Friday, 10 Sep 2010
அக்கறை சார்ந்த கருத்து
இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர், தமிழகத்தின் குறிப்பிடத் தகுந்த கல்வியாளர் பச்சமுத்து அண்மையில் வெளியட்ட கருத்துகள் நம்மைச் சிந்திக்கத் தூண்டுவனவாக இருக்கின்றன.
ஒரு கட்சியின் தலைவராக இருந்தும் பாராளுமன்ற உறுப்பினராகவோ சட்டமன்ற உறுப்பினராகவோ ஆக எனக்கு விருப்பமில்லை என்கிற இவரது தெளிவான பார்வையின்கீழ் இவர் சொல்வதை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.
மகக்ளை முன்னேற்றுவது மட்டுமே எங்கள் கட்சியின் குறிக்கோள் என்பதை மற்ற சில அரசியல்வாதிகளின் பேச்சைப்போல் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இன்றையத் தேர்தல் பணத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது. இது 2011 தேர்தலில் தகர்க்கப்படும் என்கிறார். இவரது நம்பிக்கை நடைமுறைக்கு வந்தால் நாட்டு நலத்தை விரும்புபவர்களுக்கு இதைவிட மகிழ்ச்சி தரும் விஷயம் வேறு இருக்க முடியாது.
பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதீர்கள் என்பதுடன் நேர்மையாளர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்பது இவரது கட்சியின் கோஷமாக இருக்குமாம். சபாஷ்! இந்திய அரசியலுக்கு விடிவு காலம் வரும் என்றால் அதற்கு இத்தகையவர்கள் உழைத்தால்தான் உண்டு.
இலவச மின்சார மோட்டாரெல்லாம் வேண்டாம். இடைவிடாமல் மின்சாரம் கொடுத்தாலே போதும் என்கிற இவரது கருத்து சிந்திக்க வைக்கிறது. தமிழக அரசு போதை பயங்கரத்தைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. டாஸ்மாக் கடைகளின் வருமானத்தைக் கொண்டு அரசின் செயல்பாடுகளைச் சாதிக்க முடியும் என்று நம்புகிறது.
மருத்துவர் ராமதாஸ், மதுக்கடைகளை மூடிவிட்டு மாற்று வருமானங்களைத் தேட முடியும்! இதற்கு நான் நல்ல யோசனைகளை வைத்திருக்கிறேன் என்கிறார். தமிழக அரசு கேளாச் செவியாக இருக்கிறது.
எத்துனையோ இலட்சம் பேர்களின் சீரழிவிலும் குடும்ப அழிவிலும்தான் சில கோடித் தமிழர்களின் வாழ்வு இருக்கிறது என்கிற நிலை டாஸ்மாக் கடைகளால் ஏற்பட்டிருக்கிறது. இது எங்கே போய் முடியும் என்பதைப் பற்றி இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அக்கறைபப்படுகிறார்.
டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட வேண்டும். இலவசங்கள் நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் அடுத்த 10 ஆண்டுகளில் கோமா நிலைக்குச் சென்றுவிடும் என்றும் கணிக்கிறார்.
இது வெறும் அரசியல் சார்ந்த கருத்து அல்ல. அக்கறை சார்ந்த கருத்து. இந்த அறைகூவல்கள் ஆட்சியாளர்களின் செவிப்பறைகளைத் தொட்டு இதய அறைகளை அடையுமா?
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!
2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!
2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்
2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!
2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!
2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!
2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!
2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!
2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்
2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?
2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?
2010/06/18 எது அசல்!? எது போலி?
2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!
2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!
2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?
2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!
2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!
2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?
2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!
2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!
2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!
2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!
2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?
2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?
2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!
2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!
2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!
2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!
2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!
2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?
2009/12/31 அம்புகளை நோவானேன்?
2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!
2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!
2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!
2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!
2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!
2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!
2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!
2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…
2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!
2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!
2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்
2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்
2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!
2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?
2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!
2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?
2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!
2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!
2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!
2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!
2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!
2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!
2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!
2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!
2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்
2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி
2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?
2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!
2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!
2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!
2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!
2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!
2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?
2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!
2009/04/10 தீயினும் கொடியது காமம்!
2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!
2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!
2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?
2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?
2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!
2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!
2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?
2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?
2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?
2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்
2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?
2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…
2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!
2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!
2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!
2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!
2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!
2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!
2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..
2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்
2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?
2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்
2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?
2008/09/05 இருபக்க இடைவெளிகள்!
2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!
2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்
2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!
2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்
2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு
2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!
2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

































August 23rd, 2011 at 9:20 am
ellam sari. america thoodhar tamilargalai kevalamaga ivaradhu s r m kalloriyil pesumbodhu enna seithu kondirundhar. ivaral enna seithu vida mudiyum. jadhi adippadaiyil katchi thuvanga parthu mudiyamal indiya jananayaga katchi endru pari vendhan endra punai peyaril thannudaiya kalloriyai kapatri kolla arasiyal nadathukirar. veru enna thamilarukkaga seithar. anaivarukkum ore kattanam than.