» 2011 » February .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
healthy life

Posted on Friday 25 February 2011

cool-fever.jpgநோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள்

உடல் நடுக்கம் தரும் காய்ச்சலா?

நுரையீரல்களில் திடீரென ஏற்படும் தொற்று நோய், நிமோனியா கிருமிகள், தூசு, காற்று இவற்றின் மூலம் பலவும் நோய் இது.

நெஞ்சில் குத்துவது போல் வலி, தலைவலி, கடுமையான காய்ச்சல், ஜலதோஷம், தலை - தொண்டை ஜில்லென்று இருத்தல் ஆகியவை நிமோனியா காய்ச்சலில் அறிகுறி. இந்நோய் இருந்தால் சளி பழுப்பு அல்லது துருப்பிடித்த இரும்பு போன்ற நிறத்தில் இருக்கும். மூச்சுவிடச் சிரமமாக இருக்கும்.

நுரையீரல்களில் ஏற்படும் இந்த நோய்க்கு உடனே நவீன மருத்துவ முறைப்படி விரைந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இத்துடன் இயற்கை உணவுமுறைத் திட்டத்தைப் பின்பற்றினால் இந்த நோயை முற்றிலும் விரைந்து குணமாக்க முடியும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வந்தால் நுரையீரல்களில் அழச்சி ஏற்படுவதும், நிமோனியா நோய் தாக்குவது முன்கூட்டியே தடுக்கப்படும்.

முதல் மூன்று நாட்கள் ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாம்பழம், சாத்துக்குடி, தக்காளி, பப்பாளி - இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து சாறாக அருந்த வேண்டும். ஒரு கப் சாறு என்றால் அதே அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். மொத்தம் ஐந்து வேளைகள் தினமும் அருந்தலாம். பிறகு ஒரு வாரம் பழங்கள், காய்கறிகள், முளைவிட்ட தானியங்கள் முதலியவற்றைச் சாப்பிட வேண்டும்.

இப்படிச் செய்தால் நிமோனியாக் காய்ச்சல் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும் இந்தக் காலகட்டத்தில் டீ, காபி, மது, சிகரெட், ஊறுகாய், இறைச்சி முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும், எண்ணெயில் பொறித்த உணவுகள் வேண்டாம்.

மணல்வாரி, கக்குவான், இருமல், ப்ளு, ப்ராங்க் டைஸ், ஆஸ்துமா ஆகிய நோய்களைத் தொடர்ந்து இந்த நோய் ஏற்படுகிறது. குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய் இது. எனவே, சுகாதாரமும், கவனமும் முக்கியம்.

நிமோனியா காய்ச்சல் வந்துவிட்டால் இஞ்சிச் சாறு எலுமிச்சை சாறு இவற்றில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தவும் அல்லது வெள்ளைப் பூண்டு, வெங்காயம் இவற்றைச் சாறாக்கி அருந்தவும். மூன்றாவதாக, துளசிச் சாறு, ஆரஞ்சுச் சாறு, காரட் சாறு இந்த மூன்றையும் மாற்றி மாற்றி அருந்தவும்.

நிமோனியா காய்ச்சலை கட்டுப்படுத்த எள்ளுருண்டை சாப்பிடலாம் அல்லது எள்விதைகளைக் கஷாயம் வைத்து இறக்கி, ஆறியதும் உப்பும் தேனும் சேர்த்து அருந்தலாம்.

தினமும் நான்கு வேளை வெந்தயக் காப்பி அருந்த வேண்டும். வெந்தய விதைகள் உடலில் நன்கு வியர்வையை உண்டு பண்ணி விஷப் பொருட்களை வெளியேற்றி விடும். இப்படிச் செய்தால் நிமோனியாக் காய்ச்சல் படிப்படியாகக் குறையும். இந்தக் காபியின் அளவைக் காய்ச்சல் குறையக் குறைய குறைத்துக் கொள்ளலாம். இந்தக் காப்பியில், விரும்பினால் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.

நிமோனியாக் காய்ச்சலை முன் கூட்டியே தடுக்க விரும்புகிறவர்கள் வெள்ளைப் பூண்டு, வெந்தயம், வெந்தயக்கீரை, தக்காளி, நல்லெண்ணெய், ஆரஞ்சு, ஆப்பிள், காரட் முதலியவற்றை அவ்வப்பேது சேர்த்து வந்தால் போதும். இதன்மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.இந்த எதிர்ப்புச் சக்தி மற்ற நோய்களையும் எதிர்க்கும்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய பொதுவான நோய்களுக்கான உணவு முறைகள்

2011/02/18  காய்ச்சலை குணமாக்கும் உணவு முறை!

2011/02/11 ஒற்றைத் தலைவலியா?

2011/01/28 வழுக்கையா?

2011/01/21 தலைவலியா?

2011/01/13 ஜலதோஷமா?

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2011/01/07 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்…? - தொடர்ச்சி

2010/12/31 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்?

2010/12/24 இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி

2010/12/10 வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்

2010/12/03 கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான இலைக்காய்கறி

2010/11/26 பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி

2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 3:04 am
Filed under: Uncategorized
Head of Everyone

Posted on Friday 25 February 2011

writer-lena2.jpgநான் ஏதோ அரசியலில் தலையங்கம் பற்றி எழுதப் போகிறேன் என்று எவரும் அவசரப்பட்டு முடிவிற்கு வந்துவிட வேண்டாம்.

பொதுவான தலைமைகள் என்று சொல்லப்படுகின்ற இல்லத் தலைமையையோ, நிறுவனத் தலைமையையோ ஒரு நிகழ்வின் தலைமையையோ பற்றியே குறிப்பிட இருக்கிறேன்.

பொறுப்பில் இருப்பதால் இவர்கள் சொல்லும் சொற்களுக்கு மதிப்பு அதிகம். பாராட்டி நான்கு வார்த்தை சொன்னால் கூட ‘அவரே சொல்லிட்டாரு’ என்று பலரிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். தவறாகவோ, கடுமையாகவோ ஏதும் சொல்லி விட்டால், இருக்கும் பதவியின் எடை காரணமாக அதற்கும் வீரியம் அதிகம். இதன் கெடுதலான பலன்கள் பல மடங்கு அதிகம் என்கிறேன். மற்றவர்கள் இதே வார்த்தைகளைச் சொல்லியிருந்தால் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்கிறேன். எனவே வார்த்தைகளில் வரையறை தேவை. தந்தை சொன்னால் மறுவார்த்தை பேசாத மகன்கள் அந்தக் காலத்தில் இருந்தார்கள். ‘ஏம்பா அப்படிச் சொன்னீங்க?’ என்று விளக்கம் கேட்ட நடுத்தரத் தலைமுறையும் இருந்தது. இன்று ‘முடியாது போ!’ என்று சொல்லுகிற மகன்கள் முளைத்துவிட்டார்கள்.

கேள்வி கேளாத கீழ்ப்படிதலை இங்கு உள் ஆன்மிகத் தலைமைகள் தங்கள் பக்தர்களிடம் எதிர்பார்க்கின்றன. நான் இளைஞனாக இருந்த காலத்தில் ஓர் ஆன்மிகத் தலைவர் அழைத்தார் எனறு போனேன். நாங்கள் ஒரு விஷயம் குறித்து உரையாடியபோது, ஒரு பெரிய மனிதர் வந்தார். அவரிடம் இந்த ஆன்மிகத் தலைவர், ஓர் ஊர்க் கோயிலைக் குறிப்பிட்டு, ‘அந்தக் கோயில் கும்பாபிஷேகம் உன் பொறுப்பு’ என்றார். பெரிய மனிதரின் தலை ஆடியதே தவிர, அவர்கள் சொன்ன செய்தி (ஐயோ! என் தலையில் கட்டிட்டீங்களே சாமி!’) எனக்குத்தான் தெரியும்.

தாய், தந்தை, ஆசிரியர், மரியாதைக்குரியவர்கள் என எவர் சொன்னாலும் நமக்கும் சரி என்று பட வேண்டும். கேள்வி கேளாத கீழ்ப்படிதல் யாருக்குப் பொருந்தும் என்றால்… மற்றவர்களின் இதயம் நுழைந்து அதில் ஆழ்ந்து தோய்ந்து அதன் அடிப்படையில் மனித நேயத்தோடும் சீர்தூக்கியும் செயல்படுகிறவர்களாக இருக்க வேண்டும். இந்தக் குணம்தான் பல தலைமைகளிடம் இல்லையே!
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2011/02/18  பரிசீலனை செய்யும் பண்பு!

2011/02/11 நம் நேரங்கள் எப்படிக் கசிகின்றன?

2011/01/28 கேள்வி கேளாத கீழ்ப்படிதல்

2011/01/21 நாமும் யந்திரன்களே!2011/01/13 அயர்வற்ற மனத்திற்கு உயர்வு தர என்ன வழி?

2011/01/07 ஐம்பது சதவிகித மனநிலையுடன் அணுகுவோம்!

2010/12/31 பேசிப்பேசியே காலத்தைக் கடத்துபவர்கள்!

2010/12/24 குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!

2010/12/17 உரிமை உள்ளது என்று வார்த்தைகளைக் கொட்டுவதா?

2010/12/10 நாம் மறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள்!

2010/12/03 தெரிந்து என்ன ஆகப்போகிறது?

2010/11/26 நம் மகிழ்வின்போது கவனிக்கப்பட வேண்டியவை…

2010/11/19 மனிதர் நீங்கள்!

 2010/11/12 மனத்தைத் திசை திருப்பும் வழிகள்!

2010/11/04 புதுக் குழியைத் தோண்டிப் பழைய குழியை நிரப்புவதா?

2010/10/29 நம்மை உயர்த்தும் நம் வார்த்தைகள்

2010/10/22 நீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 2:53 am
Filed under: Uncategorized
vietnam travel

Posted on Friday 25 February 2011

hanoi-temple.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

“மொழியால் அடிக்கிறாங்க இவங்க!”

கூசி போர்க்களத்தின் துப்பாக்கிச் சுடும் மையத்தில் எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சிக் காத்திருந்தது என்று குறிப்பிட்டு அதை உங்கள் ஊகத்திற்கு விட்டிருந்தேனே, நினைவிருக்கிறதா?

நம் நாட்டில் சரியாகச் சுட்டால் தண்டனை. வியட்நாமில் சரியாகச் சுட்டால் பரிசு!

ஆம். என் ஊகம் சரி! நான் சரியாகச் சுட்டேன் என்பதற்காகப் பரிசு கொடுக்கத்தான் என்னை அழைத்தார்கள்.

ஒரு பெரிய விண்ணப்பத்தாளை நீட்டினார்கள். அதில் மருந்திற்குக்கூட ஆங்கிலம் இல்லை. “இதைப் பூர்த்தி செய்யுங்கள்” என்றார்கள்.

“யோவ்! என்ன கிண்டலா பண்றீங்க? என்று கேட்கலாம் போலத் தோன்றியது. ‘வேண்டாம்யா உங்கள் பரிசும் கிரிசும் என்று சொல்லலாம் போல இருந்தது. அந்த விண்ணப்ப பாரத்தை மலங்க மலங்க விழித்தபடி மதுவிடம் பரிதாபமாக நீட்டினேன்.

‘மொழியால் அடிக்கிறாங்க இவுங்க. என்னைக் காப்பாத்துங்க மது சார்’ என்பது போல் இருந்தது என் பார்வை.

மதுவிடம் நீட்டக் காரணம் இருந்தது. இவர் வியட்நாமில் வெகு காலமாய் இருக்கிறார். வியட்நாமிய மொழியைக் கொஞ்சமாவது படிப்பார் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது.

இவரும் என்னைப் போலவே பார்வை பார்த்துவிட்டு, அந்த அதிகாரியிடம் வியட்நாமிய மொழியில் பேசினார். அவர் பேசியதை என்னால் ஊகிக்க முடிந்தது.

‘என் இந்திய நண்பருக்கோ எனக்கோ வியட்நாமிய மொழி தெரியாது. நானோ கொஞ்சம் பேசுவேன் என்று மது சொல்லியிருக்க வேண்டும்.

அவரோ அதெல்லாம் எனக்குத் தெரியாது. பூர்த்தி செய்து கொடுத்தால்தான் பரிசு. இல்லாவிட்டால் பரிசு கிடையாது. நடையைக் கட்டுங்க என்று பேசியதுபோலத் தெரிந்தது.

“என்ன மது சார்! இவனுங்க சரியான கிறுக்கனுங்களா இருக்கானுங்க! இங்கு சுட வருகிறவர்கள் வெளிநாட்டவர்களாக இருக்கக் கூடாதா? வியட்நாமியர்களுக்கு மட்டும்தான் சரியாகச் சுடத் தெரியுமா? அவர்களுக்கு மட்டும்தான் பரிசா? இந்த அநியாயத்தை எங்க சார் போய்க் கேட்குறது?”

“இருங்க வர்றேன்.” என்று போனவர் வெகு தொலைவில் இருந்த எங்கள் கார் ஒட்டுநரிடம் போனார்.

போய்விட்டு, அவரை அழைத்து வராமல் வெறுங்கையுடன் வந்தார்.

“என்ன சொல்றார் நம்ம ஓட்டுநர்? அவரும் சரியாக இலக்குத் தப்பாம சுட்டாரே. அவராவது வந்து இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுத்துப் பரிசு வாங்கிக்கலாமா? நமக்கும் பூர்த்தி செய்து தந்து உதவலாம்ல? அவர் உள்ளூர்காரர்தானே?”

“இதையேதான் நான் கேட்டேன்.”

“என்ன சொல்றார்?”

“அவருக்கு இவங்க தரும் பரிசெல்லாம் வேண்டாமாம்.”

“அடப் பாவி மனுஷா! எனக்காவது விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தந்து பரிசு வாங்க உதலாம்ல?” என்றேன்.

“இதையும் கேட்டேனே!”

“அதற்கு என்ன சொன்னார்?”

“அந்த விண்ணப்பப் படிவத்தைத் தூக்கி எறிஞ்சுட்டு வாங்க! நான் இராணுவத்தில ஆளுங்களையே சுட்டு வீரமெடல் வாங்கினேன். இவனுங்க தர்ற பரிசு எல்லாம் ஜுஜுபிங்கிறான்.”

“அவருக்கு ஜுஜுபியாக இருக்கலாம். வந்த இடத்தில் பழக்கமில்லாத முரட்டுத் துப்பாக்கியைத் தூக்கி இரண்டு குண்டுகளுள் ஒன்றைச் சரியாக இலக்கு நோக்கித் தைத்திருக்கிறேன். எனக்கு இந்த விருது பெரிசு இல்லையா?”

“இதையும் சொன்னேனே!”

“அட! என் மனசு அறிஞ்சு ஒண்ணு விடாமப் பேசியிருக்கீங்க.”

“பின்னே?”

“இதுக்கு என்ன சொன்னார்?”

“சிரிக்கிறான். இதெல்லாம் ஒரு பரிசுன்னு வாங்குறதுக்கு மெனக்கெடுறீங்களே வாங்க பேசாம! எவன் போய் இதுக்கெல்லாம் நேரம் செலவழிக்கிறதுங்குறான்.”

“ஆனாலும் உங்க ஓட்டுநருக்கு என் மனசு புரியமாட்டேங்குது. பரிசை வீட்டிற்கு வாங்கிட்டுப் போய் என் வட்டத்திலெல்லாம் காண்பிச்சுப் பெருமையடிக்கணும்போல இருக்குன்னு சொல்லுங்க.”

இல்லை. எங்க ஆளு சரிப்பட்டு வரமாட்டான். நான் சாட்சிக்காரனுக்குப் பதிலா சண்டைக்காரன் கிட்டேயே போகிறேன்.”

“என்னமாவது செய்து எனக்கு உரிய பரிசை வாங்கிக் குடுங்க.”

“சரி போறேன்” என்றவர் துப்பாக்கி குண்டுகள் விற்கும் கெளன்டருக்குள்ளேயே நுழைந்து பெரிய இரகளை செய்யாத குறைதான்.

மொழி தெரியாவிட்டால் நிச்சயம் நாங்கள் வீடு திரும்பியிருப்போம். மது வியட்நமிய மொழி பேசக் கூடியவராகைால் பெரிய விவாதத்தில் இறங்கிவிட்டார்.

ஒரு வழியாய் அந்த விண்ணப்பப் படிவத்துடன் வெளியில் வந்தார். என்னிடம் நீட்டி இதில் ஒரு கையெழுத்துப் போடுங்க என்றார்.

“பூர்த்தி செய்வது யார்?”

“அதெல்லாம் வேணாம். அவனுங்க பார்த்துப்பானுங்க. நீங்க ஒரு கையெழுத்து மட்டும் கடைசியில் போடுங்க” என்றார். மது குரலில் சற்றே பதற்றம் தெரிந்தது. உள்ளே சூடான விவாதம் போதும்.

கையெழுத்தை வாங்கிக் கொண்டு உள்ளே போனவர் நான் கணித்ததைவிட அதிக ரேம் எடுத்துக் கொண்டுவிட்டு வந்தார்.

ஏதோ பெரிய பரிசு உள்ளே இருந்து வரப்போகிறதாக்கும். துப்பாக்கி சுடும் மையத்தின் தலைவரே அதைக் கொண்டுவந்து பலர் முன்னிலையில் வழங்க, மது, ஜவஹர் மையத்தின் பொறுப்பாளர்கள் மத்தியில் பலத்த கரவொலியுடன் வாங்கப் போகிறேன் என்று கற்பனை செய்து பார்த்தால் - ஒன்றும் நிகழவில்லை.

“வாங்க போலாம்.” என்றார் மது.

“பரிசு?”

“குடுத்தானுங்க குடுத்தானுங்க!”

“என்ன மது சார் சலிப்பாப் பேசுறீங்க? குடுத்தாங்கன்னு சொல்றீங்க. வெறும் கையோட வர்றீங்க?”

“இந்தாங்க அந்தப் பரிசை நீங்களே பாருங்க” என்று மகாப் பொடிசான ஓர் அட்டை டப்பாவைக் கொடுத்தார். பிரித்துப் பார்த்தால் - அடச் சை! இதுக்குத்தானா இவ்வளவு போராட்டம் என்று தோன்றியது அந்தப் பரிசு”.

வெறும் ஒரு சாவிக் கோர்வை!

எப்படி இருந்திருக்கும் எனக்கு!

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2011/02/18  ஒருத்தனாவது சுடுறானா பார்ப்போம்!

2011/02/11 துப்பாக்கி சுடப் பழகிக் கொடு!

2011/01/28 குண்டுகளின் மழை நடுவே தரப்பட்ட கல்வி!

2011/01/21 வயது கூடிப்போன இரகசியம்!

2011/01/13 கீழுலகம் பார்த்தேன்

2011/01/07 சிறிய வியட்நாமின் பெரிய மிரட்டல்!

2010/12/31 பெற்றோரைக் காக்க வேலையை உதறும் வியட்நாமியர்கள்!

 2010/12/24 வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?

2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது

2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!

2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!

2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!

2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க

2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!

2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?

2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!

2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!

2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!

2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!

2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!

2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 2:38 am
Filed under: Uncategorized
Junior kelvi pathil

Posted on Friday 25 February 2011

thalaivar.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

நா.சிதம்பரம் நாச்சியப்பன், கல்லல்.

இன்றைய காதலர்கள்?

காதலிக்காக தாஜ்மகால் கட்டுவதாகச் சொல்வார்கள். ஆனால் அதெல்லாம் வேண்டாம். தாலிமட்டும் கட்டுங்கள் என்று சொன்னால் இந்த ஷாஜஹான்கள் காணாமல் போய்விடக் கூடும். இவர்கள்தாம் இன்றைய காதலர்கள்.

ஏ.அப்பு, கல்கி நகர்.

புதுச்சேரி அரசியலும் சூடு பிடித்திருக்கிறதே?

அங்கே இரண்டு சாமிகள் இருக்கிறார்கள். நாராயணசாமி, ரங்கசாமி. இருவருக்கும் பக்தர்கள் இருக்கிறார்கள். ஆனால் இருவரில் யாருக்குக் கிடா வெட்டுகிறார்கள், யார் கிடாவாகிறார்கள் என்பது விரைவில் தெரியும்.

கே.வினோத்குமார், சென்னை-83.

நீங்கள் எதை நேசிக்கீறீர்கள்? தொலைக்காட்சியையா, வானொலியையை?

வானொலியை! கண்களுக்கு மூடும் வசதியும், காதுகளுக்கு மூடாத வசதியும் பிறவிலேயே இருப்பது கண்டு நீங்களே இதைத் தெரிஞ்சுக்கிட்டு இருக்கணும்.

ஜே.பிரகாஷ், சென்னை.

வாழ்க்கை எப்போது இனிக்கும்?

ஐம்பதுக்குப் பின்னால். அப்போதுதான் பலருக்கும் சர்க்கரை வருகிறது. அதுவும் ரேஷன் இல்லாத சர்க்கரை.

டி.கஜா, என்.எஸ்.கே.நகர்.

காதலர் தினம் தேவையா?

தேவை. 365 நாட்களுக்கும். இதற்காக ஒரு நாள் என்பது அது டுபாக்கூர் காதல்.

டி.மதன், கோயமுத்தூர்

வெங்காய விலை குறைத்துவிட்டதே?

ஒரு ஓட்டு வைத்துக் கொண்டு இந்த அரசாங்கத்தை நீங்கள் ரொம்பவே பாடாய்ப் படுத்துகிறீர்கள். இல்லாவிட்டால் வெங்காயம் போல இவர்களும் இவ்விஷயத்தில் அவர்கள் தோலை உரித்துக் கொள்ள வேண்டி வந்திருக்காது.

கே.சாமிநாதன், காட்டாங்கொளத்தூர்.

எகிப்து அதிபர் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறாரே?

எகிப்துக்கும் நான்கெழுத்து. இந்தியாவுக்கும் நான்கெழுத்து. பிரமிடுகளின் ஊர்க்காரர்களுக்கு உள்ள தைரியம் பிரமாண்டங்களுக்கு இல்லையேன்னு யோசிக்கிறேன்.

டி.ராஜா, சென்னை-60.

செல்போன் கட்டணங்கள் உயர்ந்தால்?

நிறுவனங்களுக்குள் போட்டி வராது. மிஸ்டு கால்களுக்குள் போட்டி வரும்.

பி.சுரேஷ்பாபு, காஞ்சிபுரம்.

மேடைகளில் இன்று முட்டைகள் வீசுவது குறைந்து வருகிறதே?

முட்டை விலை எகிறிப் போச்சு! அதனால் வார்த்தைகளையே அழுகவிட்டு அதை வீசுகிறார்கள். எப்படியோ - அழுகல்தான் மற்றவர்கள் மீது வீசுகிறார்கள்.

என்.கார்த்திக், அம்பத்தூர்.

தி.மு.க.வின் இன்றைய அரசியல்?

அண்ணா சொன்ன மல்லிகைகளுக்கு இன்று ஏகக் கிராக்கி! அதாங்க, மாற்றான் தோட்டத்து மல்லிகைகளுக்கு குளிர்பதனக் கிடங்குகளையே இப்போது ஏற்படுத்தி இருக்கிறார்கள். எவ்வளவு நாளானாலும் இவற்றைக் கெடாமல் வைத்திருக்க ஓரு ஐடியா!

எஸ்.பி.சீனிவாசன், சென்னை-24.

சோனியாவிடம் மன்னிப்புக் கேட்ட அத்வானி பற்றி?

ஸ்விஸ் கணக்கு விவகாரத்தில்தானே. இந்தப் பெருந்தன்மை யாருக்கு வரும். அரசியலில் ஓர் அரிய மனிதர் அத்வானி!

எஸ்.வள்ளிசாய்ராம், சிங்கப்பூர்.

2 ஜி பிரச்சனை எப்போது அடங்கும்?

ஏ.கே. கங்குலிஜி, ஜி.எஸ்.சிங்விஜி என்ற இரண்டு ‘ஜி’க்கள் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வரை இந்த 2 ஜியானது 4ஜி, 8ஜி, 16 ஜி, 32 ஜி என்று பெருத்துப் போகுமே தவிர சிறுத்துப் போகாது. இதற்கு இந்த ஜூனியர் (ஜி) பொறுப்பு!

பி.ராஜசேகர், திருப்த்தூர்.

பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியிருக்கிறதே?

நாம் சாப்பிட்ட பாலைவிட, சாலைகள் சாப்பிட்ட பாலில் புரதச் சத்து கூடியது கண்டு மகிழ்ச்சி.

அந்தோனிராஜ், நாகை.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவது பற்றி?

நம் மீனவர்கள் நமக்கு மனிதர்கள். ஆனால் இலங்கைக்கோ இவர்கள் மீன்களாகத் தெரிவது வேதனைக் காட்சி!

கே.எஸ்.லக்ஷ்மிநாராயணன், சென்னை-118.

காங்கிரஸில் சோனியாவை அடுத்து?

சோனியாஜிக்கு அடுத்து ஆர்.ஜி.தான்! அதில் என்ன சந்தேகம்? எதைச் சொன்னாலும் அதை ‘ஜி’யில் சொன்னால்தான் இப்போது மனசிலே நிக்குது.

வைகை பாலு, மதுரை-1.

இந்தியாவின் இன்றைய நடப்பு?

விலைவாசிகளும், ஊழல்களும் இன்று மாரத்தானில் உள்ளன. இந்த ‘ஜெயிக்கப் போவது யாரு?’ சீரியலைப் பார்த்துப் பார்த்தே நமது இந்தியர்கள் பசியாறிக் கொண்டிருக்கிறார்கள்.

பி.முருகன், கூடுவாஞ்சேரி.

மாயாவதியின் ஷூக்களைத் துடைத்த டி.எஸ்.பி., பதம்சிங்கின் சேவையைப் பற்றி?

ஏற்கெனவே காவல் துறையின் சிறந்த சேவைக்காக ஜனாதிபதியின் விருதைப் பெற்ற இவர், இந்த சேவைக்காகவும் அதே விருதை இன்னொரு முறை பெறலாம். பரிந்துரைக்க மாயாவதி தயார்! வாங்கிக் கொள்ள பதமும் ரெடி! பார்ப்பதற்குத்தான் நாம் இல்லை.

அப்துல் ஹமீது, வேலூர்.

‘ஆட்சியில் பங்கு’ என்ற தமிழக காங்கிரஸின் கோரிக்கை நியாமானதா?

நியாயமானதே. ஆனாலும் ஏற்பது இகழ்ச்சி என்பதை அறியாதவர்கள் ‘ஐயமிட்டு உண்’ என்பதையும் அறியாமல் இருப்பது நூற்றுக்கு நூறு சாத்தியமே.

சி.கே.மூர்த்தி, தஞ்சாவூர்.

கூட்டணித் தொகுதி உடன்பாடுகள் எப்போது முடியும்?

எந்தச் கடையிலும் சூட்கேஸ் விற்பனைகள் இன்னும் சூடுபிடிக்கவில்லை. அவை சூடு பிடித்தால்தான் தொகுதி உடன்பாடுகள் கைமாறிய மாதிரி அதுவரை இந்த கேள்வி கேட்கிற, இந்த பதில் சொல்கிற கைமாற்று எல்லாம் நமக்குள் வேண்டாம்.

எஸ்.மணிகண்டன், கோலடி.

பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்மோகன்சிங்கின் பேட்டியைப் பார்த்தீரா?

பார்த்தேன். எறும்பு ஒன்று தன் உள்ளங்கையில் பல குட்டி யானைகளைத் தாங்குகிற மாதிரி பல பிரச்னைகளை அவர் தாங்கிக் கொண்டிருக்கிறார். அந்த எறும்பைப் பார்த்தால், ஆச்சரியமாய் இருக்கு.

எஸ்.சுப்பிரமணி, பொன்னமராவதி

இப்போது டெலிபோன்கள் குறைந்து வருகின்றனவே!

ஆமாம். டெலிபோன்களை இப்போது ‘செல்’கள் அரித்து வருகின்றன.

2011/02/18  ஜூனியர் கேள்வி-பதில்2011/02/11  ஜூனியர் கேள்வி-பதில்

28 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்

21 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
13 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
07 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
01 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 2:28 am
Filed under: Uncategorized
healthy life

Posted on Friday 18 February 2011

fever.jpgநோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள் - கே.எஸ்.சுப்ரமணி

காய்ச்சலை குணமாக்கும் உணவு முறை!

காய்ச்சலால் அவதிப்படுகிறவர்கள் காலையில் ஓர் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அதில் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்தவும்.

நோய்க்கிருமிகளை இது உடனே அழித்தவிடும்! மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கற்கள், வயிற்றுப் பொருமல், வாயுக் கோளாறு, பசியின்மை முதலிய கோளாறுகளையும் இந்த ஒரு டம்ளர் தேன் எலமிச்சை சர்பத் போக்கும்!

இந்த சர்பத்தில் இயக்கையாகவே பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் “சி”, பி முதலியவை இருப்பதால் உடலுக்கு சக்தியும் ஆரோக்கியமும் தொடர்ந்து கிடைக்கிறது.

காய்ச்சல் குணமாகும் வரை டாக்டர் யோசனைப்படி எளிய உணவு வகைகளையே சாப்பிட வேண்டும். இல்லையேல் பழச்சாறு வகைகளையே மூன்று வேளைகளுக்கும் உணவாக உட்கொண்டு விரைந்து உடல் நலம் பெறலாம்.

உடல் மெலிந்து எடை குறைந்தவர்களும் இதர நோயாளிகளும் கல்லீரல் நோயாளிகளும் உடலில் அடிபட்டுச் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களும் மாம்பழச்சாறு கிடைத்தால் மூன்று வேளையும் சாப்பிட வேண்டும்.

மாதுளம் பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றையும் சாறாக மதியம் மாலை, இரவு வேளைகளில் அருந்துவது நல்லது.

குழந்தைகளுக்கு ஆரஞ்சப் பழச்சாறு சத்துணவும் மருந்தும் ஆகும்.

டைபாயிட் நோயாளிகள் நாக்கு வறட்சியைத் தவிர்க்க ஆரஞ்சு சாறு நன்கு அருந்த வேண்டும். எல்லா விதமான காய்ச்சல்களையும் நாக்கு வறட்சியையும் செரிமானக் கோளாறுகளையும் குணப்படுத்த ஆரஞ்சு சாறை தினமும் மூன்று அல்லது நான்கு வேளை அருந்துவது நல்லது. சத்துணவுடன் “பி” காம்ப்லெக்ஸ் வைட்டமின்களும் ஆரஞ்சில் உள்ளதால் காய்ச்சலும் குணமாகிறது. உடம்பும் வலிமை பெறுகிறது. சோர்வு நீங்க வழியுண்டாகிறது.

காய்ச்சலைக் குறைக்க வெங்காயத்தைப் பிழிந்து தண்ணீர் சேர்த்து சாறாக மாற்றி அருந்தலாம். இது கைகண்ட மருந்து. குறிப்பாக காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் முப்பது கிராம் வெங்காயத்தில் ஏழு அல்லது எட்டு மிளகை வைத்து அரைத்து இந்தத் துவையலைச் சாப்பிட்டால் காலரா நோயாளியின் தாக்கமும் தணியு[ம். மனப் படபடப்பும் குறைந்து அமைதியாகத் தூங்குவர்.

காய்ச்சலின் போது திட உணவு சாப்பிடும் வகையில் நோயாளி திடகாத்திரமாக இருந்தால் உணவுப் பாதைக்கு அதிகம் சிரமம் தராத உணவு வகைகளைத் தேர்வு செய்யவேண்டும்.

காய்ச்சிய அரிசிக் கஞ்சி, பார்லி, வெந்தயக்கீரை, காய்கறி, சூப், பால், தயிர், முட்டை, இட்லி, இளநீர், கரும்புச்சாறு முதலியவற்றைச் சாப்பிடலாம். இவை உணவுப் பாதைக்குச் சிரமம் தராதவை.

காய்ச்சல் குறைய ஆரம்பித்த இரண்டொரு நாளிலிருந்தே சாத்துக்குடிச் சாறை மட்டும் தவறாமல் அருந்த வேண்டும். இது உடலுககுப் புத்துணர்ச்சி ஊட்டும். எனவே இரண்டு வேளையாவது சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.

காலையில் பெட் காப்பி போல் அடுத்த சில வாரங்களுக்கு எலுமிச்சை, தேன், தண்ணீர் சேர்ந்த சர்பத்தை அருந்தி வரவேண்டும்.

எல்லாவற்றையும்விட முக்கியமானது, படுக்கையில் முழு ஓய்வு எடுப்பது!

சிறப்பு செய்தி :

குடிப்பழக்கத்தை கைவிட முடியும்!

குடிப்பழக்கத்தை மெல்லமெல்லக் கைவிட நினைப்பவர்கள் குடிக்கும் நினைவு வரும்போது வேறு ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் போல் தெரிகிறதா? சபாஷ்! அப்படியானால் ஆரஞ்சுச்சாறு அன்னாசிச் சாறு, எலுமிச்சைப்பழ சர்பத் போன்றவற்றை அருந்தலாம். இதன் மூலம் இரத்தத்திலும் கல்லீரலிலும் சேரும் மதுவின் நஞ்சு விரைவில் வெளியேறுவதுடன் கல்லீரலையும் சேதமடையாமல் காக்கும்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய பொதுவான நோய்களுக்கான உணவு முறைகள்

2011/02/11 ஒற்றைத் தலைவலியா?

2011/01/28 வழுக்கையா?

2011/01/21 தலைவலியா?

2011/01/13 ஜலதோஷமா?

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2011/01/07 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்…? - தொடர்ச்சி

2010/12/31 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்?

2010/12/24 இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி

2010/12/10 வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்

2010/12/03 கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான இலைக்காய்கறி

2010/11/26 பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி

2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 2:23 am
Filed under: Uncategorized
Wonder of Indian Politics

Posted on Friday 18 February 2011

spectrum.jpgஏதேது நிகழ்ந்தேவிடுமா?

ஏதேது! இந்திய அரசியல் வரலாற்றில்கூட அதிசயம் நிகழ்ந்துவிடும் போலிருக்கிறதே! ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க இருப்பதாக உலவும் வதந்தி பற்றியே இப்படிக் குறிப்பிடுகிறேன்.

அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒட்டுமொத்தக் குரலில் எழுப்பிய கோரிக்கைக்குத் தாமதமாகப் பலன் கிடைக்கும் போல் தெரிகிறது.

டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிிக் கூட்டம் மிகச் சமூகமாக நடந்தேறியிருப்பதும் ஆறுதலாக இருக்கிறது.

இதை ஏன் குறிப்பிடவேண்டியிருக்கிறது என்றால் தமிழகத்தில் இப்படி ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்ததே இல்லை என்கிற ஏக்கத்தை வெளிப்படுத்தத்தான்!

காங்கிரஸ் கட்சியே பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துவிட்ட நிலையில் தி.மு.க. இத்தகைய கூட்டுக் குழு விசாரணை தேவையற்றது என்று கருத்துத் தெரிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.

இது யாரைக் காப்பாற்றும் முயற்சி என்பதை நாடு நன்கு அறியும். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு என்கிற கேள்வியை தி.மு.க.பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைவரான டி.ஆர்.பாலுவிடம் கேட்க வேண்டியுள்ளது.

பாராளுமன்றக் கூட்டுக்குழு உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் அப்பாற்பட்டு வலுவான சக்தியாக இருப்பதை அண்மையில் கூட முன்னுதாரணமாகப் பார்த்தோம்.

காஷ்மீர் அண்மையில் பெரிய அளவில் புகைந்தபோது அனைத்துக் கட்சியினரின் பாராளுமன்றக் குழுவினர் உயிரைப் பணயம் வைத்து காஷ்மீருக்கு நேரில் சென்று தீவிரத் தலைவர்கள் என முத்திரை குத்தப்பட்டவர்களைக் கூடச் சந்தித்து, இதுவரை வெளிவராத உள்ளக் கிடக்கைகளை வெளிக்கொணர்ந்து, தீர்வுகளைச் சொல்லி, நம்பிக்கைகளை ஊட்டி அப்பகுதியை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மிகவும் துணை புரிந்தது.

பாராளுமன்றக் கூட்டுக் குழுவுக்குக் கெடுதலாக உள்நோக்கங்கள் இருப்பதாகச் சொல்லிவிட முடியாது. ஊழல் நடந்துவிட்டது என்று இக்கட்சிகள் மனப்பூர்வமாக நம்புகிறபோது ‘கை’க்காரர்கள் கையை பிரித்து உள்ளங் கைகளைக் காட்டுவது அவசியமாகி விட்டது.

இக் கோரிக்கையை மிக முன்பே பரிசீலித்திருந்தால் பாராளுமன்றம் எண்ணற்ற முறைகள் முடக்கப்பட்டதே அது தவிர்க்கப்பட்டிருக்கலாமே என்கிற ஏக்கமும் இந்த நேரத்தில் எழாமல் இல்லை.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2011/02/11 கண் துடைப்பாகக் கருதலாமா?

2011/01/28 மருத்துவ ஏழைகள்

2011/01/21 மன்னித்து உயர்ந்த முதல்வர்!

2011/01/13 கண் திறக்கும் கல்விப் படப்பிடிப்பு!

2011/01/07 வெங்காயம் விதைத்த புதிய விதை

2010/12/31 அரசு இயந்திரத்தை எதிர்பார்க்கும் தனியார் இயந்திரங்கள்!

2010/12/24 ஜனநாயகம் தழைப்பது யார் கையில்?

2010/12/17 தெரியவில்லை புரியவுமில்லை!

2010/12/10 தோற்ற போதிலும் இது வெற்றியே!

2010/12/03 வெள்ளியையும் வெண்கலத்தையும் தங்கங்களாக்குவோம்!

2010/11/26 அரசியல் நாடகத்தின் இடைவேளை!

2010/11/19 மக்களுக்கு எதிராக மக்களே திரும்புவதா?

2010/11/12 காஷ்மீர்ப் புயல் பலவீனப்படுத்துங்கள்!

2010/11/04 ஆம்னி பேருந்துகளின் அநியாயப் போக்குகள்!

2010/10/29 எங்களைப் பிரிக்காதீர்கள்

2010/10/22 தெய்வமே கலங்கி நின்றால்?

2010/10/15 ஊனப்படுத்த முயன்றவர்களுக்கு விழுந்த சாட்டையடி!

2010/10/08 தலை நிமிர வைத்த தமிழர்கள்!

2010/10/01 சட்டங்களின் ஓட்டைகளும் பள்ளிகள் பெற்ற சாதகங்களும்

2010/09/24 மடியில் கனம் இல்லாவிட்டால்…

2010/09/17 தவிர்க்கப்பட்ட சேதம்!

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 2:14 am
Filed under: Uncategorized
Charater Analysation

Posted on Friday 18 February 2011

writer-lena1.jpgபரிசீலனை செய்யும் பண்பு!

எடுத்த எடுப்பில் ‘முடியாது’தான். தடாலடியாய்க ‘கிடையாது’ என்கிற பதில்தான். இன்னும் மோசமாய் பரிசீலனை இல்லாத கை நீட்டல்தான் சிலரிடம். இன்னும் விதவிதமாக இப்படி எத்துணையோ பேர் இருக்கிறார்கள்.

இவர்களின் இயல்பு தோன்றியதையெல்லாம் சொல்வது; செய்வது. மறுபரீசீலனையே கிடையாது.

மனிதன் சுயநலமானவன். புரிகிறது. ஆனால் நம்மைப் பாதிக்காத உதவிகள் என்று சிலவற்றைச் செய்யலாம் என்கிற சிந்தனையே இல்லாதவர்களாகவா இருப்பது?

வாயுதவி, கையுதவி கேட்கிறார்கள். சிலருக்கு முதலில் தோன்றும் நினைப்பு இவனுக்கு உதவவே கூடாது என்பது. இது சுயநல அரக்கனின் முதல் தலை தூக்கல். இவர்களை மறுத்து அனுப்பிய பிறகு, நாம் மறுத்தோமே இது சரிதானா? இது என்ன உணர்ச்சிவசப்பட்ட முடிவா? அவசரப்பட்டுவிட்ட அணுகுமுறையா? மறுபரிசீலனை செய்வோமே என்றெல்லாம் சில கலவையான எண்ணங்களைத் தக்கவைத்து அலசலாம்.

இப்படிச் செய்யும்போது சில புதிய சிந்தனைகள் வரும். பழைய ஞாபகங்கள் சில எழும். அவை சமயங்களில் நல்லபடியாகவும் இருக்கும். எதிர்பாராத வகையில் இதயத்தில் ஈரக்கசிவு ஏற்படும். உடனே, எடுத்த முடிவு தவறு என்று தோன்றி, வரச் சொல் அவனை என்று சொல்ல மனம் வரும்.

இது பின் பரிசீலனை முறை. இதில் முன் பரிசீலனை முறை ஒன்றும் உண்டு. அதாவது உதவி கேட்டவர்களிடம் உடனே மறுக்காமல் ஒரு நாள் ஒரு வாரம் அவகாசம் கொடுங்க. யோசிக்க (பரிசீலித்து) சொல்றேன் என்று அவகாசம் வாங்கலாம்.

இப்படித் தவணை பெற்ற நேரத்தில் பல கோணங்களில் மற்றவர்களின் விண்ணப்பங்களையோ விண்ணப்பங்களல்லாத விஷயமாக இருக்கக் கூடிய நம் முடிவுகளையோ அலசலாம்.

தெளிவு பெற முடியாவிட்டால் பொருத்தமானவர்கிளடம் யோசனை கேட்டுப் பெறலாம்.

இவற்றிற்கெல்லாம் பிறகு எடுக்கப்படும் முடிவு இருக்கிறதே, இது அநேகமாய் மறுபரிசீலனைக்கு உரியதாக இராது.

பரிசீலனை செய்யுங்கள்.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

 2011/02/11 நம் நேரங்கள் எப்படிக் கசிகின்றன?

2011/01/28 கேள்வி கேளாத கீழ்ப்படிதல்

2011/01/21 நாமும் யந்திரன்களே!2011/01/13 அயர்வற்ற மனத்திற்கு உயர்வு தர என்ன வழி?

2011/01/07 ஐம்பது சதவிகித மனநிலையுடன் அணுகுவோம்!

2010/12/31 பேசிப்பேசியே காலத்தைக் கடத்துபவர்கள்!

2010/12/24 குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!

2010/12/17 உரிமை உள்ளது என்று வார்த்தைகளைக் கொட்டுவதா?

2010/12/10 நாம் மறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள்!

2010/12/03 தெரிந்து என்ன ஆகப்போகிறது?

2010/11/26 நம் மகிழ்வின்போது கவனிக்கப்பட வேண்டியவை…

2010/11/19 மனிதர் நீங்கள்!

 2010/11/12 மனத்தைத் திசை திருப்பும் வழிகள்!

2010/11/04 புதுக் குழியைத் தோண்டிப் பழைய குழியை நிரப்புவதா?

2010/10/29 நம்மை உயர்த்தும் நம் வார்த்தைகள்

2010/10/22 நீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 2:06 am
Filed under: Uncategorized
vietnam travel

Posted on Friday 18 February 2011

hanoi-temple.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

ஒருத்தனாவது சுடுறானா பார்ப்போம்!

இந்த வெட்கக் கேட்டை எங்கு போய்ச் சொல்ல? துப்பாக்கியை எடுத்துக் சுடப்போக அது குண்டு வெளிப்பட்ட வேகத்தில் ஓர் அதிர்வு கொடுக்க, அது என் மேல் பல்வரிசையின்மீது உள்ள முரணையைத் தாக்க, இலக்கும் தவறிவிட, வலியை வேறு வெளியில் சொல்ல முடியவில்லை.

அவ்வளவு பெரிய மான் உருவம் (அட்டையில்தான்) இருக்க, அதை விட்டுவிட்டு எங்கோ குண்டு பாய்ந்தது எனக்கே ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

பொருட்காட்சிகளில் 5 குண்டுகளில் (ஏர்கன்) 4-ஐக் குறிபார்த்துச் சுட்டு, கடை நடத்தியவரையே அசத்திய நானா இப்படி?

அடுத்த குண்டை இராணுவ வீரர் லோடு செய்ய, இந்தாருங்கள் மது சார் “நீங்க சுடுங்க” என்று துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு சுடும் மேடையிலிருந்து இறங்கியே விட்டேன்.

இவருக்குப் போய் 5 குண்டுகள் வாங்கிக் கொடுத்தோமே ன்று மது எண்ணியிருப்பார். அவர் சுட்டதும் இலக்குத் தப்ப, அடுத்த முறை ஜவஹர்தான் சுடவேண்டும் என்பதில் குறிப்பாக இருந்தேன். யாரும் பாராதவேளையில் முரணைத் தடவிப் பார்த்துக் கொண்டேன். நல்ல வலி. கொஞ்சம் அசத்தியிருந்தால் பல்லையே பெயர்த்திருக்கும் போல!

துப்பாக்கியைக் கொண்டு எதிரி இலக்கைத்தான் சுடுவார்கள் எல்லோரும். நானோ என்னைக் காயப்படுத்திக் கொண்டு நிற்கிறேன். ஜவஹர் அதிகம் மெனக்கெடாமல் ஒரு குண்டைத் தீர்த்துவிட்டு இறங்கிவிட்டார்.

அடுத்த குண்டிற்கும் ஆளைத் தேடி, எங்கள் வாகன ஓட்டுநரை அனுப்பி வைத்தேன்.

அவர் போனார் துப்பாக்கியைப் பிடித்தார். சரியாக மானின் உடலில் சுட்டு அசத்திவிட்டார். எல்லோரும் கைதட்டினார்கள்.

“என்னங்க இந்த டிரைவரு இவ்வளவு சர்வ சாதாரணமா சுடுறாரு?” என்றேன் வியப்பில்.

மது “தெரியாதா உங்களுக்கு? இவர் முன்னாள் இராணுவச் சிப்பாய்” என்றாரே பார்க்கலாம்.

இன்னும் ஒரு குண்டு பாக்கி. “நீங்கதான் சுடணும்” ரொம்பவும் வற்புறுத்திவிட்டார்கள்.

வாயிலிருந்து துப்பாக்கியைத் தள்ளி வைத்துக் கொண்டேன். துப்பாக்கி தரும் பின்புற அடியைத் தாங்க இனி முடியாது.

இலக்கைக் குறிவைத்தேன். ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். ஏழு பேர்களும் என்னையும் இலக்கையும் கவனிக்கிறார்களா, அல்லது தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார்களா என்று.

பார்த்தால் அனைவரும் என்னையும் இலக்கையுமாக மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் கவனச்சிதறலை முறைப்படுத்தினேன். இந்த முறை விடுவதில்லை. மிகப்பெரிய பகுதியான உடலில் ஒரு இராணுவ வீரர் சுட்டுவிட்டார். அதில் சுடுவதில் எனக்குப் பெருமையில்லை. மானின் கண்ணைக் குறி வைத்தேன். டிரிகரை அழுத்து முன் -

இறைவனை நினைத்துக் கொண்டேன் என எழுதுவேன் என்று எதிர்பார்த்தீர்களா?

அதுதான் இல்லை.

இராணுவ வீரர் சொல்லிக் கொடுத்தபடி மூன்று புள்ளிகளும் கண்ணை நோக்கி இருக்கின்றனவா என்று ஒரு முறை சரி பார்த்துக்கொண்டேன்.

துப்பாக்கியை அழுத்திய விதம் எனக்கே அதன் கழுத்தை நெரித்துக் கொல்வதுபோல் இருந்தது. இம்முறை குண்டு வெளியேறும்போது துப்பாக்கி சற்றும் பின்னோக்கி வரக்கூடாது என்பதற்காக இந்த இறுக்கல்.

கவனமாக டிரிகரை அழுத்தினேன்.

என்ன ஆச்சரியம்! மானின் கண் பகுதி சிதறி வெடித்தது.

ஆவ்! நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

வியட்நாமியர்கள் அனைவரும் மியாவ் மியாவ் என் கைதட்டிப் பாராட்ட “சார்! மானத்தைக் காப்பாத்திட்டீங்க!” என்று மது ஆர்ப்பரிக்க.

“எக்ஸலன்ட்! பிச்சுட்டீங்க லேனா சார்! முன்னாள் இராணுவ வீரரே உடம்பைக் குறி வைக்கிறார். நீங்க கண்ணுல சுடுறீங்க பிரமாதம்!” என்று ஜவஹர் சொல்ல…

பெருமை பிடிபிடவில்லை. என் வாழ்நாளின் சிறுசிறு மகிழ்ச்சியான காலங்களுள் இது முக்கியமானது என்பேன்.

“ஏதேது! விட்டா அடுத்த ஐந்து குண்டுகளையும் சரியாகச் சுடுவீங்க போலிருக்கே! வாங்கட்டுமா இன்னும் 5 குண்டுகள்?” என்றார் மது.

ஆசைதான். துப்பாக்கி சுடும் கலை பிடிபட்டுவிட்டதுபோல் தெரிந்ததால் அடுத்த ஐந்தில் மூன்றையாவது இலக்குத் தப்பாமல் சுடுவேன் என்கிற நம்பிக்கை வந்தது.

ஆனாலும் நான் தயங்கிவிட்டேன். காரணம், “வந்த இடத்து ஏழையான எனக்கு மறுபடி 5 குண்டுகளை வாங்கிச் சுட யோசனை. வந்த இடத்தில் கடன் வாங்கிப் பயணச் செலவுகளைச் செய்யக்கூடாது. அதே நேரத்தில் மதுசூதனனுக்குச் செலவும் வைக்கக் கூடாது.

எனவே என் தீரத்தைக் காட்டுவதற்குப் பதிலாக அடக்கி வாசிப்பது என் முடிவு செய்தேன்.

“வேண்டாம் போவோம்” என்றேன். மது என்னை மறுபடி அசைத்துப் பார்த்தார்.

“ஓர் இராணுவ வீரருக்கு இணையா (அப்படீங்களா?) சுடுறீங்க. சுடுற கலை உங்களுக்குப் பிடிபட்டுச்சு. ஏன் மறுபடி சுடக்கூடாது?”

பக்கத்திலிருந்த அந்தத் துப்பாக்கி சுடும் மையத்தில் இருந்த ஊழியர் ஒருவர் என் தோளைத் தட்டி, “சும்மா சுடுங்க, நல்லா சுடுறீங்க” என்று நான் புரிந்து கொள்ளும்படியாக ஏதோ சொன்னார் வியட்நாமிய மொழியில்.

மனது கிடந்து அல்லாடியது. ஆனாலும் நான் மறுத்தேன். நாம் கரியாக்கப்போவது துப்பாக்கி குண்டுகளை மட்டுமல்ல, மதுவின் காசையும் தான். எனவே கூடாது என்கிற கோணம்தான் என் தடுமாற்றத்திற்குத் தடைபோட்டது.

இந்த இடத்தில் மதுவின் பெருந்தன்மையை எண்ணிப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. மது அப்படி ஒன்றும் கணக்கு வழக்கு இல்லாதபடி பணம் வைத்திருப்பவர் அல்லர். சன் பார்மாவின் உயர் அதிகாரி. ஆனால் மனது, அப்படி ஒரு மனது!

பெரும் செல்வந்தவர்களை என் பயண அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். கடைகளில் ஏதும் வாங்கும்போது கூடவே வருவார்கள். பில்போடும்போது ஆளே தென்படமாட்டார்கள். அல்லது எங்கோ விலகி நிற்பார்கள். ஆனால் செலவு வந்தபோதெல்லாம் என் கையை அமர்த்தி பர்ஸ் எடுத்த மதுவுக்கு எப்படிப்பட்ட மனது!

அட! மதுவின் மனது! ஒரு திரைப்படத் தலைப்புப்போல இல்லை!

நாங்கள் புறப்படும் நேரம் இரண்டு அணிகள் வந்தன.

ஜவஹர் மதுவிடம் கேட்டேன் “சார்! நாம் உடனே போகணுமா? இவர்களுள் யாரும் குண்டுகள் வாங்குகிறார்களா, சுடுகிறார்களா என்று பார்க்க ஆசை!”

“ஓர் அவசரமும் இல்லை. சாப்பிடணும் வீட்டுக்குப் போகணும் அவ்வளவுதான். பார்த்துட்டே போவோம்.”

வந்த இரு அணிகளுள் மூவர் குண்டுகளை வாங்கினார்கள்.

அட! 15 குண்டுகள் ஒருத்தனாவது சுடுறானா பார்ப்போம்.

கிரிக்கெட்டும் சுடுவதும் ஒன்றுதான். ஒருவர் துப்பாக்கி (பேட்டும்தான்) பிடிக்கிற விதத்திலேயே சொல்லிவிடலாம். இவர் சுடுவாரா மாட்டாரா என்று.

சிலர் கற்றுக்குட்டிகள் என்பது துப்பாக்கி பிடித்த விதத்திலேயே தெரிந்தது. அதுதான் நடந்தது.

ஒருவர் சுடும்போது பார்வையாளர்கள் பார்க்க நன்கு வசதிகள் இருக்கின்றன.

குண்டுகள் இலக்குகளுக்குப் பின்னால் இருந்த மலைப்பகுதியில் இருந்த மலைப்பகுதியில் தூசிகளைக் கிளப்பினவே தவிர, ஒன்றும் இலக்கைத் துளைக்கவில்லை. 15 குண்டுகளும் வீண்!

எனக்கோ பெருமை பிடிபடவில்லை. ஆக, ஓர் இராணுவ வீரரும் நானும்தான் இலக்கைத் தைத்தவர்கள்.

சிறிது நேரம் காணாமல் போயிருந்த ஜவஹர் இப்போது என்னை நெருங்கி வந்து “குண்டுகளை விற்ற அலுவலகத்தில் உங்களை அழைக்கிறார்கள்.”

“என்னையா? எதற்கு?”

சிரித்தபடி, உங்களுக்கு அங்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

வாசகர்களே! என்னவாக இருக்கும் நான் ஊகித்து விட்டேன். நீங்கள்?

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2011/02/11 துப்பாக்கி சுடப் பழகிக் கொடு!

2011/01/28 குண்டுகளின் மழை நடுவே தரப்பட்ட கல்வி!

2011/01/21 வயது கூடிப்போன இரகசியம்!

2011/01/13 கீழுலகம் பார்த்தேன்

2011/01/07 சிறிய வியட்நாமின் பெரிய மிரட்டல்!

2010/12/31 பெற்றோரைக் காக்க வேலையை உதறும் வியட்நாமியர்கள்!

 2010/12/24 வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?

2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது

2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!

2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!

2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!

2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க

2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!

2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?

2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!

2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!

2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!

2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!

2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!

2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 12:35 am
Filed under: Uncategorized
Junior kelvi pathil

Posted on Friday 18 February 2011

kadamai.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எம்.பாக்யம், இராமநாதபுரம்.

இன்றைய திரைப்படங்கள் எதை நோக்கி உள்ளன? காதலை நோக்கியா, கவர்ச்சியை நோக்கியா, குடும்பத்தை நோக்கியா?

அட! பட்டிமன்றத்திற்குத் தலைப்புக் கிடைத்துவிட்டதே! இடையை நோக்கி! இது நீங்கள் கேட்டதன் இடையா அல்லது நடிகைகளின் இடையா என்பதன் இடையில் நான் இருக்கிறேன். எனவே இப்போதைக்கு ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட்!

ஏ.அப்துல்ஹமீது, வேலூர்.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணைவதில் தயக்கம் காட்டியது ஏன்?

கனிந்து வருகிற நேரத்தில் மாம்பழத்தில் வண்டு பிடித்தது காரணமாக இருக்கலாம்.

சி.ராமதாஸ், முகப்பேர்.

இக்கால இளைஞர், இளைஞிகளின் கனவுகள் என்னென்ன?

பன்மையில் கேட்டதால் நானும் பன்மையில் சொல்கிறேன். பலருக்கும் பணம், பணம், பணம்தான்! இந்த ஓர் ஒருமையையே அவர்கள் பன்மையாக்கி விடுகிறார்கள்.

பே. திருமாவேலன், காட்பாடி.

அம்பேத்கார் சட்டம் இயற்றினாரே, இது ஏழைகளுக்கா, பணக்காரர்களுக்கா, நிதிபதிகளுக்கா?

தோன்றியது நீதிக்கு. செயல்பட்டது வழக்கறிஞர்களுக்காக. பயன்பட்டது சில நீதிபதிகளுக்கு. சங்கமித்தது சில பணக்காரர்களுக்காக.

எல்.கீதா, கும்பகோணம்.

மாயாவிகள் இன்றும் இருக்கிறார்களா?

வாடகைக்குக் குடியிருப்போர் பலரும் கடன் வாங்கியோர் பலரும் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்?

டி.எட்வர்ட், பாளையங்கோட்டை.

காதலின் பரிணாமம் என்ன?

இது பெருத்துப் போனால் தாலி. சிறுத்துப் போனால் தாடி.

ரா.கண்ணன், பெரியகுளம்.

குஷ்பு எங்கே?

திரைப்படங்களில் அவ்வப்போது தென்படுகிறார். 25 ஆண்டுகளாகத் திரையுலகில் இருக்கிறார். பெரிய விஷயம்தான்.

எஸ்.வரதன், தஞ்சாவூர்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்ன ஆனது?

அது அவர்களின் கவலை. என் அக்கறை அந்த 67 ஆவது இருக்கா இல்லையா என்பதுதான்.

கே.கிருஷ்ணன், சென்னை-2.

சில கவுன்சிலர்களின் பாடு கொண்டாட்டமாமே?

இங்குள்ள கொசுக்களைவிட இவர்களின் கொள்ளைகள் அதிகமாயிடுச்சு. கொசுக்களுக்காவது விரட்டும் நோக்கத்தில் புகையடிக்கிறார்கள். இவர்களுக்குப் பன்னீர் அல்லவா தெளிக்கிறார்கள்.

ஏ.அருள்மணி, சேலம்.

சுவிஸ் கறுப்புப் பண விவரங்கள் எப்போது வெளி வரும்?

இந்த விஷயத்தில் சித்திரைப் பெளர்மணி ஒரு போதும் வராது. எப்போதும் ஆடி அமாவாசைதான்.

ஆர்.பாலா, புதுச்சேரி.

இந்த முறை அ.இ.அ.தி.மு.க. கூட்டணி?

ஏராளமான கட்சிகள் இதன் காவடியில் மணிகளாகச் சேர்ந்துள்ளன. இந்த முறை காவடி இலேசாக அசைந்தாலே மணிகளின் சத்தம் பெரிதாக இருக்கும் போல.

மு.சிக்கந்தர் பாஷா, ராமனாதபுரம்.

மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள்?

அரசியல்வாதிகள் இவர்களுக்கு பயாஸ்கோப்பு, களைடாஸ் கோப்புகள் காட்டிய காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. இப்போதெல்லாம் டெலஸ்கோப்புதான்! அதாகப்பட்டது ஊசி முனைகளைக்கூட உலக்கையாய்க் காட்டப்படுகின்றன. ஆனாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், மாற்றம் வேண்டும் என்று.

எஸ்.பெரிச்சியப்பன், திருச்சி.

விளம்பர நடைப்பயணங்களால் என்ன இலாபம்?

பெரிய இலாபமில்லை. இப்போதெல்லாம் இதுமாதிரியான நடைக்கால்களை மக்கள் அதிகம் கண்டு கொள்வதில்லை. வேடிக்கை பார்க்கவே இவர்கள் பயன்படுகிறார்கள்.

சித. தெய்வராயன், கோவை.

வரும் தேர்தலில் நீங்கள் வாக்காளர்களுக்குச் சொல்வதென்ன?

தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் சொல்லப்படும் அனைத்து உணர்ச்சி வடிவங்களும் உங்கள் தெருவைத் தேடி வரும். அதில் ஏமாந்து விடாதீர்கள். உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறதோ அதை மட்டும் செயல்படுத்துங்கள். காசு வாங்க ஒட்டுப் போட்டுவிட்டு அரசியலில் இலஞ்சம் ஏன் என்று புலம்பாதீர்கள்.

ஏ.வெற்றிகொண்டான், திருச்சி.

கலைஞரின் டெல்லிப்பயணம் வெற்றியா? (முதல்வர்கள் மாநாடு தவிர)

அவரது டெல்லிப் பயணத்தின் போது ஒரே பனி மூட்டம்! அதனால் அவரது எண்ணங்கள் அங்கே சரியாகத் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்துவிட்டுப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்துவிட்டது.

அகல்யா மோகன், திண்டுக்கல்.

குடும்பம் ஒரு கோயில் என்பது ஏன்?

உங்களுக்கு அனுபவமில்லையோ என்னவோ? எப்போது போனாலும் அங்கே கண்டிப்பாய் அர்ச்சனை இருக்கும். கோயிலிலாவது அவ்வப்போது நடை சாத்துவார்கள். வீட்டிலோ சாத்து சாத்தென்று சாத்துவார்கள்.

அருள்அழகன், கன்னியாகுமரி.

ஆ.ராசா கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

ஒரு பக்கம் கூட்டு, ஒரு பக்கம் வேட்டு! டெல்லியில் நடப்பது ஓரங்க நாடகமா அல்லது தேர்தல் புராணத்திற்கு ஒரு காப்புச் செய்யுளா? ஒன்றுமே புரியலே. அரசு இழப்புகளுக்கு முன் இது உண்மையாகவும், உளமாரவும் நீடித்தால் நல்லது. அப்போதுதான் அரசு வருமானங்களையும் அரசுப் பேருந்துகளாகத் கருதிச் சேதாரம் செய்யமாட்டார்கள்.

ஏ.ரமேஷ், விருத்தாசலம்.

வீட்டுக்கு ஒரு மரம் வைக்கலாமா?

வைத்தால் போதாது. அவற்றுக்கு நமீதா, த்ரிஷா, அசின் என்று ஏதாவதொரு பெயர் சூட்டுங்கள். அப்போதுதான் வீட்டிலுள்ளவர்கள் அதைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பார்கள். தண்ணீருடன் அதன்மீது பாசத்தையும் கொட்டுவார்கள்.

டி.பவித்ரா, மாங்காடு.

நாம் முன்னேறும்போது சில தியாகங்களைச் செய்யவேண்டியிருக்கிறதே?

விதைத்த நெல் முளைக்க வேண்டுமானால் அது தன் உமியை இழந்தால்தான் முடியும். பறவை பறக்க வேண்டுமானால் அது தன் முட்டையோட்டை உடைத்துதான் ஆகவேண்டும்.

எஸ்.சீதாராமன், கரூர்.

என் கல்யாணத்திற்கு அழைத்தால் வருவீர்களா?

வரும்படி அழைக்கிறீர்கள். ‘வரும்படி’ வாங்காத கல்யாணம் என்றால் பரிசீலிப்பேன்.

மா.அங்கயற்கண்ணி, மதுரை.

இன்றைய விலைவாசிகள் வயிற்றில் புளியைக் கரைக்கிறதே?

புளி என்றதும் ஞாபகம் வருகிறது. இனிப் புளி(யைக்கூட) வாங்கப் பணம் நீட்டினால் நாக்கில் மட்டும் தடவி அனுப்புவார்களோ என்னவோ!

எம்.ஏ.சண்முகம், வியாசர்பாடி.

குடும்பத்தில் ஒரு கணவனும், மனைவியும் எப்படியிருக்க வேண்டும்?

ஒரு தொலைபேசியைப் போல இருக்க வேண்டும். எதையும் உள்வாங்கவும் வேண்டும். எதையும் வெளிப்படுத்தவும் வேண்டும். அப்படியின்றி சிலர் தொலைக்காட்சிகளைப் போல செயல்படுகிறார்கள். எதையும் வெளிப்படுத்த மட்டுமே செய்கிறார்கள். எதையும் உள்வாங்குவது இல்லை.

ஆர்.சுதாகர், விழுப்புரம்.

ஒரு அரசியல் கட்சி என்பது எப்படியிருக்க வேண்டும்?

கல்யாண வீட்டு வாழைபோல் இல்லாமல் ஒரு வயல்வாழை போல் இருக்கவேண்டும். கல்யாண வீட்டு வாழை பிஞ்சுக்காய்களுடன் வரும். திடீரெனச் சாயும். மறுநாள் அனைவர் காலிலும் மிதிபடும். வயல்வாழை அப்படியல்ல. நன்கு வளர்ந்து பலன் தந்து மறுபடியும் தரும்.

 2011/02/11 ஜூனியர் கேள்வி-பதில்28 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
21 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
13 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
07 January 2011 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 December 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
01 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 12:22 am
Filed under: Uncategorized
Obey without Question

Posted on Friday 11 February 2011

writer-lena.jpgகேள்வி கேளாத கீழ்ப்படிதல்

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பழக்கம். ஒவ்வோர் இனத்திற்கும் ஒரு குணம். அமெரிக்காவில் கீழ்ப்படிதல் வரவேற்கப்படுகிற எதிர்பார்க்கப்படுகிற குணம்தான் என்றாலும் எதிர்த்து நிற்பவர்களை, எதிர்த்துப் பேசுகிறவர்களை அடியோடு வெறுத்து ஒதுக்கலாம். அவர்களின் சொற்களில் செயல்களில் நியாயம் இருக்கிறது என்றால் எற்றுக்கொள்வார்கள்.

சீனாவில் அப்படி அல்ல. கேள்வி கேளாத கீழ்ப்படிதலே இங்கு எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு நாட்டாமைகள் அதிகம். இவர்கள் வைத்ததுதான் சட்டம். எதிர்த்துப் பேசினால் மறுத்து விளக்கமளித்தால் அவர்களது நிலைமை அந்தோ பரிதாபம்தான்.

கேள்வி கேளாத கீழ்ப்படிதலை ஒரு தலைமுறைக்கு முன்புவரை நம் இந்தியச் சமுதாயமே எதிர்பார்த்தது. ஆனால் இப்போது பரவாயில்லை.

தலைமைகளின் செயல்பாடுகளில் எப்படியும் குறைகள் கண்டுபிடிக்கக்கூடும் என்றாலும் தலைமைக்குப் பரிந்து பேசுவதற்கு சிலருக்காவது அவரது செயல்களில் உள்ள நியாயங்கள் புரியவேண்டும்.

“அவர் நிலைமையில் இருக்கிற யாராக இருந்தாலும் இந்த முடிவுக்குத்தான் வருவாங்க” என்கிற பொது நியாயம் கற்பிக்கப்படவும் இடமிருக்கவேண்டும்.

வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்கிற பாகுபாட்டின் அடிப்படையில் ஒரு செயல் நிகழ்த்தப்படாமல் தகுதிகளின் பின்புலன்களின் அடிப்படையில் காரியங்கள் நிகழ்த்தப் பெறவேண்டும்.

கைசுத்தம், சொல் சுத்தம் சந்தேகமில்லாமல் வேண்டும்.

இவையெல்லாம் இருக்கிற ‘தலை’கள் கிடைப்பது கடினம். எனவே இப்பதவிக்குத் தள்ளப்பட்டவர்கள், நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், வேறு வழியின்றி அமர்ந்தவர்கள், இதனை ஆசைப்பட்டு அமர்ந்தவர்கள் இந்தப் பதவிக்காவது மரியாதை தந்து இத்தகுதிகளை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

பதவிக்கு ஆசைப்படாதீர்கள். ஆசைப்பட்டுவிட்டால் இத்தகுதிகளை அடைந்துவிடவேண்டும் என்றாவது ஆசைப்படுங்கள்!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2011/01/28 கேள்வி கேளாத கீழ்ப்படிதல்

2011/01/21 நாமும் யந்திரன்களே!2011/01/13 அயர்வற்ற மனத்திற்கு உயர்வு தர என்ன வழி?

2011/01/07 ஐம்பது சதவிகித மனநிலையுடன் அணுகுவோம்!

2010/12/31 பேசிப்பேசியே காலத்தைக் கடத்துபவர்கள்!

2010/12/24 குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!

2010/12/17 உரிமை உள்ளது என்று வார்த்தைகளைக் கொட்டுவதா?

2010/12/10 நாம் மறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள்!

2010/12/03 தெரிந்து என்ன ஆகப்போகிறது?

2010/11/26 நம் மகிழ்வின்போது கவனிக்கப்பட வேண்டியவை…

2010/11/19 மனிதர் நீங்கள்!

 2010/11/12 மனத்தைத் திசை திருப்பும் வழிகள்!

2010/11/04 புதுக் குழியைத் தோண்டிப் பழைய குழியை நிரப்புவதா?

2010/10/29 நம்மை உயர்த்தும் நம் வார்த்தைகள்

2010/10/22 நீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?
writer-lena.jpg
2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 1:55 am
Filed under: Uncategorized