Archive for the 'Fashion and Style' Category


Saturday, 6 Feb 2010

Cosplay: Japanese style

காப்பி அடிக்கிறதும் ஒரு ஸ்டைல்தான் : ‘கோஸ் ப்ளே’வில் முதலிடம் வகிக்கும் ஜப்பானியர்

cosplay.jpg

நாம் நமக்குப் பிடித்த ஸ்டைலில் உடையணிவது ஒருபக்கம் இருந்தாலும்கூட ரசிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜீத் போல் உடை உடுத்துவதும், தொண்டர்கள் தலைவர்கள் போல் உடை உடுத்துவதும், பெண்கள் அசின், தமன்னா போல் உடையணிவதும் ஒரு வித ஸ்டைல்தான்.

ஒருசிலர் ரொம்ப வித்தியாசமாக பிரபல சினிமா, தொலைக்காட்சி கதாபாத்திரங்கள் போல, புகழ்பெற்ற பொம்மைகள் அணிந்து வரும் ஆடைகள் (உதாரணம் - பார்பி) போலவெல்லாம் உடை அணிவார்கள். அந்த கேரக்டர்கள் செய்வதையெல்லாம் கூட செய்து பார்ப்பார்கள். உலகம் முழுக்க பரவியிருக்கும் இந்த பழக்கத்திற்கு ‘கோஸ் ப்ளே’ (cosplay) என பெயர் வைத்திருக்கிறார்கள். காஷ்ட்டியூம் ரோல்ப்ளே (Costume Roleplay) என்பதின் சுருக்கம் தான் கோஸ் ப்ளே.

இந்த கோஸ் ப்ளே ஸ்டைலில் தன்னை மாற்றிக்கொள்வதில் ஜப்பானியர்கள்தான் முதலிடம் வகிக்கிறார்கள். தாங்களாக ஒன்றை தேர்ந்தெடுத்து அணிபவர்களைக் காட்டிலும், இது மாதிரி கோஸ் ப்ளே செய்பவர்கள் எண்ணிக்கை அங்கே பெருகி வருகிறதாம்.

ஜப்பானில் உலவும் கற்பனை பாத்திரங்களான மாங்கா, அனிமே, டோகுசட்சு, மற்றும் காமிக் புத்தகங்கள், புதினங்கள், விடியோ விளையாட்டுகள், பேண்டஸி திரைப்படங்கள் இவற்றில் எல்லாம் வரும் கற்பனை பாத்திரங்களைப் போல இவர்கள் உடை அணிகிறார்கள். இது என்னென்ன கலாசார விளைவுகளை ஏற்படுத்துமோ என்று பதைபதைக்கிறார்கள் ஜப்பானிய பெரிசுகள்.

Tags: , ,


Friday, 29 Jan 2010

Surreal furniture!

சர்ரியலிஸ மேஜை!
surreal-furniture.jpg

ர்ரியலிஸ் கவிதைப்போல் சர்ரியலிஸ மேஜையை வடிவமைத்திருக்கிறது அமெரிக்காவில் உள்ள ஸ்ட்ரைட் லைன் டிசைன்ஸ் நிறுவனம். ஒற்றைக்கால் தூக்கிய படி அசிங்கம் பண்ணும் இந்த மேஜைக்குப் பொருத்தமாக ‘பேட் டேபிள்’ () என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
train-bed.jpg

Tags: , , ,


Monday, 18 Jan 2010

Japanese super hit game show - Video

ஜப்பானின் லேட்டஸ்ட் சூப்பர்ஹிட் கேம் ஷோ - விடியோ

japanese-game-show.jpg

ப்பான் டிவி ஒன்றில் நடந்து கொண்டிருக்கும் கேம் ஷோ ஒன்று உலக அளவில் கவனிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. சிரிப்பை வரவழைக்கும் அந்த கேம் ஷோவில் கலந்துகொள்பவர் பூச்சி போல உடை அணிந்து வருகிறார். மேடை ஒன்றில் அவர் ஸ்கேட்டிங் வீல் மீது  நிற்கிறார். சறுக்கலான அந்த மேடைக்கு எதிரே ரப்பரால் ஆன மெத்தை தூண்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டுள்ளன. ஸ்கேட்டிங் வீல் மேலே சவாரி செய்தபடி சறுக்கி வரும் போட்டியாளர் அந்த ரப்பர் மெத்தை தூண்களை இடித்துத் தள்ளாமல் வெளியே வரவேண்டும்.

முதலில் 10 மீட்டர் தூரத்திற்கு வைக்கப்படும் அந்த ரப்பர் தூண்கள் பின்னர் 20 மீட்டர், 30 மீட்டர் என அதிகப்படுத்தப்படுகிறது. ரப்பர் தூண் எதையும் தள்ளி விடாமல் கடப்பவர் சாம்பியனாகக் கெளரவிக்கப்படுகிறார்.

சாம்பியன் ஆனால் பரவாயில்லை. தோற்பவருக்கு அவர் தாண்டிய தூரம், இடித்துத் தள்ளிய ரப்பர் தூண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஜாலியான தண்டனை அளிக்கப்படுகிறது.

ஈயைப் போல உடையணிந்த ஒரு பெண் தன்னுடைய வாயில் மசாலா உருண்டைகளையோ  பச்சை புல்களையோ வைத்துக்கொள்கிறார். தோற்றவரை, ஈயைப் போல உடையணிந்த மற்றொரு பெண் இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள, எதையெதையோ வாயில் போட்ட பெண் ஒரு சிலிண்டர் மூலம் தோற்றவர் மூஞ்சில் ‘தூவ’ என துப்புகிறார்.

இந்த பைத்தியக்கார கேம் ஷோ தான் ஜப்பானின் லேட்டஸ்ட் ஹிட் நிகழ்ச்சியாம். நீங்களும் பாருங்க. சிரிங்க.

Tags: , ,


Wednesday, 6 Jan 2010

New era in Earring designs

காலம் மாறிப்போச்சுங்க. காதணியும் மாறிப்போச்சுங்க

bulb-earrings.jpg

ப்படியெல்லாம் கூட காதணிகள் வந்தாச்சு. நீங்க முயற்சி பண்றீங்களா?

முதல் படம் - வீணாப் போறத வீணா விடலாமா அதனால்தான் இந்த பல்பு டிசைன்.

thermoscope-earrings.jpg

தெர்மாமீட்டர் போல, இது தெர்மாஸ்கோப் காதணி. இதில் நிரப்பட்டுள்ள சிவப்பு நிற ஆல்கஹால் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு ஏறும் அல்லது இறங்கும். புவி வெப்பமடைதல் என்றால் என்ன என்பதை இந்த காதணி மூலம் நாம் அறியலாம்.

scrabble-earrings.jpg

உங்கள் இனிஷியல் அல்லது பிடித்தவரின் இனிஷியலை கேட்டு வாங்கிப் போட்டுக்கொள்ள இந்த காதணி வசதியாக இருக்கும்.

squirrel-feet-earrings.jpg

இந்தக் காதணியில் தொங்குவது நிஜமாலுமே அணிலின் கால் விரல்கள்தான். PETA அமைப்பை சேர்ந்தவர்கள் கண்ணில் உங்கள் காது படாமல் இருந்தால் சரி.

irings.jpg

காதில் மாட்டி, பாட்டுக்  கேட்க மட்டுமா இயர்பாட்? அதையே கொஞ்சம் கீழாகத் தள்ளி தொங்கவிட்டால் புது பேஷன்ங்க!

lego-earrings.jpg

குழந்தைகள் கோர்த்து விளையாடுமே அதே ப்ளாக்ஸ்தான் இவை. காதில் மாட்டிக்கொண்டால் யாராவது கோர்த்துக்கொள்ள வரக்கூடும் உஷார் .

space-invaders-earrings.jpg

இது ஒரு கைவேலைப்பாடு. கூடைப் பின்னுவதுப்போல் சின்ன அளவில் அழகான டிசைன்களை உருவாக்குகிறார்கள்.

apple-jacks-cereal-earrings.jpg

விளம்பரங்கள் நம் காதை வந்தடைய, பெரிய பெரிய நிறுவனங்கள் கூட தண்டால், பஸ்கியெல்லாம் எடுப்பதுண்டு. நம்மோட காதிலேயே விளம்பரம் செய்துட்டா? ஆன்லைன்ல   விற்பனைக்கு கிடைக்குதுங்க இந்த டிசைன்.

ladybuds.jpg

இது ரெண்டுப் பக்கமும் அணியும் சட்டைப் போல. லேடி பட்ஸுன்னு பெயர். பூவை காதில் தொங்கவும் விடலாம். காதிலும் வச்சுக்கலாம். அது உங்க வசதி.

spock-ear-earrings.jpg

சொன்னால் நம்ப மாட்டீங்க… இந்த ஸ்போக் மாடல் காதணி டிசைன் இந்திய நகை வடிவமைப்பு போட்டியில், மணமகள் அலங்காரத்திற்கான ஒட்டுமொத்த விருதை அள்ளியது.

Tags: , , , ,


Monday, 14 Dec 2009

Top heroines to participate in CIFW

சென்னை பேஷன் ஷோ : தமன்னா, ப்ரியங்கா, சமீரா ரெட்டி பங்கேற்பு

tamanna.jpg

சென்னையில் நாளை முதல் ஐந்து நாட்கள் நடைபெற உள்ள சர்வதேச பேஷன் ஷோவில் தமிழ் மற்றும் இந்தி முன்னணி நடிகைகள் கலந்துகொண்டு பூனை நடை போட உள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள லீமெரிடியன் ஓட்டலில் டிசம்பர் 16 முதல் (நாளை முதல்) டிசம்பர் 20 ஆம் தேதி வரை, சர்வதேச அளவிலான பேஷன் ஷோ நடக்க உள்ளது. இதில் மொரீசியஸ், சிங்கப்பூர், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம், இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு ஆடை வடிவமைப்பாளர்களும், 30 இந்திய ஆடை வடிவமைப்பாளர்களும் பங்கேற்கின்றனர். மேலும் இதில் சென்னையைச் சேர்ந்த 6 வடிவமைப்பாளர்கள் கலந்துகொண்டு புதிய டிசைன்களை அறிமுகப்படுத்த உள்ளனர். இந்த பேஷன் ஷோவில் காஞ்சி பட்டு, திருப்பூர் பருத்தி ஆடைகளை பிரபலப்படுத்த உள்ளனர்.

ஐந்து நாட்கள் நடக்கவுள்ள இந்த பேஷன் ஷோவில் தமன்னா, ஸ்ரேயா, நிலா, பிரியங்கா சோப்ரா, சமீரா ரெட்டி,  நோகா துபியா, ஜெனிலியா, பாயல் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட முன்னணி நடிகை களும், பல நாட்டு பேஷன் மாடல் பெண்களும் கலந்துகொள்கின்றனர்.

Tags: , , , , , , , , , , , ,


Sunday, 13 Dec 2009

Brave Pooja got loudest applause in Miss World stage

கால் உடைந்தும் மனம் உடையாத பூஜா சோப்ரா!: அரையிறுதி வரை வந்து அசத்தல் 

miss-india-pooja-chopra-taking-the-stage-despite-a-broken-ankle.jpg

தெ
ன் ஆப்ரிக்காவில் நடைபெற்ற 2009 ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில், தகுதிச் சுற்றின்போது காலில் காயமடைந்து இந்திய அழகி பூஜா சோப்ரா, அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தப் போட்டியில் உலக அழகியாக ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்த கயானி அல்டோனியா தேர்ந்தெடுக்கப்பட்டார்.  உலக அழகிப் போட்டியில் இந்தியா சார்பில் இந்திய அழகி பூஜா சோப்ரா கலந்துகொண்டார்.

அரையிறுதிப் போட்டிகள் தொடங்குவதற்கு சில தினங்கள் முன்பு பயிற்சியின்போது, தவறி கிழே விழுந்த பூஜாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் அவருக்கு காலில் கட்டுப் போடப்பட்டது. எலும்பு முறிவால் அவர் போட்டியில் கலந்து கொள்ள முடியாது எனக் கருதப்பட்டது.

ஆனால், ‘போட்டியில் கலந்துகொண்டே தீருவேன்’ என்று உறுதியாகச் சொன்ன பூஜா, மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பிறகு காலிறுதிப் போட்டியில் கலந்துகொண்டார். அதில், அரையிறுதிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு அவர் செய்துவரும் சேவைகளுக்காக அவர் அரையிறுதிக்கு த்தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அரையிறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் போது நிகழ்ச்சி தொகுப்பாளரான சீன அழகி ஒருவர், ‘பூஜா வலிமையான பெண்’ எனப் பாராட்டிக்கொண்டே பூஜாவின் ஆடையை விலக்கி, காலில் இருந்த காயத்தைக் காண்பித்தார்.

ஆயிரம் வலிமை இருந்தும், அனுதாபம் கிடைத்தும் பூஜாவால் இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போயிற்று.

Tags: , , , , , , ,


Sunday, 13 Dec 2009

Miss World 2009

உலக அழகியாக ஜிப்ரால்டர் நாட்டுப் பெண் தேர்வு

miss-world-20091.jpg

தெ
ன்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ பர்க்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற உலக அழகிப்போட்டி இறுதிச்சுற்றில் ஜிப்ரால்டர் நாட்டைச் சேர்ந்த கயானி அல்டோரினோ 2009 ஆம் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மெக்ஸிகோ நாட்டின் பெர்லா பெல்டான் இரண்டாம் இடத்தையும், தென்னாப்பிரிக்காவின் தாதும் கேஷ்வர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இந்தியா சார்பில் கலந்துகொண்ட பூஜா சோப்ரா இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

Tags: , , , , ,


Thursday, 10 Dec 2009

Indian beauties in Miss World

உலகிற்கு இந்தியா அளித்த அழகிகள்!

pooja-chopra.jpg

59 ஆவது உலக அழகிப் போட்டி, தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜோகானாஸ்பர்க்கில் நாளை மறுநாள் (டிசம்பர் 12) நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் பூனாவைச் சேர்ந்த 24 வயது பூஜா சோப்ரா கலந்து கொள்கிறார். இவர் பட்டம் வெல்வார் என்ற நம்பிக்கையுடன் இந்தியா இதுவரை உலகிற்கு அளித்த உலக அழகிகள் பற்றிப் பார்ப்போம்.

இந்தியா இதுவரை உலகிற்கு, நான்கு உலக அழகிகளையும்,   இரண்டு (சுஷ்மிதா சென், லாரா தத்தா)  பிரபஞ்ச அழகிகளையும்  கொடுத்திருக்கிறது.

இந்தியாவின் முதல் அழகியாக 1966 ஆம் ஆண்டு ரீட்டா ஃபெரிரா என்ற பெண் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதன் பின்னர், 1994 இல் ஐஸ்வர்யா ராய் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டப் பிறகுதான். அழகிப்போட்டி குறித்த அதீத ஆர்வம் இந்தியா முழுக்க பரவியது. உலக அளவிலும் இந்திய அழகிகள் உலா வரத் துவங்கினர்.

aishwarya-rai.jpg

முதல் முறையாக உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பெண் ஐஸ்வர்யா ராய். 1994 இல் அந்தப் பட்டத்தை வென்ற போது, அவருக்கு வயது 21. அவர் உலக அழகி பட்டம் வென்ற அதே ஆண்டு பிரபஞ்ச அழகியாக இந்தியாவின் சுஷ்மிதா சென் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாலிவுட்டில் கால் பதித்த இருவரில் ஐஸ்வர்யா ராய் இன்றைக்கும் அதிக ஊதியம் பெறும் நடிகையாக நீடித்து வருகையில், சுஷ்மிதா அவ்வளவாக சோபிக்காமல் போனார்.

diana-hayden.jpg

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்ததாக ஹைதராபாத் அழகி டயானா ஹெய்டன், தன்னுடைய 24 வயதில் உலக அழகியாக, 1997 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய திரைத்துறையில் நுழைந்த இவர் புகழின் உச்சியை அடையாமலேயே காணாமல் போனார்.

yukta-mookhey.jpg

லண்டனில் நடைபெற்ற (1999) 49 ஆவது உலக அழகிப்போட்டியில் பட்டம் வென்றவர் யுக்தா முகி. இவரும் எவ்வளவோ முயற்சித்தும் திரையுலகில் நிலைத்து புகழ் பெற முடியாமல் போனது.

priyanka-chopra.jpg

ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்ததாக, பாலிவுட்டை கலக்கி வரும் பிரியங்கா சோப்ராவின் முன்னேற்றத்திற்கு, பின்னணியாக அவருடைய அழகும் அவர் பெற்ற உலக அழகிப்பட்டமும் இருக்கிறது. 2000ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற போட்டியில் இவர் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் பாலிவுட்டின் முன்னணி நாயகி ஆன இவருக்கு இப்போதும் ஏறுமுகம் தான்.

தற்போது தென் ஆப்ரிக்காவில் நடைபெறவிருக்கும் 59 ஆவது உலக அழகிப்போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் பூஜா சோப்ராவை பாலிவுட் தன் பக்கம் இழுத்துவிட்டது.

Tags: , , , , , , ,


Wednesday, 9 Dec 2009

Tattoo inked on chest : Singer Cyrus makes her own controversy

இளம் பாடகி மைலி சைரஸ் குத்திக் ​கொண்ட ‘டாட்டூ’ : அ​மெரிக்க பரபர…

miley-cyrus-copy.jpg

ளம் பாடகியான மைலி சைரஸ் தன்னுடைய இடது மார்பகத்தின் கீழே குத்திக் கொண்டிருக்கும் ‘டாட்டூ’ தான் அமெரிக்க இளசுகளின் லேட்டஸ்ட் பரபர பேச்சாக இருக்கிறது.

அமெரிக்க இளசுகளின் உள்ளத்தில் கொஞ்ச கொஞ்சமாக நாற்காலி போட்டு அமர்ந்துகொண்டு வரும் பாடகி மைலி சைரஸ். 17 வயது பச்சைப் பாப்பாவான இவருடைய குரல் வளம் மட்டுமல்லாது உடல் வளமும் பேசப்படும் ஒன்றாக இருக்கும் நிலையில், தன்னுடைய இடது மார்பகத்தின் கீழே டாட்டூ ஒன்றை குத்தி கிசுகிசு செய்திகளுக்கு தீனியாகி விட்டார்.

பனிரெண்டு வயதில் அகால மரணமடைந்த தன்னுடைய தோழி வனீசாவின் நினைவாக ‘ஜஸ்ட் பிரீத்’ என்ற வாசகங்களை, தன்னுடைய மார்பகத்தின் கீழாக வடித்துக் கொண்டிருக்கிறார் பாடகி சைரஸ். ஆனாலும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கிறது இந்த சின்ன பட்சி. அமெரிக்க சட்டப்படி 18  வயதுக்குக் குறைவானவர்கள் தங்கள் உடலில் டாட்டூக்களை குத்தக் கூடாது. இந்த சட்டத்தை சைரஸ் மீறிவிட்டார் என்று ஒரு பக்கம் குற்றம் சாட்டப்பட்டாலும் பெற்றோர்களின் அனுமதியுடன் 18 வயதுக்கு குறைவானவர்களும்  டாட்டூ குத்திக்கொள்ளலாம் என்ற விதிவிலக்கை சைரஸின் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

துரத்தி, துரத்தி புகைப்படம் எடுக்குமளவுக்கு, சைரஸின் மார்பக டாட்டூ முக்கியத்துவம் வாய்ந்ததாக  மாறிவிட்டது.

Tags: , , , ,


Sunday, 6 Dec 2009

Undressing in window room : Models on display in New York

பொதுமக்கள் முன்னிலையில் ஆடை மாற்றும் அழகிகள் :
அமெரிக்க விளம்பர ட்ரெண்ட்

xoxo.jpg

க்களைக் கவர, விற்பனையை அதிகரிக்க எந்தளவுக்கும் கீழிறங்க நிறுவனங்கள் தயாராகி விட்டன. கடந்த 3 ஆம் தேதி (இப்போதும்) அன்று நியுயார்க், மாண்ஹாட்டன் பகுதியில் உள்ள 5 ஆவது அவன்யூ சாலையில் ஒரே மக்கள் கூட்டம். குறிப்பாக, ஆண்கள் தேனீக்களாய் மொய்த்திருந்தார்கள். நட்ட நடு வீதியில் கண்ணாடி அறை ஒன்றினுள், உடை மாற்றிக்கொண்டிருந்த பெண்கள் தான் அந்தக் கூட்டத்திற்கு காரணம்.

என்பது பெண்கள் ஆடைகளில் வந்திருக்கும் புதிய ரகம். இந்த ஆடைகளை விளம்பரப்படுத்தத்தான் அப்பகுதியில் பிரபலமான இடமாகத்தான் திகழும் லார்ட் அண்ட் டெய்லர் ஷோ ரூமின் கண்ணாடி  அறையில் இந்த கூத்து அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

லீசுக்கு எடுக்கப்பட்டிருக்கும் இந்த அறையில் இருந்தபடியே விளம்பரம் செய்ய, மாடல் பெண்கள் 10 நாட்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அதில் மாடல்கள் தங்கள் நிஜ வாழ்க்கையை வாழ்ந்துக் காட்டவிருக்கிறார்கள். காலையில் எழுந்து பல் துலக்குவது, சாப்பிடுவது, அலுவலகம் கிளம்ப உடை மாற்றுவது என எல்லாமே சகஜமாக நடக்கும். இந்தக் காட்சிகளை பொதுமக்கள் வெளியே இருந்தபடி கண்டு ரசிக்கலாம்.

விளம்பர மாடல்களின் அந்தரங்கத்தைப் பார்த்து ஜொள்ளு விட ஆண்கள் படையெடுக்கிறார்கள் என்றால் பெண்கள், மாடல்கள் அணியும் ஆடைகளை ரசிக்க வருகிறார்கள்.

xoxo1.jpg

Tags: , , , ,


Page 1 of 41234»