
 |
| ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன் |
 |
எம்.சின்னச்சாமி, விளாத்திகுளம்.
|
 |
கட்சியில் யாரையும் இழக்க விரும்பவில்லை என்கிறாரே ஜெயலலிதா?
|
 |
இழக்க விரும்பாதது அவரது விருப்பம். இருக்க விரும்பாதது அவரவர் விருப்பம். இல்லீங்களா…? இதைக் கூடவா அம்மையாருக்குத் தெளிவுபடுத்தணும்?
|
|
 |
வி.அன்பு, சென்னை.
|
 |
சிபுசோரன் பிரச்னையால் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் தள்ளாடிவிட்டாரே!
|
 |
அங்கிருக்கும் ஆளுநர் எம்.ஒ.எச். பாரூக் அசல் பாண்டிச்சேரிக்காரர். இந்த தள்ளாட்டதிற்கெல்லாம் அசைந்து கொடுக்காதவா!
|
|
 |
எஸ்.பி.மணியன், திருக்கழுக்குன்றம்.
|
 |
‘புதிய தலைமைச் செயலகம் சர்க்கஸ் கூடாரம்போல் இருக்கிறது’ என்று ஜெயலலிதா சொல்வது எதை வைத்து?
|
 |
கூடாரத்திற்கே போகாதவர் அங்கே நடப்பது சர்க்கஸ் என்று எப்படித் தெரிந்துகொண்டார்? ஒருவேளை இவரது கட்சிக் கோமாளிகள் யாராவது ஒருசிலர் சொல்லியிருப்பார்களோ?
|
|
 |
ஜி.எஸ்.நாதன், சென்னை-7.
|
 |
அ.தி.மு.க.விற்கு ராஜ்ய சபா எம்.பி. பதவியை விட்டுக் கொடுத்திருக்கும் ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டுகளைப் பற்றி?
|
 |
விழுந்து மீசையில் மண் ஒட்டுவதைவிட விழாமல் மீசை முறுக்கிக் கொள்ளலாமே? அரசியலில் எல்லாமே ஒரு கணக்குத்தான்!
|
|
 |
சி.ராமநாதன், கும்பகோணம்.
|
 |
ராகுலும் பிரதமராகலாம், தடையில்லை என்கிறாரே மன்மோகன்சிங்?
|
 |
இது பொதுஜனத்திற்கே தெரிந்த விஷயம்! ஆனால் சும்மா சொல்லக்கூடாது. பத்திரிகையாளர்களை அருமையாகச் சமாளித்தார் பிரதமர்.
|
|
 |
ஆர்.முத்துகுமார், சென்னை-17.
|
 |
ஸ்டாலினின் மேடைப் பேச்சுகள் எப்படியிருக்கின்றன?
|
 |
புள்ளி விவரத்துறை இயக்குநருக்கே ஞாபகம் வராத அளவிற்குப் புள்ளி விவரங்களாய் அள்ளிவிடுகிறார். அரசியலிலிருந்து அரசாங்க உத்தியோகத்திற்குப் போனால் கூட ஸ்டாலின் பிழைத்துக் கொள்வார். அழகிரி என்ன செய்யப்போகிறாரோ தெரியவில்லை.
|
|
 |
பி.ஆனந்தன், கடலூர்.
|
 |
கலைஞரைப் பாராட்டுவதில் யார் சிறந்தவர்கள்?
|
 |
நடிப்புலகில் இருப்பதாகத்தான் பெயர். இவர்கள் என்னத்த நடிக்கிறாங்க? காங்கிரஸ்காரர்கள் இவர்களை சாப்பிட்டு விடுவார்கள் போலிருக்கிறது. அதுவும் கால்ஷீட் பிரச்னையில்லாமல் நடிப்பில் சும்மா பின்னுறாங்க! சினிமாக்காரர்கள்தான் வெட்கப்படணும். அந்த அளவுக்குப் பாராட்டுவதாக நடிக்கிறாங்க!
|
|
 |
இ.குமரன், கொளத்தூர்.
|
 |
அறிவியல் மற்றும் கணிதங்களில் 20 சதவிகித மதிப்பெண்கள் இருந்தாலே மேற்கு வங்கத்தில் ஆசிரியப் பணியாமே?
|
 |
ஆசிரியர்களுக்கு 20, மாணவர்களுக்கு 35. இதுதான் இவர்களுக்கான பாஸ்மார்க் என்றால் இதைவிடக் கொடுமையில்லை. இதுவே நேஷனல் வைஸ் சீனியாரிட்டி என்றால் கொல்கத்தாவில் நம்மவர்களால் இன்னும் டிராஃபிக் ஜாம் ஆகும்.
|
|
 |
எம்.பாண்டி, கள்ளக்குறிச்சி.
|
 |
கோவைக்குப் பின் செம்மொழி வளருமா?
|
 |
நம் மொழி தானாக வளரும். கோவையால் ஒப்பந்தக்காரர்கள் வளருவார்கள். வளர்ந்தும் விட்டார்கள்.
|
|
 |
சி.கே.மூர்த்தி, தஞ்சை.
|
 |
கம்யூனிஸ்டுகள் ஏன் காங்கிரஸ்காரர்களைப் போல் ஆட்சியில் பங்கு கேட்பதில்லை?
|
 |
கூட்டணியில் பங்கு கொடுத்தாலே கோடி புண்ணியமென்று நினைப்பவர்கள் வேறு புண்ணியம் தேடுவார்களா? அதனால்தான் கேட்பதில்லை.
|
|
 |
கே.முருகானந்தம், திருவேற்காடு.
|
 |
தமிழகத்தில் யார் யாரோடு கூட்டணி?
|
 |
கொஞ்சம் இருங்க, நமக்கு அதிர்ஷ்டமிருந்தால் தேர்தலுக்குள்ளே இன்னும் நாலைஞ்சு புதுக்கட்சிகள் கூட உருவாகலாம். அதற்குள் ஏன் அவசப்படறீங்க?
|
|
 |
எம்.பெருமாள், திருவண்ணாமலை.
|
 |
எல்லாவற்றிலும் மனைவியை ஆதரிக்கலமா?
|
 |
இந்த விஷயத்தில் நீங்கள் முலாயம்சிங்காக வேண்டும். பிரச்னை அடிப்படையில்தான் ஆதரவு என்று அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால்தான் நீங்கள் நிலைக்க முடியும்; நீடிக்கவும் முடியும்.
|
|
 |
எஸ்.வி.சாமி, சென்னை.
|
 |
உங்களுக்கு இலவசத் தொலைக்காட்சி கிடைத்துவிட்டதா?
|
 |
‘வேண்டாம்’ என மறுத்ததால்தான் என் வட்டத்தில் பெருந்தன்மைப் பட்டம் கிடைத்தது.
|
|
 |
இளங்கோ, ராணிப்பேட்டை.
|
 |
தி.மு.க. ஆட்சியில் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியவில்லையே?
|
 |
கண்ணெதிரே இருக்கும் கட்சிக்காரர்களையே கட்டுப்படுத்த முடியவில்லை. வெட்டிக்கொண்டு மாய்கிறார்கள். காற்றில் கலந்த விலைவாசியை எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறார்கள்.
|
|
 |
வி.ரமணி, செங்கல்பட்டு.
|
 |
தி.மு.க.வின் அடுத்த இலவசம் என்னவாக இருக்கும்?
|
 |
அதுவா, ஆளுக்கொரு கிலுகிலுப்பை என்பதாகவும் இருக்கலாம். எதுவா இருந்தா என்ன? நம்மவர்களுக்குத்தான் எதுவும் சும்மா வந்தா சரியாச்சே!
|
|
 |
எம்.அப்துல்லா, சென்னை-5.
|
 |
ப்ளஸ்டூ மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் இம்முறையும் மாணவிகள் கொடி கட்டிப் பறந்தது பற்றி?
|
 |
துணிகளைக் காயப்போடும்போது கூடத் துப்பட்டாக்கள்தாம் எப்போதும் மேலே பறக்கும். பேண்ட்டுகள் எப்போதும் கீழே தொங்கிக் கொண்டுதான் இருக்கும். இது உடையிலேயே தெரிகிற சங்கதி. இதைப்போய் ஆச்சரியமாய்க் கேட்கிறீர்கள்?
|
|
 |
எம்.பரிமளா, ஆரணி.
|
 |
தி.மு.க.வில் குஷ்பு?
|
 |
ஜெயா டி.வி.யில் இவர் நடத்தியது ஜாக்பாட். இப்போது தி.மு.க.விற்குக் கிடைத்துள்ளது. அதே ஜாக்பாட் தி.மு.க.வால் இவருக்கு லாபமில்லை. அவரால் தி.மு.க.விற்குத்தான் இலாபம்.
|
|
 |
|
|
Most Commented Posts
This entry was posted
on Friday, June 11th, 2010 at 4:36 am and is filed under Uncategorized.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.