» 2010 » November .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Healthy life

Posted on Friday 26 November 2010

yam.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

பெண்கள் சாப்பிட வேண்டிய கிழங்கு!

கிழங்கு வகைகளுள் நீண்டகாலம் வைத்திருந்து பயன்படுத்தக் கூடிய கிழங்கு, சேனைக்கிழங்குதான். ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்கு கெட்டுவிடாமல் இருக்கும்.

அதனால் இக்கிழங்கைக் காய்கறியாகவும், ஊறுகாய் போடவும் பயன்படுத்துகிறார்கள்.

இக்கிழங்கு பெரிதாக யானைக்கால் போல் இருப்பதால் ‘யானைக்கால் கிழங்கு’ என்றும் இதை வழங்குகிறார்கள்.

கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து இது. இது உடலை வலுவடையச் செய்யும்.

பெண்கள் முப்பது நாள்களும் பயம் இல்லாமல் சேனைக் கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்குக் கெடுதல் எதுவும் செய்யாத கிழங்கு இது. கருணைக் கிழங்கு போல் அவித்துச் சாப்பிடக்கூடிய இக்கிழங்கின் 100 கிராம் எடையில், புரதம் 1.2 கிராமும், தாது உப்புகள் 0.8 கிராமும், மாவுச்சத்து 18.4 கிராமும், வைட்டமின் ஏ 434 சர்வதேச அலகும், ரைபோஃபிளவின் 0.07 மி.கிராமும், கால்சியம் 50 மி.கிராமும், இரும்பு 0.6 மி.கிராமும், தயாமின் 0.06 மி.கிராமும், நிகோடினிக் 0.07மி.கிராமும் உள்ளன. கிடைக்கும் கலோரி அளவு 79 ஆகும்.

உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்க இக்கிழங்கை உபயோகிக்கின்றனர்.

ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், தென்னமெரிக்கா, தெற்கு பஸிபிக், தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தவிர்க்க முடியாத உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது. இலட்சகணக்கான ஆப்பிரிக்கர்களின் பசியைப் போக்கும் முக்கிய உணவாக சேனைக்கிழங்கு இருந்து வருகிறது.

குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் நல்ல உணவு மருந்து, இது. காரணம், உடலை வலுவடையச் செய்யும் சத்து இதில் நிறைய உள்ளது.

இதில் உள்ள கால்சியச்சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.

பஞ்சகாலத்தில் கை கொடுக்கும் சத்துணவும், மருந்தும் இதுவாகும். அதனால்தான் ஆப்பிரிக்கர்கள் சேனைக்கிழங்கை முக்கிய உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையைச் சமாளிக்கிறார்கள்.

‘பி’ குரூப் மாத்திரைகளைச் சாப்பிடுகிறவர்கள் அம்மாத்திரைக்குப் பதிலாகச் சேனைக் கிழங்கைச் சாப்பிடலாம்.

அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் விளையும் சேனைக்கிழங்கு மிகவும் பிரபலமானது. அது சாதாரணமாய் இருபது முதல் நாற்பது கிலோ வரை எடை கொண்டதாய் இருக்கிறது.

தென்னமெரிக்கர்கள் இதைக் கால்நடைகளுக்கும், உணவாகக் கொடுக்கின்றனர். இதனால் அவை ஊட்டத்துடன் நன்கு வளர்கின்றன.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/11/19 இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி

2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 6:09 am
Filed under: Uncategorized
Intermission of political excitement

Posted on Friday 26 November 2010

raja.jpgஅரசியல் நாடகத்தின் இடைவேளை!

என்னவோ தெரியவில்லை, எல்லாவற்றையும் விட்டுவிட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ராசா விஷயத்தில் ஜெயலலிதா மிகக் கடுமையாக இருந்தார்.

‘டைம்ஸ் நெள’ என்கிற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ராசா விஷயம் பேசப்பட்டபோது கடும் சூடு காட்டினார்.

ராசாவை அகற்றுவதன்மூலம் தி.மு.க. ஏதும் தர்மசங்கடம் கொடுத்தால் காங்கிரசின் கூட்டணி அரசை அண்ணா தி.மு.க. ஆதரிக்கும் என்று சொல்லுமளவு இந்த விஷயத்தில் தீவிரம் காட்டினார்.

ஜெயலலிதாவின் வருங்காலக் கூட்டணி யாருடன் என்கிற கேள்விக்கு விடை தெரியாத நேரத்தில் பல விதமான அரசியல் ஆரூடங்களைப் பத்திரிகைகள் வெளியிட பகிரங்கமாகக் காங்கிரசுக்கு என் ஆதரவு இந்த விஷயத்தில் உண்டு என்று ஜெயலலிதா அறிவிக்குமளவு ராசா விஷயத்தில் ஜெயலலிதா காட்டிய முனைப்பு பெரும் வியப்புத்தான்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் இந்திய அரசுக்கு 176 இலட்சம் கோடி நஷ்டம் என்று மத்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், பாராளுமன்றம் சரிவர இயங்கவே இந்த ராஜினாமா என்று தி.மு.க. தலைவர் கூறியிருப்பது முழுப் பூசணிக்காய் சோறு இரகம்தான் என்று எண்ணத் தோன்றுகிறது. தி.மு.க. காங்கிரசின் நிர்ப்பந்தத்தை ஏற்றே இந்த இராஜினாமா நாடகம் நடந்திருக்கிறது என்று ஊகிக்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் தேர்தல் கூட்டணி மேகங்கள் சூழ ஆரம்பித்துவிட்ட நிலையில் காங்கிரசின் தயவு இன்றி மீண்டும் பதவிக்கு வரமுடியாது என்கிற அச்சத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் நம்புவதற்கு இடம் உள்ளது.

மத்தியில் கூட்டணி அரசு தொடர்ந்து நடக்க தி.மு.க.வின் ஆதரவு தொடர்ந்து தேவை என்கிற நிலைமைக்கும் ஜெயலலிதா அருமையாக வேட்டு வைத்து விட்டதால் தி.மு.க. இப்படி ஒரு நிலைப்பாடு எடுக்கும்படி தள்ளப்பட்டு விட்டதையும் அரசியல் அறிவு உள்ளவர்கள் கவனிக்காமல் விடமாட்டார்கள்.

மத்திய ஆடிட்டர் ஜெனரலின் கருத்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அல்ல என்று வாதிட்டவர் ராசா. மத்தியத் தகவல் தொடர்புத் துறையின் முன்னாள் செயலர் மாத்தூரும் தம் கருத்தைத் துணிந்து வெளியிட்டு தவறு நடந்திருக்கிறது என்று உறுதிபடப் பேசியிருக்கிறார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் கருத்துகளும் ராசாவுக்குச் சாதகமான கருத்துகளைக் கூறவில்லை.

இந்த விஷயம் ராசாவின் ராஜினாமாவோடு முடிந்துவிட்டதாக நினைக்க மனம் இடம் தரவில்லை. ஜெயலலிதாவேகூட ராசாவின் ராஜினாமாவோடு, கூட்டுக்குழு விசாரணையோடு திருப்தி அடைந்துவிட்டதாகத் தெரிகிறது. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

ஜப்பானில் ஓர் அமைச்சரவையில் ஓர் அமைச்சர் தவறு செய்தாலும் ஒட்டுமொத்த அமைச்சரவையும் இராஜினாமா செய்துவிடும்.

ஊம்! அது இங்கு நடக்கப்போவது இல்லை.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/11/19 மக்களுக்கு எதிராக மக்களே திரும்புவதா?

2010/11/12 காஷ்மீர்ப் புயல் பலவீனப்படுத்துங்கள்!

2010/11/04 ஆம்னி பேருந்துகளின் அநியாயப் போக்குகள்!

2010/10/29 எங்களைப் பிரிக்காதீர்கள்

2010/10/22 தெய்வமே கலங்கி நின்றால்?

2010/10/15 ஊனப்படுத்த முயன்றவர்களுக்கு விழுந்த சாட்டையடி!

2010/10/08 தலை நிமிர வைத்த தமிழர்கள்!

2010/10/01 சட்டங்களின் ஓட்டைகளும் பள்ளிகள் பெற்ற சாதகங்களும்

2010/09/24 மடியில் கனம் இல்லாவிட்டால்…

2010/09/17 தவிர்க்கப்பட்ட சேதம்!

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 6:06 am
Filed under: Uncategorized
Reasons facing smile

Posted on Friday 26 November 2010

lena-writer.jpgநம் மகிழ்வின்போது கவனிக்கப்பட வேண்டியவை….

ஒரு பட்டுப் புடவைக்காக எத்துணையோ இலட்சம் பட்டுப் பூச்சிகள் வெந்நீரில் வேகவைக்கப்படுகின்றன. இரக்க உணர்வும் பரிதாபப்படும் இயல்பும் உள்ள எத்துணையோ பெண்கள் பட்டுப் புடவை அணியும்போது இந்த உண்மையை எண்ணிப் பார்ப்பார்களா என்பது எனக்குத் தெரியாது.

நாடறிந்த நல்ல பேச்சாளரும் எழுத்தாளருமான பழ கருப்பையாவின் மனைவி திருமதி கமலா இந்தக் கோணத்தில் பட்டுப் புடவை அணிவதே இல்லை என்று கேள்விப்பட்டு அதிசயித்துப் போனேன்.

என் மகிழ்ச்சிக்குப் பின்னால் எத்துணையோ உயிர்களின் பலியோ என்று எண்ணுகிற இந்த இரக்க சிந்தனை எனக்குப் பிடித்திருக்கிறது. மற்றவர்களின் துன்பத்தில் நம் இன்பம் என்பது அவசியம் பரிசீலிக்கத்தக்கது.

கைகொட்டிச் சிரிப்பதற்கெனப் பிறரது உள்ளத்தைச் சூட்டுக்கோல் கொண்டு சுடுகிறோம்.

நன்றாகத் தவிக்கட்டும் என்று சாபமிட்டு மகிழ்கிறோம். இந்த மகிழ்ச்சியில் பொருள் இல்லை.

பல ஆயிரம் பங்கு பெறும் மாரத்தான் போட்டியில் மூவர் மட்டுமே பரிசு பெறுகிறார்கள். மீதமிருப்பவர்களுக்கு மனக்கஷ்டம். வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தாலும் முதல் ராங்க் ஒருவனுக்கே. 39 பேர்களுள் பத்துப் பேர்களாவது சங்கடப்படுவார்கள். இந்த இரு பிரிவினரது வலிகளின் மத்தியில்தான் வென்றவர்களின் மகிழ்ச்சி பெற்றெடுக்கப்படுகிறது. ஆனால் இதற்கும் நாம் மன்னர் விவாதித்ததற்கும் இடையே வேறுபாடு உண்டு.

திறமைக்குக் கிடைக்கும் கூலி இது. இதில் கூலி பெறாதவர்களின் வருத்தங்களுக்குக் கூலி பெற்றவர்கள் ஒருபோதும் பொறுப்பாக மாட்டார்கள்.

நம் மகிழ்ச்சிகள் இத்தகையதாக அமைந்தால் பிரச்சனை இல்லை. நாம் நடக்கும் நடைகளின்போதும் நாம் போடும் குதியாட்டத்தின்போதும் நம் கால்களின் கீழே எவரும் நசுங்கிப் போய் விடக்கூடாது என்கிற அக்கறையும் நமக்கு இருக்கத்தான் வேண்டும்!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/11/19 மனிதர் நீங்கள்!

 2010/11/12 மனத்தைத் திசை திருப்பும் வழிகள்!

2010/11/04 புதுக் குழியைத் தோண்டிப் பழைய குழியை நிரப்புவதா?

2010/10/29 நம்மை உயர்த்தும் நம் வார்த்தைகள்

2010/10/22 நீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 5:54 am
Filed under: Uncategorized
Vietnam Travel

Posted on Friday 26 November 2010

vietnam-memorial.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

“அம்மா பண்ற பந்தா ஓவரா இருக்கே!”

சைகான் மாரியம்மன் கோயிலுக்குள் அம்மாவின் விஜயம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன் அல்லவா?

அம்மாவின் பின்னணி பற்றி மறுபடி நினைவூட்டுகிறேன். இந்தக் கோயிலின் கடைசிப் பெறுப்பாளராக இருந்த தமிழரின் வியட்நாமிய மனைவி இவர். இப்பொழுது இவர்தான் இந்தக் கோயிலில் எல்லாம். மாரியம்மன் கோயிலில் நடக்கும் பூஜைகளை முறையாகச் செய்யக் கூடியவர் இவர்தான். இவரது பிள்ளைகள் இந்தக் கோயிலின் வருமானத்தை முறை வைத்துப் பங்கிட்டுக் கொள்கின்றனர். இந்த ஏற்பாட்டிலும் அடிக்கடி குளறுபடி. இதற்காக இவர்கள் சண்டையடித்துக் கொண்டதும் - ஏன் - துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதும் உண்டாம்.

அம்மா நுழைந்ததுமே கோயில் முழுக்க ஒருவிதப் பரபரப்புத் தொற்றிக் கொண்டதை என்னால் உணர முடிந்தது.

தமிழகத்தில் ஓர் அரங்கில் அமைச்சர்கள் நுழைந்தால் ஏற்படுமே பரபரப்பு அதை ஒப்பிடலாம் இந்தப் பரபரப்பிற்கு.

அம்மா, பறங்கிப் பழம்போல் இருந்தார்கள். அப்படி ஒரு மஞ்சள் நிறம். வட்ட முகம். வடசென்னையில் பிளாட்பாரவாசிகளுள் இருப்பார்களே சில வாயாடிப் பொம்பளைகள் - இந்த பொம்பளைகளுக்கு இணையாக நெற்றியில் ஒரு ரூபாய்க் காசு அளவிற்கு வட்டமான குங்குமப் பொட்டு. ரோஸ் நிறத்தில் ஒரு நைலக்ஸ் சேலை. பீடாக்களை இருபுறமும் வைத்துக் கொண்டதுபோல் உப்பலான கன்னம். இடுங்கிய அசல் வியட்நாமியக் கண்கள். மலர்ச்சி இல்லாத - எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாத முகம். பார்த்தால் மரியாதைக்குப் பதில் சற்று பயமே ஏற்பட்டது.

நியாயப்படி இந்தம்மாவைப் பார்த்தால் அருள் ஒளி ஏற்பட வேண்டும். எனக்கு இருளே தோன்றியது.

இதற்கிடையில் பரபரப்பு நிறைந்த அந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்ய ஆரம்பித்தார் சேவைப் பெண்ணான கின்.

பெயர்தான் மாரியம்மன் கோயிலே தவிர, வந்திருந்த பக்தகோடிகள் பலரும் அதை ஒரு புத்தர் கோயில் பாணியில்தான் மெல்ல மாற்றிக் கெர்ணடிருக்கிறார்கள்.

சந்நிதானத்தில் குங்குமம் கொடுத்துக் கொண்டிருந்த ராமநாதனிடம் கேட்டேன். “உங்கள் அம்மாவைப் பார்த்துக் பேச வேண்டும்!”

‘என்னது! என்ன விளையாடுறீங்களா?’ என்கிற பாணியில் முகத்தை மாற்றிக் கொண்ட அவர், “இப்ப முடியாது” என்றார்.

“சரி கோயிலில் உங்கள் அம்மாவைப் பார்க்க முடியாது என்றால் நாளை வீட்டிலாவது வந்து பார்க்கிறேன். விலாசம் கொடுங்கள்.

மறுபடி, ‘யோவ் கோயிலுக்கு வந்தமா சாமி கும்பிட்டமா போனமான்னு போய்க்கிட்டே இரு. இன்னாய்யா விளையாடுறியா? பார்க்கணுமாம் பேசணுமாம்! பேசாமப் போவியா! வந்துட்டாரு தொரை!’ என்று கவுண்டமணி பாணியில் ஒரு முறை முறைத்தார் அம்மாவின் அருமந்தப் புதல்வர் ராமநாதன்.

‘என்னய்யா இந்த அதிசயம் பண்றீங்க? பேசவே கூடாது என்கிற அளவுக்கு உங்கம்மா என்ன தெய்வப் பிறவியா? மனித நேயம் இல்லாத போக்கு என்ன போக்கு?’ என்று பதிலுக்கு நானும் ஒரு சலிப்புப் பார்வை பார்த்தேன்.

வாகனமோ பஞ்சராகி நிற்கக் கூடாத இடத்தில் நிற்கிறது. நமக்காக உதவ வந்தவர்கள் தர்மசங்கடத்தில் இருக்கிறார்கள். இந்தக் கூட்டம் எப்போது வடிவது? எப்போது இந்தம்மாவை வெளியே வரும் வழியில் மடக்குவது? இதெல்லாம் ஆகாத வேலை என்று என் உள் மனம் சொல்லவே, வாயிலில் வந்து பார்த்தேன். நான் கோயில் வாயிலில் நிற்பதைப் பார்த்துவிட்ட ஜவஹரும் மதுசூதனனும் கார் பஞ்சர் பார்க்கப்பட்டுத் தயாராகிவிட்டது. போகலாமா? என்று கேட்க, சந்தர்ப்பம் சரியில்லை என்று நானும் காரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

சைகானில் பார்த்துப் பார்த்துச் சாலையைக் கடக்க வேண்டும். கார்கள் நிதானமாகப் போக, மோட்டார் சைக்கிள் இளைஞர்கள் மிரட்டுகிற வேகத்தில் ஓட்டுகிறார்கள்.

“போலீஸ் தொந்தரவு ஒன்றும் இல்லையே?”

“இல்லையில்லை. ஆச்சரியம் இவ்வளவு நேரத்தில் ஒருவரும்
வந்து கேட்கவில்லை.”

“நல்ல வேளை!”

“நல்ல தரிசனமா? அம்மனை நன்கு கும்பிட்டீர்களா?”

“சாமி தரிசனமா? நான் எங்கே கும்பிட்டேன். அம்மன் தரிசனத்தைவிட எனக்கு அம்மா தரிசனமே முக்கியமாகப்பட்டது”

“பார்த்தீர்களா?”

“பார்த்தேன் ஓவராக இருக்கே அம்மா பண்ற பந்தா!”

“என்ன பண்றது! இங்கே இருக்கவங்க தமிழர்களை அப்படி ஆக்கிட்டாங்க”.

ஒரு தமிழரின் மனைவியாக இருந்தும் இவங்ககிட்ட எளிமை இல்லாததும் விரும்புகிற மக்களோட கலந்து பழகாததும் ஆச்சரியமாக இருக்கு. தன்னை ஒரு தெய்வீகப் பிறவி போல உருவகப்படுத்திக்கிறது அவ்வளவு நன்றாக இல்லை. யாரிடமும் பேசமாட்டாங்களோ?”

“நாங்க பார்த்தது இல்லை. தினமும் இரவு ஏழு மணிக்கு வந்து பூஜையெல்லாம் பண்ணிட்டுப் போயிடுவாங்க. எப்படியும் சந்திக்கணும்னு சொல்லுங்க. நாளைக்கு 7.00க்கு வாசலிலேயே நின்னு மடக்கிடுவோம்”

“அப்படியெல்லாம் ஒண்ணும் அவசியம் இல்லை. எளிமை இல்லாதவர்களை சந்திக்க ஏனோ என் மனசு இடம் கொடுக்கலை. அவுங்க தன்னை தெய்வீகப் பிறவி போல நினைச்சுக்குறாங்க. தம் பிள்ளைகளையே கட்டுப்படுத்த முடியாதவங்களா இருக்காங்க. அவுங்க அடிச்சுக்கிட்டு நாறுவதைக் கேள்விப்பட்டபோதே, இவங்க மேல எனக்கு மரியாதை வரமாட்டேங்குது. இந்தம்மா உயிரோட இருக்கிறபோதே இப்படி இருக்கே! இந்தம்மாவுக்குப் பிறகு என்ன ஆகும் ஜவஹர் சார்?”

“பெரிய கேள்விக் குறிதான்” பதிலிறுத்தவர் மதுசூதனன்.

“ஏழு மணிக்கு ‘டாண்’ணு வரும்னீங்க. சாவகாசமாத்தான் வந்தாங்க. சரியா நீங்க சொன்னபடி ஏழு மணிக்கு நுழைஞ்சிருந்தா நானும் அதிசயத்திருப்பேன்.”

‘ஓ! நீங்க அந்த பாயிண்டைப் பிடிக்கிறீங்க.”

“ஆனா ஒண்ணு ஜவஹர் சார்! இந்தம்மா ரொம்ப நாள் நல்லா இருக்கணும். ஏன் தெரியுமா? இந்தம்மா இருக்கிறதுனாலதான் கோயில் பெரிய பிரச்னைகள் ஏதும் இல்லாம நல்லபடியா நடக்குது. இந்தம்மாவுக்கு ஏதும்னா கோயில் வருமானத்துக்கு பிள்ளைங்க ஆசைப்பட்டு ஒருத்தரை ஒருத்தர் சுட்டுக்கிட்டு மேலோகத்திற்கோ சிறைக்கோ போயிடுவாங்க போலிருக்கு.”

“நடந்தாலும் நடக்கும்!”

திரும்பிப் பார்த்தேன். கோயிலுக்குள்ளலிருந்து வெளியேறிய கூட்டத்தைவிட உள்ளே போகும் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்தம்மாவுக்கு ஏதும் என்றால் கோயில் மூடப்படும். வியட்நாம் அரசும் கோயிலை எடுத்துக் கொண்டுவிட வாய்ப்பு இருக்கிறது. காரில் ஏறி அமர்ந்து புறப்பட்டபோது இந்தக் கோயிலின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறிதான் என்கிற நினைப்புடன் அதைக் கடக்கும்வரை பார்த்துக் கொண்டே இருந்தேன்.

“நாளை எங்கு சார் போகிறோம்?”

“ஒரு மிக சுவாரசியமான இடம்.”

“யார் யார் போகிறோம்?”

“இதே மாதிரிதான். நான் லீவு போட்டுட்டேன். மதுசூதனன் சார் காரோட வர்றார்.”

“சைகானிலிருந்து வெது தூரமா?”

“ஆமாம்”

“போற வழியிலே வியட்நாமின் கிராம வாழ்க்கையைப் பார்க்க முடியுமா?”

“சைகான் முடிஞ்சதுமே நீங்க எதிர்பார்க்கிற கிராமம் ஆரம்பிச்சுடும்.”

“ஒரு ஜாலியான பிக்னிக்னு சொல்லுங்க”

“ஜாலி மட்டுமல்ல, திரில்லிங்கான அனுபவமும் கிடைக்கப் போகுது”

“என்னன்னு சொல்லிடுங்க ஜவஹர்! சஸ்பென்ஸ் தாங்கலை எனக்கு”

உங்களுக்கும்தானே வாசகர்களே!

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/11/19 பச்சைத் தமிழன் கெட்டான் போங்க

2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!

2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?

2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!

2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!

2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!

2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!

2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!

2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 5:35 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 26 November 2010

harbhajan-singh.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எஸ்.ராஜவேலு, எட்டயபுரம்.

குஜராத் உள்ளாட்சித் தேர்தல்களிலும் நரேந்திரமோடியின் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறதே?

இந்த மோடியிடம் எந்த மோடி வித்தைகளும் இல்லை. இவர் மக்களுக்காக மக்களுடைய காவலராக இருக்கிறார். அதனால்தான் வெட்ட வெளி மைதானத்தில் ரியல் எஸ்டேட் கொடிகள் மாதிரி இவரது கொடியும் அலை அலையாய் பறக்கின்றன.

எம்.பாரக், வேலூர்.

அவநம்பிக்கையாளர்களுக்கு உங்கள் அறிவுரை?

நான் குடுகுடுப்பைக்காரர் மாதிரி. குடுகுடுப்பைக்காரர் ‘நல்ல காலம் வருது நல்ல காலம் வருது’ என்றே சொல்வார்கள். வாழ்க்கையே நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

டி.ராம்குமார், கோவை-1.

காங்கிரஸ், தி.மு.க. உறவு?

இவர்கள் உறவில் ‘ண’ என்பது ‘று’ வாகி உள்ளது. இதுவரை இணக்கமாக இருந்தவர்கள் இப்போது இறுக்கமாக இருக்கிறார்கள். இலக்கணப்படி இது ‘திரிதல் விகாரமா’ என்றால் அதுவுமில்லை. ஆனால் இவர்கள் உறவு என்னவோ இன்று விகாரம்தான்.

ஏ.ராம்பிரகாஷ், கோபி.

அடுத்தது யார் ஆட்சிக்கு வருவார்கள்?

1991, 2001, 2011 என்று ஒன்றுகளின் வரிசையில் பார்த்தால் அ.இ.அ.தி.மு.க. தான். ஆனால் எம்.ஜி.ஆர் தலைமையில் மூன்று முறை வென்ற கட்சி ஜெயலலிதா தலைமையில் மூன்று முறை தோற்றியிருக்கிறது. இதைக்கொண்டு பார்த்தால் குழப்பமே மிச்சம். எதற்கும் வரும் பொங்கல் வரை என்னைக் கிண்டாதீர்கள்.

எஸ்.சாம்பசிவம், தூத்துக்குடி.

மேலவைத் தேர்தல் வாக்காளர் பகுதியில் விழிப்புணர்வு இல்லையே?

நோக நோக நுங்கு தோண்டுகிறவன் ஒருவன். அதை நோகாமல் சாப்பிடுகிறவன் ஒருத்தனா என்கிற திருமந்திரம்தான் எல்லோரையும் தூங்க வைத்துள்ளது. இல்லாவிட்டால் படித்த பட்டதாரிகளுக்குப் பள்ளியெழுச்சி தேவையில்லை.

டி.பி.வேலு, மதுரை-2.

டாக்டர் அய்யா தி.மு.க.வோடு ஐக்கியமாகி விடுவாரோ?

திருவிழா முகஅணிகள் டாக்டரிடம் நிறைய உண்டு. தேர்தல் வரும்போது அதிலொன்றை அணிவார். இப்படி அணிவதுதான் அவருக்கும் அணி!

ப.தர்மாம்பாள், தஞ்சாவூர்.

செளந்தரா கைலாசம் மரணம் பற்றி?

செளந்தரா கைலாசம் அம்மா ஒரு சிறந்த மரபுக் கவிதாயினி. எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடைகளெல்லாம் இவர்மீது இரங்கற்பா பாடியிருக்கும். கடைசிவரை இவரும் அவற்றைக் கைவிடவில்லை. அவைகளும் இவரைக் கைவிடவில்லை.

எஸ்.பீதாம்பரம், பொழிச்சலூர்.

ராகுல்காந்தி கலைஞரை சந்திப்பாரா?

வயிற்றுவலிக்காரனிடம் வாழ்த்துப்பாவா? வாய்ப்பே இல்லை.

எம். கருப்பையா, உடுமலைப்பேட்டை.

வேலைவாய்ப்பு இன்று அரிதாகி விட்டதே?

சித்தப்பன் வீட்டில் பெண் பார்த்தால் இப்படித்தான். கோ.ஆப்டெக்ஸில் இன்று சேலைகளை விற்பது போல் கோட்டையில் இன்று வேலைகளை விற்கிறார்களாம்! நீங்கள் எட்டிப் பார்த்தால்தானே? உடனே முந்துங்கள். உங்களுக்கு விழாக்காலச் சலுகைகள் கிடைக்கலாம்.

நா.குமார், புதுச்சேரி.

வீட்டில் உங்கள் செல்வாக்கு எப்படி?

இந்த விஷயத்தில் சொந்த வீட்டிலேயே நான் காங்கிரஸ்காரனாகி விட்டேன். எதையும் மேலிடம்தான் முடிவு செய்யும். அம்மாவுக்கே அதிக பவர்!

ஆர்.சரவணப்பெருமாள், தாம்பரம்.

இனி தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி வருமா?

நமக்குக் கூட்டாஞ்சோறு பழகிவிட்டது. என்ன இருந்தாலும் இனி தனிச்சோறு கிடைக்காது.

பே.திருமாவேலன், திருச்சி-2.

இன்றைய சாதிக் கட்சிகள்?

வாழை மரம் போல பலரை வாழ வைக்கின்றன. இவை தள்ளும் குலைகளால் எத்தனையோ வயிறுகள் இங்கு பசியாறுகின்றன. மற்றபடி இவை நிழலுக்குப் பயன்படா!

பி.ஞானதேசிகன், வரதராஜபுரம்.

கல்விக் கட்டணக் குழுவின் தலைவர் நீதியரசர் கோவிந்தராஜனின் திடீர் பதவி விலகலைப் பற்றி?

கல்வியின் வேர்கள் கசப்பானவை. ஆனால் அதன் கனிகளோ இனிமையானவை என்பார்கள். இந்த ராஜனுக்கு கல்வியின் வேர்கள் கசக்கவில்லை. அதனால்தான் நீதியரசரானார். ஆனால் அதன் கட்டணத்தின் வேர்கள் கசந்திருக்கலாம். அதனால்தான் இந்த ராஜினாமோவோ என்னவோ!

என்.குணா, சென்னை.

கர்நாடக பி.ஜே.பி. எப்படியிருக்கிறது?

எதற்கும் அவர்களின் நிரந்தர முகவரியான பெங்களூரு உயர்நிதிமன்றத்துக்கும் அவர்களின் தற்காலிக முகவரியான விதான் சவுதாவிற்கும் தொடர்பு கொள்கிறேன். அவர்கள் லைனில் வருகிறவர்களா அல்லது லைனுக்கு வந்து விட்டார்களா என்பதை விரைவில் சொல்கிறேன். அதுவரை நீங்கள் ஆறப்பொறுங்கள். எடியூரப்பா? நீங்க எங்கப்பா இருக்கீங்கப்பா?

கே.ஆனந்தன், விருத்தாசலம்.

ஹர்பஜன் வெளுத்து வாங்குகிறாரே?

சுழலும் பந்துதான் இவரது கைவண்ணம் என்று பார்த்தால் இவரது மட்டையும் நன்கு சுழல்கிறது. இந்தியாவில் ஒரே ஆல்ரவுண்டர் பஞ்சம். ஹர்பஜன் நினைத்தால் நிறைவு செய்யலாம்.

அப்துல்பாட்ஷா, வேலூர்.

ஆங் சான் சூகியின் விடுதலையை எதிர்பார்த்தீர்களா?

இராணுவ ஆட்சி தனக்கான வெடிக்குத்தானே திரி வைத்துக் கொண்டுவிட்டது. 65 வயதாம். நம்ப முடியவில்லை!

ஏ.ரவிச்சந்திரன், திண்டுக்கல்.

ஹவாலாக்காரர்கள் சுலபமாகப் பணம் பண்ணுவதைப் பார்க்கும்போது நமக்கே தூண்டுதல் ஏற்படுகிறதே?

என்னையுமா சேர்த்துக் கொள்கிறீர்கள்? ஹவாலாவில் (வெளி நாட்டுக் கள்ளப் பணப்பரிமாற்றம்) பணம் சம்பாதித்தவர்களைத்தான் உங்களுக்குத் தெரியும். இதனால் பாதிக்கப்பட்டவர்களையும் கண்டவன் நான். ஹவாலாவில் இறங்குகிறவர்கள் திவாலாகவும் தயாராகிவிட வேண்டியதுதான்!

ப.வேன், கும்பகோணம்.

கூட்டுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ் மறுப்புத் தெரிவிக்கிறதே?

என்னவோ நடக்குது மர்மமா இருக்குது. காங்கிரஸ் வெளிப்படையாக வேண்டுகோள் விடுக்காமலேயே ராசா ராஜினாமா செய்கிறார் என்றால் உள்ளுக்குள் என்னவோ நடந்திருக்கிறது. கூட்டுக் குழு விசாரணையெல்லாம் வேண்டாம். காங்கிரஸ் இது பற்றி ஒரு வெள்ளை அறிக்கை மட்டும் தரட்டும்!

எஸ்.கோபால், விருதுநகர்.

தமிழக காங்கிரஸின் நம்பிக்கை நட்சத்திரம் கார்த்தி ப.சிதம்பரம்தானே?

சொல்லலாம். அவசரப்படுகிறார். உணர்ச்சிவசப்படுகிறார். இன்னும் எளிமைகாட்டி இறங்கிவந்தால் நல்ல எதிர்காலம் உண்டு.

எழில்பிரியன், காஞ்சிபுரம்.

‘முதலில் வந்தவருக்கு முதலில் வழங்குதல்’ என்கிற முறை மற்ற துறைகளுக்கும் பொருந்துமா?

நீங்க வேற! கொஞ்சம் நல்ல முதலோடும் வரவேண்டும். தெரியும்ல?

எஸ்.சந்தானலட்சுமி, சேலம்.

கல்விக்கட்டண மறுபரீசீலனை விஷயத்தில் நீதியரசர் ரவிராஜபாண்டியனின் அணுகுமுறை எப்படி உள்ளது?

அருமையான தேர்வு. இவரைப் போல் தினமும் 10 பள்ளி நிர்வாகிகளைச் சந்தித்தால் உங்களுக்கும் எனக்கும் தலைவெடித்துவிடும். ஒன்று உறுதி கட்டணத்திற்கு ஏற்ற கல்வி என்பதை பெற்றோர் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். குறைந்த கட்டணத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் நல்ல கல்வி சாத்தியமில்லை. கல்விக்குச் செலவழிக்கக் கலங்காத பெற்றோர் உண்டு. இவர்கள் பெட்டி நிறையக் கொடுக்கவும் தயார். இவர்களை மூக்குப் பொடி டப்பாவிற்குள் அடக்க நினைத்தால் கல்வியின் தரம் கெடத்தான் செய்யும்.

19 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
01 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 5:18 am
Filed under: Uncategorized
Healthy life

Posted on Friday 19 November 2010

ridge-gourd.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் பீர்க்கன் காய்

பீர்க்கன் காய் வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது.

வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் பீர்க்கனில் உண்டு.

உலகில் அமெரிக்கர்கள்தாம் பீர்க்கன்காயை அதிகம் சாப்பிடுகிறார்கள். அவர்கள் சாப்பிடும் லூஃபா அக்யுட்ஆங்குலா (Luffa Acutangula) என்ற வகைப் பீர்க்குதான் எல்லா நாடுகளிலும் பிரபலம்.

பழுத்த பிறகு தான் - முற்றிய பிறகு தான் பீர்க்கங்காயைச் சமையலில் சேர்க்க வேண்டும். காயாக இருக்கும் போது சேர்த்தால் முதுகுவலி, பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம் போன்றவை தோன்றும்! சளிக் கோளாறுகளும் தோன்றும். அதனால்தான் மார்க்கெட்டுகளில் முற்றிய பீர்க்கன் காய்களே விற்பனை செய்யப்படுகின்றன.

இதுவும் ஒரு டானிக் காய்கறிதான்!
100 கிராம் பீர்க்கில் புரதம் 0.5% உள்ளது. கால்சியம் 40 மி.கிராமும், பாஸ்பரஸ் 40 மி. கிராமும், இரும்புச் சத்து 1.6 மி.கிராமும், வைட்டமின் ‘ஏ’ 56 அகில உலக அலகும், ரிஃபோபிளவின் 0.01 மி.கிராமும், தயாமின் 0.07 மி. கிராமும், நிகோடின் அமிலம் 0.2 மி.கிராமும், வைட்டமின் 5 மி.கிராமும் உள்ளன.

நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றிப் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு உடல் நலத்தைக் பாதுகாக்கும்.

முற்றிய பீர்க்கன் காயை மட்டும் சமைத்துண்பதால் மேற்கண்ட நன்மைகள் நமக்குக் கிடைக்கும்.

பீர்க்கன்காய் கொடி இனத்தை சேர்ந்தது. இந்திய விவசாய சமூகம் கண்டுபிடித்துள்ள ‘பூசா கஸ்தார்’ என்னும் ரகம் மிகவும் உயர்வானது. தமிழ்நாட்டில்தான் அதி நீள உயர் ரகம் பீர்க்கு என்னும் ஓர் ரகம் பயிரிடப்படுகிறது. இவ்வகைக் காய்கள் 70 முதல் 90 செ.மீ. வரை நீளமானவையாகவும் 200 கிராம் எடை கொண்டனவாயும் இருக்கின்றன. காய்கள் பச்சை நிறத்திலும் காணப்படும்.

100 கிராம் பீர்க்கனில் கிடைக்கும் கலோரி 18 தான். எனவே, இது நீரிழிவு நோயாளிகளுக்கும், குண்டான மனிதர்களுக்கும் கெடுதல் செய்யாத காய்கறியாகவும் திகழ்கிறது.

முற்றிய பீர்க்கனில் லுஃபின் (Luffin) என்னும் கசப்புப் பொருள் இருக்கிறது. பீர்க்கனின் விதைகளில் ஒரு விதமான நறுமண எண்ணெய் இருக்கிறது. நார்ச்சத்தும் உடனடியாக இரத்தத்தால் கிரகித்துக்கொள்ளக்கூடிய மாவுச்சத்தும் பீர்க்கனில் உள்ள முக்கிய சிறப்பு அம்சங்களாகும்.

இதன் பொருட்டே பீர்க்கன் கொடியின் இலைகள், வேர், விதைகள் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையாய்த் திகழ்கின்றன.

புண்ணுக்கு மருந்து!
சொறி, சிரங்கு, நாள்பட்ட புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, குறிப்பிட்ட இடங்களில் வைத்துக் கட்டினால் போதும்; இரண்டு மூன்று கட்டுகளிலேயே குணமாகிவிடும். பற்றாகவும் இடலாம்.

பீர்க்கன் இலையைச் சாறு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் சூடுபடுத்தி, அந்த இலைச்சாற்றை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

சிறு குழந்தைகளின் கண்நோய் நீங்க இதே இலைச்சாற்றில் ஓரிரு சொட்டுக்கள் கண்ணில் விட்டால் போதும். ஆனால், அந்த இலைச்சாற்றை சூடுபடுத்தக்கூடாது.

பீர்க்கன் காயின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்குச் சக்தி வாய்ந்த மேல் பூச்சு எண்ணெய்யாய்த் திகழ்கிறது.

இரத்த சோகை நோயாளிகள் இதன் வேரைக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடித்து, அருந்த வேண்டும். இலைச்சாற்றைப் போலவே இதுவும் கசப்பாகத்தான் இருக்கும்; ஆனால், சக்தி மிக்கது. இரத்த சோகை விரைந்து குணமாகும். கால் வீக்கமும் இதே கஷாயத்தால் குறையும்.

கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச் சக்தியுடன் வாழவும் அடிக்கடி பீர்க்கன் காயையும் சமையலில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

காய்கறிகளுள் பச்சையாகச் சாப்பிடக் கூடாத காய்கறி இதுதான். கசப்புச் சுவை அதிகமாய் இருப்பதால் இதைக் சமைத்துத்தான் சாப்பிட வேண்டும்.

தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைந்து குணமாவது உறுதி!.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/11/12 உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

2010/11/04 அபார்ஷனைத் தடை செய்யும் லெட்டூஸ் என்னும் இலைக்காய்கறி

2010/10/29 சோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு

2010/10/22 இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

2010/10/15 உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!

2010/10/08 ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை

2010/10/01 வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு

2010/09/24 உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 3:27 am
Filed under: Uncategorized
You(’re) the man!

Posted on Friday 19 November 2010

lena.jpgமனிதர் நீங்கள்!

மக்கள்தொகை பெருத்துவிட்டது. ஆனால் மனிதர்கள் குறைந்து போனார்கள் என்றார் மனித நேயர் ஒருவர். மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு முரண்பட்ட வாக்கியம்போலத் தோன்றும். இந்த வேறுபாட்டை விளக்க ஒரு விஷயம் சொல்லுகிறேன். ஒருவரைப் பார்த்து அவரது கேவலமான நடத்தைக்காக, அவர் பயன்படுத்திய மட்டமான சொற்களுக்காக “மனுஷனாய்யா நீ?” என்று ஒருவர் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்தாளுக்கு என்ன ஆகிவிட்டது? மனுஷனைப் பார்த்து மனுஷனாய்யா நீ என்று கேட்கிறானே இந்த ஆள்? இவனுக்குப் புத்தி பேதலித்துவிட்டதா? என்று குறை சொல்லவா முடியும். மனிதனைப் பார்த்து நீயெல்லாம் ஒரு மனுஷனா? என்று கேட்டால் அதன் பொருள், உன்னிடம் மிருகத்தன்மைகளே மிகுந்து நிற்கின்றன என்று சொல்லாமல் சொல்லுவதே அல்லவா?

பொருள் உலகமாக மாறிவரும் உலகம் எதையும் காசாகப் பார்க்க ஆரம்பித்திருப்பதால் சுயநலக் கோணத்தில் மனிதநேயத்தை மறக்க ஆரம்பித்திருக்கிறது. அவசர கதியில் ஓடுகிறவன் அனைவரையும் இடித்துக்கொண்டும் மிதித்துக்கொண்டும் ஓடுகிறான் அல்லவா? அதே தவறுதான் இங்கும் நிகழ்கிறது. நாம் யாரைக் காயப்படுத்துகிறோம். எவரைப் புறக்கணிக்கிறோம். எவரை உதாசீனப்படுத்துகிறோம் என்பதையே பொருட்படுத்தாமல் நடந்துகொள்கிறோம்.

எவ்வளவு பெரிய மனிதராக வேண்டுமானாலும் இருங்கள். எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் பரவாயில்லை. எத்தகைய பதவியில் வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் நீங்கள் ‘மனித’ராக இருக்கிறீர்களா என்பதுதான் பலரால் கவனிக்கப்படும். இவ்வளவு இருந்தும், மனிநேயம் இருந்து மனிதனை மனிதனாக மதித்து கண்டிப்பதையும் மறுப்பதையும் அவர்கள் புண்படாமல் செயல்படுத்தி எதையும் இதமாக வெளிப்படுத்தினால் அது இருக்கிற பெருமைகளுக்கு மணிமகுடம் சூட்டும்.

எல்லாம் இருந்தும் ‘மனிதம்’ இல்லாவிட்டால் இருக்கிற அத்தனை பெருமைகளும் செல்லரிக்கிற விஷயமாகவே ஆகிவிடும். மனிதர்களே தகுதிகளுக்குப் பெருமை சேர்க்கிறவர்களாகிறார்கள். தகுதிகள் மட்டுமே அல்ல!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

 2010/11/12 மனத்தைத் திசை திருப்பும் வழிகள்!

2010/11/04 புதுக் குழியைத் தோண்டிப் பழைய குழியை நிரப்புவதா?

2010/10/29 நம்மை உயர்த்தும் நம் வார்த்தைகள்

2010/10/22 நீங்கள் வசூல் மன்னர் ஆவது எப்படி?

2010/10/15 ஆதிக்கத்தின் தோழன் அவமானமே!

2010/10/08 சொல்லிக் காட்ட வேண்டிய அவசியம் என்ன?

2010/10/01 நம் நம்பிக்கைகளை உடைப்பவர்கள்!

2010/09/24 வானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 3:15 am
Filed under: Uncategorized
People’s movement against people

Posted on Friday 19 November 2010

street-rally.jpgமக்களுக்கு எதிராக மக்களே திரும்புவதா?

சாலை மறியல் பற்றி ஏற்கனவே நான் இதே பகுதியில் எழுதிவிட்டது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது.

ஆனாலும் வேறு சில கோணங்களையும் சொல்லவேண்டிய தேவை மறுபடி ஏற்பட்டிருக்கிறது.
நடுத்தெருவுக்கு இத்தகைய மக்கள் வருமுன் ஓர் இனம்புரியாத அமைதியற்ற தன்மையும் மனக்கொதிப்பும் மக்கள் மத்தியில் உருவாகிறது. இந்து உணர்வுகளை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் உள்வாங்கிக்கொள்ளத் தவறுவது ஏன் என்பது புரியாத புதிர்.

ஓர் உயர் அதிகாரியிடம் இதுபற்றிக் கேட்கவும் செய்தேன். “எவ்வளவோ மேல் முறையீடு செய்து பார்த்தாச்சு சார். பலனே இல்லை. மக்கள் நடுத்தெருவிற்கு வந்தால்தான் சார் இவங்க (ஆட்சியாளர்கள்) கவனிப்பாங்க” என்றாரே பார்க்கலாம்.

விட்டால் இவரைப் போன்ற அதிகாரிகளே தாண்டி விடுவார்கள் போலிருக்கிறது. “வாங்க சாலை மறியல் பண்ணுங்க, அப்படியாச்சும் இதற்கு ஒரு தீர்வு வருதா பார்க்கலாம் என்று இரகசியக் குரலில் சொன்னாலும் சொல்வார்கள் போலிருக்கிறத.

சாலை மறியல் செய்யப்பட்ட பெரும்பாலான விஷயங்களில் வேலைகள் நடக்கின்றன. காரியங்கள் ஆகின்றன! இப்படி விழுந்தடித்துக் கவனிக்கிற அரசு இயந்திரத்தின் போக்கு மக்கள் மத்தியில் எத்தகைய நம்பிக்கைகளை வளர்க்கும் என்று உரியவர்கள் எண்ணிப் பார்க்கவேமாட்டார்கள் போலிருக்கிறது.

சாலை மறியல் செய்யுங்கள் உடனே கவனிக்கிறோம் என்று அரசு சொல்லாமல் சொல்வதாகத்தானே மக்கள் புரிந்துகொள்வார்கள்?

மறியல் செய்பவர்களைக் கைது செய்து தண்டிக்க ஏன் அரசுக்குத் துணிவில்லை? இவர்களது தாடையைப் பிடித்துக் கெஞ்சியே பழக்கப்பட்டுப் போய்விட்டார்களே அதிகாரிகள்! மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்து வாகனங்களைத் திருப்பிவிட்டு, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சாலையில் இருங்கள் என்று சொல்லும் தைரியம் ஏன் இவர்களுக்கு வரவில்லை.

சாலை மறியல்கள் நான்கினை தமிழகம் அறியத் தோற்கடித்தாலொழிய இந்தக் கலாசாரம் விஷவேர்களாய்ப் பரவுவதைத் தவிர்க்கவே முடியாது.

உலகில் பல நாடுகளில் இல்லாத இந்தியாவில் பல மாநிலங்களில் இல்லாத ஒரு புதிய வகைப் போராட்டத்தைத் தமிழகம் கற்றுக் கொடுத்ததாகவோ பிரபலப் படுத்தியதாகவோ இருக்க வேண்டாம்!

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/11/12 காஷ்மீர்ப் புயல் பலவீனப்படுத்துங்கள்!

2010/11/04 ஆம்னி பேருந்துகளின் அநியாயப் போக்குகள்!

2010/10/29 எங்களைப் பிரிக்காதீர்கள்

2010/10/22 தெய்வமே கலங்கி நின்றால்?

2010/10/15 ஊனப்படுத்த முயன்றவர்களுக்கு விழுந்த சாட்டையடி!

2010/10/08 தலை நிமிர வைத்த தமிழர்கள்!

2010/10/01 சட்டங்களின் ஓட்டைகளும் பள்ளிகள் பெற்ற சாதகங்களும்

2010/09/24 மடியில் கனம் இல்லாவிட்டால்…

2010/09/17 தவிர்க்கப்பட்ட சேதம்!

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 3:08 am
Filed under: Uncategorized
Vietnam Travel

Posted on Friday 19 November 2010

vietnam.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

பச்சைத் தமிழன் கெட்டான் போங்க

சைகான் மாரியம்மன் கோயிலின் எதிரே காரை நிறுத்தக் கூடாத இடத்தில் நிறுத்த, அப்படி நிறுத்திய இடத்தில் வண்டி பஞ்சராகிவிட எந்த நேரமும் எங்கள் வாகனத்தின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்கிற சூழ்நிலை எங்கள் இதயத்தின் துடிப்பை சற்றே மாற்றிவிட்டது.

மதுசூதனன் மாரியம்மன் கோயிலுக்கு எதிரே நிறுத்தப்பட்டிருந்த காரின் நிலையை கோயிலுக்குள் இருந்த ஜவஹருக்கும் எனக்கும் கைத் தொலைபேசியில் விளக்க ஜவஹர் சொன்னார். “நான் காருக்குப் போய் அவருக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று பார்க்கிறேன். நீங்கள் கோயிலுள் இருங்கள். ‘அம்மா வரும் நேரம் இது’.

“என்னால் உங்களுக்கு எவ்வளவு சிரமம்!”

“அதெல்லாம் ஒன்றுமில்லை. நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம்.”

ஜவஹர் ரொம்பவும் நிதானமான சுபாவம் உள்ளவர். ஆனால் இவரே சற்றுப் பதற்றப்பட்டார் என்பதைக் குரல் நன்கு வெளிப்படுத்தியது.

தன் நண்பருக்காகக் கார் எடுத்து வந்த மதுசூதனனுக்கு இப்படி ஓர் இக்கட்டான நிலை ஏற்பட்டுவிட்டதே! வழக்குப் பதிவு, காவல் நிலையம், நீதிமன்றம் என்று அலைய வேண்டி வருமே என்கிற அக்கறை அவருக்கு.

மாரியம்மன் கோயில் மெல்ல மெல்ல நிறைய ஆரம்பித்தது. அலுவலகம் முடிந்து கோயிலுக்கு வரும் இயல்பான கூட்டமா இது? அல்லது “அம்மா வருகைக்காகச் சேர்ந்து கொண்டிருக்கிற கூட்டமா?

இன்ன வகைப் பிரிவினர்தான் என்றில்லை. சிறுவர் சிறுமிகளும், இளசுகளும், குடும்பங்களும், பெரிசுகளுமாய்ப் பலரும் கலந்து காணப்பட, இவர்களையெல்லாம் ஒழுங்குப்படுத்தி அப்படிக் போங்க. இப்படி வாங்க, ஊதுபத்தியை இங்கே கொளுத்தாதீங்க, இது நடக்கிற பாதை, காலைச் சுட்டுவிடும் அல்லவா? இப்படி க்யூவில் வாங்க, அம்மா வந்துடுவாங்க என்கிற பாணியல் ஒரு வியட்நாமியப் பெண்மணி, பறங்கிப் பழ நிறத்தில் (அதுவும் புடவையில்!) வழிகாட்டிக் கொண்டிருந்த காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது.

அவரது நடவடிக்கைகள் எனக்கு வியப்பை அளிக்கவே, அவரைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை, அவர் என்னைப் பார்த்து, “நீங்கள் தமிழா?” என்றார். அதுவும் இதைத் தமிழில் கேட்டார் பாருங்கள். எனக்கு வியப்புத் தாளவில்லை.

“ஆமாம்”

என் கைகளை நோக்கி அவர் தன் கையை நீட்டினார். நாங்கள் கை குலுக்கிக் கொண்டோம்.

“என் பெயர் கின். இங்கு தொண்டு செய்கிறேன். என் கணவர் ஒரு தமிழர். (அப்படிப் போடு!) பெயர் கீர்த்தி. மாலையானால் இந்தக் கோயிலுக்கு வந்த விடுவேன். இரவு வரை இங்கு வருகிறவர்களுக்கு ஏதேனும் சேவை செய்வேன். எங்கள் வியட்நாமியர்களுக்கு இந்தக் கோயிலின் மீது பக்தி உண்டே தவிர, இந்தியப் பண்பாடு, கோயில் கலாசாரமெல்லாம் தெரியாது. நான்தான் சொல்லிக் கொடுப்பேன். அதில் ஒரு மனநிறைவு. நான் வியட்நாமில் பிறந்த பெண். கீர்த்தி நல்ல வேலையில் இருக்கிறார். அவரும் இங்கே வந்து சேவைகள் புரிவார்”

விட்டால் இன்னும் பேசியிருப்பார். நான் நான்கு கேள்விகள் கேட்டுப் பெற வேண்டிய பதில்களை நான் ஒரு கேள்வியும் கேட்காதபோதும் அவர் பாடு அடுக்கிக் கொண்டே போனது வித்தியாசமான பாணியாக இருந்தது.

“உங்கள் கணவரும் இன்று வந்திருக்கிறாரா?”

“இங்குதான் இருப்பார். கண்டுபிடித்துத் தருகிறேன்” என்று சொல்லிச் சிரித்தார்.

” ‘அம்மா’வை இன்னும் காணவில்லையே!”

“என்னவோ தெரியிவல்லை. 7.00 ஆனால் டாண் என்று வருவார்கள். இன்று என்ன வேலையோ தெரியவில்லை. நாங்கள் எல்லோரும் அவரைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

“எதற்காக?”

“அவர் வந்ததும்தான் முறையான பூஜைகள் துவங்கும்”

“அப்படியானால் சந்நிதானத்திற்குள் இருப்பவர்?”

“அவர் பெயர் ராமநாதன்”.

“தமிழரா?”

“தமிழரென்றும் சொல்லலாம். அவரது தந்தை தமிழர். வரப்போகிற அம்மாதான் இவரது அம்மா”

இந்தக் கோயில் நிர்வாகத்தையும் வசூலையும் கைப்பற்றப் பெரிய சண்டையே நடக்கிறதாமே, இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும்?”

“ஐயோ! அதையெல்லாம் இங்கு பேசவேண்டாம்!”

“உங்களுக்கு அதைப் பற்றிக் தெரிந்ததை கோயிலுக்கு வெளியிலாவது சொல்வீர்களா?”

“வேண்டாம்! அந்தப் பேச்சை விட்டு விடுங்கள்.”

“நான் ‘அம்மாவைத் தனிப்பட்ட முறையில் பார்க்கணும். பேசணும்”

நான் விவகாரமான ஆள் என்பதை என் கேள்விகளிலிருந்தே புரிந்து கொண்ட இவர்.

“அவுங்க யாரோடையும் பேச மாட்டாங்க. அவுங்களைத் தரிசிக்கலாம்(?!) அவ்வளவுதான். தனிப்பட்ட சந்திப்பு சாத்தியமே இல்லை”

“சரி, அப்படியே இருக்கட்டும். அவங்களோட மகன் ராமநாதனையாவது பார்த்துப் பேச உதவுங்க”

“ஏதாச்சும் கேள்வி கேட்பீங்களா? இப்படி எங்கிட்டக் கேட்ட மாதிரி?”

“மாட்டேன். இரண்டு வார்த்தை பேசணும் போதும்”

‘அவரே இப்பப் பிரசாதம் எடுத்துக்கிட்டு வருவார். நான் அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.”

“அவரோட புகைப்படம் எடுத்துக்கலாமா?”

“விரும்பமாட்டார்னு நெனக்கிறேன். கேட்டுப் பாருங்க எதுக்கும்!”

வந்தாரய்யா ராமநாதன்! பிரசாதத் தட்டுடன் வந்தார்.

பச்சைத் தமிழன் தோற்றான். அச்சு அசலாகக் காரைக்குடி பகுதித் தமிழர் சாயலில் இருந்தார் ராமநாதன். வியட்நாமிய அம்மாவின் சாயல் கலப்புச் சிறிதும் இன்றி அப்பாவை முழுமையாகக் கொண்டிருந்தார்.

பலருக்கும் பிரசாதம் வழங்கவிட்டு எனக்குப் பிரசாதம் வழங்க வந்தார்.

“உங்களுடன் இரண்டு நிமிடம் (இரண்டு வார்த்தை இரண்டு நிமிடம் ஆனது எப்படி?) பேச வேண்டும்”

எந்த வியப்பும் எதிர்ப்பும் முகத்தில் அவர் காட்டவில்லையாதலால் நான் தொடர்ந்தேன்.

“உங்கள் இயற்பெயரே ராமநாதன்தானா?

“இல்லை. வியட்நாமியப் பெயர் ஒன்றும் உண்டு. ரெக்கார்டுகள் எல்லாம் வியட்நாமியப் பெயர். கோயிலுக்குள் நான் ராமநாதன்”

(சரியான ஆளுய்யா நீ)

“இங்கு எங்கு வசிக்கிறீர்கள்?”

“நான் பிரஞ்சுக் குடிமகன். பிரான்சில்தான் வசிக்கிறேன். என் முறை வரும்போது இங்கு வருவேன். என் அம்மா வீடு இங்கு உள்ளது. அங்கு தங்கிக் கொள்வேன்”

“உங்கள் முறை என்றால்? புரியவில்லை!”

“நாங்கள் நான்கு பேர் மாற்றி மாற்றி இருந்து கோயிலைக் கவனித்துக் கொள்வோம்.”

(வாசகர்களே! அதாகப்பட்டது உண்டியல் மற்றும் பூசைத்தட்டு வசூலை)

“என் முறை முடிந்ததும் நான் பிரான்சுக்குத் திரும்பிவிடுவேன்”

“அம்மாவை இன்னும் காணலியே”

“வருகிற நேரம்தான்”

(இதையே ஏழுலேர்ந்து சொல்லிகிட்டிருக்கீங்களேய்யா! மணி ஏழரை ஆகப்போகுதய்யா! இதுலவேற அம்மா படு பங்சுவல்னு வெளியில பேரு!)

“பல பேர் தட்டுகளோட காத்திருக்கிறது அம்மாவுக்குத்தானா?”

“ஆமா அவுங்களுக்கு மட்டும்தான் முறைப்படி பூஜை செய்யத் தெரியும்”

(அப்ப உங்களுக்கு தட்டுல விழுகிற காசு மட்டும்தான் தெரியுமாக்கும்!)

பேசிக் கொண்டிருந்தபோதே கோயிலுக்குள் ஒருவித சலசலப்பும் பரபரப்பும் உண்டானது. ராமநாதன் சொன்னார்! இதோ! அம்மா வந்துட்டாங்க.

‘அம்மா’ விஜயம் பற்றி வரும் வாரம் விளக்குவேன்.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/11/12 கோயில் வருமானத்திற்காகத் துப்பாக்கியால் சுட்டுக் கொள்கிறார்கள்!

2010/11/04 தமிழைத் தொலைச்சுத் தலைமுழுகிட்டீங்களாக்கும்?

2010/10/29 இந்தியர்கள் என்றால் இவர்கள் உஷாராகிவிடுவார்கள்!

2010/10/22 கோயிலுக்குள் குடித்தனம் நடத்தும் வியட்நாமியக் குடும்பம்!

2010/10/15 இந்தாளு இந்தியா திரும்பினாத்தான் நமக்கு நிம்மதி!

2010/10/08 தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!

2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!

2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 3:00 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 19 November 2010

obama-india-visit.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

மயில்வீரன், திருவரங்கம்.

மீண்டும் சட்ட மேலவை அவசியம்தானா?

கூட்டணியில் உள்ள ஓட்டை உடைசல்களை அடைக்க இதுவே சரியான சொல்யூஷன் என்பது கலைஞரின் சொல்யூஷன். ஓட்டைகளைப் அடைக்கும் சொல்யூஷனிலேயே ஓட்டைகளைப் பார்க்கிறீர்களே? நீங்கள் எம்மாம் பெரிய ஆள்?

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்.

சாதியை ஒழித்தால் என்ன?

ஒழிக்கலாம்தான். ஆனால் தாசில்தார்கள் என்னாவது? அரசியல்வாதிகள் என்னாவது? சாதியை ஒழித்தால் இவ்விரு சாதிகளும் திணறிப் போகும்.

ஆ.கமலராஜன், சென்னை-101.

பொறுமை ஆணுக்கு அதிகமா பெண்ணுக்கு அதிகமா?

மனைவியை இழந்த ஆண்கள் அதிக நாள் வாழ்வதில்லை. கணவனை இழந்த பெண்கள் அதிக நாள் வாழ்கிறார்கள். இதுவொரு சர்வே! சர்வேயைச் சொல்லிவிட்டேன். இனி சர்வமும் உங்கள் முடிவுதான்.

எஸ்.பாபுராஜ், மயிலாடுதுறை.

‘வன்னியரை முதல்வராக்குவது என்ற வெறி எனக்குள் வந்தவிட்டது’ என்கிறாரே அன்புமணி?

சந்தைக்கு வராமலேயே ஏலத்தை அதிகரிக்க இப்படியொரு டெக்னிக்கா? அன்புமணிக்கும் தெரிந்துவிட்டது ஆன்லைன் வர்த்தகம்.

எம்.சந்துரு, பெங்களூரு.

நியூசிலாந்து இந்தியாவை மிரட்டிவிட்டதே?

எவரையும் எந்தச் சந்தர்ப்பத்திலும் குறைத்து மதிப்பிடாதே என்பதை தலையில் குட்டிச் சொன்ன அனுபவம் இது!

எஸ்.பி.குமரேசன், திண்டுக்கல்.

கார்கில் வீரர்களுக்கு மும்பையில் வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளது பற்றி?

இறந்தவர் குடும்பத்தோடு இரண்டறக் கலந்தால் அவர்களின் துன்பங்கள் நீங்கலாம் என்று அங்குள்ள அரசியல்வாதிகள் நினைத்திருக்கலாம். அதற்குள் நீங்கள் தவறாய் எடுத்துக் கொண்டீர்கள். இதுக்கு நான் பொறுப்பில்லை.

பி.முருகன், கூடுவாஞ்சேரி.

பேரன்களையும் வளர்த்துவிடும் கலைஞரைப் பற்றி?

அவர் புரோட்டாகால்படி நடக்கிறார். முதலில் மகன்களை வளர்த்தார். இப்போது பேரன்களை வளர்க்கிறார். புரோட்டாகால் பற்றி உங்களுக்குத் தெரியலேன்னா யார் என்ன செய்வது?

ஜி.பாஸ்கரன், மாதவரம்.

இன்றைய தமிழகக் கட்சிகளின் கண்ணாமூச்சி ஆட்டம் எப்படியிருக்கிறது?

கடல் அலையின் துளியாக உள்ள கட்சிகளும் தம்மைக் கடலாகக் காட்டுகின்றன. எல்லாம் தேர்தல் நேரத்துச் சித்து விளையாட்டுகள்.

வெற்றிகொண்டான், திருச்சி-2.

ஜெயலலிதா அடிக்கடி சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்கிறாரே? ஆச்சரியமாக உள்ளது.

சி.பி.ஐ.காரர்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா என்று ஒரு காலத்தில் கேட்டவர் ஜெயலலிதா. மக்கள் மறந்திருக்கலாம். பத்திரிகையாளர்களாகிய நாங்கள் மறக்கமாட்டோம்!

வி.நரேந்திரன், மும்பை.

பால்தாக்கரே தனது பேரனையும் அரசியலில் ஈடுபடுத்துயுள்ளது பற்றி?

மும்பை எப்போது (வட) சென்னையாச்சு? இனி தாக்கரே ஒரு மும்பைக் கலைஞர்தான். கோலிவுட்காரர்கள் இனி கோலி ஆட வேண்டியதுதான்.

கே.ஆறுமுகம், சேலம்.

ஓய்வு பெற்ற ஒரு காவல்துறை அதிகாரியே கஞ்சா செடி வளர்த்திருப்பது பற்றி?

ஓய்வு பெற்றபின் புல்டைம் என்றும் பணியிலிருக்கும் போது பார்ட் டைம் என்றும் இவரது தொழிலை நாம் சந்தேகப்பட வேண்டியுள்ளது.

எம்.முபாரக், சென்னை.

மத்திய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் என்பது என்ன?

இதுவும் ஒருவித இலவசமே. இது உழைக்காதவர்களுக்கான அன்னதானத்திட்டம். அதிகம் உழைக்காமல் சம்பாதிக்க முடிகிற அதிசயத்திட்டம்.

கே.அப்துல்ஹமீது, திருச்சி.

எந்திரன் கதை தன்னுடையது என ஆர்னிகா நாசர் வழக்குத் தொடர்ந்திருக்கிறாரே?

90களிலேயே அறிவியல் கதைகளை அட்டகாசமாகப் படைத்தவர் ஆர்னிகா நாசர். இவர் பக்கம் நியாமிருக்க வாய்ப்பிருக்கிறது. நீதிமன்றம் தீர்ப்பிற்குக் காத்திருப்போம்!

நா.குமார், புதுச்சேரி.

இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டனை தென்னாப்பிரிக்கா பிடுங்கிக் கொள்ளும் போலிருக்கிறதே?

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு இவரது அருமை முன்பே தெரிந்திருப்பதையே இது காட்டுகிறது. ஆர்ஸ்டன் வந்தபிறகு பல வெற்றிகள். ஆர்ஸ்டன் சொந்த மண்ணுக்கு உழைக்கவே விரும்புவார். இனி எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் தங்கமாட்டார்.

தம்பி. சாம்பசிவம், கோவை-1.

அரசு ஊழியர்களுக்கு முக்கியமான தினம் எது?

பணி ஓய்வு பெறும் கடைசி நாள். அன்றுதான் இவர்களுக்கு பணி இடை நீக்க அறிக்கை வருமா வராதா என்பது தெரியும். இவர்களுக்கான மிகப் பெரிய சஸ்பென்ஸ் இதுதான்!

ஆர்.சுரேஷ், மும்பை.

ஒபாமா இந்தியாவைப் புகழ்ந்து தள்ளுகிறாரே?

இந்தியாவை இவரளவிற்குப் புகழ்ந்து தள்ளிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வேறு ஒருவர் இல்லை. அதே நேரத்தில் இவரைப் போல் இந்தியர்களின் வேலைவாய்ப்புகளை கணினிச் சம்பாத்தியங்களைக் கூறுபோட்ட அமெரிக்கத் தலைவரும் இல்லை.

என்.ரரேஷ், செங்கல்பட்டு.

சென்னையில் கடத்தப்பட்ட மாணவனை பணம் கொடுத்துத்தானே மீட்டமுடிந்திருக்கிறது?

பல உயர் அலுவலர்கள் உள்ள பகுதியில் இப்படியொரு கடத்தல். நாற்பது தனிப் படைகளை அமைத்தும் நாற்பத்தோராவது திசைியலிருந்து பணம் பறித்துச் சென்ற கடத்தல்காரர்களைக் காவல் தறையினர் முதலில் கோட்டை விட்டிருக்கிறார்கள். இந்தக் காவல்துறையை நம்பி இன்னமும் கோட்டையில் சிலர்.

ஜே.பாலசுந்தர், கோவிலாம்பாக்கம்.

அ.தி.மு.க.வில் இருந்தாலும் தி.மு.க.வோடு தொடர்பு கொண்டுள்ள அரசியல்வாதிகளைப் பற்றி?

‘புகுந்த வீடு போனாலும் பிறந்த வீட்டில் உரிமையுண்டு’ என்று மும்பை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை இங்குள்ளவர்கள் எப்போதோ அளித்திருக்கிறார்கள். பாவம், கோர்ட்டு! இப்போதுதான் முழித்துக் கொண்டுள்ளது.

டி.சந்திரன், ஆவடி.

விழாக் காலங்களால் மகிழ்வடைபவர்கள் யார்?

நமக்கும் இறைவனுக்கும் நஷ்டம். ஆளுங்கட்சிக் காரர்களுக்கும் ஆம்னி பஸ் புக்கிங்களுக்கும் இலாபம்.

டி.துரைவேலு, மதுராந்தகம்.

சென்னையில் விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளானால் விவசாயம் அவ்வளவுதானா?

சென்னை மாநகராட்சி ஒன்றும் சும்மா இல்லை. அதற்கான மாற்றுத் திட்டங்களாக இங்குள்ள சாலைகளையே அது நாற்று நடுகிற மாதிரிப் பயிர் நிலங்களாக மாற்றிவருகிறது. எங்களுக்கும் இந்தக் கவலையிருக்கு க்கூம்.

ஏ.விஜயன், சென்னை-78.

எட்டாம் வகுப்புப் படித்தவர்களுக்கும் ஓட்டுநர் உரிமமளித்தால்?

இப்போதே கிராஸ்வேர்ட் புஷ்ஷல்ஸ் மாதிரி குறுக்கும் நெடுக்குமாகப் பறக்கிறார்கள். அப்போது என்ன புஷ்ஷல்ஸோ?

12 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 November 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
01 October 2010 ஜூனியர் கேள்வி-பதில்
24 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 2:55 am
Filed under: Uncategorized