வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்
“தமிழைத் தொலைச்சுத்
தலைமுழுகிட்டீங்களாக்கும்?”
வியட்நாம் நாட்டில் சைகான் நகரின் மையப் பகுதியில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட தண்டாயுதபாணி கோயிலில் சில அதிசயங்களைக் கண்டதாகக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா?
முதல் அதிசயம், இந்தக் கோயிலுக்கு ஜவஹர்லால் நேருவும், ராஜேந்திரபிரசாத்தும் வந்திருக்கிறார்கள் என்பதை நான் ஆதாரப்பூர்வமாக உணர முடிந்தது என்பதுதான்.
எவராவது இதைச் சொல்லியிருந்தால் நான் நம்புவதா வேண்டாமா என்கிற ஐயப்பாட்டிற்கு நிச்சயம் ஆளாகியிருப்பேன். நான் ஐயமறத் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தவை இந்தக் கோயிலில் இருந்த அவர்களது புகைப்படங்கள்தாம். இவையும் புகைப்பட நிலையங்களில் எடுக்கப்பட்டவை அல்ல. தண்டாயுதபாணிக் கோயிலுக்குள் எடுக்கப்பட்டவை. இரு புகைப்படங்களிலும் இரு தலைவர்களும் மகிழ்ச்சியான மனிநிலையில் காணப்படுகிறார்கள்.
தண்டாயுதபாணிக் கோயிலில், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மயில்வாகனம் சில பல்லக்குகள் ஆகியவை காணப்படுகின்றன. பராமரிப்பு சுத்த உணர்வு இன்றிப் பார்க்க இவை பரிதாபமாக இருக்கின்றன.
“எப்போது இவை வெளியே வலம் வந்திருக்கும்? என்று கேட்டதற்கு மதுசூதனனும், ஜவஹரும் சிறு ஏமாற்றப் புன்னகையை உதிர்த்தார்கள். இவை வெளியில் வந்தே பல வருடங்கள் ஆகிவிட்டன. இவற்றை முறையாகக் கையாள வேண்டும். இந்த முறைகளை அறியாத வியட்நாமியக் குடும்பம்தான் இங்கும் இருக்கிறது.
இந்தக் கோயிலைக் கடைசியாகப் பராமரித்தவர் ஒரு தமிழர். இவர் பெயர் முத்தையா. இவருக்கும் ஒரு வியட்நாமிய மனைவி (போச்சுடா) இவர்களுக்குப் பிறந்தவர் இங்குதான் இருக்கிறார் என்றார்கள்.
“அவரைப் பார்க்கணுமே!” என்றேன்.
“இங்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள வாரிசுகள் போல ஓடி ஒளியவெல்லாம் மாட்டார்கள். வருவார் பாருங்கள்” என்றார் ஜவஹர்.
மதுசூதனன் கேட்டார் “எந்தக் கோயிலுக்குப் போனாலும் அந்தக் கோயிலில் உள்ளவர்களைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்களே.”
“ஆமாம் மது சார்” நான் கோயிலுக்கு வரக் காரணமே பக்திப் பெருக்கு அல்ல. சில சமூக நிகழ்வுகளைப் பதிவு செய்யத்தான். இங்கே வந்து வாழ்ந்த தமிழர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டு இந்த ஆன்மிக உருவாக்கங்களில் ஈடுபட்டுப் பின்னர் மெல்ல அவற்றைக் கைநழுவவிட்டுவிட்டார்கள் பார்த்தீர்களா? ரொம்ப ஏக்கமாக இருக்கிறது சார். தமிழ்நாட்டிலிருந்து ஆன்மிகம் - ஐதீகம் தெரிந்தவர்களை வரவழைத்து இந்தக் கோயில் நியமங்களை முறைப்படி செய்யாமல் அவர்கள் வந்தால் சொத்து பறிபோய்விடும் என்கிற பயத்தில் இந்தக் கோயிலை ஒரு வியாபாரத் தவமாகவும், குவாட்டர்ஸ் போலவும் பயன்படுத்துவதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது. இவற்றைத் தமிழகம் இன்றும் சரிவர அறியாமல் இருக்கிறது. இவற்றையெல்லாம் வெளிப்படுத்த வேண்டும் என்று எனக்கு வேகம் வருகிறது?
“உங்கள் ஆதங்கம் புரிகிறது. என்ன செய்யச் சொல்லுகிறீர்கள்? நிர்வாகம் மெல்ல மெல்ல இவர்கள் கைக்குப் போய்விட்டது. இவர்களை யாரும் அசைத்துக் கொள்ள முடியாது. ஏதோ நம் ஆன்மீக ஈடுபாட்டிற்கு வடிகாலாகவாவது இவை இருக்கின்றனவே என்று வந்த இடத்தில் நம்மவர்கள் ஆறுதலடைகிறார்கள். உள்ளே அனுமதித்துக் கும்பிடவாவது விடுகிறார்களே என்று ஆறுதல்பட வேண்டியிருக்கிறது”
“பின்னே? உள்ளே விடாமல் வேறு செய்வார்களா என்ன? அப்புறம் வருமானத்திற்கு இவர்கள் எங்கே போவார்கள்?”
இதற்கிடையில் முத்தையாவின் வாரிசையும் அவர் மகளையும் ஜவஹர் உள்ளேயிருந்து அழைத்து வந்தார்.
இந்த இரட்டை நாடி மனிதர்; கோயிலுக்குள்ளேயே சிகரெட் பிடித்தபடி என்னை நோக்கி வந்தது எரிச்சலாக இருந்தது. 80 சதவிகித வியட்நாமியமும் 20 சதகிவிதத் தமிழகமும் கலந்த முகம் அது.
‘என்கிட்ட என்னய்யா உனக்கு வேலை? எதுக்கு என்னைப் பார்க்கணும்? என்கிற பாணியில் அலட்சியப் பார்வை பார்த்தபடி உடம்மை அப்படியும் இப்படியும் திருகிக் கொண்டு வந்தார். கூடவே வந்த இவரது மகளின் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இல்லை.
“உங்கள் பெயர்?” ஏதோ சொன்னார். அது தமிழ்ப் பெயர் இல்லை.
“இந்தம்மா பெயரைக் கேளுங்கள்!” என்றார் ஜவஹர். ஜவஹர் ஏதோ காரணத்தோடுதான் கேட்கச் சொல்கிறார் என்பது புரியவே, “நீங்களே சொல்லுங்க ஜவஹர்!” என்றேன்.
“இந்தம்மா பெயர் தங்கம்”
“என்னது தங்கமா?”
“ஆமாம்”
“வேறு பெயர் (வியட்நாமியப் பெயர்) ஒன்றும் இருக்கும் கேளுங்கள் ஜவஹர்.
“கேட்டுட்டேன். ஒரே பெயர்தான் தங்கம்தானாம்.”
ஆச்சரியமாக இருக்கிறது. முத்தையாவின் உடனடி வாரிசு ஒரு வியட்நாமியப் பெயரைத் தாங்கியிருக்கு. முத்தையாவின் பேத்திக்குத் தமிழ்ப் பெயர், ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
“விரும்பி வைத்துக் கொண்டீர்களா? உங்கள் பெயரின் பொருள் உங்களுக்குத் தெரியுமா?” தங்கத்திடம் நான் இக் கேள்வியைக் கேட்க, தங்கம் ‘பேபே’ என்று விழிக்க மது நான் கேட்டதை வியட்நாமிய மொழியில் மொழிபெயர்த்தார்.
“அர்த்தம் தெரியும். தாத்தா இருக்கும்போதே நான் பிறந்துவிட்டேன். அதன்பிறகு எனக்கு வேறு வியட்நாமியப் பெயர் சூட்ட வேண்டும் என்றார்கள். நான் மறுத்துவிட்டேன். தங்கமே எனக்கு பிடித்த பெயர்.”
“அப்பா உங்களுக்குத் தமிழ் கற்றுத் தரவில்லையா?” இது முத்தையாவின் மகனிடம் நான் கேட்ட கேள்வி.
அப்பா உயிரோடு இருந்தபோது கொஞ்சம் கொஞ்சம் பேசுவேன். அவருக்குப் பிறகு சுத்தமாக மறந்துவிட்டது”.
“அப்பாவுக்குப் பிறகு தமிழைச் சுத்தமாகத் தலைமுழுகிட்டீங்கன்னு சொல்லு!” என்னையுமறியாமல் கோபத்தில் இப்படிப் பேச, ஜவஹரும் மதுசூதனும் நல்லவேளையாக இதை அவருக்கு மொழிபெயர்க்கவில்லை.
தண்டயுதபாணி சுவாமி கோயில் பரப்பளவில் சற்றுப் பெரிது. சைகான் கோயில்களிலேயே இதுதான் பெரிது என நினைக்கிறேன். இன்று 60 கோடி ரூபாய் பெறும் என்று சொல்கிறார்கள். கோயிலின் சுத்தம் பரவாயில்லை.
தங்கம் திருமண வயதைத் தாண்டியவராகத் தெரிந்தார். அப்பாவுடன் ஒட்டிக்கொண்டு கோயில் வருமானத்தை அனுபவித்து வருகிறார் என்று ஊகித்தேன்.
“காப்பி சாப்பிடுகிறீர்களா? என்று முத்தையாவின் வாரிசு கேட்டார்.
கனிவாக மறுத்தார்கள் ஜவஹரும் மதுசூதனும்.
“லேனா சார்! அலுவலக நேரம் முடிந்து இந்நேரம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வந்திருப்பார். அந்தக் கோயிலின் வியட்நாமிய வாரிசு போய்ப் பார்ப்போமா?”
“தாரளமாக”
மறுபடி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாங்கள் விரைந்தோம். கோயிலில் நுழைந்ததுமே அந்த வியட்நாமிய வாரிசின் மனைவி ஏதோ உரத்த குரலில் சொல்ல, அந்த வியட்நாமிய வாரிசு ஓட்டமும் நடையுமாய் வீட்டிற்குள் நுழைந்துவிட்டார்.
தண்டாயுதபாணி சுவாமி கோயில் வாரிசு நம்மைத் துணிந்து சந்திக்க முன்வர, இவர் மட்டும் ஏன் எங்களைப் பார்த்து ஓடி ஒளிய வேண்டும்.
இது எனக்கு புரியாத புதிதாக இருந்தது.
“பாருங்க லேனா சார்! உள்ளே ஓடறான். நம்மைப் பார்க்க அவன் விரும்பலை” - மதுசூதனன்.
“விடக் கூடாது மதுசார். அந்தாளை நான் சந்திச்சாகாகணும்”
மதுசூதனன் தைரியமான ஆள். நான் அழைச்சிட்டு வர்றேன் என்று வீட்டு வாசலில் (கோயிலுக்குள் உள்ள வீடுதான்) உரிமையோடு குரல் கொடுத்தார்.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!
2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!
2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!
2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!
2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!
2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!
2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”
2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!
2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































