வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
டோனாவின் பாராட்டைப் பெற்றதையும் அவரது வியப்பிற்கு உள்ளானதையும் நான் எந்த இரகத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. லாவோஸ் விமான நிலையத்தில் முதன் முதலில் இறங்கியபோது முகத்தில் இறுக்கமும் செயல்பாடுகளில் படுகண்ணியமும் காட்டிய இந்த டோனா இந்தச் சில தினங்களில் எவ்வளவு மாறிவிட்டார் என்பது என் வியப்பாக இருந்தது.
சற்று நெருக்கம் (?) காட்டும் அறிகுறியாக இவையெல்லாம் பட்டதால் டோனாவின் குடும்பத்தைப் பற்றி விசாரிப்பது என்கிற முடிவிற்கு வந்தேன். என் குடும்பத்தைப் பற்றி எந்த ஆர்வமும் காட்டாதது என் குடும்பத்தைப் பற்றியும் எதுவும் கேட்காதே என்று சொல்லாமல் சொல்லும் செய்திதான் என்பதை நாமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இதையும் மீறி நான் கேட்கப்போகும் கேள்வி அதிகப் பிரசங்கித்தனம்தான்.
“உங்கள் குடும்பதைப் பற்றிச் சொல்லுங்களேன் டோனா!”
தயக்கமில்லாமல் பதில் வந்தது. ஆனால் அந்தப் பதில் மிகச் சுருக்கமாக இருந்தது. “ஒரு மகள் டான்சர். பிரான்சில் வசிக்கிறாள். ஒரு மகன், ஆஸ்திரேலியாவில் படிக்கிறான்” என்று முடித்துக் கொண்டார்.
கணவரைப் பற்றி இவர் சொல்ல விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. எனவே இதற்கு மேல் கேள்வி கேட்பதை டோனா விரும்பவில்லை. மகள், மகனைப் பற்றிக் கேட்டால் பதில் வரும். ஆனால் இதுபோதும் என்று இருந்தது எனக்கு.
நீ வந்திருப்பது சுற்றிப் பார்க்க. நான் வந்திருப்பது உனக்குச் சுற்றிக் காட்ட. உனக்கும் எனக்கும் சில டாலர்கள் வரவு செலவு. இதில் உனகென்ன என் குடும்பத்தைப் பற்றிய அக்கறை? என்று சொல்லாமல் சொன்னதுதான் அந்தச் சுருக்கமான பதிலின் உள்ளர்த்தம்.
‘அதைப் பற்றிக் கேட்காதீர்கள்’ என்று டோனா முகத்திலடித்தாற்போல் பதில் சொல்லாமல் விட்டாரே, அதுவே பெரிது.
நான் கேட்காத வினா ஒன்றிற்கு டோனாவே பதில் சொல்வதுபோல அரம்பித்தார். “என் பிள்ளைகளின் நலனைக் கருத்தில் கொண்டு பிரான்சில் 30,000 டாலர்களுக்கு ஒரு சொத்தை வாங்கிப் போட்டேன். இன்று அது 4,00,000 டாலர் விலை போகும்” என்றார்.
ஏதுடா இது! பெரிய டமாரமாக ஆரம்பித்துவிட்டாரே! நீ தருகிற காசு எனக்கு வெறும் ஜுஜுபி என்று சொல்ல வருகிறாரா? அல்லது ‘நான் பெரிய ஆள். அல்பமாக ஏதாவது தந்து வைக்காதே!’ என்று சொல்ல வருகிறாரா? எந்த இரகத்தில் இவரது வாக்குமூலத்தைச் சேர்ப்பது என்று திகைத்தேன்.
நாங்கள் சென்ற புத்தாகார்டன் வியாண்டின் நகரிலிருந்து 58 கி.மீ. தள்ளி இருக்கிறது.
வழியெங்கும் பலரும் மணல் வியாபாரம் செய்வதைப் பார்த்தேன். இதைப் பற்றிக் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.
“இதென்ன மெக்காங் ஆற்றுக்குள் பலரும் பொக்லைனை இறக்கி சகட்டுமேனிக்கு மணலை அள்ளுகிறார்களே; இவர்களைக் கேள்வி கேட்பாரே இல்லையா?”
“தெரியாதா உங்களுக்கு? லாவோஸ் நாட்டின் மகிப் பெரிய வருமானங்களுள் ஒன்று மணல் ஏற்றுமதி மூலம் வருகிறது. உரிமம் உள்ளவர்கள் எவரும் எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக் கொள்ளலாம்”.
“எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது?”
“ஆற்றுமணல் கிடைக்காத வளைகுடா நாடுகளுக்கெல்லாம்!”
“ஓ! அவ்வளவு தூரம் போகிறதா?”
“நன்றாக”
“இப்படி எடுத்தால் மெக்காங் ஆற்றிற்குக் கேடு வராதா?”
“என்ன கேடு வந்துவிடப் போகிறது? ஒன்றும் ஆகாது.”
ஆற்று மணலை எடுத்தால் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடும் நம் நாட்டின் நிலைமை இங்கு இல்லையா? உள்நாட்டுத் தேவைக்கு மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் சேர்த்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று தாராளம் காட்டும் லாவோசின் கொள்கை சரியா என்தைச் சுற்றுப் புறச் சூழல் வல்லுநர்கள்தாம் விளக்க வேண்டும். இந்த நீண்ட பயணத்தில் கிராமத்து லாவோசைப்பார்க்க முடிந்தது. இங்கு உள்ள கிராமத்து வாழ்க்கைத் தரமெல்லாம் பெரிய கேள்விக்குறிதான்.
வயிறு வீங்கி, கண்கள் உள்ளே போய், தலைமுடி பனங்கொட்டை நாறுகளாய்க் காட்சி தரும் பிள்ளைகளின் அவலம் இங்கும் உண்டு.
பிய்ந்துபோன குடிசைகளின் முகவரிகள் இந்த நாட்டின் வறுமையை நன்கு அடையாளம் காட்டுகின்றன.
வேலையற்ற இளைஞர்கள் பலரைச் சாலையின் இருமருங்கும் காணமுடிகிறது. வியான்டின் நகரத்தோடு போயிருந்தால் லாவோஸைப் பற்றிய என் படப்பிடிப்புத் தவறானதாக இருந்திருக்கும். புத்தா கார்டனைப் பார்க்க வந்தது நல்லதாகப் போயிற்று.
லாவோசின் மிகச் சிறந்த உல்லாசத் தலமான புத்தா கார்டனுக்குப் போகும் வழி குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றது.
ஆனபோதும் டோனா தன் வாகன வேகத்தைக் குறைப்பதாகவே தெரியவில்லை. டமார்! மடேல்! என்று தூக்கித் தூக்கிப் போட, நல்ல வேளை நான் அரை வயிறு சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டது நல்லதாகப் போயிற்று.
நான் வேகத்தைக் குறைக்கச் சொல்வேன் என்று டோனா எதிர்பார்த்திருக்கலாம். வாகனம் ஓட்டுகிற ஒரு பெண்ணிற்கு இந்த வேகத்தில் உடன்பாடு என்றால் இதற்கெல்லாம் அசருபவனா இந்த ஆண்? என்கிற வீம்பு எனக்கு வரவே, “நீ என்ன வேகம்னாலும் ஓட்டு பார்க்கலாம்” என்று நானும் அமர்ந்திருந்தேன்.
இறங்கி ஏதாவது வாங்கலாம் என்று ஆசைப்பட்டால் “ஊகும்! இதை வாங்க இந்த இடம் பொருத்தமில்லை; இங்கு விலை அதிகம்; இங்கு ஏமாற்றுவார்கள்; நான் வேறு இடம் அழைத்துப் போகிறேன்” என்பார் டோனா.
இந்த உள்ளூர் மனிதர்களோடு இதுதான் பெரிய சிரமம். ஒன்றையும் வாங்கவிடாமல் செய்து, கடைசி நிமிடம் வாங்க நேரமின்றிப் போய், வெறுங்கையுடன் புறப்படும்படி ஆகிவிடும்.
நினைப்பும் வாய்ப்பும் நேரமும் வாய்க்கிறபோது உடனே வாங்கிவிட வேண்டும். சில டாலர்களை மிச்சப்படுத்துகிறோம் பேர்வழி என்று வாய்ப்பை நழுவவிடவே கூடாது.
டோனாவுக்கு என்ன அவசரமோ, விரட்டுவிரட்டு என விரட்டிக் கொண்டிருந்தார். ஓட்டுவதில் நல்ல கட்டுப்பாடு இருந்ததால் நானும் இதை அனுமதித்தேன்.
ஜியங் ஹுவான் (Xieng Khuan) என்பதுதான் புத்தாபார்க் எனப்படுகிறது. இதன் இன்னொரு பொருள் Spirit city என்பதாம். 1958 ஆம் ஆண்டு லுவாங் பு என்ற யோகியால் வடிவமைத்த பூங்கா இது. புத்தமதம், இந்துமதம் ஆகியவற்றின் புராணங்களைப் படித்ததின் விளைவாக புத்தர் சிலைகளையும் இந்துக் கடவுள்களையும் கான்கிரீட்டால் உருவாக்கி இந்தப் பூங்காவை நிர்மாணித்தாராம். புத்தர் சிலைகளுடன் விஷ்ணு, சிவன், அர்ஜுனன் ஆகிய சிலைகள் வினோதமாகவும் பெரியனவும் சிறியனவுமாக இருக்கக் காரணம் லுவாங் பு சொல்லியபடி சிற்பங்களை உருவாக்கும் திறமையில்லாத கலைஞர்கள் உருவாக்கியதுதானாம்.
பூங்காவிற்குள் நுழைய ஒரு டாலர், கேமராவிற்கு ஒரு டாலர் என்று கட்டணம் வாங்குகிறார்கள். இவற்றை டோனாவே கொடுத்தார். சிறிய தொகை என்பதால் என்னைக் கேட்கவில்லையா? அல்லது கடைசியில் பில் நீட்டப்படுமா? தெரியவில்லை. காலை 8 மணி முதல் 4.30 மணி வரை இந்தப் பூங்கா திறந்துள்ளது.
புத்தா கார்டனில் நான் மிக இரசித்தது ஓர் ஐந்துதலை நாகத்தை. ஐயோ ! எங்கு பார்த்தாலும் இப்படி இந்திய கலாசாரமாகவே இருக்கிறதே! இதைப் பற்றி நமக்குச் சரிவரச் சொல்வார் இல்லையே! என்று ஏங்கினேன்.
டோனாவுக்கு இவை பற்றியெல்லாம் சரிவரத் தெரியவில்லை. இன்னொரு வழிகாட்டி கிடைத்தால் டோனாவைக் கூடப் புறக்கணித்துவிட்டு ஓர் உள்ளூர் வழிகாட்டியை நியமித்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் ஈ காக்காயைக் காணோம்.
டோனவுக்கு நவீன லாவோஸ் தெரிந்து அளவிக்குச் சரித்திர லாவோஸ், புராதன லாவோஸ் தெரியவில்லை என்பது குறை.
டோனா அடிப்படையில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் நிதி மேலாளராக இருந்தவர். வழிகாட்டித் தொழில் இவர் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. இருக்கிற செய்திகளை வைத்துக் காலத்தை ஓட்டுகிறார். இவரைக் குறை சொல்லிப் பயனில்லை. நீர் வடிவில் ஏதும் சாப்பிட்டு நேரமாகிவிட்டது. ஏதும் சாப்பிடலாம் (குறிப்பாக இளநீர்) என்றால் இந்தம்மா வாகனம் ஓட்டும்விதமே உள்ளே போனதெல்லாம் வெளியே வந்துவிடும் போலிருக்கிறதே!
“நாளை எங்கு போகிறோம்?”
“லாவோ ஐ டெக்கிற்கு”
“புரியவில்லை!”
“லாவோஸ் நாட்டில் உற்பத்தியாகும் கலைப் பொருள்களிலிருந்து கணினி சமாசாரம் வரை அனைத்தையும் கொண்ட ஒரு மிகப் பெரிய கண்காட்சிக்கு”
“வெகு தூரமா?”
“இல்லை. அருகில்தான். ஏன் கேட்கிறீர்கள்?”
“இல்லை. அந்தச் சாலையாவது நல்ல சாலையாக இருக்குமா என்று பார்த்தேன்”
இதற்கு டோனா பெரிதாகச் சிரித்தார். இது என்னு நகைச்சுவையா? இதற்கு ஏன் இப்படிச் சிரிக்க வேண்டும்?
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

































நல்லதொரு சவால்!
விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?
காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!
நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?
காய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி