வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
டோனா விட்ட டோஸ்!
லாவோ ஐடெக் கண்காட்சி மிகப் பெரிய சமாசாரமாக இருந்தது. சொல்லப்போனால் மிரட்டிவிட்டது மிரட்டி. நம் சென்னை நந்தம்ம்பாக்கம் பொருட்காட்சி போல, உலகச் செம்மொழி பொருட்காட்சி போல, உலகச் செம்மொழி மாநாடு நடக்கும் கொடிசியா அரங்கு போல் இருந்தது எனலாம்!
ஆனால் உள்ளே இருந்த கடைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த வாரம் வெளியாகியிருக்கும் படத்தில் எனக்கு வலப்புறம் உள்ள இரு சிலைகளைப் பாருங்கள். இவற்றில் ஆரம்பித்து கலைப்பொருள்களென்ன, கைவினைப்பொருள்கள் என்ன, கணினி என்ன, உணவுக் கடைகளின் வரிசை என்ன, உடைகளின் சீர்வரிசை என்ன! அடேயப்பா! நடந்து நடந்து கால் வலித்ததுான் மிச்சம்.
வெளிநாட்டில் பொருள்களைப் பார்த்து எளிதில் ஆசைப்படாத எனக்கு இந்தக் கண்காட்சியில் பெரிய மனப்போராட்டமே ஏற்பட்டது. சட்டைகள், டி-சர்ட்டுகள் என் இரசனைக்கு ஏற்றபடி இருந்தன.
சாவிக் கோர்வைகளுக்கென்றே ஒரு தனி இரட்டைக் கடை. யப்பா! என்னென்ன வகையிெல்லாம் சாவிக் கோர்வைகள் தெரியுமா?
ஓர் இடத்தில் தடுமாறி நான் விழப்போக, டோனா என் கையைப் பிடித்து நான் விழாமல் தடுக்க, அதைப் பார்த்த சாவிக்கடைக்காரப் பெண்கள் இருவர் சிரிக்க, அவர்கள், இருவரும் எங்களைத் தம்பதி என்றே நினைத்துக்கொண்டிருக்கக் கூடும்! நாங்கள் போனது அலுவலக நேரம் என்பதால் அதிகக் கூட்டமில்லை. எனவே, கடைக்காரப் பெண்களுக்கு வேடிக்கை பார்க்கத் தோதாகிவிட்டது.
டோனா பெரும்பகுதிக் காலம் பிரான்ஸ் நாட்டிலேயே வாழ்ந்துவிட்டதால், அவர் உள்ளூரின் வழிகாட்டிப் பெண்ணாக நன்கு அறியப்படாததால் எங்கள் இருவரையும் கடைக்கார பெண்கள் பலரும் எங்களைக் கணவன், மனைவியாகவே பார்த்ததுபோல் எனக்குப் பட்டது.
இதென்ன ஊகம்? இதெப்படி உங்களுக்கு தெரிந்தது என்கிறீர்களா? உண்மைதான். இது ஓர் ஊகமே. ஆனால், ஒவ்வொருவரும் பார்க்கிற பார்வையை வைத்தே நம்மை எத்தகு கோணத்தில் பார்க்கிறார்கள் என்று ஓரளவு கண்டுபிடித்துவிட முடியாத என்ன? கடைகளில் உள்ளவர்கள் பெண்கள் என்று நான் இங்கு இருமுறை குறிப்பிட்டதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.
அதென்ன பெரும்பாலான கடைகளில் இங்கு பெண்களே இருக்கிறார்கள்? லாவோஸ் பெண்கள் நல்ல உழைப்பாளிகள்; லாவோஸ் ஆண்கள் இந்த அளவிற்கு உழைப்பாளிகள் இல்லையோ என்று எனக்குத் தோன்றியது.
எதோ பெண்கள் லாவோ ஐடெக் என்று அறிவித்ததைப்போல பெரும்பாலான கடைகளில் பெண்கள், எனக்கு சந்தேகம் வந்துவிட டோனாவைக் கேட்டேன்.
“அதென்ன எங்கு பார்த்தாலும் கடைகளில் வெறும் பெண்களாகவே இருக்கிறார்கள்.
மெல்லிய புன்னகையைச் சிந்திவிட்டு டோனா சொன்னார். “லாவோ பெண்கள் ஆண்களின் கைகளை அதிகம் எதிர்ப்பார்ப்பது இல்லை. நினைவுக்கு வருகிறதா பாருங்கள். நாம் விமான நிலையத்திலிருந்து வந்து கொண்டிருக்கும்போது உடை வாங்க வேண்டும் என்று நம் வாகனத்தை நிறுத்தச் சொல்லிப் பின்னோக்கி ஓட்டச் சொன்னீர்களே, அந்தக் கடையில் ஆண்களா இருந்தார்கள்? மெக்காங் நதி ஓரம் இரவு உணவுக் கடையில் சாப்பிட்டீர்களே, அங்கு கடை நடத்தியவர் ஒரு பெண்தானே? இன்னும் பல உணவுக் கடைகளை வழியெங்கும் பார்த்தீர்களே, அதை மெல்ல நினைவுபடுத்திப் பாருங்கள்! எத்தனை கடைகளில் ஆண்கள் இருந்தார்கள்? என்ன, நான் சொல்வது சரிதானே?”
“ஆமாம். நீங்கள் சொன்ன பிறகுதான் நினைவிற்கு வருகிறது. பல இடங்களில் பெண்கள்தாம் கடைகளை நிர்வகிக்கிறார்கள்.
“அதுமட்டுமல்ல மிஸ்டர் லேனா! கல்லாவில் பெண்கள்தாம் இருப்பார்கள். உதவிக்குக் கணவனோ, மகனோ இருந்தால்கூட அவர்களைக் கல்லாவைக் கையாளப் பெரும்பாலும் அனுமதிக்கமாட்டார்கள்.”
“ஏன், நம்பிக்கை இல்லையா?” ஆமாம் என்றும் சொல்லலாம். சட்டென்று ஒரு பெரிய நோட்டை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இரவு குடிக்கப் போய் விடுவார்கள்.
“இதைப் பொதுப்படையாகவே எடுத்துக்கொள்ளலாமா? இல்லை. விதிவிலக்குதான் உண்டா?”
“அது அந்தந்தக் கணவன் மனைவிக்குள் இருக்கும் புரிந்துணர்வைப் பொறுத்தது”
உள்ளே நாங்கள் பொருட்காட்சி அரங்கில் இருந்தாலும் கசகசவென்று புழுக்கம் இருந்தது. நமக்கு வறட்டு வறட்டு என்றது.
“எனக்கு மினரல் வாட்டர் வேண்டும்.”
“வாருங்கள். அந்த இடது நுழைவாயிலில் தண்ணீர்க்கடை ஒன்றை இருந்ததைப் பார்த்தேன். அங்கு போவோம்.”
வெகு தூரம் நடக்க வேண்டியிருந்தாலும் டோனா எவ்விதக் களைப்பும் காட்டாமல் இருந்தது, வெயில் பற்றிச் சலித்துக்கொள்ளவும் இல்லை. அப்பவே சொல்லித் தொலைப்பதற்கென்ன? என்னை இப்படித் தண்ணீர் பாட்டில் வாங்கவெல்லாம் அலையவிடுகிறாயே என்கிற சலிப்பைக் கூட முகத்தில் காட்டவில்லை.
நான் விரைந்து நடத்து தண்ணீர்க் கடையில் மினரல் வாட்டர் பாட்டில் வாங்கக் காசை நீட்டியபோது ஒரு முரட்டுப் பெண்ணின் கை என்னைத் தடுத்தது. இந்தப் பெண்மணி லவோ மொழியில் காச்மூச் என்று கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
தள்ளி நின்ற டோனா என்னவோ ஏதோ என்று பயந்து அப்பெண்ணைத் தொட்டோ உரசியேவிட்டேன் என்று ஊகித்து (?) ஓடிவந்தார். எனக்கும் இப்பெண்ணின் கோபத்திற்கு ஆளானதற்குக் காரணம் என்ன ஏது என்று புரியவில்லை.
டோனா லாவோ மொழியில் அப்பெண்ணிடம் விசாரிக்க,
“நாங்க கியூவுல நிக்கிறோம்ல? இவர் எப்படி எனக்கு முன்னால வந்து கையை நீட்டலாம்? என்பதுதான் அந்தப் பெண்மயின் கோபம்.
வழிகாட்டியாக வந்தவர் பெண்ணாக இருந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்றுத் தெரியுமா?
எனக்காக டோனா வரிந்து கட்டிக்கொண்டு பேசினார்.
“உன்னைப் பார்த்தால் கியூவில் நிற்கிற பெண் மாதிரியே தெரியவில்லை.” (கரெக்ட்!) வேடிக்கை பார்க்க வந்தவர்போலத்தான் தெரிகிறது. அதனால்தான் என்னவர் (!?) காசை நீட்டினார். என்ன பேசுகிறாய் நீ?” என்று வரிந்து கட்டிக்கொண்டு பேச ஆரம்பிக்க,
‘யாரடி இவ? முன்பின் தெரியாத இந்த இந்தியனுக்கு இந்த உள்ளூர்க்காரி இப்படி வரிந்து கட்டிக்கொண்டு பேசுகிறாள்? என்கிற திகைப்பில் அப்பெண்மணி பேச்சற்றவளாக ஆக,
எனக்கும் ஒரே திகைப்பு அமைதியும், கண்ணியமும் மிடுக்கும் கலந்து பழகிய டோனனாவுக்கு இப்படிக்கூடக் கோபம் வருமா என்று!
டோனா விட்டபாடில்லை. ஒரு வெளிநாட்டவரிடம் “இப்படியா அநாகரிகமாக நடந்துகொள்வது? ஒரு வெளிநாட்டவர் தண்ணீர் பாட்டில் வாங்க முன்னுரிமை கொடுத்தால் குறைந்தா போய்விடுவாய்? அப்படியென்ன நீண்ட கியூ நிற்கிறது இங்கே? ஒரு நிமிடத் தாமதத்தைப் பொறுக்கமாட்டாயா?” என்று சகட்டு மேனிக்குப் பிடிபிடி என்று பிடிக்க உங்களுக்கு எப்படி இந்தக் கோப உரையாடல் தெரியும் என்கிறீர்களா? (எல்லாம் டோனா பின்னர் மொழிபெயர்த்துச் சொன்னவைதாம்!)
ஓர் அந்நியப் பெண் எனக்காக இவ்வளவு வரிந்து கட்டிக்கொண்டு பேசியது ஒரு புதிய அனுபவம்தான்.
‘தண்ணீர் பாட்டிலா? நீங்களே போய் வாங்கிக்கொள்ளுங்கள். நான் இங்கு நிற்கிறேன்’ என்று கழற்றிக்கொள்ளாமல் நிழலாக டோனா உடன் வந்தது நல்லதாகப் போயிற்று என்று என் மனம் ஆறுதலடைந்தது.
லாவோ ஐடெக் பொருட்காட்சியில் இன்னும் ஒரு சுவையான விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏழு நாள் பொறுப்பீர்கள்தானே?
(தொடரும்)
வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்
2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!
2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!
2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…
2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!
2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!
2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!
2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!
2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!
2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”
2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!
2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!
2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!
2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!
2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!
2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!
2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!
2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!
2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!
2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?
2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!
2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!
2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!
2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!
2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!
2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!
2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!
லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்
2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!
2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!
2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!
2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!
2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?
2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!
2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!
2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!
2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!
2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!
2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!
2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?
2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?
2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!
2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!
2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!
2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!
2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!
லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்
2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!
2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?
2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!
2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!
2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!
2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?
2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!
2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!
2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!
2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!
2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!
2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?
2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!
2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!
2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!
2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!
2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?
2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!
2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்
2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…
2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!
2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!
2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!
2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!
2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!
2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?
2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!
2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!
2009/01/16 எட்டு எனக்கு லட்டு!
2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!
2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!
2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!
2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!
2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!
2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!
2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!
2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!
2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!
2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!
2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!
2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!
2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!
2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!
2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!
2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?
2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!
2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!
2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!
2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?
2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?
2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!
2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?
2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!
2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!
2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு
2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!
2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!
2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!
2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!
2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!
2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று
2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்
2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!
2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு
2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”
2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!
2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!
2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?
2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்
2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!
2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…
2008/03/21 அட, என் முன்னோடிகளா…
Most Commented Posts































