காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி
மன அழுத்தத்தை குறைக்கும் இலைக் காய்கறி
இலைக் காய்கறிகள் என்று சொல்லப்படும் கீரை வகைகளில் மிக முக்கியமானது கொத்துமல்லிக்கீரை.
கீரைகளுள் இரும்புச்சத்தும், தாது உப்புகளும், வைட்டமின் ‘சி’யும் அதிக அளவில் உள்ள கீரை எது, இதற்குப் பதில், கொத்துமல்லிக் கீரைதான்!
இதன் பொருட்டே, இந்தக் கீரையை எந்த வலையிலாவது சிறிதளவேனு தினசரி நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
உடல் உறுப்புகளைத் தூண்டிவிட்டுச் செயல்பட வைக்கிறது. இக்கீரை உடலுக்கு உரத்தையும் வழங்குகிறது. வயிற்றுக்கு பலத்தையும் தந்து குடற்பகுதிகள் நன்றாகச் செயல்படவும் செய்கிறது. காய்ச்சலைக் குறைத்துச் சிறுநீர் நன்கு சுரக்கவும் செய்கிறது. மூச்சுக்குழல் பகுதியில் உள்ள சளிச்சவ்வு அழற்சியைக் குணமாக்குகிறது. சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டும் மருந்தாகவும் பயன்படுகிறது. உடலின் எந்தப் பகுதியிலிலாவது நரம்புக் கோளாறு என்றால் அங்கே இதுவே சீர் செய்கிறது.
காய்ச்சல் நேரத்தில் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும் கொத்துமல்லிக்கீரைச் சாறு கைகொடுக்கிறது!
வாய் நாற்றம் அகல….
கொத்துமல்லிக்கீரை இனிய நறுமணமும் சுவையும் கொண்டதாகும். இதைப் பச்சையாகவே மென்று தின்னலாம். இப்படிப் பச்சையாக மென்று தின்பதால் வாய்நாற்றம் நீங்குகிறது. சில மருந்துகளின் வாடை ஏற்கத்தக்கதாய் இராது. அந்த வேண்டாத மணத்தை நீக்குவதற்காகவே கொத்துமல்லிக் கீரையை அந்த மருந்துகளில் சேர்த்துத் தயாரிக்கிறார்கள். இதனால் அந்த மருந்துகளை நறுமணத்துடன் விற்பனைக்கு வருகிறது.
தினமும் இந்தக் கீரை சாப்பிடலாமா?
இக்கீரையின் தண்டு, இலை, விதை முதலியன சிறந்த மணப்பொருளாய் இந்தியச் சமையலில் இடம் பெற்றுள்ளன. குழம்புகளுக்கு நறுமணம் ஊட்டக் கொத்துமல்லிக் கீரையையும் சேர்க்கின்றனர். சாலட், பச்சடிகளிலும் இக்கீரை தூவப்படுகிறது.
இக்கீரையைச் சட்டினியாகவும் தயாரித்து பலகாரங்களுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.
சற்று உறைப்புத் தன்மையுடன் காணப்படம் இக்கீரையைத் தினசரி சாப்பிட்டால் பித்தமும், பித்தத்தால் ஏற்பட்ட காய்ச்சலும் நீங்கும்; உடலில் பித்தம் சேராமல் தடுக்கும். சிறந்த தங்கபஸ்பலேகியம் போல உடலுக்கு வலுவையும் ஆண்மை விருத்தியையும் தொடர்ந்து தரும்.
இதனை உண்பதால் மூளையில் ஏற்படும் சூடும், மன அழுத்தமும் நீங்குகிறது. நிம்மதியான தூக்கமும் இரவில் கிடைக்கிறது. நன்கு பசி எடுத்துக் சாப்பிட முடியும்.
வாந்தி, சளி, பல்வலி, பல்லீறுகளில் வீக்கம் முதலியனவும் குணமாகின்றன. எனவே, தினமும் கொத்தமல்லிக் கீரையைச் சிறிதளவு மென்று தின்னுங்கள்.
தாது பலத்தையும் தரும் தங்கமான கீரை இது.
இவ்வளவு தூரம் மருத்துவ குணங்கள் நிரம்பி வழிவதால் தினமும் கொத்துமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
100 கிராம் கீரையில் கிடைக்கும் சத்துப் பொருட்கள் வருமாறு: ஈரப்பதம் 86.3%, புரதம் 3.3%, தாது உப்புகள் 0.6%, நார்ச்சத்து 1.2%, கார்போஹைடிரேட் 6.3%, கிடைக்கும் கலோரி 44.
100 கிராம் கீரையில் கிடைக்கும் வைட்டமின்களும் தாதுஉப்புகளும் வருமாறு: கால்சியம் 184 மில்லி கிராம், மக்னீசியம் 64 மில்லி கிராம், ஆக்ஸாலிக் அமிலம் 47 மில்லி கிராம், பாஸ்பரஸ் 71 மில்லி கிராம், இரும்பு 18.5 மில்லி கிராம், சோடியம் 58.3 மில்லி கிராம், கந்தகம் 256 மில்லி கிராம், குளோரின் 43 மில்லி கிராம், வைட்டமின் ‘ஏ’-11, 530 சர்வதேச அலகு, தயாமின் (பி1) 0.05 மில்லி கிராம், ரிபோஃபிளவின் (பி2) 0.08 மில்லி கிராம், நிகோடினிக் அமிலம் 0.8 மில்லி கிராம், வைட்டமின் ‘சி’-135 மில்லி கிராம்.
எல்லாத் தாது உப்புகளும் உள்ள கீரை இதுதான். இந்தக் கீரையைத் தவறாமல் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இக்கீரையில் உள்ள சத்துகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
இதயமும், இதயத்துக்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றிச் சீராக இயங்க மக்னீசியம் தேவை. மக்னீசியம் ஏராளமாய் இக்கீரையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மனநோய் குணமாக…
பைத்தியம் அல்லது மனநோய் நீங்க 100 கிராம் கீரையை மிக்ஸியில் அரைக்க வேண்டும். அதை 200 மில்லி பசும்பாலில் கரைக்க வேண்டும். பிறகு அந்தப் பசுப்பாலை வடிகட்டி நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தச் செய்ய வேண்டும். தினமும் இருவேளை இதுபோல் அருந்தச் செய்ய வேண்டும். மூன்று நாட்களுக்கு இது போல் அருந்தினால் பலன் கிடைக்கும். அதன் பிறகு நோயாளியின் தன்மைக்கு ஏற்ப கீரையின் அளவைக் குறைத்து இந்த முறையில் பால் தயாரித்துக் கொடுக்கலாம்.
வேலைப் பளு மிகுதியாலும், குடும்பச் சூழ்நிலையாலும் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் சிலர் அவதிப்படுவார்கள்.
இவர்களுக்குக் கொத்துமல்லிக் கீரைச் சாறு அருமருந்தாகும். அது மன அழுத்தத்தை நீக்கி, உடலுக்குச் சுறுசுறுப்பைத் தருகிறது. இதற்காக 50 கிராம் கீரையைச் சாறாக மாற்றித் தினம் ஒருவேளை மட்டும் அருந்தலாம்.
காய்ச்சல் நேரத்தில் இக்கீரைச் சாற்றை அருந்தினால் காய்ச்சலின் தீவிரம் உடனே குறையும்.
வைட்டமின் ‘ஏ’யின் குறைபாட்டாலும், மாலைக் கண் நோயாலும் தோல் நோயாலும் சிலர் அவதிப்படுவார்கள். தயாமின் குறைவினால் உணவு செரியாமை, பசியின்மை, களைப்பு ஆகியவற்றால் சிலர் அவதிப்படுவார்கள். ரிபோஃபிளவின் குறைவால் வாயைச் சுற்றித் தோல் வெடிப்பும், பார்வைக் குறைவால் தோல் அழற்சியும் ஏற்படும். வைட்டமின், ‘சி’ குறைவால் மூட்டு வீக்கம், பல வியாதிகள் ஆகியன ஏற்படும். பிரசவம் எளிதாய் நடைபெறவும், தாய்ப்பால் நன்கு சுரக்கவும், நன்கு கருத்தரிக்கவும் பலர் விரும்புகிறார்கள்.
மேற்கண்ட குறைபாடுகளுக்கு உயர்ந்த ரக மருந்து இருக்கிறது. அது மிகுந்த பயனைத் தருவதுடன் இரத்த விருத்தியையும் உண்டாக்கிவிடுகிறது; இரத்த சோகையையும் குணமாக்கிவிடுகிறது.
அந்த மருந்து கொத்துமல்லிக் கீரைச் சாறுதான்!
தினசரி 50 கிராம் கொத்துமல்லிக் கீரையைச் சாறாக மாற்றி காலையில் அருந்தினால் போதும். தேவைக்கு ஏற்ப அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.
பெரியம்மை நோய் குணமாக ஒரு தேக்கரண்டி கொத்துமல்லி சாற்றில் ஒரு வாழைப்பழ விதைகளைச் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் ஒரு வேளை வீதம் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் பெரியம்மை விரைந்து நீங்கும். பெரியம்மை நோயின்போது கண்களைப் பாதுகாக்கக் கொத்துமல்லி இலைகளைச் சாறாக்கிக் கண்களைக் கழுவவேண்டும். அல்லது கொத்துமல்லி விதைகள் கலந்த தண்ணீரைக் கொண்டு கழுவ வேண்டும். யுனானி மருத்துவத்தில் இந்த முறையில் கழுவுவதால் அம்மை நோயால் கண்கள் பாதிக்கப்படுவதைத் தடுத்துவிடுகின்றனர்.
இரத்த மூலம் குணமாகக் கொத்துமல்லியிலிருந்து திறக்கப்பட்ட நீருடன் பால், சர்க்கரை ஆகியன சேர்த்து அதாவது, கொத்துமல்லிக் காப்பி அருந்த வேண்டும்.
வயிற்றுப் பொறுமல், அஜீரணம் முதலியவை குணமாகக் கொத்துமல்லி விதையை வறுத்துப் பொடியாக்க வேண்டும். அந்தப் பொடியில் இரு தேக்கரண்டி எடுத்துச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட வேண்டும்.
கொலாஸ்டிரல குறைய….
இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவு குறையவும், கொலாஸ்டிரல் சேராமல் இருக்கவும் தினம் ஒரு வேளையாவது கொத்துமல்லிக் காப்பி தயாரித்து அருந்தலாம். இல்லை எனில் கொத்துமல்லி விதைகளை தண்ணீரை இட்டுக் கொதிக்க வைக்கவும். ஆறியதும் தண்ணீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். தண்ணீர் தாகம் எடுக்கும் போது இந்தத் தண்ணீரை அருந்தினால் கொலஸ்டிரல் சேருவது தடைப்படும்.
கொத்துமல்லியில் உள்ள Vilatile oil என்னும் எண்ணெயை உணவுப் பொருள்களுக்கு நறுமணம் ஊட்டவும் மருந்துப் பொருள்களில் வாசனை மருந்தாகவும் சேர்க்கப்படுகிறது.
கொத்துமல்லி விதையில் புரதமும், கலோரியும் அதிகம், அதனால்தான் மிளகாயுடன் தவறாமல் தனியா (கொத்துமல்லி)யையும் சேர்த்து மிளகாயால் ஏற்படும் கெடுதல்களை நீக்குகிறோம். இதனால் குழம்பும், சாம்பாரும் மருந்தாகவும், எளிதில் ஜீரணமாகும் உணவாகவும் மாறிவிடுகின்றன.
கொத்துமல்லியின் தாயகம் மத்திய தரைக்கடல் பகுதிகளாகும். ஆனால், அது இந்தியாவில்தான் ஏராளமாக பயிரிடப்பட்டு உணவிலும் நன்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
கொத்துமல்லியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ‘ஜின்’ போன்ற மதுவகைகளுக்கு மணம் ஊட்டப் பயன்படுகிறது.
கொத்துமல்லியின் விஞ்ஞானப் பெயர் Coriandrum Satirum என்பதாகும்.
வீட்டுத் தோட்டத்தில் அவசியம் வளர்த்துத் தினமும் உடலுக்குப் புத்துணர்ச்சி ஏற்படச் சேர்த்துக் கொள்ள வேண்டிய அரிய கீரை, கொத்துமல்லி என்றால் அது மிகையாகாது.
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
2010/12/10 வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்
2010/12/03 கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான இலைக்காய்கறி
2010/11/26 பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!
2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்
2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்
2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி
2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு
2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!
2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!
2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை
2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு
2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி
2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு
2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?
2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்
2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்
2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை
2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!
2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!
2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்
2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!
2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்
2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு
2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்
2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!
2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்
2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!
2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்
2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி
2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்
2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்
2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்
2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2
2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு
2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3
2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2
2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1
2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்
2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது
2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?
2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!
2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!
2009/12/25 இஞ்சியின் மகத்துவம்
2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்
2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3
2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2
2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

































உரிமை உள்ளது என்று வார்த்தைகளைக் கொட்டுவதா?
தெரியவில்லை புரியவுமில்லை!
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

காய்கறிகளின் மருத்துவ குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி
நாம் மறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர்கள்!
தோற்ற போதிலும் இது வெற்றியே!
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!