» kollywood .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Archive for the 'kollywood' Category


Monday, 22 Feb 2010

Tanushree Dutta admires Prakash Raj

பிரகாஜ்ராஜின் நடிப்பைக் கண்டு பிரமித்த தனுஷி தத்தா
tanushree-dutta.jpg

தீராத விளையாட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதில் விஷாலுக்கு சந்தோஷமோ இல்லையோ, அவருடைய ப்ளேபாய் விளையாட்டுக்கு தோதாக செட் ஆன மூன்று நாயகிகளும் குஷியாக இருக்கிறார்கள். குறிப்பாக தனுஸ்ரீ தத்தாவுக்கு சந்தோஷமோ சந்தோஷம். அவர் வாயாலேயே கேளுங்களேன்.

“இந்தப் படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரம் பற்றி சொன்னதுமே பிடித்துவிட்டது. இதில் இன்னும் இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள் என்பதை யும் அப்போதே சொல்லிவிட்டார்கள். படப்பிடிப்பில் மூவரும் நல்ல தோழிகளாகிவிட்டோம். எங்களுக்குள் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அவர்களுடன் இணைந்து நடித்தது புது அனுபவமாக அமைந்தது. பிரகாஷ்ராஜின் தங்கையாக நடித்த எனக்கு, அவருடைய நடிப்பைப்பார்த்து பிரமிப்பாக இருந்தது. தெரியாத மொழியில் நடிக்கும்போது சிரமமாகத்தான் இருக்கும். என்னுடைய கேரக்டரை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்திருந்ததால், எளிதாக இருந்தது. தொடர்ந்து நல்ல கேரக்டர்களாக அமைந்தால் தமிழில் நடிப்பேன் என்று சொல்கிறார் தனுஷி தத்தா. ஐயையோ அப்போ அடிக்கடி உங்களைப் பார்க்க முடியாதுன்னு சொல்லுங்க.

Tags:


Monday, 22 Feb 2010

Nandhaki, heroine from Kanchipuram

காஞ்சிபுரத்து கதாநாயகி

அவள் பெயர் தமிழரசி பட நாயகி நந்தகிக்கு விமானபணிப்பெண்ணாகவோ, கம்யூட்டர் இன்ஜினீயராகவோ, பேஷன் டிசைனராகவோ ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாம். எதிர்பாராதவிதமாக ‘அவள் பெயர் தமிழரசி’ மூலம் திரைத்துறைக்கு வந்துவிட்டார். இருந்தாலும் பரவாயில்லையாம் அவருக்கு. விரும்பியது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததை விரும்பவேண்டும் என்ற நோக்கத்தில் சந்தோஷமாகவே இருக்கிறாராம் அவர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இவர் கதாநாயகி ஆன கதை வித்தியாசமானது. +2 தேர்வு எழுதிவிட்டு சாமி கும்பிட குடும்பத்துடன் கோயிலுக்குப் போனரை பார்த்துவிட்ட இயக்குநர் மீரா கதிரவன் உடனே ‘நடிக்கிறியா’ எனக் கேட்டிருக்கிறார். முதலில் விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டாலும், பிறகு சம்மதித்திருக்கிறது குடும்பம்.

டிரைலருக்காகக் காட்சிகள் எடுக்கப்பட்டபோது காமிரா கண்டு பயந்த நந்தகிக்கு போகப்போக காமிரா பயம் சுத்தமாகப் போய்விட்டதாம். பின்னே வெட்கமே போகும்போது பயம் போகாதா என்ன?

Tags:


Sunday, 21 Feb 2010

Ajith speech on CM’s function

முதல்வர் விழாவில் அஜீத் என்ன பேசினார்!? : விடியோ
rajini-ajith.jpg

‘பாசத் தலைவனுக்குப் பாராட்டு விழா என்ற பெயரில் முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் எடுத்த விழாவில் அஜீத் பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ள அந்த விழா நிகழ்ச்சியில் அஜீத்தின் பேச்சு இடம் பெறாது என்றும் கூறப்படுகிறது. அந்த மேடையில் அப்படி என்னதான் பேசினார் அஜீத்? நீங்களே பாருங்கள்…

விடியோ:

Tags: , ,


Sunday, 21 Feb 2010

Film industry guide Rajini and Aijth to ask apology

ரஜினி, அஜீத் மன்னிப்பு கேட்க வேண்டும் :
திரைப்பட சங்கங்களின் கூட்டறிக்கை

police-protection-outside-actor-ajith-kumars-house-in-chennai.jpg

ஜீத் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் தமிழ்த் திரையுலகின் ஒற்றுமை காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு திரைப்பட சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து திரைப்பட சங்கங்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்,

‘தமிழ்த் திரையுலகம் சார்பில் கடந்த பிப்.6 - ம் தேதி நடைபெற்ற விழாவில் அஜித்குமாரின் உண்மையற்ற பேச்சு, திரையுலகினர் அனைவரையும் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே அவர் தமிழ்த் திரைப்படத்துறையினரிடம் நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும்.

நடந்து முடிந்த விழாவில் நடிகர் அஜித்தின் பேச்சுக்கு பல நாள்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ‘அவரது தைரியத்தைப் பாராட்டுகிறேன்’ என்று கூறினார். இது பல்லாயிரக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த மன உளைச்சலையும் மனக்கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகையால் அவருக்கு ‘தொழில் ஒத்துழையாமை செய்வோம்’ என்ற அளவிற்கு வருத்தமான சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால் திரையுலகில் சுமுக நிலைமை ஏற்பட வேண்டுமென தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்த முடிவைக் கைவிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தது.

திரையுலகில் அமைதி ஏற்பட வேண்டுமென, அவர்களின் ஆலோசனையை ஏற்று தொழிலாளர்கள் மனவேதனையில் இருந்தாலும் மறுபரிசீலனை செய்து நடிகர் ரஜினிகாந்துக்கு தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்தப் பிரச்னையில் சுமுகமாகப் பேசி முடிவு எடுக்கப்பட்டதால் இனி யாரும் இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக தனிப்பட்ட முறையிலோ அல்லது அமைப்புகளின் சார்பிலோ எந்தவொரு அறிக்கையும் பேட்டியும் கொடுக்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டுக் கலந்தாய்வுக் கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் ராம.நாராயணன் உள்ளிட்ட பலரும் நடிகர் சங்கம் சார்பில் ராதாரவி, கே.ஆர்.செல்வராஜ் ஆகியோரும் பெப்சி அமைப்பு சார்பில் அதன் தலைவர் வி.சி.குகநாதன், விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் கலைப்புலி ஜி.சேகரன், திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் பன்னீர்செல்வம், இயக்குநர் சங்கம் சார்பில் ஆர்.கே.செல்வமணி, விக்ரமன் உள்ளிட்டோரும் தென்னிந்திய பத்திரிகை தொடர்பாளர் சங்கம் சார்பில் என்.விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல், சிங்காரவேலு, ரியாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags: , , ,


Sunday, 21 Feb 2010

TMS sings songs on Madurai stage

tms.jpgஎன் குரலை ரசித்து, மயங்கிய செடி, கொடிகள் : டி.எம்.எஸ். உற்சாகப் பேச்சு

டல் நலம் தேறிய பிறகு, மதுரை காந்தி அருங்காட்சியத்தில்நடந்த இசை நிகழ்ச்சியில் பழம்பெரும் பாடகர் டி.எம். செளந்தரராஜன் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாகப் பாடினார்.

பழம்பெரும் பாடகர் டி.எம். செளந்தரராஜன் கடந்த வாரம் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் தேறிய பின், இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் நேற்று முன்தினம் மதுரை நகரம் வந்தார்.

டி.எம். செளந்தரராஜன் ரசிகர் மன்றத்தினர் சார்பில் ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக காந்தி அருங்காட்சியகத்தில் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது மேடையேறிய டி.எம்.எஸ். ரசிகர்கள் மத்தியில் உற்சாகமாகப் பாடினார்.

நிகழ்ச்சி தொடங்கும் முன் மைக் பிடித்த அவர்,

“மீனாட்சி அம்மன் அருளாலும், முருகப்பெருமான் அருளாலும் மறுபடியும் பிறந்து  வந்துள்ளேன். எமனுடன் போராடி மீண்டு வந்துள்ளேன். மறுபடியும், மறுபடியும் நிறைய பாடல்களைப் பாட வேண்டும். என் மூச்சு உள்ள வரை பாடிக்கொண்டே இருப்பேன்.

ஒவ்வொரு ஊரிலும், தெருக்களிலும் என் பாடல்கள் ஒலித்தபடியே உள்ளன. புதிய நம்பிக்கையுடன் நிமிர்ந்து நிற்கிறேன்.

நான் 2 ஆயிரம் பக்தி பாடல்கள் பாடியுள்ளேன். இறைவன் இன்னும் பாட வைப்பான். சிகாகோ நகரில் செடி, கொடிகள் மூலம் என்னுடைய பாடல்களை ஆராய்ச்சி செய்துள்ளனர். அவையெல்லாம் மயங்கி ரசித்ததாகச் சொல்கிறார்கள். ரசிகர்களின் வாழ்த்துகளால் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளேன்” என்றார் டிஎம் செளந்தரராஜன்.

Tags: , ,


Sunday, 21 Feb 2010

Ajith kumar rejects to ask apology

முதல்வர் மேடையில் முழக்கம் : மன்னிப்பு கேட்க அஜீத் மறுப்பு

ajith-with-wife-shalini.jpg

‘முதல்வர் பாராட்டு விழாவில் பேசிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று நடிகர் அஜித் கூறியுள்ளார்.

‘பாசத்தலைவருக்கு பாராட்டு விழா’ என்ற பெயரில் முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் எடுத்த பாராட்டு விழாவில் நடிகர் அஜித் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அஜித் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும் திரைப்படத்துறை கூட்டுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித்,

“நான் திட்டமிட்டு பேசவில்லை. என் மனதில் தோன்றியதை பேசினேன். அதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் உண்மையைத்தான் சொன்னேன். இதை சினிமா உலகில் பலர் ஏற்றுக்கொண்டனர். சிலர் மட்டும் வேறுமாதிரி நினைக்கிறார்கள். நாட்டில் ஒவ்வொரு மக்களும் ஒரு அமைப்பில் இருக்கிறார்கள். அதே போல சினிமா உலகினரும் ஒரு அமைப்பில் இருக்கிறார்கள். இதிலும் பல பிரச்னைகள் இருக்கிறது. முக்கியமான அரசியல் பிரச்னைகள் வரும்போது அதை அரசும், அதற்குள்ள அமைப்புகளும் தீர்த்து கொள்ளும். அதற்காக நாம் சிறப்பான அரசியல் அமைப்புகளை பெற்று உள்ளோம். நமது சினிமா சகோதரர்களுக்குள் உள்ள பிரச்னைகளை நமது அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

முக்கிய பிரச்னைகளில் சினிமா சம்பந்தப்பட்டவர்களும் தலையிட வேண்டும் என்று ஒரு பிரிவினர் நினைக்கின்றனர். மற்றொரு பிரிவினர் இது சினிமாகாரர்களின் வேலை இல்லை என்று நினைக்கிறார்கள். இதற்குள் நாங்கள் சிக்கி இருக்கிறோம். நடிகர் ஒருவர் அரசியலில் காலடி எடுத்து வைத்தால் அவரை தடுக்கிறார்கள். அவரை பரிகாசம் செய்கிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? உடனே பிராந்திய உணர்வை கிளப்புகிறார்கள். சொந்த மண் எது? மண்ணின் மீது பற்றுதல் இருக்கிறதா? என்று பிரச்னை ஏற்படுத்துகிறார்கள். லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும்போது அவர் சிலவற்றில் குரல் கொடுக்கலாம். அவரை ஏன் தடுக்க வேண்டும்?

சொந்த மண் பிரச்னை எல்லா இடங்களிலும் கிளப்பப்படுகிறது. ரசிகர் ஒருவர் சினிமா பார்க்க அல்லது விளையாட்டுக்களை பார்க்க செல்லும்போது அவர் அருகில் இருப்பவர் யார்? அவர் என்ன நிறம்? என்ன மதம் என்ற எந்த கேள்வியும் எழுவது இல்லை. அதுதான் இந்த கலையின் சக்தி. நடிகர், விளையாட்டு வீரர் யார்? என்று ரசிகர்கள் பாகுபாடு பார்ப்பது இல்லை. எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று பார்ப்பது இல்லை. ரசிகர்கள் பல பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம். பல மொழிகளை பேசுபவராக இருக்கலாம் ஆனால் அவர்கள் விளையாட்டு, சினிமா மூலம் ஒன்றிணைக்கப்படுகிறார்கள்.

கடந்த சில நாட்களாக நடந்து வரும் பிரச்னைகளை பார்க்கும் போது மீண்டும் கேமரா முன்பு நிற்க வேண்டுமா? என்று மனதில் தோன்றுகிறது. சுதந்திரத்தை தடுப்பது போல இருக்கிறது. நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தால் சமூகத்தை பாதிக்கும் என்கிறார்கள். அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதே நடிகர் அரசியலுக்குள் நுழைந்தால், செல்வாக்கை பயன்படுத்தினால் உனக்கு இங்கு என்ன வேலை என்று கேட்கிறார்கள்.

நான் தமிழனாகவே வளர்ந்தேன். தமிழனாகவே என்னை கருதுகிறேன்.

நான் எனது 50வது படமாக தயாநிதி அழகிரி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்த படத்துக்கு பிறகு கார் பந்தயங்களில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்” என்று அஜித் கூறியிருக்கிறார்.

Tags: , ,


Friday, 19 Feb 2010

I will act till people to accept, says Rajini

ரசிகர்களும், மக்களும் விரும்பும்வரை நடிப்பேன் : ரஜினிகாந்த்

rajini-meets-cm.jpg

“ரசிகர்களும், மக்களும் விரும்பும்வரை நடிப்பேன்” என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் நேற்று காலை சந்தித்துப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

“திரை உலகத்தினர் முதல்வர் கருணாநிதிக்கு நடத்திய பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் தைரியமாக தனது கருத்துகளை வெளியிட்டார். அவரைப் பாராட்டுகிறேன். எனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். அவரை நேரில் சந்தித்து நன்றி கூறினேன்.

விழாக்களுக்கோ, போராட்டங்களுக்கோ நடிகர், நடிகைகள் கலந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.

ரசிகர்களும், பொது மக்களும் விரும்பும் வரை திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன்” என்றார் ரஜினிகாந்த்.

Tags:


Thursday, 18 Feb 2010

Jaguar Thangam files complaint on Ajith

தல’யைப் பற்றி பேசினால் தலை இருக்காதா? :
நடிகர் அஜீத் மீது ஜாக்குவார் தங்கம் புகார்

jaguar-thangam.jpg

டிகர் அஜித் மீது பிரபல சண்டைப்பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-

‘நான் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் அண்ணல் காந்தியடிகள் தெருவில் குடும்பத்தோடு வசித்து வருகிறேன். கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணி செய்து வருகிறேன். 18ம்தேதி (நேற்று) அதிகாலை சுமார் 2 மணியளவில் என் வீட்டின் கதவை யாரோ சத்தமாக தட்டினார்கள். எனது மகனும், சினிமா கதாநாயகனுமான சிரஞ்சீவி, கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது வெளியில் சுமார் 15 நபர்களுக்கு மேல் கையில் பட்டா கத்தி, உருட்டுக்கட்டை, அரிவாள், பெட்ரோல் குண்டு, கடப்பாரை போன்ற ஆயுதங்களோடு நின்றனர். நடிகர் அஜித்தின் மானேஜர் தலைமையில் அஜித் ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர், அஜித்தின் உதவியாளர், அஜித் ரசிகர் மன்றத்தின் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அடியாட்கள் வெளியில் நின்றனர். உருட்டுக்கட்டையால் வீட்டின் ஜன்னல்களை அடித்து எனது சாதி பெயரையும் சொல்லி ஏளனமாக திட்டினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த என் மகன் கதவை திறக்காமல் வீட்டிற்குள் இருந்தபடியே செல்போனில் என்னிடம் பேசினான்.

நான், ‘கதவை திறந்து வெளியில் வராதே, அவர்கள் எது வேண்டுமானாலும் செய்யட்டும் நாளை பார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறினேன். அந்த கும்பல் எனது வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்த காரையும் உடைத்து சேதப்படுத்தி விட்டார்கள். சேதமதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும். நீண்ட நேரம் அவர்கள் எனது வீட்டின் முன்பு நின்று என்னையும், எனது குடும்பத்தை பற்றியும் தாறுமாறாகத் திட்டி கோஷம் போட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நான் உடனடியாக மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து இந்த புகார் மனுவை கொடுக்கிறேன்.

சினிமாவில் நான் சேர்த்து வைத்திருந்த புகழை எல்லாம் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நண்பர் அஜித்தின் நேரடி தூண்டுதலின் பேரில் அவருடைய மானேஜர், ரசிகர் மன்ற, தென்சென்னை மாவட்ட செயலாளர், அஜித்தின் உதவியாளர் மற்றும் 15க்கும் மேற்பட்ட நபர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். அஜீத் ஏவி விட்ட ரவுடி கும்பலிடம் இருந்து என்னையும், எனது குடும்பத்தையும் காப்பாற்றுவது போலீசாரின் கடமையாகும். என்னையும், எனது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தி விட்டு சென்றவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’

என்று அந்த மனுவில் ஜாக்குவார் தங்கம் கூறியிருந்தார்.இந்த புகார் மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்

புகார் மனுவை கொடுத்து விட்டு வெளியே வந்த சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

“வார பத்திரிகை ஒன்றுக்கு நான் அளித்த பேட்டியில், ‘நடிகர் அஜித் தமிழ் காற்றை சுவாசிக்கிறார், தமிழ் தண்ணீரைக் குடிக்கிறார், தமிழ் மக்களின் சாப்பாட்டை சாப்பிடுகிறார், ஆனால் தமிழர்களுக்காக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்கிறார். இது எந்த வகையில் நியாயம்’ என்று கூறியிருந்தேன். இதற்கு பதில் அளித்து நடிகர் அஜித் இன்னொரு வார பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘நான் சினிமாவை விட்டு விலகப் போகிறேன்’ என்று கூறியிருந்தார். இப்போது அவருடைய மானேஜர் தலைமையில், அடியாட்களை ஏவி விட்டு எனது வீடு மீது தாக்குதல் நடத்தி காரையும் உடைத்துள்ளார். என் வீட்டுக்கு வந்த அடியாட்கள் ‘தலயைப் பற்றி பேசினால் தலை இருக்காது’ என்று மிரட்டியுள்ளனர். அஜித் மீதும், அவரது மானேஜர் மற்றும் அடியாட்கள் மீதும் போலீசார் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

Tags: , , , ,


Thursday, 18 Feb 2010

Ajith apologies to CM?

முதல்வரிடம் அஜீத் மன்னிப்பா?

ajith-meets-cm.jpg

முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகினர் எடுத்த பாராட்டு விழாவில் அஜீத் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சை பலரும் கண்டித்தனர். அதில் சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கமும் ஒருவர். இந்நிலையில், அஜீத் அனுப்பிய அடியாட்கள் தனது வீட்டை தாக்கியதாகக் கூறி அஜீத் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார் ஜாக்குவார் தங்கம்.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதியை நடிகர் அஜித் நேற்று மாலை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பினைத் தொடர்ந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அவ்வளவுதான். இதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் நான் பேசியதை பாராட்டியவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த விழாவில் பேசியது அத்தனையும் எனது சொந்த கருத்துக்கள்தான். யாரும் என்னை பேசச் சொல்லி தூண்டி விடவில்லை” என்றார். அப்போது குறுக்கிட்ட நிருபர்கள், “நீங்கள் சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?” என்று கேட்டனர். அதற்கு அஜித், “நோ கமெண்ட்ஸ்!” என்று மட்டும் கூறினார். “முதல்வரிடம் என்ன பேசினீர்கள்?” என்று கேட்டதற்கு, “இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான்” என்று கூறிவிட்டு புறப்பட்டு விட்டார்.

இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 10 மணி செய்திகளில் முதல்வர் கருணாநிதியும், நடிகர் அஜித்குமாரும் பேசிய பேச்சு தொடர்பான செயதியில், முதல்வரிடம் அஜித் பரிதாபத்தடன் மன்னிப்பு கேட்ட காட்சிகள் இடம்பெற்றன.

முதல்வருடன் அஜித் சந்திப்பு, அஜித் மீது போலீசில் புகார் ஆகிய சம்பவங்கள் அரசியல் வட்டாரத்திலும், சினிமா உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: , , , , ,


Wednesday, 17 Feb 2010

IPL - 2010 matches will not screen in theatres

திரையரங்கம் மைதானம் இல்லை: கிரிக்கெட் ஒளிபரப்ப தடை

திரையரங்கங்களில் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை திரையிடக்கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களை தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு இப்போட்டி நடந்தபோது சென்னையில் உள்ள சில திரையரங்கங்களில் கிரிக்கெட் போட்டி திரையிடப்பட்டது.
இதனால் தாங்கள் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் சிலர் தங்கள் சங்கத்தில் புகார் கூறினர். இதையடுத்து தற்போது தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம. நாராயணன், திரையரங்கங்களில் ஐபிஎல் போட்டிகளை திரையிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

“திரையரங்கங்களில் கிரிக்கெட் போட்டியை திரையிட்டதால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது .திரையரங்கம் என்பது திரைப்படங்களுக்குத்தான். கிரிக்கெட்டுக்கு மைதானம் இருக்கிறது. அதனால், திரையரங்கங்களில் கிரிக்கெட் போட்டியை திரையிட அனுமதிக்கக்கூடாது என்று, சென்னை நகர திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதனிடம் கூறியுள்ளோம். அவரும் திரையிட மாட்டோம் என உறுதி கூறியுள்ளார்” என்றார்.

Tags:


Page 1 of 7112345»...Last »