Category
Real hero Lawrence
நிஜ ஹீரோ ராகவா லாரன்ஸ்!

டான்ஸ் மாஸ்டர் - கம் - நடிகர் - கம் - டைரக்டர் ராகவா லாரன்ஸ் ஏழைக் குழந்தைகள் நலன் காக்க தனது லாரன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவது அறிந்ததே.
இதற்காக தன் உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதியையும் பிறர் உதவிகள் மூலமும் இந்த பணிகளை லாரன்ஸ் செய்து வருவது தெரிந்ததே. லாரன்ஸின் மனித நேய உணர்வைக் கண்டு நெகிழ்ந்த சென்னை பாடியை சேர்ந்த தொழில் அதிபர் ஜெயராமன் லாரன்ஸின் டிரஸ்ட்டுக்கு 20 லகரம் நன்கொடை கொடுக்க, அதில் தன் காப்பக குழந்தைகளின் பயணத்துக்காக பத்து லட்சம் ரூபாயில் வேன் ஒன்றை வாங்கி கொடுத்த லாரன்ஸ், மீதிப்பணத்தில் ஐம்பது குழந்தைகளுக்கு பீஸ் கட்டி சீருடையும் வாங்கி கொடுத்திருக்கிறார். அதை அடுத்து ஐம்பது குழந்தைகக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய 2-1/2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகனும் கண் மருத்துவருமான விஜய்சங்கரிடம் சமீபத்தில் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் பிறந்த நாளில் கொடுத்தார்.
அந்த காசோலையை பெற்றுக் கொண்ட டாக்டர் விஜய்சங்கர்; என் தந்தை ஜெய்சங்கர் மாதிரியே நண்பர் லாரன்ஸும் டிரஸ்ட் எல்லாம் உருவாக்கி ஏழை மற்றும் அனாதை குழந்தைகளுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார். அதனால் என் தந்தையின் பிறந்த நாளான இன்று ஐம்பது குழந்தைகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தேன். அதன் மருத்துவச் செலவுகளை லாரன்ஸ் ஏற்றுக் கொண்டிருப்பது என் தந்தையை நினைவு படுத்துகிறது என்று நெகிழந்தார் டாக்டர் விஜய்சங்கர்.
இந்த சிகிச்சை முகாமுக்கு நடிகர் ராதாரவி, சினிமா இயக்குநர் ஷக்தி சிதம்பரம் உள்பட பலரும் வந்திருந்து லாரன்ஸுக்கு வாழ்த்து தெரிவித்து சென்றது ஹைலைட்!
முதலில், சுமார் 35 குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை, அடுத்து 50 குழந்தைகளுக்கு கண் அறுவை சிகிச்சை என அசத்தும் ராகவா லாரன்ஸ் நிஜத்திலும் ஹீரோதான் என்றால் மிகையல்ல!
Meenakshi having good time

‘கருப்பசாமி குத்தகைதாரர்’ மீனாட்சி அந்தப்படம் வெளிவந்த சமயத்தில் தன் சொந்த ஊரான மும்பையில் இருந்ததால் நிறைய வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டார். ஆனால், இப்பொழுது அதற்காக வட்டியும் முதலுமாக சேர்த்து ‘பெருமாள்’, ‘ராஜாதிராஜா’, ‘4777′, ‘பள்ளிகொண்டபுரம்’ உள்பட அரை டஜன் படங்களில் மீனாட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
Link for Rajadhiraja gallery
Tags: 4777, kollywood, Meenakshi, Rajadhiraja, கருப்பசாமி குத்தகைதாரர், பள்ளிகொண்டபுரம், பெருமாள், மீனாட்சி, ராஜாதிராஜா
Sibiraj, Ravathi marriage soon

சப்தமில்லாமல் எட்டு வருடமாக காதலித்து வந்த ரேவதி என்ற சாஃப்ட்வேர் பெண்ணையே திருமணம் முடிக்க இருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார் சிபிராஜ். செப்டம்பர் மாதம்தான் திருமணம் என்றாலும் இருவீட்டு சம்மதத்தையும் பெற்றுவிட்ட சிபியை விட இந்த விஷயத்தில் அதிக சந்தோஷத்தில் இருப்பது அவரது அப்பா நடிகர் சத்யராஜ்தான். வேறென்ன? சினிமாவைக் காட்டிலும், காதலிலும், நிஜவாழ்க்கையிலும் மகன் ஜெயித்த பெருமைதான் சத்யராஜுக்கு!
Karan looking for different role

கரண் ‘கொக்கி’, ‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘காத்தவராயன்’ படங்களுக்குப்பின் மினிமம் கியாரண்டி ஹீரோவாகி விட்டார். அதனால் இப்போது படங்களை பார்த்த பார்த்து ஒப்புக் கொள்கிறார். அதுவும் வித்தியாசமான கதை, விதவிதமான பேக்ட்ராப் என்று கரண் கதை தேர்வு செய்யும் முறையே அலாதியானது. தற்போது ‘மலையன்’ படத்தில் மதுரை ‘பேக்ட்ராப்’பிலும், ‘கனகவேல் காக்க’ படத்தில் சென்னை வாசியாகவும், ‘கந்தா’ படத்தில் தஞ்சை தாதாவாகவும் நடித்து வருகிறார் கரண் என்றால் பாருங்களேன்.
Link for Kathavarayan movie gallery
Tags: karan, Kathavarayan, kollywood, கந்தா, கனகவேல் காக்க, கரண், கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன், கொக்கி, பேக்ட்ராப், மலையன்
Cheran, Padmapriya pair once more

சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பத்மபிரியா, ‘மிருகம்’ படத்தில் இயக்குநர் சாமியுடன் ஏற்பட்ட சண்டை, சர்ச்சைகளுக்குப்பின் இந்திப்படவுலகம் பக்கம் ஒதுங்கியிருந்தார். இப்பொழுது மீண்டும் ‘பொக்கிஷம்’ படத்தின் மூலம் சேரனின் ஜோடியாக நடிக்கும் பத்மபிரியா கூடவே மேற்படி படத்தில் சேரனிடம் அஸிஸ்டென்ட் இயக்குநராகவும் பணிபுரிந்து வருகிறார்.
Tags: cheran, kollywood, Padmapriya, சாமி, சேரன், தவமாய் தவமிருந்து, பத்மபிரியா, பொக்கிஷம், மிருகம்
Sadha back to tamil movie

இதுநாள் வரை கோடம்பாக்கத்தில் காணாமல் போயிருந்த சதா ‘நான் அவள் அது’ படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். ‘எதிரி’, ‘பிரியசகி’ படங்களை அடுத்து இந்தப் படத்திலும் சதாவுடன் ஜோடி சேருகிறார் மாதவன்.
Tags: kollywood, madavan, Nan aval athu, Sadhya, எதிரி, நான் அவள் அது, பிரியசகி, மாதவன்
Problem for Namitha

நமீதாவிற்கு உடம்பு ஊதிக் கொண்டே போவதால் கிளாமர் காட்சிகளில் ‘எக்ஸ்போஸ்’ பண்ணும் அளவிற்கு பாடல் காட்சிகளில் பர்ஃபாமெண்ட்ஸ், டான்ஸ் மூவ்மென்ட் எக்ஸட்ரா, எக்ஸட்ரா… விஷயங்கள் செய்ய முடியாமல் திணறுகிறாராம். இதன் விளைவு சரத்துடன் ‘1977′ படத்திற்கான நமீதா நடிக்கும் பாடல் காடசி ஒன்றில் ஸ்பீடு மூவ்மெண்ட் டான்ஸுக்கு சந்தியாரெட்டி எனும் மும்பை முகத்தை இறக்குமதி செய்துள்ளனர்.
Link for 1977 gallery
Tags: 1977, kollywood, Namitha, Semeera Reddy, சந்தியாரெட்டி, சரத், நமீதா
Ravichandran aim’s Jackie Jan

‘தசாவதாரம்’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் ஜாக்கிசான் நடிக்கும் ஒரு ஹாலிவுட் படத்தை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறாராம்.
Sathyam Telugu Audio Release

விஷால் - நயன்தாரா நடித்திருக்கும் ‘சத்யம்’ படம் தெலுங்கிலும் ‘சல்யூட்’ எனும் பெயரில் தயாராகி உள்ளது. ‘சல்யூட்’ படத்திற்கு ஹைதராபாத்தில் பிரமாண்ட விழா எடுத்து ஆடியோ ரிலீஸ் செய்தவர்கள், தமிழ் ‘சத்யம்’ படத்திற்கு சப்தமில்லாமல் ஆடியோ ரிலீஸ் செய்துள்ளனர். ஏன் இந்த ஒரு கண் வெண்ணெய், ஒரு கண் சுண்ணாம்பு கலாச்சாரம் விஷால்?!
Link for Sathyam Movie Gallery
Link for Sathyam Trailer
Link for Sathyam Songs Download
Tags: Audio release, kollywood, Nayan, Nayanthara, salute, Sathyam, vishal, ஆடியோ ரிலீஸ், சத்யம், சல்யூட், நயன்தாரா, விஷால்
Akil’s wish

ஷங்கரின் ‘எஸ்’ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ‘கல்லூரி’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அதன் அறிமுக நாயகர் அகில் 15 லகரங்கள் சம்பளம் கேட்டு வருகிறார். காரணம் ‘விகடன் டாக்கீஸ்’ தயாரிப்பில் தான் நடிக்கும் ‘வால்மீகி’ வெளி வந்ததும் என் ரேன்ஜே வேற….. என்று உதார் தான்.








































