வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்
சிறிய வியட்நாமின் பெரிய மிரட்டல்!
வியட்நாம் அமெரிக்கப் போராட்டக்களமான கு சி (Ku Chi)யில் உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என்று என் வியட்நாமியத் தமிழ் நண்பர்கள் சொன்னபோது அப்படி என்ன பெரிதாக இருந்துவிட முடியும் என்றுதான் முதலில் எண்ணினேன்.
கு # சியின் நுழைவாயில் ஏதோ இராணுவ அலுவலகப் பாணியில் இருக்குமென்று பார்த்தால் ஒரு பிக்னிக் இடம் போலவே இருந்தது. ஒரு பிரம்மாண்டமான அரை வளைவுக் கட்டடம் அது.
“நீங்கள் இருங்கள் நான் போய் நமக்கென ஒரு வழிகாட்டியை ஏற்பாடு செய்து கொணடுவிட்டு வருகிறேன்” என்ற மதுசூதனனைக் கையமர்த்தினேன்.
“வேண்டாம் மது சார்! நாமே பார்த்துக் கொள்வோம். இதற்கு எதற்கு வழிகாட்டியெல்லாம்?” என்று தடுத்தேன்.
“அப்படியில்லை லேனா சார். கூடவே ஒரு வழிகாட்டி வந்தால்தான் நாம் இங்கே தொலைந்து போகாமல் இருப்போம்.”
“தொலைந்துபோவோமா? அப்படி என்ன இருக்கிறது உள்ளே?”
“உள்ளே பாாக்கத்தானே போறீங்க? இது போர் நடந்த இடம். இங்கு தரைக்கு அடியில்தான் அவ்வளவு விஷயங்களும் இருக்கு.”
“என்ன பூமிக்கு அடியிலா?”
“ஆமாம். பார்க்கச் சாதாரணக் காடு போலத்தான் இருக்கும். இலைகளை நகர்த்தினால் உள்ளே சுரங்கப் பாதை இருக்கும். வியட்நாமியர்கள் மெலிவானவர்கள். சுரங்கப் பாதையே ஒரு காலின் நீளத்தைவிடச் சற்றுதான் பெரிதாக இருக்கும். உள்ளே போகப் போகக் குறுகிக்கொண்டே போகும். அமெரிக்கர்களை உங்களுக்குத் தெரியும். எல்லோரும் திடகாத்திரமானவர்கள். அவர்களால் உள்ளே இறங்கவே முடியாது. இறங்கினாலும் முதல் கட்டத்திலேயே கொன்று போட்டுவிடுவார்கள். பார்க்கத்தானே போகிறீர்கள்! உள்ளே நிலத்திற்குக் கீழே சமையல் அறை, மருத்துவமனை, இராணுவ அதிகாரிகள் கூட்டங்கள் நடத்துவதற்கான அலவலக அறைகள் எல்லாம் இருக்கும்.”
“என்னது நிலத்திற்குக் கீழே இவ்வளவுமா?”
“ஆமாம் பார்க்கத்தானே போகிறீர்கள்?”
“ரொம்ப ஆச்சரியமாக இருக்கு சார்.”
“இன்னும் இருக்கு. தரைமட்டத்திற்குக் கீழே அமர்ந்துக்கொண்டு சிறு துவாரம் வழியாக இந்தப் பகுதியில் நடமாடிய அமெரிக்கர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். எந்தப் பக்கத்திலிருந்து குண்டு வந்து தாக்கியது என்றே கண்டு பிடிக்க முடியாத அறவிற்கு அமெரிக்கர்களைக் கொன்று குவித்திருக்கிறார்கள். உலகின் சக்தி வாய்ந்த இராணுவம் அமெரிக்க இராணுவம். ஆனால் அதையே கண்களில் விரலை விட்டுக் குடைந்திருக்கிறார்கள் வியட்நாமியர்கள். இத்தனைக்கும் இதில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகம் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். உள்ளே போகும்போது பார்த்து நடங்க திடீரென ஓர் எட்டடிப் பள்ளம் வெளிப்படும். அதில் விழுந்தால் உடம்பு தேறாது.”
“புரியவில்லையே.”
“உள்ளே ஓரு உருளை முழுக்க கூர்மையான கத்திகள் போன்ற அமைப்பு இருக்கும். சாதாரண நிலப்பகுதி என்று காலை வைத்தால் மரத்தாலும் இலைகளாலும் மூடப்பட்டுள்ள அப்பகுதி மீது காலை வைப்பவர்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். உடம்பில் தலையிலிருந்து கால் பாதம் வரை ஏராளமான கூர்மைக் கம்பிகள் பாய்ந்து உடலைக் கிழிக்க, விழுந்தவன் என்னவென்று கற்பனை பண்ணிப் பாருங்க.”
“ஜவஹர் சார்! என்ன சார் இப்படிப் பயமுறுத்துறீங்க.”
“இதற்குத்தான் சொன்னேன். நமக்கு வழிகாட்டி அவசியம்னு.”
“மது சார் போய் வழிகாட்டிக்கு ஏற்பாடு பண்ணிட்டே வந்திருங்க” என்றேன் நான்.
“இப்படியா பாதுகாப்பு இல்லாம வச்சிருப்பாங்க? வர்றவுங்க அதுல விழுந்து தொலைச்சா என்னாவது?” மறுபடி நான்.
“ஒரு பேச்சுக்குச் சொன்னேன். அமெரிக்கர்களை வியட்நாமிய கொரில்லாக்கள் எப்படியெல்லாம் கொன்று குவித்தார்கள் என்பதற்குச் சான்று காட்ட இந்த மாதிரியான அமைப்புகளை அழிக்காம வச்சிருக்காங்களே தவிர, வர்றவங்க இதுல விழுந்துவிடாத அளவுக்குத் தடுப்பெல்லாம் இருக்கு.”
“அதானே பார்த்தேன்.”
“வாங்க மது சார் வழிகாட்டிக்கு ஏற்பாடு செய்கிற வரைக்கும் பக்கத்துல இருக்கிற உணவகத்திற்குப்போய் அமர்ந்து தாகத்திற்கு ஏதாவது சாப்பிடுவோம்.”
“வேண்டாம் தாகமில்லை!”
“உள்ளே நிறையச் சுத்தணும், ஏறணும், நடக்கணும், இறங்கணும். நாக்கு வறண்டு போகும். ஒண்ணு வாங்கிப் பாக்கெட்ல வச்சுக்குங்க. இல்லைன்னா வயிற்றை இப்பவே நிரப்பிக்குங்க. உங்க விருப்பம்.”
இந்த அக்கறை எனக்குப் பிடித்திருந்தது. உள்ளூர் மனிதர் இந்தச் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர். இவர் சொல்வதைப் புறந்தள்ளக்கூடாது.
“வாங்க போகலாம் மது நம்மைத் தேடுவாரே?”
‘தேடி வந்துடுவார். பக்கத்துலதானே”
அங்கொருவரும் இங்கொருவருமாக உணவகத்தில் சிலர் அமர்ந்திருக்க, ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவு என்னைக் கவர்ந்தது. அது ஒரு சூப். முழுக்க முழுக்க சிறுசிறு வெள்ளை நரம்புகளாக முளைத்திருந்த சிறுபயிர்களை வேகவைத்து உருவாக்கப்பட்ட சூப்.
“நீங்கள் அழைத்தற்காக ஏதேனும் குளிர்பானம் சாப்பிடத்தான் வந்தேன். ஆானல் அந்த எண்ணம் மாறிவிட்டது. அதோ! அவர் சாப்பிடுகிறாரே, ஒரு முளைவிட்ட பயிர்களால் ஆன சூப். அது வேண்டும்” என்றேன் ஜவஹரிடம்.
“நல்ல தேர்வு. தாகம் அடங்குன மாதிரியும் ஆச்சு. உருப்படியா ஏதும் சாப்பிட்ட மாதிரியும் ஆச்சு” என்று தனக்கு ஒரு காப்பியும் எனக்கு ஒரு சூப்பும் வாங்கிக்கொண்டார்.
“அமெரிக்காக அடுத்த நாட்டு விவகாரங்களில் தலையிட்டு ஆதிக்கம் செலுத்தப் பார்த்தாலும் இரண்டு நாட்டு விவகாரங்களில் தலையிட்டு ஏகமாய்ச் சேதப்பட்டுவிட்டது. இதில் தலையாய சேதம் வியட்நாமில்தான். அடுத்தது ஈராக்கில்.”
“உண்மைதான் லேனா சார்! பொருளாதாரச் சேதாரம்கூடப் பரவாயில்லை. உயிரிச் சேதம்தான் பயங்கரம். வலிமை மிகுந்த அமெரிக்க இராணுவத்தை நேருக்கு நேர் மோதி ஜெயிக்கமுடியாது என்பதை உணர்ந்து கொரில்லா முறையில் (மறைந்திருந்து) தாக்குவது என்கிற வியட்நாமியர்களின் உத்தி, அந்த நேரத்தில் உலகிற்கே புதிய போர் உத்தியாக அமைந்துவிட்டது.”
“ஆமாம். இல்லாவிட்டால் உலகின் சக்தி
வாய்ந்த இராணுவத்தையே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட வைத்திருக்க முடியுமா?”
நாங்கள் பேசிக்கொண்டிருந்த வேளையில் பச்சை சீருடை அணிந்த ஒரு வியட்நாமியர் ஒருவருடன் வந்தார்.
“இவர் இராணுவ வீரரா? இவர்தான் நம் வழிகாட்டியா?”
“வியட்நாம் போரில் தாயை இழந்தவரின் மகன் வழிகாட்டிதான். ஆனால் இராணுவ வீரர் இல்லை.”
நாங்கள் நால்வருமாக மெல்ல அந்தப் போர்க்கள இடத்தை நோக்கி நடக்க, எனக்குள் ஜவஹர் உருவாக்கியிருந்த பிரமிப்பு, இதயம் முழுக்கப் பரவியிருந்தது.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/12/31 பெற்றோரைக் காக்க வேலையை உதறும் வியட்நாமியர்கள்!
2010/12/24 வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?
2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது
2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!
2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!
2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!
2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க
2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!
2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?
2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!
2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!
2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!
2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!
2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!
2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!
2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”
2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!
2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































