வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
ஒருத்தனாவது சுடுறானா பார்ப்போம்!
இந்த வெட்கக் கேட்டை எங்கு போய்ச் சொல்ல? துப்பாக்கியை எடுத்துக் சுடப்போக அது குண்டு வெளிப்பட்ட வேகத்தில் ஓர் அதிர்வு கொடுக்க, அது என் மேல் பல்வரிசையின்மீது உள்ள முரணையைத் தாக்க, இலக்கும் தவறிவிட, வலியை வேறு வெளியில் சொல்ல முடியவில்லை.
அவ்வளவு பெரிய மான் உருவம் (அட்டையில்தான்) இருக்க, அதை விட்டுவிட்டு எங்கோ குண்டு பாய்ந்தது எனக்கே ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.
பொருட்காட்சிகளில் 5 குண்டுகளில் (ஏர்கன்) 4-ஐக் குறிபார்த்துச் சுட்டு, கடை நடத்தியவரையே அசத்திய நானா இப்படி?
அடுத்த குண்டை இராணுவ வீரர் லோடு செய்ய, இந்தாருங்கள் மது சார் “நீங்க சுடுங்க” என்று துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு சுடும் மேடையிலிருந்து இறங்கியே விட்டேன்.
இவருக்குப் போய் 5 குண்டுகள் வாங்கிக் கொடுத்தோமே ன்று மது எண்ணியிருப்பார். அவர் சுட்டதும் இலக்குத் தப்ப, அடுத்த முறை ஜவஹர்தான் சுடவேண்டும் என்பதில் குறிப்பாக இருந்தேன். யாரும் பாராதவேளையில் முரணைத் தடவிப் பார்த்துக் கொண்டேன். நல்ல வலி. கொஞ்சம் அசத்தியிருந்தால் பல்லையே பெயர்த்திருக்கும் போல!
துப்பாக்கியைக் கொண்டு எதிரி இலக்கைத்தான் சுடுவார்கள் எல்லோரும். நானோ என்னைக் காயப்படுத்திக் கொண்டு நிற்கிறேன். ஜவஹர் அதிகம் மெனக்கெடாமல் ஒரு குண்டைத் தீர்த்துவிட்டு இறங்கிவிட்டார்.
அடுத்த குண்டிற்கும் ஆளைத் தேடி, எங்கள் வாகன ஓட்டுநரை அனுப்பி வைத்தேன்.
அவர் போனார் துப்பாக்கியைப் பிடித்தார். சரியாக மானின் உடலில் சுட்டு அசத்திவிட்டார். எல்லோரும் கைதட்டினார்கள்.
“என்னங்க இந்த டிரைவரு இவ்வளவு சர்வ சாதாரணமா சுடுறாரு?” என்றேன் வியப்பில்.
மது “தெரியாதா உங்களுக்கு? இவர் முன்னாள் இராணுவச் சிப்பாய்” என்றாரே பார்க்கலாம்.
இன்னும் ஒரு குண்டு பாக்கி. “நீங்கதான் சுடணும்” ரொம்பவும் வற்புறுத்திவிட்டார்கள்.
வாயிலிருந்து துப்பாக்கியைத் தள்ளி வைத்துக் கொண்டேன். துப்பாக்கி தரும் பின்புற அடியைத் தாங்க இனி முடியாது.
இலக்கைக் குறிவைத்தேன். ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். ஏழு பேர்களும் என்னையும் இலக்கையும் கவனிக்கிறார்களா, அல்லது தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார்களா என்று.
பார்த்தால் அனைவரும் என்னையும் இலக்கையுமாக மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் கவனச்சிதறலை முறைப்படுத்தினேன். இந்த முறை விடுவதில்லை. மிகப்பெரிய பகுதியான உடலில் ஒரு இராணுவ வீரர் சுட்டுவிட்டார். அதில் சுடுவதில் எனக்குப் பெருமையில்லை. மானின் கண்ணைக் குறி வைத்தேன். டிரிகரை அழுத்து முன் -
இறைவனை நினைத்துக் கொண்டேன் என எழுதுவேன் என்று எதிர்பார்த்தீர்களா?
அதுதான் இல்லை.
இராணுவ வீரர் சொல்லிக் கொடுத்தபடி மூன்று புள்ளிகளும் கண்ணை நோக்கி இருக்கின்றனவா என்று ஒரு முறை சரி பார்த்துக்கொண்டேன்.
துப்பாக்கியை அழுத்திய விதம் எனக்கே அதன் கழுத்தை நெரித்துக் கொல்வதுபோல் இருந்தது. இம்முறை குண்டு வெளியேறும்போது துப்பாக்கி சற்றும் பின்னோக்கி வரக்கூடாது என்பதற்காக இந்த இறுக்கல்.
கவனமாக டிரிகரை அழுத்தினேன்.
என்ன ஆச்சரியம்! மானின் கண் பகுதி சிதறி வெடித்தது.
ஆவ்! நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
வியட்நாமியர்கள் அனைவரும் மியாவ் மியாவ் என் கைதட்டிப் பாராட்ட “சார்! மானத்தைக் காப்பாத்திட்டீங்க!” என்று மது ஆர்ப்பரிக்க.
“எக்ஸலன்ட்! பிச்சுட்டீங்க லேனா சார்! முன்னாள் இராணுவ வீரரே உடம்பைக் குறி வைக்கிறார். நீங்க கண்ணுல சுடுறீங்க பிரமாதம்!” என்று ஜவஹர் சொல்ல…
பெருமை பிடிபிடவில்லை. என் வாழ்நாளின் சிறுசிறு மகிழ்ச்சியான காலங்களுள் இது முக்கியமானது என்பேன்.
“ஏதேது! விட்டா அடுத்த ஐந்து குண்டுகளையும் சரியாகச் சுடுவீங்க போலிருக்கே! வாங்கட்டுமா இன்னும் 5 குண்டுகள்?” என்றார் மது.
ஆசைதான். துப்பாக்கி சுடும் கலை பிடிபட்டுவிட்டதுபோல் தெரிந்ததால் அடுத்த ஐந்தில் மூன்றையாவது இலக்குத் தப்பாமல் சுடுவேன் என்கிற நம்பிக்கை வந்தது.
ஆனாலும் நான் தயங்கிவிட்டேன். காரணம், “வந்த இடத்து ஏழையான எனக்கு மறுபடி 5 குண்டுகளை வாங்கிச் சுட யோசனை. வந்த இடத்தில் கடன் வாங்கிப் பயணச் செலவுகளைச் செய்யக்கூடாது. அதே நேரத்தில் மதுசூதனனுக்குச் செலவும் வைக்கக் கூடாது.
எனவே என் தீரத்தைக் காட்டுவதற்குப் பதிலாக அடக்கி வாசிப்பது என் முடிவு செய்தேன்.
“வேண்டாம் போவோம்” என்றேன். மது என்னை மறுபடி அசைத்துப் பார்த்தார்.
“ஓர் இராணுவ வீரருக்கு இணையா (அப்படீங்களா?) சுடுறீங்க. சுடுற கலை உங்களுக்குப் பிடிபட்டுச்சு. ஏன் மறுபடி சுடக்கூடாது?”
பக்கத்திலிருந்த அந்தத் துப்பாக்கி சுடும் மையத்தில் இருந்த ஊழியர் ஒருவர் என் தோளைத் தட்டி, “சும்மா சுடுங்க, நல்லா சுடுறீங்க” என்று நான் புரிந்து கொள்ளும்படியாக ஏதோ சொன்னார் வியட்நாமிய மொழியில்.
மனது கிடந்து அல்லாடியது. ஆனாலும் நான் மறுத்தேன். நாம் கரியாக்கப்போவது துப்பாக்கி குண்டுகளை மட்டுமல்ல, மதுவின் காசையும் தான். எனவே கூடாது என்கிற கோணம்தான் என் தடுமாற்றத்திற்குத் தடைபோட்டது.
இந்த இடத்தில் மதுவின் பெருந்தன்மையை எண்ணிப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. மது அப்படி ஒன்றும் கணக்கு வழக்கு இல்லாதபடி பணம் வைத்திருப்பவர் அல்லர். சன் பார்மாவின் உயர் அதிகாரி. ஆனால் மனது, அப்படி ஒரு மனது!
பெரும் செல்வந்தவர்களை என் பயண அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். கடைகளில் ஏதும் வாங்கும்போது கூடவே வருவார்கள். பில்போடும்போது ஆளே தென்படமாட்டார்கள். அல்லது எங்கோ விலகி நிற்பார்கள். ஆனால் செலவு வந்தபோதெல்லாம் என் கையை அமர்த்தி பர்ஸ் எடுத்த மதுவுக்கு எப்படிப்பட்ட மனது!
அட! மதுவின் மனது! ஒரு திரைப்படத் தலைப்புப்போல இல்லை!
நாங்கள் புறப்படும் நேரம் இரண்டு அணிகள் வந்தன.
ஜவஹர் மதுவிடம் கேட்டேன் “சார்! நாம் உடனே போகணுமா? இவர்களுள் யாரும் குண்டுகள் வாங்குகிறார்களா, சுடுகிறார்களா என்று பார்க்க ஆசை!”
“ஓர் அவசரமும் இல்லை. சாப்பிடணும் வீட்டுக்குப் போகணும் அவ்வளவுதான். பார்த்துட்டே போவோம்.”
வந்த இரு அணிகளுள் மூவர் குண்டுகளை வாங்கினார்கள்.
அட! 15 குண்டுகள் ஒருத்தனாவது சுடுறானா பார்ப்போம்.
கிரிக்கெட்டும் சுடுவதும் ஒன்றுதான். ஒருவர் துப்பாக்கி (பேட்டும்தான்) பிடிக்கிற விதத்திலேயே சொல்லிவிடலாம். இவர் சுடுவாரா மாட்டாரா என்று.
சிலர் கற்றுக்குட்டிகள் என்பது துப்பாக்கி பிடித்த விதத்திலேயே தெரிந்தது. அதுதான் நடந்தது.
ஒருவர் சுடும்போது பார்வையாளர்கள் பார்க்க நன்கு வசதிகள் இருக்கின்றன.
குண்டுகள் இலக்குகளுக்குப் பின்னால் இருந்த மலைப்பகுதியில் இருந்த மலைப்பகுதியில் தூசிகளைக் கிளப்பினவே தவிர, ஒன்றும் இலக்கைத் துளைக்கவில்லை. 15 குண்டுகளும் வீண்!
எனக்கோ பெருமை பிடிபடவில்லை. ஆக, ஓர் இராணுவ வீரரும் நானும்தான் இலக்கைத் தைத்தவர்கள்.
சிறிது நேரம் காணாமல் போயிருந்த ஜவஹர் இப்போது என்னை நெருங்கி வந்து “குண்டுகளை விற்ற அலுவலகத்தில் உங்களை அழைக்கிறார்கள்.”
“என்னையா? எதற்கு?”
சிரித்தபடி, உங்களுக்கு அங்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.
வாசகர்களே! என்னவாக இருக்கும் நான் ஊகித்து விட்டேன். நீங்கள்?
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2011/02/11 துப்பாக்கி சுடப் பழகிக் கொடு!
2011/01/28 குண்டுகளின் மழை நடுவே தரப்பட்ட கல்வி!
2011/01/21 வயது கூடிப்போன இரகசியம்!
2011/01/13 கீழுலகம் பார்த்தேன்
2011/01/07 சிறிய வியட்நாமின் பெரிய மிரட்டல்!
2010/12/31 பெற்றோரைக் காக்க வேலையை உதறும் வியட்நாமியர்கள்!
2010/12/24 வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?
2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது
2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!
2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!
2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!
2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க
2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!
2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?
2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!
2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!
2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!
2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!
2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!
2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!
2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”
2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!
2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































