வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
தங்கப் போன இடத்தில் ஆடிய தாண்டவம்!
சைகானில் (ஹோசிமின் சிட்டி) நான் போய் இறங்கிய போது எனக்குக் கிடைத்த வரவேற்பு நன்றாக இல்லை.
என்னை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த ஜவஹர் போன்றவர்களைப் பற்றி நான் குறிப்பிடவில்லை.
விமான நிலையத்தில் இறங்கியதுமே நான் மூன்று தும்மல்களைப் போட (சே! அப்போது தானா வந்து தொலைக்க வேண்டும்!) உடனே என்னை உடல்நல அதிகாரிகள் ஓரங்கட்டிவிட்டார்கள்.
என்னை ஏதோ கைதி மாதிரி தள்ளிக் கொண்டு தனியறைக்கு அழைத்துப் போக, ‘ஏன்? ஏன்?’ என்று என் மனம் வினவியபடி இருந்தது.
கேள்வி கேட்டால் டென்ஷனாவார்கள். பிரச்னை செய்வார்கள் என்று முகத்தில் மட்டும் வினாக்குறியோடு அவர்கள் இழுத்த இழுவைக்கெல்லாம் நடந்தேன்.
“ஏதும் பிரச்னையா?” என்றேன். சலிப்பையும் கோபத்தையும் வெிளக்காட்டாமல்!
“உங்களுக்கு H1N1 flue (பன்றிக் காய்ச்சல்) இருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம்.”
“அடப்பாவிகளா? எனக்கா பன்றிக் காய்ச்சல்?” மூன்று தும்மல் போட்டால் பன்றிக் காய்ச்சலா? எச்சரிக்கையாக இருக்க வேண்டியதுதான்! அதற்காக இப்படியா? உங்களுக்குக் கணக்குக் காட்ட நான்தானா கிடைத்தேன்? இது ரொம்ப அநியாயம்! என்று நினைத்துக் கொண்டேன். சொல்லவில்லை. அவாகள் போக்கிற்கு விடாவிட்டால் போலீஸ் அது இது என்று நம்மைப் போட்டுப் பார்த்துவிடுவார்கள் என்பது தெரியும். எனவே என்ன சோதனை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என விட்டுவிட்டேன்.
இரத்தம் எடுத்தார்கள். (அதற்காக இவ்வளவா எடுப்பது?) இருமச் சொன்னார்க்ள. படுக்கச் சொன்னார்கள். மூவர் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். சோதனை செய்தபடி ‘கியமுயா’ பாஷையில் ஏதோ பேசிக் கொண்டார்கள்.
“இரத்தப் பரிசோதனை முடிவு எப்போது தெரியவரும்?”
“மாலைதான்.”
“என்னது? மாலையா? அதுவரையில் விமான நிலைய மருத்துவமனையில் படுக்கையா?”
“வேண்டாம். நீங்கள் தங்கும் விலாசம் தாருங்கள். பாசிட்டிவ் என்றால் உங்களை வந்து அழைத்துக் கொள்வோம்.”
எனக்கு நம்பிக்கை இருந்தது. எனக்கு நிச்சயம் இந்த நோய் இருக்காது என்று. ஆனாலும் குளறுபடி நிகழ வாய்ப்பு இருக்கிறது.
ஊக்க மருந்து சாப்பிடாதவர்களை ஊக்க மருந்து சாப்பிட்டதாகக் கணக்குக் காட்டி விளையாட்டுப் போட்டியில் பங்கு பெறாமல் செய்தவிடுகிறார்கள். எனக்குத் தெரிந்து காச நோய் இல்லாதவருக்குக் காச நோய் இருப்பதாகச் சொல்லி செளதி அரேபியாவுக்குப் போக முடியாமல் செய்துவிட்ட ஒரு விவகாரம் நான் அறிந்து நடந்தது.
இப்படி ஏதும் குளறுபடி நடந்தால்கூட என்னை சைகோனில் இருக்கவிடமாட்டார்கள் தெரியும்.
எனவே இன்று மாலை வரை எல்லாமே பெரிய சஸ்பென்ஸ்தான்.
வெகு நேரம் என்னைத் தாமதமாக்கி என்னை வெளியில் அனுப்பியபோது என்னை வரவேற்க வந்தவர்கள் வெளியில் இருப்பார்களா, புறப்பட்டுப் போயிருப்பார்கள் என்ற தவிப்பு வேறு எனக்கு அதிகமாகியது.
நல்ல வேளையாக இருந்தார்கள்.
என் மாமா, நடராஜன் வசித்த ஊர் இதுதான் அல்லவா? சைகோன் சைகோன் என்று அவர் அடிக்கடி குறிப்பிடும்போதெல்லாம் அது எப்படி இருக்கும் என்று கற்பனை வளத்திற்குள் அடங்காமல் போன ஊர் இதுதானா? இந்த விமான நிலையத்தில்தானே அவர் வந்து இறங்கிப் புறப்பட்டிருப்பார்? அவர் வாழ்ந்த வீடு, அவர் நடத்திய வட்டிக் கடைகள், அவர் வழிபட்ட கோயில் என எல்லாவற்றையும் பார்க்கத்தான் போகிறோமா? என்றெல்லாம் என் மனக்கேள்விகள் படங்களாய் என் மனத்திரைகளாக மாறிப் படர்ந்தபோது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.
எனக்கு நடராஜன் மாமாவை மிகப் பிடிக்கும். அவர் தம் வாழ்நாளின் பெரும்பகுதியை வியட்நாமிலேயே கழித்துவிட்டதால் எப்போதாவதுதான் என்னைப் பார்ப்பார். பார்க்கும்போது அப்படி ஒரு பாசம் பொழிவார். எனவேதான் இந்த உணர்ச்சிப் போராட்டம்.
ஜவஹர் வீட்டில்தான் தங்கிக் கொண்டேன். ஜவஹர் பற்றிச் சொல்லிவிடுகிறேன். கடலூர்க்காரர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் பொறியியல் பயின்றவர். தங்க மெடல் பெற்ற அற்புதமான படிப்பாளி.
வியட்நாமில் குடும்பத்துடன் வசிக்கும் தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காரணம் வியட்நாமில் கல்வி என்பது அவ்வளவு தரமாக இல்லை. தரமான கல்வி வேண்டும் எனில் உலகத் தரத்தில் நடத்தப்படும் பள்ளிகளில் சேர்த்தாக வேண்டும். இதற்குப் பணம் கட்டினால் அவ்வளவுதான். எதுவும் சேமிக்கவே முடியாது. நடைமுறை வாழ்க்கையே திணறும்.
ஜவஹர் குடும்பத்துடன் வசிக்கும் சில தமிழர்களுள் ஒருவர் மனைவி பெயர் பிரியங்கா. மகள் பெயர் அச்சு. (முழுப் பெயர் அர்ச்சனாவாக இருக்குமோ?) மகனின் பெயர் ஆதித்யா (செல்லமாய் ஆதி)
ஜவஹரும் மணி பணிபுரியும் ஸமில் (zamil) ஸ்டீல் நிறுவனத்தில்தான் பணிபுரிகிறார். ஆனால் சைகானில் வேலை.
ஜவகரின் மனைவி பிரியங்காவுக்கு என்னை எங்கே தெரியப் போகிறது என்று பார்த்தால் ஒரு பக்கக் கட்டுரை இரசிகை என்கிறார். பயணக்கட்டுரை இரசிகை என்கிறார்.
“நீங்க ஒரு வி.ஐ.பி! (அப்படீங்களா?) நீங்க எங்க வீட்லயெல்லாம் வந்து தங்குவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. நீங்க வந்து இறங்கியதிலேர்ந்து எனக்குக் கையும் ஓடலை! காலும் ஓடலை! நாங்க ரொம்ப எளிமையா வாழந்துக்கிட்டிருக்கோம் . நான் நல்லா சமைப்பேன். ஆனா நீங்க அதை சாப்பிடப் போறீங்கன்னு நெனக்கிறபோது சமையலே எனக்கு மறந்து போயிட்ட மாதிரி (?!) இருக்கு. எதையாவது தப்பிக் கொட்டிக் கெடுத்து வைச்சிடுவேனோன்னு பயமா இருக்கு. இது செளகரியமான வீடு இல்லை. உங்களுக்கு நிறைய அசெளகரியமா இருக்கும். எங்களுக்காகப் பொறுத்துக்குங்க” என்று பரிவுடன் பேசினார்.
“அதெல்லாம் ஒண்ணும் சொல்லாதீங்கம்மா. நான் சாதாரணமானவன். என்ன போட்டாலும் சாப்பிடுவேன். இந்த வரவேற்பறை
சோபாவிலேயே படுத்துக்குவேன். எல்லாத்துக்கும் சரி செஞ்சுக்கிட்டுப் போயிடுவேன். எனக்கு எந்தப் பெரிய எதிர்பார்ப்பும் இல்லை.”
இதைச் சொல்லி முடித்ததும், பேச்சுத் திசை மாறி, “நாளை எங்கே போக விரும்புகிறீர்கள்?” என்று கேட்ட ஜவஹரிடம் இப்படிச் சொன்னேன்.
“என் மாமா வசித்த இடத்தைப் பார்க்க வேண்டம். அவர் கடை நடத்திய இடத்தைப் பார்க்க வேண்டும்.”
“விலாசம் உள்ளதா?”
“ஊம்! அவர் எழுதிய கடிதங்கள் என்னிடம் உள்ளன. தொட்டால் பொடிப் பொடியாய் ஒடிந்து விழுகிற நிலையில் இருக்கின்றன. இருந்தாலும் விலாசத்தைப் படிக்க முடியும். சொல்கிறேன்.”
“சரி. காலையில் முதல் வேலையா அங்கு போவோம்.”
அன்று இரவு எனக்கும் ஜவஹர் தம்பதிக்கும் இடையே ஒரு தர்மசங்கடமான விவாதம் வந்துவிட்டது. தங்கப் போன இடத்தில் தாண்டவமே ஆடிவிட்டேன் நான்.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/10/01 நாம ரொம்ப மாறனும் சார்!
2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!
2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”
2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!
2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































