வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
நாம ரொம்ப மாறனும் சார்!
கிழக்காசிய நாடுகளில் கிடைக்கும் உணவுகளின் பெரும்பான்மைத் தன்மை என்ன தெரியுமா? ஏகமாய் நாற்றம்தான்!
போச்சு! இங்க வசிக்கும் தமிழர்கள் என்னோடு சண்டைக்கு வரப்போகிறார்கள்.
இந்தோனேசிய உணவு வகைகள் சில நாறுவதைப் பற்றி நான் எழுதப்போக எப்படி நீங்கள் அப்படி எழுதப் போயிற்று என்று இந்தோனேசிய வாழ் தமிழர் ஒருவர் என்னுடன் இணைய தளத்தின்மூலம் சண்டைக்கே வந்துவிட்டார்.
அவரவர்களுககு அவரவர் உணவு வகைகள் வாசனை இரகம்தான். நம் (தமிழர்) உணவு வகைகளை அவர்கள் நாற்றம் எனறு சொல்லலாம் இல்லையா? (அப்படிங்களா?) என்றெல்லாம் என்னை ஒரு பிடிபிடித்தார். வாசகர்களுக்கு என் எழுத்துகளை விமரிசிக்க முழு உரிமை உண்டு. எனவே இதனை ஒரு தகவலாகத்தான் முன்வைக்கிறேன்.
எங்களுக்கு டாக்சி கிடைக்க நேரம் ஆகிக் கொண்டே போக, நிற்கிற இடத்தைச் சுற்றி உள்ள உணவுக் கடைகளின் நாற்றத்தைச் சகித்துக் கொள்ள இல்லாதவனாய்க் துன்புற்றேன்.
“மெல்ல நகர்ந்து வேறு இடம் போய் டாக்சி பிடிக்கலாம் மணி சார்! நாற்றம் குடலை உருவுது என்றேன். என் முகத்தை எட்டுக் கோணலாக ஆக்கிக்கொண்டு.
“புரியுது, புரியுது! எங்களுக்குப் பழகிவிட்டது. உங்களுக்குக் கொஞ்சம் கஷ்டம்தான். இப்பத்தானே வந்து இறங்கியிருக்கீங்க! வாங்க வேறு பக்கம் போவோம்.”
சென்னையில் சிறுசிறு பேனர்களே ஓட்டுபவர்களின் கவனத்தை ஈர்த்து விபத்தை ஏற்படுத்துகின்றன என்கிறார்களே, வியட்நாம் வந்தால் இவர்கள் என்ன சொல்வார்களோ!
இரு சாலைகள் பிரியும் ஒரு முக்கோணப் பிரிவில் மிகப் பெரிய விளம்பரப் பலகையில் கிட்டத்தட்ட ஓர் உலகமாக டெலிவிஷன் போன்ற திரை காட்சியளிக்க அதில் அழகுப் பெண்களின் அணிவகுப்பு வேறு!
ஆனால் இருந்த நேரம் வரை விபத்துக்கூட அல்ல. விபத்து ஏற்பட்டிருக்கலாமோ என்கிற ஒரு சிறு பிசகுகூட ஏற்படவில்லை.
சாலைகளுக்கு விளக்குகளே வேண்டாம் போலிருக்கிறது. இந்த விளம்பரப் பலகைகள் செய்கிற ஜாலங்களே போதும்.
இந்த விளம்பரப் பலகைப் பெண்கள் போதா என்று சாலையில் வேறு சிறு விரச உடை அணிந்து ஜாலம் காட்டும் இளம் பெண்களும் தங்கள் காதல் துணையுடன் வருகிறார்கள்.
காதல் ஜோடிகள் போல் தெரியும் (திரியும்) பெண்கள், பையன்கள், சிற்றுப் பிள்ளைகளாகக் (small built) காட்சியளிக்கிறார்கள்.
இவர்களின் நெருக்கங்கள் கிழங்களையும் கிறங்க வைத்துவிடும்.
இந்த அழகுப் பதுமை எப்படி இந்த சுமாரான பையனிடம் சிக்கியது? இந்த மன்மதன் எப்படி இந்த நான்காம் தரப் பெண்ணிடம் மயங்கினான் என்று கேட்கும்படி பல ஜோடிகள் சம்பந்தா சம்பந்தமின்றி இருந்தது வியப்பாக இருந்தது. காதலுக்குக் கண் இல்லை என்று சொன்னவனின் வாயைச் சர்க்கரையால் நிறைக்கலாம்போல் இருந்து.
எவ்வளவோ கட்டுப்பாடாக இருந்த வியட்நாமிய கலாசாரம் பிரஞ்சுக் கலாசாரத்தின் நுழைவால் மிகவும் மாறி மேற்கத்தியத் தனமாக ஆகி தன் சுயரூபத்தைக் கிட்டத்தட்ட இழந்துவிட்டது. கிராமங்களின் பக்கம் ெச்னறு முழுமையாகப் பாராமல் இப்படி ஒரு தீர்மானத்திற்கு வந்தது தவறாகக்கூட இருக்கலாம்
கிழக்காசிய நாடுகள் பலவற்றில் காணக்கூடிய சாலை அமைதியை ஹனாயில் பார்க்க முடியவில்லை. ஹாரன் ஒலிகள் சமயங்களில் நம் ஊர்களை நினைவுபடுத்துகின்றன. கடுப்பேற்றும்விதமாக ஒலி எழுப்ப வியட்நாமியர்கள் தயங்குவது இல்லை. ஆனால் சாலையில் வாக்குவாதங்களையோ, வீண் சண்டைகளையோ நான் எங்கும் காணவில்லை.
இரண்டு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை தலைசுற்ற வைக்கிறது. கார்களின் எணணிக்கை குறைவாகவும் இவற்றின் எண்ணிக்கை மிக அதிகமாகவும் இருக்கின்றன. வேலைக்குப் போகும் பெண்கள் பெரும்பாலும் ஸ்கூட்டர்கள், மொபெட்களை அதிக அளவில் பயன்படுத்துவதைக் காணமுடிகிறது.
மறுநாள் ஹனாயிலிருந்து புறப்பட்டு ஹோசிமின் சிட்டி என்று இன்று அழைக்கப்படும் சைகோனுக்குப் புறப்பட நான் ஆயுத்தமானேன்.
ஹனாய் விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில்தான் ஸமீல் (zamil) ஸ்டீல் நிறுவனம் இருந்தது. “நான் பணிபுரியும் நிறுவனம் இது” என்றார்.
“மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது” என்று வியந்தேன்.
“மணி சார்! ஒன்றைக் கவனித்தீர்களா? நான் வந்து இறங்கிய நேரம் நான் புறப்படும் நேரத்தைச் சொல்கிறேன்.
“ஆமாம் மிகச் செளகரியமாக இருக்கிறது”
“இது திட்டமிட்டு எடுக்கப்பட்டது. பணிமுடித்து நீங்கள் என்னை அழைத்துக் கொள்ள வசதியாக வந்து இறங்கினேன். நீங்கள் என்னை வழியனுப்பிவிட்டு அலுவலகம் செல்ல வசதியாகப் புறப்படும் விமானத்தைத் தேர்ந்தெடுத்தேன்.”
அப்படியா? நீங்கள் எந்த நேரத்தில் வந்து இறங்கினாலும் புறப்பட்டாலும் நான் வரவேற்கவும் வழியனுப்பவும் முடியும். நாங்கள் அபூர்வமாகத் தானே அலுவலகத்தில் அனுமதி கேட்கிறோம்? அதனால் எங்களை மனப்பூர்வமாக அனுமதிப்பார்கள். இந்த காலை விமானத்திற்காக இப்படி விடிகாலை எழுந்து புறப்பட நேருகிறதே என்று நான்கூட யோசித்தேன்.”
“நீங்கள் இதைப் பெருந்தன்மையோடு சொன்னாலும் எந்த நாட்டிற்குப் போய் இறங்கினாலும் வரவேற்க வழியனுப்ப வருகிறவர்களின் சூழ்நிலையையும் மனத்தில் கொண்டுதான் பயணத்தை அமைப்பேன். பயண முகவர்களின் விருப்பத்திற்கெல்லாம் விடவேமாட்டேன். பயணமுகவரின் மேசையின் எதிரில் போய் அமர்ந்து கொண்டு இருக்கிற விமான நேரங்களையெல்லாம் தாருங்கள் என்று கேட்டு வாங்கி ஊகும் இது வேண்டாம். வழியனுப்ப வருகிறவர்கள் அரைநாள் விடுமுறை எடுக்கிற அளவிற்கு விமான நேரம் இருக்கிறது என்று மாற்றி அமைப்பேன். ஒரு முறை என் பயண முகவர் கோபப்பட்டார். “என்ன சார் நீங்க வரவேற்க வருகிறவர்கள், வழியனுப்ப வருகிறவர்களின் செளகரியத்தையெல்லாம் பார்க்க முடியும்?” என்றார். அதற்கு நான் சமாதானம் சொன்னதும் உண்டு. நம் நாடுகளைப்போல் இல்லை. வெளிநாடுகளில் உள்ள அலுவலகங்களில் வேலை கலாசாரமே (working culture) வேறு. தாமதமாக நுழைவதையும், சீக்கிரம் புறப்படுவதையும் உரிமையாளர்கள் அதிகாரிகள் சற்றும் விரும்புவது இல்லை.”
“உண்மைதான்.”
“அது மட்டுமல்ல விமானத்தில் வந்து இறங்கினால் அவர்பாடு வந்து இறங்கி டாக்சி பிடித்து வீடு வரவேண்டியதுதானே? ஊருக்குப் போகிறார் என்றால் டாக்சி பிடித்துப்போய் விமான நிலையத்தில் இறங்கிக் கொள்ள வேண்டியதுதானே? என்று கேட்காத குறையாய் இத்தகையஅனுமதிகளை நிராகரிப்பார்கள். கணவன் பயணமானல் மனைவியும், மனைவி பயணம் மேற்கொண்டால் கணவனும் வழியனுப்ப போவார்கள். மற்ற உறவுகள் இதைக்கூட எதிர்பார்ப்பது இல்லை. இதுதான் வெளிநாட்டு விமான நிலைய கலாசாரம். நாமோ ஒருவர் வெளிநாடு புறப்பட்டால் ஒரு பெரிய படையே திரண்டு போய் வழியனுப்புகிறது! எவ்வளவு மனித நேரங்கள் வீண்; எவ்வளவு உழைப்பும் பணமும் எரிபொருளும் வீண்” என்று குரலில் சூடேறிய நான் பின் மெல்லச் சம நிலைக்கு வந்து “இப்போது பரவாயில்லை மணி சார். இது மெல்ல உணரப்பட்டுக் குறைந்து வருகிறது.”
ஆமாம். நானும் இதைத்தான் சொல்ல வந்தேன்!”
“நாம வெளிநாட்டுக்காரர்கிட்டே இருந்து இன்னும் நிறையக் கத்துக்கணும்” சம்பிரதாய வார்த்தைகளை நிறைய உதிர்க்காமல் ஒரு பார்வையிலேயே என் கண் இருக்கும் இடத்திற்கு என் இதயத்தைக் கொண்டு வந்து முன்னிறுத்தி “ஹனாய்ப் பயணத்தை மறக்க முடியாததாகப் பண்ணீடீங்க மணி சார்” என்று கரகரத்த குரலில் நன்றி சொன்னேன்.
வியட்நாம் ஏர்லைன்ஸ் அப்படி ஒன்றும் துல்லியமாகக் கிளம்பக் காணோம்.
லாவோஸ்ட் கம்போடியா ஆகிய நாடுகளின் வலப்புறம் கலைத்துப் போடப்பட்ட போர்வைபோல் அமைந்திருப்பதுதான் வியட்நாம் நாடு. அமைப்பால் வால்போன்ற அமைப்பைக் கொண்ட மிக நீளவாக்கில் இதன் பூகோள அமைப்பு உள்ளது. தலைப்பகுதியில் ஹனாய் என்றால் கிட்டத்தட்ட வால் பகுதியில் ஹோசிமின் நகரம்.
எனவே நீண்ட பயணம் மேகமூட்டம் அதிகமாக இருந்ததால், பகல் நேரமாக இருந்தும் விமானத்திலிருந்து வியட்நாமின் அழகை இரசிக்க முடியவில்லை.
ஆனால் மேகங்களின் ஊடே தெரிந்த சில காட்சிகளைக் காண நேர்ந்தபோது இந்த நாட்டின் நீர்வளமும் மலைவளமும் அசத்தலாக இருந்தன. தொடர்ச்சியாக எவ்வளவு மைல்களுக்கு மலைகள்! அடேயப்பா! இங்கெல்லாம் சிறு வீடுகளோ விவசாயம் நடப்பதற்கான அடையாளங்களோ தென்பட வில்லை.
இந்த மலைவளம்தான் அமெரிக்கர்களை எதிர்த்துப் போராடுவதற்கான மறைவுக் களங்களாக வியட்நாமியர்களுக்கு உதவியிருக்கின்றன.
ஹோசிமின் (சைகான்) நகரம் என்னைப் பொறுத்தவரை ஓர் உணர்வு பூர்வமான நகரம். என் மாமா சைகானைப்பற்றிச் சிறு வயதிலேயே நிறையச் சொல்லியிருந்ததால், அதைக் காணப்போகிறோம். மாமா வாழ்ந்த, தொழில் நடத்திய இடங்களைக் காணப்போகிறோம் என்றெல்லாம் நான் எண்ணியபோது பல தரம் கனவு நனவானகப்போகிற மகிழ்ச்சி உள்ளமெல்லாம் நிறைந்து நின்றது.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/09/24 நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!
2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”
2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!
2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































