» Will it happen? .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.

Friday, 4 Mar 2011

Will it happen?

swiss.jpgவரும்; ஆனா வராது!

நம்முடைய எத்தனையோ கோடிச் சகோதர சகோதரிகள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கையில் நம் அரசியல்வாதிகள் பலர் பல இலட்சம் கோடிகளை சுவிஸ்வங்கிகளின் இரகசியக் கணக்கில் போட்டு வைத்திருப்பது மனிதாபிமானமற்ற செயலே தவிர, வேறு என்ன?

விக்கி லீக்ஸ் நிறுவனமும் ஏன் சுவிஸ் வங்கிகளுமேகூட இந்திய அரசியல்வாதிகள் மட்டுமல்லாது தொழிலதிபர்களுமேகூட எவ்வளவு கோடிக்கோடியாய் வரி ஏய்த்தும், ஊழல் புரிந்தும், இலஞ்சம் வாங்கியும் போட்டு வைத்துள்ளனர் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன.

ஒரு பகுதியை இப்படி சமர்ப்பித்த அத்வானியேகூட, சோனியா தம் பெயரை இதில் சேர்த்தற்காக விளக்கம் கேட்கவே உங்கள் பெயர் தவறுதலாக இதில் சேர்ந்துவிட்டதற்கு மன்னிப்புக் கோருகிறேன் என்று பின்வாங்கிவிட்டார்.

ஆனால் இந்த விஷயத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி உறுதியாக இருக்கிறார். நான் தருகிறேன் ஆதாரபூர்வமான பட்டியலை. என்மீது வழக்குத் தொடரட்டும் என்று சவால் விடுத்திருக்கிறார்.

ஆளும் மத்திய அரசிடம் சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்திருப்போரின் பட்டியல் இருந்தும் அதனை ஏன் வெளியிடவில்லை என்று பாரதிய ஜனதா வேறு ஒரு புறம் குடைந்து கொண்டிருக்கிறது.

ஆக காங்கிரஸால் வெளியிடமுடியாத ஒரு பட்டியல் இருப்பதும் பாரதிய ஜனதாவுக்கு இப்படி பட்டியலை வெளியிடுவதில் ஆட்சேபம் ஏதும் இல்லை என்பதால் பாரதிய ஜனதா தலைவர்கள் சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருக்கவில்லை என்பதும் ஓரளவு தெளிவாகத் தெரிகிறது.

சுவிஸ் வங்கியில், இந்தியர்களால் போடப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற முடியுமா என்கிற கேள்விக்கு, நேரிடையாக விடைகூற முடியாது என்றாலும் அமெரிக்கா தம் நாட்டவர்கள் 12,000 பேர் போட்டிருந்த கள்ளப்ப ணத்தை மீட்கும் முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றியடைந்திருப்பதை பார்க்கும்போது இது சாத்தியமே என்கிற பதில் மறைமுகமாகக் கிடைத்திருக்கிறது.

சுவிஸ் வங்கியில் பணம் போட்டவர்கள், போட்ட பணத்திற்கு நியாயமான கணக்கைக் காட்டாவிட்டால் அதைக் கேட்டுப் பெறுவதற்கு உரிய நாட்டிற்கு உரிமை உள்ளது என்கிற விதி இருப்பது நம்பிக்கை ஊட்டுகிறது.

சுவிஸ் அரசு ஒரு நியாய அரசு. உலகப் போரில் எந்த அணியுடனும் சேராமல் நெருக்கடியான நிலைமையிலும் நடுநிலை வகித்த நாடு. இந்திய அரசு கோரினால் சுவிஸ் வங்கிகள் உடன்பட்டே தீரும். இந்த நாட்டில் 1948இல் அமல்படுத்தப்பட்ட இரகசியம் காக்கும் சட்டங்களை இன்று தளர்த்தப்பட்டுவிட்டன என்கிறார்கள்.

ஆனால் நம் அரசியல்வாதிகள் சுவிஸ் பணக் குவியல்கள் இந்தியாவை அடையாமல் எப்படியும் பார்த்துக் கொள்வார்கள்.

சுவிஸ் வங்கிகளின் இந்தியக் கறுப்புப் பண விவகாரத்தைப் பார்க்கும்போது ஒரு படத்தில் வடிவேலுவிடம் என்னெத்த கன்னையா சொல்வாரே, “இந்தக் கார் வரும் ஆனா வராது” என்று! இந்த வசனம்தான் என் நினைவிற்கு வருகிறது.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2011/02/18  ஏதேது நிகழ்ந்தேவிடுமா?

2011/02/11 கண் துடைப்பாகக் கருதலாமா?

2011/01/28 மருத்துவ ஏழைகள்

2011/01/21 மன்னித்து உயர்ந்த முதல்வர்!

2011/01/13 கண் திறக்கும் கல்விப் படப்பிடிப்பு!

2011/01/07 வெங்காயம் விதைத்த புதிய விதை

2010/12/31 அரசு இயந்திரத்தை எதிர்பார்க்கும் தனியார் இயந்திரங்கள்!

2010/12/24 ஜனநாயகம் தழைப்பது யார் கையில்?

2010/12/17 தெரியவில்லை புரியவுமில்லை!

2010/12/10 தோற்ற போதிலும் இது வெற்றியே!

2010/12/03 வெள்ளியையும் வெண்கலத்தையும் தங்கங்களாக்குவோம்!

2010/11/26 அரசியல் நாடகத்தின் இடைவேளை!

2010/11/19 மக்களுக்கு எதிராக மக்களே திரும்புவதா?

2010/11/12 காஷ்மீர்ப் புயல் பலவீனப்படுத்துங்கள்!

2010/11/04 ஆம்னி பேருந்துகளின் அநியாயப் போக்குகள்!

2010/10/29 எங்களைப் பிரிக்காதீர்கள்

2010/10/22 தெய்வமே கலங்கி நின்றால்?

2010/10/15 ஊனப்படுத்த முயன்றவர்களுக்கு விழுந்த சாட்டையடி!

2010/10/08 தலை நிமிர வைத்த தமிழர்கள்!

2010/10/01 சட்டங்களின் ஓட்டைகளும் பள்ளிகள் பெற்ற சாதகங்களும்

2010/09/24 மடியில் கனம் இல்லாவிட்டால்…

2010/09/17 தவிர்க்கப்பட்ட சேதம்!

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

Most Commented Posts


Leave a Reply