வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
வியட்நாமியர்களை இந்தியர்கள் எங்கே மிஞ்சுகிறார்கள் தெரியுமா?
சைகான் நண்பர் மதுசூதணன் சொன்ன அந்தத் தகவல் உண்மையிலேயே சற்றுப் புதுமையான தகவல்தான்.
வியட்நாமில் பணிபுரிகிற ஆண்கள் பெண்கள் எவரும் ஒரே நேரத்தில் எத்தனை நிறுவனங்களில் வேண்டுமானாலும் பணிபுரியலாமாம்.
இதுபற்றி எவருமே ஆட்சேபிக்க முடியாதாம். இது ஏதோ தனியார் நிறுவனங்களுக்கான விதி என்று எவரேனும் கருதினால் அது தவறு. அரசு ஊழியர்களுக்கே இது பொருந்துமாம்.
அட! எப்படியிருக்கிறது பார்த்தீர்களா இங்குள்ள வேலை கலாசாரம்!
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிற ஒருவர், இந்நிறுவனத்திற்குக் கழுத்தறுப்பு நிறுவனமாகப் போட்டியிடுகிற நிறுவனத்திலும் வேலை செய்வார்களாம். இதைப்பற்றி இரு நிறுவனங்களும் ஆட்சேபிக்க முடியாதாம். கண்டுக்காமல் இருந்து விடுவார்களாம்.
அதே நேரத்தில் ஓர் ஊழியரிடம் போட்டி நிறுவனம் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளவும் முடியாதாம் போட்டுக் கொடுக்கிற வேலை; இரகசியத்தைக் கக்குகிற வேலை; மூன்றாம் படை வேலை ஆகிய எதுவும் நடக்காதாம். எந்த நிறுவனத்தில் எந்த நேரத்தில் புணிபுரிகிறார்களோ, அந்த நிறுவனத்திற்கு உண்மையாக உழைப்பார்களாம்.
“வியட்நாமியர்கள் ஏன் இப்படி ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்களில் வேலை பார்க்கவேண்டும். அப்படி என்ன நிர்ப்பந்தம்?” என்று கேட்டேன்.
அதற்கு மது (செல்லமாய்) ஒவ்வொன்றாக மூன்று விரல்களை நீட்ட ஆரம்பித்தார்.
“முதலாவது, ஆசை சார். நிறையச் சம்பாதிக்கணும். வாழ்க்கையை நல்லா அனுபவிக்கணும்.
இரண்டாவது, உழைக்க அஞ்சாதவர்கள் வியட்நாமியர்கள். எட்டு மணி நேரம் அங்கே, எட்டு மணி நேரம் இங்கே. இடையில் இரண்டு மணி நேரம் ஒரு புது நிறுவனம் என்று பிரித்துப் பிரித்து பறந்து பறந்து வேலைக்குப் போவார்கள்.
மூன்றாவது இந்த நாட்டில் இடம் கொடுக்கும் இத்தகைய செயல்களை அனுமதிக்கும் சுதந்தரமான சட்டங்கள்.”
“எப்படிசார் முடிகிறது இவர்களால்?”
“கையில் கிடைக்கிற காசும், வாழ்க்கைச் சுகங்களும் சனி, ஞாயிறு விடுமுறைகளும் இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கின்றன.”
“கம்யூனிஸ்டு நாடாக இருக்கிறதே இதனால் தொழிலாளர் பக்கம்தான் அரசு சாதகமாக நடந்து கொள்ளுமோ?”
“அப்படி நினைக்காதீங்க லேனா சார்!”
“ஒரு தொழிலாளி சரியா வேலை செய்யலைன்னா, அடிக்கடி விடுமுறை போட்டா திருட்டு வேலை செஞ்சா, சும்மா தகராறு பண்ணிக்கிட்டிருந்தா அவரைப் பற்றி தொழிலாளர் நலத்துறையில் புகார் செஞ்சா போதும். உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து அந்த ஆள்மீது நடவடிக்கை எடுத்து வேலையைவிட்டே தூக்கிவிடுவாங்க. இதனால் சக ஊழியர்கள் வேலை நிறுத்தமும் செய்ய முடியாது.”
“பிரமாதமா இருக்கே!”
“இதுமட்டும் இல்லே! ஒரு தொழிலாளர், நிர்வாகம் பற்றியோ தன் முதலாளி பற்றியோ மனக்குறையை வெளியிட்டால் போதும். தொழிலாளர் நலத்துறை அதிகாரி உடனே அலுவலகத்திற்கு வந்து ஊழியரது புகாரில் உண்மை இருக்கிறதா என்று விசாரித்து நிர்வாகத்தை எச்சரித்து நடவடிக்கையும் எடுத்துவிடுவார்.”
“ஆச்சரியமா இருக்கு மது சார்! இந்த நாட்டில் வேலை கலாசாரம் பிரமாதமா இருக்கு. கம்யூனிச நாடா இருக்கே, வேலை நிறுத்தம்லாம் உண்டா?”
“கிட்டத்தட்ட இல்லைன்னு சொல்லிடலாம். அரசாங்கம் தலையிட்டு இரு தரப்புக் குறைகளையும் பேசி சரி பண்ணிடும்.”
“அரசின் செயல்பாடு இங்கே அற்புதமா இருக்கு. நம்மூர்ல ஊழியர் சங்கத் தலைவர்களின் செயல்பாடுகளால் ஏகப்பட்ட வேலை நிறுத்தம் சாதாரணமா நடக்கிறது வருத்தமா இருக்கு. வியட்நாம் அரசு போல இடைப்பட்ட மனிதர்களின் தலையீடு இல்லாம அரசே அக்கறையா செயல்பட்டு வேலை நிறுத்தமற்ற தமிழகத்தை உருவாக்க முடியும். என்ன சொல்றீங்க.” முடியாது லேனா சார்! சின்ன நாடு இது. மக்கள் அரசாங்கத்திற்கு, சட்டத்திற்கு பயப்பட்டு நடக்கிறவங்க, பிரச்னைகள் அதிகமில்லை. குறைவு தொழிற்சாலைங்க. பலரும் மீன்பிடித் தொழில்ல சுயமா இயங்கிட்டிருக்காங்க. எனவே நான் சொன்னதெல்லாம் சாத்தியமாகுது. இவற்றையெல்லாம் ஒரு பெரிய நாட்டுல சாத்தியப்படுத்துகிறது கஷ்டம் சார்.”
“நீங்க சொல்றது சரி. ஆனால் நீங்க சொல்றதைக் கேட்கக் கேட்க மனசு ஏங்குது.”
“இருக்காதா பின்னே? எதுக்கெடுத்தாலும் கதவை இழுத்துச் சாத்திட்டு வெற்றி வெற்றி என்று குதிக்கிற அரசியல் கட்சிகள் இருக்கிறவரைக்கும் நாம பேசுறது எல்லாம் வெறும் கனவுதான்.”
“எல்லாவற்றையும் மீறி ஏதேனும் வேலை நிறுத்தம் நடந்தா?”
“அரசு அதிகாரிகள் வந்து இறங்கிடுவாங்க,” அதுவும் விபத்து நடந்த இடத்துக்குப் போக்குவரத்துப் போலீசார் வந்து சர்சர்னு இறங்குவார்களே (அப்படீங்களா?) அந்த மாதிரி வந்து இறங்கிடுவாங்க. யார் வேலை நிறுத்தத்திற்குக் காரணன்னு விசாரிச்சு உடனே நடவடிக்கைதான். அடுத்த நாளே அந்த அலுவலகம், தொழிற்சாலை இயங்கியாகணும். சும்மா அர்த்தமில்லாம வேலை நிறுத்தம் செய்யுறதெல்லாம் இந்த நாட்டுல நடக்காது.”
“வியட்நாமியர்கள் உழைப்பாளிகள், சரி. கெட்டிக்காரர்களா?”
“என்ன சார் இப்படிப் பொட்டிலடிக்கிற மாதிரிக் கேக்குறீங்க?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தார் மது.
“கேட்டேன்ல சொல்லுங்க.”
“சொல்றதைச் செய்வாங்க. அவ்வளவுதான்.”
“அப்படிச் சொல்லுங்க. நம்மாளுங்க சொல்லாததையும் செய்வாங்களே”
இதற்கு மது கிண்டலாகச் சிரித்தார்.
“சார்! சார்! இதை நல்ல அர்த்தத்துலதான் சொல்றேன்.”
“சரி. நல்ல அர்த்தத்துலயே நானும் எடுத்துக்கறேன். வயிட்நாமியர்கள்கிட்டே ஒரு வேலை சொல்லி, அந்த வேலையில் ஒரு தடங்கல் ஏற்பட்டா அப்படியே நின்னுடுவாங்க. அட ஏன்யா நிறுத்தினேன்னு கேட்டா, இந்த மாதிரி ஆனா அப்போ என்ன பண்றதுன்னு நீங்க சொல்லவே இல்லயேம்பாங்க. நம்ம ஆளுங்க கில்லாடிங்க. வேலையை முடிச்சுட்டு இந்த மாதிரி ஆச்சு. இப்படிப் பண்ணி சமாளிச்சு வேலையை முடிச்சிட்டேன்னு வந்து சொல்லுவாங்க. இந்த விஷயத்தில நம்ம ஆளுங்க மாதிரி வராது. இவங்க சுயமா சிந்திக்கத் தெரியாத ஆளுங்க.”
“இவ்வளவு நேரம் வியட்நாமியர்களைப் பாராட்டினதுக்கு இப்பச் சொன்ன ஒண்ணு போதும். வெறும் உழைப்புப் போதாது. அது புத்திசாலித்தனத்தோட இணைஞ்சு இருக்கணும்.”
“ஒப்புக்குறேன்!”
“60 வியட்நாமியர்கள் உங்க நிறுவனத்துல உங்களுக்குக் கீழே பணிபுரிகிறார்கள். அவர்களைப் பற்றி மேலும் ஏதாச்சும் சொல்லுங்களேன்”
“லேனா சார்! என்னைப் பார்க்க இந்தியாவுலேர்ந்து பலர் வந்திருக்காங்க. ஆனா உங்க அளவுக்கு யாருமே இவ்வளவு கேள்வி கேட்டது இல்லை.”
“ரொம்பக் குடைகிறேனோ?” அப்படியில்லை. இந்த நாட்டைப்பற்றி நாங்க எத்தனையோ வருஷமா நெஞ்சில சேகரிச்சு வச்சிருக்கிற பல செய்திகளை அப்படியே மதகுகளை எடுத்துவிட்ட மாதிரிக் கொட்ட வச்சு செய்திகளை வாங்கிடுறீங்க.”
“என் தொழிலே இதுதானே மது சார்! இதுல என்ன ஆச்சரியம் இருக்கு. சரி சொல்லுங்க, வியட்நாமியர்களின் தொழில் கலாசாரம் பற்றி?”
“சொன்னா ஆச்சரியப்படுவீங்க. இவ்வளவு உழைக்கிற வியட்நாமியர்கள் திடீர் திடீர்னு வேலையை விட்டு நின்னுடுவாங்க.”
“அப்படியா? ஏன்?”
இதற்கு மது சொன்ன காரணம் எனக்கு மேலும் ஆச்சரியத்தை அளித்தது.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/12/17 வியட்நாமியப் பெண்களைப் போல் வராது
2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!
2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!
2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!
2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க
2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!
2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?
2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!
2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!
2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!
2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!
2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!
2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!
2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”
2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!
2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































