Thursday 10 April 2008
மணிமேகலைப் பிரசுரம் வழங்கும் புவனாவின் ஆரோக்கிய அழகுக் கலை முறைகள்
க்ளன்சிங் மில்க் (சுத்தப்படுத்தும் திரவம்): முகத்திற்கு நாம் சோப்பு உபயோகித்துக் கழுவுவதால் அழுக்குகள் வெளியேறி, முகம் சுத்தமாக இருப்பதாகக் கருதிக் கொள்கிறோம். ஆனால், நம் சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் அவ்வளவு எளிதில் வெளியேறிவிடுவதில்லை. ‘க்ளன்சிங் மில்க்’ என்று கடைகளில் கிடைக்கும் பால் போன்ற திரவத்தை ஒரு பஞ்சில் நனைத்து, முகம், கழுத்து முதலிய பாகங்களில் தடவிக் கொள்ள வேண்டும். 3 அல்லது 5 நிமிடம் கழித்து வேறு ஒரு பஞ்சினால் முகம், கழுத்து ஆகிய பகுதிகளைத் துடைக்க வேண்டும். அவ்வாறு துடைத்தால் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். வாரம் இருமுறை இவ்வாறு செய்யலாம். வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். ‘லக்மே’, ‘காடில்’ போன்ற நிறுவனத் தயாரிப்புகளாக இவை கடைகளில் கிடைக்கின்றன.
ஆஸ்ட்ரிஜெண்ட்: இது வெளிர் நீல நிற திரவம், முகத்தில் பருக்களை அதிகம் கொண்டவர்களுக்கும், எண்ணெய்ப் பசையுள்ள சருமம் கொண்டவர்களுக்கும் பஞ்சைக் கொண்டு, ஆஸ்ட்ரிஜெண்ட் நனைத்து முகத்தைச் சுத்தம் செய்யலாம். இது ஆண்கள் உபயோகிக்கும் ‘ஆப்டர் ஷேவ்’ போன்ற தன்மையுள்ளது. முகத்தில் பரு கொண்டிருப்பவர்கள், முதலில் முகத்திற்கு ஆவி பிடித்து, அதிலிருக்கும் கெட்ட நீரை பஞ்சின் மூலம் வெளியேற்ற வேண்டும். இத்திரவத்தைப் பருக்களின் மேல் தடவினால் தொற்று ஏற்படாமலும், பருக்கள் பரவாமலும் தடுக்கும்.
ஹேண்ட் அண்ட் பாடி லோஷன்: முகம் மட்டும் நமக்கு மிருதுவாய் இருந்தால் போதுமா? கை, கால்கள் சொர சொரப்பாய் இருந்தால் அது அழகையே கெடுத்து விடும். குளித்துவிட்டு வந்த பிறகு, உடல் முழுவதும் ‘ஹேண்ட் அண்ட் பாடி லோஷன்’ உபயோகித்து உடல் முழுவதும் மசாஜ் செய்து கொள்ளலாம். முழங்கை, முழங்கால், பாதம் ஆகிய இவற்றின் சொர சொரப்பை இது நீக்கும். கை, கால் விரல்களுக்கு இதைக் கொண்டு மசாஜ் செய்தால் விரல்கள் சதைப்பிடிப்பாகவும் அழகாகவும் தோன்றும்.
மாய்ஸ்ச்சரைசர்: உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கும், குளிர் காலத்திற்கும் சருமத்திற்குக் கட்டாயம் தேவைப்படக்கூடிய ஒன்று, மாய்ஸ்ச்சரைசர். குளித்து முடித்தபின் உடலை டவலால் துடைத்துவிட்டு, பின் உடல், முகம், கை, கால்களில் இதைத் தடவிக் கொண்டால் சருமம் மிக மிக மென்மையாய் காணப்படும். வெடிப்புகளோடு உலர்ந்து காணப்படும் சருமத்திற்கு இது ஓர் அருமருந்து. ‘ஆயில் ஆப் ஒலே’ எனப்படும் ‘மாய்ஸ்ச்சரைசர்’ விலை அதிகமாக இருந்தாலும் நல்ல பலன்களை அளிக்கிறது.
ஸ்கின் டானிக்: ரோஸ் வாட்டர் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ‘ஸ்கின் டானிக்’ எனப்படும் திரவத்தை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, தினசரி குளித்து முடித்தவுடன் முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவினால் சருமம் மிகவும் மிருதுவாகவும், புத்துணர்ச்சியோடும் இருக்கும். இது கடைகளிலும் கிடைக்கும். சில அழகு நிலையங்களிலும் கிடைக்கும். ஒப்பனை செய்வதற்கு முன்னும் சாதாரணமாக தினம் பவுடர் பூசி வெளியே செல்லும்போதும், ஸ்கின் டானிக்கை முதலில் முகத்தில் பயன்படுத்திவிட்டு பின்னர் பவுடரையோ வேறு ஒப்பனைப் பொருள்களையோ இட்டால் அன்று முழுவதும் முகம் பொலிவுடன் இருக்கும்.
ஃபேஸ் பாக்: இது களிமண் போன்று கெட்டியாகவும், பவுடராகவும் கிடைக்கும். ‘முல்தான் மட்டி’ எனப்படும் பவுடர், முட்டையின் வெண்கரு, கடலை மாவு, பாசிப்பயறு மாவு ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றைக் கொண்டு, முகத்திற்கு ஆவி பிடித்து, ஃபேஸ் பாக்கினை உபயோகிக்க வேண்டும். ஐஸ்கட்டியைக்கூட உபயோகிக்கலாம். வாரம் இருமுறை ஃபேஸ் பாக்கை முகத்திற்கு உபயோகிக்கலாம். ஹெர்பல் ஃபேஸ்பாக் உபயோகித்தால் முகத்திலுள்ள சதைகள் இறுகி, முகம் பொலிவுடனும் இளமையுடனும் இருக்கும்; பளபளப்பாகவும் காட்சியளிக்கும். முகப்பரு உள்ளவர்கள் இரண்டு நாளைக்கு ஒரு முறை ஃபேஸ் பாக் உபயோகிப்பது நல்லது.
காம்பாக்ட்: இது ஒரு மேக்கப் சாதனம், அலுவலகத்திற்குச் சென்று வீடு திரும்புபவரின் முகம் களை இழந்து காணப்படும் அல்லவா? அவர்கள் தங்கள் முகத்தைக் கழுவிவிட்டுப் பவுடர் போல் இருக்கும் காம்பாக்டை முகத்திற்குச் சரிசமமாய் இட்டுக் கொண்டால், முகம் பளிச்சென இருக்கும். வெளியூர் செல்லும்போதுகூட இதனைப் பயன்படுத்துவது நல்லது.
இப்போது அழகு நிலையங்களுக்குச் செல்வது சாதாரணமான விஷயமாகிவிட்டது. அழகு நிலையங்களுக்குச் செல்வது ஃபாஷன் மட்டுமன்று; அதனால் சருமத்திற்கு நன்மையே ஏற்படுகின்றது. சிலர் என்னவென்றே தெரியாமல் ‘ப்ளிச்சிங்’ போன்றவற்றைச் செய்து கொள்கிறார்கள். அழகு நிலையங்களுக்குச் செல்பவர்கள் ஓரளவு அதைப்பற்றி தெரிந்து கொள்வது நல்லது. அல்லது, அழகு நிலைய உரிமையாளரிடம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டு, பின் செய்து கொள்வது நல்லது. அழகு நிலையங்களில் செய்யப்படும் சில செய்முறைகளையும் அவற்றின் பலன்களையும் அறிந்து கொள்ளலாம்.
அழகுக் கூடும்….
அழகுக் குறிப்புகள்

































November 19th, 2011 at 2:36 am
மாய்ஸ்ச்சரைசர்:
ethuku english la name podunga,,,ple
ena mathari thereyatha vangalukku aathu use aakum,,,,,,ple
enakum pannunga
rly fast ple