காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி
கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான இலைக்காய்கறி
இலைக்காய்கறிகளுள் மிக முக்கியமானது பசலைக்கீரை. இது ஸ்பினாஷ் (Spinash) என்றும் வழங்கப்படுகிறது.
இருதய நோயைத் தடுப்பதற்கும், இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குறைப்பதற்கும் மக்னீசியம் அவசியம். மக்னீசியம் அதிகம் உள்ள இலைக்காய்கறிகளை நன்கு சேர்த்துக்கொண்டால் மாரடைப்பையும் இதய நோய்களையும் முற்றிலும் தடுக்கலாம். மேலும், ஆஸ்துமா, மூட்டு வீக்கம் போன்ற நோய்களையும் மக்னீசியம் முற்றிலும் கட்டுப்படுத்திக் குணப்படுத்துவதை 1995 ஆம் ஆண்டு இங்கிலாந்து மருத்துவர்கள் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளனர்.
இலைகளில் உள்ள குளோரோஃபிலபின் மையத்தில் அதிகமாய் மக்னீசியம் இருக்கிறது; பச்சைக் காய்கறிகளிலும் இருக்கிறது.
பசலைக் கீரையின் முதல் சிறப்பு
இத்தகைய இலைக்காய்கறிகளுள் - கீரை வகைகளுள் நோய்த்தடுப்பு மருந்தாகவும் நோய்களைக் குணப்படுத்தி உடலுக்கும் மனதுக்கும் ஆறுதளலளிக்கும் மருந்தாகவும் ஸ்பினாஷ் கீரை தலைசிறந்து விளங்குகிறது.
கீரை வகைகளுள் முதலிடத்தில் இருக்கும் இக்கீரையின் தாயகம், மேற்கு ஆசியாதான். அங்கிருந்த அரேபியர்கள் இதை உணவுப் பயிராக முதலில் பயிர் செய்தார்கள்.
பெர்சியர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைப் பயிர் செய்தார்கள். மேற்கு ஆசியாவில் இருந்த மூர் இன மக்களாலும் கறுப்பர் இன மக்களாலும் இந்தக் கீரை ஸ்பெயின் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது.
ஸ்பெயினிலிருந்து உலகம் முழுவதும் இக்கீரை பரவிவிட்டது. இதன் இலைகள் அகலமாய் இருக்கும். இக்கீரையில் ஊட்டச்சத்தும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் குணங்களும் நிரம்பி வழிகின்றன.
குணப்படுத்தும் நோய்கள்!
இதனால் மலச்சிக்கல், இரத்தசோகை, பற்சிதைவுகள், பல் வியாதிகள், கெட்டுவிட்ட இரத்தம், இரவில் கண் தெரியாமை, கர்ப்ப காலத்திலும், பால் கொடுக்கும் காலத்திலும் ஏற்படும் இரத்த சோகை, இரத்த அழுத்தம், நெஞ்சு எரிச்சல், வாந்தி, ருசியின்மை முதலியவை முற்றிலும் குணமாகின்றன.
100 கிராம் பசலைக்கீரையில் கிடைக்கும் கலோரி 17 தான். எனவே, உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்களும், தொந்தியைக் கரைக்க விரும்புகிறவர்களும் இக்கீரையை நன்கு சாப்பிடலாம். உடலுக்குச் சத்துணவு கிடைக்கும். அதே நேரத்தில் உடல் பெருக்காமல் குறைய ஆரம்பிக்கும்.
100 கிராம் கீரையில் ஈரப்பதம் 92.1%. புரதம் 2.0%, கொழுப்பு 0.7%, தாது உப்புகள் 1.7%, நார்ச்சத்து 0.6%, கார்போஹைடிரேட் 2.9% உள்ளன. மேலும் கால்சியம் 73 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 21 மில்லி கிராமும், இரும்புச்சத்து 10.9 மில்லி கிராமும் வைட்டமின் ‘சி’ 28 மில்லி கிராமும், வைட்டமின் ‘ஏ’ 2500 சர்வதேச அலகும், வைட்டமின் - ‘பி’ 70 சர்வதேவ அலகும் உள்ளன.
இத்துடன் சல்ஃபர், பொட்டாசியம், மக்னீசிஷியம், சிலிகான் போன்றவையும் குறைந்த அளவில் உள்ளன.
உடல் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய அமினோ அமிலங்கள் நிறைந்த அளவில் இக்கீரையில் அமைந்துள்ளன.
100 கிராம் கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன், முட்டை ஆகியவற்றில் கிடைக்கும் அதே அளவு புரதம் இக்கீரையிலேயே கிடைத்துவிடுகிறது. இதனால் செலவும் குறைவாகிறது.
இரத்தம் சுத்தமாகிறது!
ஸ்பினாஷ் கீரையில் கால்சியம், காரப் பொருள்கள் முதலியவை தக்க அளவில் உள்ளன. நாள்பட்ட நோயினால் துன்புறுபவர்கள் இக்கீரையைச் சாப்பிட்டதும் இதில் உள்ள காரப் பொருள்கள் இரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றன. திசுக்களும் சுத்தமாவதால் நோய்க்கிருமிகள் அழிகின்றன. சுண்ணாம்புச் சத்த உடலின் கட்டுமானப் பணியில் ஈடுபடுகிறது.
இரத்தசோகை இனி இல்லை!
இதன் பொருட்டே இரத்த சோகை நோயாளிகளை இக்கீரையை நன்கு சாப்பிடச் சொல்லுகின்றனர். மேலும் இரும்புச் சத்தும் அதிக அளவில் இக்கீரையில் இருப்பதால் இரத்த சோகை நோயாளி விரைவில் குணமாகிறார்.
இக்கீரையை முடிந்தவரை பச்சையாகவே சாப்பிடுவது நல்லது; எளிதில் செரிமானமும் ஆகும்.
இரத்த சோகை நோயாளிகள் இக்கீரையை முதலில் சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். அதில் தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் ஆகியவற்றின் சிறு துண்டுகளையும் இட வேண்டும். இந்த கலவையில் ஆலிவ் எண்ணெய் சிறிதும், எலுமிச்சம்பழ ரசம் சிறிதளவும் சேர்க்க வேண்டும். இதைச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும். எலுமிச்சை ரசத்தில் உள்ள வைட்டமின் - ‘சி’, பசலைக் கீரையில் உள்ள இரும்புச்சத்து முழுவதையும் உடம்பு கிரகித்துக் கொள்ள வழி அமைத்துக் கொடுக்கும்.
குறைந்த செலவில் அதிக நன்மை!
இக்கீரையை அடிக்கடி உண்பவர்களுக்குச் சாதாரணமாய் நோய் எதுவும் ஏற்படுவதில்லை. நல்ல இரத்தத்தைத் தந்து உடலுக்குப் பலத்தையும் தருகிறது. இக்கீரை, வாந்தி, நீரடைப்பு, ருசியின்மை, மூத்திரக்கடுப்பு, மலச்சிக்கல் முதலிய நோய்கள் இயல்பாக நீங்குகின்றன.
100 கிராம் கீரையில் 84 மில்லி கிராம் அளவு மக்னீசியம் இருக்கிறது. இது இதயக்தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது.
பாசிப்பருப்பு சேர்த்துச் சமைத்து உண்டால் உடலின் வெப்பம் தணிகிறது. பித்தக் கோளாறுகள் நீங்குகின்றன.
இலையை அரைத்துக் கொப்புளம், வீக்கம் முதலியவற்றில் பற்றுஇட்டால் அவை குணமாகின்றன.
கீரையின் இளந்தண்டுகளையும் பச்சையாகச் சாப்பிடலாம். கீரையையும், தண்டையும் ரசமாகத் தயாரித்துச் சாப்பிட்டால் அது உடலுக்கு சத்துணவாயும் இன்றியமையாத மருந்தாகவும் இருக்கும். உடலும் உள்ளமும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருக்கும். இதற்காக ஒரு டம்ளர் கீரை ரசம் சாப்பிட்டால் போதும். தோல் வியாதி நோயாளிகள், முகத்தில் பருக்கள் உள்ளவர்கள் தினமும் இக்கீரையை ரசமாகச் சாப்பிட்டால் வியத்தகு முறையில் விரைந்து குணமாவார்கள்; உடற்பருமனும் குறையும்.
இரத்த சோகை நோயைச் சமப்படுத்த இக்கீரைச்சாறு போதும். அல்லது கீரை ரசம் போதும். இடுப்பு வலி நீங்கவும் இக்கீரைச் சாறு, ரசம் முதலியவை பயன்படுகின்றன. தொந்தி குறையவும் இக்கீரைச் சாறே போதும்.
இரவு நேரத்தில் பார்வைக் கோளாறு!
இரவு நேரத்தில் மட்டும் பார்வைக் கோளாறு உள்ளவர்களுக்கு எந்த விதமான கெடுதலும் செய்யாத உணவு மருந்து இது. வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருப்பதால் கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாகின்றன. உடல் நலனும் மேம்படுத்தப்படுகிறது. எனவே, இவர்கள் சமைத்தோ, பச்சையாகவோ தினமும் இக்கீரைையைச் சேர்த்து நற்பலன்களைத் தொடர்ந்து பெற வேண்டும்.
கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய கீரை
கர்ப்பிணிகளும், பால்கொடுக்கும் தாய்மார்களும் ஸ்பினாஷ் கீரையைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இக்கீரையில் ஃபோலிக் அமிலம் அதிக அளவில் இருக்கிறது. இது இவர்களுக்கு ஏற்படும் இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது. கர்ப்பம் தரித்தது முதல் தவறாமல் தினமும் சாப்பிட்டால் கருக்கலைந்து விடுவதைத் தவிர்க்க முடியும். களைப்பு, மூச்சுவிடச் சிரமம், எடைகுறைதல் ஆகியவற்றையும் தவிர்க்க முடியும். குழந்தை பிறந்த பிறகும் சாப்பிட்டால் தரமான தாய்ப்பாலைக் குழந்தைகளுக்குத் தட்டுபாடு இன்றிக் கொடுக்கவும் முடியும்.
பல்வலி இனி இல்லை!
மலச்சிக்கல் குணமாகக் காலையில் இக்கீரைச் சாற்றை அருந்தினால் போதும். அது குடலுக்குச் சக்தியைக் கொடுத்துக் கழிவுகளை எல்லாம் வெளியே கொண்டுவந்து தள்ளிவிடும். இதற்கு 50 கிராம் கீரை போதும்.
பற்சிதைவையும் பல் ஈறுகளில் உள்ள கோளாறுகளைக் குணமாக்கவும் 50 கிராம் கீரைச்சாறு போதும். பல் ஈறுகளில் வலி உள்ளவர்கள் காரட் சாற்றுடன் இக்கீரைச்சாற்றையும் கலந்து அதிகாலையில் ஒரு டம்ளர் அருந்த வேண்டும். பற்கள் எளிதில் விழாதிருக்க இது எளிய வழி.
ஆஸ்துமா குணமாக கீரை ரசம் பயன்படுகிறது.
நன்கு பசியெடுத்துச் சாப்பிட இக்கீரை பயன்படுகிறது. பொரியலாகத் தண்ணீர் ஊற்றாமல் சமைக்கலாம். இப்பொரியலை உண்பதால் இருமல், சளி முதலியவை நீங்கும்.
நோயைத் தணிக்கும் அருமருந்தாகவும் பசிச்சுவையை உண்டுபண்ணுகிற இதைக் காய்கறியாகவும், இரத்த சோகையைக் குறைந்த செலவில் குணப்படுத்தும் இரும்புச்சத்துள்ள உணவாகவும் உள்ள இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து ஆரோக்கியமாய் வாழ்வோம்!
கடுமையான சிறுநீரகக் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் ஆகியன உள்ளவர்கள் இக்கீரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
2010/11/26 பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!
2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்
2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்
2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி
2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு
2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!
2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!
2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை
2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு
2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி
2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு
2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?
2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்
2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்
2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை
2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!
2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!
2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்
2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!
2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்
2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு
2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்
2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!
2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்
2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!
2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்
2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி
2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்
2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்
2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்
2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2
2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு
2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!
றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து
2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3
2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2
2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1
2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்
2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது
2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?
2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!
2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!
2009/12/25 இஞ்சியின் மகத்துவம்
2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்
2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3
2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2
2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்
2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2
2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்
2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்
2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!
2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்
2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி
2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி
2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்
கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்
2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை
2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!
2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்
2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!
2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?
2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!
2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?
2009/05/22 சின்ன உணவு மருத்துவம்
2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?
2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள
2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்
2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்
2009/04/17 அறிதுயில் மருத்துவம்
2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?
2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?
2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து
2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!
2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்
2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
2009/02/20 உடல் நலக் குறிப்புகள்
2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?
2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!
2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!
2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?
2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?
2008/12/12 கவலைக்கு முதல் மருந்து
2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்
2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!
2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்
2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
2008/10/31 காந்தசக்தி மருத்துவம்
2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்
2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்
2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!
2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?
2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?
2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?
2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?
2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?
2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்
2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!
2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?
2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்
2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!
2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்
2008/07/04 உதவி செய்யும் உணவுகள்
2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…
2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?
2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!
2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!
2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்
2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!
2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?
2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா
Most Commented Posts































