வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!
சைகானில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலுக்குள் ஆக்கிரமித்திருந்த முத்தையாவின் வாரிசை, என் நண்பர் மதுசூதனன் அழைத்தபோது அவர் ஒருவிதத் தயக்கத்துடனேயே வெளிப்பட்டார்.
மதியம் நான்தான் இவரை தேடிவிட்டுப் போனதைத் இவரது மனைவி சொல்லியிருக்க வேண்டும். எங்கள் மறு வருகையின் பின்னணி இவருக்குத் தெரிந்து இருக்க வேண்டும். இதுவே இந்தத் தயக்கத்திற்குக் காரணம்.
“இவர் இந்தியாவிலிருந்து வருகிறார். உங்களைப் பார்க்க வேண்டும் என்கிறார்”
“என்ன? ஏன் என்னைப் பார்க்க வேண்டும்? (வியட்நாமிய மொழியிலி).
“முத்தையாவுக்கு உறவினர் என்று சொல்லுங்கள் மிரள்கிறாரா என்று பார்ப்போம்! என்றேன் நான் கிண்டலாக.
மற்றவை புரியாவிட்டாலும் முத்தைய என்ற இந்த வியட்நாமியரின் தந்தையின் பெயர் புரிந்துவிட்டதால் அவரது முகம் சற்றே இருண்டது. ஆனால் சட்டெனச் சுதாரித்தபோது அவரது முகம் விகாரமாகியது. ‘டேய்’ கோவிலுக்கு வந்தமா, சாமி கும்பிட்டமா, திருநீறு பூசினமா எனறு போய்க்கிட்டே இருங்க. ஏதாச்சும் அதிகப் பிரசங்கித்தனம் பண்ணினே, வீடு போய்ச் சேரமாட்டே! என்கிற பாணியில் ஒரு மிரட்டல் பார்வையை வீசினார். உங்க அப்பா பிறந்த ஊரிலிருந்து வருகிறேன். உங்களுக்கு நடராஜனைத் தெரியுமா? தங்கப் பல் கட்டியிருப்பார். எப்பவும் வெள்ளை வேஷ்டி சட்டைதான். உங்க அப்பா முத்தையாவுக்கு நண்பர்!” இது மென்மையாகவே அவரிடம் மொழிபெயர்த்துச் சொல்லப்பட்ட வாசகம்.
“அதெல்லாம் எவரையும் தெரியாது”.
“பார்த்தீங்களா சார் திமிரை?” இது நான்.
“திமிர் இல்லை சார்! பயம். எங்கே பழசைக் கிளறுவீர்களோ என்று”
நாங்கள் நின்று பேசிக் கொண்டிருந்த அநத நபர் பாடு தன் வீட்டின் உள்ளே நுழைய ஆரம்பித்துவிட்டார்.
“இருங்க இருங்க! ஒரு போட்டோவாவது எடுத்துக்குறோம்!
இதற்கும் தயங்கினார், சற்றே. வற்புறுத்தினோம். இதற்கே வேண்டா வெறுப்பாகத்தான் சம்மதித்தார். இவருடன் எடுத்துக்கொண்ட படம் இந்த இதழில் வெளியாகியுள்ளது. தமிழர் ஒருவரின் தயவில் இவர் 50 கோடி மதிப்புள்ள இக் கோயிலின் வாரிசு. உண்டியல் காசுகளும், அர்ச்சனைத் தட்டில் விழும் காசுகளும் இவருக்குத்தான்.
இவர் கதை தேவலை எனுமளவிற்கு இருக்கிறது. இங்குள்ள மாரியம்மன் கோயிலின கதை.
வாருங்கள் அங்கு செல்வோம்.
மாரியம்மன் கோயிலின் அருகே காரை நிறுத்த மிகவும் சிரமமாக இருந்தது. இடம் பற்றாக்குறை நிறுத்திவிட்டுப் போய்விட்டாலோ போக்குவரத்துத் காவல்துறையினர் அபராதம் விதித்துவிடுவார்கள். இதற்காக மதுசூதனன்தான் தியாகி போல ஆனார். கோயிலின் எதிரே உள்ள கடையின் வாயிலில் காரை பார்க் செய்துவிட்டு அதிலேயே உட்கார்ந்துகொண்டார்.
நீங்கள் போய்ப் பார்ததுவிட்டு வாருங்கள். நான் காரிலேயே இருக்கிறேன்.
“போக்குவரத்துப் போலீசார் ஆட்சேபித்தால் என்ன செய்வீர்கள்?”
“அதெல்லாம் நம்மூர் போலத்தான் இங்கும் வண்டியை எடுத்து வலம் வந்து மறுபடி வேறு இடத்தில் போட்டுக் கொள்வேன். நிறுத்திவிட்டுப் போய்விட்டால்தான் வம்பு”
“மாரியம்மன் கோயில் பூசாரியம்மா வர 7.00 ஆகுமாமே! மணி இப்போது 6.30தான் ஆகிறது.
என்ன செய்வீர்கள் அதுவரை?
“காரிலேயே இருக்கிறேன். வேறு வழியில்லை. இந்தப் பகுதி முழுக்க கார் நிறுத்த இடமே கிடையாது”
“7.00 மணிக்கு வியட்நாமியப் பூசாரியம்மா(?) வந்து பார்த்து நாங்கள் வெளிவர 7.15 ஏன் 7.30 கூட ஆகிவிடலாம் அதுவரை?
“அதனாலென்ன! பரவாயிலலை.
மதுசூதனன் இப்படிச் சொன்னதற்கு ஜவஹர் ஒரு மாற்றுத் தீர்வு சொன்னார்.
“பாதி நேரம் நீங்கள் காரில் இருங்கள். பாதி நேரம் நான் வந்து இருக்கிறேன்” அதுவும் நல்ல யோசனைதான்” என்றார் மது.
தமிழகத்தின் ஒரு பிரபலமான மாரியம்மன் கோயிலின் நுழைவாயிலுக்கும் சைகானில் டிஸ்ட்ரிக்ட் ஒன் எனப்படுகிற நம்கி நோய் நியா பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலின் நுழைவாயிலுக்கும் இடையே பெரிய வேறுபாடு இல்லை.
கோயிலின் வாயிலில் கோவிலுக்கான பூஜைப் பொருள் விற்கும் கடைகள் அச்சு அசலாக இங்கும். பிச்சைக்காரர்கள் எங்கள் கண்ணில்படவில்லை.
“பூ வாங்கிக்குங்கம்மா, அம்மா ஊதுபத்தி வேணுமா?” என்கிற குரல்கள் எங்களை நோக்கி மோத ஒரே வித்தியாசம், இவர்கள் கேட்டது வியட்நாமிய மொழியில் கேட்டவர்களும் வியட்நாமியாப் பெண்கள். கோயிலுக்குள் நுழைந்தால் ஏதோ புத்த கோவிலுக்குள் நுழைந்துவிட்ட உணர்வு. ஏகப்பட்ட கூட்டம். அத்துணைப் பேரும் வியட்நாமியர்கள். பலரும் பூக்கடை ஊதுபத்தி சகிதமாய்ப் பக்தி மயத்துடன் கோயிலை வலம் வர, சிலர் பூசாரியம்மாவின் வரவுக்காக பய பக்தியுடன் காத்திருந்தார்கள்.
அவர் வரும்வரை பூசை செய்தவர் (பூசையா அது!) ராமநாதன் என்பவர்.
இவரது தாயார்தான் பூசாரியம்மாவாம்.
“பூசாரியம்மா சரியா 7.00க்கு வந்துவிடுவாங்களா? மது சார் வேற கார்ல காத்திருக்கார் பாவம்!”
“அதெல்லாம் சரியா வந்துடுவாங்க. இந்த அம்மா ஒரு தமிழரின் மனைவி. இவர்களுக்குப் பல ஆண் வாரிசுகள். இந்தக் கோவிலில் எக்கச்சக்க வருமானம். இதனால் இந்த வாரிசுங்க அடிதடி, சண்டைதான். ஒரு முறை ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கிட்டதாகக் கூடக் கேள்விப்பட்டேன்.
“எப்ப? நீங்க வியட்நாம் வந்த பிறகா?”
“இல்லை. அதுக்கு முன்பே” தாய் (பூசைக்காரம்மா) இருக்கும் போதே இவ்வளவு சண்டையா?”
காசு கொட்டுது லேனா சார்! வியட்நாமியர்களுக்கு நம்பிக்கை மட்டும் வந்துட்டா காசைக் காசுன்னே பார்க்கமாட்டாங்க இரச்சுடுவாங்க. இரைச்சு. இப்ப இந்தம்மா தன்னோட பிள்ளைங்களை அப்பப்ட சமாதானப்படுத்திவிட்டு வர்றாங்க. முறை வைச்சு இந்த மாத வருமானம் உனக்கு. அடுத்த மாத வருமானம் அடுத்த மகனுக்கு என்று சமாதானம் பேசி சரி பண்ணி வச்சிருக்கிறதாக் கேள்வி”
“கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக்கிறதா? வேடிக்கையா இருக்கு ஜவஹர் சார்!”
இந்த மாத வசூல் இவருக்குத்தான் என்று ஜவஹர் ஒருவரைக் காட்ட, அவர் திருநீறு தடவி குங்குமம் வைத்து வேட்டி சட்டையில் அச்சு அசலாகத் தமிழராகவே தெரிநதார் (அப்படியே அப்பா சாடை?)
“ஜவஹர் சார் வியட்நாமிய அப்பாவுக்குப் பிறந்தவர்னு இவரைச் சத்தியம் பண்ணாலும் நம்ப முடியாது. அப்படியே நம்மவர் மாதிரியே இருக்கிறார் சார்! மணி ஏழு ஐந்து இன்னும் பூசாரியம்மா வரலை!
“வந்துடுவாங்க”
“சரியா நுழைவரா?”
“அதான் எனக்குப் புரியலை?”
“இன்னைக்கு வரமாட்டாங்களோ?” சேச்சே! நிச்சயம் வருவாங்க.
இதற்கிடையில் ஜவஹருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர.
“அடடே! இப்ப என்ன பண்ணலாம்? சரி நான் வர்றேன்” என்றார் ஜவஹர்.
“என்ன ஜவஹர்?”
“நம்ம வண்டி நோ பார்க்கிங்ல நிறுத்தியிருந்தோம்மா? நிறுத்துன இடத்துல பஞ்சர் ஆயிட்டுதாம். வகையா மாட்டினோம்” என்றார் ஜவஹர்.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?
2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!
2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!
2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!
2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!
2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!
2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!
2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”
2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!
2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































