» 2010 » June .:: Tamilvanan - Kalkandu - Manimekalai Prasuram ::.
Healthy life

Posted on Friday 25 June 2010

drumstick-vegetable.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!

இந்தியர்களின் உணவில் அதிக அளவில் இடம் பெறும் முருங்கைக்காய், நல்ல மருத்துவக் குணங்களும் ஊட்டச்சத்துகளும் இரும்புச்சத்தும் நிரம்பிய முக்கியமான காய்கறியாகும்.

இதயம், நரம்பு மண்டலம், இரத்த ஓட்டம் முதலியவை சிறப்பாக இயங்க மிகச்சிறந்த ஊக்க உணவாக முருங்கைக்காய் திகழ்கிறது. குறிப்பாக, பிஞ்சு முருங்கைக்காயை சமைத்து உண்டால் மேற்கண்ட நன்மைகள் நிச்சயம் உண்டு. இதன் சதை, எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது, முருங்கைக்காய். இதன் விஞ்ஞானப் பெயர், மோரிங்கா ஒலிஃபெரா என்பதாகும்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இது நன்கு விளைகிறது. தமிழ் நாட்டில் நீள நீளமாய்க் கிடைக்கும் முருங்கைக் காய் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்டு இங்கே பயிரிடப்பட்ட மரமாகும்.

100 கிராம் முருங்கைக்காயில் கிடைக்கும் கலோரி 26 ஆகும். இக்காயில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்-சி, முதலியனவும் போதுமான அளவில் உள்ளன.

ஆறிலிருந்து அனைத்துவயதினரும் தினமும் முருங்கைக்காய் சாப்பிடலாம். கெடுதல் எதுவும் ஏற்படாது; மாறாக நன்மைகள் அதிகம்! நோய்க்கிருமிகளை அண்டவிடாது பார்த்துக்கொள்ளும் ஆற்றல் இந்தக் காய்க்கு அதிகம் உண்டு. இதை உண்பவரின் உடல் உறுதியும் ஆரோக்கியமும் தொடர்ந்து பாதுகாக்கப்படும். இக்காயில் எல்லாவிதமான அமினோ அமிலங்களும் உள்ளன. எளிதில் தொற்றக்கூடிய பாக்டீரியாக்களைக் கூட ‘என்ன சேதி’ என்று கேட்டு, நம் உடலுக்குள் நுழையவிடாமல் தடுத்துவிடும்.

பெனிசிலின் மருந்துக்கு இணையானது, முருங்கைக்காய்! ஆஸ்துமா, இதய நோய் முதலியவற்றைத் தடுக்க முருங்கைக்காய்ச்சாம்பார், முருங்கைக்கீரை அவியல் முதலியவற்றை இயன்றபோதெல்லாம் சாப்பிடவேண்டும்.

முருங்கைக்காயைப் போலவே முருங்கைக்கீரையும் முருங்கைப் பூவும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.

பிறந்த குழந்தை நன்கு வளர
கைக்குழந்தையின் எலும்புகள் உறுதியுடன் வளர, முருங்கைக் கீரையைச் சாறாக மாற்றி, வடிகட்டி, அதைப் பாலுடன் சேர்த்துக் கொடுக்கலாம். அந்த அளவுக்கு ஆரோக்கியத்தைத் தரும் மிகச் சிறந்த டானிக் இது.

பிரசவம் எளிதாய் நடைபெற…
இந்த டானிக்கை கர்ப்பிணிகள் தினமும் அருந்தினால் அவர்களுக்குத் தேவையான சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்றவை கிடைத்துவிடும். மேலும், மெல்ல மெல்லக் குழந்தையை நகர்த்திக்கொண்டு வந்து பிரசவத்தை இலகுவாக்க இதில் உள்ள இரும்புச்சத்து பயன்படுகிறது. எனவே முருங்கைக்கீரையைப் பயன்படுத்துகிறவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் ஆரோக்கியமாகக் குழந்தை பிறந்துவிடும்

தாய்ப்பால் நன்கு சுரக்க…
குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் நன்கு சுரக்க, முருங்கைக் கீரையைத துவரம் பருப்புடன் பொரியல் செய்து, பசு நெய் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் குழந்தைக்குத் தாய்ப்பால் பஞ்சமில்லாமல் கிடைக்கும். தாயின் உடல் நலமும், கணவனின் பணமும் வீணாகாமல் இருக்க, முருங்கைக் கீரையைப்போல் வேறு எதுவும் பயன்படுத்துவதில்லை!

ஆண்மை விருத்திக்கு…
ஆண்கள், மேற்கண்ட பொரியலை இரு மாதங்கள் தினமும் ஒருவேளை உணவுடன் சேர்த்து உண்டால் ஆண்மை விருத்தியாகும்! உடல் வலுவடையும்.

முருங்கைப் பூக்களைப் பாலில் கொதிக்க வைத்துத் தினமும் ‘சூப்’ போல் ஆண்கள் அருந்தினால் விந்து விருத்தி ஏற்படும்.

சிறுநீர் தடையின்றிச் செல்லவும், உணவு நன்கு செரிமானம் ஆகவும், முருங்கைக் காயையும், முருங்கைக் கீரையையும் நன்கு பயன்படுத்த வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள், முருங்ககைக்கீரையில் எள் சேர்த்துச் சமைத்து உண்டால், நீரிழிவு கட்டுப்படும்.

சொறி, சிரங்கு ஆகியன உள்ளவர்களுக்கு இக்கீரை அருமருந்து. இதில் உள்ள வைட்டமின் ‘சி’ யே இதற்குப் பயன்படுகிறது.

இரத்த விருத்திக்கு இதில் உள்ள இரும்புச்சத்து பயன்படுகிறது.

வாயுக்கோளாறுகளை முருங்கைக்காய் போக்குகிறது.

காலரா, வயிற்றுப்போக்கு, குடல் அழற்சி, மஞ்சள் காமாலை ஆகியவை குணமாக, ஒரு தேக்கரண்டி அளவு இளந்தளிரான கீரையின் சாற்றுடன், சமஅளவு தேன் சேர்த்து, அதை ஒரு டம்ளர் இளநீருடன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தக் குணம் தெரியும்.

பித்தக் கோளாறுகளும், கண் தொடர்பான நோய்களும் நீங்க, முருங்கைக்காய் பொரியல் பயன்படும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியமருந்தாய் உள்ள முருங்கைக்காயும் கீரையும் மிகச்சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என்பது மறுக்கவியலாத உண்மை.

100 கிராம் கீரையில் 108 கலோரி கிடைக்கிறது. கால்சியம் 440 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 70 மில்லி கிராமும், இரும்புச்சத்து 7 மில்லிகிராமும், வைட்டமின் பி காம்ப்ளஸ் சிறிதளவும் உள்ளன. எனவே, ஆரோக்கியமான உடல் கட்டுத் தேவைப்படுவோர்கள் கீரைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உடல் சூட்டுடன் மூளை வளர்ச்சியும் நன்கு சிந்திக்கும் திறனும் வேண்டும் என்பவர்கள், 100 கிராம் முருங்கைக்காயில் கிடைக்கும் 100 மில்லிகிராம் பாஸ்பரஸை பயன்படுத்திக்கொள்ள தினமும் உணவோடு முருங்கைக்காயையும் கீரையுடன் சேர்த்து அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்!

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/06/18 அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 4:45 am
Filed under: Uncategorized
Crocodile tears dialect

Posted on Friday 25 June 2010

jayalalaitha.jpgமுற்றிலும் முதலைக் கண்ணீர் தானா?

தமிழகம் முழுக்கத் தொடர்ந்து உள்ளூர் மக்களின் மனக்குறைகளை வெளிப்படுத்தும் விதமாக, அரங்கேற்ற முடியாத விஷயங்களை அம்பலத்திற்குக் கொண்டுவரும் விதமாக ஜெயலலிதாவின் அறிக்கைளின்படி அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருவதைப் பார்க்கிறோம்.

எங்கே இதற்கு உடனடி நடவடிக்கை எடுத்துவிட்டால் உடனே அ.தி.மு.க.விற்குப் பெருமை போய்விடுமோ என்று தி.மு.க. ஆட்சி பாராமுகமாக இருந்து வருகிறது.

அ.தி.மு.க. போராட்டத்தின் விளைவாக உடனே குடிநீர் வசதி செய்து தரப்பட்டது. குப்பைகள் அகற்றப்பட்டுச் சுகாதாரம் பேணப்பட்டது. கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டது; மணல் அள்ளுவது தடுத்து நிறுத்தப்பட்டது என்றெல்லாம் நீளும் பட்டியலில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது அந்தந்த உள்ளூர் வாசிகளுக்கு நன்கு தெரியும்.

அப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயலலிதா அல்ல, உள்ளூர் அ.தி.மு.க. தலைவரே குதித்து அறிக்கை விட்டிருப்பார்.

ஜெயலலிதாவின் இந்த மைக்ரோ அரசியல் இந்தியாவிற்கே ஒரு நல்ல முன்னுதாரணம் என்று ஏற்கெனவே இதே லேனாவின் பார்வையில் நான் பாராட்டியிருந்ததை நம் வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியின் ஆதிக்கம் தாங்க முடியாமலும், எதிர்க்கட்சிகளின் சிறு சிறு ஆதங்கங்களை வெளிப்படுத்த முடியாமலும் இருப்பதை சட்டமன்ற நடவடிக்கைகளைத் தொலைக்காட்சியில் பார்க்கும் நம்மால் உணரமுடிகிறது.

ஜெயலலிதாவின் இந்த முயற்சியை வருங்காலச் சட்டமன்றத் தேர்தலுக்கான நாற்றங்கால் என்று சிலர் வருணித்தாலும் மக்களின் உணர்வுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் செயல்களையெல்லாம் இது உள்நோக்கமுடைய அரசியல் நடவடிக்கை என்கிற பிரிவின்கீழ் அடக்கினால், பிறகு அரசியல் நடவடிக்கைகள் அனைத்திற்கும் சாயம் பூசவேண்டிய நிலையே ஏற்படும்.

முதல் முறையாக என நினைக்கிறேன். ஆலந்தூரில் அ.தி.மு.க. நடத்திய போராட்டத்திற்கு அரசுத் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

“10 நாள்களுக்கு ஒரு முறைதானா தண்ணீர் அளிக்கிறோம்? இல்லை, இரண்டு மூன்று நாள்களுக்கு ஒரு முறை 100 இலட்சம் லிட்டர் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்கே இருக்கிறது குப்பை? எங்கே இருக்கிறது துர்நாற்றம்? ஜெயலலிதா முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று ஓர் அமைச்சர் பிரதிபலித்திருக்கிறார்.

முதலைக் கண்ணீரா? இல்லையா? உண்மை நிலவரம் என்ன என்பதையெல்லாம் உள்ளூர் மக்கள் முடிவு செய்யட்டும். ஆனால் எதிர்க்கட்சியின் போராட்டத்திற்குப பதிலும் விளக்கமும் அளித்திருக்கிறதே இந்த அரசு இதுவே ஓர் ஆரோக்கிய அரசியலுக்கான நல்ல ஆரம்பம் என்பேன்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/06/18 எது அசல்!? எது போலி?

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 4:33 am
Filed under: Uncategorized
Vietnam travel

Posted on Friday 25 June 2010

haivan-pass.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

கண்ட வயதில் கல்யாணம்!

லாவோஸ் ஹைடெக் கண்காட்சியில் நான் கண்ட ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஒரு திருமணத்திற்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவைப்படும் உடைகளுக்கான கடைதான்.

நம் நாட்டில் ஒரு துணிக் கடையில் நுழைந்து மணமக்களுக்கான உடைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம் அல்லவா? இந்தக் கடை அப்படிப்பட்டது அல்ல. மணமக்களைத் தவிர வேறு எவருக்கும் இந்தக் கடைக்குள் வேலை இல்லை. அவசியம் என்றால் மணமக்களோடு அவர்களது உறவினரோ, நண்பர்களோ உடன் உடைத் தேர்வுக்கு உதவலாம்.

மணமக்களுக்கான தனிப்பட்ட கடை என்பதாலோ என்னவோ ஒரு (ஜோடி?) வாடிக்கையாளர்கூடக் கடையில் இல்லை.

இக் கடையைக் காணும் ஆர்வத்தில் நான் நுழைய, நான் நுழைந்ததால் பின்னே டோனா நுழைய, கடைக்காரப் பெண்கள் ஏகமாய் வரவேற்றார்கள். ஒருவர் முதலாளிப் பெண் போல இருக்க ஒருவர் ஊழியர் போலத் தோற்றமளித்தார்.

எங்கள் இருவரையும் இவர்கள் என்னவென்று கணித்தார்கள் என்பது உடனே தெரிந்துவிட்டது.

“உங்கள் இருவருக்கும்தானே உடை? என்ன விலையில் எடுக்கட்டும்?” என்று கேட்டதும்தான் எனக்கு ‘பக்’கென்று ஆனது.

எங்கள் இருவரையும் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஜோடி என்று இவர்கள் கணித்துவிட்ட உண்மை. அப்போதுதான் எனக்கு விளங்கியது.

மொழி புரியாததால் உடல் மொழியை வைத்து இவர்கள் கேட்ட கேள்வி இதுவாகத்தான் இருக்கும் என் ஊகிக்க எனக்குச் சில விநாடிகள் பிடிக்க, டோனாவுக்கு மொழி புரியும் என்பதால் சட்டென அலறி,

“ஐய்யோ! நாங்கள் ஜோடி அல்ல! இந்தியாவிலிருது வந்திருக்கிறார். நான் இவருக்கு வழிகாட்ட வந்திருக்கிறேன். இவர் இந்தக் கடையைப் பார்க்க விரும்பி உள்ளே வ்நதிருக்கிறார். நீங்க வேற..” என்று பிரதிபலிக்க மூன்று பெண்களும் ஒரே சிரிப்பு.

என் வியப்பெல்லாம் எங்களை இருந்து இருந்து அபூர்வமாக வந்த வகையாக மாட்டிய நல்ல வாடிக்கயைாளர்கள் என்ற கடைக்காரப் பெண்கள் போட்ட கணக்குத் தவறாகிவிட, அந்த ஏமாற்றத்தைக்கூட வெளிக்காட்டிக் கொள்ளாமல் இப்படிக் கள்ளங்கபடமில்லாமல் சிரிக்கிறார்களே என்பதுதான்.

“உங்களைப் பார்த்தா திருமண ஜோடி என்று முடிவுக்கு வந்தார்கள்? நீங்கள் சரியான கிழடுகள் அல்லவா, இன்னுமென்ன உங்களுக்கு அப்படி ஒரு நினைப்பு? என்று ஒரு சில வாசகர்கள், வாசகிகள் கேட்கலாம்.

உண்மை என்னவென்றால் லாவோசில் கண்ட வயதில் கல்யாணம் செய்து கொள்வது சகஜமாம். அதுவும் லாவோஸ் பெண்களுக்கு வெளிநாட்டுக் கணவர்கள் என்றால் தயக்கம் காட்டமாட்டார்களாம்.

வசதியான ஆண்கள் லாவோசிற்கு வந்து உள்ளூர்ப் பெண்களைக் தேர்நதெடுத்து மணந்து கொண்டு தங்கள் நாட்டிற்கு ஜோடியாகத் திரும்புவது இங்கு நடக்கிறதாம். இதைச் சொன்னவர் டோனாதான்.

டோனாவே இதற்கு நல்ல முன்னுதாரணம் ஆயிற்றே!

லாவோஸ் நாட்டைப் ஃபிரான்சு நாடு சிறிது காலம் ஆண்டு கைப்பிடிக்குள் வைத்திருந்ததால, இந்தத் தொடர்பில் ஒரு ஃபினாசுக்காரர் வந்துதான் டோனாவைக் கரம்பிடித்துப் பாரிசுக்கு அழைத்துப் போயிருக்கிறார். இந்த ஜோடிக்குப் பிறந்ததுதான் நான் முன்பு சொன்ன இரண்டு பிள்ளைகளும்.

இந்த இரண்டு பிள்ளைகளைப் பற்றிப் பேச முன் வந்த டோனா இந்தக் கணம் வரை தம் கணவரைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாததும் என் நினைவிற்கு வந்தது.

“சரி, அதனாலென்ன கடையை நன்கு பார்த்துவிட்டுப் போங்கள்” என்கிற கடைக்கார முதலாளிப் பெண்ணின் வாக்கியம்தான் என்னை மீண்டும் சுய நினைவிற்குக் கொண்டு வந்தது.

கடையின் சில பகுதிகள் உடைகளைக் கொண்டிருக்கவில்லை. இதற்கு மாறாக சில ஜோடிகளின் படங்களே இருந்தன. அந்தப் படங்களில் உள்ள உடைகளைக் காட்டி தேர்ந்தெடுத்துச் சொன்னால் அப்படியே தைத்துத் தருவார்கள். அல்லது இவர்களது பெரிய கடை நடக்கிற இடத்திலிருந்து தருவித்துத் தருவார்கள். வீட்டிற்கே வந்து அளவு எடுத்தும் தைத்துத் தருவார்களாம். டோனா சொன்னார்.

கடையில் லாவோசின் பாரம்பரிய உடைகளோடு கிறித்துவத் திருமணப் பாணி உடைகளும் அதிகம் இருந்தன.

உடைகளில் படங்களில் எதிலுமே விலைகள் இல்லை. சுமாராக எவ்வளவுதான் இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆசையில் விசாரிக்கச் சொன்னேன்.

“அந்தப் படத்தில் உள்ள உடையா?” எனறார் ஏதோ நான் வாங்கப் போகிறவன் மாதிரி “இருப்பதிலேயே அதிக விலையுள்ள உடை எதுவோ அதன் விலை” என்று நான் சொன்னதும் கால்குலேட்டரைத் தட்டி ஒரு விலையைச் சொன்னார். எனக்குத் தட்டாமாலைக் கணக்கில் தலை சுற்றியது.

இரண்டு இலட்சமாம். என் நிலையைப் புரிந்து கொண்ட டோனா “இங்கு திருமண உடையும் மண்டபமும்தான் பெரிய செலவுகள். நகை சமாசாரம் உணவு கூட்டம் பிற செலவுகள் எல்லாம் பெரிய செலவாக இராது.

“சாதாரணக் குடும்பங்கள் என்ன செய்யும்?” என்றேன்.

“சிறிய பட்ஜெட் உடைகள் இருக்கின்றன. நீங்கள் இருப்பதிலேயே அதிக விலையுள்ள உடையைக் கேட்டதால் அதைச் சொன்னார்கள்.

“சரிசரி”

வெளியில் வந்தோம். வெயில் ‘சுள்’ என்று சுட்டெரித்தது.

உலக உருண்டையை எடுங்கள். அல்லது உலக வரைபடத்தை எடுங்கள். மத்தியப் பிரதேசத்தில் போபால் இருக்கிறது அல்லவா அதிலிருந்து ஒரு கோட்டை ஆரம்பித்து வலப்புறமாக இழுத்துக் கொண்டே போங்கள். அடுத்தக் கோட்டைக் கீழே திருப்பதியிலிருந்து இழுங்கள். இரண்டு கோடுகளையும் வங்காள விரிகுடாவையும் தாண்டி இழுத்துக் கொண்டே போங்கள். முதலில் இக் கோடுகள் பர்மாவைத் தொடும். பின்னர் தாய்லாந்தைக் கடக்கும். தாய்லாந்தைத் தாண்டும் மேல் கோடுதான் லாவோஸ் நாட்டின் வட எல்லை கீழே திருப்பதியிலிருந்து இழுத்தீர்கள் அல்லவா, இந்தக் கோடுதான் லாவோசின் கீழ் எல்லை (இதை தான் துல்லியம் என்று சொல்லமாட்டேன். உத்தேசமாகத்தான்!).

இப்படி இந்த இரு கோடுகளின் நடுவில் வரும் ஒரு நாடு வெப்பம் தகிக்காமல் பின் என்ன செய்யும்?

எங்கள் வாகனமும் வெட்ட வெளியில் நிற்க, இருக்கை வேறு கறுப்பு இருக்கைகளாக இருக்க, சுட்ட அப்பளம்கூடத் தயார் செய்துவிடலாம் போங்கள்.

“கண்ணாடியை இறக்குங்கள் டோனா! காற்று உள்ளே வரட்டும். சிறிது நேரம் வெளியில் நிற்கிறேன். வெப்பம் தாங்கவில்லை” என்றேன்.

“சரி சரி” என்ற டோனா கண்ணாடியை இறக்கிவிட்டு தாமும் இறக்கி நின்றார்.

சுற்று முற்றும் இருக்கிற கார்களைக் கண்காணித்தேன்.

பெரும்பாலான கார்கள் பூட்டப்பட்டே இருந்தன. ஒருவர் தம் லாப்டாப் அடங்கிய பையைக் காரின் தரைப்பகுதியில் வைத்து அதன்மீது காரின் கீழ்ப்பகுதியில் வரும் ரப்பர் மேட்டை அதன்மீது போட்டு மறைக்க முயற்சி செய்தது தெரிந்தது.

டோனா என்ன சொன்னார்? “எங்கள் நாட்டில் வாகனங்களைப் பூட்ட வேண்டாம். பயணப் பெட்டிகளைப் போட்டால் போட்டது போட்டபடி கிடக்கும். எவரும் தொடமாட்டார்கள். எவரும் திருடமாட்டார்கள்” என்றார்.

அப்படி ஒன்றும் அடியோடு திருட்டுப் போகாத நாடாக இது தெரியவில்லையே! பெரும்பாலான வாகனங்கள் பூட்டப்பட்டுத்தானே இருக்கின்றன?

இன்னும் சொல்லப்போனால் உள்ளே ஒரு பொருளும் வைக்கப்படாத கார்கள்கூடப் பூட்டப்பட்டுத்தானே காணப்படுகின்றன.

ஒரு பத்திரிகையாளர் என்ற வகையில் என்னிடம் தங்கள் நாட்டைப் பற்றி நன்கு சொல்லி உயர்த்திப் பிடிக்க நினைக்கிறார் டோனா.

உண்மை நிலவரம் அதுவாகத் தெரியவில்லையே!

இதைப் பற்றி டோனாவிடம் கேட்டுவிடுவது என்று முடிவு செய்தேன்.

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

 2010/06/18 டோனா விட்ட டோஸ்!

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 4:24 am
Filed under: Uncategorized
Slow but steady wins the race

Posted on Friday 25 June 2010

lena-kalkandu-writer.jpgபடிப்படியான மாற்றங்கள்!

செடிகளைப் பதியம் போடும் முறையினைப் பார்த்திருப்பீர்கள். பார்க்காதவர்களுக்காகச் சில வார்த்தைகள்.

எப்படியோ வளைந்துபோகும் ஒரு செடியினை கிளையையும் செங்குத்தாக வளரும் ஒரு கிளையையும் ஒரு பகுதியைச் சீவி இணைந்து இரண்டையுமாகக் கட்டி மண்ணில் புதைத்துவிடுவார்கள். இவை இரண்டும் ஒட்டிக் கொண்டதும் தாய்ச் செடியிலிருந்து இவற்றைப் பிரித்துவிடுவார்கள்.

இப்படி வளைக்கும்போது ஒரே சமய சந்தர்ப்பத்தில் வளைத்துவிட முடியாது. அப்படி வளைந்தால் அந்தக் கிளை முறிந்துபோகும். உயரே போகும் கிளையை மெல்லக் கல்லைக் கட்டித் தரையை நோக்கி வளையச் செய்வார்கள். பிறகு தரையில் கிளையை வைத்து அதன் மீது கனமான கல்லை வைத்துவிடுவார்கள்.

சில நாள்களில் கல்லை நீக்கிவிட்டால்கூட வளைந்த செடி நிமிராது.

மனித மனமும் இப்படித்தான். தவறான பாதையில் போகிறவர்களைத் திசைதிருப்ப மெல்லமெல்லத்தான் மாற்ற வேண்டும். “நீ ஒரே இரவில் மாறியாக வேண்டும்” என்று வலியுறுத்தினால் மாற்ற நினைக்கும் உறவுக்கும் நட்பிற்கும்கூட ஆபத்து வந்துவிடும்.

சிகரட்டை விட நினைத்து, மதுவை விட நினைத்து உளவியல் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கப் போனால், “ஒரே நாளில் விட நினைக்காதீர்கள். படிப்படியாக விடுங்கள்” என்று அளவை எப்படிக் குறைப்பதென்று அறிவுரை வழங்குவார்கள்.

சட்டென்று விட்டுவிட்டால் அது நாள்பட நிலைக்காதாம். உளவியல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துமாம்.

தீய நட்பு, ‘அம்மா பிள்ளை’ போன்றவற்றை மாற்ற நினைக்கும் மருமகள் ஓர் இயக்கத்தில் - அரசியல் அமைப்பில் - சங்கத்திலிருந்து விலகல், சில பொறுப்புகள் ஆகியவற்றிலிருந்து ஒருவரை மீட்டு வரவும் இதே உத்திதான் பின்பற்றப்பட வேண்டும்.

இவற்றை உரியவர்கள் அறியாதவாறு செய்ய விரும்பினால் இன்னும் கூடப் பொறுமையான பதிய மறை பின்பற்றப்பட வேண்டும்.

படிப்படியான பதியன் முறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் வேறு முறைகளில் இறங்காதிருப்பது நல்லது. காரணம், முன்னிலும் அவர்களுக்கு ஈடுபாடு அதிகமாகிவிடும் ஆபத்து இதில் இருக்கிறது.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/06/18 கசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 4:19 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 25 June 2010

ramadoss-karunanadhi.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஆ.வெற்றி கொண்டான், திருச்சி.

தி.மு.க.வைக் கையாளத் தெரியாமல் ராம்தாஸ் விழிக்கிறாரே!

கொஞ்ச காலமாய்த் தி.மு.க.வை அவர் தூசியாகத்தான் நினைத்தார். இப்போதோ அந்தத் தூசியே அவருக்கு ‘டஸ்ட்’ அலர்ஜியாகிவிட்டது. எப்போதும் தும்மல் அதுவும் பெரும் தும்மல்.

எம்.முருகன், திருவேற்காடு.

காங்கிரஸை தி.மு.க. புறக்கணிக்குமா?

கலைஞரின் நாற்காலியில் காங்கிரஸும் இப்போது ஒரு சக்கரம். அந்த சக்கரம் இல்லாமல் கலைஞருக்கும் இயக்கம் இல்லை; அல்லது இயக்கத்திற்கும் இயக்கம் இல்லை.

ஆ.மாலவன், திருச்சி-1.

விலைவாசி உயர்வைப் பற்றி மத்திய, மாநில அரசின் முயற்சிகள் பற்றி?

ஓட்டுக்கு விலையேறினால்தான் அவர்களுக்குக் கவலை. வீட்டுக்கு விலையேறினால் அவர்களுக்கென்ன கவலை? அவர்களுக்கு அதுவொரு அஞ்சலி நிகழ்ச்சியாகவே படுகிறது. அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏன் அலட்டிக் கொள்வானேன் என்றிருக்கிறார்கள்.

எம். திலீப்குமார் பாபு, பல்லடம்.

உலகத தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பேசுவதே முதல்வராய் இருந்து தான் பேசுகிற கடைசிப் பேச்சாய் இருக்கும் என்கிறார் கலைஞர். இது உண்மையாகுமா?

புதுப்பிக்கப்படும்!

எஸ்.கண்ணன், காரைக்கால்.

வளரும் அரசியல்வாதிகளின் அறிக்கைகளுக்கு வளர்ந்த அரசியல்வாதிகள் பதில் சொல்லமாட்டேன்கிறார்களே, ஏன்?

எறும்புகள் கடிப்பதை யானைகள் சட்டை செய்வதில்லை. காதுக்குள் நுழையாதவரை இது கூடத் தெரியாமல் நீங்கள் பாலிடிக்ஸ் பண்ணுகிறீர்கள். பாலிடிக்ஸ் பேசுகிறீர்கள். உங்களைப் போன்ற ஆட்களால்தான் பாலிடிக்ஸே இன்று புசுபுசுன்னு வளர்கிறது.

சிக்கந்தர் பாஷா, காரைக்குடி.

தனது ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கும் எடியூரப்பா பற்றி?

அபாயக் கட்டத்தில் ஆட்சியை உதறி விடலாம் என்றிருப்பார் (ஆட்சிக்) கட்டில் போனால் பரவாயில்லை. கட்டிலோடு தானும் காணாமல் போகக்கூடாது என்பதுதான் அவரது கணக்கு! பெங்களூர் நமக்கு மிகவும் பக்கம் இருக்கிறது போய் வருகிறவர்கள் யாராவது அவருக்குக் ‘குரு உபதேசம்’ செய்திருப்பார்கள்.

ச. மெய்யநாதன், இராமநாதபுரம்.

உங்கள் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வரலாமா?

விரைவில் நானும் ஊரில் இல்லை என விளம்பரம் கொடுக்கலாமா என்று யோசித்து வருகிறேன்.

டி. வசந்தகுமாரன், திண்டுக்கல்.

இன்றைய திரைப்படங்கள் கதையை நம்பி ஓடுகிறதா? சதையை நம்பி ஓடுகிறதா?

தெரிந்தே பதிலை இரண்டாவதாக வைத்த உங்களை நான் முதலாவதாக வைத்துக் கொள்ளலாம் போலிருக்கே? இந்த வாரம் எனக்கு பிடித்த வாசகர் நீங்கள்தான்!

எஸ்.பி.ஸ்ரீனிவாஸ், வடபழனி.

இன்றைய உலகில் வாழத்துதல் குறைந்து விட்டதே?

குறையவில்லை. அதன் வடிவம் மாறியுள்ளது. ஒருவர் ஒருமுறை (மறந்து போய்) வாழ்த்தினாலே அதை லைஃப்டைம் வாழ்த்தாகக் கொள்ள வேண்டியிருக்கும். லைஃப் டைமைத்தான் இன்று சரியான வேலிடிட்டியாக நினைக்கிறார்கள்.

எஸ். அப்துல்ஹமீது, வேலூர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நினைத்ததைச் சாதிக்க முடியாத சிபுசோரனைப் பற்றி?

சிபுசோரன் பதவியேற்றது மூன்று முையுமே எம்.எல்.ஏ.வாக இல்லாமல்தான். கொலை வழக்குகளோடு சம்பந்தப்பட்ட இவருக்கு இந்த ஜனநாயகக் கொலையைப் பற்றி என்ன கவலை? ஆனாலும் உண்மை வெல்லும் என்பது உறுதியாகிவிட்டது.

எஸ்.கோபால், கோவை.

சிறைக்குப் போகிற சிலர் சிரித்தபடியே செல்வது ஏன்?

மெனுதான் காரணம். உள்ளே போனால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். உள்ளே சிக்கன் உணவு உண்டு. வீட்டிலிருந்தால் பழையதுதானே?

நா.குமார், புதுச்சேரி.

ஆண்களுக்கு சமையல் செய்வது கஷ்டமா?

இல்லை. இவர்கள் செய்யும் சமையலைச் சாப்பிடுவதுதான் மிகவும் கஷ்டம்.

வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

இன்னும் பலர் தங்கள் கட்சியில் சேர்வார்கள் என்று அழகிரியும் ஜெயலலிதாவும் சொல்கிறார்களே?

அறிவாலயத்தில் ஏதோவொரு சுரங்கப்பாதை இருக்கிறது என்பதை! அது, ராயப்பேட்டையில் தொடங்கி, தேனாம்பேட்டையில் முடிகிறது. ஆனால் தேனாம்பேட்டை ராயப்பேட்டைப் பாதை ஒருவழிப் பாதையாகவே இருக்கிறது.

பா.நடராசன், சிதம்பரம்.

மயிலை முண்டகக் கண்ணி அம்மன் கோயிலுக்கு அன்னதானக் கட்டிடம் கட்டித் தந்துள்ள கலைஞரின் பேத்தி பற்றி?

கலைஞர் பாரம்பரியத்தின் பக்தி நன்கு தெரிந்ததுதானே! இப்போது வெளிப்படையாக உலகறிய நடக்கிறது.

எஸ்.வள்ளி, காரைக்குடி.

அருந்ததி ராய் மாவோயிஸ்டுகளை இன்னமும் ஆதரிப்பது பற்றி?

எழுத்துலகைச் சேர்ந்தவன் என்கிற வகையில் இதற்காக வெட்கப்படுகிறேன். மாவோயிசம் மக்கள் இயக்கமல்ல. மக்களுக்கு எதிரான இயக்கம் இல்லாவிட்டால் சொந்த மண்ணின் அப்பாவி மக்களையே கொல்வார்களா? தண்டவாளங்களைப் பெயர்ப்பவர்களும் இரயிலைக் கவிழ்ப்பவர்களும் மக்கள் இயக்கத்தவர்களா? பன்றியைக் குட்டியில் கொஞ்சிய வளர்ந்த பிறகுமா?

கே. ஞானம், திருவாரூர்.

கால் பந்து விளையாட்டில் ஆர்வம் உண்டா?

உண்மையைச் சொன்னால் உதைபடுவேன், வேண்டாம். என் வாயைக் கிளறாதீர்கள்.

சி. தமிழரசன், வேலூர்.

தமிழக அரசு ஊழியர்கள் இன்று யார் பக்கம்?

சந்தேகமே வேண்டாம். தி.மு.க.வின் பக்கம். அரசு ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் போண்டாவைக் கொடுத்தாலும் இது சீடை தான் என்பார்கள். இவர்களே கலைஞரை ஆகா ஓகோ என்கிறார்கள். அரசு ஊழியர்கள் 14 இலட்சம் பேர். 14 இலட்சம் குடும்பங்கள் என்றும் சொல்லலாம். இவர்களுள்ள அ.தி.மு.க. விசுவாசிகள் உண்டு. இவர்களைத் தவிர மற்றவர்கள் தி.மு.க. ஆட்சியே தெவிட்டாத ஆட்சி என்பார்கள்!

எம்.ராபர்ட் சாமுவேல், ஆலங்குடி.

ஜெயலலிதா மே 27 2011 இல் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று எதை வைத்துச் சொல்கிறார்?

துல்லியத் தேதி ஏதோ ஜோதிடம் போலத் தெரிகிறது. ஜோதிடத்தை அளவிற்கு அதிகமாக நம்புவது நல்லதல்ல!

வா.ப.கண்ணன், சிவகங்கை.

பெட்ரோல் விலையை உயர்த்தத் தயக்கம் காட்டிய மத்திய அரசு பற்றி?

வேறு வழியின்றி உயர்த்த நேர்ந்தது என்று பாவ்லா காட்டத்தான். பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிர்பாராத நேரத்தில் வரப்போகிறது.இதை நிச்சயம் எதிர்பாருங்கள்.

எஸ்.ராமநாதன், கீழப்பூங்குடி.

அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளி நாட்டவர்களுள் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்களாமே?

நமக்கு மேல் உள்ள இருவரின் கதை என்ன தெரியுமா? மெக்சிகோவினர் பலர் முறையற்ற வழிகளில் நுழைந்தவர்கள். அடுத்துவரும் பிலிப்பினோக்கள் அமெரிக்காவில் உயர் நிலையிலோ உயர் பதவிகளிலோ குறைவாகத்தான் இருக்கிறார்கள். இந்தியர்கள் அப்படி அல்லர். மிகச் சிறந்த நிலையில் இருக்கிறவர்கள். ஓர் உண்மை சொல்லவா? அமெரிக்காவில் இந்தியர்கள் சம்பாதிக்கும் சராசரி வருமானம் இருக்கிறது அல்லவா, இது அமெரிக்கர்களின் சராசரி வருமானத்தைவிட அதிகம். இந்தியர்கள் இணையற்றவர்கள் வெளி நாடுகளில்.

ரா.ஜெயரதன், பூனே.

சுயிங்கம் நல்லதா?

அவசியமில்லை. பற்களைச் சுத்தம் செய்யவும் தாடைப் பயிற்சிகும் சுயிங்கம் நல்லது என்கிறார்கள்.

18 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 4:10 am
Filed under: Uncategorized
Healthy life

Posted on Friday 18 June 2010

ladies-finger.jpgகாய்கறிகளின் மருத்துவக் குணங்கள் - கே.எஸ்.சுப்பிரமணி

அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் சாப்பிடச் சொல்வார்கள். காரணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது!

மற்ற காய்கறிகளிலும் பாஸ்பரஸ் இருக்கிறது. குறிப்பாக, வெண்டைக்காயில் உள்ளதைவிட அதிக அளவில் இருக்கிறது. இருந்தாலும், இக்காயை ஏன் சிபாரிசு செய்கிறார்கள்?

உயர்தரமான பாஸ்பரஸுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவரபசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; அத்துடன் அலுபொமினோ அமிலங்களும், எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.

கொலாஸ்டிரலைக் கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும்.

மேற்கண்ட காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது. மரம் போன்ற நார்ப்பொருள், தாவரபசைப்பொருள் ஆகியவற்றால்தான் வெண்டைக்காய்ப் பச்சடி பசை போல் இருக்கிறது. வெண்டைக்காய் சேர்த்து தயாரிக்கப்பட்ட சாம்பார் குழம்பு முதலியவை தண்ணீராய் இல்லாமல் கெட்டியாய் இருக்கின்றன.

வாய்நாற்றம் அகலும்!
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.

நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் அகன்று குடல் சுத்தமாகிறது.

மலச்சிக்கலும், வாய்நாற்றமும் அகல வெண்டைக்காய் சாப்பிடுவது நல்லது.

திருமண விருந்துகளில் சாப்பாடு உடனடியாகச் செரிமானம் ஆகத்தான் வெண்டைக்காய்களை மோரில் போட்டு மோர்க்குழம்பு தயாரித்துப் பரிமாறுகிறார்கள். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், இம்பிஞ்சான காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முற்றிய வெண்டைக்காய் வேண்டா!
பிஞ்சு வெண்டைக்காயில் தான் மருத்துவக் குணங்கள் அதிகம். அதனால்தான் பெண்கள் பிஞ்சுக் காயா என அறிய வெண்டைக்காய் நுணியை ஒடித்துப் பார்த்துக் கடைகளில் சேகரிக்கிறார்கள்!

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்டவும் தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.

வெண்டைக்காயைத் தண்ணீர் ஊற்றிச் சமைக்க வேண்டும்; வறுத்துச் சாப்பிடக்கூடாது. வயிற்றுப் போக்கைத் தீவிரமாய் குணப்படுத்தும் தன்மை வெண்டைக்காய் பச்சடிக்கு உண்டு.

வாத நோய்க்காரர்களும், உடல் குண்டாய் உள்ள எல்லா வயதுக்காரர்களும் வெண்டைக்காயைத் தவிர்ப்பது நல்லது.

முதிர்ந்த வெண்டைக்காயில் சத்துக்கள் இல்லை. அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப்பொடியாகப் பயன்படுத்துகிறார்க்ள.

இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

வீக்கம் குறையும்!
கிழக்கத்திய நாடுகளில் கட்டி, வீக்கம் புண் முதலியவை குணமாக வெண்டைக்காய்ச் செடியின் இலைகளையும், இளம் பிஞ்சுகளையும் மெல்லிய துணியில் வைத்து, குறிப்பிட்ட இடங்களில் கட்டுகிறார்கள். இதனால் கட்டி, வீக்கம் முதலியவையும், புண்ணும் விரைந்து குணமாகின்றன.

ஆண்மை பெருகும்!
இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

ஆண்டு முழுவதும் பயிராகும் இக்காயின் தாயகம் ஆப்பிரிக்காவாகும். கிழக்குக்கோளார்த்தத்தில் தோன்றிய இக்காய் மேற்குக் கோளார்த்தத்தில்தான் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

அமெரிக்கர்களும், இஸ்தான்புல்காரர்களும் வெண்டைக்காய்ப் பிரியர்களாய் இருக்கின்றனர்.

வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹிபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ்.

சமைத்தோ, ஊறுகாய் போட்டோ, பதப்படுத்தி டின்களில் வைத்திருந்தோ பல நாடுகளில் இக்காயைச் சாப்பிடுகின்றனர்.

‘புரோடோபிளாசம்’ என்னும் திரவத்தில் நமது உயிரணுக்கள் மிதந்துகொண்டிருக்கின்றன. இந்தத்திரவத்தில் முக்கியமாய் இடம் பெற்றுள்ளது பாஸ்பரஸ். இது இரத்தத்தைத் திரவ நிலையில் வைத்திருக்க உப்புச்சத்துடன் பயன்படுகிறது. உயிரணுக்களையும் குறிப்பிட்ட வடிவமைப்பில் தொடர்ந்து இருக்கவும் பயன்படுகிறது.

எனவே, உயர் தரமான பாஸ்பரஸ் அடங்கியுள்ள வெண்டைக்காய் என்னும் இனிமையான காய்கறிக்கும் உணவில் முக்கியத்துவம் கொடுங்கள்; உடல் நலத்துடன் வாழுங்கள்.

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய காய்கறிகளின் மருத்துவ குணங்கள்

2010/06/11 மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!

2010/06/04 இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்

2010/05/28 தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி

2010/05/21 தீடீர்க் காய்ச்சலைத் தணிக்கும் புடலங்காய்

2010/05/07 உடல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்

2010/04/30 குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்

2010/04/23 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு - 2

2010/04/16 அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு

2010/04/09 காய்கறிகள் முதலில் தோன்றிய இடம்!

றொசாரியோ ஜோர்ஜ்யின் வளமான வாழ்விற்கு உணவே மருந்து

2010/03/26 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 3

2010/03/19 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 2

2010/03/12 பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் - 1

2010/03/06 இளமையிலேயே முதுமை டொக்சினின் பித்த பயங்கரம்

2010/02/26 உடலுக்கு ஓய்வு கொடுப்பது

2010/02/19 அன்னாசி

2010/02/12 காளான்

2010/02/05 எண்ணெய்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்

2010/01/29 மஞ்சளின் மகிமை மங்களத்தில் மட்டுமா? அன்றேல் மருத்துவத்திலும் கிட்டுமா?

2010/01/22 இளநீர்

2010/01/15 கற்பனை அல்ல இது! காரட்டின் அற்புதம்!

2010/01/08 தக்காளி

2009/12/31 எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

2009/12/25 இஞ்சியின் மகத்துவம்

2009/12/18 பூண்டின் மருத்துவப் பயன்

2009/12/11 வெங்காயம்

2009/12/04 நெல்லிக்காய்

2009/11/27 தண்ணீர்

 2009/11/20 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 3

2009/11/13 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் - 2

2009/11/06 நின்று கொல்லும் நீரிழிவும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

2009/10/30 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும் - 2

2009/10/23 அவஸ்தைப்படுத்தும் ஆஸ்துமாவும்! அல்லல் படும் ஆன்மாவும்

2009/10/16 இயற்கை உணவும் ஆரோக்கியமும்

2009/10/09 அன்புநல் முதிய பருவம் அடைந்த இளம் நெஞ்சங்களே!

2009/10/02 கண் நோய்களும் இயற்கை மருத்துவமும்

2009/09/25 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும்… தொடர்ச்சி

2009/09/18 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/11 சிலவகை நோய்களும் இயற்கை மருத்துவ சிகிச்சையும் …தொடர்ச்சி

2009/09/04 நோய்களும் சிகிச்சைகளும்

2009/08/28 உணவே மருந்து

கே.எஸ்.சுப்ரமணியின் முந்தைய இளமை காக்க எளிய வழிகள்

2009/07/10 ஆற்றல் வாய்ந்த தூரத்து சிகிச்சை

2009/07/04 இதயத்திற்கு அதிக வேலை கொடுக்காதீர்கள்!

2009/06/26 ஆழந்து மூச்சு விடுங்கள்

2009/06/19 குழந்தைப் பிறப்பைத் தடுக்கும் பானம்!

2009/06/12 இரத்தத்தில் அதிக சீனி சேரலாமா?

2009/06/05 ஆபத்தான நோய்களைத் தவிர்க்கும் உணவுப் பழக்கம்!

2009/05/29 இரவில் வெகு நேரம் விழிக்கலாமா?

2009/05/22 சின்ன உணவு மருத்துவம்

2009/05/15 முகச் சுருக்கத்தை தவிர்க்க முடியுமா?

2009/05/08 கண்களை களைக்க விடாதீர்கள

2009/05/01 தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

2009/04/24 சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்

2009/04/17 அறிதுயில் மருத்துவம்

2009/04/10 கிளி வைத்தியம்

2009/04/03 திடீரென்று எடை கூடுகிறதா?

2009/03/27 கொசு விரட்டிகளால் கெடுதலா?

2009/03/20 அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

2009/03/13 உப்புள்ள பண்டம் குப்பையிலே!

2009/03/06 சீனி : சில கசப்பான உண்மைகள்

2009/02/27 குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?

2009/02/20 உடல் நலக் குறிப்புகள்

2009/02/13 அவசியம்… அவசியம்…

2009/02/06 உணவே மருந்து

2009/01/30 நம்ம வழி எளிய வழி

2009/01/23 சுகமோ சுகம்

2009/01/16 தொந்தி ஒரு தொந்தரவா?

2009/01/09 ஞாபகசக்தி அதிகரிக்க!

2009/01/02 நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க!

2008/12/26 சத்துணவால் மூட்டுவலி குணமாகுமா?

2008/12/19 தண்ணீர் குடிக்கலாமா?

2008/12/12 கவலைக்கு முதல் மருந்து

2008/12/05 சைவ உணவால் அற்புத நன்மைகள்

2008/11/28 நோய்களைக் குணமாக்கும் வண்ண உடைகள்!

2008/11/21 இளமை நீடிக்க இனிய விதிகள்

2008/11/14 விரைந்து நலம்பெற…

2008/11/07 பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை

2008/10/31 காந்தசக்தி மருத்துவம்

2008/10/24 உயிரைக் காப்பாற்றும் தேநீர்

2008/10/17 தினமும் பாதாம் பருப்பு சாப்பிடுங்கள்

2008/10/10 பெண்கள் வலம் வருவது நல்லது!

2008/10/03 தக்காளி நிறையச் சாப்பிடலாமா?

2008/09/26 நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா?

2008/09/19 வேர்க்கடலை சாப்பிடுவதால் நன்மையா?

2008/09/12 அடிக்கடி முட்டை சாப்பிடலாமா?

2008/09/05 தினசரி ரசம் சாப்பிடலாமா?

2008/08/29 சத்தான சாறு எது?

2008/08/22 இளமையிலே முதுமையா?

2008/08/15 காய்கறிகளைத் தவிர்க்காதீர்கள்

2008/08/08 இனிப்பைத் தவிர்க்காதீர்கள்!

2008/08/01 பெண்கள் வெங்காயம் சாப்பிடலாமா?

2008/07/25 வாழைப்பழத்தை தவிர்க்காதீர்கள்

2008/07/18 தினமும் இதயத்தை மெதுவாகத் தட்டுங்கள்!

2008/07/11 நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்

2008/07/04 உதவி செய்யும் உணவுகள்

2008/06/27 மருத்துவ பட்ஜெட்…

2008/06/20 உணவே மருந்து!

2008/06/13 கோபமும் கவலையும் போயே போச்சு…

2008/06/06 மனக்கவலையை மாற்ற…

2008/05/30 மிளகாய் சாப்பிடுவது நல்லதா?

2008/05/23 A to Z

2008/05/16 வாழ வைக்கும் வைட்டமினுக்கு ஜே!

2008/05/09 எதையும் வெல்ல ஓர் எளிய வழி!

2008/05/02 ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அற்புத வைட்டமின்

2008/04/25 சோர்வை விரட்ட…

2008/04/18 நீண்ட நாள் வாழ்பவர்கள் சொல்லும் வழிகள் …!

2008/04/11 மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

2008/04/04 அதிகாலையில் ஓடலாமா?

2008/03/28 ஆறு யோசனைகள்

2008/03/21 சிறந்த உணவு திட்டம் எது? சைவமா? அசைவமா

admin @ 6:51 am
Filed under: Uncategorized
Vietnam travel

Posted on Friday 18 June 2010

ho-chi.jpgவீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

டோனா விட்ட டோஸ்!

லாவோ ஐடெக் கண்காட்சி மிகப் பெரிய சமாசாரமாக இருந்தது. சொல்லப்போனால் மிரட்டிவிட்டது மிரட்டி. நம் சென்னை நந்தம்ம்பாக்கம் பொருட்காட்சி போல, உலகச் செம்மொழி பொருட்காட்சி போல, உலகச் செம்மொழி மாநாடு நடக்கும் கொடிசியா அரங்கு போல் இருந்தது எனலாம்!

ஆனால் உள்ளே இருந்த கடைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த வாரம் வெளியாகியிருக்கும் படத்தில் எனக்கு வலப்புறம் உள்ள இரு சிலைகளைப் பாருங்கள். இவற்றில் ஆரம்பித்து கலைப்பொருள்களென்ன, கைவினைப்பொருள்கள் என்ன, கணினி என்ன, உணவுக் கடைகளின் வரிசை என்ன, உடைகளின் சீர்வரிசை என்ன! அடேயப்பா! நடந்து நடந்து கால் வலித்ததுான் மிச்சம்.

வெளிநாட்டில் பொருள்களைப் பார்த்து எளிதில் ஆசைப்படாத எனக்கு இந்தக் கண்காட்சியில் பெரிய மனப்போராட்டமே ஏற்பட்டது. சட்டைகள், டி-சர்ட்டுகள் என் இரசனைக்கு ஏற்றபடி இருந்தன.

சாவிக் கோர்வைகளுக்கென்றே ஒரு தனி இரட்டைக் கடை. யப்பா! என்னென்ன வகையிெல்லாம் சாவிக் கோர்வைகள் தெரியுமா?

ஓர் இடத்தில் தடுமாறி நான் விழப்போக, டோனா என் கையைப் பிடித்து நான் விழாமல் தடுக்க, அதைப் பார்த்த சாவிக்கடைக்காரப் பெண்கள் இருவர் சிரிக்க, அவர்கள், இருவரும் எங்களைத் தம்பதி என்றே நினைத்துக்கொண்டிருக்கக் கூடும்! நாங்கள் போனது அலுவலக நேரம் என்பதால் அதிகக் கூட்டமில்லை. எனவே, கடைக்காரப் பெண்களுக்கு வேடிக்கை பார்க்கத் தோதாகிவிட்டது.

டோனா பெரும்பகுதிக் காலம் பிரான்ஸ் நாட்டிலேயே வாழ்ந்துவிட்டதால், அவர் உள்ளூரின் வழிகாட்டிப் பெண்ணாக நன்கு அறியப்படாததால் எங்கள் இருவரையும் கடைக்கார பெண்கள் பலரும் எங்களைக் கணவன், மனைவியாகவே பார்த்ததுபோல் எனக்குப் பட்டது.

இதென்ன ஊகம்? இதெப்படி உங்களுக்கு தெரிந்தது என்கிறீர்களா? உண்மைதான். இது ஓர் ஊகமே. ஆனால், ஒவ்வொருவரும் பார்க்கிற பார்வையை வைத்தே நம்மை எத்தகு கோணத்தில் பார்க்கிறார்கள் என்று ஓரளவு கண்டுபிடித்துவிட முடியாத என்ன? கடைகளில் உள்ளவர்கள் பெண்கள் என்று நான் இங்கு இருமுறை குறிப்பிட்டதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.

அதென்ன பெரும்பாலான கடைகளில் இங்கு பெண்களே இருக்கிறார்கள்? லாவோஸ் பெண்கள் நல்ல உழைப்பாளிகள்; லாவோஸ் ஆண்கள் இந்த அளவிற்கு உழைப்பாளிகள் இல்லையோ என்று எனக்குத் தோன்றியது.

எதோ பெண்கள் லாவோ ஐடெக் என்று அறிவித்ததைப்போல பெரும்பாலான கடைகளில் பெண்கள், எனக்கு சந்தேகம் வந்துவிட டோனாவைக் கேட்டேன்.

“அதென்ன எங்கு பார்த்தாலும் கடைகளில் வெறும் பெண்களாகவே இருக்கிறார்கள்.

மெல்லிய புன்னகையைச் சிந்திவிட்டு டோனா சொன்னார். “லாவோ பெண்கள் ஆண்களின் கைகளை அதிகம் எதிர்ப்பார்ப்பது இல்லை. நினைவுக்கு வருகிறதா பாருங்கள். நாம் விமான நிலையத்திலிருந்து வந்து கொண்டிருக்கும்போது உடை வாங்க வேண்டும் என்று நம் வாகனத்தை நிறுத்தச் சொல்லிப் பின்னோக்கி ஓட்டச் சொன்னீர்களே, அந்தக் கடையில் ஆண்களா இருந்தார்கள்? மெக்காங் நதி ஓரம் இரவு உணவுக் கடையில் சாப்பிட்டீர்களே, அங்கு கடை நடத்தியவர் ஒரு பெண்தானே? இன்னும் பல உணவுக் கடைகளை வழியெங்கும் பார்த்தீர்களே, அதை மெல்ல நினைவுபடுத்திப் பாருங்கள்! எத்தனை கடைகளில் ஆண்கள் இருந்தார்கள்? என்ன, நான் சொல்வது சரிதானே?”

“ஆமாம். நீங்கள் சொன்ன பிறகுதான் நினைவிற்கு வருகிறது. பல இடங்களில் பெண்கள்தாம் கடைகளை நிர்வகிக்கிறார்கள்.

“அதுமட்டுமல்ல மிஸ்டர் லேனா! கல்லாவில் பெண்கள்தாம் இருப்பார்கள். உதவிக்குக் கணவனோ, மகனோ இருந்தால்கூட அவர்களைக் கல்லாவைக் கையாளப் பெரும்பாலும் அனுமதிக்கமாட்டார்கள்.”

“ஏன், நம்பிக்கை இல்லையா?” ஆமாம் என்றும் சொல்லலாம். சட்டென்று ஒரு பெரிய நோட்டை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு இரவு குடிக்கப் போய் விடுவார்கள்.

“இதைப் பொதுப்படையாகவே எடுத்துக்கொள்ளலாமா? இல்லை. விதிவிலக்குதான் உண்டா?”

“அது அந்தந்தக் கணவன் மனைவிக்குள் இருக்கும் புரிந்துணர்வைப் பொறுத்தது”

உள்ளே நாங்கள் பொருட்காட்சி அரங்கில் இருந்தாலும் கசகசவென்று புழுக்கம் இருந்தது. நமக்கு வறட்டு வறட்டு என்றது.

“எனக்கு மினரல் வாட்டர் வேண்டும்.”

“வாருங்கள். அந்த இடது நுழைவாயிலில் தண்ணீர்க்கடை ஒன்றை இருந்ததைப் பார்த்தேன். அங்கு போவோம்.”

வெகு தூரம் நடக்க வேண்டியிருந்தாலும் டோனா எவ்விதக் களைப்பும் காட்டாமல் இருந்தது, வெயில் பற்றிச் சலித்துக்கொள்ளவும் இல்லை. அப்பவே சொல்லித் தொலைப்பதற்கென்ன? என்னை இப்படித் தண்ணீர் பாட்டில் வாங்கவெல்லாம் அலையவிடுகிறாயே என்கிற சலிப்பைக் கூட முகத்தில் காட்டவில்லை.

நான் விரைந்து நடத்து தண்ணீர்க் கடையில் மினரல் வாட்டர் பாட்டில் வாங்கக் காசை நீட்டியபோது ஒரு முரட்டுப் பெண்ணின் கை என்னைத் தடுத்தது. இந்தப் பெண்மணி லவோ மொழியில் காச்மூச் என்று கத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

தள்ளி நின்ற டோனா என்னவோ ஏதோ என்று பயந்து அப்பெண்ணைத் தொட்டோ உரசியேவிட்டேன் என்று ஊகித்து (?) ஓடிவந்தார். எனக்கும் இப்பெண்ணின் கோபத்திற்கு ஆளானதற்குக் காரணம் என்ன ஏது என்று புரியவில்லை.

டோனா லாவோ மொழியில் அப்பெண்ணிடம் விசாரிக்க,

“நாங்க கியூவுல நிக்கிறோம்ல? இவர் எப்படி எனக்கு முன்னால வந்து கையை நீட்டலாம்? என்பதுதான் அந்தப் பெண்மயின் கோபம்.

வழிகாட்டியாக வந்தவர் பெண்ணாக இருந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்றுத் தெரியுமா?

எனக்காக டோனா வரிந்து கட்டிக்கொண்டு பேசினார்.

“உன்னைப் பார்த்தால் கியூவில் நிற்கிற பெண் மாதிரியே தெரியவில்லை.” (கரெக்ட்!) வேடிக்கை பார்க்க வந்தவர்போலத்தான் தெரிகிறது. அதனால்தான் என்னவர் (!?) காசை நீட்டினார். என்ன பேசுகிறாய் நீ?” என்று வரிந்து கட்டிக்கொண்டு பேச ஆரம்பிக்க,

‘யாரடி இவ? முன்பின் தெரியாத இந்த இந்தியனுக்கு இந்த உள்ளூர்க்காரி இப்படி வரிந்து கட்டிக்கொண்டு பேசுகிறாள்? என்கிற திகைப்பில் அப்பெண்மணி பேச்சற்றவளாக ஆக,

எனக்கும் ஒரே திகைப்பு அமைதியும், கண்ணியமும் மிடுக்கும் கலந்து பழகிய டோனனாவுக்கு இப்படிக்கூடக் கோபம் வருமா என்று!

டோனா விட்டபாடில்லை. ஒரு வெளிநாட்டவரிடம் “இப்படியா அநாகரிகமாக நடந்துகொள்வது? ஒரு வெளிநாட்டவர் தண்ணீர் பாட்டில் வாங்க முன்னுரிமை கொடுத்தால் குறைந்தா போய்விடுவாய்? அப்படியென்ன நீண்ட கியூ நிற்கிறது இங்கே? ஒரு நிமிடத் தாமதத்தைப் பொறுக்கமாட்டாயா?” என்று சகட்டு மேனிக்குப் பிடிபிடி என்று பிடிக்க உங்களுக்கு எப்படி இந்தக் கோப உரையாடல் தெரியும் என்கிறீர்களா? (எல்லாம் டோனா பின்னர் மொழிபெயர்த்துச் சொன்னவைதாம்!)

ஓர் அந்நியப் பெண் எனக்காக இவ்வளவு வரிந்து கட்டிக்கொண்டு பேசியது ஒரு புதிய அனுபவம்தான்.

‘தண்ணீர் பாட்டிலா? நீங்களே போய் வாங்கிக்கொள்ளுங்கள். நான் இங்கு நிற்கிறேன்’ என்று கழற்றிக்கொள்ளாமல் நிழலாக டோனா உடன் வந்தது நல்லதாகப் போயிற்று என்று என் மனம் ஆறுதலடைந்தது.

லாவோ ஐடெக் பொருட்காட்சியில் இன்னும் ஒரு சுவையான விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏழு நாள் பொறுப்பீர்கள்தானே?

(தொடரும்)

வீரத்தின் விளை நிலத்தில் தமிழர்களின் தடயங்கள்! - வியட்நாம் தொடர்

2010/06/11 ஆற்றில் மணல் அள்ளுவது நல்லதே!

2010/06/04 லாவோஸிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி!

2010/05/28 பெண்ணொருத்தியின் ஓலக்குரல் எழுந்த திசையை நோக்கி…

2010/05/21 சட்டித் தலையன் பண்ணிய சண்டித்தனம்!

2010/05/07 டோனா கொடுத்த இனிய அதிர்ச்சி!

2010/04/30 உலகத் தரமான இரசனை கொண்ட மூக்கு!

2010/04/23 வழிகாட்டிப் பெண்மணி காட்டிய தயக்கம்!

2010/04/16 வெளிநாட்டுப் பயணத்திற்கு விழப் போகிற வெட்டு!

2010/04/09 “இது அடுக்கவே அடுக்காது!”

2010/04/02 புகைப்படக்காரர் எடுத்த ஓட்டம்!

2010/03/26 தொட்டுச் சொல்லிக் கொடுத்த அப்சரஸ்கள்!

2010/03/19 ஓட்டுக் கேட்க நேர்ந்த வேளை!

2010/03/12 வழிகாட்டி அள்ளிவிட்ட அளப்புகள்!

2010/03/06 இந்துக் கோயிலில் பெளத்தம் நுழைந்த விதம்!

2010/02/26 கறுப்புக் கண்ணாடியைக் கழற்றுங்கள் என்றார்கள்!

2010/02/19 நம் விவசாயிகளுக்கு கம்போடிய விவசாயிகள் சொல்லும் செய்தி!

2010/02/12 கடிகாரத்தைக் கெஞ்சினேன்!

2010/02/05 வீரத்தின் விளைநிலத்தில் தமிழர்களின் தடயங்கள்!

2010/01/29 சுற்றுலாப் பயணிகளின் தலைகள் என்ன மிளகாய் அரைக்கவல்ல அம்மிகளா?

2010/01/22 கியானாவின் பயங்கரமான மறுமுகம்!

2010/01/15 என் கரம் பற்றிய அந்தப் பெண்!

2010/01/08 ஓட்டல் உரிமையாளர் ஓடோடி வரப்போகிறார்!

2009/12/31 ஒரு முதுகுத் தட்டலும் ஒரு தலைக் குட்டலும்!

2009/12/25 என் பையில் இருந்த ஆட்சேபகரமான பொருள்!

2009/12/18 மகிழ்ச்சி பறிக்கப்பட்ட வேளை!

 2009/12/11 வியட்நாமுடன் நான் தொடுக்க விரும்பிய போர்!

லேனாவின் இதயங் கவர்ந்த இந்தோனேசியா! - தொடர்

2009/12/04 காய்கறி வண்டியில் விமான நிலையம்!

2009/11/27 நாம் கற்க வேண்டிய இந்தோனேசியப் பாடம்!

2009/11/20 இந்தோனேசியர்களுக்குப் பிடித்த இந்திய விஷயம்!

2009/11/13 இனிது, இனிது! இந்தோனேசிய காப்பி இனிது!

2009/11/06 ஓட்டல்காரருக்கு என்மீது என்ன கோபம்?

2009/10/30 வரவேற்பாளருக்கு என் மீது என்ன கோபமோ!

2009/10/23 ஒரே நாளில் இந்தோனேசியச் சமையல்!

2009/10/16 இந்தியாவை உயர்த்திப் பிடித்த ஸ்ரவணா பாலி!

2009/10/09 இந்தோனேசிய இந்துக் கோயில்களில் சில வியப்புகள்!

2009/10/02 குரலில் தணல் வீசிய இளைஞர்!

2009/09/25 3 மாதங்களுக்கு ஒரு முறைதான் சம்பளம்!

2009/09/18 இந்தோனேசியாவிலும் டெலிகாம் ஊழல்?

2009/09/11 ஓட்டுநர் ஏன் வாயடைத்துப்போனார்?

2009/09/04 பாவம் இந்தோனேசிய இளம் பெண்கள்!

2009/08/28 தற்காலிக முதலாளிக்கு இப்படி ஒரு மரியாதை!

2009/08/21 தங்கச் சங்கிலியுடன் வெளியே போகாதீர்கள்!

2009/08/14 ஓட்டுநர்கள் கேட்ட அதிர்ச்சிக் கேள்வி!

 2009/08/07 வந்திறங்கியதும் வந்த கேள்வி!

லேனாவின் முந்தைய சீனம் சென்று வந்தேன் - தொடர்கள்

2009/07/31 கண்ணடித்தால் தவறில்லை!

2009/07/24 ஆணின் வெட்கம் வெளிப்படுவது எப்போது?

2009/07/17 உலகின் படாதபாடு பட்ட அருங்காட்சியகம்!

2009/07/10 வெட்டிவிடு இந்த மனுஷனை!

2009/07/04 தைவானின் இராணுவ இரகசியமா கேட்டேன்!

2009/06/26 இளசுகளுடன் ஊர் சுற்றத் திட்டமா?

2009/06/19 உறக்கம் கெடுத்த வெள்ளைக்காரர்!

2009/06/12 அசட்டுச் சிரிப்பின் அர்த்தம்!

2009/06/05 அந்தப் பதற்றமான கணங்கள்!

2009/05/29 கண்ணெதிரே ஒரு தைவானிய - சீன மோதல்!

2009/05/22 இந்தியர்களைப் பற்றிய வித்தியாசமான ஒரு பாராட்டு!

2009/05/15 தைப்பேயிலுமா அங்கவை சங்கவை?

2009/05/08 காசை எடுக்க யோசிக்காத தைவானியர்கள்!

2009/05/01 தலைக்குள் இறங்கிய பல ஆயிரம் வோல்ட் மின்னல்!

2009/04/24 அட! விவஸ்தை கெட்ட பொண்ணுகளா!

2009/04/17 யானையாகக் கனத்த ஷான்யான்!

2009/04/10 மரணத்தைப் பற்றி பார்வை என்ன?

2009/04/03 சத்தமான நான்கு முத்தங்கள்!

2009/03/27 கொல்கிறதே இந்தக் குடும்பம்

2009/03/20 மூன்று பெண்கள் நடுவே மாட்டிக் கொண்டு…

2009/03/13 நகைக் கடையில் காத்திருந்த அதிர்ச்சி!

2009/03/06 தைவானியக் கிழவர்களை நம்ப முடியாது!

2009/02/27 கைப்பையால் தர்ம அடி வாங்கிய இளைஞன்!

2009/2/20 இரு தைவானியர்கள் கொடுத்த இரு சொல் சூடு!

2009/02/13 பாம்புக் கடைகளை நோக்கி ஒரு நெளியல் நடை!

2009/02/06 என்னைப் பாவிப் பய என்று திட்டுபவர்கள் யார்?

2009/01/30 நம்மவர்கள் தைவானியர்களிடம் கற்க வேண்டிய பாடம்!

2009/01/23 தமிழகப் பாணியில் ஒரு தைவானிய டாக்சி அனுபவம்!

2009/01/16 எட்டு எனக்கு லட்டு!

2009/01/09 தைவானியர்களிடம் உள்ள ஒரு வித்தியாசமான பழக்கம்!

2009/01/02 சாதிக்கும் இந்திய மாணவர்கள்!

2008/12/26 லேனா சாரை டின்னு கட்டிடுவாங்க!

2008/12/19 தமிழக மாணவர்களுடன் அடித்த அரட்டை!

2008/12/12 சுரேஷ்குமார் சிந்திய விஷமப் புன்னகை!

2008/12/05 அந்தத் தொழிலைக் கை விட்ட அழகு!

2008/11/28 மாணவ மாணவியர் நெருக்கம் அநியாயம்!

2008/11/21 கேரனுக்கு ஏற்பட்ட வியப்பு!

2008/11/14 இங்கிதம் அறியா இங்கிலாந்துப் பெண்மணி!

2008/11/07 தைவானில் கிடைத்த ஓர் இரசிகை!

2008/10/31 தைவானியர்கள் சமாமானியர்கள் அல்லர்!

2008/10/24 காதில் விழுந்த சவுக்கடி வாக்கியம்!

2008/10/17 தைப்பேயில் கேட்ட தேன் தமிழ்!

2008/10/10 தைப்பேயில் நிலவும் பேய்த்தனமான ஓட்டல் வாடகைகள்!

2008/10/03 தைவானியர்கள் மீது வந்த கோபம்!

2008/09/26 இந்தியர்கள் என்றால் இளக்காரமா?

2008/09/19 இந்தியா சீனாவுக்குப் பயப்படும் விஷயம்!

2008/09/12 இடி மன்னர்கள் பாடு ஜாலிதான்!

2008/09/05 கைப் பிடித்த சிங்கப்பூர்ப் பெண்மணி!

2008/08/29 வளைகுடாவிற்காக விதிகள் வளையுமா?

2008/08/22 சீனச் சாதனைகளின் பின்னணி என்ன?

2008/08/15 மனத்திற்குள் வெடித்த பிரமிப்பு வெடி!

2008/08/08 இது வளமையா அல்லது வறுமையிலும் நேர்மையா?

2008/08/01 கன்பூஷியஸ் கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட ஏக்கம்!

2008/07/25 சீன ஒலிம்பிக்கினால் நமக்கு வரப்போகும் சிக்கல்!

2008/07/18 முஸ்லீம்களைப் புறக்கணிக்கும் சீன அரசு

2008/07/11 மக்களை ஏமாற்றாத அரசு, அரசை ஏமாற்றாத விவசாயிகள்!

2008/07/04 சீனத்தில் மாணவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு இல்லை!

2008/06/27 சீனப் பள்ளி மாணவிகளின் பையில் அதிரவைக்கும் பொருள்!

2008/06/20 வாங்குனா வாங்கு! வாங்காக் காட்டிப் போ!

2008/06/13 சீனாவும் பார்த்தமாதிரி ஆச்சு! சீப்பா பொருள் வாங்கிய மாதிரியும் ஆச்சு!

2008/06/06 சீனாவில் கல்வி நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று

2008/05/30 பெண்களின் நான்கு குணங்களின் வரிசையை மாற்றியமைத்த சீனப் பெண்கள்

2008/05/23 சீனர்கள் வியந்த தமிழ்மொழி!

2008/05/16 நான்சிங் தெரு எனும் அசிங்கத் தெரு

2008/05/09 ”பொண்ணுங்க தொல்லை தாங்க முடியாது”

2008/05/02 விடிய விடிய விளையாடும் சீனர்கள்!

2008/04/25 கடுப்பு ஏற்படுத்தாத கடுப்பு!

2008/04/18 சீனாவிற்கு வந்ததே சாப்பிடத்தானா?

2008/04/11 நிற்காமல் கடந்து போன லி எக்ஸ்பிரஸ்

2008/04/04 பங்குதாரர்களுக்குள் இருக்க வேண்டிய புரிந்துணர்வு!

2008/03/28 எங்களால் சிரி சிரி என்று சிரித்த சீனப் பெண்மணிகள்…

2008/03/21 அட, என் முன்னோடிகளா…

admin @ 6:16 am
Filed under: Uncategorized
Which is fake? Which is real?

Posted on Friday 18 June 2010

dmk-flag.jpgஎது அசல்!? எது போலி?

சேலம், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சியினர் தி.மு.க.வில் இணைந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் படுஉற்சாகமாகி, தி.மு.க. மட்டுமே உண்மையான திராவிட இயக்கம், மற்றவையெல்லாம் போலி என்று பேசியிருக்கிறார்.

காங்கிரஸ் பல கூறுகளாகக் காலம் காலமாக உடைந்தபோதெல்லாம் பிரிந்து போனவர்கள் காங்கிரஸ் என்ற சொல்லையும் எடுத்துக் கொண்டார்கள். ஆனால் எந்த காங்கிரஸ் தலைவரும் மற்ற காங்கிரஸ் கட்சிகளைப் போலி என்று சொல்லவில்லை.

தி.மு.க.விற்கே திராவிடம் என்ற சொல்லைத் தானமாகத் தந்த கட்சி பெரியாரின் திராவிட இயக்கம்தான். அண்ணாவேகூட திராவிடம் என்ற சொல்தான் இனி வருங்காலத்தில் பெரும்பான்மை மக்களைத் தம்பக்கம் ஈர்க்கக் கூடிய சொல் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். இரண்டறக் கலந்து ஒன்றாய் வாழ்ந்த தமிழர்களுக்கு திராவிடம், ஆரியம் என்கிற பாகுபாட்டை ஊட்டி வித்தியாசப் பார்வை பார்க்கக் கற்றுத் தந்தவை திராவிட இயக்கங்களே.

திராவிட இயக்கங்களைப் பற்றிக் காமராசருக்கு இருந்த கோபம்தான், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதாக வெளிப்பட்டது.

முதலில் தி.மு.க. மட்டும்தான் உண்மையான இயக்கம் என்று சொல்ல வந்தவர், நல்லவேளையாக நினைவிற்கு வந்து தி.க.வும் உண்மையான இயக்கம்தான் என்று பெருமை சேர்த்திருக்கிறார். கி.வீரமணியின் வருத்தத்திற்கு ஆளாகாதபடி.

தி.மு.க. தலைவரின் வாதப்படியே வைத்துக்கொண்டால் கூட, ஆரியத்திற்கு எதிரான சொல்லான “திராவிடத்தைப் பயன்படுத்துங்கள்; தமிழன் என்று சொல்லாதீர்கள். உங்களைத் திராவிடன் என்றே அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள் என்றுதானே பெரியார் கேட்டுக் கொண்டார்? பெரியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க தங்களைத் திராவிடர் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் கட்சிகளின் போக்கை எப்படி குறை சொல்ல முடியும்?

திராவிட என்கிற சொல்லை எந்தத் திராவிடனும் ஏன் திராவிடத்தில் நம்பிக்கை உள்ள எவரும் பயன்படுத்த முடியும். இச்சொல்லுக்கு தி.மு.க. மட்டுமே எப்படி ஏகபோக உரிமை கொண்டாட முடியும்?

தி.மு.க.வே திராவிட இயக்கத்திலிருந்து பெயரை இரவல் பெற்ற கட்சி என்கிறபோது தி.மு.க.வை நாற்றங்காலாகக் கொண்டு வெளியில் பிரித்து நடப்பட்டு வளர்ந்த கட்சிகளைப் போலி என்கிற வாதம் சற்றும் பொருந்தவில்லை.

பெரியார் இன்று இருந்திருந்தால் ஆரியத்திற்கு எதிராக அணிவகுத்து நிற்கிற எந்த ஓர் சிறு அமைப்பையும் வரவேற்கவே செய்வார்.

பதவிக்கு வரவும், ஓட்டு வாங்கவுமே ‘திராவிட’ என்ற சொல்லை மற்ற கட்சிகள் பயன்படுத்துகின்றன என்கிற வாதம் இருக்கிறதே இது ஒரு பலவீனமான வாதம்.

அப்படிப் பார்த்தால் பதவிக்கு ஆசைப்படாத தேர்தலில் நிற்காத பெரியாரின் கி.வீரமணியின் திராவிட இயக்கம் மட்டுமே அசல் இயக்கமாக இருக்க முடியும்.

லேனாவின் பார்வையில் முந்தைய கட்டுரைகள்

2010/06/11 நல்லதொரு சவால்!

2010/06/04 பள்ளிக் கட்டணத்திற்கு மூன்று தரங்கள்!

2010/05/28 சாதனைகளின் மறுபக்கம்!

2010/05/21 மக்களின் நலன் மண்ணின் தூசியா?

2010/05/07 ஜெயலலிதா சொல்லித் தரும் அரசியல் நாகரிகம்!

2010/04/30 சக்தியைத் திரட்ட நல் வாய்ப்பு!

2010/04/23 மேல்சபை மேலான சபையாகுமா?

2010/04/16 மறுபடி கெட்டுவிட்ட ஈரல்!

2010/04/09 கலவரம் தரும் மின் நிலவரம்!

2010/04/02 வேடிக்கை பார்த்த விவேகிகள்!

2010/03/26 சாலை மறியல்களுக்கு மாலை இடுபவர்கள்!

2010/03/12 புரியாமலா போகும்?

2010/03/06 செயற்குழுவா பகைக்குழுவா?

2010/02/26 கைக்கு எட்டி என்ன பயன்; வாய்க்கு எட்டாமல்?

2010/02/19 தமிழ்வழிக் கல்விக்கான தருணம்!

2010/02/12 கொசு(று)ப் பிரச்னையல்ல இது!

2010/01/29 கல்வியைக் கடைச் சரக்காக்கிய நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்!

2010/01/22 மடுவிற்கும் மலைக்கும் உள்ள வேறுபாடு!

2010/01/15 நடக்கட்டும் நடக்கட்டும்!

2010/01/08 அதற்குள் இப்படி ஓர் ஆயாசமா?

2009/12/31 அம்புகளை நோவானேன்?

2009/12/25 கரி பூசிக்கொண்ட காங்கிரஸ் தலைமை!

2009/12/18 வெறும் ‘தி’ யால் ஒன்றும் இயலாது!

2009/12/11 மானம் காப்பாற்றுங்கள்!

2009/12/04 அப்படிப் போடுங்கள் அம்மையாரே!

2009/11/27 முதலில் இந்தியன்; பிறகே தமிழன்!

2009/11/20 பசுமையைச் சிவப்பாக்காதீர்கள்!

2009/11/13 கரிசனம் போதாது!

2009/11/06 எங்க ராசால்ல! ஒப்புக்குங்க!

2009/10/30 ஊற்றுக் கண்களை அடைக்காமல்…

2009/10/23 ஒழுக்கக் குறைவான உலகம் வைத்த ஒப்பாரி!

2009/10/16 திரைப்படம் எடுப்பவர்களுக்குப் புகட்டப்பட்ட நல்ல பாடம்!

2009/10/09 காற்றில் பறக்கும் சட்டங்கள்

2009/10/02 உணவுத் துறை உளவுத் துறை ஆகட்டும்

2009/09/25 விஜய்யின் அரசியல் விஜயம்!

2009/09/18 அடிமட்ட அரசியல் ஏன்?

2009/09/11 சமச்சீர் கல்விமுறையைச் சாத்தியப்படுத்துங்கள்!

2009/09/04 யார் பெருமைப்படும்படியான வெற்றி?

2009/08/28 ஆமைகள் நத்தைகளாகின்றன!

2009/08/21 சிலைகள் தரும் கவலைகள்!

2009/08/14 சாட்டையைச் சுழற்ற வேண்டிய தருணம்!

2009/08/07 எதிர்க்கட்சிகள் வாழ்க!

2009/07/31 எடுத்த முடிவால் நிகழப் போகும் எதிர் விளைவுகள்!

2009/07/24 போதும் உங்கள் பீற்றல்கள்!

2009/07/17 மயிலிறகால் வருடியுள்ள முகர்ஜி!

2009/07/10 கன்னத்தில் அறைந்து சொல்லப்பட்ட பாடம்!

2009/07/04 கள் வேண்டுவோரின் உணர்வுகள், எதிர்ப்பார்ப்புகள்

2009/06/26 நட்டாற்றில் கவிழ்த்த தோனி

2009/06/19 பெண்களுக்கா உரிமை மறுப்பது?

2009/06/12 நல் வாய்ப்பில் உயர்ந்துள்ள எதிர்பார்ப்பு!

2009/06/05 நேர்மையை நிரூபிக்கவேண்டிய கட்டாயம்!

2009/05/29 மெச்சும்படியான தீர்ப்பு!

2009/05/22 தேர்வில் வென்ற தேர்தல் ஆணையம்!

2009/05/15 தண்டிக்கும் எதிர்க்கட்சி! தாண்டிக் குதிக்கும் ஆளுங்கட்சி!

2009/05/08 நல்ல பூச்சுற்றல்!

2009/05/01 நிறம் மாறும் நிலைமை ஏன்?

2009/04/24 இன்னும்கூட அதிகம் எதிர்பார்க்கிறோம்!

2009/04/17 மனம் இரங்குவோம்!

2009/04/10 தீயினும் கொடியது காமம்!

2009/04/03 கிரிக் ‘கெட்டுப்’ போச்சு!

2009/03/27 வழிக்கு வரவேண்டிய வழக்கறிஞர்கள்!

2009/03/20 அரசியலா, அக்கறையா?

2009/03/13 நல்லெண்ணத் தூதுவர்களுக்குமா இந்த கதி?

2009/03/06 சட்ட வல்லுநர்கள் சட்டாம் பிள்ளைகளாகலாமா?

2009/02/27 கண் துடைப்பு பட்ஜெட்டுகள்!

2009/2/20 இறுதி இலக்கு என்ன?

2009/02/13 முத்துக்குமார் காட்டிய தவறான முன்னுதாரணம்!

2009/02/06 சென்று வாருங்கள்!

2009/01/30 தமிழ்நாட்டின் அமைதி என்னாவது?

2009/01/23 நல்ல ஆரம்பம்!

2009/01/16 பெண் குற்றவாளிகள் பெருகி வருவதன் பின்னணி என்ன?

2009/01/09 ஜனநாயகம் ஜெயிக்குமா?

2009/01/02 அமைதியைக் குலைக்கும் அரசியல் அணிகள்

2008/12/26 போதுமா இந்தப் பொங்கல் இனாம்?

2008/12/19 நட்சத்திரங்கள் எரிமலைகளான போது…

2008/12/12 வெள்ளம் தந்த படிப்பினைகள்!

2008/12/05 காய்கறி விலைகள் கனிய வழி!

2008/11/28 தடுக்கப்பட வேண்டிய தொடர் விளைவுகள்

2008/11/21 மின் துறையின் முனைப்பின் அவசியம்!

2008/11/14 ரஜினி போட்டுக் கொடுத்த தங்கத் தடம்!

2008/11/07 அழகுற அரங்கேறிய கண்துடைப்பு நாடகம்!

2008/10/31 ஜீரணிக்கத்தான் முடியவில்லை!

2008/10/24 கடிந்த ரஜினி! வெடித்த ஆர்வம்!

2008/10/17 கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டிய கரங்கள்!

2008/10/10 திரைப்படத்தின் திரைமறைவில்…..

2008/10/03 மோகன்சந்த் சர்மா எனும் மாவீரன்

2008/09/26 தங்கள் விரலால் தங்கள் கண்களையே குத்திக் கொள்வதா?

2008/09/19 தேவை இக்கணம் : மின் சிக்கனம்

2008/09/12 தமிழக இருள் விமோசனம் உண்டா?

2008/09/05 இருபக்க இடைவெளிகள்!

2008/08/29 உச்சநீதிமன்ற நீதியரசர்!

2008/08/22 பாதிப்புகளைப் பாதியாக்கலாம்

2008/08/15 கண் துடைப்புக் கல்லூரிகள்!

2008/08/08 பின் தங்க வைக்கும் மின்சாரம்

2008/08/01 காங்கிரசின் புதுக் கணக்கு

2008/07/25 விஜயகாந்திற்கு ஆகும் வெகுகாலம்

2008/07/18 தமிழக காங்கிரஸ் கடைத் தேறுமா?

2008/07/11 புண் புரையோடும் முன்னதாக…

2008/07/04 தமிழகம் முன் உதாரணமாகட்டும்!

2008/06/27 ஒரு சாணக்கியரின் சறுக்கல் முடிவு!

2008/06/20 கம்யூனிஸ்டுகளால் வந்திருக்கும் கூடுதல் கவலை!

2008/06/13 மண்ணின் மைந்தர்கள் ஏந்த வேண்டிய சுமை!

2008/06/06 எதிர்ப்பதே எதிர்க் கட்சியின் வேலையா?

2008/05/30 குழி பறிக்கும் கூட்டம் குதியாட்டம் போடுமா?

2008/05/23 மக்களின் மதிப்பெண் என்ன?

2008/05/16 புகையும் அடங்க வேண்டும்!

2008/05/09 அனைவருமாய்க் கைகோர்ப்போம்!

2008/05/02 இதுவன்றோ தருணம்!

2008/04/25 மெச்ச வேண்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

2008/04/18 காம்ரேடுகள்; முரண்பாடுகள்!

2008/04/11 நாள்பட்ட நன்மைக்கு வழி!

2008/04/04 அரசு இயந்திரம் எப்போது உருளும்?

2008/03/28 நழுவவிடப்பட்ட நல்வாய்ப்பு!

2008/03/21 ஏன் இந்த இருட்டு நிலை?

admin @ 6:09 am
Filed under: Uncategorized
Good things may not be sheet!

Posted on Friday 18 June 2010

tamilvanan-son.jpgகசப்பு மருந்துகளை ஊட்டவேண்டிய அவசியம்!

நன்மைச் செடிகளின் வேர்கள் கசப்பானவை. ஆனால் இவற்றின் கனிகள் இனிப்பானவை.இதை உணராமல் இருக்கிறவர்களின் வட்டத்தில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகள் அதிகம்.

குறிப்பாக, நட்பு வட்டம் இரத்த உறவு வட்டம், தொழில் வட்டம்.

நண்பர்கள் பேசுகிற பேச்சிற்கெல்லாம் ‘ஆமாம்’ போடுகிறவர்களும், அவர்களின் செயல்பாடுகளுக்கெல்லாம் இயைந்து போகிறவர்களுக்கும்தான் நட்பு வட்டத்தில் நல்ல மதிப்பும் வரவேற்பும் இருக்கின்றன. ‘டேய்! வேண்டாம்டா; இதெல்லாம் வம்புல போய் முடியும்டா!’ என்று சொன்னால் ‘டேய்! இவன் நம்ம கூட்டத்திற்குச் சரிப்பட்டு வராத சந்நியாசிடா!’ என்ற ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள்.

இது இன்னதில் போய் முடியும் என்கிற எச்சரிக்கை மணியை மிகக் கனமாக இல்லாமல் பேச்சுவாக்கில் சொல்லிவிடவேண்டும். நல்ல நட்புக்கு இதுவே அழகு. இப்படி நாம் சொன்னவை ஒவ்வொரு காட்சியாக அரங்கேறும்போது “டேய்! அவன் அன்னைக்கே சொன்னான்டா” என்று நட்பு வட்டம் உணர்ந்து நம்மை மனசாட்சியின் மறுகுரலாக உணரத் தொடங்கும்.

நாம் அனுபவிக்கிற சுகங்களுக்கும் இனிமைகளுக்கும் இவன் ஒரு தடைக்கல் என்று கருதாதபடியும், இதையெல்லாம் பார்த்துப் பொறாமைப்பட்டுச் சாகிற ஆள் என்று நம்மைக் கணித்துவிடாதபடியும் நம் அணுகுமுறைகள் அமையவேண்டும் என்பது மிக முக்கியம்.

நம் எதிர்க்கருத்து உரியவர்களிடம் சரியாகப் போய்ச் சேருவதற்குச் சரியான உத்தி எதுவென்றால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகச் சொல்வதுதான் ஒட்டுமொத்தக் கும்பலில் சொன்னால், அது ஒரு கேலி வாக்கியமாக்கப்பட்டு உதாசீனப்படுத்தப்படும்.

உறவு வட்டம் தொழில் வட்டம் என்றால் எதிராளி கேட்டுக்கொள்கிற மனோபாவத்தில் இருக்கிறாரா என்று பார்த்துக்கொண்டு, அக்கறைத் தொனி கலந்து, எடுப்பான உதாரணங்களுடன், நல்ல வார்த்தை ஜாலங்களுடன் சொல்லவேண்டும். நாம் சொன்னது மனத்தில் தைக்கும்படி சொல்வதும் அவசியம்.

ஒரு நலவிரும்பி சொல்லும் நல்வார்த்தைகள் இவை என்கிற செய்தி எதிராளியின் மனத்தில் பதிந்தால் கசப்பு மருந்துகளைக்கூடக் கடகடவென ஊட்டிவிடலாம்!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2010/06/11 விட்டேத்தியாக விட்டுக் கொடுப்பதா?

2010/06/04 நெற்றிக்கண் திறப்பது வெற்றியைத் தருமா?

2010/05/28 எச்சரிக்கைகளைப் பயமுறுத்தலாகக் கொள்வதா?

2010/05/21 வாகன மோதல்களும் வார்த்தை மோதல்களும்

2010/05/07 போலித்தனம் தேவைப்படும் வேளைகள்!

2010/04/30 மரணம் வரை தொடர வேண்டியவை…..

2010/04/23 உறவினரின் கோபத்திற்கு ஆளாகும் தருணங்கள்!

2010/04/16 வருந்தியா திருந்துவது?

2010/04/09 உருட்டாதீர்!

2010/04/02 வயது அப்படி!

2010/03/26 குறை எதிராளியினுடையதாக இருக்கட்டும்!

2010/03/19 நம்மவர்களின் எதிர்பார்ப்புகள்

2010/03/12 பேசக்கூடிய சூழல் இருக்கிறதா?

2010/03/06 உரிமைக் குரல் கொடுக்கும் விதம்

2010/02/26 உறிவிற்குக் கை கொடுப்பது எப்படி?

2010/02/19 குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க முடியவில்லையா?

2010/02/12 நிரந்தரக் கவலைகள் உண்டா?

2010/02/05 பெறப்படாத விளக்கங்கள்!

2010/01/29 பெருகி வளர வேண்டியதை போன்சாயாக ஆக்குகிறவர்கள்!

2010/01/22 துவண்ட உள்ளத்தைத் தூக்கி நிறுத்துவோம்!

2010/01/15 கலசங்களுள் ஒளிந்துள்ள கடைக்கால்கள்!

2010/01/08 அவர்களாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு!

2009/12/31 நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாதபோது…!

2009/12/25 அதென்ன வின்-வின் கொள்கை?

2009/12/18 நீங்களே சொல்லுங்௧ள்

2009/12/11 தரம் காட்டுபவர்கள்!

2009/12/04 சிறு வருத்தங்களால் விலகிப் போகிறவர்கள்!

2009/11/27 சோதனையான காலகட்டமா?

2009/11/20 கேட்டதால் இழந்தவை!

2009/11/13 கேட்காததால் இழந்தவை!

2009/10/30 மென்மைப் போக்கின் நன்மைகள்!

2009/10/23 தானத்திற்குரிய பாத்திரம்தானா?

2009/10/16 கணவன் மனைவிக்குள் கலகமூட்டுகிறவர்கள்!

2009/10/09 கவனத் தருணங்கள்!

2009/10/02 தோல்வியை விட மோசமானது எது?

2009/09/25 வெற்றிக்குப் பரபரக்கிறவர்கள்!

2009/09/18 விதைக்காமல் விளைச்சலை எதிர்பார்ப்பதா?

2009/09/11 சாட்சிகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள்!

2009/09/04 ஐயப்பாடுகளுடன் கூடிய செயல்பாடுகள்!

2009/08/28 நமக்கெதிராகத் திரும்பும் நம் வார்த்தைகள்!

2009/08/21 புகார் செய்கிறவர்களின் மனநிலை!

2009/08/14 உங்களைப் பற்றி உங்கள் கருத்து?

2009/08/07 சிறு இடைவெளிகள் நீள்வதேன்!

2009/07/31 பிறர் அல்லவா தனித்துவப்படுத்தப்பட வேண்டும்?

2009/07/24 அவதிகளால் புரியாமல் போகிற அர்த்தங்கள்!

2009/07/17 பிரதிபலிப்பது உண்டா?

2009/07/10 ஊழியம் செய்பவர்கள் மீது எரிச்சல் வருகிறதா?

2009/07/04 நீங்கள் வெறுப்பது தொடர்ந்து நிகழ்கிறதா?

2009/06/26 தோன்றுவதையெல்லாம் சொல்வதா?

2009/06/19 தோன்றினாலும் சொல்லாதிருப்பதா?

2009/06/12 மெல்லிய மிரட்டல்கள் எப்போது எடுபடும்?

2009/06/05 வாய் திறவாதவரின் வாய் திறவுங்கள்!

2009/05/29 நம்மை நோக்கிய சுட்டு விரல்கள் நம் நன்மைக்கே!

2009/05/22 வம்புக் களங்கள்!

2009/05/15 எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும் விகிதாசாரங்களும்!

2009/05/08 அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

2009/05/01 பிறர், தங்களைப்பற்றி உயர்வாக எண்ண உதவுங்கள்!

2009/04/24 நமக்குள் இருக்கும் தொழிற்சாலைகள்!

2009/04/17 திட்டமிடலும் சித்தம் போக்கும்!

2009/04/10 பதிலிலிருந்து புறப்படும் கேள்விகள்!

2009/04/03 வெற்றி ஏன் விலகிப் போகிறது?

2009/03/27 வலிக்காதபடி குட்டும் வழிமுறைகள்!

2009/03/20 நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதா?

2009/03/13 அனைவரும் சூழ்ந்து ஒருவரைப் பழிப்பதா?

2009/03/06 மெளனத்தின் அர்த்தங்கள்!

2009/02/27 களைப்புப் பெற்றெடுக்கும் மலைப்புகள்

2009/2/20 இடிகளுக்குக் கொடுக்கவேண்டிய பதிலடிகள்

2009/02/13 மறுத்துச் சொல்லாமல் மறுக்கும் கலை

2009/02/06 அவசரத்தால் வரும் அவதிகள்

2009/01/30 கைக்குள் வைத்திருப்பதில் என்ன பெருமை!

2009/01/23 சாதகமான பதிலைச் சாதுரியமாகப் பெறுவது எப்படி?

2009/01/16 நீங்களும் அமிதாப்பச்சன்தான்!

2009/01/09 ‘என்னவர்’ என்பதில் உள்ள எல்லைக் கோடுகள்!

2009/01/02 தொழிற்சலிப்பு தலை தூக்குகிறதா?

2008/12/26 கிள்ளிப் பார்ப்பதில் கிளுகிளுப்பு அடைபவர்கள்!

2008/12/19 அநியாயத்திற்குள் தேட வேண்டிய நியாயம்!

2008/12/12 வரும் துன்பங்களும் வரவழைத்த துன்பங்களும்

2008/12/05 அவர்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!

2008/11/28 கண்டதையும் கண்டவர்களிடம் பேசுவதா?

2008/11/21 வரவழைத்துக் கொள்கிற வருத்தங்கள்!

2008/11/14 அமிலத்திற்குள் அழுந்தியிருக்கும் அன்பு!

2008/11/07 சொன்னால் தவறு சொல்லாதது குற்றம்!

2008/10/31 குறை சொன்னால் கோபம் வருவது ஏன்?

2008/10/24 உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்

2008/10/17 நாமும் சீத்தலைச் சாத்தனார்களே!

2008/10/10 அறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 6:05 am
Filed under: Uncategorized
Junior Kelvi Pathil

Posted on Friday 18 June 2010

rahul-sonia-gandhi.jpg

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

வி.சாத்தப்பன், காரைக்குடி.

மாநிலங்களவை எம்.பி.க்காக பா.ம.க., எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாகக் கலைஞரைச் சந்தித்தும் ஒன்றும் நடக்கவில்லையே?

ஒருத்தராகப் போனால் ஓரளவாவது கிடைக்கும். ஒட்டுமொத்தமாகப் போனால் உரியவர்களே பயந்து கதவைச் சாத்துவார்கள். ஆனால் கலைஞர் பயப்படவில்லை. கதவைச் சாத்தவுமில்லை. கோபப்படாமல் அனுப்பியிருக்கிறார். அவ்வளவுதான்.

ஜி.விஜயன், சாலிகிராமம்.

தனது கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுத்தாக்கலுக்கு எப்போதும் உடன் போகாத ஜெயலலிதா இப்போது போயிருக்கிறாரே என்ன காரணம்?

பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக பழைய கோட்டைக்குப் போகிற வாய்ப்பு கிடைத்ததால் போயிருக்கிறார். இதுவே அவர் சொல்லும் அந்த சர்க்கஸ் கூடாரமென்றால் போயிருக்கமாட்டாரோ?

கே.கார்த்திகேயன், ஆம்பூர்.

தனது வீட்டை மருத்துவமனைக்குக் கொடுத்த கலைஞரின் செயல்பாடு பற்றி?

ரூபாய் எட்டு கோடி சொத்தை இனாமாகக் கொடுத்தது மூலம் எட்டாத இடத்திற்குப் போயுள்ளார் கலைஞர்! இலவசக் கலைஞர் என்பதற்கு இப்போதுதான் (சரியான) அர்த்தம் கிடைத்திருக்கு. இனி எதிர்க் கட்சிகளின் வாய்களுக்கு பெப்பே!

எம்.செல்வம், வேலூர்.

ராகுல்காந்தியின் ரகசிய சென்னை வருகை பற்றி?

தொண்டர்களுக்குக் கடுக்காய் கொடுக்கும் தலைவர்களுக்கே கடுக்காய் கொடுக்கும் தலைவராகிவிட்டார் ராகுல்காந்தி. இனி தமிழகத்தில் புதிய பெருந்தலைவர் என்றால் அது ராகுல்காந்திதான்.

என்.தன்ராஜ், வேளச்சேரி.

இங்குள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு மாநிலங்களைவையில் இடம் கிடைக்கவில்லையே?

சத்தியமூர்த்தி பவனில் சத்தியத்திற்கு இடமில்லை என்பது சோனியா வரை தெரிந்துள்ளது. அதனால்தான் பழைய ‘டிக்’கையே புதிய ‘டிக்’க்காக்கியிருக்கிறார்.

ஜே.விக்டர், விழுப்புரம்.

ஐ.பி.எல். ஏலத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்கிறாரே சரத்பவார்?

பவார் வீட்டில் நிறைய கற்பூரத் தொழிற்சாலை இருக்கும் போல. ஐ.பி.எல். குறித்துப் பேசினாலே நிறைய சத்தியம் செய்கிறார். இன்றைய இந்தியாவின் சத்தியபுருஷர் பவாராகத்தான் இருப்பார்.

எம்.பன்னீர், மதுராந்தகம்.

இந்நாளில் யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது?

கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம். கடவுள் உண்டு என்பவர்களையும் நம்பலாம். ஆனால் நான்தான் கடவுள் என்கிறார்களே ஒரு சிலர், அவர்களைத்தான் நாம் நம்பலாகாது.

ஜே.விசுவம், திருப்பத்தூர்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டிருக்கிறாரே?

இது அட்மிஷன் காலம். பள்ளி நிர்வாகத்தினர் தத்தம் அட்மிஷனுக்கு இப்போது ஆலாய்ப் பறப்பதால் அவசர அவசரமாய் இவரை கலைஞர் பள்ளியில் மீண்டும் சேர்த்துக் கொண்டிருக்கிறார். இல்லாவிட்டால் வேறு ஒரு பள்ளியில் சேர்ந்துவிடுவார் என்கிற பயம்.

மு. இஸ்மாயில், சென்னை.

அ.தி.மு.க.வின் தற்போதைய நிலைமை?

திருப்பதி மாதிரி இங்கே ஜருகண்டி, ஜருகண்டி சொல்ல வேண்டியதில்லை. எல்லாருமே இப்போது வேகவேகமாய் ஜருகிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே க்யூ இல்லாத ஒரே கட்சி இப்போது அ.தி.மு.க.தான்!

என்.சாமிதுரை, சின்னிவாக்கம்.

மாநிலங்களைவை எம்.பி.க்களுக்கு என்ன வேலை?

ஒரு வேலையுமில்லை. அவரவர் வீடுகளில் மேசையைத் தட்டிக் கொண்டிருப்பதற்குப் பதில் அதே மேசையை தில்லியில் போய்க் தட்டிக்கொண்டிருப்பார்கள்.

சி.எஸ்.ஏ., சென்னை-118..

ஜெயலலிதாவை பத்திரிகையாளர் சோ சந்தித்திருப்பதின் மர்மம்?

புதிதா என்ன? என் ஐயமெல்லாம் சோவின் யோசனைகளைக் கேட்டதால் இப்படி ஆனாரா? கேட்காததால் இப்படி ஆனாரா என்பதுதான்.

ஜ.விக்கிரமன், மதுரை.

இன்றைய காவிகளைப் பற்றி?

காலாவதி மருந்துகளைக்கூட அப்புறம் கண்டு கொள்ளலாம். இந்தக் காவிகளைத்தான் உடனே கண்டு கொள்ள வேண்டும். காலாவதி மருந்துகளால் ஒரு பகுதியினரே பாதிப்பார்கள். காவிகளால் ஒரு தலைமுறையே பாதிக்கும்.

கே.எம்.பிரபா, கொளத்தூர்.

தமிழக அரசின் நிதி நிலைமை படுமோசமாக இருக்கிறதாமே?

டாஸ்மாக் இருப்பதால்தான் ஏதோ இலேசான தள்ளாட்டம். அது இல்லாவிட்டால் படு தள்ளாட்டம்தான். பார்கள்தான் இன்று தமிழ்நாட்டை இந்தப் பாரில் நிற்க வைத்திருக்கிறது.

ஆர்.சுப்பு, காஞ்சிபுரம்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை இன்றைக்கு எதற்கு இது பொருந்தும்?

கிரிக்கெட்டிற்குத்தான். முதலிலே ஐந்து நாள். அப்புறம் ஒரு நாள். இப்போதோ ட்வென்டி - ட்வென்டி. இதுவே நாளைக்கு டென்-டென் ஆனாலும் கேட்பாரில்லை.

எம்.குணசீலன், செங்குன்றம்.

அடுத்த சட்டசபையும் புதிய தலைமைச் செயலகத்தில்தானே?

அதற்குள்ளாவது அங்கே கட்டட வேலைகள் முடிந்தால் சரி. மேலே கொத்தனார்கள் கீழே மக்கள் பிரதிநிதிகள் என்பது நன்றாக இல்லை. எம்.எல்.ஏ.க்கள் என்ன சித்தாள்களா? கொத்தனார்களுக்குக்கீழே வேலை செய்ய!

பி.ராஜா, சென்னை-102.

இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கியோர்க்கெல்லாம் இலவச மாவு இயந்திரம் வழங்கப் போவதாகப் பேச்சு அடிபடுகிறதே?

கொடுத்தாலும் கொடுப்பார்கள். டி.வி.யில் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருப்பதை இனி இவர்கள் மாவரைத்துக் கொண்டே பார்க்கலாம். தி.மு.க.வினர் எது செய்தாலும் அதில் ஒரு கலை நுணுக்கம் இருக்கும்.

எஸ்.செந்தில் குமார், திருவேற்காடு.

தமிழகத்தில் கள் இறக்கும் போராட்டம் என்னவாச்சு?

இதற்காக உருவாகும் மொந்தைகள் உடனுக்குட்ன உடைந்து போகின்றன. ஒரு மொந்தையாவது நின்றால்தானே? அதனால்தான் இந்தப் போராட்டம் இன்னும் வலுப்பெறவில்லை.

சி.மூர்த்தி, கும்பகோணம்.

அ.தி.மு.க. கலகலத்துப் போவது ஏன்?

எல்லாம் தி.மு.க.வினரின் கண்ணிவெடிகளால்தான். ஒவ்வொரு மாவட்ட அமைப்பிலும் எத்தனை கண்ணி வெடிகள் வைத்திருக்கிறார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாதாம். அதனால் அவற்றையெல்லாம் அகற்றிவிட்டு முன்னேறுவது என்பது அ.தி.மு.க.விற்குக் கடினமாக உள்ளதாம்.

என்.தாமோதரன், வில்லிவாக்கம்.

குஷ்புவின் அரசியல் கன்னிப் பேச்சைக் கேட்டீர்களா?

அந்த ஜாக்பாட் எனக்குக் கிடைக்கவில்லையே.

கே.லோகேந்திரன், திருவண்ணாமலை.

நாடு இப்போது எப்படியிருக்கிறது?

இரண்டு ரூபாய்ப் பத்திரிகைகளைக் கூட வாங்க மாட்டீர்கள். இதற்காக இரண்டு வாரங்கள் கூடத் காத்திருக்கிறேன் என்கிறீர்களே? நீங்களென்ன தருமியோட தமையனா?

11 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
04 June 2010 ஜூனியர் கேள்வி-பதில்
28 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
21 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
07 May 2010 ஜூனியர் கேள்வி-பதில்
30 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
23 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
16 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
09 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
02 April 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
06 March 2010 ஜூனியர் கேள்வி-பதில்
26 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
19 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
12 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
05 February 2010 ஜூனியர் கேள்வி-பதில்
29 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
22 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
15 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
08 January 2010 ஜூனியர் கேள்வி-பதில்
31 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 December 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 November 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 October 2009 ஜூனியர் கேள்வி-பதில்
25 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
18 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
11 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 September 2009 ஜூனியர் கேள்வி-பதில்
28 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
21 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
14 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
07 August 2009 ஜூனியர் கேள்வி-பதில்
31 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
19 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
12 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
05 June 2009 ஜூனியர் கேள்வி-பதில்
29 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
22 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
15 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
08 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
01 May 2009 ஜூனியர் கேள்வி-பதில்
24 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
17 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
10 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
03 April 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
6 March 2009 ஜூனியர் கேள்வி-பதில்
27 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
20 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
13 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
06 February 2009 ஜூனியர் கேள்வி-பதில்
30 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
23 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
16 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
09 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
02 January 2009 ஜூனியர் கேள்வி-பதில்
26 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 December 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
14 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
07 November 2008 ஜூனியர் கேள்வி-பதில்
31 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
24 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
17 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
10 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
03 October 2008 ஜூனியர் கேள்வி-பதில்
26 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 5:57 am
Filed under: Uncategorized