Monday, 30 Mar 2009
சூப்பர் ஷாட்ஸ்!
சூப்பர் ஷாட்டுன்னு ஈஸியா சொல்லிடறோம். அதை எடுக்க நம்ம போட்டோகிராபர்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்கத் தெரியுமா?
சில நேரம் அவங்களே சூப்பர் ஷாட் ஆகிடறதுதான் சூப்பர்ங்க!

பல்டியடிச்சாக் கூட நடக்காதுன்னு சொன்னே. நான் கேட்டாதானே, இப்படி கவுத்துப்புட்டியே!

உன்னையும் எப்படி என் அளவுக்கு இறங்க வச்சுட்டேன் பார்த்தீயா!

எதையோ உயிரைக் கொடுத்து எடுக்கப் பார்க்கறாரு. இவர் உயிரு ஊஞ்சலாடிகிட்டு இருக்கறது தெரியாம.

ஏண்டா… சூப்பர் ஷாட்டுக்காக எங்களைப் படுத்தறீங்க.

மவனே இன்னும் கொஞ்சம் கிட்டவந்தேன்னு வச்சுக்கே ஒரே குத்துதான். லென்ஸ் பீஸ்பீஸாயிடும் ஜாக்கிரதை!

ஹலோ… அப்பா, அம்மாவை பக்கத்தில வச்சுக்கிட்டு கேமரா வழியே வேற ஃபிகரப் பார்த்து ஜொள்ளு விட்டது போதும். கழுத்து வலிக்குது இறக்கி விடு என்கிறதோ குழந்தை.

அப்படியே கவுந்து ஆத்தோட போயிட்டின்னா, ஆண்டனியோட ஐஸ்லாந்துக்கு பறந்துடுவேன்.

நாங்க எடுக்கறது போட்டோதான். ஆனா, எங்க பரம்பரை கலைகளான குங்ஃபூ, கராத்தே கலையெல்லாம் மறக்க மாட்டோம்.

ஒண்ண எடுக்க, இன்னொண்ண கவுக்கனுமா என்ன?

என்னதான் கத்துக்குட்டின்யினாலும் அதுக்காக இப்படியா?

தடுக்கி விட்ட புல்லை ஞாபகார்த்தமாக படம் எடுத்து வச்சுக்கிறாரோ!

அப்படி என்னதான் உள்ளே வச்சுருக்காருன்னு தெரியலையே!

மனுஷன போட்டோ எடுக்க நான் போதாதா?

சப்ஜெக்ட் எப்படி இருக்கோ, நான் அப்படிதான் போட்டோ எடுப்பேன்னு அடம்பிடிச்சா எப்படி?

நான் ஒண்ணும் இந்திய அரசியல் கட்சிகள் போல இல்ல, அடிக்கடி தாவ. இருந்தாலும் நீ சட்டுபுட்டுன்னு எடுத்துட்டு ஆளை விடுப்பா!
Thursday, 12 Mar 2009
43 ஆயிரம் ரூபாயுடன் மீனா ஓட்டம்!

மரியாதை திரைப்படத்திற்காக கடற்கரையில் ஓட்டப்பயிற்சி முடித்து நின்றுக் கொண்டிருக்கிறார் மீனா.
மீனாவைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது. அவர் பரபரப்பாக இயங்கிய காலத்தில் அவர் அணிந்து வந்த ஆடைகளுக்கு தனி மவுசு இருந்தது.
சேலை தான் அவருக்கு மிகவும் பாந்தமானது. திடீரென அவர், ‘நாம் இருவர் நமக்கிருவர்’ திரைப்படத்தில் படுகிளாமராக வந்ததை தமிழ்
ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் முழுக்க முழுக்க உடலை மூடிக்கொண்டு, அதில் கொஞ்சம் கவர்ச்சிகவுச்சி கலந்து வந்தால்
போதும் என்று ரசிகர்கள் நினைத்தார்கள்.
சரி, மீனா காலம் மலை ஏறிப்போச்சு.
இப்ப டிராக் ஷூட்ல தயாராக நின்றுகொண்டிருக்கும் மீனாவைப் பற்றி… ஸாரி, மீனாவின் ஆடைகள் பற்றி அலசுவோமா!
மீனா போட்டிருக்கும் டீசர்ட் அடிடாஸ் நிறுவனத் தயாரிப்பில் ‘வுமன் யுஏ கோச் போலோ’ என்ற பெயரில் கிடைக்கிறது. விளையாட்டு, உடற்பயிற்சி, ஓட்டப்பயிற்சியின் போது மிகவும் உதவும். வேர்வையை சர்ரென உறிஞ்சுக்கொண்டு நம்மை துர்நாற்றம் சூழாமல் கூலாக இருக்க வைக்குமாம். 12 வண்ணங்களில் கிடைக்கிறது. விலை ரூ.2,160/-

http://www.underarmour.com/shop/us/en/pid1001189?cid=SE|Yahoo
மீனா இடுப்பில் கட்டிக்கொண்டிருக்கும் ஜாக்கெட் சூப்பர்நோவா கோர் வின்ஸ் டாப்பர் ஜாக்கெட். விலை ரூ.3,850/-

மீனா அணிந்துள்ள டிராக் ஷூட் அடிடாஸில் கிடைக்கிறது. பேர்ட் ட்ராக் பேண்ட் என அழைக்கப்படும் இந்த பாலியஸ்டர் பேண்ட்டில் பாக்கெட்கள் கூட வரும். தேவையானதை வைத்துக் கொள்ளலாம். விலை ரூ.2,640/-

பொதுவாகவே திரைத்துறையினர் கொஞ்சம் ஹைடெக்கான ஐட்டங்களைத்தான் தங்கள் மேல் சார்த்துவார்கள் என்ற லாஜிக்படி பார்த்தால், மீனா கட்டிக்கொண்டிருக்கும் கைக்கடிகாரம் லுசியன் பிக்கார்டு ரகமாக இருக்கலாம். அதுவும் 14 காரட் தங்க கடிகாரம் இது. இதை கையி்ல் கட்டினால் நம் தோற்றம் மிளிரும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் (இந்த விலைக்கு மின்னலைன்னா எப்படி?). ஓட்டப் பயிற்சியின்போது இவ்வளவு காஸ்ட்லி கடிகாரம் தேவையா மீனா? விலை ரூ.29,712/-

மீனாவின் பாதங்களைப் பாதுகாக்கும் ஷூவின் எடை வெறும் 13 அவுன்ஸ்தானாம். காலில் இருப்பதே தெரியாமல் விசுவாசமாய் பாதங்களைப் பாதுகாக்கும். அடிடாஸில் பேரிகாட் விமன் ஷூஸ் எனக் கேடடால் கிடைக்கும். கருப்பு, வெள்ளை, நியான் மஞ்சள் வண்ணங்களில் வரும் இதன் விலை ரூ.5,040

http://www.tennis-warehouse.com/descpageWSADIDAS-AB5WY.html
ஆக, மீனாவின் காலை ஓட்டப்பயிற்சிக்கான காஸ்டீயும் செலவு ரூ.43,402/-
அதான் முதல்லயே சொன்னோம்… 43 ஆயிரம் ரூபாயுடன் மீனா ஓட்டம்னு, சரியா?
Friday, 20 Feb 2009
சூர்யா போல மின்னனுமா? 70 பெரிய ரூவா போதுங்க!

சூர்யா பார்ப்பதைப் பார்த்தால் வில்லனைப் பார்ப்பது போலில்லை. ஒருவேளை புது ஜோடி தமன்னா தக்கணுண்டு உடையணிந்துகொண்டு வந்துக் கொண்டிருக்கிறாரோ.
ஏங்க, தமன்னாவோட உடையைப் பத்தி எழுதாம, என் ஆடையையே பார்த்துக் கிட்டிருக்கிறீங்க என்கிறாரோ? என்னப் பண்றதுங்க திரைப்படங்களில் நடிகர்கள் தான் முழுக்கப் போர்த்திக்கிட்டு அடக்கஒடுக்கமாக நடிக்கிறார்கள். தமன்னா பத்தி எழுதினா ஒரு வரியில இல்ல முடிஞ்சுடும்.
அதனால் ‘அயர்ன்’ பண்ணாத சட்டைப் போட்டிருக்கும் ‘அயன்’ சூர்யாவை எடுத்துக்கிட்டோம்.
சூர்யா திரையில் நுழைந்த சமயத்தில் அவருடைய உடைகள் ஏதோ முதல் முதலாக பள்ளிக்குச் செல்லும் எல்.கே.ஜி., பாப்பா போட்டுச் செல்லும் சீருடைப் போல ஒரே மாதிரி இருக்கும்.
இப்பப் பரவாயில்லை. கல்லூரி லெவலுக்கு வந்துவிட்டார் அவர். அதுவும் அவர் காதலையும் குடும்பத்தையும் கதையில் மெயின்டெய்ன் செய்யும் விதம் அற்புதம்.
இப்ப மேட்டருக்குப் போலாமா? (சரவணா ஸ்டோருக்கு சிநேகா அழைப்பது போல உச்சரிக்கவும்)
சூர்யாவின் கண்கள் குளிர்ச்சியாக இருக்கிறதென்றால் அதற்கு காரணம் அவர் அணிந்திருக்கும் ரேபான் கண்ணாடிங்க.இந்தியாவில் எந்த மூலையில் கிடைத்தாலும் ரேபான் ஒரு இத்தாலி தயாரிப்பு. சூர்யா அணிந்திருக்கும் மாடல் லேட்டஸ்ட். நான்கு ஷேடுகளில் கிடைக்கும். விலை அதிகமில்லை ஜெண்டில்மென் ரூ.5,734 மட்டுமே.

உள்ளே டைட்டாக ஒரு பனியன் போட்டிருக்கார் பாருங்க. அதைப் போட்டா குப்பத்து குப்புசாமியும் கும்முன்னு தெரிவார். அவருடையத் தோள்களும் புடைத்துக்கொண்டு தெரியும். கொஞ்சம் பாடி இருந்தாப் போதும் மேடு, பள்ளங்களில் கச்சிதமாகப் பொருத்தி கிண்ணென்று எடுத்துக்காட்டும் இதன் விலை ரூ.1,128.

http://www.coolclothingusa.com/compressionshort.html
மேலே காற்றில் பறக்கும் சட்டையின் பெயர் கார்மெண்ட் வாஷ்டு சர்ட். பால்பின் ஜாக்கெட்டு- ன்னும் சொல்லலாம். விலை தான் கொஞ்சம் அதிகம்: ரூ.53,016.

சூர்யா போட்டிருக்கிறது பூட்கட் ஜீன்ஸ் வகையிலான சராய்(பேண்ட்தாங்க). சைஸ் 34 இல் இருந்து 50 வரைக்கும் கிடைக்கிறது. இதிலும் இத்தாலி தயாரிப்பிற்கு தனி மவுசு இருக்கிறது. விலை ரூ.11,280.

சூர்யா போட்டிருக்கிற பாசிமணி? சாரிங்க அது தமன்னாவோடதான். அதை அவங்ககிட்டயே கேட்டுக்கச் சொல்லிட்டாரு சூர்யா.
ஓவர் டூ தமன்னா.
அட, சூர்யா என்ன ஷூ போட்டிருக்கிறார்ன்னு தெரியலையே. சரி படம் வரட்டும் சொல்றோம்.
சூர்யா போட்டிருக்கும் உடைகளின் செலவு மொத்தம்:ரூ.71,158
சூர்யா, என்ன சூர்யா இது? தயாரிப்பாளர்களுக்கு இவ்வளவு குறைவா செலவு வச்சா அவங்களும் பிழைச்சிப்பாங்களே சூர்யா! இது நியாயமா சூர்யா?
Thursday, 5 Feb 2009
42 ஆயிரம் இருந்தால் நீங்களும் விஜய் ஆகலாம்!

வில்லு விஜய் வரார்… தில் இருந்தா நில்லு நில்லு, இல்ல தள்ளு தள்ளு…. ரஜினியின் இடத்தை, அவருடைய எல்லா பாணியிலும் பிடிக்க நினைக்கும் தமிழ் நடிகர்களில் விஜய்க்குத்தான் முதலிடம். ஓரளவுக்கு அந்த இடத்தை எட்டி பிடித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும.
விஜய் நடிக்கும் திரைப்படங்களில் அவர் அணிந்து வரும் ஆடைகள் பலவும் B, C கிளாஸ் ரசிகர்களை கவரும் வகையில்தான் இருக்கும். அவருடையப் படம் வெளியான அடுத்த நாளே அவருடைய ஆடைகளும் ரசிகர்களிடையே பரவலாகப் போய் சேர்ந்திருக்கும்.
இந்த மாதிரி உடைகளைப் போட்டுக்கொண்டு ஒரு சல்யூட் வைத்து விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குக்கு திரையரங்கில் விசில் பறக்கும்.
இப்போ வில்லு விஜய் ஆடையின் பட்ஜெட்டை பார்ப்போமா…
விஜய்யின் கண்களை அலங்கரிக்கும் சன் கிளாஸ்: ரூ.3800

http://www.bananarepublic.com/browse/product.do?cid=38690&pid=554347&scid=554347002
ஜிகு ஜிகு நீலச்சட்டை(இதுக்கு அவர் போடாமலே இருந்திருக்கலாம்): ரூ.1750

டக்கர் உள் பனியன்: ரூ.1200

http://us.levi.com/product/index.jsp?productId=3442710&cp=3146842.3146843.2765287
இடுப்பில் வழுக்கும் பெல்ட்: ரூ.900

http://www.bewild.com/thhovilebe.html
அம்சமான வாட்ச் (டைம் என்னங்க, ஓடுதுங்களா?): ரூ.26,000

http://www.watchshopuk.com/gents-tissot-t-touch-matt-titanium-watch-t33759859-p99928196.html
பூட்கட் பேண்ட் (இப்போ இதுதாங்க பேஷன்): ரூ.3400
(அதிலுள்ள எக்ஸட்ரா ஜோபிகள் எல்லாம் நம்ம காஸ்டியூமர் வேலையாக இருக்கும்)

http://us.levi.com/product/index.jsp?productId=2996364&cp=3146842.3146844.3146855.3146923
ஷூ: ரூ.4850

http://www.shopping.com/xPO-Lacoste-LACOSTE-Men-s-Estaban-JT-Shoe-White-Grey-Light-Blue
கழுத்தில் அலையும் ஷால்: ரூ.100
ஆக மொத்தம்: ரூ. 42,000 (அம்மாடி!)
ஆனாலும் பரவாயில்லீங்க. பாமரர்களின் நாயகன் தான்தான்னு விஜய் நிரூபிச்சிட்டார்.
இடதுகையில் இருக்கும் மான்கொம்பு, வலதுகையில் கட்டப்பட்டிருக்கும் ருத்திராட்ச கொட்டை ரேட்டெல்லாம் கணிக்க முடியலை, சாரி!
Tuesday, 13 Jan 2009
ஸ்டைலு ஸ்டைலுதான்

நமது பாரம்பரிய ஆடைகளான வேட்டி சட்டையை நாம் தூக்கிப்போட்டு 300 ஆண்டுகள் கழிந்திருக்குமா? அதுதான் நாமும் மேற்கத்தைய பாணியில் முதல்முறையாக ஸ்டைலுக்கு மாறிய தருணமாக இருக்கும். ஆங்கிலேயன் நமக்கு புதியவகை ஆடைகளை த்தான் அறிமுகப்படுத்தினான். நம்ம திரைப்படப் புண்ணியவான்கள் வந்தபிறகு நித்தம் ஒரு ஸ்டைல் ஆகிப்போனது.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி போன்றவர்கள் தங்கள ஆடைகளை வடிவமைப்பதிலும், இதர எக்ஸ்ட்ரா மினுமினுப்புகளை, ஜொலிஜொலிப்புகளை சேர்ப்பதிலும் தனிக்கவனம் செலுத்தினார்கள். அவர்கள் செலுத்திய அந்த தனிக்கவனத்தால், ரசிகர்கள் மத்தியில் அவர்கள் தனியாகக் கவனிக்கப்பட்டனர்.
குறிப்பாக ரஜினி வருகைக்குப் பிறகு ஸ்டைல் என்பதற்கே தனி ஸ்டைல் வந்தது என்றே சொல்லலாம். அவர் அணியும் ஆடை முதல் குளிர்கண்ணாடி, பேண்ட், சட்டையில் உள்ள பைகள் என எல்லாமே கவனிக்கப்பட்டன.
பாட்ஷா திரைப்படத்தில் ரஜினி காதுபிடி அற்ற ஒரு மூக்குக்கண்ணாடி அணிந்து வருவார். இடது கையால் அப்படியே எடுப்பார் அப்படியே மாற்றுவார். அது அவருக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரியவந்தது. ரஜினியின் ஸ்டைல் இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தாலும், இன்றைய நடிகர்கள் தங்களுக்கு என்று ஸ்டைலை தனியாக பின்பற்றியே வருகிறார்கள்.
தளபதி விஜய் என்றால் இந்த மாதிரிதான். தல அஜீத்ன்னா இப்படித்தான் என்று வரையறுத்துவிட்டார்கள். அதையே அவர்கள் ஒட்டிக்கொண்டு திரை என்னும் ரயில் வண்டியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய நடிகர்கள் திரையில் அணியும் உடை மற்றும் எக்ஸட்ரா பிட்டிங்கள் பற்றி ஜாலியாக அலசப் போகும் பகுதி இது.
இந்த வாரம் ‘பில்லா’ அஜீத்!
அஜீத்தின் பில்லா நல்லா கல்லா கட்டியது அனைவருக்கும் தெரியும். அஜீத் இவ்வளவு ஸ்டைலாக பில்லாவில் வருவார் என்பது யாருமே எதிர்பாராதது. அவர் அப்படி வந்தது ரசிகர்களுக்குப் பிடித்திருக்கவே படம் பிச்சுகிச்சு.
ஆனால், பில்லா அஜீத்தின் உடைகளுக்காக தயாரிப்பாளரின் கல்லாவில் இருந்து எத்தனை லட்சம் கரைந்திருக்கக்கூடும் என்று பார்க்கலாமா?(சும்மா கும்ஸாதாங்க)
புல்ஷூட்டோடு அமர்ந்திருக்கும் அஜீத்தோடு உரசிக் கொண்டிருக்கும் அரைகுறை நமீதாவைப் பார்க்கவேண்டாம்(அவருடைய ஆடை செலவுதான் மிகவும் குறைவாம்!). அஜீத்தை மட்டும் பார்க்கவும்.
இப்ப ஆடை பட்ஜெட் போடுவோமா?
அஜீத்தின் கண்களை குளிர்விக்கும் (ஏற்கனவே அது ஏசி ரூம்தான் போலிருக்கு. அரையிருட்டு வேற. அஜீத் எப்படிதான் பார்க்கிறாரோ) ரேபான் கண்ணாடி: ரூ. 5,640
Rayban Glass - 120 $
http://www.joylot.com/page/RAY-BAN-3384-Black-Gunmetal-004-71-RAYBAN-Sunglasses-33×00-531216613.cfm

அவருடைய இடதுகை மணிக்கட்டை அலங்கரிக்கும் ஒமேகா வாட்ச்(ஆக இருந்தால்): ரூ. 4,93,500
Omega Watch - 10,500 $
http://www.gemnation.com/watches/Omega-Speedmaster-4136.html

அவர் கழுத்தில் தொங்கும் டை: ரூ. 5405
Silk Tie - 115 $
http://www.couturelab.com/products/Red_Check_Silk_Tie-1500-c26p1000.html

நமீதா கொஞ்சலாக இழுக்கும் அஜீத்தின் கோட்டும் ஷூட்டும்: ரூ.42,065
Suit - 895 $
http://shop.nordstrom.com/S/3019621?cm_cat=datafeed&cm_pla=suits%2fsets%2fwardrobers:men:tuxedo&cm_ite=hart_schaffner_marx_gold_trumpeter_tuxedo_(nordstrom_exclusive):251276&cm_ven=Yahoo_df&mr:referralID=53aa0828-dfa6-11dd-a8aa-000423bb4e95

அஜீத் போட்டிருக்கும் சட்டை: ரூ.4,277
Dress Shirt - 91 $
http://www.6pm.com/n/p/p/7327308/c/2188.html

ஆக கூட்டிப்பாருங்கள்… ரூ.5,50,887 ஆச்சா?
பார்த்தீங்களா, ஒரேஒரு காட்சியில் இடம்பெறும் உடையலங்காரத்திற்கே ரூ. 5.5 லட்சம் என்றால், ஒரு படம் முழுக்க உடையலங்காரத்திற்கு மட்டுமே தயாரிப்பாளர்கள் எவ்வளவு செலவு செய்வார்கள்.
அவர்களுக்கு என்ன கவலை, அதான் ரசிகர்களின் பாக்கெட்டில் கைவைத்து அதிகமாகவே எடுத்துக் கொள்கிறார்களே என்கிறீர்களா?
































