 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
ஐவண்ணம், போரூர்.
|
 |
குழந்தை பெற்றுக் கொள்ளாமல இருப்பதே மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற என் கருத்து பற்றி?
|
 |
உங்களுக்கு நான் வக்காலத்து வர மாட்டேன். நாளைக்கு நம்மை முதியோர் இல்லத்தில் சேர்த்தாலும் இன்றைக்கு ஷோகேஸ் மாதிரி இருக்கும் வீட்டிற்குத் சொந்தம் கொண்டாடி ஒரு ‘ஷோகாஸ்’ வராதபடிக்கு ஒரு பிள்ளையாவது நமக்கு வேண்டும்.
|
|
 |
என்.குமாரவேல், திண்டுக்கல்.
|
 |
அழகிப் போட்டியை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
|
 |
ஆப்பிளைச் சாப்பிட்ட போதுதான் ஏவாளுக்கே மானத்தைப் பற்றித் தெரிய வந்ததாம். நமது அழகிகள் ஒரு ஆப்பிள் கூடவா சாப்பிட்டு இருக்க மாட்டார்கள்.
|
|
 |
சி.ராமதாஸ், தஞ்சாவூர்.
|
 |
டாஸ்மாக் சரக்கில் தண்ணீர் கலந்து விற்கிறார்களாமே?
|
 |
தண்ணிக்குள் தண்ணீரா? தமிழன் முதல் முறையாகத் தமிழனுக்கு நன்மை செய்ய ஆரம்பித்திருக்கிறான். வரவேற்கிறேன்.
|
|
 |
கே.கிருஷ்ணன், தூத்துக்குடி.
|
 |
தமிழக மின் கட்டண உயர்வால் பாதிப்பில்லை என்கிறாரே கலைஞர்?
|
 |
அரசியல் விழாக்களுக்குக் கொக்கி போடாமல் இருந்தாலே இந்த கொக்கி தேவைப்படாது. அவ்வளவு மின் திருட்டு. அதனால்தான் இந்த வாரியத்தில் அவ்வளவு இருட்டு.
|
|
 |
எம்.சேகர், உடுமலை.
|
 |
நமது எம்.பி.க்களின் சம்பளம் பல மடங்காகக் கூடிப் போயிருக்கிறதே?
|
 |
இப்போதே அவர்களை சென்னை பிர்லா கோளரங்கத்திலுள்ள டெலஸ்கோப் மூலம் பார்க்க வேண்டியிருக்கு. இனி அவர்களைப் பார்ப்பது மகாக் கடினம்தான்.
|
|
 |
ஆத்மநாதன், சென்னை.
|
 |
விலைவாசிகள் எப்படியிருக்கு?
|
 |
அது பற்றிப் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு யார் கவலைப்பட்டார்கள்? செம்மொழி மாநாட்டுக்குப் பின் தமிழக மக்கள் தேவர்களாகிவிட்டார்கள். அவர்களுக்கு இப்போது பசியென்பது இல்லை.
|
|
 |
எஸ்.சரவணன், மதுராந்தகம்.
|
 |
உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.?
|
 |
இவர் விஷயத்தில் ஆப்பு அசைத்த குரங்காகிவிட்டது அரசு! திருடனுக்கு தேள் கொட்டின கதை என்பார்களே, அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது. உமாசங்கர் ஒர் அரிய அதிகாரி. இவரது அருமையை இந்த மண் உணரவில்லை.
|
|
 |
எம்.சூர்யா, சென்னை-72.
|
 |
உங்களுக்கு சுய விளம்பரம் பிடிக்குமா?
|
 |
பிடிக்கும். இங்குள்ள சில தலைவர்களைப் போல அல்ல. அந்த சில தலைவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள். தூக்கத்திலும் சிவபுராணம் மாதிரி அவர்கள் சுயபுராணம் படிக்கிறார்கள். எனக்கு சிவபுராணமே வராது; அப்புறமல்லவா சுயபுராணம்?
|
|
 |
ஏ.இளங்கோ, விழுப்புரம்.
|
 |
அரசு ஊழியர்களின் வாரிசுகள் தமிழில் படிக்கச் சட்டம் இயற்ற வேண்டும் என்கிறாரே ராமகோபாலன்?
|
 |
முன்பு சமயவாதிகள்தான் தமிழை வளர்த்தார்கள். அப்படி இவரும் வளர்க்கலாம். ஒருவேளை அமைச்சர்களின் வாரிசுகளைச் சொல்கிறாரா? இவர்களும் அரசு ஊழியர்கள்தானே?
|
|
 |
எஸ்.அறிவழகன், பம்மல்.
|
 |
பெங்களூருவின் விதான் செளதாவைக் கண்டு வியந்தது உண்டா?
|
 |
உண்டு. ஆனால் இப்போது அது சட்டசபையல்ல. போனமாதமே அது போர்டிங் அண்ட் லாட்ஜிங்காகிவிட்டது. பேசாமல் அதன் பெயரை உடுப்பி செளதா என்றோ அல்லது விதான் கபே என்றோ பெயர் மாற்றம் செய்யலாம். பொருத்தமாக இருக்கும்.
|
|
 |
என்.மகாலிங்கம், பாளையங்கோட்டை.
|
 |
இந்தியா வல்லரசாகுமா?
|
 |
இப்போதே தாதாக்கள் ஆட்சிதான் பல மாநிலங்களிலும் இருக்கு. எனவே இந்தியா ஒரு நல்லரசாக வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம்! அதுதான் இன்றையத் தேவை.
|
|
 |
எஸ்.சதீஷ், திருமங்கலம்.
|
 |
வக்கீல் தொழிலில் இன்று சிவில் நல்லதா? கிரிமினல் நல்லதா?
|
 |
சிவிலோ, கிரிமினலோ இரண்டிலும் வாய்தாதான் நல்லது. வாய்தா வக்கீல்களுக்குத்தான் இன்று வாழ்க்கை பிரகாசமாக இருக்கு.
|
|
 |
இ.செல்வராஜ், திண்டுக்கல்.
|
 |
அரசியல் கட்சிகள் எப்போதும் ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டேயிருப்பது ஏன்?
|
 |
அவர்களுக்கான அடையாள அட்டைகளே இந்த ஆர்ப்பாட்டங்கள்தான். இந்த அட்டைகள் மட்டும் தொலைத்தால் அவர்களை மக்கள் மறந்துவிடுவார்களாம். இது தி.மு.க. கண்டுபிடிக்க ஃபார்முலா!
|
|
 |
ஜே. ரகு, பனப்பாக்கம்.
|
 |
உங்களுக்கு மொட்டைக் கடிதங்கள் வருவதுண்டா?
|
 |
கலகண்டிற்குத் திருப்பதியில் வாசகர்கள் உண்டு. ஆனால் திருப்பதி வாசகர்கள் எனக்கு எவருமில்லை!
|
|
 |
ஆர்.ஜோதி, திருத்தணி.
|
 |
கவலை இல்லாத மனிதன் யார்?
|
 |
இலவச டி.வி. இலவச கியாஸ், இலவச அடுப்பு, இலவச அரிசி வைத்திருப்பவர்களுக்குக் கவலை இல்லை என நினைத்திருந்தேன். ஆனால் அவர்களுக்கும் கவலை இருக்கு. இலவச புடவை, இலவச வேட்டி எப்போது வருமென்று கேட்கிறார்கள்?
|
|
 |
ஆர்.ரவி, அசோக் நகர்.
|
 |
டாஸ்மாக் பணியாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து சாதித்துவிட்டார்களே?
|
 |
யானைப் பசிக்குச் சோளப் பொறி! பாஸ்மாக்குக்குப் பாஸ் மார்க் கிடைக்கலை. பெயிலாகிவிட்டார்கள். அரசு பாஸாகிவிட்டது.
|
|
 |
ஆர்.ராகவன், சென்னை-92.
|
 |
சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பழைய கோட்டையிலேயே நடத்தப்பட்டது ஏன்?
|
 |
என்ன இருந்தாலும் அந்த வெள்ளைக்காரன் கட்டடம்தான் கம்பீரமாய் இருக்கு. நமக்கு புதிய கட்டடம் எதற்கு? அணு உலை மாதிரி இருக்கு. அணு உலைக்கு எதிரில் அணிவகுப்பு நடத்தினால் நன்றாய் இருக்காது.
|
|
 |
ஜி.சுந்தர், வேலூர்.
|
 |
மனைவியை ஒரு சிலர் திட்டமாட்டேன்கிறார்களே?
|
 |
அவர்கள் (திட்டுவதை) நிறுத்தினால்தான் இவர்கள் தொடர முடியும்? அவர்கள் தொடர்ந்தபடி இருக்கிறார்களே!
|
|
 |
கே.சந்தானம், பல்லாவரம்.
|
 |
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.விற்கு எத்தனை சீட்டுகள் கிடைக்கும்?
|
 |
பிள்ளையாருக்கே பொரி கடலை கேள்விக்குறி! அதற்குள் புகாரியின் பூரிக்கிழங்குக்குப் போய்விட்டீர்களே!
|
|
 |
எம்.முத்து, திருவண்ணாமலை.
|
 |
அ.தி.மு.க. மிகச் சிறிய கட்சிகளையும் இப்போது அணைத்துச் செல்கிறதே?
|
 |
அ.தி.மு.க.விற்கு கட்ட பழங்களும் இப்போது தேவைப்படுகின்றன. அதனால்தான் மண்ணில் விழுந்த பழங்களையும் அது எடுத்து எடுத்து ஊதிச் சாப்பிடுகிறது.
|
|
 |
வி.செந்தில்நாதன், மேட்டுப்பாளையம்.
|
 |
தலைமைச் செயலக ரேஷன் கடையில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாமே?
|
 |
அடடே! பாட்டில்களும் இப்போது அத்தியாவசியப் பண்டமாகிவிட்டன போலும்!
|
|
 |
எம்.அஜீத், கடலூர்.
|
 |
மருத்துவக் கல்லூரிகளில் நுழைந்து பெயர் கெடாமல் பேசிவிட்டு வரமுடியுமா?
|
 |
மனக்காயங்கள்கூட இல்லாமலா? கடினம்தான்! காயங்களும் மருந்து இடவேண்டிய இடத்திலா இப்படி?
|
|
 |
எஸ்.பிரபா, சென்னை-6.
|
 |
காங்கிரசாரின் இப்போதைய யோசனை?
|
 |
வாலி யாரோடு சேர்த்தாலும் சேர்கிறவர்கள் பலத்தில் பாதி பலம் வாலிக்கு வந்துவிடுமாமம். அந்த வகையில் இவர்கள் கனவெல்லாம் இப்போது நாங்கள் ஒரு இராமாயண வாலியாக வேண்டும் என்பது.
|
|
 |
|
|