Posted on Friday 28 January 2011
நோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள் - கே.எஸ்.சுப்ரமணி
முடி கொட்டுகிறதா?
ஆண்களுக்கும் பெண்களுக்கும் போதுமான அளவு சத்துணவு சாப்பிடாததினால்தான் பெரும்பாலும் முடி கொட்டுகிறது.
நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானம் ஆகவும் கொழுப்பும், புரதமும் உடலில் நன்கு சேரவும் பைரிடாக்ஸின் என்னும் வைட்டமின் தேவை.
பால், ஈரல், அரிசி, கோதுமை, காரட், வேர்க்கடலை, கீரைவகைகள் முதலியவற்றில் இந்த வைட்டமின் தாராளமாகக் கிடைக்கிறது.
உடலின் எல்லா உறுப்புகளின் “செல்”களும் நன்கு வளரவும், ஆரோக்கியமாகத் திகழவும் ஃபோலிக் அமிலம் தேவை.
மேற்கண்ட உணவு வகைகளுடன் பட்டாணி, பீன்ஸ் முதலியவற்றையும் உணவில் தவறாமல் சேர்த்து வந்தால் முடிகொட்டுவது கட்டுப்படுத்தப்பட்டு, செழிப்பாக வளர ஆரம்பிக்கும்.
முடிகள் வெள்ளையும் கருப்புமாக கலந்து காணப்பட்டால் அதுவும் இள வயதிலேயே இக்குறை காணப்பட்டால் ; இது புரதச்சத்து குறைவால் ஏற்பட்ட நிகழ்வே.
இவர்கள் பால், தயிர், சோயா பீன்ஸ், முட்டை, சீஸ், மீன் முதலியவற்றை உணவில் நிறைய சேர்த்து வரவேண்டும்.
முடி கொட்டுவதுடன் செம்பட்டையாகவும் மாறிக் காட்சியளித்தால் இவர்கள் முருங்கைக் கீரை, வெல்லம், ஈஸ்ட் முதலியவற்றைத் தினமும் சேர்த்து வரவேண்டும். நீளமான கூந்தலுக்கு ஆசைப்படும் பெண்கள் வெல்லக்கட்டி, கருப்பட்டி முதலியவற்றைச் சாப்பிடலாம்.
முடியின் நிறம் தொடர்ந்து கறுப்பாக இருக்கப் பட்டாணியிலும், முட்டையின் மஞ்சள் கருவிலும் உள்ள செம்பு உலோகச் சத்து உதவுகிறது. இரும்புச் சத்துள்ள கீரை வகைகளை உணவில் சேர்த்து வந்தால் அதிலிருந்தே போதுமான அளவு செம்புச் சத்து நம் தோலுக்கும் தலைமுடிக்கும் கிடைத்து விடுகிறது.
முடி கொட்டுபவர்களும், செம்பட்டையான முடியை உடையவர்களும் “பி” வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்டு வருவது நல்லது.
குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கும், குடும்பக் கவலையால் ஆண்களுக்கும் முடிகொட்டும். இவர்கள் மீன், நண்டு போன்ற கடல் உணவுகளுடன் அன்னாசி, பேரிக்காய், டர்னிப் கீரை, வெள்ளைப் பூண்டு, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வரவும். இது உற்சாகமான மனநிலையைத் தரும். இரத்தம் சுத்தமாக மாறுதல், தலைமுடி, பற்கள், தோல் முதலியவை ஆரோக்கியமாக இருக்கவும் இவை உதவுகின்றன.
இரத்த சோகை, டி.பி, தைராய்டுக் கோளாறு ஆகியவை உள்ளவர்களுக்கு முடி சாம்பல் நிறத்திலோ அல்லது நரைத்தோ காணப்படும். இவர்களும் ஊட்ட உணவைத் திட்டமிட்டுச் சாப்பிட்டு வந்தால் நோய்களும் குணமாகி தலைமுடியும், முடி கறுப்பாகச் செழித்து வளரும். உணவில், கறிவேப்பிலை சட்னியை தினமும் சேர்த்தல் மிக நல்லது.
அம்லா ஆயில் என்ற சொல்லப்படும் நெல்லிக்காய்த் தைலம் முடிக்கு மிகவும் சிறந்தது. சூடான கடுகு எண்ணெயில் மருதாணி இலையைப் போட்டுச் சிறிது நேரம் கழித்து இறக்கி ஒரு பாட்டிலில் இந்த ஆறிய எண்ணெயை ஊற்றி வைத்துக் கொள்ளவும். மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
தினமும் இந்த எண்ணெயைத் தலையில் தடவி மசாஜ் போல் தலையை நன்கு பிடித்து விடவும். சில வாரங்களில் இதன் மூலம் முடி நன்கு அபரிமிதமாக வளர ஆரம்பிக்கும்.
குறைந்த செலவில் ஃபேன்ஸி ஸ்டோர்களில் “காஷ்மீர் குசம்” என்ற பொருள் கிடைக்கிறது. சுண்டுவிரல் அளவில் ஒரு பாட்டிலில் சிவப்பு நிற எண்ணெயும், ஒரு கைப்பிடி அளவு எல்லா மூலிகைகளும் கலந்த பட்டைகளும் சேர்க்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இந்த காஷ்மீர் குசத்தை 1/4 அல்லது 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் கலக்கி வைத்துக் கொண்டு தினமும் தலையில் (குளித்த பிறகு) தேய்த்துத் தலைச் சீவிக் கொண்டால் போதும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மூன்று மாதங்களுக்குள் முடி நன்றாக வளர்ந்து விடும். முடி வளர்வதற்குக் குறைந்த செலவில் கிடைக்கும் இயற்கையான மருந்து இது. மிகவும் சக்தி வாய்ந்தது.
முடி கொட்டாமல் நரைக்காமல் செம்பட்டையாக மாறாமல் இருக்க முதல் அம்சமாக ஈரல், கோதுமை, ஈஸ்ட், பட்டாணி, முருங்கைக்கீரை ஆகியவற்றைப் போதுமான அளவு உணவில் சேர்த்து வாருங்கள்.
இரண்டாவது அம்சமாக இரும்புச் சத்து மிகுந்த திராட்சை, பேரீச்சை, பீட்ரூட், கிஸ்மிஸ் திராட்டை, ஸ்பினாஷ், கீரை முதலியவற்றுக்கு உணவில் முக்கியத்துவம் கொடுங்கள்.
அடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் காரட் சாறு அருந்தி வாருங்கள். நன்கு பயன் தெரியும்.
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய பொதுவான நோய்களுக்கான உணவு முறைகள்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
2011/01/07 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்…? - தொடர்ச்சி
2010/12/31 எந்தெந்தக் காய்கறிகள் உங்கள் உடல் கோளாறுகளைக் குணமாக்கும்?
2010/12/24 இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி என்னும் அரிய காய்கறி
2010/12/10 வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்
2010/12/03 கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான இலைக்காய்கறி
2010/11/26 பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!
2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்
2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்
2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி
2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு
2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!
2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!
2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை
2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு
2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி
2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு
2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?
2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்
2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்
2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை
2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!
2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!
2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்
2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!
2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்
2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு
2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்
2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!
2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்
2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!
2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்
2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி
2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்
2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்
2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்
2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2
2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு
2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3
2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2
2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1
2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்
2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது
2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?
2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!
2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!
2009/12/25 இஞ்சியின் மகத்துவம்
2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்
2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3
2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2
2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

































வீட்டில் அடைந்து கிடக்கும் விபரீத மனிதர்கள்!
மருத்துவ ஏழைகள்
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

நோய்களைக் குணமாக்கும் உணவு முறைகள்
நாமும் யந்திரன்களே!
மன்னித்து உயர்ந்த முதல்வர்!
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!