» 2010 » September .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Healthy life

Posted on Friday 24 September 2010

gingerகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் கே.எஸ்.சுப்பிரமணி

உடம்பு வலியைக் குணப்படுத்தும் இஞ்சி

சீன உணவுகளைப் பலரும் விரும்பிச் சாப்பிடுவதற்கு மிக முக்கியமான காரணம், அவர்களின் எல்லா வகை உணவுகளிலும் தவறாது இடம்பெறும் வெள்ளைப் பூண்டும், இஞ்சியும்தான்.

சீனாவில் குழந்தைகள் அதிகம் பிறப்பதற்கும் இஞ்சியே முதல் காரணம்! இஞ்சியில் சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டும் பொருள் அதிகமாய் இருக்கிறது.

இது மட்டுமின்றி, இதயநோய்கள், வயிற்றுப்பொருமல், உணவு செரியாமை, கடும் வயிற்றுவலி, இசிப்பு, மலட்டுத் தன்மை, உடம்பு எரிச்சல், முடக்குவாதம், சளி, மேகநோய், மாதவிடாய்க் கோளாறு, ஜலதோஷம் முதலியவற்றைப் பூரணமாகக் குணப்படுத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பிய மூலிகையாகவும் இஞ்சிக் கிழங்கு திகழ்கிறது.

இஞ்சி பறித்த காய்கறி போலவும், உலர்ந்த வற்றல் போலவும் கிடைக்கிறது. இவ்விரண்டிலும் சக்திமிக்க மருத்துவக் குணங்கள் மாறாமல் உள்ளன. உலர்ந்த இஞ்சிதான் சுக்கு!

உணவு செரிக்க எளிய வழி!
செரிமானக் கோளாறு உள்ளவர்கள் உணவு சாப்பிட்டதும் பறித்த (உலராத) ஒரு இஞ்சித் துண்டை வாயில் போட்டு மெல்ல வேண்டும். கடும் வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், வாந்தி முதலியவற்றால் அவதிப்படுகிறவர்களும் இதே போல் ஒரு சிறு துண்டை மென்று தின்றால் போதும். இது வயிற்றையும், குடல் பகுதிகளையும் நன்கு பாதுகாக்கிறது. இந்தப் பகுதிகளில் வலி இருந்தாலும் உடனே குணமாகி விடுகிறது. சாப்பிட்ட உணவும் செரிமானம் ஆகிறது. வாந்தி ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.

இப்படிச் சாப்பிடப்படும் சிறு துண்டு உடனே நன்கு உமிழ் நீரைச் சுரக்கச்செய்கிறது. அதன்மூலம் உணவு செரிமானத்துக்கு இன்றியமையாதது பயன்பரும் காடிப் பொருளையும், ஒரு வகையான எண்ணெயையும் உற்பத்தி செய்கிறது. இதனால் உணவு உடனடியாக ஜீரணமாகிறது.

அசைவ உணவு, பொரியல் வகைகள் ஆகியவை அதிகமாய்ச் சாப்பிட்டால் இது போல் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடவும்.

இல்லையெனில், உலராத இஞ்சியை ரசமாக்கி அரை தேக்கரண்டி மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த ரசத்துடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் ரசம், ஒரு தேக்கரண்டி புதினா இரசம், ஒரு தேக்கரண்டி தேன் முதலியவற்றைக் கலந்து அருந்தினால் போதும்.

காலை நேரத்தில் காய்ச்சலா?
காலை நேரத்தில் காய்ச்சலால் அவதிப்படுபவர்களும், மஞ்சள் காமாலை, மூலத்தொந்தரவு, வாந்தி, பித்தக் கோளறு ஆகியன உள்ளவர்களும், காய்ச்சல் ஏற்படுவது போல் உணர்பவர்களும் மேற்கண்ட முறையில் ஒவ்வொரு முறையும் அவ்வப்போதே தயாரித்துத் தினமும் மூன்று வேளை வீதம் அருந்தி வரவேண்டும் இஞ்சி, தேன், புதினா, எலுமிச்சை ஆகியவை கலந்த இந்த டானிக் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாமல் முன்னரே தடுக்கும் சக்தி வாய்ந்த மருந்தும் ஆகும். உலராத இஞ்சிக்குப் பதிலாக சுக்குப் பொடியையும் பயன்படுத்தலாம்.

உடனே காய்ச்சல் தணிய…
ஆஸ்துமா, நுரையீரலில் காசம், கக்குவான் இருமல், மார்புச்சளி, கடுமையான காய்ச்சல் முதலியவை குணமாக ஒரு தேக்கரண்டி இஞ்சி இரசத்தை ஒரு டம்ளர் வெந்தயக் கஷாயத்தில் கலக்கவும். சுவைக்காக ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தவும், இன்புளுன்சா காய்ச்சல்காரர்களுக்கு இஞ்சி சேர்க்கப்பட்ட இந்தக் கஷாயம் உடனடியாக உடலை வியர்க்கச்செய்து காய்ச்சலின் வேகத்தை மட்டுப்படுத்திவிடுகிறது.

குழந்தை வேண்டுமா?
தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வமில்லாதவர்களுக்கு இது புத்துணர்ச்சியை ஏற்படுத்தித் தரும். மலட்டுத் தன்மை, விந்து முன் கூட்டியே வெளிப்படுதல், மேக நோய் போன்றனவும் உடனே குணமாகும். ‘ஆண்மை’ இல்லாதவன் என்று ஒதுக்கப்பட்ட ஆண்கள் இரவு படுக்கும் முன்பு அரைத்தேக்கரண்டி இஞ்சி இரசத்தையும், ஒரு தேக்கரண்டி தேனையும் அடுத்தடுத்து சாப்பிடவும், மூன்றாவதாக அவித்த கோழிமுட்டையில் பாதி சாப்பிடவும். இதனால் தாது பலம் பெறுவார்கள். தொடர்ந்து ஒரு மாதம் இதே போல் இரவில் சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும்.

ஜலதோஷம் உடனடி நிவாரணம்
ஜலதோஷம் குணமாக, இஞ்சியை சிறுசிறு துண்டுகாய் நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைக்கவும். பிறகு அதை வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் காபி சாப்பிடுவது போல சூடாகவே அருந்த வேண்டும்.

சுக்குப் பொடிகூட போதும் தேநீர் தயாரிக்க!
ஜலதோஷம் தொடர்பான காய்ச்சலும், ஜலதோஷமும் குணமாக இஞ்சித்தேநீர் தயாரித்து அருந்த வேண்டும். முதலில் இஞ்சித் துண்டுகளை கொதிக்கும் தண்ணீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து டீத்தூளை இந்தக் கலவையில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பால், சர்க்கரை ஆகியன சேர்த்து அருந்தவேண்டும்.

இருமலா?
இஞ்சித் துண்டை ரசமாக்கி, அதில் தேன் கலந்து தினமும் நான்கு வேளை அருந்தினால் எப்படிப்பட்ட இருமலும் உடனே கட்டுப்படும். ஒரு வேளைக்கு இரண்டு மூன்று துண்டுகளை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் இரசமாக்கி வடிகட்டி, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்த வேண்டும். ஒவ்வொரு வேளையும் இதே போல் தயாரித்து உடனுக்குடன் அருந்தி வர வேண்டும். இருமலுக்கும் ஜலதோஷத்துக்கும் இஞ்சியைப் போல் சிறந்த மருந்து இல்லை என்பார்களே மூலிகை மருத்துவர்கள்.

இஞ்சிக் காபி அருந்தலாமா?
அதிகமான அல்லது மட்டமான மாதவிடாய்ப் போக்கு உள்ள பெண்கள், உலராத பச்சையான இஞ்சியைத் தோல் உரிந்து இடித்துப் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும். இதற்கு ஒரே ஒரு சிறிய இஞ்சித்துண்டு போதும். ஒரு டம்ளர் கொதிக்கும் தண்ணீரில் இந்தப் பொடியைப் போடவும். 5 நிமிடங்கள் கழித்து இறக்கி, வடிகட்டி அருந்த வேண்டும். தேவை எனில் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். காபி போல சுவையாகவும் இருக்கும். மாதவிடாய்க் கோளாறுகள் அனைத்தையும் குணமாக்கும். ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அந்தந்த வேளைச் சாப்பாட்டிற்கு பிறகு இந்தச் சூடான இஞ்சி காபியை அருந்த வேண்டும். இந்தியாவின் சில பகுதிகளில், இஸ்லாமிய பெண்கள் இந்த முறையைப் பின்பற்றி பலனடைந்துள்ளார்க்ள.

தலைவலி உடனே குணமாக!
உலர்ந்த இஞ்சியைச் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, அந்தப்பசையை நெற்றியில் தடவ உடனே தலைவலி குணமாகும். பல் வலி என்றால் அந்த இடத்துக்கு மேலே முகத்தில் இந்தப் பசைையைத் தடவ வேண்டும்.

காது வலி என்றால், இஞ்சிச்சாற்றில் ஒன்று அல்லது இரண்டு துளிகளைக் காதுக்குள விட வேண்டும்.

எல்லா விதமான உடல் வலிகளையும் இஞ்சி குணமாக்கும். முதுகு வலி, இடுப்பு வலி என்றால் அந்தந்த இடங்களில் இஞ்சிப் பசையை அழுத்தி தடவினால் போதும்.

இதய நோய்களைக் குணப்படுத்தும் சுக்கு!
இதயத்தில் வலி, இதய பலவீனம், இதயப்படபடப்பு முதலியவை குணமாக இருபது கிராம் இஞ்சியை நன்கு கழுவி மிக்ஸி மூலம் ரசமாக்கி ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சாற்றில் இரு தேக்கரண்டி தேன் சேர்த்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இந்த முறையில் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் இதய சம்பந்தமான கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

உலர்ந்த இஞ்சியைத்தான் சுக்கு என்கிறோம். ஒரு தேக்கரண்டி சுக்குத்தூளை இதே போல் ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து, அருந்தினாலும் இதய வலி, பலவீனம், படபடப்பு முதலியவை குணமாகும்.

நீரிழிவு நோய்க்காரர்கள் இஞ்சிச் சாற்றிலோ சுக்குச் சாற்றிலோ கல்கண்டு போட்டு தண்ணீர் சேர்த்துக் குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

நெஞ்சு வலி குணமாகும்!

பாடகர்களும், தொண்டைப்புண், குரல் கமரல் முதலியவற்றால் அவதிப்படுவோர்களும் இஞ்சியை நன்கு மென்று தின்று உமிழ்நீரை வெளியில் துப்பவேண்டும்.

இளநீரில் தலா ஒரு தேக்கரண்டி சுக்குத் தூள், கல்கண்டுத் தூள் முதலியவற்றைக் கலந்து தினமும் இருவேளை வீதம் முடித்தால் நெஞ்சுவலி குணமாகும்.

ஆடுகின்ற பற்கள் கெட்டிப்பட்டு நிற்கவும், மஞ்சள் நிறப்பற்கள் ‘பளிச்’ என்று பிரகாசிக்கவும் 100 கிராம் சுக்குபொடியில் 7 கிராம் அளவு டேபிள் சால்ட் கலந்து, பற்பொடி தயாரிக்கவும். உப்பு சேர்க்கப்பட்ட இந்த சுக்குப் பற்பொடி வாய் நாற்றத்தையும் போக்கிவிடும்.

நறுமணப் பொருள்களும், வாசனைப் பொருள்களும் தயாரிக்க இஞ்சிலியிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயும் பயன்படுகின்றன. இவை இஞ்சி ரொட்டி, வயிற்றுக் கோளாறுகள் சம்பந்தமான மருத்துப் பொருள்கள் ஆகியன தயாரிக்கவும் பயன்படுகின்றன.

மேற்கத்திய நாடுகளில் சமையலறையிலும், ரொட்டி, பிஸ்கட், கேக்ஸ், சூப் வகைகள், ஊறுகாய் வகைகள், சாலட்டுகள் முதலியவற்றிலும் நறுமணப்பொருளாக இஞ்சி முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆசிய மக்களுள் சீன மக்கள் இஞ்சியை அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர்.

இஞ்சி சேர்க்கப்பட்ட பீர், ஒயின், முதலியவை மிகவும் விலை குறைவானவையே!

வரலாறு
இஞ்சியின் தாயகம் இந்தியாதான். ஜிஞ்சிபேர் ஆபிசினாலன் என்பது இதன் தாவர விஞ்ஞானப் பெயர். இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அறிமுகமாகி அங்கிருந்து ஜப்பான், மேற்கு இந்தியத்தீவுகள், மேற்கு ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் இஞ்சி அறிமுகமாகியது. இஞ்சியில் 85 வகைகள் உள்ளன. மிகவும் உயர்ந்த வகை இஞ்சி பியூரெட்டோ ரிக்கோ மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளில் பயிராகிறது. இந்த நாட்டினர் இஞ்சியைப் பிழிந்து சாறாகத்தான் விற்கிறார்கள்.

உலகில் சீனாதான் இஞ்சியை அதிகம் இறக்குமதி செய்து தக்க பாதுகாப்புடன் இருப்பில் வைத்திருக்கிறது.

வயிற்றுவலி என்றால் உடனே வீட்டில் சுக்குத் தேநீர் போடுவதற்குக் காரணம் பண்டைய கிரேக்க வைத்திய மேதைகளான அலிசென்னாவும், கேலனுந்தாம். இவர்கள் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி முதலியவற்றுக்கு சுக்கு டீ தூள், அருந்தச் சொன்னார்கள். அப்போது இதற்குச் சுக்கு கஷாயம் என்று பெயர்.

வேத காலத்திலும் இஞ்சியும், உலர்ந்த இஞ்சியான சுக்கும் மிக முக்கியமான மருந்துகளாக இருந்திருக்கின்றன.

இவ்வளவு ஆதாரங்கள் எதற்காக? தினமும் சுக்கு தேநீர் அல்லது சுக்கு காபி சாப்பிட்டாவது உடல் நலத்தைப் புதுப்பித்து ஆரோக்கியமாக வாழ ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்!

குறைந்த செலவில் கிடைக்கும் தங்கபஸ்பம், இஞ்சி.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/09/17 உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 7:14 am
Filed under: Uncategorized
Vietnam Travel

Posted on Friday 24 September 2010

cao-bangவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

நேரம் பார்க்காமல் இதயம் பார்க்கிறவர்கள்!

நாமோ ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும் என்று ஒப்பிட்டுக் கொண்டிருக்க, வியட்நாமியர்களோ ஆமையை வழிபடுகிறார்களாமே எனறு எனக்கு வியப்பாக இருந்தது.

நம் நாட்டில் பெங்களூரில் உள்ள அல்சூர் ஏரியைப் பாாத்தவர்களுக்கு நான் விவரிக்கப்போகும் விஷயம் எளிதாகப் பிடிபட்டுவிடும்.

ஆமாம். சுற்றிலும் சாலைகள் இருக்க நடுவே அல்சூர் ஏரி அளவிலேயே ஓர் ஏரி. அதன் தென்கரை ஓரமாக ஒரு தீவு. இந்தத் தீவில்தான் அந்த ஆமை இருக்கிறதாம். நிலப்பகுதிக்கும் தீவுப் பகுதிக்கும் இடையே ஒரு மரப் பாலம். இந்த மரப்பாலத்தின் ஆரம்பத்தில் டிக்கெட் வழங்கும் இடம்.

நாங்கள் நுழையவும் டிக்கெட் வழங்கும் இடத்தின் மரப்பொந்து மூடப்படவும் சரியாக இருந்தது.

மணி சற்றே பதறினார். “நாம ஒரு நிமிடம் தாமதமாயிட்டோம் லேனா சார். நாளைக்கு இந்தப் பக்கம் வரமுடியாது. ரொம்பவும் தூரம் வேற”

“பரவாயில்லை மணி சார். பக்கவாட்டில் எட்டி பார்த்து நிலைமையை சொல்லி டிக்கெட் கேட்டுப்பாருங்கள்.”

நான் கொடுத்த நம்பிக்கையில் பக்கவாட்டில் தெரிந்த டிக்கெட் கொடுப்பவரின் தலையைப் பார்த்து மணி ஏதோ சொன்னார். “இந்தியாவிலிருந்து வந்திருக்கிற பத்திரிகையாளர்” என்பது மட்டும் அதில் கேட்டது அல்லது புரிந்தது.

என்ன ஆச்சரியம்! டிக்கெட் தரப்படும் மரப்பொந்து மறுபடி திறந்துகொண்டது.

இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் வெறும் விதிகளை மட்டும் பேசாமல் நேரத்தை மட்டும் பாராமல் இதயங்களையும்
சற்றுப் பார்க்கிறார்கள்.

இதை ஒரு விதி மீறலாகப் பாராமல் மனித நேயமாகப் பார்க்கிறார்கள் வியட்நாமியர்கள்.

“டிக்கெட் விலை மிகக் குறைவுதான்” என்றார் மணி.

இதில் வேடிக்கை என்னவென்றால் டிக்கெட்டைக் கிழித்து உள்ளே எங்களை அனுமதிக்கிற நபர் நுழையும் இடத்தில் சங்கிலியைக் குறுக்கால் கட்டிவிட்டு அவர் பாடு கை, கால், முகம் கழுவப் போய்விட்டார்.

செய்வதறியாது திகைத்து நின்றபோது டிக்கெட் கொடுத்த வியட்நாமியரே சங்கிலியைக் கழற்றிவிட்டு நீங்கள் போங்கள் எவன் என்ன சொல்லுகிறான் என்று நான் பார்க்கிறேன் என்கிற பாணியில் எங்களுக்கு சாடை காட்டிவிட்டு இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நாங்கள் தாண்டிப் போகிறவரை அங்கேயே நின்றார்.

டிக்கெட் கொடுப்பதோடு என் வேலை முடிந்துவிட்டது. அதற்குப் பிறகு உங்களைக் கொண்டு போய் உள்ளே சேர்ப்பதெல்லாம் என் வேலையில்லை என்கிற பாணியில் எங்களை உதறிவிடாமல் உதவியில் முழுமை காட்டியது என் நெஞ்சிற்கு இதம் தந்தது.

ஒரு மங்கலான அறை, அந்த அறை முழுக்க சிவப்பு ஒளி நிறைந்திருக்க நடுவில் மெகா அளவில் ஓர் ஆமை. ஆமையா அது?

சிஷெல்ஸ் தீவிற்குப் போனபோது அப்படியே ஆமைத் தீவிற்குப் போய் உலகின் மிக வயதான ஆமையைப் பார்த்தேனே, அதன் அளவைவிட இது பெரிதாக இருந்தது.

ஆனால் இந்த ஆமையைப் பொறுத்தவரை உங்களைப் போலவே எனக்கும் ஏமாற்றமாக இருந்த விஷயம். இந்த ஆமை ஒரு சிலையாக இருந்ததுதான்.

ஆமாம். இந்த ஆமைச் சிலைக்குப் பின்னால் ஒர் சரித்திரமே இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த ஹனாய் பகுதியை ஒரு மன்னன் ஆண்டு வந்தாராம். இவன் நீரில் விழுந்து விட்டானாம். தன் நீச்சல் திறமையெல்லாம் வெளிப்படுத்தி கரையேற நீந்திக் கொண்டிருந்தபோது சோர்ந்துவிட்டாராம்.

கைகால்கள் செயலிழக்க மூச்சு மோசமாக வாங்க, மூழ்க வேண்டிய தருணத்தில் இந்த ஆமை அருகே வந்ததாம். இதன் முதுகு ஓட்டினைப் பிடித்துக் கொண்டு கரையேறிப் பிழைத்தாராம் இந்த மன்னன்.

எங்கள் பகுதி மன்னனைக் காப்பாற்றிய ஆமை இது என்று இப்பகுதி மக்கள் இதைப் பாடம் செய்து (சிலையாக்கி?) வழிபட ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வூர் மக்கள் ஊதுபத்தி ஏற்றி பயபக்தியோடு இந்த ஆமையை வழிபடுவதைப் பார்த்தால் நமக்கே ஒரு விதப் பரசவம் வருகிறது.

“தொட்டுப் பார்க்கலாமா மணி சார், இது அசல் ஆமை ஓடா, கைவண்ணமா என்று.”

“வேண்டாமே சார். அதைப் பார்ப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்க்ளோ தெரியாது.”

“தொடாதீர்கள் என்று அறிவிப்பு ஏதும் இல்லை. அதனால் ஒரு சிறு தூண்டுதல் அடிபடுகிறது.”

“என்னத்திற்கு ரிஸ்க்? நிச்சயம் இது சிலை தான்!

“ஆனா ஓடு அழியப் பல வருடங்கள் ஆகும். அதனால் ஓட்டை மட்டும் பயன்படுத்திவிட்டு, தலை உடலையெல்லாம் கைவண்ணத்தால் உருவாக்கியிருக்க வாய்ப்பு உண்டு.”

“நமக்கு எதுக்கு இந்த ஆராய்ச்சியெல்லாம் வாங்க போவோம்.”

அதுவும் சரிதான்.

இந்த ஆமைச் சிலையை ஒட்டி ஒரு சிறு கோயில். அங்கேயும் நிறையப் பேர் வழிபட்டபடி இருந்தார்கள். வழிபடும் தலங்களில் வியட்நாமியர்கள் பலரும் வீண் பேச்சு பேசுவது இல்லை. சத்தமிடும் குழந்தைகளைக் கூட உஷ் என்று உதட்டின் மையத்தில் ஆள்காட்டி விரலை வைத்து காடை சாட்டி அடக்குகிறார்க்ள. தனக்கு அடங்காத ஒரு குழந்தையைப் பா ர்த்து தாய், அப்பாவைவிட்டு உன்னை உதைக்கச் சொல்வேன் என்று கண்ணால் சாடை காட்டிய அழகு நன்றாக இருந்தது.

ஏரியின் அழகு புறப்படவிடாமல் அங்கேயே என்னை நிற்கச் செய்தது. ஏரி படு சுத்தமாக இருக்க, இந்தப் பராமரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.

மாலை மங்க ஆரம்பிக்க, சுற்றியிருந்த விளம்பரப் பலகைகளின் வண்ண விளக்குகள் சொல்லிவைத்த மாதிரி, ஒவ்வொன்றாக ஒளிவிட ஆரம்பிக்க அதன் வண்ணங்கள் நீரை வண்ணக் கோலங்களாக ஆக்கின.

“போகலாமா?”

“இந்த இடத்தின் அழகு என்னை நகரவிடாமல் செய்கிறது!”

“விருப்பப்படும் நேரம் வரை இருங்க. ஓர் அவசரமும் இல்லை.”

“பாருங்க மணி சார், நவீனமும், பழமையும் கலக்கும் இடம் இது. “ஊரின் நடுவே ஒரு சரித்திரப் புகழ் வழிபாட்டுத் தலம். சுற்றிலும் கான்கிரீட்டுகளின் குவியல்கள். வெறும் நவீனம் எங்கும் உண்டு. பழமைகள் சரித்திரங்கள் எங்காவது உண்டு. இரண்டும் கலக்கிற இடங்கள் எத்தனை உண்டு?”

“நல்ல இரசனை உங்களுக்கு!”

“எதையும் இயந்திரமயமாக எண்ணாமல் பார்க்க எண்ணுவதில்லை. நான் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு கோணத்திலும் எது ஒன்றையும் இரசிக்கிறேன். என் மனததைப் பறிகொடுக்கிறேன். புதிதாக யானையைப் பார்க்கும் மனிதனைப் போல் ஆகிறேன். மனதைக் குழந்தையாக ஆக்கிக் கொள்கிறேன். என் பரபரப்பையும் மன அவதிகளையும் அதில் தொலைக்கிறேன். அழகாய் இருக்கிறது! இயற்கையும் மனிதனுமாய்ப் போட்டி போட்டுக் கொண்டு விருந்து அளிக்கிறார்கள். இதைக் கண்களால் பருகி மனத்தை நிறைக்காமல் எப்படி சார் அப்படியே போய்க் கொண்டிருக்க முடிகிறது சிலரால்!”

“யாரைச் சொல்கிறீர்கள்? என்னையா?”

“சேச்சே! பொதுவாகப் பேசினேன்.

நாங்கள் மரப்பாலத்தைக் கடந்து நிலப்பகுதிக்கு வந்தபோது அங்கே ஏகப்பட்ட உணவுக்கடைகள் முளைத்திருந்தன.

பசி இருந்தபோதும் சாப்பிடுவதற்கான தூண்டுதலே வரவில்லை. காரணம் என்ன தெரியுமா? கிழக்காசிய நாடுகளின் உணவு வகைகள் பெரும்பாலானவற்றிற்கு நான் சொல்லப் போகும் காரணம் பொருந்தும்.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/09/17 “என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 7:09 am
Filed under: Uncategorized
Give and Take: Best way

Posted on Friday 24 September 2010

Lenaவானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை!

அந்தக் காலத்து அரசர்கள் புலவர்களுக்கோ பிறருக்கோ பரிசுகள், விருதுகளைக் கொடுக்கும்போது தட்டில் வைத்துதான் கொடுப்பார்களாம். காரணம் கைகளால் கொடுக்கும்போது அவர்கள் வாங்கிக் கொள்ள நேரும். வாங்கிக் கொள்வது என்பது பிச்சை எடுப்பவர்களின் செயலாம்.

ஆனால் தட்டில் வைக்கும்போது அப்படி அல்ல. அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இவற்றிற்கு இடையே என்ன வித்தியாசம் என்றால் முன்னதில் உளளங்கையானது வானம் பார்க்கிறது. பின்னதில் உள்ளங்கை நிலம் பார்க்கிறது.

உள்கை என்று பெயரிடாமல் ஏன் உள்ளங்கை என்று பெயரிட்டார்கள் என்பது சிந்திக்கத்தக்கது. உள்ளங்கை என்பதை உள்ளம்+கை என்றும் பிரிக்கலாம்.

நம் உள்ளம் கை நிலம் பார்க்க வேண்டுமானால் நாம் கொடுக்கும் குணம் உள்ளவர்களாக மாறவேண்டும். அதே நேரத்தில் நம்மில் பலரும் அடிப்படை வசதிகள் இருந்தும் உள்ளங்கை வானத்திற்குக் காட்டும். (அதாவது கேட்டுப் பெறும்) குணம் இருக்கிறது.

பிறரிடம் ஏதும் கேட்டுக்கொண்டே இருப்பவர்கள், மானம் மரியாதையைவிட சுயநலமே பெரிது என எண்ணுபவர்கள் மறுத்துவிட்டால் இருவருக்குமே மனக்கஷ்டம்தான் என்பதையும் பொருட்படுத்தாதவர்கள் இவர்கள்.

பிறரைச் சார்ந்து வாழாக் குணமும் என்னால் இயன்றது எனக்குப் போதும் என்கிற மனப்பக்குவமும் தன்மானத்தின் அடையாளங்களாகும்.

இருக்குல்ல! கொடுக்கட்டுமே! என எண்ணுவதும் தாங்கள் கேட்டுப் பெறுவதை எல்லா நிலைகளிலும் நியாயப்படுத்துவதும் மனித பிறப்புக்குப் பெருமை சேர்க்கா பிறரை அண்டியே வாழ்வது என்ன பிழைப்பு? சே!

இனி நம் உள்ளங்கை வானம் பார்க்கும் சந்தர்ப்பத்தைக் குறைத்து, நிலம் பார்க்கும் (கொடுக்கும்) வாய்ப்புகளை அதிகப்படுத்திக்கொள்ளட்டும்!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/09/17 ஏக்கத்தைக் கிளறுவதா?

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 7:05 am
Filed under: Uncategorized
The rule of spectrum Raja

Posted on Friday 24 September 2010

A.Rajaமடியில் கனம் இல்லாவிட்டால்…

ஸ்பெக்ட்ரம் தொலைத்தொடர்புச் சேவை தொடர்பான 2G அலைக்கற்றை ஒதுக்கீடு விஷயம் ஒரு முடிந்துபோன விஷயம் என்று தமிழக அரசியல் தலைவர்கள் அந்தக் கோப்பை ஒரு வலுவான கயிற்றில் கட்டிப் பரணில் போட நினைத்தாலும் உச்சநீதிமன்றத்தின் மூலம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது.

ஒரு தனியார் நிறுவனம் இதில் நிச்சயம் தவறு நிகழ்ந்துள்ளது என வழக்குப் போட உச்சநீதிமன்றம் இந்தக் கோப்பை பரணிலிருந்து எடுக்கச் சொல்லி தூசி தட்டிவிட்டது.

மத்தியத் தொலைத்தொடர்புத் துறை, இதன் அமைச்சர் ராசா இருவருக்கும் உச்சநீதிமன்றம் 10 நாள்களில் விளக்கம் வேண்டும் என்றும் கேட்டிருக்கிறது. இந்தத் திருநாட்டில் அரசியல்வாதிகள் வைத்ததுதான் சட்டம் என்கிற நிலை இல்லை என்பதற்கான நல்ல அறிகுறியே உச்சநீதிமன்றத்தின் இந்தக் குடைசல்.

தி.மு.கவும், தேசிய முன்னணி அரசும் கை கோர்த்து ஒன்று, மற்றதின் நன்மைக்காகப் பரஸ்பரம் விட்டுக்கொடுப்பட்ட விவகாரமே ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று நாடே பேசுவதாகச் சொல்கிறார்கள்.

இதில் பல ஆயிரம் கோடி நஷ்டத்தை அரசு அடைந்துள்ளதாகவும் இதில் சில ஆயிரம் கோடி இலாபத்தை குறிப்பிட்ட அரசியல்வாதிகள் பெற்றுள்ளதாகவும் தொண்டைத் தண்ணீர் வற்றுமளவு ஜெயலலிதாவும் மேடை தோறும் முழங்கிப் பார்த்து, இப்போது அவரே இதைக் கைவிட்டுவிட்ட நிலையில் எரிந்து முடிந்த சாம்பலிலிருந்து அசுணப் பறவை என்று ஒன்று கிளம்புமென்று கொல்வார்களே, அப்படிக் கிளம்பியிருக்கிறது ஸ்பெக்ட்ரம் விவகாரம்.

இதற்குப் பிரதிபலிக்கும் மத்திய அமைச்சர் ராசா என்ன சொல்லியிருக்கவேண்டும் நியாயமாக?

“வழக்குத்தானே? போடட்டும்! எல்லாம் முறையாக நடந்திருக்கும்போது எங்களுக்கென்ன கவலை? நாங்கள் இவ்வழக்கை எதிர்கொள்ளத் தயார்! மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம் என்றல்லவா பிரதிபலித்திருக்கவேண்டும்.

ஆனால் என்ன தெரியுமா ராசாவின் பதில்?

“இந்த வழ்ககு அரசியல் உள்நோக்கம் உடையது” என்கிறார்.

இதற்கு என்ன உள்ளர்த்தம்? தன்னையறியாமல் மறைமுகமாக என்ன சொல்லவிட்டார் என்பனவெல்லாம் எனக்குப் பிடிபட்டுவிட்டன.

கல்கண்டின் கெட்டிக்கார வாசகர்களாகிய உங்களுக்கு மட்டும் புரியாமல் போகுமா என்ன?

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/09/17 தவிர்க்கப்பட்ட சேதம்!

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 6:54 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 24 September 2010

bopanna-qureshi.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஆர்.தேவன், திருநெல்வேலி.

இந்திய டென்னிஸ் வீரர் போபண்ணா பாகிஸ்தானிய வீரர் க்ரேஷியுடன் இணைந்து ஆடத்தான் வேண்டுமா?

பட்டிமன்றமே வைக்கலாம் போலிருக்கிறதே உங்கள் கேள்வியை வைத்துக் கொண்டு. சபாஷ் எதிர்நாட்டு வீரருடன் கைகோர்ப்பது (வாழ்க்கையையே இப்படி அமைத்து கொண்டுவிட்ட சானியா மிர்சாவை இன்னும்கூட அதிகம் கோபிப்பீர்களோ?) என்பது பெருந்தன்மை; சாதுரியம்; நல்நோக்கம். இதை ஒரு குறுகிய பார்வை என்று குறைகூறினால் உங்கள் வாதத்தையும் இதே ரகத்தில் சேர்த்துவிட முடியும். நெதர்லாந்து சென்றிருந்தபோது ஒரு பாகிஸ்தானியரின் நட்புக் கிடைத்தது. (இதற்கும் சண்டைக்கு வருவீர்களோ?) இவர் சொன்னார் பாகிஸ்தானிய மக்களும் இந்திய மக்களும் நல்லவர்கள். இந்த இரு நாட்டு அரசியல்வாதிகள்தாம் பொல்லாதவர்கள் என்று!

சி.உண்ணாமலை, சென்னை-5.

பெய்யாமல் கெடுத்த மழை இப்போது பெய்து கெடுக்கிறதே?

வடக்கே நல்ல மழை; மிக மிஞ்சிய மழையால் வெள்ளமும் அதிகம். ஆனால் இது வடிந்து நிலத்தடி நீர் பெருகும்போது இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு விவசாயம் மிக நன்றாக இருக்கும். தானிய விளைச்சல பெருகி, விலைவாசி சற்றே குறையும் (நம்புங்கள்!). ஆனால் வறட்சி இருக்கிறதே, இது பயங்கரமானது. மக்களின் வயிற்றையும் அரசின் கஜானாவையும் காயப் போட்டுவிடும். ஆனால் ஒன்று வருணன் வஞ்சகம் செய்கிறான். வடக்கே திருப்பிய பார்வையைத் தமிழகம் பக்கம் திருப்பவே மாட்டேன் என்கிறான். பார்ப்போம். ஜனவரி வரை நல்லவாய்ப்பு இருக்கிறது!

எம்.பாக்கியநாதன், உதகமண்டலம்.

உங்களுக்கு ஓய்வு என்பதே கிடையாதா?

எங்கு ஓய்வைக் கேட்கிறீர்கள். நிரந்தர ஓய்வையா? பணி ஓய்வையா? தற்காலிகக் களைப்புகளையா? (சும்மா வேடிக்கைக்குத்தான்! உங்கள் கேள்வியைத் திசைதிருப்பும் நோக்கம் இல்லை!) திருமணங்கள், திருமண வரவேற்புகளில் கலந்து கொள்வதை முன்பு சிரமமாக நேர விழுங்கியாக நினைத்தேன். இந்த நினைப்பை மாறிக் கொண்டேன். ஒரு நடவடிக்கையும் இன்றி மணமேடையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பதை இப்போதெல்லாம் நல்ல ஓய்வாகக் கருத ஆரம்பித்துவிட்டேன். உரியவர்களுக்கும் மகிழ்ச்சி தருகிற ஓய்வல்லவா?

டி.பவித்ரா, கும்பகோணம்.

நடிகர்களுள் நல்ல பேச்சாளர்கள் என்று எவரைக் குறிப்பிடுவீர்கள்?

எழுதிக் கொடுத்த வசனங்களையே சரிவரப் பேச (ஒப்பிக்க!) தெரியாத திரை உலகில் கமல், ரஜினி, சிவகுமார், ராஜேஷ், நாசர், சத்யராஜ், பாண்டியராஜன் போன்றவர்கள் பிறரின் எதிர்பார்ப்புகளையும் மீறி சிறப்பாகப் பேசி வருகிறார்கள். சமயங்களில் தொழில்ரீதியான பேச்சாளர்களைக்கூடப் பின்தங்க வைக்கிறார்கள். ஆச்சரியாக இருக்கிறது.

சி.ராமதாஸ், முகப்பேர்.

சென்னை விமான நிலையம் அறிபுதமாக விரிவடைந்து வருகிறதே?

உண்மை. தென்னக அலுமினியப் பறவைகளின் அருமையான சரணாலயம் மீனம்பாக்கம்! தினமும் 350 விமானங்கள் ஏறவோ இறங்கவோ செய்கின்றன. விமான நிறுவனங்களின் பெருக்கமும் அதிகம். உள்நாட்டுப் பயணங்களை விமான நிலையம் வந்துகூட முடிவு செய்ய முடியும் என்கிற நிலை விரைவில் உள்ளூர் விமான டிக்கெட்டுகளைக் கூவிக்கூவி விற்பார்கள் போல!

நா.குமார், புதுச்சேரி.

உலகை நிறைய வலம் வந்துவிட்டீர்கள் உங்களுக்கு மிகப் பிடித்த ஊர்?

தேவகோட்டை! வாழ்க்கையில் பயணங்கள் அமையலாம். ஆனால் என் வாழ்க்கையே பயண வாழ்கை ஆகிவிட்டது. அதே சமயம் பிறந்த மண்ணில் இருக்கிற மகிழ்ச்சி, மன இலயிப்பு, மன நிறைவு உலகின் எந்தப் பகுதியிலும் எனக்குக் கிடைத்ததில்லை.

ஏ.வெற்றிக்கொண்டான், திருச்சி-2.

வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற தி.மு.க.விற்கு வாய்ப்பு அதிகம் என்கிறேன்?

சில பதில் வாதங்களை வைக்க விரும்புகிறேன் நான்! தி.மு.க. வுக்குப் பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது என்று பலரும் கருத இடமிருக்கிறது. ஆனால் விலைவாசியின் கடுமையான ஏற்றம் மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. இதற்கு மத்திய அரசு முக்கியக் காரணம் என்றபோதும் ஒட்டுப் போட இருக்கிற பலருக்கு இதைப் பிரித்து அறிகிற ஆற்றல் கிடையாது. ஒரு ரூபாய்க்கு அரிசி தந்தாலும் மற்றவையெல்லாம் தாறுமாறாக ஏறியிருப்பதால் இது முழுமையான சாப்பாடாகா? தொலைக்காட்சி பெற்றவர்களைவிட அதனைப் பெறாதவர்கள் கோபம் அதிகம். ஆட்சியாளர்களின் வளமை பற்றிப் பாமரர்கள் வரை நிறையவே தெரிய வந்துள்ளது பெரிய பலவீனம்! சட்டம் ஒழுங்கு மிகத் திருப்திகரம் என்று சொல்லிவிட முடியாது. கறை வேட்டிகளின் கறைகள் பிரசித்தமாகிவிட்டன. ஒரு முறை நீங்கள், மறுமுறை அவர்கள் என்கிற தமிழக மக்களின் எழுதப்படாத விதி வேறு ஆளுங்கட்சிக்குச் சாதகமாக இல்லை. ஆனால் இவை எல்லாம் அடிபட்டுப் போகும்படி வலுவான கூட்டணி அமைந்தால் நீங்களும் உங்கள் வாதமும் ஜெயிப்பீர்கள்.

மோகன்தாஸ், ஒட்டப்பிடாரம்.

தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடக்கவிருக்கிறதே?

இதுவென்ன நமது பொதுப்பணித் துறைக் கட்டடமா? கமிஷன்களே இல்லாமல் கட்டப்பட்ட கட்டடம். அதனால்தான் இது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து இருக்கிறது. இதற்காகவே இதைக் கட்டிய தமிழனுக்கு நாம் எத்தனை நாள் வேண்டுமானாலும் விழாவெடுக்கலாம்.

சே.சேனாசலம், திருவொற்றிவூர்.

காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைந்தால் அதில் சேருவோம் என்கிறாரே ராமதாஸ்?

தேர்ந்துவிட்டார். நன்றாகவே தேர்ந்துவிட்டார். அவரது தேவை அன்பு மகன் அன்புமணிக்கு ஒரு பதவி. அதற்கு சின்னக் கும்பிடுபோடுவதைவிடப் பெரிய கும்பிடுகள் நல்லது என்று முடிவெடுத்து விட்டார். பார்ப்போம். அதற்கு பெரிய இடம் கொடுக்கிறது என்று.

கே.விசாகன், புதுப்பட்டினம்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முறைகேடுகள் நடக்கவில்லை என்கிறாரே கருணாநிதி?

வர வர ஜெயலலிதா ஓர் ஆசிரியையாகி விட்டார். அந்த ஆசிரியை ஏதேனும் கேள்வி கேட்டபடி இருக்க மாணவர் கலைஞர் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாடு நல்லாவே போய்க்கிட்டு இருக்கு.

ரா. உதயகுமார், கும்பகோணம்.

தி.மு.க. ஆட்சியில் விழாக்களாக நடக்கிறதே?

பாராட்டுக்குப் பாராட்டு; விழா மூலம் பணமும் கொஞ்சம் வெளி வந்து விழாவிற்கு உழைப்பவர்களுக்குப் பயன்படுகிறது. எனவே வரவேற்போம்.

கார்த்திக், ஒ.சிறுவயல்.

கார்த்தி சிதம்பரத்தின் மேடைப் பேச்சுகள்?

காங்கிரசில் இவர் ஒரு ஜுனியர். இளங்கோவன் இவரது பேச்சுக்கும், தி.மு.க. தலைகள் பயப்படுகின்றன. தி.மு.க.விற்குப் பத்தியம் சோறு என்றாலே பிடிக்க மாட்டேங்குது.

கே.குணா, கோவை.

வாழ்க்கையில் நிம்மதி இல்லையே?

அ.தி.மு.க. மாதிரி அன்றாடப் ஒரு போராட்டத்தில் இருக்கிறீர்கள். முதலில் உங்கள் மனப் போராட்டங்களைக் கை விடுங்கள். அவற்றைக் கைவிட்டால் இப்போதே உங்களுக்கு நிம்மதிதான்.

கு.ராசகோபால், செகந்திராபாத்.

சீமானின் பேச்சை நான் வழிமொழிகிறேன். என் மீது குண்டர் சட்டம் பாயட்டும் என்கிறாரே வை.கோ?

வை.கோவிற்கு முன்புபோல் கூட்டங்கள் அவ்வளவாக இல்லையா? இப்படியா ஒரேயடியாகப் வேலூருக்கு கால்ஷீட் கொடுப்பது?

கு.செல்வராணி, சென்னை-8.

பட்டிமன்றத்தில் உங்களை நீதிபதியாக அமர்த்தமாட்டேன்கிறார்களே?

ஆர்டர். ஆர்டர் சொல்ல ஆசைதான்! ஆனாலும், வக்கீலாக வேலை செய்யாமல் யாரும் நீதிபதியாக ஆக முடியாது.

கே.ராசு, குவைத்.

உங்களுக்கு ரேஷன் கடை எங்கேயிருக்கு?

அதுவா ரொம்ப தூரம். பொதுவாய் கடத்தல் நடக்கும் இடங்களிலிருந்து நான் எப்போதும் விலகியே இருப்பேன்.

கே.நாச்சிமுத்து, காரைக்குடி.

வேலை நேரம் தூங்குவது உண்டா?

அரசு உத்தியோகத்திற்கு நான் எப்போதுமே ஆசைப்பட்டது இல்லை.

17 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 6:46 am
Filed under: Uncategorized
Healthy life

Posted on Friday 17 September 2010

elephant-foot-vegetableகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் கே.எஸ்.சுப்பிரமணி

உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு

கிழங்கு வகைகளுள் மிக முக்கியமானது, கருணைக் கிழங்கு.

உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியன போல் உடலுக்கு நன்மை செய்யும் கிழங்கு இது. எல்லா வயதுக்காரர்களும் குறிப்பாக வாத நோயாளிகள், சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரும் பயமில்லாமல் சமைத்துச் சாப்பிடலாம். எந்தத் தீங்கும் செய்யாத கிழங்கு என்பதால்தான் இதைக் கருணைக் கிழங்கு என்கிறார்கள்.

100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 111 ஆகும். கால்சியம் 35 மில்லி கிராம், பாஸ்பரஸ் 20 மில்லி கிராம், வைட்டமின் ‘ஏ’ வைட்டமின் ‘பி’ ஆகியவையும் இக்கிழங்கில் உள்ளன. எனவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இக்கிழங்கு இன்றியமையாத ஒன்றாய்த் திகழ்கிறது.

கால்சியத்தால் குழந்தைகள் நன்கு வளர்கிறார்கள். இதே கால்சியம் வயதானவர்களின் எலும்புகள் பலவீனமடைந்து விடாமல் பாதுகாக்கப்படுகிறது. 100 கிராம் கிழங்கில் கார்போஹைடிரேட் 26%ம் ஈரப்பதம் 69.9%ம் இருப்பதால் உடலுக்கு நன்மையும் சக்தியும் அதிகம் கிட்டுகின்றன.

உடலில் எரிச்சலா?
இக்கிழங்கு வாதநோய், மூல நோய், உடல் எரிச்சல், பெளத்ரம், உடல் சூடு, மாதவிடாய்க் கோளாறு, வயிற்றுஉப்புசம், வயிற்றுவலி, பிற வயிற்றுக் கோளாறு போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

அதனால் ஜப்பானில் நோய்தீர்க்கும் கேப்ஸுல்களாக கருணைக் கிழங்கு கேப்ஸுல்கள் தயாரித்து விற்கின்றனர்.

கருணைக் கிழங்கு ஒல்லியானவர்களைக் குண்டாக மாற்றுகிறது. உடலுக்கு நல்ல வலுவையும் கருணைக் கிழங்கு வழங்குகிறது.

நன்கு பசிக்க …
கருணைக் கிழங்கு மலச்சிக்கலை நீக்கும். நன்கு பசிக்கச் செய்யும். இந்தக் கிழங்கைச் சாப்பிட்டால் உடனே மலச்சிக்கல் குணமாகி அடுத்த வேளை நன்கு ருசித்து ஆவலுடன் சாப்பிட நம்மைத் தயார்படுத்திவிடும்.

‘பிசியில்லை, ருசியில்லை’ என்பவர்கள் அவ்வப்போது கருணைக்கிழங்குகளைச் சேர்த்து வருதல் நன்று. அடிக்கடி காபி சாப்பிடுகிறவர்களுக்கு ஏற்படும் பித்தக் கோளாறுகள் இக்கிழங்கால் குணமாகிறது. பசியைத் தூண்டுகிறது.

மண்ணீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகத் தினமும் இக்கிழங்கை உணவில் சேர்த்து வருதல் வேண்டும்.

சாதாரணமாகக் கருணைக் கிழங்கைத் தோல் நீக்கிச் சிறுதுண்டுகளாய் நறுக்கி குழம்பு வைத்துச் சாப்பிட்டாலே மேற்கண்ட நன்மைகள் தொடர்ந்து கிடைக்கும்.

மூலநோய் குணமாக மேற்படி முறையில் சிறுதுண்டுகளாக்கி பசும்பாலில் அவித்து உப்பு சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகச் சாப்பிட வேண்டும். தினமும் அதிகபட்சம் இரு வேளை இது போல் சாப்பிட வேண்டும்.

பெளத்திரம் என்னும் இரத்த மூலம் குணமாகப் பசும் பாலில் அவித்த கருணைக் கிழங்குடன் உப்பு, ஒரு டீஸ்பூன் சாப்பாட்டு நெய் முதலியவற்றையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகச் சாப்பிடவேண்டும். மூலநோய்க்கான இந்த உணவு மருந்தை தயாரிக்க மண்சட்டியிலேயே கருணைக்கிழங்கை பயன்படுத்தவேண்டும்.

செரிமானத்துக்கு ….
அடிக்கடி வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி ஏற்படும் வளரும் குழந்தைகளுக்கு கருணைக் கிழங்கைச் சமைத்துக் கொடுத்து வந்தால் போதும். இக்கிழங்கில் உள்ள செரிமானப் பொருள்களும், கால்சியச் சத்தும் குழந்தைகளுக்கு அதிகம் நன்மை செய்கின்றன.

மூலம், பசியின்மை, தாது பலவீனம் போன்றவை குணமாகக் கருணைக் கிழங்கின் தண்டை கீரை போன்று சமைத்து உண்ண வேண்டும். இதனால் உடலுக்குப் பலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றன.

கருணைக் கிழங்கைப் பிரிட்டனில் என்ன செய்கிறார்கள்.
கருணைக் கிழங்கின் தாயகம் இந்தியாதான். இரு கோளார்த்தங்களிலும் இக்கிழங்கு பயிராகிறது.

இந்தியாவைப் போலவே தெற்கு வியட்நாம், தெற்குக் கடல் தீவுகள் ஆகிய பகுதிகளிலும் கருணைக் கிழங்கு முக்கியமான சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. ஒரு விதமான நறுமணத்துடன் சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும் இக்கிழங்கை மேற்கண்ட மூன்று நாடுகளின் மக்கள்தாம் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

கருணைக் கிழங்கு வகையை சேர்ந்த காட்டுக் கருணை, காடுகருணை ஆகியவை மிகவும் காரமாய் இருக்கும். இவற்றை அளவுடன்தான் சாப்பிடவேண்டும்.

டி.பாட்டாட்டஸ் என்பது சீன வகை கருணை கிழங்கு ஆகும். இந்தக் கிழங்கை வீட்டை அழகுப்படுத்துவதற்காக பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிர் செய்கின்றனர். வீடுகளில் இக்கிழங்கு அழகிற்காகத் தொங்கும். இதில் வேலைப்பாடுகள் செய்தும் தொங்க விட்டிருக்கிறார்கள்.

கருணைக்கிழங்கின் மருத்துவக் குணங்களை நன்கு அறிந்திருந்த இந்தியர்கள் பாராட்டுக்குரியவர்களே!.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/09/10 வெள்ளைப்பூண்டை ஒதுக்கலாமா?

2010/09/03 வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

2010/08/27 புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்

2010/08/20 வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!

2010/07/30 பித்தத்தைப் போக்கும் பறங்கிக்காய்

2010/07/23 வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

2010/07/16 உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்

2010/07/09 வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு

2010/07/02 அவரைக்காய் : சில அரிய உண்மைகள்

2010/06/25 உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 5:03 am
Filed under: Uncategorized
Vietnam Travel

Posted on Friday 17 September 2010

hue.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

“என் வயிறு ஒரு கிங் இன்ஸ்டிடியூட்”

ஹனாய் வாழ் தமிழர்கள் எனக்கு விருந்து தர இருந்த உணவகத்திற்குள் நானும் மணியும் அவர்கள் குறிப்பிட்ட நேரப்படி துல்லியமாக நுழைந்தபோது அங்கு ஹனாய்வாழ் தமிழர்கள் ஒன்று கூடியிருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் உணவக உரிமையாளர் மட்டுமே தென்பட்டர். என் கண்கள் தமிழ் நண்பர்களைத் தேட, “என்ன பார்க்கிறீர்கள்” என்றார்.

“எவரும் இன்னும் வரவில்லை, வந்தவிடுவார்களா வாருங்கள். உட்காருங்கள். என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்றார் தொடர்ந்து.

எனக்கு ‘சப்பென்றிருந்தது. ஒருவர்கூடவா வரவில்லை? ஏன் இப்படி? என் மனக்கேள்வியைப் புரிந்துகொண்டவராய் மணி எனக்கு நிறையச் சமாதானம் சொன்னார்.

“எல்லோருக்கும் இன்னைக்கு அலுவலகம் இருக்கு. அதை முடித்து வீடு போய், வீட்ல இருககிறவங்களை அழைச்சிக்கிட்டு வரணும்ல அதான் லேட். வாங்க உக்காருவோம். வந்துடுவாங்க.”

“என்னிடம் இந்தச் சமாதானமெல்லாம் எடுபடாது தெரியுமா? இதுதான் உண்மை நிலை என்றால் இன்னும் ஒரு மணி நேரம் கழித்துக்கூட நேரம் குறித்திருக்கலாம் அல்லவா?” இந்த அன்பு விருந்தில் நாம் குறை காணக்கூடாது. ஆனால் நம்மவர்கள் நேர உணர்வில் குறிப்பாக இல்லை என்பது இங்கும் நிரூபணமாகிவிட்டது.

உலகச் சமுதாயத்தோடு பழக நேருகிறபோது நம்மைப் பற்றிய மதிப்பீடுகள் பல அளவுகோல்களால் நிர்ணயிக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று ஒரு சமுதாயம் நேரத்தைக் கடைப்பிடிக்கிறதா என்பதும்.

வந்த இடத்திலும் (நாட்டில்) இப்படி என்றால் நம்மைப்பற்றி வியட்நாமியர்கள் என்ன நினைப்பார்கள் என்று நான் சிந்தனைவயப்பட்டபோது

நான் மூட் அவுட் ஆகிவிட்டேனாக்கும் என்று கணித்து, மணி மேலும் ஒரு சமாதானம் சொன்னார்.

“விருந்துக்குத்தான் இப்படி. பணியில், கடமையில் நம்மவர்கள் நெருப்பு.”

“பரவாயில்லையே!”

“நம்மவர்கள் உண்மையில் இப்படி என்ாறல் அதில் மகிழ்ச்சிதான். நம்மவர்களிடம் நம்மவர்கள் சலுகை எடுத்துக்கொண்டால் அதில் அவ்வளவாகத் தவறு இல்லை. ஆனால் மற்ற உலகச் சமுதாயத்தினரிடம்தான் இப்படி நடந்து கொண்டுவிடக்கூடாது.”

எல்லோரும் ‘டாண்’ என்று வராததில் எனக்கு ஒரு செளகரியம் பிடிபட்டது. அதுவும் ஒவ்வொருவராக நுழைய ஆரம்பிக்க அவர்களோடு உரையாடவும் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக்கொள்ளவும் செளகரியமாக இருந்தது.

உணவருந்தும்போதுகூட ஓரிருவர் அருகிலும் எதிரும் புதிருமாயும் அமர்கிறோம். உரையாடல் இவர்களுடன் முடிந்துபோகிறது. மற்றவர்களுக்கு இதில் ஏமாற்றமடையலாம். இதற்கும் நான் வழி வைத்திருந்தேன். இதை உரிய இடத்தில் சொல்கிறேன். சொன்ன நேரம் நடந்து முக்கால் மணி நேரம் கழித்தும்கூடச் சிலர் வந்தார்கள்.

நேர விஷயத்தில் நீங்கள் ரொம்பக் கறார் பேர்வழி (?) என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் எங்களால் முடியலை என்றார் ஒருவர் பெரிய சிரிப்புடன்.

“பரவாயில்லை” என்று நான் அவருககு சமாதானம் சொன்னேன்.

பொதுவான உணவு வகைகளை முதலிலேயே சொல்லியிருந்ததால் மளமளவென உணவு வகைகள் வந்தன. பிறகு யாருக்கு எது மேலும் தேவையோ, சிறப்புத் தேவையோஅதைச் சொல்லி வழங்கிக் கொள்ளுங்கள் என்று பொது அறிவிப்பு வெளியிட வண்ணச் சாயமற்ற உணவு என்ன இருக்கிறது என்று கேட்டு நானும் ஓர் உணவு வகையைச் சொன்னேன்.

அனைவரது கவனமும் என்மீது இருந்ததால் என் செயல்பாடுகள், என் உரையாடல்கள் ஒவ்வொன்றையும் தமிழன்பர்கள் அனைவரும் உன்னிப்பாகக் கவனித்தனர்.

“அதென்ன வண்ணச் சாயம் இல்லாத உணவு என்று கேட்டுச் சாப்பிடுகிறீர்கள்? என்றார் திருமதி சங்கர் (நினைவிருக்கிறதல்லவா வியட்நாமிற்கான இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் சங்கரை?)

மற்றவர்களுக்கெல்லாம் வண்ணச் சாயங்கள் ஜீரணமாகி உடலுக்குக் கெடுதலைச் செய்யும் என் வயிறோ உடனே நிராகரித்துவிடும்.”

“அப்படீன்னா?”

“வாந்திதான்! பேதிதான்!”

“ஐயோ!”

“என் வயிறே ஒரு கிங் இன்ஸ்டிடியூட் போலத்தான்! (தமிழகத்தில் தலைசிறந்த சோதனைக்கூடம் கிண்டியில் உள்ளது) தவறானதை ஏற்காது” உடனே பெருஞ்சிரிப்பு!

நான் என்ன பேசினாலும் அதை இரசித்து ஏற்ற அருமையான தமிழர் குவியல் அது!

பலர் தந்தை தமிர்வாணனை நினைவு கூர்ந்தனர். சங்கர்லால், மாணிக்கம், அப்துல்வகாப், கத்தரிக்காய், மாது இந்திரா என்றனர் 40களுக்கும் 50களுக்கும் 60களுக்கும் போய், 2000த்திற்கு வரவே மறுத்தனர். சிறுவர்களாகி இளைஞர்களாகி அந்த நினைவுகளை அப்படி சிலாகித்தனர்.

உணவக மேலாளர் நெருங்கி வந்து “எங்கள் ஓட்டல் சமையல் கலைஞர்கள் உங்களுடன் படமெடுத்துக் கொள்ள விரும்புகின்றனர்” என்றார்.

“தாராளமாய்!” என்றேன். இது எனக்கு ஏற்பட்ட புது அனுபவம் என்பேன். ஹனாய்த் தமிழ் நெஞ்சங்கள் காட்டிய அன்பிலும், ஆர்வத்திலும் அவர்கள் தாமதமாக வந்த ஏக்கத்தைப் புதைத்து வைத்தேன்.

காய்ந்த கைகளோடு எழுந்திருக்க மனமின்றி தமிழக அரசியலையும் தமிழகத் திரையுலகையும் பற்றி ஆர்வமாக விசாரித்தனர்.

இவர்களோடு பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஓர் உணர்வில் ஒற்றுமை இருந்ததை உணர்ந்தேன். அது எவருக்கும் வியட்நாமில் தொடர்ந்து வாழ விருப்பமில்லை; எப்போது தாய்நாடு திரும்புவோம் என்பதே!

இந்த உணர்வு பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலருக்கும் இல்லாத உணர்வாகும்.

என் உணவை விரைந்து முடித்துக்கொண்டு எவரெல்லாம் எனக்கு எட்டாத தூரத்தில் இருந்தார்களோ, அவர்களது இருக்கை அருகே போய் அமர்ந்துகொண்டு, “அப்புறம் என்ன சொல்லுங்கள்?” என்று ஆரம்பித்தேன் பாருங்கள் “அடடா என்ன எளிமை உங்களிடத்தில்?” என்றார்கள்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எனக்காக எவ்வளவோ தூரம் பயணித்து வந்திருக்கிறீர்கள். பல கடமைகளை விட்டுவிட்டு ஆர்வத்துடன் வந்திருக்கிறீர்கள். சில வார்த்தைகளாவது உரையாடினால்தானே நீங்கள் வந்ததற்குப் பொருள் இருக்கும்” என்றேன். திகைத்தார்கள் சிலர்.

புகைப்பட வேட்டை, ஆட்டோகிராப் வேட்டை நடக்க, முகவரி அட்டைகள் பரிமாறிக்கொள்ளப்பட முழுமனமின்றிப் புறப்பட்டோம்.

“வியட்நாமில் உங்களுக்கு வேறு என்ன சார் ஆசை?” கேட்டவர் மணி.

நம்மூரில் சைக்கிள் ரிக்ஷா முறை ஒழித்துவிட்டது. நம்மூரில் ஓட்டுபவர் முன்னால் இருக்க பயணிப்பவர் பின்னால் இருப்பார். இங்கு பயணிப்பவர் முன்னாள் இருக்க, ஓட்டுபவர் பின்னால் இருக்கிறார். இது வித்தியாசமாக இருக்கிறது. இந்த ரிக்ஷாவில் பயணித்து கார் செல்லமுடியாத சிறு சந்துகளில் பயணித்து வியட்நாமின் சந்தடி மிகுந்த வாழ்க்கையைப் பார்க்க வேண்டும்.

“அவ்வளவுதானே? போயிடுவோம்.

“போகிறவழியில் வியட்நாமியர்கள் வழிபடுகிற ஆமை ஒன்றைப் பார்த்துவிடுவோம்!

“என்னது வியட்நாமியர்கள் ஆமையை வழிபடுவார்களா?”

“ஆமாம்! அது ஒரு சுவைமிகு வரலாறு. வாங்க நேரில் போய்ப் பார்ப்போம்!

மனதில் பிடிபடாக் கேள்விகளுடன் அந்த ஆமையைக் காணப் புறப்பட்டோம்.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/09/10 ஆங்கிலத்தின் அவசியம் புரிந்த அந்தக் கணங்கள்!

2010/09/03 வாணனை வண்ணனாக்கிய தூதர்!

2010/08/27 கட்டை கிடைக்குமா என ஏங்கினவனுக்குக் கப்பல் கிடைத்த கதை

2010/08/20 எழுச்சி நாயகன் ‌உருவான கதை!

2010/08/13 எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வு!

2010/08/06 அரண்மனைக்குள் நுழைய 5000 டாலர்!

2010/07/30 வாருங்கள் சைக்கிள் மிதிப்போம்!

2010/07/23 நேர விஷயத்தில் வாலாட்டாதீர்கள்!

2010/07/16 “நான் ரஜினியைப் போல”!

2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!

2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!

2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 4:55 am
Filed under: Uncategorized
Stay away before smash up

Posted on Friday 17 September 2010

uma-shankar-iasதவிர்க்கப்பட்ட சேதம்!

ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாசங்கரின் விவகாரத்திற்குக் கிட்டத்தட்ட நல்லதொரு தீர்வு ஏற்பட்டிருக்கிறது. இவர் மீதான தற்காலிகப் பணி நீக்க உத்தரவு பின்வாங்கப்ட்டிருப்பதையே இப்படிக் குறிப்பிடுகிறேன்.

முதல்வரிடம் உமாசங்கரின் நிலை பற்றிப் பத்திரிகையாளர் கேட்டபோதுகூட இதற்குமுன் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டதில்லையா என்று பதில் கேள்வி கேட்டிருக்கிறார்.

ஆக முதல்வரின் அறிவிற்கு அப்பாற்பட்டு, வெறும் நிர்வாக அதிகாரிகள் நிலையில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. கேபிள் தொலைக்காட்சி விஷயமாக கலைஞர் குடும்பத்திற்கும் கலாநிதி குடும்பத்திற்கும் இடையே ஏற்பட்ட கெளரவப்போரில் பலிகடா ஆக்கப்பட்டவர் உமா சங்கர் என்றும் இந்த இரு குடும்பங்களும் இன்று ராசியாகிப் போனாலும் அரசு எடுத்த நிலைப்பாட்டின்படி அதன் உத்தரவுகளை நிறைவேற்றுவேன் என்று ஆர்வம் காட்டியதால்தான் இந்த நிலை என்று உமாசங்கரின் ஆதரவாளர்கள் தாங்கள் நடத்திய கண்டனக் கூட்டத்தில் தெரிவித்தார்கள் என்பதை வாசகர்கள் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகளின் கைகொடுக்குகளுக்கு ஆடத் தெரியாதவர் இந்த உமாசங்கர். பதவியே முககியம், அதற்காக ஆளும் கட்சியினரின் இசைக்கு ஆடியாக வேண்டும் என்கிற நிர்ப்பந்தங்கள் இல்லாதவர் உமாசங்கர்.

சாதிச் சான்றிதழ், சொத்துக்குவிப்பு விவகாரங்கள் ஆகியவை ஜோடிக்கப்பட்டவை என்றும் இவை எடுபடாமல் போகும் என்றும் உமாசங்கர் வட்டாரம் உறுதியாக நம்புகிறது.

ஆனால் இவரை இன்று காப்பாற்றியிருப்பது வரப்போகும் தேர்தலின் பின்னணியே என்பதும் இவரது ஆதரவாளர்களின் ஊகம்.

ஒரு தலித் இந்த அளவிற்கு அலைக்கழிக்கப்படலாமா என்கிற ஒரு வாதத்தை தலித் கட்சிகள் பலவும் ஆயுதமாக எடுத்துக் கொண்டதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

நீதிமன்ற உத்தரவும் இல்லாமல், உமாசங்கரின் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் விசாரணையில் இருக்கும் நிலையில் அரசின் பின்வாங்கல் உத்தரவு, பேதி மாத்திரை சாப்பிட்ட வயிற்றுவலிக்காரரின் நிலையையே காட்டுவதாக இருக்கிறது.

உமா சங்கர் உறுதியாக இருக்கிறார். இந்த இரு முகாந்திரங்களின் பின்னணியில் தன்னைப் பதவி நீக்கம் செய்துவிட முடியாது என்பதை என்ன தைரியத்திலோ யாருக்கும் வளைந்து கொடுக்கமாட்டேன்; என் வேகமும் குறையாது என்கிறார்.

எப்படியோ ஒரு பெரும் சேதத்திலிருந்து ஒரு நல்ல அதிகாரி காப்பாற்றப்பட்டதற்காகத் தமிழக அரசைப் பாராட்டியே தீர வேண்டும்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/09/10 அக்கறை சார்ந்த கருத்து

2010/09/03 பொருந்தா வாதம் செய்யும் பெருந் தலைவர்கள்!

2010/08/27 எக்காளமிடும் எதிர்க் கட்சித் தலைவி!

2010/08/20 ஏங்க வைக்கும் ஆட்சியர்

2010/08/13 வடிகட்டப்பட்ட கருத்து!

2010/08/06 அடித்தளத்தில் செலுத்த வேண்டிய கவனம்!

2010/07/30 விடிகிறபோது விடியட்டும்!

2010/07/23 தமிழ் வழிப் பொறியியல்: மூன்று கேள்விகள்!

2010/07/16 பாதி நன்றியைப் பகிர்ந்து கொள்வோம்!

2010/07/09 தூவப்பட்டிருக்கும் விதைகள்

2010/07/02 அரைக் கிணறு தாண்டினால் போதுமா?

2010/06/25 முற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 4:36 am
Filed under: Uncategorized
Identify others thoughts

Posted on Friday 17 September 2010

lena-tamilvananஏக்கத்தைக் கிளறுவதா?

இளவயதில் மனைவியை இழந்த ஒருவரை உடன் வைத்துக் கொண்டு இவரது நண்பர்கள் இருவர், தம் மனைவிகளின் குணாதிசயங்களை, அருமை பெருமைகளைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒருவரை, செல் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது என்று சொல்லி அடுத்த அறைக்கு அழைத்து ‘பாவம்! அவரை வைத்து கொண்டா இந்த தலைப்பில் விவாதம். அவருக்கு எவ்வளவு ஏக்கமாக இருக்கும்?’ என்று சொல்லப் போக “சாரி! சாரி! என்று நாக்கைக் கடித்துக் கொண்டார் தம் தவறை உணர்ந்தவராக.

வெளிநாடு செல்ல இருவர் விண்ணப்பிக்கிறார்கள். ஒருவருக்கு விசா கிடைக்கிறது. ஒருவருக்கு மறுக்கப்படுகிறது. இவர் போய்விட்டு வந்து போன இடத்தின் அருமை பெருமைகளை விசா கிடைக்காதவரிடம் அள்ளிவிடலாமா என்றால் கூடாது!

“ஏன்தான் போனோம் என்று ஆகிவிட்டது!” என்று ஆரம்பித்து நடந்த எதிர்மறை விஷயங்களை உளப்பாதிப்புகளை விலாவாரியாகச் சொல்லலாம். “பரவாயில்லை நீ வராதது நல்லதாகப் போயிற்று” என்றுகூட முடிக்கலாம்.

‘அந்த நகர்ல மனை உன்னை வாங்கச் சொன்னேன் நீ கேட்கலை. இப்ப அங்கே என்ன விலை தெரியுமா? என்பது தேவையற்ற ஏக்கக் கிளறல்.

“நேத்து தான் உங்க வீட்டுப் பக்கம் வந்தேன். உள்ளே வர நேரமில்லை. தப்பா எடுத்துக்காதே!” என்கிறார்கள் சிலர். இது தேவையா? சொல்லாமலே இருந்திருக்கலாமே! தவறாக எடுத்துக் கொள்ள நாம்தானே இப்போது களம் அழைத்துக் கொடுத்திருக்கிறோம்?

என்ன பேசுகிறோம்! எங்கு பேசுகிறோம்? யார் உடனிருக்கப் பேசுகிறோம் என்கிற மூன்று விஷயங்களை எவன் ஒருவன் கவனத்தில் கொண்டு பேசுகிறானோ அவனால் ஒருவித பிரச்னையும் வராது.

பிறர் ஏக்கத்தைக் கிளறும் வகையில் நாம் பேசுவது மற்றவர்களால் உள்நோக்கம் உடையதாகக் கருதப்படும். “என்னை எப்படி வெறுப்பேத்துனார் தெரியுமா?” என்று அவர்கள் வருந்தும்படி ஆகிவிடும். உண்மையில் நம் உள்நோக்கம் அதுவல்லவே!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/09/10 நம் வழிகாட்டிகள் யார்?

2010/09/03 அரைக் கிணறு தாண்டுவதிலும் உள்ள அர்த்தங்கள்!

2010/08/27 பத்தும் தொண்ணூறும்!

2010/08/20 நம்மையுமறியாமல் நாம் செய்யும் பிழைகள்!

2010/08/13 இதயக் கண்கொண்டு பார்க்கும் கலை!

2010/08/06 ஊருக்கு விடியுமுன் நம் விடியல்கள்!

2010/07/30 நற்பெயர் எடுப்பதில் நாட்டமில்லாதவர்கள்!

2010/07/23 இது ஆகாத வேலை என்று முடிவுக்கு வருமுன்…

 2010/07/16 மருத்துவ அறிவு அவசியம்; ஏன்?

2010/07/09 சின்னச் சின்ன கரிசனங்கள்!

2010/07/02 எல்லை உணர்வு உண்டா உங்களிடம்?

 2010/06/25 படிப்படியான மாற்றங்கள்!

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 4:29 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 17 September 2010

champions-league-twenty20-2.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

வி.முத்துராமன், தேனீ.

ஒரு அழகியைத திருமணம் செய்து கொள்ளலாமா?

அழகுக்காக மட்டுமா? வேண்டாம்!அழகுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பலர் மகிழ்ச்சியாக இல்லை என்று கேள்வி.

டி.விக்டர், முசிறி.

இரகசியம் காப்பாற்றப்பட வேண்டிய விஷயங்கள்!

கொடுக்கின்ற தானம், (உட்)கொள்கின்ற மருந்து, தானம் கொடுப்பது தெரிந்தால் கூட்டம் பெருகும். கொள்கிற மருந்து தெரிந்தால் கூட்டம் சிரிக்கும்.

அப்துல்கலாம், சென்னை-50.

அன்று சிறை சென்றவர்கள் இன்று சிறை செல்பவர்கள் வித்தியாசம்?

இன்று விளம்பரத்திற்காக பலர் உள்ளே போகிறார்கள்.

த. சசிகுமார், மரக்காணம்.

மனிதன் ஆசைக்கு அடிமையாவதேன்?

ஆசை என்பது வெடிமருந்து மாதிரியானது. இவன் தப்பிப்பதற்குள் அது வெடித்துவிடுகிறது.

எஸ்.தனசேகர், நெற்குப்பை.

பாரதிய ஜனதாவில் தினமும் கசமுசா நடக்கிறதே?

வானிலை அறிக்கையோடு இந்த அறிக்கையும் இப்போது ஊடகத்தில் சேர்த்து போச்சே!

ஆர். சுதாகர், நெமிலி.

திருடப் போகும் சமயத்தில் ஒருவன் என்ன நினைப்பான்?

பதவியில் உட்காரப் போன அரசியல்வாதியை இதுவரை நான் பேட்டி கண்டதில்லை!

எம்.விக்டர்ராஜ், சென்னை-72.

உங்களுக்கு நாற்காலி ஆசையாமே?

சேச்சே! எனக்குக் கைமேசை இருந்தால் போதும்! எழுதணும்! கடைசிவரை எழுதிக் கிட்டே இருக்கணும். அவ்வளவுதான்.

என்.தரணி, பொன்னேரி.

குட்டைப் பாவாடை அணியும் நடிகைகளைப் பற்றி?

குட்டையாய் அணிந்தால் தொழிலில் நெட்டையாய் வளர்கிறர்களாம். நெட்டையாய் அணிந்தால் தொழிலில் குட்டையாகிப் போகிறார்களாம்.

ராம. அருணாசலம், புதுக்கோட்டை.

பூடானில் புகையிலைப் பொருட்களே புழக்கத்தில் இல்லையாமே?

புகை மண்டலம் இல்லாத பூமியா? அப்போ அங்குள்ள டீக்கடைகளில் மூச்சை உள்ளுக்கு இழுத்து டீ குடிக்கலாம் என்று சொல்லுங்கள்.

ஏ.வெற்றி கொண்டான், திருச்சி-2.

நம்ப முடியாத இளமை என்றால் உங்கள் நினைவுக்கு வருகிற முதல் நபர்?

பேராசிரியர் க.அன்பழகன்! பல் தளர்ந்தாலும் சொல் தளரவில்லை. நடையில் தளர்வு கண்டாலும் சோடை போகாத மனிதர்!

எஸ்.வடிவேல், மதுரை.

முல்லைப் பெரியாறு பிரச்னை என்ன ஆகும்?

தமிழக கேரள அரசுகளின் கால்களில் தைத்த முள்ளாகவே எனக்குத் தோன்றுகிறது!

எல்.வெங்கிட்டு, காரைக்குடி.

வைகோ பதவி ஆசை அற்றவரா?

எல்.ஜி. பிரிந்து போனபோது அவர் சொன்ன உண்மைகளைப் புட்டுப் புட்டுப் பார்த்ததில் நடுவில் ஓர் உண்மை தெரிந்தது. அதாவது எந்த அரசியல்வாதியுமே ஏதோ ஒரு பதவியை எதிர்பார்த்தே இருக்கிறார் என்பது!

ஏ.மதுசூதனன், சீர்காழி.

அரசியல் கூட்டங்களில் ஒழிக சொன்னால் அடி விழுகிறதே?

ஒரு இடத்தில் ஜோதிடம் மாநாடு நடக்கிறது. அங்கு போய், ‘நடக்கும் என்பார் நடக்காது; நடக்காதென்பார் நடந்து விடும்’ என்று பாடினால் பாடியவருக்கு அடிவிழாமல் என்ன செய்யும்? அதுபோலத்தான் இதுவும்.

வி.ஜெயந்தி, திருச்சி.

அரசியலை நோக்கி நீங்கள் எப்போது பயணிக்கப் போகிறீர்கள்?

அரசியல் இப்போது எங்கு இல்லை? அது நம் வீடுகளிலேயே இருக்கிறது. எனவே இருக்கும் இடத்திலேயே அரசியல் பண்ண வேண்டியதுதான்! அதற்காக ஒரு பயணமா? ஆசிரியனைப் பார்க்க யாராவது சுற்றுலா செல்வார்களா?

க.தி.மணி, காரைக்குடி.

கவிஞர் வைரமுத்து இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டீர்களா?

பின்னே? கவிஞரை நான் பச்சையப்பன் கல்லூரியில் மாணவராக அறிவேன். அவரின் நேசன் நான். அவரது அபார வளர்ச்சியில் மனம் பூரிப்பவன் நான். அவரது திருமணத்தில் தலைதூக்கி நின்ற உணர்வு ஒன்றுதான் தமிழகத்தில் இனி ஒர திரைக் கவிஞன் இப்படிப்பட்ட அங்கீகாரத்தைப் பெறவோ உயரம் தொடவோ முடியாது என்பதே அது!

எஸ்.பி.எஸ்.வாசன், சென்னை-28.

மாவோயிஸ்டுகள் காவல் துறையினரை விடுவித்தது வியப்புத்தானே?

தங்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்டுகள் மட்டும் நினைத்ததை நிறைவேற்றியிருந்தால் இவர்களது அத்தியாயம் சீக்கிரமே நிறைவு பெற்றிருக்கும்.

பி.சுரேஷ், திருக்கழுக்குன்றம்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து 20 ஓவர் கோப்பையுடன் இந்தியா திரும்புமா?

தோனியின் அணி சோனி அணியாக ஆகிவிட்டது. என் எதிர்பார்ப்பு 20% மட்டுமே.

கே.இராமன், குன்றக்குடி.

ஸ்டாலின் மாப்பிள்ளை சபரீசன் விவகாரத்தில் ஜெயலலிதா மீண்டு வருவாரா?

தக்க ஆதாரங்களைத் திரட்டி வைத்துக் கொள்ளாமல் பேசி விட்டாரோ என்று தோன்றுகிறது.

ஏ. இருதயராஜ், பாளையங்கோட்டை.

சோனியா மீண்டும் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பற்றி….?

கட்சித் தலைமைப் பதவி தவிர வேறு எதற்கும் ஆசைப்படாத வித்தியாசமான தலைவி. காங்கிரஸ் ஆட்சி மாறலாம். மந்திரிகளின் பதவி பறிபோகலாம். இந்தப் பதவி பறிபோகாது. சோனியாவுக்கு இது நன்கு தெரிந்திருக்கிறது.

என்.குமார், பாண்டிச்சேரி.

தமிழக நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் தாக்கப்பட்டது பற்றி…?

பாவிகள்! நம்மவர்களின் வளர்ச்சியைக் கெடுக்க வெளியாள்கள் தேவை இல்லை; நம்மவர்களே போதும் என்பதற்கு மேலும் ஓர் அத்தாட்சி!

கே.எம்.ஆனந்தம், பண்ருட்டி.

கம்யூனிஸ்ட்டுகளின் நாள்கள் எண்ணப்படுவதாக ராகுல் காந்தி விளாசியிருக்கிறாரே?

கம்யூனிஸ்ட்டுகளின் மேல் எப்படி ஓர் ஆதங்கமோ கோபமோ இருந்தால் இப்படி அனல் கக்கியிருப்பார். கம்யூனிஸ்ட்டுகள் இந்திய மண்ணிலும் மங்கி வருவது கண்கூடு. உழைக்கும் மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஓர் ஒப்பற்ற சிந்தனை. அதனை சரிவரச் செயல்படுத்தாத தலைவர்களால் இப்படி ஆகிவிட்டது!

10 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
03 September 2010 ஜூனியர் கேள்வி-பதில்
27 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
20 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
13 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 August 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 July 2010 ஜூனியர் கேள்வி-பதில்
25 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 2:34 am
Filed under: Uncategorized