வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
கீழுலகம் பார்த்தேன்
வியட்நாமியப் போர்க்களங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்றுதான் கு # சி (Ku # chi). இதை மட்டும் பாதுகாத்து வைத்து, வருகிறவர்களுக்கு உலகின் வல்லரசை நாங்கள் எப்படியெல்லாம் சமாளித்து வெற்றிகொண்டோம் என்பதை அடுத்தடுத்த தலைமுறைக்கும் வருகிற உல்லாசப் பயணிகளுக்கும் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
போர்க்களம் என்றால் என்னவோ எப்படியோ என்று கற்பனைகளில் பிடிபடாத சில காட்சிகளை மனத்திற்கு உருவகம் செய்துகொண்டு உள்ளே நுழைந்தால் அடர்த்தியான காடு எந்த நிமிடம் எந்த மிருகம் வந்து தாக்குமோ எனும்படியான காடு அது. நடுநடுவே சிறுசிறு செடிகள்.
இந்த இடத்தில் நின்றுகொண்டு எங்கள் வழிகாட்டி (பெயர் ஹூன் # ஹையாம்!) “நில்லுங்கள்! இங்கே பாருங்கள்” என்று ஒரு தரைப்பகுதியை உற்றுப் பார்க்கச் சொன்னார். அதில் தரைக்கும் சிமெண்ட் பலகை போன்ற அமைப்பிற்கும் இடையே எலிகள் புகுந்தோடுகிற அளவிற்குத்தான் இடைவெளி (காண்க படம்)”
“இதிலிருந்து திடீரென்று படபடவென்று குண்டுகள் புறப்பட்டால் எதிரிகள் என்ன செய்ய முடியும்? இப்போது பார்வையாளர்கள் பார்ப்பதற்காக இலை தழைகளை நீக்கியிருக்கிறோம். போர்க் காலங்களில் இது மூடப்பட்டு இருக்குமாதலால் எதிராளிக்கு எங்கிருந்து குண்டுகள் பாய்கின்றன என்றே தெரியாது. சில நேரங்களில் இதை உளவு பார்க்கும் வழியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள் எங்கள் முன்னோர்.
எதிரிகளைக் காட்டில் நன்கு உள்ளே வர அனுமதித்துவிட்டு பிறகு நாலாபுறமும் சூழ்ந்து தாக்குவார்கள். எதிரிகள் நிலைகுலைந்து போவார்கள்.”
“சிறு சந்தாகத் தெரிகிற இதற்குள் உங்களவர்கள் எப்படி உள்ளே போனார்கள்?”
“அதற்கு வேறு இடம் உள்ளது” என்று. “இப்படி வாருங்கள்” என்று அழைத்துப் போனார். ஒரு சிறு தூப்பாய்க் குழி போன்ற ஒரு சிறு பள்ளத்தைக் காட்டி, “இதன் வழியாகத்தான் உள்ளே போனார்கள்.”
“ஜவஹர் சார்! என்ன சார் சொல்கிறார் இந்த ஹூன்? இதுக்குள்ளே எப்படி சார் ஒரு மனுஷன் இறங்க முடியும்? பாருங்க மது சார் என் காலணியை விடச் சற்றுதான் பெரிதாக இருக்கிறது. இந்தக் குழாயில் (என் காலணியை நீட்டி எடுத்துக் கொண்ட படம் காண்க) ஒரு மனுஷன் இறங்கவே முடியாது சார்!” என்றேன்.
“லேனா சார்! வியட்நாமியர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. வியட்நாமிய கொரில்லாக்கள் மிக மெலிவானவர்கள். ஆனால் உள்ளத்தால் வலிமையானவர்கள். உடலை ரப்பர் போலக் குறுக்கிக்கொண்டு உள்ளே இறங்கிவிடுவார்கள். அமெரிக்கர்கள் பெரிய - திடகாத்திரமான உடலைக் கொண்டவர்கள் அவர்களால் இந்தக் குழிக்குள் இறங்க முடியாது.”
“உள்ளே இரண்டு குண்டுகளைப் போட்டால் உள்ளே இருப்பவர்கள் என்னாவார்கள்?” ஹூனைப் பார்த்து நான் ஆங்கிலத்தில் கேட்க,
“அதற்குள் எங்களவர்கள் பல மைல் தூரம் போயிருப்பார்கள்.”
“இந்தக் குழிக்குள் பல மைல் தூரமாம். ஹூன் ஏன் சார் இப்படிக் கதை அளக்கிறார்?” தமிழில் இதை மதுவிடம் கேட்க,
“நீங்க வேற! இந்த டனல்களில் நீளம் நம்ப முடியாதது. நூறு இருநூறு கிலோமீட்டர்கூட இருக்கும்.”
“என்னது பூமிக்குள் உள்ள சுரங்கப் பாதை ஓரிரு நூறு மைல்களா? போங்க சார்! எனக்கு ஏற்கெனவே காது குத்தியிருக்கு!”
“ஐயோ லேனா சார்! உங்ககிட்ட பொய்யளக்கணும்னு எங்களுக்கென்ன ஆசையா? நீங்க பத்திரிகையாளர் வேற! உங்ககிட்டப் போய் அளப்போமா?”
“எப்படி சார் நூறு மைலுக்கெல்லாமம் சுரங்கம் அமைச்சா சுவாசிக்கப் புதுக்காற்று?”
‘அதுக்கெல்லாம் அங்கங்கே காற்றுக் குழாய் அமைச்சிருக்காங்க சார்! வியட்நாமியர்கள் பயங்கரமான ஆளுங்க சார்!”
“பார்த்தா ரொம்பப் பாவப்பட்ட அப்பாவி ஜனங்களாத் தெரியுறாங்களே!”
“பார்க்கத்தான் அப்படி! பயங்கரமான மூளைக்காரங்க. இல்லைன்னா அமெரிக்கன் ஆர்மியை சமாளிச்சிருக்க முடியுமா?”
“உண்மைதான். சரி, உள்ளாற ஒளிஞ்சே இருந்தா சமையல் சாப்பாடெல்லாம்?”
“அதையெல்லாம் சிந்திக்காம இருப்பாங்களா? மரவள்ளிக் கிழங்கை மட்டும் அவிச்சுத் தின்னே பல காலம் ஓட்டியிருக்காங்க. இதுக்குள்ளே புகை வராதபடி சமைக்கிற சமையல் கட்டெல்லாம் நிலத்திற்குக் கீழே இருக்கு.”
“பார்க்கணுமே!”
“அதுக்குத்தானே ஹூன் கூட வந்திருக்கிறார். எல்லாத்தையும் காண்பிப்பார். அது மட்டுமில்லை. புகை வராதபடி அவித்த கிழங்குகளை நமக்குச் சாப்பிடத் தருவாங்க.”
“சுவாரசியமா இருக்கே!”
“தரைக்குக் கீழே உள்ளே என்னென்னவெல்லாம் இருக்குத் தெரியுமா? எல்லாத்தையும் பார்க்கத்தானே போறீங்க!”
சிறு குழந்தைகள் பொருட்காட்சிகளைச் சுற்றிப் பார்த்தபடி மலைத்துப் போகுமே அப்படி ஆனேன் நான்!
சிறிது தூரம் நடந்ததும், “கீழே உள்ள சுரங்க உலகைப் பார்க்க விரும்புகிறவர்கள் இங்கு இறங்கலாம்!” என்றார் ஹூன். இது அப்படி ஒன்றும் உடம்பைக் குறுக்கி இறங்கவேண்டிய பாதை அல்ல என்று தோன்றியது. விறுவிறுவென்று கீழ் உலகைப் பார்க்க இறங்கினேன். என் பின்னால் என்னுடன் வந்த ஹுன், மது, ஜவஹர் மூவரும் என்னைப் பின்தொடர்கிறார்களா என்று கூடக் கவனியாமல் படிக்கட்டுகளில் நடந்தேன். திரும்பிப் பார்த்தேன். மூவருமே வரவில்லை. ஏன் இப்படி? கூடவே வருவார்கள் என்று பார்த்தால் ஏன் எவருமே வரவில்லை? பிடிபடவில்லை. எனக்கு இருக்கும் சூரத்தனம் இவர்களுக்கு இல்லையா? இதென்ன பாதை இப்படிக் குறுகிக் கொண்டே போகிறது? இருளும் மெல்லச் சூழ்ந்து ஒளி குறைய ஆரம்பித்தது எங்கேயேனும் தேள், பூரான், நட்டுவாக்கிளிகள் உள்ளே திரியுமோ?
இதைவிட வேறு சில விஷயங்களும் மனத்திற்குப் பிடிக்காமல் இருந்தன. முதலாவது ஈரப்பதமான மண் சுவர்களிலிருந்து ஒருவித முடை நாற்றம். இதைப் பூஞ்சக் காளானின் நாற்ற இரகத்தில் சேர்க்கலாம். இது மூச்சை முட்டுமளவு அதிகரிக்க ஆரம்பித்தது. சுவர்களை ஒரு சம நிலைக்காகத் தொட்டு நடந்தபோது சில்லென்ற ஈரம் கைவழியே ஊடுருவ ஆரம்பித்தது. இதைவிட மோசமான அம்சம் என்ன தெரியுமா? சுரங்கப் பாதையின் அளவு குறுகிக்கொண்டே போனது. நான் ஒரு யோகாசன மாணவன். எனக்கு உடல் நன்கு வளையும். நன்றாகவே குறுகும் ஆனபோதும் என்னால் சமாளிக்க முடியாதபடி பாதை குறுகிக்கொண்டே போனது.
பின்னால் திரும்பிப் பாாத்தேன். ஜவகரோ, ஹூனோ, மதுவோ வருகிறார்களா என்று எவரும் என்னைப் பின் தொடரவில்லை.
ஏன்? நால்வரும் ஒன்றாகத் தானே வந்தோம்? அவர்களும் உடன் வருகிறார்களா என்று கேட்டுக்கொள்ளாமல் ஏன் தனியனாக முடிவெடுத்தோம்?
பாதை குறுகிக்கொண்டே போன போது சேச்சே! இனிமேல் தாங்காது. திரும்பிவிட வேண்டியதுதான். இதற்கு மேல் என் உடம்பு குறுகும் என்று எனக்குத் தோன்றவில்லை.
திரும்பி வந்த பாதையிலேயே போய்விடலாம் என்றால் உடம்பு திரும்பவில்லை. என் உடம்பைத் திருப்ப முடியாத அளவிற்கு அப்படி ஒரு குறுகலான பாதை. வெகுநேரம் குனிந்தே நடந்து கடந்ததால் இடுப்பு வலிக்க ஆரம்பித்தது. நிமரலாம் என்று பார்த்தால் தலை இடித்தது. தரையில் அமர்ந்தால்தான் தலையை நிமிர்த்தி கழுத்தை நிமிர்த்த முடியும் என்பது தெளிவானது. தரையில் அமர்ந்து கழுத்தை நிமிர்த்தினேன்.
தட்டுத் தடுமாறி நடந்ததில் மண் சுவரில் கூர்மையாக இருந்த சின்னஞ்சிறு கற்கள் சிறு சிராய்புகளை ஏற்படுத்த உடலின் திறந்த பாகங்களில் ஏற்பட்ட இந்தக் காயங்கள் மெல்ல எரிச்சலைத் தர ஆரம்பித்தன.
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2011/01/07 சிறிய வியட்நாமின் பெரிய மிரட்டல்!
2010/12/31 பெற்றோரைக் காக்க வேலையை உதறும் வியட்நாமியர்கள்!
2010/12/24 வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?
2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது
2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!
2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!
2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!
2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க
2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!
2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?
2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!
2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!
2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!
2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!
2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!
2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!
2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”
2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!
2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































