Friday, 3 Sep 2010
வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
வாணனை வண்ணனாக்கிய தூதர்!
வியட்நாமின் தலைநகரான ஹனாயில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தூதரின் முதல் செயலர் சங்கர், எங்கே என்னை என் மாமா நடராஜன் சைகானில் இருந்த சொத்துக்களை மீட்பது பற்றி நீங்கள் பேசக்கூடாது என்று சொல்லிவிடுவாரோ என்று தயங்கிக் கொண்டிருக்க,
சங்கர் குனிந்த பார்வையை மாற்றி என்னைப் பார்த்தபடி பேசினார்.
“நீங்கள் உங்கள் மாமாவின் சொத்துக்களைப் பற்றிப் பேசுவதில் எனக்கு ஒன்றும் தயக்கமில்லை. நேற்று இதைப் பற்றி நான் குறிப்பிட்டுச் சொல்லாததால் அவர் உங்கள் சந்திப்பை ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே கருதிக் கொண்டிருக்கிறார். ஒன்று செய்யுங்கள, வியட்நாமில் இந்தியர்கள் இழந்த சொத்து என்று பொதுவாகப் பேசுவது நல்லது” என்றார்.
சங்கர் சொன்னதும் சரிதான். பொதுவாக அப்படிப் பேசும்போது இந்தியத் தூதர் ஏதும் பிடிப்புக் கொடுத்தால் மாமா விஷயத்தைப் பேசலாம் என்று முடிவிற்கு வந்தேன்.
நானும் மணியும் தூதரால் அழைக்கப்பட்டபோது மணி 3.05.
“நாங்கள் தாமதமாக வந்ததாகத் தூதர் நினைக்கப் போகிறார்” என்றேன் சங்கரிடம்.
“அதற்கு வாய்ப்பு இல்லை. சரியாக 2.58 மணிக்கு நீங்கள் வந்த தகவல் உள்ளே தெரிவிக்கப்பட்டுவிட்டது. அப்போது தூதர் ஒரு வேலையாக இருந்தார். ஐந்து நிமிடம் கழித்து அழைத்து வாருங்கள்” என அவர்தான் சொன்னார்.
“அப்படியானால் சரி.”
என், மணி ஷுக்கள் மரப்படிகளில் நடக்க எங்கள் வேகத்தைக் குறைத்து சத்தத்தை அடக்கினோம்.
சங்கர் எங்கள் முன்னே நடந்து அறைக்குள் அழைக்க, உள்ளே நுழைந்ததும் இருக்கையை விட்டு எழுந்து கைகூப்பி கை குலுக்கி வரவேற்றார் தூதர்.
“வாருங்கள்அஙகே உட்கார்ந்து பேசுவோம்” என்றார். நம் இருக்கையில் அமர்ந்து தூதர் தோரணியில் பேசாமல் நட்பு ரீதியால் அந்த மிகப் பெரிய அறையின் பக்கவாட்டில் இருந்த சோபாவுக்கு வந்தது அவரது எளிமையைச் சொன்னது.
என் ஊகம் ஒன்றைச் சொல்கிறேன். சரியா என்று உறுதி செய்யுங்கள். தூதருக்கான இருக்கையில் அமர்ந்து பேசினால் வந்த வேலையை முடித்து விட்டுப் புறப்படுங்கள் என்று மிரட்டுவதாக அர்த்தம்.
எதிரே உள்ள சோபாக்களுக்கு வந்துவிட்டால் நீங்கள் இருக்க விரும்பும் வரை இருந்துவிட்டுப் போங்கள் என்று அர்த்தம்.
அளவான சிரிப்பு மென்மையான ஒரு கைகுலுக்கல் கண்ணியமான தோற்றம். தூதரின் இந்த விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.
இந்தியத் தூதர் லால் முன்னாவிடம் ஒரே ஒரு கஷ்டம் என்ன என்றால் அவர் பேசுகிற ஆங்கிலம் எனக்கு அவ்வளவாகப் பிடிபடவே இல்லை. மிகவும் மெதுவாகவே பேசுகிறார். பாதி கேட்கவில்லை. கால்வாசி புரியவில்லை. ஒருசில வார்த்தைகளை வைத்து அவர் இன்னது பற்றிப் பேசுகிறார் என்பது பிடிபடுகிறதே தவிர, ஒருவித ஊகம் அனுமானத்தோடு, நான் அவர் பேசுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் புரிந்தவரைக்கும் சொல்கிறேன். முன்னா இந்தப் பதவிக்கு மிகக் தகுதியானவர்தான்.
நான் முழுக்கத் தமிழ் பயின்று வளர்ந்தவன். ஆங்கிலம் எனக்கு இரண்டாவது பாடமே.
ஆனால் நான் தூதரிடம் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவது கண்டு சங்கரும் மணியும் சற்றே வியந்து போனார்கள்.
சங்கர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லையே தவிர, மணி, வெளியே வந்ததும் “என்ன லேனா சார்! ஒங்க கிட்டப் பேசும்போது ஆங்கிலம் படிக்காதவர் போலத் தூய தமிழ் பேசறீங்க! தூதரைப் பார்த்ததும் ஆங்கிலத்துல பொளந்து கட்டுறீங்க. ஆங்கில மீடியமா நீங்க?” என்றார்.
“இல்லையில்ல! நிறையப் பயணம் செய்யுறதால சற்று முயற்சி எடுத்துக் கொண்டேன். ஆங்கில இதழ்களைப் படிப்பேன். ஆங்கிலச் செய்திகளைக் கேட்பேன். எல்லாத்தையும் விட என் ஆங்கிலத்தை வளர்த்தது என் கிரிக்கெட் கமெண்ட்ரிக் கேட்கும் ஆர்வம்தான்.”
வாசகர்களே! தேவையில்லாமல் உங்களைத் தூதர் அறையிலிருந்து வெளியே அழைத்து வந்தவிட்டேன். வாருங்கள், வாருங்கள் நாம் தூதர் அறைக்குள் மறுபடி போவோம்.
லால் முன்னாவுக்குத் தெரியாத விஷயமே இல்லை போலிருக்கிறது. வியட்நாம் போராகாட்டும், இதன் விளைவாக இந்தியவர்களுக்கு ஏற்பட்ட கதியாகட்டும். இந்தியா விவகாரங்களாகட்டும் அனைத்தும் வருட வாரியாக அத்துப்படி.
மெல்ல நான் சேட்டையை ஆரம்பித்தேன்.
என்ன இருந்தாலும் இந்தியாவுடன் அதிக நட்புக் கொண்டிருந்த வியட்நாம் இங்கே இருந்த இந்தியர்களை இந்தியாவுக்கு விரட்டியது நியாயமில்லை. அதுவும் சொத்துக்களைப் பறித்துக்கொண்டு என்று குற்றச்சாட்டாகவே ஆரம்பித்தேன்.
என் இருக்கையில் வேறு ஒருவர் இருந்திருந்தால் தூதரின் பதில் வேறாக இருந்திருக்கமோ என்னவோ! நான் பத்திரிகைத் துறையிலிருந்து வருகிறேன் என்பதாலோ என்னவோ பொறுப்புடன் பேசினார்.
“அப்படியில்லை மிஸ்டர் தமிழ்வண்ணன்! (ஐயகோ!) இங்கேயே துணிவாக தங்கிவிட்ட இந்திய வம்சா வழியினருக்கு வியட்நாம் அரசு பிரஞ்சுக் குடியுரிமை வாங்கிக் தந்திருக்கிறது. போர்க் காலத்தில் வேண்டாம் இந்த விஷப் பரீட்சை என்று தாய்நாடு திரும்பிவிட்ட இந்தியர்களின் சொத்துகளைத்தான் அரசு எடுத்துக் கொண்டது. அதுவும் தனக்கு என வைத்துக் கொள்ளாமல் வியட்நாம் போரில் கணவர்களை இழந்தவர்களுக்கும் மனைவிகளை இழந்தவர்களுக்கும் அச்சொத்துக்களை உரிமையாக்கிக் கொடுத்துவிட்டது.
“அத்தகைய இந்தியர்களின் வாரிசுகள் தகுந்த ஆதாரங்களுடன் வந்தால் அந்தச் சொத்துகளை வியட்நாம் அரசு மீட்டுத் தருமா?”
“அது கடினமில்லையா? எல்லாம் முடிந்துவிட்டது. உங்களுக்கு ஓர் உண்மை சொல்லட்டுமா? அமெரிக்கர்களுக்கு உரிமை உடைய வியட்நாமியர் சொத்துக்களையே அமெரிக்கர்களால் மீட்க முடியவில்லை. தக்க ஆதாரங்களுடன் நம்மவர்கள் வந்தால் அதே சொத்துக்களை மீட்க முடியாது என்றாலும் அதற்கு இணையாகத் தங்கம் தர நடவடிக்கை எடுத்துக் கொள்ள முடியும்.
“உண்மையாகவா?”
“ஆமாம். வியட்நாம் அரசை ஒரு தலைப்பட்சமான அரசு என எண்ணாதீர்கள். இங்கும் நியாயங்கள் எடுபடும்.
என் மாமாவின் சொத்துக்களை மீட்க முடியுமா என்தற்கு இவர் சொன்னதில் மறைமுகமான பதில் அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆனால் என் மாமாவின் வாரிசுகளிடம் சில கடிதப் போக்கவரத்துகளும் சில வீட்டு வரி இரசீதுகளுமே இருந்தனவே அன்றி சொத்து உரிமத்திற்கான பத்திரங்கள் ஏதும் இல்லை. காரணம் மாமா இந்தியாவிற்கு வந்து தன் சிகிச்சையை முடித்துக் கொண்டு வியட்நாம் திரும்ப எண்ணியிருந்ததால் அவர் பத்திரங்கள் எதையும் இந்தியாவுக்கு எடுத்துவரவில்லை. அங்கேயே விட்டுவிட்டு வந்ததால், சொத்துகளை ஆக்கிமித்த வியட்நாமியர் குடும்பங்கள் நிச்சயம் பத்திரங்களை துவம்சம் செய்திருப்பார்கள் என்பது தெரியும்.
நீங்கள் மற்ற விஷயங்களைவிடஇந்த விஷயத்தைப்பற்றி அதிகம் அக்கறை காட்டுவதால் உங்கள் உறவினர் எவரேனும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என ஊகிக்கிறேன்.” (யப்பா சாமி!)
“உண்மைதான். (இதைப் பற்றிப் பேச அவரே உரிமம் தந்துவட்டார்!) பாதிக்கப்பட்டவர் என் மாமா.”
கையிலிருந்த ஆதாரங்களைத் தூதரிடம் காட்டலாமா? வேண்டாம். இதற்காகவே நான் சந்திக்க வந்ததாகச் சரியாக ஊகித்து விடுவார் இந்த கற்பூர மூளை முன்னா. எனவே இது அறிமுகச் சந்திப்பாக இருக்கட்டும் என்று அடக்கி வாசித்தேன்.
இந்தத் தலைப்பில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது இந்தியத் தூதர் ஒரு பெருமைப்படும்படியான விஷயத்தையும் ஒரு சிறு அதிர்ச்சி தரும்படியான விஷயத்தையும் சொன்னார்.
ஆச்சரியப்படும்படியான செய்தி என்ன தெரியுமா? “இந்தியர்களிலேயே தூரக் கிழக்கு நாடுகளுக்குக் கடலில் பயணித்துப் போர்களை நடத்தியும் தொழில்களை நடத்தியும் சாதித்தவர்கள் தமிழர்களே” என்றார்.
பெருமையின் பூரிப்பில் பெருமிதக் கண்ணீரே வெளிப்பட்டுவிட்டது.
இரண்டாவதாக அவர் சொன்ன சற்றே அதிர்ச்சிச் செய்தி”
வரும் வாரம் சொல்கிறேனே!
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை
2010/08/20 எழுச்சி நாயகன் உருவான கதை!
2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!
2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!
2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!
2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!
2010/07/16 “நான் ரஜினியைப் போல”!
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
































