வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
“நான் ரஜினியைப் போல”!
வியட்நாமின் தலைநகரான ஹனாயில் இந்திராகாந்திக்குச் சிலை இருக்கிறது என்பது உண்மையில் எனக்குப் புதிய தகவலாக இருந்தது.
ஹனாயில் ஜமீல் ஸ்டீலில் பணிபுரியும் தமிழர் மணியிடம் “நாளை அந்த இந்திராகாந்தி சிலை இருக்கும் இடத்திற்கு அவசியம் அழைத்துப் போங்கள்” என்றேன்.
“ஹனாயில் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் என்று நான் ஒரு பட்டியலை தினந்தோறும் எப்படி எப்படி என்று போட்டிருக்கிறேன். அதன்படி முதல்நாள் பட்டியலில் இந்திரா பூங்கா இல்லை, அடுத்தநாள் தான் வருகிறது. நீங்கள் விரும்புவதால் நாளைய பட்டியலுக்கு அதைக் கொண்டுவந்து விடுகிறேன்.”
“இந்திரா பூங்கா பற்றிச் சொன்னீர்கள். ஒரு நாட்டின் தலைவரின் சிலையை மற்ற நாடுகளில் வைப்பதே பெரிது என எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திராவுக்கு என ஒரு பூங்காவே நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்பது எனக்கு உண்மையில் மிக சுவாரசியமாகவும், பெருமிதமாகவும் இருக்கிறது மணி சார்.”
“வாருங்கள் அங்கு வந்து பாருங்கள் அசந்து போவீர்கள்!”
நானே பெருமிதமாகச் சொல்லிவிட்டபிறகு இன்னுங்கூட ஒருவித உயர்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார் என்றால் நிச்சயம் ஏதோ விஷயம் இருக்கிறது என்று ஊகம் செய்தேன்.
“காலையில் சீக்கிரம் எழுந்து விடுவீர்களா?”
“உங்களையே எழுப்பிவிடுமளவு எழுந்து விடுவேன்” என்கிற என் பதிலை மணி மிகவும் இரசித்தார்.
மணியின் வீடு, ஒரு படுக்கையறை கொண்ட Flat. ஆகையால் மணி எனக்குத் தம் படுக்கையறையை விட்டுக் கொடுக்க முன்வந்து வரவேற்பறையில் சோபாவில் படுத்துக் கொள்ள முன்வந்தார்.
“இது நியாயமில்லை. நான் சோபாவில் படுத்துக் கொள்கிறேன். எனக்கு இது பிடிக்கும். எனக்குப் பெரிய செளகரியமெல்லாம் தேவையில்லை. இந்த விஷயத்தில் நான் ரஜினி மாதிரி எங்கு படுத்தாலும் எனக்குத் தூக்கம் வரும்” என்று என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தேன். மணியிடம் ஒன்றும் எடுபடவில்லை.
நான் பயணங்களின்போது இரண்டு அலாரங்களை எப்போதும் எடுத்துக் கொள்வேன். ஒன்று காலை வாரினாலும் ஒன்றில் பாட்டரி இழந்தாலும் மற்றது காப்பாற்றும் என்கிற நம்பிக்கை.
ஐந்து நிமிட இடைவெளியில் ஐந்து மணி நேரம் மட்டும் தூங்கும்படி அலாரங்களை அடைத்துவிட்டுத் தூங்கினேன்.
சரியாக எழுந்து திருடனைப்போல் சத்தம் ஏதும் எழுப்பாமல் குளித்துக் தயாராகி கையில் இருந்த டிரான்சிஸ்டரைத் தட்டி பிபிசியின் உலகச் செய்திகளைத் கேட்டுவிட்டு வியட்நாமிய மொழியின் பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன்.
வியட்நாமிய இசை கிட்டத்தட்ட மேற்கத்திய இசைபோல் ஆகிவிட்டது. இதை ஒப்பிடும்போது நாம் எப்படியெல்லாம் இன்னமும் பாரம்பரிய இசையிலிருந்து எந்த அளவு விலகாமல் இருக்கிறோம் என்பது புரிந்தது.
காலையில் எழுந்த மணி கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தவர் என்னது! குளித்து தயாராகிவிட்டீர்களா? என்று வியந்து போனார்.
“தேவைக்கு ஏற்றபடி அன்றாட தினத்தை மாற்றி வடிவமைத்துக் கொள்வேன் மணி சார். தூக்கம், உணவு, குளியல் என்று எல்லாவற்றையும் நம் வீட்டில் நம் நாட்டில் இருப்பதுபோல் அமைத்துக் கொண்டால் வந்த இடத்திற்குப் பொருந்தாதே சார்” என்றேன்.
இதை அவர் மிகவும் ஏற்பது போல் ஓர் இதழோரப் புன்னகை ஒன்றைச் சிந்தினார்.
வரவேற்பறையை ஒட்டிய ஒரு தடுப்பின் பின்னால் தான் சமையலறை.
சட்டென்று சில உணவு வகைகளைச் சுடவைத்துக் கொடுத்தார். அவற்றுள் ஒன்று வியட்நாம் பாணி சூப்.
“நீங்கள் குறிப்பிட்ட வியட்நாம் பெண்மணி தயாரித்த சூப்பா இது”
“ஆமாம்”
“உங்கள் நேரமும் அவர் வேலைக்கு வரும் நேரமும் வேறுவேறு. பிறகு எப்படித் தகவல் தெரிவிப்பீர்கள்?”
“இந்த மேசையில் எழுதி வைத்துவிடுவேன். வீட்டில் என்னென்ன செய்யவேண்டும், என்னென்ன சமைக்க வேண்டும் என்று ஒரு தாளில் எழுதிப் பார்வையில் வைத்துவிடுவேன்.”
“மறுநாள் பகல் நேரத்தில் வந்து அனைத்து வேலைகளையும் முடித்து வைத்துவிட்டுப் போய்விடுவார்.”
“ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறதே! சாவி?”
“அவரிடம் ஒன்று, என்னிடம் ஒன்று!”
“ஒன்றும் பயமில்லையா?”
“இந்த வியட்நாமியப் பெண் மிகவும் நம்பிக்கையானவர். ஒன்றுமே களவு போகாது. எழுதி வைத்த வேலைகளை அவ்வளவு சரியாகவும் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் முடிப்பார்.”
“வீட்டு வேலை செய்கிற பெண்மணியைப் பற்றி ஒரு குறைகூடத் சொல்லாமல் இருக்கிற நல்ல முதலாளி நீங்கள்!”
சிரித்துக் கொண்டார் மணி.
மணி பிரிட்ஜைக் காண்பித்து “நீங்கள் விரும்புவீர்கள் என்று பழச்சாறுகள் கொண்ட டப்பாக்கள், பழங்கள், ஐஸ்கிரீம்கள், உதிரித் தீனிகள் என்று அனைத்தையும் வாங்கி நிறைத்திருக்கிறேன். இந்த வீடு உங்கள் வீடு போல. இது உங்கள் விட்டு பிரிட்ஜ் என்று நினைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்பதை எடுத்தக் கொள்ளுங்கள்.நான் எடுத்துத் தர வேண்டும் என்பதே இல்லை. வெட்கப்படாமல் வேண்டுமென்கிற நேரத்தில் வேண்டுமென்பதை எடுத்துத் தயங்காமல் பயன்படுத்துங்கள் என்றார்.
வெளிநாடுகளில் என்னை விதவிதமாக உபசரித்தவர்கள் உண்டு. இப்படி பிரிட்ஜ்ஜை நிறைத்து எல்லாம் உங்களுக்கு விருப்பம் போல் பயன்படுத்துங்கள் என்று சொன்னவர்களை நினைவுப்படுத்திப் பார்க்கிறேன். உஹும் எவரும் நினைவிற்கு வர மறுக்கிறார்கள்.
பிரிட்ஜ்ஜைப் பார்த்தேன். உயர்ந்த உள்ளம் படத்தில் ஓட்டல் பாடலாக ஒன்று வரும். “இஷ்டம் போல் வெட்டுங்கடா டோய்” என்று கமலஹாசன் ஒரு பாடல் பாடுவோரே அதில் ஆரம்பித்து பழங்காலத்தில் “இதுவே எனக்குப் போதும்” என்று ரங்கராவ் முடிப்பாரே அந்த நிலையில் இருந்தேன்.
தமிழ்க் தொலைக்காட்சிகளை எவ்வளவோ திட்டுபவர்கள் உண்டு. இவர்கள் இவற்றின் அருமையை உணர லாவோஸ், கம்போடியா போன்ற தமிழ் தொலைக்காட்சிகளே இல்லாத பகுதிகளில் சுற்ற வேண்டும். ஒரு சிறு தமிழ் நிகழ்ச்சியையாவது பார்க்க மாட்டோமா? தமிழகச் செய்திகள் என்ன? என ஏங்கிப்போவோம் ஏங்கி. நானும், இந்த மனநிலையில்தான் இருந்தேன். மணி வீட்டில்தான் இதற்குத் தீனி கிடைத்தது. பல தமிழ் சேனல்களை இவரது தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்தபோது என் மனம் அடைந்த நிறைவு இருக்கிறதே அதை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.
“மணி சார் எத்தனை மணிக்குப் புறப்படுகிறோம்? எப்படிப் போகிறோம்
ஹுவாங்தான் நம்மை அழைத்துச் செல்கிறார். நேரம் ஏழரை என்று சொல்லியிருக்கிறேன்.”
“எத்தனை மணிக்கு?”
“மணி ஏழு இருபத்தைந்து!
“நீங்கள் புறப்பட இன்னும் பத்து நிமிடம் ஆகும்போல தெரிகிறதே”
பரவாயில்லை. ஹுவாங் காத்திருப்பார்.
“அப்படியில்லை மணி சார்! எழரை என்றால் ஏழரை. நான் கீழே இறங்கி வருகிறேன் நீங்கள் தயாராகி வீட்டைப் பூட்டிக் கொண்டு முன்பின் வாருங்கள். நான் தயாராகி விட்டதால் கீழே போய் அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். ஒருவராவது நேரத்திற்குப் போனதாக இருக்கட்டும்” என்று பதிலுக்குக் காத்திராமல் கதவைத் திறந்து கொண்டு ஏதோ கட்டடத்தில் தீப்பிடித்துக் கொண்டவனைப்போல் லிப்டைக் கூட மதிக்காமல் படிக்கட்டுகளில் ஓடி ஓடி இறங்கினேன்.”
மணி ஏழு இருபத்து எட்டு. சரியாகக் கூட அல்ல! ஹுவாங்கிற்கு முன்னால் போய் குறித்த நேரத்தைக் கடைப்பிடிப்பதில் இந்தியர்களும் வல்லவர்களே என்று நிரூபிக்க வேண்டும் என்பதே என் ஆசை. 7.29க்கெல்லாம் கீழே இறங்கி ஹுவாங்கின் கார் நிற்கும் இடத்திற்குப் போனால்
ஹுவாங் காரின் அருகே…
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/07/09 வியட்நாமியர்களால் நேசிக்கப்படும் இந்தியத் தலைவர்!
2010/07/02 டோனாவிடம் லேனாவுக்குப் பிடித்த அம்சம்!
2010/06/25 கண்ட வயதில் கல்யாணம்!
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































