வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்

துப்பாக்கி சுடப் பழகிக் கொடு!
கூசி போர்களச் சுரங்கத்தைப் பார்ததுவிட்டுப் புறப்பட்ட நேரத்தில் நானும் ஒரு போர் வீரனாகக் கற்பனை செய்துகொணடதற்கு நல்ல வடிகால் இருப்பதாக மதுசூதனன் சொன்னபோது உணர்ந்தேன்.
ஹோ சி மின் நகருக்குத் திரும்பும் வழியிலிருந்து சற்றே விலகிச் சென்ற பாதையில் இருந்த ஒரு துப்பாக்கி சுடும் மையம்.
வாசலில் கடுமையான பாதுகாப்பு இருப்பதை உணர முடிந்தது. இரண்டு மூன்று இரும்புத் தடுப்புகள்; காவல் காக்கும் நபர்கள்.
ஏன் இவ்வளவு பாதுகாப்பு என்று சிநிதித்துப் பார்த்தேன். துப்பாக்கி குண்டுகளும் துப்பாக்கிகளும் சர்வசாதாரணமாகப் புழங்கும் இந்த இடத்திலிருந்து இவை வெளியேறிவிடக் கூடாது அல்லவா? என்று தோன்றியது.
நல்ல வேளையாகக் கூட்டம் ஏதுமில்லை. கூட்டமில்லையாவது? எவருமே இல்லை.
உள்ளே சுடப் போகிறோம் அல்லவா, எதை நோக்கிச் சுடவேண்டும்.
“மான்களை நோக்கி!”
“ஐயோ! நான் மாட்டேன்.”
“அசல் மான் இல்லீங்க. மான் போன்ற உருவப் படங்கள் இருக்கும். அவற்றை நோக்கிச் சுடவேண்டும்.”
நல்ல வேளை. ஏற்கனவே நம்ம நாட்டில் சல்மான்கான் இந்த விஷயத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.”
மதுவும், ஜவஹரும் இதையும் நகைச்சுவை என்று ஏற்றுக் கொண்டு சிரித்தார்கள்.
“எத்தனை ரவுண்ட் சுடுவீங்க” மதுதான் கேட்டார்.
“ஏன் கேக்குறீங்க?”
“ஒரு ரவுண்டு என்பது இங்கு ஐந்து (புல்லட்டுகள்) முறை. எத்தனை ரவுண்டு வாங்க?”
“வாங்குவதா?”
“ஆமாம். வாங்கி விட்டுச் சுடாவிட்டால் காசு போய்விடும்.”
“காசா?”
“பின்னே?”
“எவ்வளவு என்று சொன்னால் முடிவு எடுக்கலாம்.”
“இது என்ன மாநாட்டுத் தீர்மானமா? வேணுங்கிறவரை சுடுங்க.” ஆனாலும் மது ரொம்பத் தாராளம்தான். தன் மனைவிக்குப் பிடித்த எழுத்தாளர் என்ற வகையில் எனக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்க முன்வரத் தயாராக இருந்தார்.
அந்தந்தத் துப்பாக்கிகளின் படங்களைப் போட்டு அதற்கு நேரே கட்டணங்களைத் குறித்திருந்தார்கள். தொகைகள் மிரட்டலாக இருந்தன.
ஏ.கே.47 துப்பாக்கி இரகம் இருந்தது என்றாலும் “லேனா சார்! ஏ.கே.47 ரொம்பக் காஸ்ட்லியா இருக்கு. ஒரு தடவை டிரிக்கரை அழுத்தினால் ஏகப்பட்ட குண்டுகள் ஒரே நேரத்தில் பாயுமாம். அதனால்தான் இப்படி.”
“பரவாயில்லை. சாதாரணத் துப்பாக்கியே போதும்.”
“சாரி. ஏ.கே.47 அது இதுன்னு ஆசைக்காட்டிக் கூட்டிட்டு வந்துவிட்டு சாதா துப்பாக்கியை உங்கள் கைகளில் தர என்னவோ மாதிரி இருக்கு.”
அதெல்லாம் ஒண்ணுமில்லை கிடைக்கிற துப்பாக்கி போதும் - சுட!
இப்படி ஓர் உரையாடல் இந்தியாவில் தொலைபேசியில் நிகழ்ந்து அதைக் காவல்துறை ஒட்டுக் கேட்டிருந்தால் இந்நேரம் கைதாகியிருப்போம்.
வன்முறைகளும் தீவிரவாதங்களும் இல்லாத அமைதியான நாடு வியட்நாம் எத்துணையோ ஆண்டுகளாகத் தலைமுறை தலைமுறையாகப் போராடிப் பெற்ற சுதந்திரத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள்.
நாம் சுதந்திரத்தைக் கத்தியின்றி இரத்தமின்றிப் பெற்றுவிட்டு இன்று துப்பாக்கி குண்டுகளின் வெடிகுண்டுகளின் நடுவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எப்பேற்ப்பட்ட முரண்!
இந்தச் சிந்தனையை மது - ஜவஹரிடம் சொன்னபோது நீண்ட சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்கள். அவர்கள் முகத்தில் ஏக்கம் புகுந்துகொண்டதை என்னால் உணர முடிந்தது. மது தன் அடையாள அட்டையுடன் ஏகப்பட்ட பணத்தைக் கொடுத்தார்.
“இவ்வளவு பணம் செலவழித்துச் சுடத்தான் வேண்டுமா?”
“இந்த மாதிரி அனுபவமெல்லாம் நம்மூர்ல கிடைக்காது. சும்மா சுடுங்க.”
“சரி வாங்க.”
ஒரு சிறு சீட்டு தந்தார்கள். இதை எடுத்துக்கொண்டு உள்ளே போனோம்.
ஓர் உயரமான மதில் சுவர் கட்டி அதன் நடுவே ஜன்னல் திறப்புகள்போல் இடைவெளி விட்டுக் கட்டியிருந்தார்கள் எங்களைக் கண்டதும் இராணுவ உடையிலிருந்த நான்கு பேர் நெருங்கி வந்தார்கள். எங்களிடம் இருந்த சீட்டை வாங்கிக்கொண்டு ஒருவர் உள்ளே போனார். ஒரு துப்பாக்கியும் ஒரு சிறு அட்டைப்பெட்டியில் ஐந்து குண்டுகளுமாய் எடுத்து வந்தார்.
வங்கி வாசல்களில் விமான நிலையங்களில், கறுப்புப் பூனை படையினரிடம் அசல் துப்பாக்கிகளைப் பார்த்தது உண்டு.
ஆனால் ஓர் அசல் துப்பாக்கியைக் கையில் வாங்கியது இதுதான் முதல் முறை. புல்லட்டுகள் பார்க்கவே அச்சம் தந்தன. பளப்பள என்று பளபளத்ததுடன் கூர்மையாக ஆரம்பித்து வட்டமாக முடிந்திருந்தன.
புல்லட்டுகளை அந்த இராணுவ வீரர் என் கையில் தரவில்லை.
நீங்க சுடுங்க, நீங்க சுடுங்க முதலில் என்று மதுவிடமும் ஜவஹரிடமும் எங்கள் வாகன ஓட்டுநரிடமும் நீட்டிப் பார்த்தேன். மூவரும் மறுத்துவிட்டார்கள்.
“நீங்க சுடுங்க. உங்களைக் கேட்டுத்தானே கூட்டி வந்தோம்.”
“அதெல்லாம் சரி. நீங்க சுடுறதைப் பார்த்துவிட்டு நான் சுடலாம்னு பார்த்தேன்.”
“அதெல்லாம் இல்லை. நீங்க சுடுறீங்க. நாங்க பாக்குறோம்.”
நெருங்கி வந்த இராணுவ வீரர் ஒரு ஹெட் போன் போன்ற கருவியை காதுகள் இரண்டும் மறையும்படி மாட்டிவிட்டார். சத்தம் காதைத் துளைக்குமாம். செவிப்பறையைக் கிழித்துவிடுமாம்.
“இதற்கு முன்பு துப்பாக்கி பிடித்த பழக்கம் உண்டா?” கேட்டவர் இராணுவ வீரர். அதுவும் வியட்நாமிய மொழியில் நான் சொன்னேன். “இல்லை. ஏர்கன் என்று சொல்லப்படும் துப்பாக்கியைப் பிடித்து பலூன் சுட்டிருக்கிறேன்” மது சிரித்துவிட்டு நான் சொன்னதை வியட்நாமியரிடம் சொல்ல, அந்த வியட்நாமியரும் தம்முடைய சொத்தைப் பற்கள் தெரிய “கெக்கேபிக்கே” என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
“யோவ்! போதும்யா சிரிச்சது! துப்பாக்கி கையாளச் சொல்லிக்குடு” என்று நான் சொல்ல,
மது சொன்னார் “சாரி! இதை நான் அவனிடம் மொழிபெயர்த்துச் சொல்லப் போவதில்லை.”
“நல்ல வேளை!”
“துப்பாக்கி முனையில் நின்று கொண்டிருக்கிற ஒரு கம்பி, நடுவே இருக்கிற துருத்திக்கொண்டிருக்கிற பாகத்தில் உள்ள ஒரு மையமான வெட்டு உங்கள் கண் அருகே இருக்கிற துளை இந்த மூன்றும் எந்த இலக்கை நீங்கள் சுட விரும்புகிறீர்களோ அதனை நோக்கி ஒரே நேர்க்கோட்டில் அமையவேண்டும். சுடும்போது துப்பாக்கி அதிரும். உறுதியாகப் பிடிக்காவிட்டால் துப்பாக்கி முன்பின் பக்கவாட்டில் ஆடும். இது நிகழ்ந்தால் குறி தவறி, குண்டு திசை தப்பிவிடும்.
எனவே உறுதியாகப் பிடியுங்கள். இடக் கை துப்பாக்கியின் முன்பகுதிக்கு நகரவேண்டும். அதன் அடிப்பகுதிக்கு நகரவேண்டும். அதன் அடிப்பகுதியை உள்ளங்கைக்கும் விரல்களுக்கும் நடுவே உள்ள பகுதியால் பிடிக்கவேண்டும். வலக்கை துப்பாக்கியின் அடிப்பகுதியை இப்படிப் பிடிக்கவேண்டும். உடம்பு இப்படி வளையவேண்டும். துப்பாக்கி உங்கள் உடம்பின் வலப்புறம் வரவேண்டும். (அடடே! உங்களுக்குமல்லவா சொல்லிக் கொடுத்துவிட்டேன்)
நான்கு வியட்நாமிய வீரர்கள், மது, ஜவஹர், எங்கள் ஓட்டுநர் என ஏழு பேர் பார்வையாளர்களாக ஆக, துப்பாக்கியைப் பிடித்தால் பொணம் கனம் கனத்தது.
எல்லோரும் நம்மையே பார்க்கிறார்கள் என்பதும் ஒரு மாதிரியாக இருக்க, ஏகப்பட்ட நேரம் எடுத்துக் கொண்டு சுட அதிர்ந்த துப்பாக்கி என் மேல் முரணையை ஓர் இடி இடித்தது. வலி மேலிட, குறி தப்பிவிட அனைவரும் என்னைப் பரிதாபமாகப் பார்க்க,
வெட்கம் என்னைப் பிடுங்கித் தின்றது.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2011/01/28 குண்டுகளின் மழை நடுவே தரப்பட்ட கல்வி!
2011/01/21 வயது கூடிப்போன இரகசியம்!
2011/01/13 கீழுலகம் பார்த்தேன்
2011/01/07 சிறிய வியட்நாமின் பெரிய மிரட்டல்!
2010/12/31 பெற்றோரைக் காக்க வேலையை உதறும் வியட்நாமியர்கள்!
2010/12/24 வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?
2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது
2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!
2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!
2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!
2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க
2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!
2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?
2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!
2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!
2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!
2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!
2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!
2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!
2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”
2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!
2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































