வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
வயது கூடிப்போன இரகசியம்!
ஏதடா வம்பு இது! இப்படி வந்து ஏடாகூடமாய் இந்தக் கூ சி சுரங்கத்தில் வகையாக மாட்டிக்கொண்டோமே என்று தோன்றியது.
என் பின்னால் தொடர்ந்து வருவதாக ஜவஹரையும் மதுவையும் நானாக எண்ணிக்கொண்டது தவறாகப் போயிற்று. அவர்கள் உள்ளூர் மனிதர்கள். இந்தக் கூ சி போர்க்களச் சுரங்கத்தைச் சில தடவையோ பல முறைகளோ பார்த்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கென்ன தலைவிதி? உடம்பைக் குறுக்கி, உடம்பில் சிராய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள இது என்ன வேண்டுதலா?
ஏதோ சமையல்கட்டு வரும் சமைத்த கிழங்குகளைக் கொடுப்பார்கள் என்றார்களே மதுவும் ஜவஹரும் அது எப்போது வரும்? அவித்த கிழங்குகளைத் தராவிட்டால் கூடப் பரவாயில்லை. சமையல் கட்டு வந்தாலாவது சற்று நிமிரலாமே! அது சற்று உயரமாக இருக்குமே!
ஆனால் இந்தப் பாதை என்னடாவென்றால் இப்படிக் குறுகிக் குறுகிச் சிறு குழந்தை போலத் தவழும் நிலைக்கு நம்மை ஆக்கிவிடும் போலிருக்கிறதே!
இது என்ன மனிதர்கள் பயன்படுத்திய குகைகள் தானா இல்லை நரிகளின் வளைகளா? இப்படியா மகாச் சிறியதாய் ஆகிக்கொண்டே போகும்?
இப்படித்தானே சிந்தித்து என் சிந்தனை சிதறிச் சிதறி விதவிதமாய் விலக ஆரம்பித்தது இந்த கூ சி பாதையைப் போலவே!
இந்த சிறு நேர நடையே (நடையா இது இப்போதே 80 வயது ஆன மாதிரி ஆகிப் போனேனே) படாதபாடு படுத்துகிறதே எப்படித்தான் இந்தச் சுரங்கங்களிலேயே வாழ்ந்து சுதந்தரக் காற்றைச் சுவாசிப்பதற்காக வியட்நாமிய மக்கள் பெரும் போரை ஒரு வல்லரசுக்கு எதிராக நிகழ்த்தினார்களோ தெரியவில்லை! அடேங்கப்பா!
அதுவும் இப்படியே 200 கிலோ மீட்டர்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லையே!
இதனாலேயே இந்த இடத்திற்கு ‘The steely land and the bronge citadel’ என்று ஒரு பெயர் உண்டாம். இதைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்கள் வியட்நாமியர்கள். என் தாய் மாமா நடராஜனிடம் வியட்நாம் கதைகளை நிறையக் கேட்டேனே! பல சொன்னவர் ஏன் இந்தக் கூ சி பற்றிச் சொல்லவே இல்லை.
70 கிலோ மீட்டர் தூரத்தில்தானே இருந்திருக்கிறார்? ஒருவேளை அவரே பார்த்தது இல்லையோ அல்லது இந்தச் சின்னப் பையனுக்கு (எனக்குத் தாங்க!) இந்தக் கதையெல்லாம் எதற்கு என்று சொல்லாமல் விட்டிருப்பாரோ அல்லது இந்தப் பேச்சு வந்தும் நினைவில் வந்திருக்காதோ? இப்படி நெஞ்சில் பலவிதக் கேள்விக் கொக்கிகள்.
திடீரென ஒருவித ஒளி இயற்கையான சூரிய ஒளிதான்.
அட! வெளி வாயில் தெரிகிறதே! ஓ! பாதை கூடப் பெரிதாகிறதே!
ஆம்! பாதை விசாலமடைய வெளிவாயில் வந்தே விட்டது!
அப்பாடா! மெல்லப் பாதை உயரமாகிறது. அட! நிமிர முடிகிறது. இடுப்புக் கடுத்த பெண்ணைப் போல இடுப்பைப் பிடித்துக் கொண்டு முனகாத குறைதான்!
வெளியே வந்தால் -
ஜவஹரும் மதுவும் ஒருமித்த குரலில் கேட்கிறார்கள், சிரித்த படி எப்படி இருந்தது டனல்”?
“டனாலா இது? முதுகு, இடுப்பு பணால்! பேசாமல் உங்களைப் போலவே நிலப்பரப்பின் வழியாகவே வந்திருக்கலாம் போலிருக்கிறது.
இதை அன்று ஒப்புக்குச் சொன்னேனே தவிர, பிறகு எண்ணிப் பார்த்தபோது இன்று இதை எழுதும்போது இந்த அனுபவம் கட்டாயம் பெறப்பட்டிருக்கத்தான் வேண்டும் என்று தோன்றியது.
மது, ஜவஹரிடம் உரையாடியபோது மேலும் சில தகவல்கள் கிடைத்தன. எங்கள் வழிகாட்டியும் சில தகவல்களைச் சொன்னார்.
ஒரு காலத்தில் ஹோ சி மின்னின் மக்கள் தொகை 2 இலட்சமாக இருந்ததாம். இவர்களுள் 80,000 பேர் இந்த கூ சி குகைக்குள்தான் மறைந்து வாழ்ந்து போரிட்டிருக்கிறார்கள்.
“எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லையே” நிலத்திற்கு அடியில் 80,000 பேர் வாழ்வதா எப்படிச் சாத்தியம்?.
“போரிடும் குணமும் சுதந்தர தாகமும் இருந்தால் எதுவும் சாத்தியம்!”
“200 கிலோ மீட்டர் நீளமே தவிர, குகையின் பரப்பளவு 420 சதுர கிலோ மீட்டர்”.
“யப்பா”.
“உலகிலேயே அதிகமான அமிலக் குண்டுகள் வீசப்பட்ட பகுதி இதுதான். அமெரிக்கர்கள் தங்களால் நுழைய முடியவில்லை என்று இந்தக் குகைக்குள் மோப்ப நாய்களை அனுப்பியிருக்கிறார்கள். போன நாய்கள் திரும்பியதே இல்லையாம். சில தினங்கள் கழித்து அவை வெகுதூரத்தில் பிணமாக வீசப்படுமாம்!
“அடேயப்பா!” இந்தச் சுரங்கப்பாதைகள் தோண்டப்பட்ட காலம்
“1940களில்” சரிவும் பாதிப்பும் எற்படவே 1960 இல் மறுபடி புதுப்பிக்க ஆரம்பித்தனர்”
“இந்தப் போராட்டமெல்லாம் இளைய தலைமுறைக்குத் தெரிந்திருக்கிறதா”
“வியட்நாமிய மாணவ மாணவியர் தங்கள் வாழ்நாளில் தங்கள் நாட்டில் காண விரும்பும் இடத்தில் தலையாயது இதுதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2011/01/13 கீழுலகம் பார்த்தேன்
2011/01/07 சிறிய வியட்நாமின் பெரிய மிரட்டல்!
2010/12/31 பெற்றோரைக் காக்க வேலையை உதறும் வியட்நாமியர்கள்!
2010/12/24 வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?
2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது
2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!
2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!
2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!
2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க
2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!
2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?
2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!
2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!
2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!
2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!
2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!
2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!
2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”
2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!
2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































