Sunday, 30 Mar 2008
ஒகேனக்’கல்’! பொறுமைக்கும் எல்லை உண்டு: மத்திய அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
சென்னை: ’பஸ்களை அல்ல, எங்களது எலும்புகளை உடைத்தாலும் சரி. நாங்கள் அதற்காக கவலைப்படப் போவதில்லை. நிச்சயமாக ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்’ என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் ஆயுதக்காடு! - ஜெ., குற்றச்சாட்டு
சென்னை: ‘சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய முதல்வரே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தனது மகனுக்கு உதவி செய்வதால் தான் தீவிரவாதிகள் தமிழ்நாட்டை தங்களுடைய புகலிடமாக கருதுகிறார்கள்’ என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
2011இல் ஆட்சி…உடனே மதுவிலக்கு!: ராமதாஸ்
சென்னை: ‘2011இல் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சியை அமைப்போம். ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்காகத்தான் இருக்கும்’ என்று தெளிவாக சொல்கிறார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.
தமிழகத்தில் மது விலக்கு?- ராமதாசுக்கு கருணாநிதி சூடான பதில்!
சென்னை: ‘மதுவிலக்கு ஆவணத்தில் கையெழுத்து போடும் வாய்ப்பு பா.ம.க.விற்கே கிடைக்கட்டும் என்றுதான் அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு பொறுமையாக இருக்கிறோம். அவர்களே ஆட்சிக்கு வந்து…
யோகம் இருந்தால் யோகா கிடைக்கும்!: சட்டமன்ற உறுப்பினர்களிடம் தங்கம் தென்னரசு தமாஷ்
சென்னை: ‘அடுத்தக் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் யோகா பயிற்சி கட்டாய பாடமாக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை…
நிறைவேறியது விக்ரமின் ‘மணி’ யான ஆசை!
சென்னை: நடிகர் விக்ரமின் நீண்டநாள் கனவு இப்போது ஈடேறிவிட்டது. அது…
* தோணி… இந்திய கிரிக்கெட்டின் ரஜினி!: முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பாராட்டு.
Friday, 28 Mar 2008
கோவையில் சர்வதேச பல்கலைக் கழகம்!
மத்திய பல்கலை, ஐ.ஐ.எம்.,மும் தமிழகத்திற்கு வருகிறது
டெல்லி: நாடு முழுவதும், புதிதாக எட்டு ஐ.ஐ.டி.,க்களும், ஏழு ஐ.ஐ.எம்.,களும், உலகத்தரம் வாய்ந்த 14 பல்கலைக் கழகங்களும், 16 மத்திய பல்கலைக் கழகங்களும் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழக தொகுதிகள் மறுசீரமைப்பு ஆய்வு: ஜூலைக்குள் புதிய வாக்காளர் பட்டியல்!
-தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், புதிய தொகுதிகளை தேர்தல் கமிஷன் இறுதி செய்துள்ளது.அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட, போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல் ஜூலை 1ஆம் தேதி வெளியிடப்படும் என, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல்:விபரீதத்தை விலை கொடுத்து வாங்கவேண்டாம்! எடியூரப்பாவிற்கு வைகோ எச்சரிக்கை
சென்னை: மாநில எல்லையைத் தாண்டி வந்து, கோஷமிட்டு வீபரீதத்தை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என கர்நாடக பா.ஜ.க. தலைவரான எடியூரப்பாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ.
சொத்து வரி… மக்கள் மீது நிதிச்சுமையை ஏற்றவேண்டாம்!-ஜெயலலிதா
சென்னை: ‘சொத்து வரி உயர்வை உடனடியாக கைவிட வேண்டும். மக்கள் மீது நிதிச் சுமையை ஏற்ற வேண்டாம்’ என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சர்க்காருக்குத் தயங்கி அரசாங்கத்திற்கு மாறிய கேப்டன்!
சென்னை: ‘அரசாங்கம் திரைப்படத்தில் அரசியல் கிடையாது. எனது கட்சியின் பெயரோ, கொடியோ படத்தில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் அடுத்து நான் நடிக்கும் எங்கள் ஆசான் படத்தில் நிச்சயம் அரசியல் இருக்கும்’ என்கிறார் கேப்டன்.
பி.ராஜேந்திரன் ஓய்வு: தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. கே.பி.ஜெயின்
சென்னை: தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக இருந்த ராஜேந்திரன் ஓய்வு பெறுவதையொட்டி புதிய இயக்குனராக கே.பி.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் மத்திய பல்கலைக்கழகம்: காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி மகிழ்ச்சி!
சென்னை: ‘கோவையில் உலகத்தரம் வாய்ந்த மத்திய பல்கலைக்கழகம் அமைய இருப்பதால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாகத் திகழும்’ என தனது வரவேற்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.கிருஷ்ணசாமி.
சொத்து வரி உயர்வு… ஜெயலலிதாவிற்கு முதல்வர் கருணாநிதி பதில்!
சென்னை: ‘இன்றைக்கு சொத்து வரியை உயர்த்தக் கூடாது என்று அறிக்கை விடுகின்ற இதே ஜெயலலிதா தான், அவரது ஆட்சிக் காலத்தில் 200 விழுக்காடு வரை சொத்து வரியை உயர்த்தி கொள்ளலாம் என்று ஆணை பிறப்பித்தவர்!’ என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
* ஒகேனக்கல் பிரச்னையில் போராட்டம் தேவையில்லை: கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி.
Friday, 28 Mar 2008
முத்துராமலிங்கத்தை மிரட்டவேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை: ஜெயலலிதா புகாருக்கு டி.ஜி.பி. மறுப்பு
சென்னை: முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான முத்துராமலிங்கம் மிரட்டப்படுகிறார், காவல்துறையினர் பொய் வழக்குப் போடுகின்றனர் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவதில் உண்மை இல்லை என்று தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாரதிராஜா மகளுக்கு மலேசிய மணமகன். செப்-1இல் திருமணம்
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவின் மகள் ஜனனிக்கும் மலேசியாவைச்சேர்ந்த ராஜ்குமாருக்கும் சென்னையில் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
கிளாமராக நடிக்க சிம்ரன் தயார்!
சென்னை: ‘இன்றைக்கும் நான் கிளாமர் குயின்தான்.கிளாமராக நடிப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை’ என்கிறார் தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் முன்னாள் கனவுக்கன்னி சிம்ரன்.
‘பிரபாகரனு’க்கு தடை!: திருமா, சீமான் வேண்டுகோள்
சென்னை: ‘இலங்கைத் தமிழர்களை இழிவாக சித்திரித்து எடுக்கப்பட்டுள்ள பிரபாகரன் படத்தை வெளியிட அனுமதி தரக்கூடாது’ என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இயக்குநர் சீமான், நடிகர் சத்யராஜ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைப் பிரச்னை-தமிழக அரசு விழித்து கொள்ள வேண்டும்!-ராமதாஸ் அறிவுரை
சென்னை: ‘இலங்கைப் பிரச்னையை தீர்ப்பதற்கான நேரம் வந்து விட்டது. முதல்வர் கருணாநிதி இதை நழுவவிடக்கூடாது. அதற்காக எந்த விலையும் கொடுக்க நாங்கள் தயார்’ என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
சட்டசபையில் அ.தி.மு.க., தி.மு.க., காரசார விவாதம்
சென்னை: நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான தி.மு.க.விற்கும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.விற்கும் பல்வேறு விஷயங்களில் காரசார விவாதம் ஏற்பட்டது.
* சென்னை கிரிக்கெட்…தென் ஆப்ரிக்காவை புரட்டி எடுத்த இந்தியப் புயல் சேவாக்- 309 அவுட்டில்லை! லாராவின் சாதனையை முறியடிப்பாரா நாளை?
Wednesday, 26 Mar 2008
நான் யாரையும் கடத்தவில்லை!
அப்பாவி(?) நடிகை புளோராவின் புலம்பல்
சென்னை : ஏழைப்பெண் ஸ்ரீலதாவை தான் கடத்தவில்லை என்றும் பாஸ்போர்ட், விசா என எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தும் தான் தண்டிக்கப்பட்டுவிட்டதாகவும், நீதிமன்றத்தில் தனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புவதாவும் போலி விசா வழக்கில் கைதான நடிகை புளோரா நேற்று பத்திரிகையாளர்களிடம் புலம்பினார்.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள்:தமிழக அரசாணை நிறுத்திவைப்பு- உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை : அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் முக்கிய பணிகளை வருவாய்த்துறை மூலம் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் எல்லையில் கம்பி வேலி! தமிழகக் கட்சிகள் கோரிக்கை
ஓகனேக்கல்: ஓகனேக்கல் பகுதிக்குள் கன்னடர்கள் அத்துமீறி நுழைவதைத் தடுக்க ஒகேனக்கல் எல்லையில் முள் கம்பி வேலியை அமைக்கவேண்டும் என்று ஓகனேக்கலில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஓகேனக்கல் திட்டம்: கர்நாடகா எதிர்ப்பு-மத்திய அரசு தலையிட வேண்டி சட்டசபையில் தீர்மானம்
சென்னை: ‘தர்மபுரி,கிருஷ்ணகிரி மக்களின் தாகம் தணிக்கவும் அப்பகுதி குடிநீர் ஆதாரங்களில் கலந்திருக்கும் புளோரைடு பாதிப்பில் இருந்து அம்மாவட்ட மக்களை மீட்டெடுக்கவும் போடப்பட்டுள்ள ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் கர்நாடக மாநிலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ..
ரூ.100 கோடியில் நூலகம்! அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் ஒப்பந்தம்
சென்னை: தமிழக அரசு சென்னையில் நூறு கோடி ரூபாய் செலவில் நவீன நூலகம் ஒன்றை அமைக்கிறது. இதற்கான கட்டட வடிவமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இன்று கையெழுத்தானது.
மே 14ஆம் தேதி வரை சட்டப்பேரவை: சபாநாயகர் ஆவுடையப்பன்
சென்னை: ‘மே மாதம் 14ஆம் தேதி வரை சட்டப் பேரவை கூட்டம் நடக்கும்’ என்று தமிழக சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.
சாட்சியை மிரட்டும் அழகிரி; உடந்தை கருணாநிதி!-ஜெ.,குற்றச்சாட்டு
சென்னை: முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான முத்துராமலிங்கத்தை மு.க.அழகிரி மிரட்டுகிறார். அவருக்கு முதல்வர் கருணாநிதி உடந்தையாக இருக்கிறார் என்ற கடுமையான குற்றச்சாட்டினை முன்வைத்திருக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சென்னை கிரிக்கெட்…அதிரடி சேவாக் 62 பந்தில் அரை சதம். வாசிம் ஜாபர்- 25. தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்ஸ் 540 ரன்கள். ஆம்லா - 159. இந்தியா முதல் இன்னிங்ஸ்- 82 - விக்கெட் இல்லை.
Tuesday, 25 Mar 2008
பிரபாகரன் பற்றி படமா?
சிங்கள இயக்குநர் மீது பாய்ந்த தமிழர் அமைப்புகள்
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து படம் எடுத்துள்ள சிங்கள இயக்குநரைக் கண்டித்து தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கும்பலில் இருந்த சிலரால் அந்த இயக்குநர் தாக்கப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு டிவி வெடித்து சிறுமி இறக்கவில்லை : தமிழக அரசு தரும் டிவி தரமானது - எல்காட் இயக்குனர் விளக்கம்
சென்னை: ”தமிழக அரசு வழங்கிய இலவச கலர் ‘டிவி’ வெடித்து சிறுமி சித்ரா இறக்கவில்லை. 20ஆயிரம் கிலோ வாட் வரை மின்சாரம் செலுத்தினாலும் இலவசகலர் ‘டிவி’ வெடிக்காது. இது சோதனை மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது” என ‘எல்காட்’ மேலாண்மை இயக்குனர் உமாசங்கர் தெரிவித்தார்.
விருது வீரன் அமீருக்கு விழா -சினிமாப் பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு
சென்னை: பருத்திவீரன் திரைப்படத்திற்காக ஜெர்மன் படவிழாவில் விருது வாங்கிய இயக்குநர் அமீருக்கு விழா எடுத்து பாராட்டுத் தெரிவிக்க சினிமாப் பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.
ஓகேனக்கல்…களத்தில் இறங்குகிறது அ.தி.மு.க., நாளை ஆர்ப்பாட்டம்!: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: ‘ஓகேனக்கல் மீது தேவையில்லாமல் உரிமை கொண்டாடும் கன்னட அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் ‘ என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பிரதமரைச் சந்தித்து நிவாரண உதவி கேட்பேன்!: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்
சென்னை: ‘மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு நிவாரண உதவி வழங்குமாறு பிரதமரைச் சந்தித்து கேட்டுக் கொள்வேன்’ என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
வெள்ள பாதிப்பிற்கு கூடுதல் நிவாரண உதவி -மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.
ஆன்லைன் வர்த்தகம்… தடை விதிக்காவிட்டால் போராட்டம்!: ராமதாஸ்
சென்னை: அன்றாடத் தேவைப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு காரணமான ‘ஆன்லைன்’ வர்த்தகத்தை தடை செய்யாவிட்டால் போராட்டம் நடத்த போவதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பூமி சூடாவதை தடுக்காவிட்டால்… கடல் தின்னக் கூடும்! சென்னைக்கு எச்சரிக்கை
சென்னை: எட்டு ஆண்டுக்குள் பூமி வெப்பநிலையை 2 டிகிரிக்குள் கட்டுபடுத்தாவிட்டால் சென்னை கடற்கரை மறைந்து நகரின் பல இடங்களில் நீர்புகுந்து விடும் என்று கிரீன்பீஸ் சுற்றுச் சூழல் அமைப்பு எச்சரித்து உள்ளது.
சேதுவை கெடுக்கும் கேதுக்கள்! ராஜகண்ணப்பன் வார்த்தை ஜாலம்
சென்னை: இன்று நடைபெற்ற சட்டசபை விவாதத்தின் போது பேசிய தி.மு.க., உறுப்பினர் ராஜகண்ணப்பன் சேதுத்திட்டத்தை கெடுக்க நினைக்கும் கேதுக்கள் சீக்கிரமே காணாமல் போகும் என்று பேசி அ.தி.மு.க.,பா.ஜ.க.,கட்சியினரை தன் வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்.
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தால் விமர்சிப்பதா? ராகுல்காந்தி கேள்வி!
Monday, 24 Mar 2008
கேட்காமலேயே கொடுத்த ஸ்ரீகிருஷ்ணா!
இரட்டிப்பாகப் போகும் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பரிந்துரைகள் அடங்கிய 6வது சம்பள கமிஷன் அறிக்கை நேற்று நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சமர்பிக்கப்பட்டது.
இது போதாது…! மத்திய அரசு ஊழியர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
சென்னை: மத்திய அரசின் 6-வது ஊதியக் குழுவின் அறிக்கையால் பல சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவித்துள்ளது.
பெண் நிருபர் கொலை வழக்கு ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு ஆயுள் தண்டனை!
டெல்லி: டெல்லி பெண் நிருபர் கொலை வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்ட, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை ஐ.ஜி., ரவிகாந்த் சர்மா உள்ளிட்ட நான்கு பேருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
என்னை பழி வாங்கவே இந்த வழக்கு! - நீதிமன்ற வாயிலில் விஜயகாந்த் பேச்சு
ஆற்காடு: ஆற்காடு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான வழக்கில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜரானார். அவரைக் காண கட்சித் தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். அவர்களைப் காவல்துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர்.
இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படுவோருக்காக மறுவாழ்வு ஆணையம்: ராமதாஸ் கோரிக்கை
சென்னை: ‘புயல், மழை, வெள்ளம் முதலான இயற்கை பேரழிவுகளால் மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிடவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் வசதியாக மாநில அளவில் ஒரு மறுவாழ்வு ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.
அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம் தற்கொலை
சென்னை: தி.மு.க.வை தோற்றுவித்தவரும் முன்னாள் தமிழக முதல்வருமான அண்ணாதுரையின் வளர்ப்பு மகன் டாக்டர் பரிமளம்(67) நேற்றிரவு தற்கொலை செய்து கொண்டார்.
இலங்கைத் தமிழர்களுக்காக பதவி விலகல்!- விஜய டி.ராஜேந்தர் அறிவிப்பு
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக போராட தனது மாநில தேசிய சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவர் பதவியை விட்டு விலகுவதாக லட்சிய தி.மு.க தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
எடியூரப்பாவை கைது செய்!-தமிழக விவசாயிகள் கோபம்
ஓகனேக்கல்: ‘ஒகேனக்கல் பகுதிக்குள் நுழைந்து ‘ஒகேனக்கல் நமதே’ என்று கோஷமிட்டு கன்னடர்களை தூண்டிவிட்டு அரசியல் குளிர் காண நினைக்கும் கர்நாடக பா.ஜ.க. தலைவர் எடியூரப்பாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும்’ என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடி மேல் அடி வாங்கும் விவசாயிகளும் கண்டுகொள்ளாத தி.மு.க. அரசும்!- ஜெயலலிதா தாக்கு
சென்னை: ‘அடி மேல் அடி வாங்கும் விவசாயிகளை அன்றைக்கும் இன்றைக்கும் கவனிக்காத தி.மு.க. அரசு கண்துடைப்பாக ஹேக்டேருக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு குறைந்தது ரூ. 10 ஆயிரமாவது நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும்’ என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.
மூன்றாவது அணியாக கம்யூனிஸ்ட்கள் போட்டியிட்டால் 3-வதாகக் கூட வர முடியாது: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
Sunday, 23 Mar 2008
சென்னை கிரிக்கெட்… வருணபகவான் வழிவிடுவாரா?
சென்னையில் கொட்டிக்கொண்டிருந்த கோடை மழை கொஞ்சம் விட்டிருக்கிறது. ஆனாலும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் பயமுறுத்திக்கொண்டிருக்கிறது.
பள்ளிக் கல்வி திட்டங்கள்… விஜயகாந்த் சொல்வது தவறு!: முதல்வர் கருணாநிதி
சென்னை: பள்ளிகளை சிறப்பாக நடத்த இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த விசேஷ திட்டமும் வகுக்கப்படவில்லை என்று விஜயகாந்த் சொல்வது தவறு என்றும் போடப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் பள்ளிகளை சிறப்பாக நடத்துவதற்கான விசேஷ திட்டங்கள்தான் என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
யாரைத்தான் நம்புவதோ? - விஜயகாந்த் ஆதங்கம்
சென்னை: ‘எதையும் படிக்காமல் பொத்தாம் பொதுவில் புழுதி வாரித் தூற்ற வேண்டிய அவசியம் தே.மு.தி.க.விற்குஇல்லை. தமிழக மக்கள் எதிர்பார்க்கும் கல்விப் பிரச்னை தீர்ந்தால் எனக்குப் போதும்’என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஜெ.ஜெ டிவி வழக்கு…சசிகலா, பாஸ்கரனுக்கு ரூ.18 கோடி அபராதம்!
சென்னை:சசிகலா மற்றும் அவரது அண்ணன் மகன் பாஸ்கரனுக்கு, அன்னிய செலாவணி மோசடி வழக்கில், ரூ.18 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் கி.வீரமணி!
சென்னை: திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சர் பொன்முடிக்கு நெஞ்சுவலி
சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் நடந்த நிவாரண உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மழை, வெள்ளம் : தமிழக அமைச்சர்கள் நேரில் ஆய்வு!
சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் தமிழக அமைச்சர்கள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
கச்சத் தீவை மீட்க நீதிமன்றத்தை அணுக தமிழக பா.ஜ.க முடிவு: இல.கணேசன் தகவல்
சென்னை:கச்சத் தீவை மீட்க தமிழக பாரதிய ஜனதா கட்சி நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
வாரிசுக்கு பதவியில்லை!- சரத்குமார் அறிவிப்பு
சென்னை: ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எந்தப் பதவியானாலும் இரண்டு முறைக்கு மேல் அதில் அமர மாட்டோம். எனது குடும்பத்தைச் சேர்ந்த யாரையும் பதவியில் அமர்த்த மாட்டேன்’ என்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
பாகிஸ்தான் பிரதமராக கிலானி நாளை பதவியேற்பு.
Saturday, 22 Mar 2008
ஜெ., அனுப்பி வைத்த ஜோ…’தீ’!-கருணாநிதி
சென்னை: அ.தி.மு.க.,விலிருந்து சில தினங்களுக்கு முன்பு விலகிய வக்கீல் ஜோதி, முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.
ஆளுநருக்கு அப்போலோவில் இதய அறுவை சிகிச்சை
சென்னை: தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு நேற்று இருதய அறுவை சிகிச்சை நடந்தது.
தண்ணீரில் தத்தளிக்கும் தமிழகம் …பலி 11!
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மழை சேதங்களுக்கு நிவாரணம் : முதல்வர் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசிடம் ‘மடிப்பிச்சை’ ஏந்தும் தி.மு.க.,! - பட்ஜெட் பற்றி வைகோ குத்தல்
சென்னை: ‘நதி நீர்ப் பிரச்னைகளில், மத்திய அரசில் இடம் பெற்றுள்ள தி.மு.க., ஒப்புக்கு சப்பாணியாக, இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கக் கூடாது என்று மடிப்பிச்சை ஏந்துவது வெட்கக் கேடானது’ என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஜின்னாவைப் புகழ்ந்ததில் வருத்தம் இல்லை: அத்வானி.
Friday, 21 Mar 2008
ஹச் ஹச்…
சலுகை மழையில் நனையும் அரசு ஊழியர்கள்!
சென்னை: ஜலதோஷம் பிடிக்காத குறையாக சலுகை மழையில் அரசு ஊழியர்களை நனைய விட்டிருக்கிறது தமிழக அரசு. இவ்வாண்டு தமிழக நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப் படி 6 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முட்டுக்கட்டைகளைக் கடந்து, வளம் பெருக்கித் தமிழகம் வாழும் வலிமை பெற நதிகளை இணைக்கும் திட்டம்!
சென்னை: காவிரி ஆற்றை வைகையுடன் இணைக்கும் திட்டத்தில் முதல் கட்டமாக கட்டளை என்ற இடத்தில் புதிய தடுப்பணை கட்டப்படவுள்ளது.
சிறந்த பட்ஜெட் என்று தெரிந்திருந்தால் அ.தி.மு.க., வெளிநடப்பு செய்திருக்காது:முதல்வர்
சென்னை: ‘சிறந்த பட்ஜெட் என்று தெரியாததால் தான் அ.தி.மு.க.,வினர் தொடக்கத்திலேயே வெளிநடப்பு செய்து விட்டனர்’ என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
நிதிநிலை வலுவாக உள்ளது: ஞானதேசிகன்
சென்னை: ‘தமிழகத்தின் நிதிநிலை வலுவாக உள்ளது. அண்மைக் காலத்தில் முதல்முறையாக வருவாய் கணக்கில் உபரி காட்டப்பட்டுள்ளது’ என்று நிதித்துறை செயலாளர் ஞானதேசிகன் தெரிவித்தார்.
தமிழக நிதி நிலை அறிக்கை…அர்த்தமற்ற வார்த்தைகளின் அணி வகுப்பு!: ஜெயலலிதா அதிருப்தி
சென்னை: ‘தமிழக நிதி நிலை அறிக்கை அர்த்தமற்ற வார்த்தைகளின் அணி வகுப்பு மட்டுமே, அதனால் யாருக்கும் எந்தப்பலனும் ஏற்படப்போவதில்லை’ என்று தனது அதிருப்தியை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
எதிர்கால வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்காத நிதி நிலை அறிக்கை!: ராமதாஸ்
சென்னை: மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், வறுமை ஒழிப்புக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்குவதற்கும், இளைஞர்களின் எதிர்கால வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்காத நிதி நிலை அறிக்கை இது!’ என்று பா.ம.க., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை-விஜய்காந்த்
சென்னை: ‘தமிழக பட்ஜெட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவைதான் தொடர்கின்றன. சில நலவாரியங்களை தவிர மக்களுக்கான புதிய திட்டங்கள் எதுவும் இல்லை’ என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தமிழக நிதி நிலை அறிக்கை…
தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம்:
போலி விசா புளோரா…
பத்திரிகையாளர்களுடன் மோதிய பாதுகாவலர்கள்!
சென்னை: போலி விசா மூலம் அமெரிக்கா செல்ல முயன்று மோசடி வழக்கில் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளியே வந்த நடிகை புளோரா, உயர்நீதிமன்ற நிபந்தனைப்படி நேற்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது அவருடன் வந்தவர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநில முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும்!: அன்புமணி


































சுருக்,நறுக் செய்திகள்


சுருக், நறுக் செய்திகள்
