Archive for the 'cricket' Category
Wednesday, 16 Dec 2009
காயம் காரணமாக ஒரு நாள் போட்டியிலிருந்து முரளிதரன் நீக்கம்!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள 4 ஒரு நாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக முரளிதரன் 20 ஓவர் போட்டி மற்றும் முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்ணான்டோ, முரளிதரனுக்கு பதிலாக முத்துமுதலிக், சுரஜ்ரந்தீவ் என்ற இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை சேர்த்துள்ளதாக இலங்கை அணி மேனேஜர் தெரிவித்துள்ளார்.
Tags: cricket, Dilhara Fernando, Muthumudalige Pushpakumara, Muttiah Muralitharan, Suraj Randiv, சுரஜ்ரந்தீவ், முத்துமுதலிக், முத்தையா முரளிதரன்
Tuesday, 15 Dec 2009
பன்றிக்காய்ச்சலில் இருந்து மீண்டார் ஸ்ரீசாந்த்
காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் பன்றிக் காய்ச்சல் முழுமையாக குணமடைய, ஆஸ்பத்திரியில் இருந்து ஸ்ரீசாந்த் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த, முழுமையாக குணமடைய, ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இலங்கை அணி இடையேயான தொடரில் இடம்பிடித்த ஸ்ரீசாந்த், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். இப்போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
‘டுவென்டி-20′ மற்றும் ஒருநாள் தொடரில் அசத்துவதற்கு காத்திருந்த இவரை பன்றிக்காய்ச்சல் தொற்றியது. இதுகுறித்து போரிட்ஸ் ஆஸ்பத்திரியின் இயக்குனர் ஏ.பானர்ஜி கூறுகையில், தற்போது ஸ்ரீசாந்த் பன்றிக் காய்ச்சலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார், என்றார்.
Tags: cricket, discharge, Dr A Banerjee, hospital, Sreesanth, ஏ.பானர்ஜி, ஸ்ரீசாந்த்
Tuesday, 15 Dec 2009
இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி

ராஜ்கோட்டில் நடந்த இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணியுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் போட்டி தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 20 டுவென்டி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இதையடுத்து இந்தியா-இலங்கை இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் ஆட்டம் ராஜ்கோட் மாதவராவ் சிந்தியா மைதானத்தில் துவங்கியது.
அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் மற்றும் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் இன்றைய ஆட்டத்தில் இடம் பெறவில்லை. யுவராஜுக்குப் பதில் விராத் கோலி இணைந்தார்.
டாஸ் வென்று இலங்கை அணியின் கேப்டன் சங்ககாரா, பீல்டிங் செய்தது இலங்கை. டெண்டுல்கர், ஷேவாக் ஜோடி களமிறங்கி வந்த பந்துகளையெல்லாம் ரன்களுக்கு விரட்டி வெளுத்து வாங்கத் தொடங்கியது.
டெண்டுல்கர் 63 பந்துகளில் ஒரு சிக்ஸ் மற்றும் 10 பவுண்டரிகளை விளாசி 69 ரன்கள் எடுத்தார். பின்னர் 19.3வது ஒவரில் தில்லாரா பெர்ணான்டோவின் பந்தில் அவுட்டானார். இருவரும் சேர்ந்து 153 ரன்கள் குவித்தனர்.
மறு முனையில் ஷேவாக் பேயாட்டத்தால் இலங்கை பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார். பவுண்டரிகளையும், சிக்சர்களையும் விளாசிய ஷேவாக் 66 பந்துகளில் சதத்தைக் கடந்தார்.
அவருடன் கேப்டன் டோணியும் விளாசித் தள்ளினார். ஷேவாக் புயல் வேகத்தில் ஆடி 102 பந்துகளில் 146 ரன்களைக் குவித்து ஆட்டமிடழந்தார்.
டோணி 53 பந்துகளில் 72 ரன்களைக் குவித்தார். பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். ரவீந்திர ஜடேஜா 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் குவித்தது. இந்தியா ஒரு நாள் போட்டிகளில் குவித்த அதிகபட்ச ரன் இதுவேயாகும்.
415 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இந்திய அணிக்கு கடும் சவால் தந்தது. தரங்காவும், தில்ஷானும் இந்தியாவுக்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் வெளுத்து வாங்கினர். குறிப்பாக தில்ஷான் ஆட்டத்தில் அனல் பறந்தது. ஷேவாக்கை மிஞ்சும் வகையில் தில்ஷானும் நாலாபக்கமும் பந்துகளை விரட்டி ரன்களைக் குவித்தார்.
சங்கக்காரா 90 ரன்களைக் குவித்தார். எனினும் ஆட்டத்தின் இறுதியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் எடுத்து வெற்றி வாய்ப்பை போராடி இழந்தது.
இதன் மூலம் 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
Tags: cricket, India, rajkot, Sri Lanka, ராஜ்கோட்டில்
Thursday, 19 Nov 2009
72 ஆண்டு கால சாதனை முறியடிப்பு: ஜெயவர்த்தனே ஜோடி
அகமதாபாத் டெஸ்டில் இலங்கை அணியின் 6-வது விக்கெட்டான மஹளா ஜெயவர்த்தனே - பிரசன்னா ஜெயவர்த்தனே ஜோடி புதிய உலக சாதனை படைத்தது. இந்த ஜோடி 351 ரன்களைச் சேர்த்து 72 ஆண்டு காலமாக இருந்து வந்த சதனையை முறியடித்துள்ளனர்.
இதற்கு முன்பு 1937ம் ஆண்டு டான் பிராட்மேன் மற்றும் ஜேக் பிங்கிள்டன் (ஆஸ்திரேலியா) ஆகிய இருவரும் இங்கிலாந்துக்கு எதிரான மெல்போர்ன்ட் டெஸ்ட் போட்டியின்போது 6வது விக்கெட்டுக்கு 346 ரன்கள் எடுத்திருந்தது சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை இன்று முறியடித்தனர் இரு ஜெயவர்த்தனேக்களும்.
ஜெயவர்த்தனே 275 ரன்களை குவித்து இந்தியாவுக்கு எதிராக சாதனை புரிந்தார். இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக 242 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இருப்பினும் பிரசன்னா தொடர்ந்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றார். அவரது பங்கு 154 ரன்களாகும். 7 விக்கெட் இழப்புக்கு 760 ரன்களைக் குவித்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கேப்டன் சங்கக்காரா.
இலங்கை அணி இன்று இந்தியாவுக்கு எதிராக 2-வது அதிகபட்ச ஸ்கோரை எடுத்தது. 1997-ம் ஆண்டு அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 952 ரன் குவித்து இருந்தது.
Tags: cricket, Jaywardene, அகமதாபாத், ஜேக் பிங்கிள்டன், டான் பிராட்மேன், பிரசன்னா ஜெயவர்த்தனே, மஹளா ஜெயவர்த்தனே
Wednesday, 28 Oct 2009
முன்னாள் கிரிக்கெட் நடுவர் டேவிட் ஷெப்பர்டு மரணம்

இங்கிலாந்தை நாட்டை சேர்ந்த கிரிக்கெட் அரங்கின் மிகச் சிறந்த நடுவராக விளங்கிய டேவிட் ஷெப்பர்டு “ஷெப்” என செல்லமாக அழைக்கப்பட்ட இவர் அக்டோபர் 28ஆம் தேதி காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் நேற்று பிரிந்தது. அவருக்கு வயது 68.
1965ல் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், கிளவுசஸ்டர்ஷயர் கவுன்டி அணிக்காக விளையாடினார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 1979ல் விடைபெற்ற டேவிட் ஷெப்பர்டு 1983ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை 172 ஒரு நாள் போட்டி மற்றும் 92 டெஸ்ட் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றி இருக்கிறார். இதில் 1996, 1999, 2033ஆம் ஆண்டுகளில் உலக கோப்பை போட்டி இறுதி ஆட்டமும் அடங்கும்.
282 முதல் தர போட்டியில் விளையாடி உள்ள ஷெப்பர்டு 1981ஆம் ஆண்டில் முதல் தர போட்டியில் நடுவராக நியமிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டில் சர்வதேச நடுவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
Tags: cricket
Wednesday, 28 Oct 2009
தோனியின் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
இந்திய, அவுஸ்த்திரேலிய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில், 99 ரன்களால் வெற்றி பெற்று, அவுஸ்த்திரேலியாவுக்கு சரியான பதிலடியினை கொடுத்துள்ளது இந்தியா!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று நாக்பூரில் நடந்தது. ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்யப் பணித்தார்.
இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக சச்சின், சேவக் களமிறங்கினர். சச்சின் வெறும் 4 ரன்களில் பெவிலியன் திரும்பி விட்டார். ஷேவாக் அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 40 ரன்களைக் குவித்தார். யுவராஜ் அதிக நேரம் நிலைக்கவில்லை 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
காம்பிர் 18வது அரைசதம் கடந்தார். கம்பீர், தோனி இணைப்பாட்டமாக 119 ரன்களை பகிர்ந்துகொண்ட நிலையில், காம்பிர் 76 ரன்களுக்கு ரன் அவுட்டானார்.
ஐந்தாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரெய்னாவும் (62), தோனியுடன் இணைந்து, 136 ரன்களை பகிர்ந்துகொண்டார். ஆட்டத்தின் நாயகன் டோணி 5வது சதம் கடந்தார். ஆஸ்திரேலியா வின் பந்து வீச்சை பின்னி எடுத்த டோணி 107 பந்துகளை மட்டுமே சந்தித்து 124 ரன்களைக் குவித்தார். ரெய்னா 11வது அரைசதம் கடந்தார். ஆட்ட நேர இறுதியில், 50 ஓவரில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 354 ரன்கள் குவித்தது.
மிகப்பெரிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. பெய்ன் (8), வாட்சன்(19), பொண்டிங்(8) விரைவில் வெளியேறினர். 3 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்து திணறியது. சற்று போராடிய ஒயிட் (23) ஹர் பஜன் பந்தில் வீழ்ந்தார். மறுமுனையில் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்த ஹசியை (53) ஜடேஜா போல்டாக்கினார். பின் வோஜஸ் (36), மார்ஷ் (21) ஆறுதல் அளித்தனர். எனினும் இறுதில் 48.3 ஓவர்களில் 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து பரிதாபமாக தோல்வி கண்டது அவுஸ்த்திரேலியா. 7 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்றென சமநிலைப்படுத்தியுள்ளது இந்தியா.
Tags: cricket
Monday, 5 Oct 2009
ஆஸ்திரேலியாவிற்கு ‘சாம்பியன் டிராபி’
தென்ஆப்ரிக்காவில் நடைபெற்ற சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டியில், நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் வென்று இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.
ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஷேன் வாட்சன் அபாரமாக ஆடி, சதமடித்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டார்.
தென்ஆப்ரிக்காவில் நடந்த சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் தரவரிசையில் முதல் எட்டு இடங்களை வகிக்கும் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய நாடுகள் மோதின.
இந்தியா, இலங்கை, தென்ஆப்ரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் விரைவாக வெளியேறின. பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
முறையே பாகிஸ்தானை நியூசிலாந்தும், இங்கிலாந்தை ஆஸ்திரேலியாவும் அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு வந்தன.
நேற்று செஞ்சூரியனில் நடந்த இறுதிப்போட்டியில், முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா இந்த இலக்கை 45.2 ஓவர்களில் கடந்து, 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷேன் வாட்சன் 99 ரன்கள் எடுத்திருக்கையில் சிக்சர் அடித்து சதத்தைக் கடந்ததுடன் அணிக்கு கோப்பையையும் பெற்றுக்கொடுத்தார். சாம்பியன் டிராபி கோப்பையை ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக இரண்டாவது முறை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈசலாட்டம்
உணவு இடைவேளையின்போது மைதானத்தில் ஆயிரக்கணக்கான ஈசல்கள் படையெடுத்து வந்து ஆட்டத்தை நிலைகுலைய வைத்தன. அவற்றை விரட்டுவதற்குள் பணியாளர்கள் படாதபாடுபட்டனர். ஒருவழியாக அவை துரத்தி அடிக்கப்பட்டப் பிறகுதான் ஆட்டம் தொடங்கியது.
Tags: cricket
Thursday, 1 Oct 2009
தோனி உலக அணியின் கேப்டனாக தேர்வு
கிரிக்கெட் ‘ஆஸ்கார்’ என அழைக்கப்படும் ஐ.சி.சி., விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜோகனஸ்பர்க்கில் நடந்த வண்ணமயமான விழாவில் சிறந்த வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
ஐ.சி.சி., ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான உலக அணியின் கேப்டன் கவுரவத்தையும் தோனி பெற்றார்.
ஐ.சி.சி., சிறந்த ஒரு நாள் போட்டிக்கான வீரர் விருதை தோனி வென்றார். சிறந்த டெஸ்ட் வீரர் விருதை கவுதம் காம்பிர் வென்றார். 20/20 விருதை தில்சன் பெற்றார். அரி முக நயகனாக சிட்டில் தேர்வு செய்யப்பட்டார். ஐ.சி.சி., ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான உலக அணி தேர்வு செய்யப்பட்டது. இதில் ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் சேவக், யுவராஜ் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் அணியில் சச்சின், காம்பிர் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
Tags: cricket
Wednesday, 30 Sep 2009
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: வெளியேறிய இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி
தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறாவிட்டாலும், நேற்று நடைபெற்ற மேற்கு இந்திய அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது. லீக் சுற்றில் 3 போட்டிகளிலும் மேற்கு இந்திய தீவுகள்அணி தோல்வி அடைந்தது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. ‘ஏ’ பிரிவில் இருந்து ஏற்கனவே பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறி விட்டன. இந்நிலையில் நேற்று ஜோகனஸ்பர்க்கில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
கெய்ல், சர்வான்போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி தொடக்கத்திலேயே திணறியது. பிரவீண் குமார் பந்துவீச்சில் பிளட்சர்(0), ரீபர்(1) வெளியேறினர். நெஹ்ரா வீசிய ஆட்டத்தின் 8வது ஓவரில் பாவல்(5), ஸ்மித்(21) வீழ்ந்தனர். அமித் மிஸ்ரா சுழலில் பெர்னார்ட்(22) வெளி யேறினார். சமி அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். ஹர்பஜன் சுழலில் கிராண்டன்(5), ரோச்(4) வீழ்ந்தனர். இறுதியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 36 ஓவரில் 129 ரன்களுக்கு சுருண்டது. மில்லர்(17) அவுட்டாகாமல் இருந்தார்.இந்திய சார்பில் நெஹ்ரா, பிரவீண் குமார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்குத்தான் என்றாலும் ஆரம்பத்தில் இந்திய அணியும் திணறியது. ரோச் பந்தில் காம்பிர்(6) போல்டானார். டிராவிட்(4) ரன் அவுட்டானார். இதற்கு பின் தினேஷ் கார்த்திக், விராத் கோஹ்லி இணைந்து . மட்டை போட்டனர். கோஹ்லி ஒரு நாள் போட்டிகளில் தனது 2வது அரைசதம் கடந்தார். தினேஷ் கார்த்திக் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 32.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து, இத்தொடரில் முதல் வெற்றியை பெற்றது. 79 ரன்களுடன் (9 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்த விராத் கோஹ்லி, ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில் வெற்றிக் கொடி நாட்டி வந்த தோனி தலைமையிலான இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடர் மோசமானதாக அமைந்தது. இம்முறை லீக் சுற்றில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியாவுடனான போட்டி மழையால் ரத்தானது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஆறுதல் வெற்றி பெற்றது. 3 புள்ளிகள் மட்டும் பெற்றதால் லீக் சுற்றோடு பரிதாபமாக வெளியேறியது.
இப்போட்டியில் வயிற்றுக் கோளாறு காரணமாக, சச்சின் இடம் பெறவில்லை. இவருக்கு பதிலாக அபிஷேக் நாயர் இடம் பெற்றார்.
பந்துவீச்சாளர் தோனி!
இந்திய கேப்டன் தோனி நேற்று மிதவேகப் பந்துவீச்சில் கலக்கினார். கீப்பர் பொறுப்பை தினேஷ் கார்த்திக்கிடம் ஒப்படைத்த இவர், 17வது ஓவரை வீசினார். முதலிரண்டு பந்தில் டவ்லின் அடுத்தடுத்து பவுண்டரி அடித்தார். நான்காவது பந்தில் டவ்லினை(14) போல்டாக்கிய தோனி, ஒரு நாள்போட்டிகளில் தனது முதல் விக்கெட்டை பெற்றார். ஒரு நாள் போட்டிகளில் முதல் முறையாக பந்துவீசிய இவர், 2 ஓவரில் 14 ரன் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதின இதில் பாகிஸ்தான் வென்று ஆஸ்திரேலியா தோற்றால், இந்திய அணிக்கு அரையிறுதியில் நுழையும் வாய்ப்பு இருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணியை கடைசி பந்தில் காலி பண்ணி இந்திய அணியின் முகத்தில் கரியைப் பூசியது ஆஸ்திரேலியா. இவ்வெற்றி மூலம் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.
Tags: cricket
Monday, 21 Sep 2009
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று துவக்கம்
மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் இன்று துவங்குகிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் இந்த தொடரில் மோதுகின்றன. இதில் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன.
‘பி’ பிரிவில் போட்டி நடத்தும் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கை இடம்பெற்றுள்ளன.
செஞ்சுரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் நடக்கும் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதுகின்றன. உலகின் நம்பர்-1 அணியாக களமிறங்கும் தென் ஆப்ரிக்காவுக்கு கேப்டன் ஸ்மித் இரண்டாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று தருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக தென் ஆப்ரிக்க கடந்த 1998ல் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்தது. 2002ம் ஆண்டில் நடந்த இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் இந்தியா - இலங்கை அணிகளுக்கு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.
மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் 26ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
































