எது அசல்!? எது போலி?
சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணைந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் படுஉற்சாகமாகி, தி.மு.க. மட்டுமே உண்மையான திராவிட இயக்கம், மற்றவையெல்லாம் போலி என்று பேசியிருக்கிறார்.
காங்கிரஸ் பல கூறுகளாகக் காலம் காலமாக உடைந்தபோதெல்லாம் பிரிந்து போனவர்கள் காங்கிரஸ் என்ற சொல்லையும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் எந்த காங்கிரஸ் தலைவரும் மற்ற காங்கிரஸ் கட்சிகளைப் போலி என்று சொல்லவில்லை.
தி.மு.க.விற்கே திராவிடம் என்ற சொல்லைத் தானமாகத் தந்த கட்சி பெரியாரின் திராவிட இயக்கம்தான். அண்ணாவேகூட திராவிடம் என்ற சொல்தான் இனி வருங்காலத்தில் பெரும்பான்மை மக்களைத் தம்பக்கம் ஈர்க்கக் கூடிய சொல் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். இரண்டறக் கலந்து ஒன்றாய் வாழ்ந்த தமிழர்களுக்கு திராவிடம், ஆரியம் என்கிற பாகுபாட்டை ஊட்டி வித்தியாசப் பார்வை பார்க்கக் கற்றுத் தந்தவை திராவிட இயக்கங்களே.
திராவிட இயக்கங்களைப் பற்றிக் காமராசருக்கு இருந்த கோபம்தான், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதாக வெளிப்பட்டது.
முதலில் தி.மு.க. மட்டும்தான் உண்மையான இயக்கம் என்று சொல்ல வந்தவர், நல்லவேளையாக நினைவிற்கு வந்து தி.க.வும் உண்மையான இயக்கம்தான் என்று பெருமை சேர்த்திருக்கிறார். கி.வீரமணியின் வருத்தத்திற்கு ஆளாகாதபடி.
தி.மு.க. தலைவரின் வாதப்படியே வைத்துக்கொண்டால் கூட, ஆரியத்திற்கு எதிரான சொல்லான “திராவிடத்தைப் பயன்படுத்துங்கள்; தமிழன் என்று சொல்லாதீர்கள். உங்களைத் திராவிடன் என்றே அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள் என்றுதானே பெரியார் கேட்டுக் கொண்டார்? பெரியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க தங்களைத் திராவிடர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் கட்சிகளின் போக்கை எப்படி குறை சொல்ல முடியும்?
திராவிட என்கிற சொல்லை எந்தத் திராவிடனும் ஏன் திராவிடத்தில் நம்பிக்கை உள்ள எவரும் பயன்படுத்த முடியும். இச்சொல்லுக்கு தி.மு.க. மட்டுமே எப்படி ஏகபோக உரிமை கொண்டாட முடியும்?
தி.மு.க.வே திராவிட இயக்கத்திலிருந்து பெயரை இரவல் பெற்ற கட்சி என்கிறபோது தி.மு.க.வை நாற்றங்காலாகக் கொண்டு வெளியில் பிரித்து நடப்பட்டு வளர்ந்த கட்சிகளைப் போலி என்கிற வாதம் சற்றும் பொருந்தவில்லை.
பெரியார் இன்று இருந்திருந்தால் ஆரியத்திற்கு எதிராக அணிவகுத்து நிற்கிற எந்த ஓர் சிறு அமைப்பையும் வரவேற்கவே செய்வார்.
பதவிக்கு வரவும், ஓட்டு வாங்கவுமே ‘திராவிட’ என்ற சொல்லை மற்ற கட்சிகள் பயன்படுத்துகின்றன என்கிற வாதம் இருக்கிறதே இது ஒரு பலவீனமான வாதம்.
அப்படிப் பார்த்தால் பதவிக்கு ஆசைப்படாத தேர்தலில் நிற்காத பெரியாரின் கி.வீரமணியின் திராவிட இயக்கம் மட்டுமே அசல் இயக்கமாக இருக்க முடியும்.
லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்
2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!
2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!
2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?
2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!
2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!
2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?
2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!
2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!
2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!
2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!
2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?
2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?
2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!
2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!
2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!
2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!
2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!
2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?
2009/12/31 அம்புகளை நோவானேன்?
2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!
2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!
2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!
2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!
2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!
2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!
2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!
2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…
2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!
2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!
2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்
2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்
2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!
2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?
2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!
2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?
2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!
2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!
2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!
2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!
2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!
2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!
2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!
2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!
2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்
2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி
2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?
2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!
2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!
2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!
2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!
2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!
2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?
2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!
2009/04/10 தீயினும் கொடியது காமம்!
2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!
2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!
2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?
2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?
2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!
2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!
2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?
2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?
2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?
2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்
2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?
2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…
2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!
2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!
2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்
2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!
2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!
2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!
2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!
2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!
2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!
2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..
2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்
2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?
2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்
2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?
2008/09/05 இருபக்க இடைவெளிகள்!
2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!
2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்
2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!
2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்
2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு
2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்
2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?
2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…
2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!
2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!
2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!
2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!
2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?
2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?
2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?
2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!
2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!
2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!
2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!
2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?
2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!
2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?
Most Commented Posts































