hear Speech

Tags: , , , ,


Page 1 of 212»