வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
வியட்நாமியப் பெண்கள் வித்தியாசமான பெண்கள்!
சைகான் நகரத்து வார் மெமோரியல் கண்காட்சியில் இருந்த புகைப்படங்களும் ஆவணங்களும் மிகப் பயங்கரமானவை.
இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்களை நான் கவனித்தபோது நன்கு வித்தியாசம் தெரிந்தது.
ஆண்களே கூடச் சற்றுக் கலங்கிய மனத்துடன் பார்க்க பெண்களுள் சிலர் ஐயோ! அச்சச்சோவை தத்தம் நாட்டுப் பாணியில் வெளிப்படுத்தினார்கள். சிலர் கண்களை மூடிக் கொண்டு நகர்ந்துவிட்டார்கள்.
வியட்நாமிற்கும் அமெரிக்காவிற்கும் போர் நடந்து கொண்டிருந்த வேளையில் வியட்நாமியர்களை வெற்றி கொள்ளத் தெரியாமல் ஒரு கோழைத்தனமான நடவடிக்கையில் இறங்கினார்கள்.
நினைத்தாலே மனம் பதறத் கூடிய செயல் இது. மனிதாபிமானமற்ற செயலும்கூட போரிலே எதிரி நாட்டுப் போர் வீரர்களைக் கொல்வது ஏற்கப்பட்ட விஷயம்தான்.
ஆனால் அமெரிக்க இராணுவம் என்ன செய்தது தெரியுமா? ஆரஞ்சு ஏஜெண்ட் எனப்படும் மருந்துக் கலவையை சகட்டுமேனிக்கு ஏதோ பூச்சி மருந்து தெளிப்பதுபோல விமானத்திலிருந்து தெளித்தது.
ஆரஞ்சு ஏஜெண்ட் இருக்கிறதே, இது ஒரு மோசமான மருந்து. மனிதப் பிறப்புகளை அகோரமாக ஆக்குவது இது. இதனால் பிறக்கும் குழந்தைகள் மண்டை மிகப் பெரிதாக வீங்கியும் கண்கள் வெவ்வேறு இடத்திலும் உடல் வெந்தது போலவும் காணப்படும்.
மகாக் குள்ளமான உருவங்கள்; விநோதமான தோற்றமுள்ள குழந்தைகள் என்று தலைமுறையையே வாரிச் சுருட்டி அழிக்கவல்லது.
இத்தகைய மோசமான தோற்றம் கொண்ட உருவங்களைக் கொண்ட காட்சிகளைப் பார்த்துத்தான் இக்கண்காட்சியைப் பார்க்க வந்த பெண்கள் ஆடிப் போனார்கள்.
இவர்களுள் பலர் அன்று இரவு தூங்கியிருக்கமாட்டார்கள்; அல்லது சாப்பிட்டிருக்கவே மாட்டார்கள். இதில் அமெரிக்கா செய்த கூடுதல் தவறு என்னவென்றால் இவர்கள் ஆரஞ்ச் அமிலம் வீசிய பகுதிகளில் அமெரிக்கர்களும் வாழ்ந்து வந்தார்கள் என்பதுதான்.
எனவே அமெரிக்கத் தலைமுறைக்கும் விகாரமான தோற்றம் கொண்ட பிள்ளைகள் பிறந்தார்கள். இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுள் 4000 பேர் அமெரிக்கர்கள் என்கிறது இங்கு இருந்த குறிப்பு ஒன்று.
அமிலம் வீசப்பட்ட பகுதிகளில் அமெரிக்கர்கள் எப்படி இருந்திருக்க முடியும்? தம் மக்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அமெரிக்கா ஆரஞ்சு அமிலத்தைப் பொழிவானேன்? இக் கேள்விகளுக்கு எனக்குச் சரியான விடை கிடைக்கவில்லை.
“இத்தகைய சம்பவங்களால் அமெரிக்கர்கள்மீது வியட்நாமியர்களுக்கு இன்னமும் கனன்று கொண்டிருக்கிற உள்கோபம் இருக்கிறதா?” இப்படி நான் கேட்க ஜவஹர் சொன்னார்.
“வியட்நாமியர்களுள் இரு பிரிவினர் உண்டு. ஒரு பிரிவினர் அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்த்தவர்கள். ஒரு பிரிவினர் வெறுத்தவர்கள். பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நடந்தபோது ஒரு பிரிவினர் அவர்களிடம் ஊழியம் செய்துகொண்டு அவர்களை அண்டி வாழ்ந்து அவர்களுக்கு விசுவாசமாக இல்லையா? அப்படி இங்கும் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு சுதந்தர வேட்கையெல்லாம் கிடையாது. ஆனால் நாம் கத்தியின்றி இரத்தமின்றி எதிர்த்தோம் அல்லவா பிரிட்டிஷாரை? இவர்கள் அப்படி அல்ல. ஒரு பிரிவினர் கடுமையாக எதிர்த்தார்கள். ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். அமெரிக்க அரசுக்கு விசுவாசமாக இருந்தவர்கள் எவர்? ஆண்டால் என்ன? வாழக்கை நிம்மதியாக ஓடினால் சரி என்கிற மனோபாவத்தைக் கொண்டிருந்தார்கள். இப்படி விசுவாசமாக இருந்தவர்களின் குடும்பங்களை அடையாளம் கண்டு இவர்களுக்குத் தங்கள் நாட்டில் வேலை கொடுத்து, வாழ்வு கொடுத்து குடியுரிமையும் கொடுத்தது அமெரிக்கா.”
“ரொம்ப சரி ஜவஹர் சார். அமெரிக்காவில் ஏகப்பட்ட வியட்நாமியர்களை நான் பார்ததபோது எப்படி இது சாத்தியம்? அமெரிக்கர்களுக்கும வியட்நாமியர்களுக்கும் கொஞ்சம்கூட ஆகாதே என்று வியந்திருக்கிறேன். நீங்கள் சொன்னதிலிருந்து விடை கிடைத்தது போல் இருக்கிறது”
“நீங்கள் யு.எஸ். போயிருப்பதால் சொல்கிறேன். விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளைச் சோதிக்கிற பணியில் இருப்பவர்களைக் கவனியுங்கள். இவர்கள் பெரும்பாலும் வியட்நாமியர்களாக இருப்பார்கள்”
“ரொம்ப சரி ஜவஹர் சார்”
“காரணம் என்ன தெரியுமா? வியட்நாமியர்கள் இந்த விஷயத்தில் மிகக் கூர்மையானவர்கள். ஒளிந்து வைக்கிற மறைந்து வைக்கிற எதையும் மிகச் சரியாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். அதனால்தான் பாதுகாப்புப் பகுதியில் அவர்களைத்தான் பெரும்பாலும் அமெரிக்கர்கள் நியமித்து வைத்திருக்கிறார்கள்.
அமெரிக்காவால் பாதிக்கப்பட்ட வியட்நாமியர்களைத்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லித்தான் நன்மையடைந்தவர்களைப் பற்றியும் தெரிய வருகிறது.
“இந்த வார் மெமோரியலைப் பார்ப்பவர்களுக்கு ஏதோ அமெரிக்கா மட்டும்தான் போர்களுக்கான விதிமுறைகளை அளவு கடந்து விதி மீறியிருக்கிறது என்று நினைக்கத் தோன்றும் வியட்நாமிய வீரர்கள் அமெரிக்க வீரர்களைப் பிடிக்கவும் பிடித்த பிறகு கொல்லவும் பயன்படுத்திய முறைகள் இருக்கின்றனவே இவை தனிக்கதைகள்.”
“ஓ! அதுவும் நடந்திருக்கிறதா?” போர்க் கைதிகளை இப்படித்தான் நடத்த வேண்டும் என்கிற மரபுகளையெல்லாம் மீறி அவர்களைக் கொடுமைப்படுத்தியும் சித்திரவதை செய்தும் ஒழித்திருக்கிறது வியட்நாமியப் படை. இவர்களும் ஒன்றும் இலேசுப்பட்ட ஆசாமிகள் இல்லை.”
“நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கும் விஷயம். இந்தக் குட்டி நாட்டிடம் அமெரிக்கா தோற்று ஓடியது. என்ன சொல்கிறீர்கள்?”
“அமெரிக்கர்கள் இரண்டு தவறுகளைச் செய்தார்கள். ஒன்று இந்த நாட்டு மக்களை ஒண்ணும் தெரியாத அப்பாவிகள் என்று தப்புக் கணக்குப் போட்டது. இரண்டாவது தங்கள் பலத்தைப் பற்றி அமெரிக்கர்கள் அளவு கடந்த தன்னம்பிக்கை காட்டியது. பகலில் விவசாயம் செய்யும் வியட்நாமியர்கள் சிறு சிறு கடைகளில் வேலை செய்யும் இவர்கள் இரவு ஆனால் போர் வீரர்களாக மாறி கொரில்லா பாணியில் (மறைந்திருந்து தாக்கும் முறை) போர் புரிய ஆரம்பித்திருக்கிறார்கள்.”
“கொரில்லா வீரர்கள் என்றால் முழுக்க முழுக்க மறைந்து வாழ்பவர்கள் என்று நினைத்தேன்.”
“இல்லையில்லை. வியட்நாமிய கொரில்லாக்கள் கில்லாடிகள். பகலில் ஒரு வேடம். ராத்திரி ஒரு வேடம்.”
“ஏன் அப்படி? முழுநேர கொரில்லாவாக ஆகாமல்?”
“வயிறு என்று ஒன்று இருக்கிறதே!”
“அமெரிக்க இராணுவம் இவர்களைத் துப்பறிந்து கண்டுபிடித்திருக்காதா?”
“அதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வியட்நாமியப் போரில் முக்கியப் பங்கை வகித்தவர்கள் ஆண்களைவிடப் பெண்களே அதிகம். பெண்கள் மட்டும் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகத் திரும்பியிருக்கவிட்டால் வியட்நாம் ஜெயித்திருக்குமா என்பது சந்தேகம்தான்!”
“உலக விடுதலைப் போர்களின் வரலாற்றில் வியட்நாமியப் பெண்கள் பங்களித்ததுபோல் வேறு எந்த நாட்டுப் பெண்களும் பங்களிக்கவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது நீங்கள் சொல்வது.”
“நிச்சயமா. அதில் ஒரு சந்தேகமும் வேண்டாம் உங்களுக்கு போரில் என்று இல்லை. சமூக வாழ்விலும் இந்த நாட்டு பெண்களின் கை மிக ஓங்கியிருக்கும். பல குடும்பங்களில் பிரட் வின்னர்கள் (சாப்பாட்டிற்குச் சம்பாதிப்பவர்கள்) பெண்களாகத்தான் இருப்பார்கள்.”
“ஆண்கள்?”
“பலர் பொறுப்பில்லாதவர்கள். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மதுக்கடைகளிலேயே கிடப்பார்கள்” இதை ஜவஹர் சொன்னதும் எனக்கு நம்மூர் ஞாபகம் வந்துவிட்டது.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/12/03 பெண்களைச் சுற்றி வந்த அந்தக் கணங்கள்!
2010/11/26 அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!
2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க
2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!
2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?
2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!
2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!
2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!
2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!
2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!
2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!
2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”
2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!
2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































