Sunday, 31 Jan 2010
பெயர், புகழுடன் இருக்க ஆசை. ஆனால் லட்சியம் இல்லை! : நயன்தாரா

தனக்கு லட்சியமே கிடையாது என்று நயன்தாரா கூறியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளில் நடித்து வரும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர மேலும் கூறியுள்ளதாவது:
“நான் திரையுலகிற்கு வந்தது டிசம்பர் 2003. திரைத்துறைக்கு வருபவர்கள் பெயரும் புகழும் பெற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். முன்னணி நடிகர் நடிகையாக வேண்டும் என்று எ ண்ணுவார்கள். எனக்கு அப்படி எந்த ஆசையும் கிடையாது. ஒரே ஒரு படம் நடித்துவிட்டு போய்விட த்தான் ஆசைப்பட்டேன். ஆனால், சினிமா என்னை இழுத்துவிட்டது. நானே எதிர்பார்க்காத அளவுக்கு பெயர், புகழ், அந்தஸ்து கிடைத்து விட்டது. சினிமாவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். குறிப்பிட்டு கூறும்படி எந்த லட்சியமும் எனக்கில்லை. நல்ல படங்களில் நடிக்க வேண்டும். பெயர், புகழுடன் இருக்க வேண்டும் அவ்வளவுதான்” என்று கூறியிருப்பவர்,
தன்னுடைய திருமணம் குறித்த கேள்விக்கு, “அது எப்போது, யாருடன் நடக்கும் என்று எனக்கு தெரியாது. ஆனால், சரியான நேரத்தில் நடக்கும். எப்போது நடந்தாலும் என் திருமணம் அம்மா அப்பா சம்மதத்துடன்தான் நடக்கும்” என்று பதில் அளித்திருக்கிறார்.
Sunday, 31 Jan 2010
காதலியைத் தேடும் காதலன்

மோசர் பேர் நிறுவனத் தயாரிப்பான ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் ஜெய், நந்தகி, தியானா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மீரா கதிரவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து மீரா கதிரவன் கூறுகையில், “காதலியைத் தேடி செல்லும் வாலிபனின் கதை இது. மூன்று வித பருவங்களில் ஜெய் வருகிறார். திருநெல்வேலி பகுதியில் கதை நடக்கிறது. இந்த படத்து கதாபாத்திரங்கள் படு யாதர்த்தமானவைகளாக இருக்கும். நம்முடைய உறவினர்கள் போல, நம்முடன் பயணிப்பவர்கள் போல, நண்பர்கள் போல. மனதைத் தொடுகிற அல்லது பாதிக்கிற வாழ்க்கை படத்தில் இருக்கும்” என்றார்.
Sunday, 31 Jan 2010
ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு கிராமி விருதுகள்

இந்திய இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு கிராமி விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த பாடல் மற்றும் சவுண்ட் ட்ராக் ஆகியவற்றுக்காக இந்த விருதுகள் தரப்பட்டன.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிறு மாலை (இன்று காலை) நடைபெற்ற 52ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் குல்சார் எழுதி, சுக்விந்தர் பாடிய ‘ஜெய் ஹோ’ பாடல் சிறந்த திரைப்படப் பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இசை சேர்ப்பிற்கான விருதும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.
விருதுகளை பெற்றுக்கொண்ட பின்னர் மேடையில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான், “இந்தியாவுக்கு மீண்டும் முன்னிலை கிடைத்துள்ளது. அதிசயிக்கத்தக்க வகையில் இரண்டு கிராமி விருதுகளை பெற்றிருக்கிறோம். உங்கள் பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்திருக்கிறார். அவர்உங்களை
ஆசீர்வதிக்கவும் செய்வார்” என்றார்.
Friday, 29 Jan 2010
பாட்டில் மட்டும் கவர்ச்சி : நவ்னீத் அறிவிப்பு

பாடல் காட்சிகளில் மட்டும் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்திருப்பதாக நவ்னீத் கவுர் கூறியுள்ளார்..
அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாசுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நவ்னீத் கவுர். பாடல் காட்சிகளில் மட்டும் கவர்ச்சி என்கிற கொள்கை குறித்து அவர் வாய் திறக்கையில்,
“அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் வரும் பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். குடும்பபாங்கான வேடங்களில தோன்றி, பாடல்காட்சிகளில் மட்டும் கவர்ச்சியாக நடிப்பதை என்னுடைய கொள்கையாக வைத்துள்ளேன். தமிழில் முதல் படமான அரசாங்கம் படத்தில் பாடலிலும் குடும்பபாங்காகத்தான் நடித்திருந்தேன். இனி அதுபோல நடிக்க மாட்டேன். ரசிகர்களின் விருப்பத்திற்காக குடும்பபாங்கும் கவர்ச்சியும் கலந்து நடிக்கப்போகிறேன்” என்று கூறியுள்ள நவ்னீத் கவுருக்கு அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாசின் மனைவியாக வேடம். இதில், நகைச்சுவையிலும் கலக்கி இருப்பதாகக் கூறும் அவர் தெலுங்கு மற்றும் பஞ்சாபி மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
Friday, 29 Jan 2010
எனக்கொரு புதுப்பாதை கிடைக்கும் : இசையமைப்பாளர் தமன் நம்பிக்கை

குத்துப்பாட்டு இன்றைய தேவை என்கிறார் நடிகர் தமன், ஸாரி இசையமைப்பாளர் தமன். பாய்ஸ் படத்தில் நடித்த தமன் இப்போது பரபரப்பான இசையமைப்பாளர். தமிழில் அய்யனார், முன்தினம் பார்த்தேனே தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் பிருந்தாவனம், ரவி தேஜா நடிக்கும் படம் என்று பரபரக்கின்றார் தமன்.
இசையில் மூழ்கி விட்டால் அதை தாண்டி வெளியில் வர முடியாது என்று பேட்டியளித்திருக்கும் தமன் அதனால் தான் நடிகர் தமன் காணாமல் போய்விட்டார் என்கிறார். இசையில் புதுமையை ப் புகுத்த எண்ணும் தமன், அதற்கான முன்னோடிகளாக இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மானை கருதுகிறார். இவர்களுடைய இசையைக் கேட்டுதான் இசையமைப்பாளர் ஆனதாகக் கூறும் தமன், தனக்கென்று புதுப்பாதை அமையும். அதற்கேற்ற இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் வேண்டும் என்கிறார்.
குத்துப்பாட்டா மெலடியா.. எது உங்க சாய்ஸ் என்ற கேள்விக்கு பதிலளித்த தமன், “ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இசையமைப்பதுதான் எங்கள் வேலை. இன்றைக்கு எல்லாவிதமான பாடல்களும் தேவையாக இருக்கிறது. சில படங்களில் வெவ்வேறு விதமான பாடல்கள் அமையாவிட்டாலும் ஒரு குத்துப்பாட்டாவது நிச்சயம் வேண்டும் என்று நினைக்கிறேன். ஆயிரம் மெலடிக்கள் நெஞ்சுக்குள் நின்றாலும் நம்மை அறியாமலேயே ஆட வைப்பது குத்துப்பாட்டுதானே” என்கிறார்.
முன்னணி இசையமைப்பாளரான ஹாரீஸ் ஜெயராஜ் வாயால் தனக்குப் பிடித்த இசையமைப்பாளர் என்று ஷொட்டு வாங்கியிருக்கும் தமன் தனி ஆல்பம் செய்யும் முனைப்பிலும் இருக்கிறார்.
Friday, 29 Jan 2010
‘பேரரழி’ நமீதா!
சமீபத்தில் வெளிவந்த ‘நில் கவனி என்னை காதலி’ படத்தில் நமீதா வித்தியாசமானதொரு வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கிய பிரமோத், பப்பன் ஆகிய இருவரும் மீண்டும் நமீதாவை நாயகியாகப் போட்டு படமெடுக்கிறார்கள். படத்திற்கு ‘பேரரழகி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. படத் தலைப்பிற்கு ஏற்ப, நமீதாவின் அழகை வர்ணிக்கும் வகையில் இந்தப் படம் இருக்குமாம்.
அவர் அழகு வடியும் வரை விடமாட்டார்கள் போலிருக்கிறது!
Friday, 29 Jan 2010
அசலுக்கு யு/ஏ சான்றிதழ்
‘அசல்’ அசலைத் தாண்டி அள்ளும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் ஏகன் தந்த ஏமாற்றத்தில் இருந்த அஜீத். இதில், அஜீத் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். கதாநாயகிகளாக சமீரா ரெட்டியும் பாவனாவும் நடிக்கின்றனர். சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில், பிரபு தயாரிக்க, சரண் இயக்கியிருக்கும் அசல் படப் பணிகள் முழுதாக முடிவடைந்து சென்றவாரம் தணிக்கைத் துறையினர் பார்வைக்குப் போயிருக்கிறது. படத்தில் இடம் பெறும் சில காட்சிகள் குழந்தைகள் காணக்கூடாதவை என்பதால் அந்தக் காட்சிகளை நீக்கச் சொல்லியிருக்கிறார்கள். படத்திற்கு அவை முக்கியம் என்பதால் மறுத்துவிட்டார் இயக்குநர் சரண். அதனால் தணிக்கை அதிகாரிகள் ‘அசல்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். அசல் பிப்ரவரி 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Friday, 29 Jan 2010
சித்தார்த் ஜோடியாக இந்தியில் அறிமுகமாகிறார் பத்மப்ரியா
இந்திக்கு போகும் குஷியில் இருந்தாலும் தமிழை மறப்பதாக இல்லை பத்மப்ரியா. தமிழ், மலையாள படங்களில் நடித்து வரும் பத்மப்ரியா, சித்தார்த்துக்கு ஜோடியாக ‘ஸ்ட்ரிக்கர்’ என்ற இந்திப் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
“பாலிவுட்டுக்கு போறது எல்லா நடிகைகளின் கனவுதான். இந்திய அளவில் நம்மை கொண்டு சேர்க்கும் தளம் அது. அதற்காக நான் கோலிவுட்டை காலி பண்ணிடுவேன்னு அர்த்தமில்லை” என்கிறார் பத்மப்ரியா.
பழசிராஜாவுக்குப் பிறகு இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் படமும் கன்னடத்தில் தமாசு படமும் தனக்கான திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடியவை எனக் காத்திருக்கிறார் பத்மப்ரியா
Wednesday, 27 Jan 2010
ரம்பா - கனடா தொழிலதிபர் நிச்சயதார்த்தம்

நடிகை ரம்பா - கனடா தொழிலதிபர் இந்திரன் நிச்சயதார்த்தம் சென்னையில் நேற்று நடந்தது. ரம்பாவுக்கு மோதிரம் மாட்டிவிடுகிறார் இந்திரன். ரம்பாவும் இந்திரனும் காதலித்து திருமணம் செய்து கொள்கி்ன்றனர். இதன் அடையாளமாக முதலில் இந்திரனின் நிறுவனமான மேஜிக் உட்ஸின் விளம்பரத் தூதுவராக ரம்பா நியமிக்கப்பட்டார். அடுத்ததாக, தன்னுடைய காதல் பரிசாக ரம்பாவுக்கு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை பரிசளித்தார் இந்திரன்.
ரம்பாவின் இயற்பெயர் அமிர்தா. சினிமாவுக்காக ரம்பாவாக மாறிய அவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்கள் திருமணம் வரும் மார்ச் 27 ஆம் தேதி நடைபெறக்கூடும் என ரம்பாவின் குடும்ப வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Wednesday, 27 Jan 2010
‘கஞ்சா’ கருப்பு திருமணம்

நடிகர் ‘கஞ்சா’ கருப்பு திருமணம் சிவகங்கை அருகே நேற்று காலை நடந்தது. இதில் ஏராளமான திரைத்துறையினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகர் ‘கஞ்சா’ கருப்பு ராம், பிதாமகன், தாமிரபரணி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இவரது சொந்த ஊர் சிவகங்கை. இவருக்கும், சிவகங்கை அருகே கட்டாணிபட்டியைச் சேர்ந்த பிசிதெரபிஸ்ட் டாக்டர் சங்கீதாவுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இவர்களது திருமணம் நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் நேற்று காலை 10.30 மணிக்கு நடந்தது. இதில் இயக்குநர் சுந்தர்ராஜன், நடிகை ஷகீலா, நகைச்சுவை நடிகர்கள் போண்டாமணி, மொட்டை ராவ், பெஞ்சமின், சுப்புராஜ், சின்ராஜ், விஜயகணேஷ், கதை பட இயக்குநர் ராஜன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். நேற்று மதியம் சிவகங்கை&திருப்பத்தூர் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது . இதில் சினிமா துறையை சேர்ந்த பலரும், ரசிகர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
































