வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
வியட்நாமியப் பெண்களைப் போல் வராது
எல்லா நாடுகளிலும் அவற்றின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு சாதாரணமானது அல்லதான். ஆனால் வியட்நாமின் வளர்ச்சியிலும் உருவாக்கத்திலும் இந்நாட்டுப் பெண்களின் பங்களிப்பை மகத்தானது என்றே நான் சொல்வேன்.
ஏதோ அமெரிக்காவுடன் நடந்த போரின்போது விஸ்வரூபம் எடுத்து அதன்பிறகு வியட்நாமியப் பெண்கள் அடங்கிப் போனார்கள் என்று எவரும் வரலாறு எழுதிவிட முடியாது.
வியட்நாம் - அமெரிக்கப் போருக்கு முன் மற்ற நாட்டுப் பெண்களை ஒபபிடும்போது வியட்நாமியப் பெண்கள் மிகச் சாதாரணமாகத்தான் இருந்தார்கள்.
ஆனால் என்ன மாயம் நிகழ்ந்ததோ தெரியாது. அமெரிக்காவிற்கு எதிராக இவர்களுக்குள் எழுந்த வேகம் போர் ஒடுங்கியப் பின்னரும் இவர்களுக்குள் கனன்று கொண்டிருக்கிறது.
போரின்போது அது வீரமாக வெளிப்பட்டது என்றால் இப்போது அது உழைப்பாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
உலகில் உங்களை மிகவும் கவர்ந்த பெண்கள் என்று யார் கேட்டாலும் எப்பொழுது கேட்டாலும் எங்கு கேட்டாலும் நான் ஒரே ஓரு பதிலைத்தான் திரும்பத் திரும்பச் சொல்வேன்.
உலகில் என்னை மிகவும் கவர்ந்த பெண்கள் வியட்நாமியப் பெண்களே! அழகிலோ தோற்றத்திலோ அல்ல! பண்பாட்டில் செயல்பாட்டில்! உழைப்பில்!
இஸ்ரேலிலிருந்து வீரத்தை எடுத்துக் கொண்டார்களோ! இந்தியாவிலிருந்து பண்பாட்டை எடுத்துக் கொண்டார்களோ? ஜப்பானிலிருந்து உழைப்பை எடுத்துக் கொண்டார்களோ? இக்கேள்விகளுக்கு என்னால் உறுதியான பதிலைச் சொல்ல முடியாது. ஆனால் மூன்று கலவையாக இருக்கிறார்கள்.
சில நாடுகளில் உள்ளதுபோல பெண்மை இங்கு மலிவு விலையில் கிடைக்கும் பொருள் அல்ல!
வழிவகை இல்லாத கணவர்களுக்குக் கூட உண்மையாக இருக்கிறார்கள் ‘சீ போ! குடித்துக் தொலை! சீட்டாடு! அங்கேயே கிட! உன்னைக் கட்டிக்கொண்ட பாவத்திற்கு இந்தா பணமும் தந்து தொலைக்கிறேன்! போய்க் குடித்துவிட்டு சுருண்டு படுத்துக்கொள். உனக்கும் சேர்த்து நான் வேலை பார்க்கிறேன். உன்னை மட்டுமா? உன் பெற்றோரையும் நான் பார்த்துக் கொள்கிறேன். பிள்ளைகளின் நலனும் என் பொறுப்பு என்று கணவனைப் பார்த்து சொல்லாத குறையாக வாழ்கிறார்கள் வியட்நாமியப் பெண்கள்.
வியட்மாமில் வசிக்கும் தமிழர்கள் எவரிடம் உரையாட நேர்ந்தாலும் அவர்கள், வியட்நாமியப் பெண்களைப் பற்றி மறுகருத்து இல்லாமல் ஏகமாய்ப் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
வியட்நாமியப் பெண்களின் மகாத்மியத்தைக் கேட்கக் கேட்க எனக்கு ஒருவித பிரமிப்பே வளர்ந்துவிட்டது!
நாங்கள் சென்று அடைய வேண்டிய இடம் கு#ச்சி (CU#CHI) என்பதாகும். இது சைகான் நகர எல்லையிலிருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இப்போது கட்டட நெரிசல்கள் குறைந்து எங்கள் பாதையில் இரு பகுதிகளிலும் நீர் வளமும் பசுமையுமாய்க் காட்சியளிக்க ஆரம்பித்தது.
எனக்கு அவற்றைப் பார்க்கும் ஆர்வம் இருந்தபோதும் காரில் ஒரு சுவாரசியமான உரையாடல் அமைந்தால் காட்சிகளில் கவனம் செலுத்த முடியவில்லை.
“மது சார்! உங்களைப் பற்றி சொல்லுங்க!” என்று பேச்சுத் தலைப்பை திசை திருப்பியவனே நான்தான்.
“சன் பார்மா உங்களுக்குத் தெரியும். இந்தியாவுல இருக்கிற மிகப் பெரிய மருந்து நிறுவனம்!”
“ஆமாம்! தெரியும். மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது!”
“இதனுடைய வியட்நாமியத் தலைவராக Country Head நான் இருக்கிறேன்!”
“ஓ!”
“சன் பார்மா என்பது நம்மூர்மருந்து. இங்குள்ளவர்கள் அலோபதிக்கு மாறியிருப்பார்கள். இவர்கள் நம்மூர் மருந்துகளை நம்புகிறார்களா? விரும்புகிறார்களா?”
“வியட்நாமியர்களுள் 60 சதவிகிதத்தினர் அலோபதி முறையைப் பின்பற்றுகிறவர்களே. ஆனால் இன்னமும் வழிவழி மருந்துகளுக்கும் முக்கியத்துவம் தருகிறார்கள்!
“ஒண்ணு சொல்லணும் லேனா சார்! இவங்க நம்மைப் போலத்தான் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு கற்பூரவல்லி; கருந்துளசி என்று இவற்றையெல்லாம் நன்கு பயன்படுத்துவார்கள். உணவு விஷயத்தில் மிகக் கவனம். இலேசில் இருதய நோய்; சர்க்கரை நோயில் சிக்கமாட்டார்கள். மிக ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை உடையவர்கள். உடற்பயிற்சி என்று மிக அக்கறையோடு செயல்படுவார்கள்.”
“இளைய தலைமுறையினருமா வெற்றிலை பாக்குப் போடுகிறார்கள்?” “இல்லை. நல்ல கேள்வி. மூத்த தலைமுறையினர் மட்டும்தான் இளைய தலைமுறை இதில் சிக்கவில்லை.”
“அதானே பார்த்தேன்! உங்க நிறுவனத்தில் இந்த நாட்டில் எத்தனை பேர் வேலை செய்யுறாங்க.”
“சுமார் 60 பேர்!”
“இவர்களுடைய வேலை கலாசாரம் எப்படி!”
“சொல்றதைச் செய்வாங்க!”
“சுயமா சிந்திச்சு எதுவும் செய்ய மாட்டாங்கன்னு சொல்ல வர்றீங்க. அப்படித் தானே?”
பதில் சொல்லாமல் சிரித்தார் மது.
“நிறையச் சம்பாதிக்கணும்ங்கிற ஆசை உள்ளவங்க இந்த மனோபாவம் உள்ளவங்க”
“இதைத் தவறுன்னு சொல்ல முடியாதே! நியாயமான ஆசை தானே!”
“அதே நேரத்துல அப்பா அம்மாவுக்கு நாள்பட்ட உடல்நலக் குறைவுன்னு வேலையை இராஜினாமா பண்ணிட்டு அம்மா அப்பா பக்கத்துல போய் உட்கார்ந்து அவுங்களைக் கவனிக்க ஆரம்பிச்சுடுவாங்க?”
“என்ன சார் சொல்றீங்க. அப்பா அம்மாவுக்கு முடியலைன்னா வேலையை விட்டுடுவாங்களா? நம்மூர்லகூட இதை எதிர்பார்க்க முடியாது சார்!”
“தாய் தகப்பனுக்கு ஒண்ணுன்னா அவுங்களைவிட வேறு முக்கிய விஷயம் இவுங்களுக்கு இல்லை.”
“பெற்றோருக்கு நல்ல முக்கியத்துவம் கொடுக்கிற நாடு நம்ம நாடுன்னு நான் நினைச்சிக்கிட்டும் பேசிக்கிட்டும் இருக்கேன். நீங்க சொல்லுற விஷயம் இதை அடியோடு உடைக்குதே!”
“உண்மைதான் லேனா சார்!”
“கம்யூனிச நாடாச்சே! அடிக்கடி வேலை நிறுத்தம் நடக்குமோ?”
“அதெல்லாம் இல்லவே இல்லை! இங்கே இருக்கிற மாதிரி நம்மூர்லயும் வந்துட்டா நம்ம நாடு எங்கேயோ போயிடும்! யாரும் இங்கே சுலபத்துல வேலை நிறுத்தம் செய்ய முடியாது. ஒரு நிறுவனத்துல வேலை பார்க்கிற ஊழியர்கள் தங்களுக்கு மனக்குறைகள் ஏதும் இருந்தா நிர்வாகத்துக்கிட்டடே சொல்லணும். பலன் இல்லையா? அரசுக்கிட்ட சொல்லணும். உடனே அராசங்கம் நிர்வாகத்தை அழைச்சுப் பேசும். அவுங்க ேக்குறதுல நியாயம் இருக்கு. அதையெல்லாம் செஞ்சு குடுங்க. அப்படீன்னு பேசும்.”
“சுவாரசியமா இருக்கே?”
“நிர்வாகம் செவி சாய்க்கலைன்னா?”
“அப்படியெல்லாம் நடக்காது. அரசு தலையிட்டுட்டா அது சீரியஸ் பிராப்ளம்.”
“ஊழியர் கோரிக்கைகளில் நியாயம் இல்லைன்னு அரசு நினைச்சா?”
“வாயைப் பொத்திக்கிட்டு வேலைக்குப் போங்கன்னு அரசு, ஊழியர்களிடம் சொல்லிடும்.”
“சொல்லியும் கேக்லைன்னா?”
“ஐந்து நிமிடத்தில் அவங்களைப் பிடிச்சு உள்ளே போட்டுடும்.”
“அடேங்கப்பா!”
“ஆமா லேனா சார்! அப்படி வசதி, ஊதிய உயர்வுன்னு எவனும் பேசவேமாட்டான் இங்கே?”
“அப்படியா?”
“ஆமா! அதுக்கு அவசியமும் இல்லை. காரணம் இங்கே இருக்கிற புதுமாதிரியான வேலை கலாசாரம். இப்படி உலகத்துல எங்கேயும் கேள்விப்பட்டிருக்கமாட்டீங்க. கிடையவும் கிடையாது!”
என் வியப்பை அதிகமாக்கிக்கொண்டே போனார் மது!
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/12/10 வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!
2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!
2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!
2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க
2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!
2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?
2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!
2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!
2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!
2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!
2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!
2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!
2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”
2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!
2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































