Archive for the 'Siri Siri' Category
Monday, 25 May 2009
மாப்பு வச்ச ஆப்பு!
சந்திரமுகி8230; ஜோதிகாவின் அபாரமான நடிப்பையும் தாண்டி ரஜினி - வடிவேலு ஜோடி காமெடி தர்பார் நடத்திய திரைப்படம்.
வேட்டையாபுரம் அரண்மனைக்கு வரமாட்டேன் என்று பயந்தலறும் வடிவேலுவை அடமாக உள்ளே இழுத்துச் செல்வார் ரஜினி. வடிவேலுவை ரஜினி 8216;நீ8217; யில் தொடங்கி 8216;யா8217; வில்8217; நிறுத்தி 8216;டா8217;வில் முடிப்பார்.
ரஜினிக்கு அரண்மனையின் ஹிஸ்டடியை (ஹிஸ்ட்ரி) மாப்பு மாப்பு என்று விளித்தபடியே சொல்லிக்கொண்டு தனியே செல்லும் வடிவேலு, கடைசியில் தான் தனியாக இருப்பதை உணர்ந்து மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு எனும்போது நம் வயிறு குலுங்கும்.
ஓர் அறைக்குள் மாட்டிக்கொள்வார் வடிவேலு. பயத்தில் மானுக்குக் கூட வணக்கம் வைப்பார். பயத்தில் உறைந்துபோய் சிலையாக நிற்கும் அவருக்கு அதிரடி (அடிதாங்க) வைத்தியம் கொடுத்து பழைய நிலைக்குக் கொண்டு வருவார் ரஜினி.
ரஜினி- வடிவேலு ஜோடியின் காமெடி சூப்பர் ஹிட்டான படம் சந்திரமுகி.
அந்தக் காட்சியை நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.
Tags: Chandramukhi, Rajini, Siri Siri, Vadivel, சந்திரமுகி, ஜோதிகா, வடிவேலு, ஹிஸ்ட்ரி
Tuesday, 10 Mar 2009
எல்லாம் கமல்மயம்!: தெனாலி காமெடி
கமலின் காமெடி சிரித்துவிட்டு போவதற்கு மட்டுமே செய்யப்படுவது இல்லை. நம்மை சிரிக்கவைக்கும் அவருடைய ஒவ்வொரு உச்சரிப்பிலும் அறிவார்ந்த விஷயங்கள் நிறையவே கொட்டிக் கிடக்கும். நாம்தான் அதை தேடி பொருக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
தெனாலி திரைப்படத்தில் சரியான பயந்தாங்கொள்ளியாக அவர் வந்து தன்னுடையச் செயல்களால் மற்றவர்களைத்தான் அதிகம் பயமுறுத்துவார்.
மனநல மருத்துவர் ஜெயராமன், 8216;உனக்கு என்ன பயம்?8217; என்று தெரியாமல் கேட்டுவிட, 8216;எல்லாம் சிவமயம் என்பார்கள்8230;எனக்கோ எல்லாம் பயமயம்!8217; என்று ஆரம்பித்து சுமார் 5 நிமிடங்களுக்கு விடாமல் பயத்தைத் துரத்துவார் பாருங்கள் கமல். நீங்களே பாருங்கள். சிரித்து சிரித்து பயந்து போகாமல் இருந்தால் சரி.
Friday, 13 Feb 2009
காதல் ஸ்பெஷல்
8216;வாரணம் ஆயிரம்8217; ஆயிரம் காரணத்திற்காக பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் காதலர்கள் பார்த்தார்கள் என்றால், திருச்சியில் இருந்து சென்னை செல்லும் அந்த ரயில் காட்சிக்காகத்தான் இருக்கும்.
ஷமீரா ரெட்டியைப் பார்த்த முதல் பார்வையிலேயே சூர்யாவுக்கு காதல் பிறப்பதும், உட்கார முடியாமல் தவிப்பதும், ஷமீராவைப் பார்த்த 5ஆவது நிமிடத்தில் காதலைப் போட்டு உடைப்பதும்8230;.சூர்யாவின் காதல் சேட்டைகள் என்றைக்கும் மறக்க முடியாதது.
நீங்களே பாருங்களேன்.
Tags: Siri Siri, Surya, Vaaranam Ayiram, Vaarnam Aayiram, காதல் ஸ்பெஷல், சூர்யா, வாரணம் ஆயிரம், ஷமீரா ரெட்டி
Tuesday, 10 Feb 2009
சபாஷ் மீனா - சந்திரபாபு காமெடி
சபாஷ் மீனா திரைப்படத்தின் நாயகன் சிவாஜிதான். நடிப்பில் அவர் பின்ன, அவருக்கு இணையாக நகைச்சுவையில் நாயகனாகப் பின்னியெடுத்திருப்பார் ரப்பர் உடலான் சந்திரபாபு. ஒரு வார்த்தை வெளியே வந்து, அது சிரிப்பை வரவழைக்கும்முன் சந்திரபாபுவின் ஏதோ ஓர் அங்க அசைவு சிரிப்பால் நம்மை அசைத்துவிடும்.
சபாஷ் மீனாவில் பாருங்கள் சிவாஜி பாடு பேசிக்கொண்டே இருப்பார். சந்திரபாபுவின் உடல்அசைவே நமக்கு சிரிப்பை வரவழைத்துவிடும்.
சபாஷ் சொல்ல வைக்கும் சபாஷ் மீனா சந்திரபாபுவை ரசியுங்கள்.
Tags: , Chandrababu, Sabash Meena, shivaji, Siri Siri, சந்திரபாபு, சபாஷ் மீனா, சிவாஜி
Thursday, 29 Jan 2009
வறுமையின் நிறம் சிவப்பு
கமல் களிமண் போல என்பது பாலசந்தருக்குத் தெரியும். அவரை எப்படி வேண்டுமானால் குழைத்து, வளைத்து தனக்குத் தேவையான பாத்திரத்தை செய்ய முடியும் என்று நம்புபவர்.
வேலையற்ற திண்டாட்டத்தை மிக அழகாக கூறிய திரைப்படம் வறுமையின் நிறம் சிவப்பு. சாக்கடையில் விழுந்துக் கிடக்கும் ஆப்பிளைக் கழுவி உண்ணும் அளவுக்கு வறுமையில் சிக்கி உழலும் கமல் மற்றும் நண்பர்கள் 80களின் சாட்சிகள்.
கமல் வேலைத் தேடிச் செல்லும் நேர்முகத்தேர்வு ஒன்றில் அவருடைய கோபமும், துடிப்பான தடிப்பான வார்த்தைப் பிரயோகமும் வேலை வாய்ப்பற்ற நிலையை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டும். பார்க்கலாமா?
Tags: Siri Siri
Thursday, 29 Jan 2009
மெளன ராகம் - கார்த்திக் என்னும் கலைஞன்
கார்த்திக்8230; முழுமையாக வெளிப்படாமல் ஓரங்கட்டப்பட்ட கலைஞன்.
அவருடைய பரிமாணங்கள் வித்தியாசமானவை. அவருடைய திறமையை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட இயக்குநர்களில் மணிரத்னமும் ஒருவர்.
அதற்கு சாட்சி மெளன ராகம் திரைப்படம். கொஞ்சநேரமே வந்தாலும் படம் முழுக்க மெளனமாக வந்துபோனது கார்திக்கின் கதாபாத்திரம்.
தமிழ் திரைப்பட நாயகர்கள் காதலை ஏதோ சுமையாக இறக்கி வைக்க முடியாமல் தவிப்பது போல 8216;சுட்டு8217;க்கொண்டிருந்த இயக்குநர்களுக்கு இடையே கார்த்திக் ஏற்ற கதாபாத்திரம் மூலம் காதலை விளையாட்டாகச் சொல்லியிருப்பார் மணிரத்னம். அதே விளையாட்டுக் காதல் எப்படியெல்லாம் வாழ்க்கையைத் திசை திருப்பும் என்றும் சொல்லியிருப்பார்.
கார்த்திக் மற்றும் ரேவதிக்கு இடையே காதல் அரும்பும் அந்த துடிப்பான காட்சி உங்களுக்கு.
Tags: Siri Siri
Thursday, 29 Jan 2009
அடேயப்பா சொல்லவைத்த படையப்பா!
அடேயப்பா சொல்லவைக்கும் ரஜினியின் திரைப்படங்களில் 8216;படையப்பா8217;வும் ஒன்று. ரஜினியின் ஆஸ்தான இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரின் மாஸ்டர் பீஸ் என்றே படையப்பாவை சொல்லலாம்.
குறிப்பாக, நீங்கள் காணப்போகும் காட்சி இருக்கிறதே அதிக கைத் தட்டலை அள்ளிய காட்சி அது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியும், அவரைக் காதலித்த ரம்யாகிருஷ்ணனும் (நீலாம்பரி) சந்திக்கும் காட்சி அது.
தன்னைச் சந்திக்க வரும் ரஜினியை நிற்கவைத்தே ரம்யா பேச, சரேலென தனது துண்டை மேலே விசிறி ஊஞ்சலை கீழே கொண்டுவந்து அதில் எகிறி ரஜினி அமர்வதும், தனக்கே உரிய பாணியில் அவர் விரல்களை மடக்கி வணக்கம் சொல்வதும், அதற்கு ரம்யா, 8216;உன்னை இப்பவும் எல்லாருக்கும் ஏன் பிடிச்சுருக்குன்னு தெரியுமா. வயசானாலும் உன்னுடைய அழகும், ஸ்டைலும் மாறவே இல்லைய்யா8217; ன்னு சொல்றதும் அதுக்கு ரஜினி, 8216;அதெல்லாம் கூடவே பிறந்தது8217;ன்னு பதில் சொல்றதும்8230;.ஆஹான்னு இருக்கும்ங்க.
மறக்க முடியாத படையப்பா காட்சியை நீங்களும் மறுபடியும் ரசித்து மகிழுங்கள்.
Tags: Siri Siri
Tuesday, 20 Jan 2009
கரகாட்டக்காரன் வாழைப்பழக் காமெடி!

கரகாட்டக்காரன்8230; 90களில் தமிழ்த் திரைப்பட உலகை புரட்டிப்போட்ட திரைப்படம் என்பதுடன், தமிழக மக்களின் வயிற்றை சிரிப்பால் கலக்கி எடுத்த திரைப்படமும்கூட.
இளையராஜாவின் இசையைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், கவுண்டமணி - செந்தில் ஜோடியின் நகைச்சுவைதான் படத்தின் பெரும்பங்கை தாங்கிப் பிடித்திருக்கும். நகைச்சுவை என்றால் அந்த ஜோடி தான் என்று பிரித்து பார்க்கமுடியாத அளவுக்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்த திரைப்படம் கரகாட்டக்காரன்.
குறிப்பாக, அந்த வாழைப்பழம் காமெடியை யாராலும் மறக்கமுடியாது. கவுண்டமணி - செந்தில்கூட தங்கள் வாழ்க்கையில் மறக்ககூடாத நகைச்சுவைக் காட்சி அது.
ஒன்ஸ் மோர் அந்த வாழைப்பழக் காமெடியை ரசித்து சிரிப்போமா!
Tags: banana, Karakatakaran, Siri Siri, இளையராஜா, கரகாட்டக்காரன், கவுண்டமணி, செந்தில், திரைப்படம், வாழைப்பழம்
Sunday, 11 Jan 2009
சர்வர் சுந்தரம் - நாகேஷ்

Tags: Nagesh, Server Sundaram, Siri Siri, சர்வர் சுந்தரம், நாகேஷ்
Friday, 9 Jan 2009
தேன்நிலவு - தங்கவேலு
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகளை இங்கு பார்த்து ரசித்து சிரிக்கலாம்.

































