 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
வி.சாத்தப்பன், காரைக்குடி.
|
 |
மாநிலங்களவை எம்.பி.க்காக பா.ம.க., எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாகக் கலைஞரைச் சந்தித்தும் ஒன்றும் நடக்கவில்லையே?
|
 |
ஒருத்தராகப் போனால் ஓரளவாவது கிடைக்கும். ஒட்டுமொத்தமாகப் போனால் உரியவர்களே பயந்து கதவைச் சாத்துவார்கள். ஆனால் கலைஞர் பயப்படவில்லை. கதவைச் சாத்தவுமில்லை. கோபப்படாமல் அனுப்பியிருக்கிறார். அவ்வளவுதான்.
|
|
 |
ஜி.விஜயன், சாலிகிராமம்.
|
 |
தனது கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுத்தாக்கலுக்கு எப்போதும் உடன் போகாத ஜெயலலிதா இப்போது போயிருக்கிறாரே என்ன காரணம்?
|
 |
பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக பழைய கோட்டைக்குப் போகிற வாய்ப்பு கிடைத்ததால் போயிருக்கிறார். இதுவே அவர் சொல்லும் அந்த சர்க்கஸ் கூடாரமென்றால் போயிருக்கமாட்டாரோ?
|
|
 |
கே.கார்த்திகேயன், ஆம்பூர்.
|
 |
தனது வீட்டை மருத்துவமனைக்குக் கொடுத்த கலைஞரின் செயல்பாடு பற்றி?
|
 |
ரூபாய் எட்டு கோடி சொத்தை இனாமாகக் கொடுத்தது மூலம் எட்டாத இடத்திற்குப் போயுள்ளார் கலைஞர்! இலவசக் கலைஞர் என்பதற்கு இப்போதுதான் (சரியான) அர்த்தம் கிடைத்திருக்கு. இனி எதிர்க் கட்சிகளின் வாய்களுக்கு பெப்பே!
|
|
 |
எம்.செல்வம், வேலூர்.
|
 |
ராகுல்காந்தியின் ரகசிய சென்னை வருகை பற்றி?
|
 |
தொண்டர்களுக்குக் கடுக்காய் கொடுக்கும் தலைவர்களுக்கே கடுக்காய் கொடுக்கும் தலைவராகிவிட்டார் ராகுல்காந்தி. இனி தமிழகத்தில் புதிய பெருந்தலைவர் என்றால் அது ராகுல்காந்திதான்.
|
|
 |
என்.தன்ராஜ், வேளச்சேரி.
|
 |
இங்குள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு மாநிலங்களைவையில் இடம் கிடைக்கவில்லையே?
|
 |
சத்தியமூர்த்தி பவனில் சத்தியத்திற்கு இடமில்லை என்பது சோனியா வரை தெரிந்துள்ளது. அதனால்தான் பழைய ‘டிக்’கையே புதிய ‘டிக்’க்காக்கியிருக்கிறார்.
|
|
 |
ஜே.விக்டர், விழுப்புரம்.
|
 |
ஐ.பி.எல். ஏலத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்கிறாரே சரத்பவார்?
|
 |
பவார் வீட்டில் நிறைய கற்பூரத் தொழிற்சாலை இருக்கும் போல. ஐ.பி.எல். குறித்துப் பேசினாலே நிறைய சத்தியம் செய்கிறார். இன்றைய இந்தியாவின் சத்தியபுருஷர் பவாராகத்தான் இருப்பார்.
|
|
 |
எம்.பன்னீர், மதுராந்தகம்.
|
 |
இந்நாளில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது?
|
 |
கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம். கடவுள் உண்டு என்பவர்களையும் நம்பலாம். ஆனால் நான்தான் கடவுள் என்கிறார்களே ஒரு சிலர், அவர்களைத்தான் நாம் நம்பலாகாது.
|
|
 |
ஜே.விசுவம், திருப்பத்தூர்.
|
 |
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டிருக்கிறாரே?
|
 |
இது அட்மிஷன் காலம். பள்ளி நிர்வாகத்தினர் தத்தம் அட்மிஷனுக்கு இப்போது ஆலாய்ப் பறப்பதால் அவசர அவசரமாய் இவரை கலைஞர் பள்ளியில் மீண்டும் சேர்த்துக் கொண்டிருக்கிறார். இல்லாவிட்டால் வேறு ஒரு பள்ளியில் சேர்ந்துவிடுவார் என்கிற பயம்.
|
|
 |
மு. இஸ்மாயில், சென்னை.
|
 |
அ.தி.மு.க.வின் தற்போதைய நிலைமை?
|
 |
திருப்பதி மாதிரி இங்கே ஜருகண்டி, ஜருகண்டி சொல்ல வேண்டியதில்லை. எல்லாருமே இப்போது வேகவேகமாய் ஜருகிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே க்யூ இல்லாத ஒரே கட்சி இப்போது அ.தி.மு.க.தான்!
|
|
 |
என்.சாமிதுரை, சின்னிவாக்கம்.
|
 |
மாநிலங்களைவை எம்.பி.க்களுக்கு என்ன வேலை?
|
 |
ஒரு வேலையுமில்லை. அவரவர் வீடுகளில் மேசையைத் தட்டிக் கொண்டிருப்பதற்குப் பதில் அதே மேசையை தில்லியில் போய்க் தட்டிக்கொண்டிருப்பார்கள்.
|
|
 |
சி.எஸ்.ஏ., சென்னை-118..
|
 |
ஜெயலலிதாவை பத்திரிகையாளர் சோ சந்தித்திருப்பதின் மர்மம்?
|
 |
புதிதா என்ன? என் ஐயமெல்லாம் சோவின் யோசனைகளைக் கேட்டதால் இப்படி ஆனாரா? கேட்காததால் இப்படி ஆனாரா என்பதுதான்.
|
|
 |
ஜ.விக்கிரமன், மதுரை.
|
 |
இன்றைய காவிகளைப் பற்றி?
|
 |
காலாவதி மருந்துகளைக்கூட அப்புறம் கண்டு கொள்ளலாம். இந்தக் காவிகளைத்தான் உடனே கண்டு கொள்ள வேண்டும். காலாவதி மருந்துகளால் ஒரு பகுதியினரே பாதிப்பார்கள். காவிகளால் ஒரு தலைமுறையே பாதிக்கும்.
|
|
 |
கே.எம்.பிரபா, கொளத்தூர்.
|
 |
தமிழக அரசின் நிதி நிலைமை படுமோசமாக இருக்கிறதாமே?
|
 |
டாஸ்மாக் இருப்பதால்தான் ஏதோ இலேசான தள்ளாட்டம். அது இல்லாவிட்டால் படு தள்ளாட்டம்தான். பார்கள்தான் இன்று தமிழ்நாட்டை இந்தப் பாரில் நிற்க வைத்திருக்கிறது.
|
|
 |
ஆர்.சுப்பு, காஞ்சிபுரம்.
|
 |
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை இன்றைக்கு எதற்கு இது பொருந்தும்?
|
 |
கிரிக்கெட்டிற்குத்தான். முதலிலே ஐந்து நாள். அப்புறம் ஒரு நாள். இப்போதோ ட்வென்டி - ட்வென்டி. இதுவே நாளைக்கு டென்-டென் ஆனாலும் கேட்பாரில்லை.
|
|
 |
எம்.குணசீலன், செங்குன்றம்.
|
 |
அடுத்த சட்டசபையும் புதிய தலைமைச் செயலகத்தில்தானே?
|
 |
அதற்குள்ளாவது அங்கே கட்டட வேலைகள் முடிந்தால் சரி. மேலே கொத்தனார்கள் கீழே மக்கள் பிரதிநிதிகள் என்பது நன்றாக இல்லை. எம்.எல்.ஏ.க்கள் என்ன சித்தாள்களா? கொத்தனார்களுக்குக்கீழே வேலை செய்ய!
|
|
 |
பி.ராஜா, சென்னை-102.
|
 |
இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கியோர்க்கெல்லாம் இலவச மாவு இயந்திரம் வழங்கப் போவதாகப் பேச்சு அடிபடுகிறதே?
|
 |
கொடுத்தாலும் கொடுப்பார்கள். டி.வி.யில் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருப்பதை இனி இவர்கள் மாவரைத்துக் கொண்டே பார்க்கலாம். தி.மு.க.வினர் எது செய்தாலும் அதில் ஒரு கலை நுணுக்கம் இருக்கும்.
|
|
 |
எஸ்.செந்தில் குமார், திருவேற்காடு.
|
 |
தமிழகத்தில் கள் இறக்கும் போராட்டம் என்னவாச்சு?
|
 |
இதற்காக உருவாகும் மொந்தைகள் உடனுக்குட்ன உடைந்து போகின்றன. ஒரு மொந்தையாவது நின்றால்தானே? அதனால்தான் இந்தப் போராட்டம் இன்னும் வலுப்பெறவில்லை.
|
|
 |
சி.மூர்த்தி, கும்பகோணம்.
|
 |
அ.தி.மு.க. கலகலத்துப் போவது ஏன்?
|
 |
எல்லாம் தி.மு.க.வினரின் கண்ணிவெடிகளால்தான். ஒவ்வொரு மாவட்ட அமைப்பிலும் எத்தனை கண்ணி வெடிகள் வைத்திருக்கிறார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாதாம். அதனால் அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு முன்னேறுவது என்பது அ.தி.மு.க.விற்குக் கடினமாக உள்ளதாம்.
|
|
 |
என்.தாமோதரன், வில்லிவாக்கம்.
|
 |
குஷ்புவின் அரசியல் கன்னிப் பேச்சைக் கேட்டீர்களா?
|
 |
அந்த ஜாக்பாட் எனக்குக் கிடைக்கவில்லையே.
|
|
 |
கே.லோகேந்திரன், திருவண்ணாமலை.
|
 |
நாடு இப்போது எப்படியிருக்கிறது?
|
 |
இரண்டு ரூபாய்ப் பத்திரிகைகளைக் கூட வாங்க மாட்டீர்கள். இதற்காக இரண்டு வாரங்கள் கூடத் காத்திருக்கிறேன் என்கிறீர்களே? நீங்களென்ன தருமியோட தமையனா?
|
|
 |
|
|