Friday, 10 Sep 2010
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!
வியட்நாமிற்கான இந்தியத் தூதர் லால் முன்னா சொன்ன சற்றே அதிர்ச்சி செய்தியைச் சொல்லவா?
தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல்வாதி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, “அவருடைய சொத்துக்களே இங்கே இருக்கின்றன. அவரே இந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டபோது நீங்களெல்லாம் என்ன செய்ய முடியும்?” என்றார்.
அடடே! இது மாங்காயின் மீது கல்லெறிகிற முயற்சியல்ல. கல்போனால் போகிறது என்று. இது பாறாங்கல்லின் மீது மண்டைய மோதிக் கொள்கிற செயல். எனவே நம் மண்டைக்குத்தான் சேதம் என்பது புரிந்துவிட்டது.
லால் முன்னா இது முறையான பேட்டி அல்ல என்பதால்தான் சகஜமாகப் பேசிக் கொண்டார். நோட்டுப் புத்தகத்தையும் போனாவையும் கையில் எடுத்துக்கொண்டு டேப் ரெக்கார்டரைக் தட்டிவிட்டிருந்தால் அவர் எவ்வளவு கவனமாகவும் சம்பிரதாயமாகவும் பேசியிருப்பார் என்று என்னால் ஊகம் செய்ய முடிந்தது.
அவர், நீ எப்ப கிளம்புவே என்று உடல் மொழியால் எந்தக் கணத்திலும் எனக்குச் சாடை காட்டாவிட்டாலும் இவ்வளவு விவரமான மனிதரிடம் இன்னும் எவ்வளவு பேசிக்கொண்டிருந்தாலும் விஷயதானம் கிடைக்கும் என்பதை நான் உணர்ந்திருந்தாலும் அவரது பெருந்தன்மை கருதி நானே உரையாடலைச் சுருக்கிக் கொண்டு உங்கள் பொன்னான நேரத்தை நான் மேலும் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று சிறிதாக நாடி பிடித்துப் பார்த்தேன். அவரும் இதை விரும்பினார் என்றே அவரது பிரதிபலிப்புச் சொல்லியது. விடைபெற எழுந்த வேளையில் “நம் சந்திப்பின் நினைவாகச் சில புகைப்படங்களை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்றதும், “தாராளமாக” என்றார். சிறிது நேரம் நான் இயக்குநராகி அவரை விரும்பியபடியெல்லாம் ஆட்டி வைத்தேன். அனைத்திற்கும் இசைத்தது அவரது எளிமையை உணர்த்துவதாக இருந்தது.
சங்கரிடம் விடைபெற்றுப் புறப்பட்டபோது மனப்பூர்வமாக நன்றி சொன்னேன். தூதரின் எளிமையையும் விஷய ஞானத்தையும் பாராட்டிச் சொன்னேன்.
“தூதர் பேசும்விதம் புரிந்துகொள்ள கடினமாக இருந்தது! என்றேன். சிரித்துக் கொண்டார். ‘பாஸ்’ அல்லவா? அதனால் சிரிக்க மட்டுமே முடிந்தது.
“என் மனைவி உங்களைச் சந்திக்க ஆர்வமாக இருக்கிறார். விருந்தன்று அழைத்து வருகிறேன் என்றார்.
“அவசியம்” என்றேன்.
“உங்களின் பயண நோக்கங்களுள் ஒன்று நிறைவேறாமல் போனதில் உங்களுக்கு ஏதும் வருத்தமா? என்றார் மணி.
“என் மாமா குடும்பத்திற்கு என்னாலியன்ற முயற்சி இது. இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது. வியட்நாம் அரசு சொத்துகளை இழந்த இந்தியர்களுக்கு ஏதும் செய்யாது என்பதும் தெளிவாக்கப்பட்டுவிட்டது. கம்யூனிச அரசுகள் நியாயமாக நடந்துகொள்ளும் என்றே எதிர்பார்க்க இயலாது போலிருக்கிறது. அனைவரும் சமம் என்றும் உலகிலேயே உயர்ந்த இசம் என்று தங்களைப் போற்றித் துதித்துக் கொள்ளும் மார்க்ஸிசம் தங்கள் நாட்டு மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொள்ளும் சுயநலப் போக்கைக் கடைப்பிடிப்பது விந்தையிலும் விந்தைதான்.”
எங்கள் உரையாடல் எப்படியோ திசை திரும்பி வியட்நாமியர்களின் உணவுப் பழக்கத்திற்கும் நுழைந்தது.
“உலகில் இருதய நோய், சர்க்கரை ஆகியவற்றில முன்னிலை வகிக்கும் இந்தியர்கள் வியட்நாமியர்களைப் பின்பற்றினால் நல்ல உடல்நலத்திற்கு மாற முடியும்” என்றார் மணி.
“அப்படியா?”
சர்க்கரை நோய், ஹார்ட் அட்டாக் இந்த நாட்டில் மிகக் குறைவு. கடுமையான உடலுழைப்பும் கட்டுப்பாடான உணவுப் பழககமும்தான் காரணம். இயற்கை உணவுகளை காய்கறி, பழங்கள், கீரைகள், மூலிகை உணவுகளை அன்றாட வாழ்வில் சேர்த்து கார்போஹைட்ரேட், கொழுப்புகளைத் தவிர்த்து நீண்ட நாள் வாழ்கிறார்கள். 70கள் 80களில் உள்ளவர்கள்கூட இங்கு பிள்ளைகளை நம்பி வாழாமல் ஏதேனும் ஒரு தெருவோரக் கடையாவது நடத்திக் கொண்டிருப்பார்கள்” என்று சொல்லி என் புருவங்களுக்கும் புன்னகைக்கும் வேலை வைத்தார்.
“இந்திய உணவுக்ள இங்கு கிடைக்குமா?”
“பார்த்தீர்களா? இங்கு வந்தும்கூட இந்தியப் பாணி உணவையே விரும்புகிறீர்கள்?”
அப்படியில்லை மணி சார். ஆர்வத்தில் கேட்டேன். சாப்பிட அல்ல.”
45 உணவகங்கள் ஹனாயில் மட்டும் உள்ளன. “தந்தூர்” என்று ஒரு தொடர் ஓட்டல் மூன்று இடங்களில் வைத்திருக்கிறார் ரவி என்பவர். இவருக்கு வியட்நாமிய மனைவி என்பது பெரிய பலம். இக்கடைகளுக்கு வியட்நாமியர்கள் நிறையப் பேர் வருவார்கள்.”
“ஓகோ!”
இதற்கிடையில் ஒரு புகைப்படக் கடைக்குப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது. என் மின்னணு கேமராவில் இருந்த இடம் முழுக்க புகப்படங்கள் எடுக்கப்பட்டு நிறைந்துவிட்டது. எனவே எடுத்தவரை பிரிண்ட் போடப்பட்டுவிட்டால் புதுப்படங்கள் எடுக்கலாம் என்று முடிவு செய்து மணியிடம் சொன்னேன்.
‘நோ பிராப்ளம்’ என்றாரே தவிர, பெரும் ப்ராப்ளம்தான் புகைப்படக் கடையில் நுழைந்து நான் என் விருப்பத்தைச் சொன்னபோது. அந்த கடையில் இருந்தவர் திருதிரு என முழித்து உள்ளே இருந்தவரை அழைத்தார். கதவைத் திறந்துகொண்டு எங்களை நோக்கி வந்த ஒரு பாப் இளைஞன் என்ன விஷயம் என்றான் ஆங்கிலத்தில். “ஆகா வகையாகச் சிக்கினான்ப்பா ஆங்கிலம் தெரிந்த ஒருவன்” என்று பார்த்தால் அவனாலும் புரிந்து கொள்ள முடியவில்லை நாங்கள் சொல்ல முயன்றதை.
கேமராவைக் காலி செய்து தரும்முன் அனைத்திற்கு ஒரு பிரிண்ட் தேவை. இதைப் புரிய வைக்க நாங்கள் மகாப்பாடுபட்டோம். பார்த்தார் மணி. பொறுமை இழந்தவராய் “எங்களை உள்ளே அனுமதிக்கிறீர்களா? கணினியின் முன் அமர்ந்து நானே செய்து கொள்கிறேன்” என்றார்.
மேலிடம்வரை சென்று அனுமதி பெறப்பட்டதும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனால் வால் போன்ற நீளமான அறையில் நிறையப் பெண்கள் கணினி முன் அமர்ந்தபடி திரையில் புகைப்படங்களுடன் போராடிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு பெண்ணை எழுப்பிவிட்டுவிட்டு மணியே கணினியில் அமர்ந்து பணிபுரிய ஆரம்பித்து பாதிவரை செய்து முடித்து ஜாடையால் இதுதான் ஆக வேண்டும் என்றபோது அந்த பாப் தலையன் தலையில் கையை வைத்துக் கொண்டான். அவனது முகப் பிரதிபலிப்பு எப்படி இருந்து தெரியுமா?
இதைக்கூட எங்களுக்குப் புரிய வைக்கத் தெரியலையே உங்களுக்கு!
இது எப்படி இருக்கு? நாங்கள் அவனிடம் எதிர்பார்த்த பிரதிபலிப்பு என்ன தெரியுமா? இதைக்கூட உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே என்பதுதான்.
படங்கள் மிக நன்றாக வந்திருந்தது ஆறுதலாக இருந்தது. ‘ஒரு சிடியாகவும் போட்டுக் கொடுங்கள்’ என்பதையாவது நன்கு புரிந்துகொண்டு செய்து கொடுத்தார்கள்.
மொழியும், தொழில் நுட்பமும் ஒரு அறையில் பெரும் பலங்கள். வியட்நாமில் தொழில்நுட்பத்தில் காணப்படுகிற வலிமையை மொழியில் காணமுடியவில்லை.
ஆங்கில மொழியில் அவசியம் புரியாமல் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவால் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு ஆங்கிலமும் வெறுப்புப் பட்டியலில் சேர்ந்துவிட்டதோ என்னவோ!
மணி உடன் வராவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்.
உள்ளூர் மனிதர்களின் உதவியின்றி நாமாக ஒரு நாட்டில் சமாளித்து வெளிவருவது ஒரு புதிய அனுபவம் என்றாலும், இவர்களது அறிமுகம் எவ்வளவு பெரிய பலம் என்பதை மேலும் உணர வைத்த சம்பவம் இந்தப் புகைப்பட நிறுவன அனுபவம்.
‘Foods of 45′ என்ற இந்திய உணவகத்தைக் தேடிப் பிடித்து மதிய உணவைச் சாப்பிட அமர்ந்தபோது கிட்டத்தட்ட மாலை ஆகிவிட்டது. நாங்கள்தாம் கடைசி வாடிக்கையாளர் என்பதாலோ என்னவோ ஓர் இந்தியரைக்கூட உணவகத்தில் காண முடியவில்லை. அன்று இரவுதான் ஹனாய்த் தமிழர்கள் தரும் விருந்து ஏற்படாயிருந்தது.
“மணி சார்! என்னைச் சரியாக 7.00 மணிக்கு உணவகத்திற்கு அழைத்துச் சென்றுவிடுங்கள். இங்கும் நான் தாமதமாக வராதவன் என்று பெயர் எடுக்க விரும்புகிறேன்” என்றேன்.
மணி அதற்குப் பதில் சொல்லாமல் ஒரு சிரிப்புச் சிரித்தார்.
அந்தச் சிரிப்பின் பொருள் அன்று இரவு விருந்தின்போதுதான் புரிந்தது.
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
































